LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-48

4.048.திருஆப்பாடி 
திருநேரிசை 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பாலுவந்தநாயகர். 
தேவியார் - பெரியநாயகியம்மை. 
466 கடலக மேழி னோடும்
பவனமுங் கலந்த விண்ணும்
உடலகத் துயிரும் பாரு
மொள்ளழ லாகி நின்று
தடமலர்க் கந்த மாலை
தண்மதி பகலு மாகி
மடலவிழ் கொன்றை சூடி
மன்னுமாப் பாடி யாரே.
4.048.1
ஏழு கடலும் காற்றும் விண்ணும், உடல்களில் உள்ள உயிர்களும், உலகமும், தீயும் ஆகிநின்று, பெரியமலர்கள் மணம் வீசும் மாலைக்காலமும், குளிர்ந்த சந்திரன் ஒளிவிடும் இரவும், சூரியன் ஒளிவிடும் பகற்காலமும் ஆகி, நிலைபெற்று நின்ற ஆப்பாடியார் இதழ் விரிகின்ற கொன்றைப் பூமாலையைச் சூடியவராவார்.
467 ஆதியு மறிவு மாகி
யறிவினுட் செறிவு மாகிச்
சோதியுட் சுடரு மாகித்
தூநெறிக் கொருவ னாகிப்
பாதியிற் பெண்ணு மாகிப்
பரவுவார் பாங்க ராகி
வேதியர் வாழுஞ் சேய்ஞல்
விரும்புமாப் பாடி யாரே.
4.048.2
ஆதியும் அறிவும் ஆகி அறிவினுள் செறிந்திருப்பவராய், ஒளியை உட்கொண்ட ஞானச்சுடராய், தூய வழிக்குச் செலுத்தும் ஒப்பற்றவராய்ப் பாதி பெண் உருவினராய், வழிபடுபவர்களுக்குத் துணைவராய் வேதியர்கள் வாழும் சேய்ஞலூரை அடுத்த ஆப்பாடியில் உறையும் பெருமான் அமைந்துள்ளார்.
468 எண்ணுடை யிருக்கு மாகி
யிருக்கினுட் பொருளு மாகிப்
பண்ணொடு பாட றன்னைப்
பரவுவார் பாங்க ராகிக்
கண்ணொரு நெற்றி யாகிக்
கருதுவார் கருத லாகாப்
பெண்ணொரு பாக மாகிப்
பேணுமாப் பாடி யாரே.
4.048.3
மிக மேம்பட்டதாக எண்ணப்படும் இருக்கு வேதமாய், அவ்வேதம் குறிப்பிடும் பரம்பொருளாய், பண்ணோடு பாடல் பாடுபவர் துணைவராய், நெற்றிக்கண்ணராய், உண்மை ஞானிகள் அல்லாதாருக்கு அறிதலும் எண்ணுதலும் இயலாத பார்வதி பாகராய்த் திருவாப்பாடியை விரும்பி உறையும் சிவபெருமான் அமைந்துள்ளார்.
469 அண்டமா ரமரர் கோமா
னாதியெம் மண்ணல் பாதம்
கொண்டவன் குறிப்பி னாலே
கூப்பினான் றாப ரத்தைக்
கண்டவன் றாதை பாய்வான்
காலற வெறியக் கண்டு
தண்டியார்க் கருள்கள் செய்த
தலைவராப் பாடி யாரே.
4.048.4
எல்லா உலகங்களுமாய், தேவர் தலைவராய், எல்லோருக்கும் ஆதியாய் உள்ள அண்ணலாரின் திருவடிகளை மனத்துள்கொண்டு, அப்பெருமான் குறிப்பினாலே மணலிலே மணலால் விசாரசருமன் இலிங்க வடிவத்தை அமைக்க அதனைக் கண்ட அவன் தந்தையாகிய எச்சதத்தன் சிவபூசையை அழிக்க ஓடிவர, விசாரசருமன் அவன் கால்களை வெட்டியதனைக் கண்டு அவனுக்குச் சண்டீசன் என்ற பதவியை அருளிச் செய்தவர் திருவாப்பாடிப் பெருமானாவார்.
470 சிந்தையுந் தௌவு மாகித்
தௌவினுட் சிவமு மாகி
வந்தநற் பயனு மாகி
வாணுதல் பாக மாகி
மந்தமாம் பொழில்கள் சூழ்ந்த
மண்ணித் தென்கரைமேன் மன்னி
அந்தமோ டளவி லாத
வடிகளாப் பாடி யாரே.
4.048.5
சிந்தித்தல், தௌதல், தௌவினுள் விளங்கும் தூய நிலையாகிய நிட்டை, இவற்றால் பயனாகிய வீடுபேறு ஆகியவைகளாகிப் பார்வதி பாகராய், முடிவும் அளவும் இல்லாதவராய்த் தென்றல் வீசப்பெறுவதாய் மண்ணியாற்றின் அழகிய கரையில் நிலை பெற்றிருக்கும் ஆப்பாடியை உறைவிடமாகக் கொண்ட பெருமான் அமைந்துள்ளார்.
471 வன்னிவா ளரவு மத்த
மதியமு மாறுஞ் சூடி
மின்னிய வுருவாஞ் சோதி
மெய்ப்பொருட் பயனு மாகிக்
கன்னியோர் பாக மாகிக்
கருதுவார் கருத்து மாகி
இன்னிசை தொண்டர் பாட
விருந்தவாப் பாடி யாரே.
4.048.6
வன்னி, ஒளிபொருந்திய பாம்பு, ஊமத்தை, பிறை, கங்கை இவற்றைச் சூடி மின்னல்போல ஒளிவீசும் வடிவினை உடைய ஒளிமயமாய், ஞானத்தின் பயனாகிய பரமுத்தியாய்ப் பார்வதி பாகராய், தியானிப்பவர் தியானத்தில் இருப்பவராய், இனிய இசைகளை அடியார்கள் பாடுமாறு ஆப்பாடியார் இருக்கின்றார்.
472 உள்ளுமாய்ப் புறமு மாகி
யுருவுமா யருவு மாகி
வெள்ளமாய்க் கரையு மாகி
விரிகதிர் ஞாயி றாகிக்
கள்ளமாய்க் கள்ளத் துள்ளார்
கருத்துமா யருத்த மாகி
அள்ளுவார்க் கள்ளல் செய்திட்
டிருந்தவாப் பாடி யாரே.
4.048.7
உள்ளும் புறமுமாய், அருவும் உருவுமாய், வெள்ளமும் கரையுமாய்க் கிரணங்கள் விரிகின்ற சூரியனாய், கள்ளமும் கள்ளத்து உள்ளாருமாய்க் கருத்துள் இருப்பவராய்ச் செல்வ வடிவினராய், தம்மைப் பலவகையாலும் அனுபவிக்கும் அடியவர்களுக்கு அவர்கள் விரும்பியவாறு கொள்ளத் தம்மை வழங்கிக் கொண்டு இருப்பவர் ஆப்பாடிப் பெருமான் ஆவார்.
473 மயக்கமாய்த் தௌவு மாகி
மால்வரை வளியு மாகித்
தியக்கமா யொருக்க மாகிச்
சிந்தையு ளொன்றி நின்று
இயக்கமா யிறுதி யாகி
யெண்டிசைக் கிறைவ ராகி
அயக்கமா யடக்க மாய
வைவராப் பாடி யாரே.
4.048.8
மயக்கமும் தௌவுமாகிப் பெரிய மலைகளும் காற்றுமாகி, அசைவும் அசைவின்மையுமாகி, அடியவர் சிந்தையுள் பொருந்திநின்று, அதனை இயக்குபவராய், உலகுக்கெல்லாம் இறுதியாய், எண் திசைகளுக்கும் தலைவராய், நோயற்றவராய்ப் பொறிவாயில் ஐந்தும் அவித்தவராய், உள்ளவர் திருவாப்பாடிப் பெருமான் ஆவார்.
474 ஆரழ லுருவ மாகி
யண்டமேழ் கடந்த வெந்தை
பேரொளி யுருவி னானைப்
பிரமனு மாலுங் காணாச்
சீரவை பரவி யேத்திச்
சென்றடி வணங்கு வார்க்குப்
பேரரு ளருளிச் செய்வார்
பேணுமாப் பாடி யாரே.
4.048.9
பெரிய தீத்தம்பத்தின் உருவினராய் ஏழுலகமும் கடந்த எம் தந்தையாராகிய பேரொளிப் பெருமானைப் பிரமனும் திருமாலும் முடி அடி காணமுடியாதிருந்த சிறப்பினை முன்நின்று துதித்துப் புகழ்ந்து, திருவடிகளை வணங்குபவருக்கு, ஆப்பாடியை விரும்பி உறையும் அப்பெருமான் பெருமளவில் அருள் செய்பவராவார்.
475 திண்டிற லரக்க னோடிச்
சீகயி லாயந் தன்னை
எண்டிற லிலனு மாகி
யெடுத்தலு மேழை யஞ்ச
விண்டிறல் நெரிய வூன்றி
மிகக்கடுத் தலறி வீழப்
பண்டிறல் கேட் டுகந்த
பரமராப் பாடி யாரே.
4.048.10
மிக்க உடல் வலிமையை உடைய இராவணன் எம் பெருமானைப் பற்றி எண்ணியறியும் அறிவு வலிமை இல்லாதவனாய்ப் பெருமைமிக்க கயிலாய மலையைப் பெயர்க்க முற்பட்ட அளவில் பார்வதி பயப்பட, அவன் உடல் வலிமை நீங்குமளவுக்கு அவன் உடல் நெரியுமாறு மிகவும் வெகுண்டு விரலை ஊன்ற அவன் அலறிவிழப் பின் அவன் பாடிய பண்களையும் அவற்றின் திறங்களையும் கேட்டுகந்தபெருமான் திருஆப்பாடியார் ஆவார்.
திருச்சிற்றம்பலம்

4.048.திருஆப்பாடி 

திருநேரிசை 

திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 

சுவாமிபெயர் - பாலுவந்தநாயகர். 

தேவியார் - பெரியநாயகியம்மை. 

466 கடலக மேழி னோடும்

பவனமுங் கலந்த விண்ணும்

உடலகத் துயிரும் பாரு

மொள்ளழ லாகி நின்று

தடமலர்க் கந்த மாலை

தண்மதி பகலு மாகி

மடலவிழ் கொன்றை சூடி

       மன்னுமாப் பாடி யாரே.(4.048.1)

  ஏழு கடலும் காற்றும் விண்ணும், உடல்களில் உள்ள உயிர்களும், உலகமும், தீயும் ஆகிநின்று, பெரியமலர்கள் மணம் வீசும் மாலைக்காலமும், குளிர்ந்த சந்திரன் ஒளிவிடும் இரவும், சூரியன் ஒளிவிடும் பகற்காலமும் ஆகி, நிலைபெற்று நின்ற ஆப்பாடியார் இதழ் விரிகின்ற கொன்றைப் பூமாலையைச் சூடியவராவார்.

467 ஆதியு மறிவு மாகி

யறிவினுட் செறிவு மாகிச்

சோதியுட் சுடரு மாகித்

தூநெறிக் கொருவ னாகிப்

பாதியிற் பெண்ணு மாகிப்

பரவுவார் பாங்க ராகி

வேதியர் வாழுஞ் சேய்ஞல்

 விரும்புமாப் பாடி யாரே.(4.048.2)

  ஆதியும் அறிவும் ஆகி அறிவினுள் செறிந்திருப்பவராய், ஒளியை உட்கொண்ட ஞானச்சுடராய், தூய வழிக்குச் செலுத்தும் ஒப்பற்றவராய்ப் பாதி பெண் உருவினராய், வழிபடுபவர்களுக்குத் துணைவராய் வேதியர்கள் வாழும் சேய்ஞலூரை அடுத்த ஆப்பாடியில் உறையும் பெருமான் அமைந்துள்ளார்.

468 எண்ணுடை யிருக்கு மாகி

யிருக்கினுட் பொருளு மாகிப்

பண்ணொடு பாட றன்னைப்

பரவுவார் பாங்க ராகிக்

கண்ணொரு நெற்றி யாகிக்

கருதுவார் கருத லாகாப்

பெண்ணொரு பாக மாகிப்

            பேணுமாப் பாடி யாரே. (4.048.3)

  மிக மேம்பட்டதாக எண்ணப்படும் இருக்கு வேதமாய், அவ்வேதம் குறிப்பிடும் பரம்பொருளாய், பண்ணோடு பாடல் பாடுபவர் துணைவராய், நெற்றிக்கண்ணராய், உண்மை ஞானிகள் அல்லாதாருக்கு அறிதலும் எண்ணுதலும் இயலாத பார்வதி பாகராய்த் திருவாப்பாடியை விரும்பி உறையும் சிவபெருமான் அமைந்துள்ளார்.

469 அண்டமா ரமரர் கோமா

னாதியெம் மண்ணல் பாதம்

கொண்டவன் குறிப்பி னாலே

கூப்பினான் றாப ரத்தைக்

கண்டவன் றாதை பாய்வான்

காலற வெறியக் கண்டு

தண்டியார்க் கருள்கள் செய்த

  தலைவராப் பாடி யாரே.(4.048.4)

  எல்லா உலகங்களுமாய், தேவர் தலைவராய், எல்லோருக்கும் ஆதியாய் உள்ள அண்ணலாரின் திருவடிகளை மனத்துள்கொண்டு, அப்பெருமான் குறிப்பினாலே மணலிலே மணலால் விசாரசருமன் இலிங்க வடிவத்தை அமைக்க அதனைக் கண்ட அவன் தந்தையாகிய எச்சதத்தன் சிவபூசையை அழிக்க ஓடிவர, விசாரசருமன் அவன் கால்களை வெட்டியதனைக் கண்டு அவனுக்குச் சண்டீசன் என்ற பதவியை அருளிச் செய்தவர் திருவாப்பாடிப் பெருமானாவார்.

470 சிந்தையுந் தௌவு மாகித்

தௌவினுட் சிவமு மாகி

வந்தநற் பயனு மாகி

வாணுதல் பாக மாகி

மந்தமாம் பொழில்கள் சூழ்ந்த

மண்ணித் தென்கரைமேன் மன்னி

அந்தமோ டளவி லாத

வடிகளாப் பாடி யாரே.(4.048.5)

  சிந்தித்தல், தௌதல், தௌவினுள் விளங்கும் தூய நிலையாகிய நிட்டை, இவற்றால் பயனாகிய வீடுபேறு ஆகியவைகளாகிப் பார்வதி பாகராய், முடிவும் அளவும் இல்லாதவராய்த் தென்றல் வீசப்பெறுவதாய் மண்ணியாற்றின் அழகிய கரையில் நிலை பெற்றிருக்கும் ஆப்பாடியை உறைவிடமாகக் கொண்ட பெருமான் அமைந்துள்ளார்.

471 வன்னிவா ளரவு மத்த

மதியமு மாறுஞ் சூடி

மின்னிய வுருவாஞ் சோதி

மெய்ப்பொருட் பயனு மாகிக்

கன்னியோர் பாக மாகிக்

கருதுவார் கருத்து மாகி

இன்னிசை தொண்டர் பாட

    விருந்தவாப் பாடி யாரே.(4.048.6)

  வன்னி, ஒளிபொருந்திய பாம்பு, ஊமத்தை, பிறை, கங்கை இவற்றைச் சூடி மின்னல்போல ஒளிவீசும் வடிவினை உடைய ஒளிமயமாய், ஞானத்தின் பயனாகிய பரமுத்தியாய்ப் பார்வதி பாகராய், தியானிப்பவர் தியானத்தில் இருப்பவராய், இனிய இசைகளை அடியார்கள் பாடுமாறு ஆப்பாடியார் இருக்கின்றார்.

472 உள்ளுமாய்ப் புறமு மாகி

யுருவுமா யருவு மாகி

வெள்ளமாய்க் கரையு மாகி

விரிகதிர் ஞாயி றாகிக்

கள்ளமாய்க் கள்ளத் துள்ளார்

கருத்துமா யருத்த மாகி

அள்ளுவார்க் கள்ளல் செய்திட்

 டிருந்தவாப் பாடி யாரே.(4.048.7)

  உள்ளும் புறமுமாய், அருவும் உருவுமாய், வெள்ளமும் கரையுமாய்க் கிரணங்கள் விரிகின்ற சூரியனாய், கள்ளமும் கள்ளத்து உள்ளாருமாய்க் கருத்துள் இருப்பவராய்ச் செல்வ வடிவினராய், தம்மைப் பலவகையாலும் அனுபவிக்கும் அடியவர்களுக்கு அவர்கள் விரும்பியவாறு கொள்ளத் தம்மை வழங்கிக் கொண்டு இருப்பவர் ஆப்பாடிப் பெருமான் ஆவார்.

473 மயக்கமாய்த் தௌவு மாகி

மால்வரை வளியு மாகித்

தியக்கமா யொருக்க மாகிச்

சிந்தையு ளொன்றி நின்று

இயக்கமா யிறுதி யாகி

யெண்டிசைக் கிறைவ ராகி

அயக்கமா யடக்க மாய

வைவராப் பாடி யாரே.(4.048.8)

  மயக்கமும் தௌவுமாகிப் பெரிய மலைகளும் காற்றுமாகி, அசைவும் அசைவின்மையுமாகி, அடியவர் சிந்தையுள் பொருந்திநின்று, அதனை இயக்குபவராய், உலகுக்கெல்லாம் இறுதியாய், எண் திசைகளுக்கும் தலைவராய், நோயற்றவராய்ப் பொறிவாயில் ஐந்தும் அவித்தவராய், உள்ளவர் திருவாப்பாடிப் பெருமான் ஆவார்.

474 ஆரழ லுருவ மாகி

யண்டமேழ் கடந்த வெந்தை

பேரொளி யுருவி னானைப்

பிரமனு மாலுங் காணாச்

சீரவை பரவி யேத்திச்

சென்றடி வணங்கு வார்க்குப்

பேரரு ளருளிச் செய்வார்

பேணுமாப் பாடி யாரே.(4.048.9)

  பெரிய தீத்தம்பத்தின் உருவினராய் ஏழுலகமும் கடந்த எம் தந்தையாராகிய பேரொளிப் பெருமானைப் பிரமனும் திருமாலும் முடி அடி காணமுடியாதிருந்த சிறப்பினை முன்நின்று துதித்துப் புகழ்ந்து, திருவடிகளை வணங்குபவருக்கு, ஆப்பாடியை விரும்பி உறையும் அப்பெருமான் பெருமளவில் அருள் செய்பவராவார்.

475 திண்டிற லரக்க னோடிச்

சீகயி லாயந் தன்னை

எண்டிற லிலனு மாகி

யெடுத்தலு மேழை யஞ்ச

விண்டிறல் நெரிய வூன்றி

மிகக்கடுத் தலறி வீழப்

பண்டிறல் கேட் டுகந்த

பரமராப் பாடி யாரே.(4.048.10)

  மிக்க உடல் வலிமையை உடைய இராவணன் எம் பெருமானைப் பற்றி எண்ணியறியும் அறிவு வலிமை இல்லாதவனாய்ப் பெருமைமிக்க கயிலாய மலையைப் பெயர்க்க முற்பட்ட அளவில் பார்வதி பயப்பட, அவன் உடல் வலிமை நீங்குமளவுக்கு அவன் உடல் நெரியுமாறு மிகவும் வெகுண்டு விரலை ஊன்ற அவன் அலறிவிழப் பின் அவன் பாடிய பண்களையும் அவற்றின் திறங்களையும் கேட்டுகந்தபெருமான் திருஆப்பாடியார் ஆவார்.

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 18 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.