LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF
- நட்சத்திர பலன்கள்

நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06 – 2018 வரை)

ஜோதிட இமயம். அபிராமி சேகர். எம். ஏ - 99948 11158

மேஷம் (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)
அஸ்வினி
இந்த வாரம் இனிய தகவல்கள் இல்லம் தேடி வரும். வீட்டில் சுற்றமும், நட்பும் சூழ சுபகாரியப் பேச்சுக்கள் நடைபெறும். விருந்து உபசாரங்களில் கலந்து கொண்டு சந்தோஷம் அடைவீர்கள். விரைந்து செயல்பட்டு வெற்றிவாகை சூடுவீர்கள். உறவுகள் மற்றும் நண்பர்கள், தக்க சமயத்தில் உதவிக் கரம் நீட்டுவார்கள். பணி புரிபவர்களுக்கு உயர் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். பலவகைப் பயணங்களும் அதனால் இலாபமும் ஏற்படும். அரசு வகையிலும் அதிக அளவு சகாயங்களைப் பெறுவீர்கள்.
பரணி  
இந்த வாரம் குடும்பதில் பல புதிய திருப்பங்கள் ஏற்படும். உங்கள் உடன் பிறப்புக்கு இது வரை தடைப்பட்டு வந்த காரியங்கள் கை கூடிவரும். மங்கையரால் மன மகிழ்ச்சியும், அரசாங்கத்தால் இலாபமும் ஏற்படும்.  சம்பாதித்த பணத்தைப் புதிய முதலீட்டுத் திட்டங்கள் மூலமாக சேமிக்க முற்படுவீர்கள். மனைவிக்கு எதிர்பாராத விதமாக சொத்துக்களோ, பணவரவோ ஏற்படலாம். தெய்வ வழிபாடுகள், நேர்த்திக் கடன்களை நிறைவேற்ற உசிதமான காலம் ஆகும். தொழில் அபிவிருத்தி உண்டாகும்.
கார்த்திகை  1 ஆம் பாதம்
இந்த வாரம் குடும்பதில் பல புதிய திருப்பங்கள் ஏற்படும். உங்கள் உடன் பிறப்புக்கு இது வரை தடைப்பட்டு வந்த காரியங்கள் கை கூடிவரும். மங்கையரால் மன மகிழ்ச்சியும், அரசாங்கத்தால் இலாபமும் ஏற்படும்.  சம்பாதித்த பணத்தைப் புதிய முதலீட்டுத் திட்டங்கள் மூலமாக சேமிக்க முற்படுவீர்கள். மனைவிக்கு எதிர்பாராத விதமாக சொத்துக்களோ, பணவரவோ ஏற்படலாம். அரசுப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். இன்பச் சுற்றுலா போன்ற, இனிய பயணங்களால் இன்பத்தில் திளைப்பீர்கள்.

ரிஷபம் (கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )
கார்த்திகை 2,3,4 பாதங்கள்
இந்த  வாரம் குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். பொதுஜனசேவை, வழக்குகள், தொழில் இவற்றில் வெற்றி கிடைக்கும். சிலரின் பிள்ளைகளுக்கு புதிய தொழில், உத்தியோக வாய்ப்புகள் கிடைக்கும். அதன் காரணமாக வீட்டில் மகிழ்ச்சி நிலவும். அரசுப் பணியாளர்கள் அயராது உழைத்து உயர்அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். திடீர்ப் பயணங்களின் போது முன்பதிவுக் குளறுபடிகளால் இடையூறுகள் ஏற்படும். நெருங்கிய நண்பர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.
ரோகிணி
இந்த வாரம் தங்கள் சந்தோஷத் தருணங்களை குடும்பத்தாரோடு கழித்து மகிழ்வீர்கள். அதன் காரணமாக குடும்பத்தில் குதூகலம் நிலவும். வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் கோலாகலமாக நிறைவேறும். கடைசியில் விருந்து, கேளிக்கைகள் என மகிழ்ச்சியின் உச்சிக்குச் செல்வீர்கள். பெரியோர்களின் நல்வார்த்தைகள் கேட்டு, நலம் பெறுவீர்கள். வணிகர்களுக்கு, தர்ணா, கடையடைப்பு போன்ற பிரச்சனைகளால் தொழிலில் தடைகள் ஏற்பட்டு வருமானம் குறையும். நீண்ட நாட்களுக்குப் பின்னர் வந்த  பழைய உறவுகளின்  வரவு  மகிழ்வைத் தரும்.
மிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள்
இந்த வாரம்  எடுத்த முயற்சிகள் அனைத்திலும் முன்னேற்றம் அடைவீர்கள். எதிர்பார்த்த அளவு போதுமான வருமானங்கள் கிடைக்கும். நல்ல நண்பர்களின் சேர்க்கை ஏற்பட்டு அவர்களால் ஆதாயம் அடைவீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு தற்போது இருக்கும் வேலையைக் காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் வாய்ப்புகள் அமையும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும்.

மிதுனம் (மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
மிருகசிரீடம்- 3,4 பாதங்கள்
இந்த வாரம் சிலர் பழைய கவலைகளையெல்லாம் மறந்து மகிழ்ச்சிக் கடலில் மிதப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சீர்படும். விருந்தினர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்வீர்கள். அரசு ஆதாயங்களால் தொழில் வழியில் முன்னேற்றம் ஏற்படும். வெளிநாட்டுப் பயணங்களைத் தள்ளிப் போடுவது நல்லது. பங்குச்சந்தை, யூக வியாபாரம், பேரங்கள் ஆகியவற்றின் மூலமான கணிசமான தொகைகள் கைக்கு வந்து திடீர் மகிழ்ச்சியில் ஆழ்த்தலாம். நீங்கள் ஈடுபடும் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிட்டும்.
திருவாதிரை
இந்த வாரம் புண்ணிய ஸ்தல யாத்திரைகள் சென்று மகிழ்வீர்கள். சிலருக்கு தேவதூதர்கள், மகான்களின் சந்திப்புக் கிடைத்து மனதில் அமைதி நிலவும். பொதுச்சேவை போன்ற நற்காரியங்களில் ஈடுபடுவீர்கள். இக்கட்டான சூழ்நிலைகளில் சகோதரர்கள் கைகொடுப்பர். செலவுகள் அதிகரிக்கும் வகையில் தூரமான, துயரம் மிக்கப் பயணங்கள் தவிர்க்க முடியாததாகும். சமையலறையில் பெண்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். சொன்ன பேச்சுக் கேட்காத பிள்ளைகளின் செயல்களால் மன உளைச்சல் ஏற்படலாம்.
புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள்
இந்த வாரம் எதிர்பாராத தனவரவுகளால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். பக்திப் பிரசங்கங்கள் கேட்பதில் ஆர்வம் ஏற்படும். முன்பின் அறியாதவர்கள் கூட உங்களுக்கு உதவ முன் வருவார்கள். சிலருக்கு வீட்டுச் செலவுகளைக் கூட சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டு புதிய கடன்கள் வாங்கும் நிலை ஏற்படலாம். உங்கள் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். தாய்வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படலாம். ஓய்வின்றி உழைப்பதின் காரணமாக நேரத்துக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும்.

கடகம் (புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
புனர்பூசம் – 4 ஆம் பாதம்
இந்த வாரம் பொருளாதாரத்தை பொருத்தவரை அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். அதன் காரணமாக உங்கள் காட்டில் பணமழை கொட்டும். மேடைப் பேச்சாளர்களுக்கு அவர்களின் பேச்சு வன்மையால் வருமானம் அதிகரிக்கும். புதிய வியாபாரத் தொடர்புகளால் இலாபம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்பட்டும், பதவி உயர்வின் மூலமாகப் பணப் பயன்களை அடைவீர்கள். புதிய வியாபாரத் தொடர்புகளால் எதிர்பார்ப்புக்கு மேல் இலாபங்கள் குவியும். திட்டமிட்டபடி புதிய விரிவாக்கங்களைச் செய்து முடிப்பீர்கள்.
பூசம்
இந்த வாரம் தைரியமும் தன்னம்பிக்கையும் வெற்றிகளையும், முன்னேற்றங்களையும் வரவேற்கும். காரியங்கள் கை மீறும் போது திட்டங்களில் மாற்றங்களைப் புகுத்தி, தீர்மானங்களை திரும்ப ஆராய்ந்து, கணக்கிட்டு காரியங்களை நிறைவேற்றுங்கள். அதன் காரணமாகத் தொழிலில் இலாபங்கள் அதிகரிக்கும். நிகழ்வுகளின்  போக்கிலேயே சென்று அதன் ராகம், தாளம் மாறாமல் உங்கள் குறிக்கோளை எட்டுங்கள்.  அரசுப் பணி புரிபவர்களுக்கு உயர் அதிகாரிகளின் உதவியால் பதவி உயர்வுகள் கிடைக்கலாம்.
ஆயில்யம்
இந்த வாரம் பக்திக் கதைகள் கேட்டல், சாதுக்களின் தரிசனத்தால் மனம் அமைதி பெறும். மனமகிழ்ச்சி, பகைகளை வெல்லும் திறன் ஆகியவை ஏற்படும். வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்களையும்,  கௌரவத்தையும் அடைவீர்கள். சிலருக்கு வரவை விடச் செலவுகள் அதிகரிக்குமாதலால், பிறரிடம் கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம். அரசு வகையில் தொல்லைகள் ஏற்படலாம். வியாபாரத்தில்  முன்னேற்ற வாய்ப்புக்கள் பிரகாசமாய் இருக்கும். வேலை விஷயமாக எதிர்பார்த்த தகவல்கள் விரைவில் வந்துசேரும்.

சிம்மம் (மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
மகம்
இந்த வாரம் பணம் எனும் மழைப் பொழிவு போதுமான அளவு விட்டு விட்டு இருக்கும். அதன் காரணமாக வீடு, மனை ஆகியவை வாங்கும் யோகம் ஏற்படும். காணாமல்போன பொருட்கள் சேதாரமின்றி கைக்கு வந்து சேரும். தொழிலில் எதிர்பார்த்தபடி பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். சிலருக்கு நல்ல குரு வாய்க்கப் பெற்று ஆன்மிக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும், முழுமூச்சுடன் ஈடுபடும் வேலைகளில் புதிய சாதனைகளைப் படைப்பீர்கள். மனோதைரியம் அதிகரிப்பதன் காரணமாக எவரையும் எதிர்த்து வெற்றி பெறுவீர்கள்.
பூரம்
இந்த வாரம் சினிமா, கேளிக்கை, பிறந்த நாள் விருந்துகள் எனப் பொழுது மகிழ்ச்சியாகக் கழியும். உயர்வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும் பூரண சயன சுகம் ஏற்படும். பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும். நல்லோர் சேர்க்கையாலும், பந்துக்கள் வருகையாலும் உற்சாகம் பொங்கும். அரசுப் பணியாளர்களுக்கு நீண்ட நாளாக எதிர்பார்த்த புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். தொழில் விஷயமாகத் தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேறும். வீட்டில் மனைவியிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும்.
உத்திரம்- 1 பாதம்
இந்த வாரம் தூரதேசத்தில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல்களால் மனமகிழ்ச்சி ஏற்படும். சோம்பல் காரணமாகச் சுறுசுறுப்பற்ற நிலை ஏற்படும். ஆயினும், எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும். வந்த பணத்தை ஆன்மிக காரியங்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மகிழ்வீர்கள்.  தேவையற்ற செலவுகளைக் குறைத்துச் சிக்கனமாக இருந்தால், பணமுடைகளைத் தவிர்க்கலாம். மாணவர்கள் ஆழ்ந்து கவனமாகப் படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறலாம். அதன் காரணமாகக் கல்வியில் தேர்ச்சி உண்டு.

கன்னி (உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள்
இந்த வாரம் பணவரவு அதிகரித்தாலும், புதிய உறவுகளுடனான உல்லாசப் பொழுது போக்குகளாலும், விருந்தினர் வருகையாலும் மனம் மகிழும். கணவன், மனைவிக்கு இடையே உறவு பலப்படும். வீட்டில் உறவுகளுக்கு இடையே, எப்போதும் இல்லாத அளவுக்கு ஒற்றுமை ஓங்கும். அளவுக்கு அதிகமாக அன்பு காட்டும் பெண்களின் ஆதரவால் லாபம் ஏற்படும். குழந்தைகளின்  சுட்டித்தனம் மற்றும் சேட்டைகளைக் கண்டு மனம் மகிழ்ச்சி அடையும். தயாரிப்புகளைப் பெருக்கும் விதமாக, பணியில் முனைப்பும், புதிய ஆலோசனைகளும் எழும்.
ஹஸ்தம்
இந்த வாரம் வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும்  வெற்றிகரமாக நடக்கும். புத்திர பாக்கியம் ஏற்படும். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் வந்து சேரும். பாசம் மிக்க பெண்களால் மனமகிழ்ச்சி ஏற்படும். பயணங்களால் சுகம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். தொழிலில் ஏற்படும் முழுமையான ஈடுபாடு காரணமாக தாராளமான பணவரவு இருக்கும். சிலருக்குப் பருவமாற்றம் காரணமாக சளி, தலைவலி, காய்ச்சல் என சிறு உடல் உபாதைகள் ஏற்படலாம்.
சித்திரை – 1,2 பாதங்கள்
இந்த வாரம் பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணவரவு கிடைக்கும். உறவுகள் மூலமாகவும் பணவுதவிகள் கிடைக்கலாம். அரசு வகையில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைத்து வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிதாகத் தொழிலில் மேற்கொள்ளப்படும் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மூலமாக வருமான வாய்ப்புகள் பெருகும். புதிய தொழிலாளர் சேர்க்கை காரணமாக தொழிலில் எதிர்பார்ப்புக்கு மேல் உற்பத்தி பெருகும்.

துலாம் (சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)
சித்திரை-3,4 பாதங்கள்
இந்த வாரம் எந்தக் காரியத்தையும் முழுத் திறமையையும் காட்டித் திறம்படச் செய்யும் உங்கள் செயல்திறன் கூடும். அதன் காரணமாக உங்கள் பணி இலக்கை எளிதாக அடைவீர்கள். மனதில் தெய்வ சிந்தனையும், தரும சிந்தனையும் நிலைத்திருக்கும். வார மத்தியில்  உங்களுக்குச் சிறப்பான பலன்கள் ஏற்படும். சிலருக்குப் பண விஷயமான சிந்தனைகள் தலைதூக்கும். தேவையற்ற கோபத்தைக் குறைத்தால் குடும்பத்தில் குழப்பங்களும் குறையும். தந்தைவழி உறவுகளால் வீண் தொல்லைகள் ஏற்படலாம்.
சுவாதி
இந்த வாரம் நீங்கள் விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள்.  சுகமும், ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பணவரவுகள் ஆகியவை ஏற்படும். சிலருக்கு மற்றவர்களை ஆணையிடும் உயர் பதவி கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும். அரசு சம்பந்தமான வேலைகள் தாமதப்படலாம். தந்தை வகை உறவுகளால் தோல்லைகள் ஏற்படலாம். சிலருக்கு எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். தொழிலில் புதிய வாய்ப்புக்கள் வரலாம்.
விசாகம்- 1,2,3 பாதங்கள்
இந்த வாரம் சுபகாரியங்களுக்காக வீடே விழாக்கோலம் பூணும். திடீரென ஏற்படும். பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். விருப்பத்துக்கு இணங்க அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். புதிய தொழில் முயற்சிகளுக்காக எதிர்பார்க்கப்படும் வங்கிக் கடனுதவிகள் தாமதத்திற்குப் பின்னரே கிடைக்கும். அரசுப் பணியாளர்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். திட்டமிடப்பட்ட செயல்களில் பிறரால் தடைகள் ஏற்படலாம். பிறரரின் உயர்வு கண்டு ஏற்படும் பொறாமை மற்றும் கோபங்களைத் தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம் (விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
விசாகம்- 4 ஆம் பாதம்
இந்த வாரம் பொருளாதார நிலை உயர்வால் பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். ஆடை, ஆபரண இலாபங்கள் பெற்று உற்சாகமாகத் திகழ்வீர்கள். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும், எவ்விதத் தடையின்றி வெற்றி பெறும்.  அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடிவரும். தங்கள் சேவைகள் மேலதிகாரிகளால் அங்கீகரிக்கப்படும். அத்துடன் நல்ல  பாராட்டும் பெறுவீர்கள். வியாபாரம் மற்றும் தொழிலில் புதுப்புது மாற்றங்களால் பண வருமானம் அதிகரிக்கும்.
அனுஷம்
இந்த வாரம் பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது, நல்ல முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். தெய்வீக கைங்கர்யங்களில் ஆர்வம் ஏற்பட்டு தானதருமங்கள் செய்ய முற்படுவீர்கள். சிலருக்கு அக்னி பயம், திடீர் விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு விரும்பிய இடத்திற்கு இடமாற்றங்கள் கிடைக்கலாம். உங்களுக்குத் தொழிலில் புதிய கொள்முதல் மூலமாக அதிகமான வருவாய்ப் பெருக்கம் ஏற்படும். ஞானிகளின் அருளால் நல்லதே நடக்கும்.
கேட்டை
இந்த வாரம் தெய்வ தரிசனத்தால்  மனம் மகிழ்வதோடு, மனதில் அமைதியும் நிலவும். வியாபாரிகளுக்கு முதலீடுகள் அதிகரித்து இலாபமும் அதிகரிக்கும். அனைத்துப் பணிகளிலும் மனைவியின் ஒத்துழைப்புக் கிடைக்கும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களால் வியாபாரிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கும். தாயாரின் அனுகூலமான வார்த்தைகள் உற்சாகம் அளிக்கும்.  அரசுப் பணியில் உள்ளவர்கள்  அதிகாரிகளை அனுசரித்துச் சென்றால்,  பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக அமையும்.

தனுசு (மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)
மூலம்
இந்த வாரம் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். விரும்பியதெல்லாம் கிடைக்கும். உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். தொழில் வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கும்.  கல்வியில் குழந்தைகளின் முன்னேற்றம் கண்டு மனதில் எல்லையில்லா  மகிழ்ச்சி  ஏற்படும். அவர்கள் வழியே சென்று அவர்களைத் திருத்துவது நல்லது. புதிதாகத் திட்டமிடும் வியாபார முயற்சிகள் வெற்றி அடைந்து,  ஆதாயம் தரும். அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால், எதிர்பார்க்கும் பணி உயர்வுகள் எளிதாகக் கிடைக்கும்.
பூராடம்
இந்த வாரம் அனைத்து வசதிகளும் இன்பமும் ஏற்படும். நல்ல உயர்ந்த மனிதர்களின், பண்பு மிக்கவர்களின் நட்பால் உயர்வு ஏற்படும். அனைவரையும் கவரும் வண்ணம் சிறப்பான ஆடை அணிந்து மிடுக்காக உலாவருவீர்கள். கணவன், மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் பாசமழை பொழிவர். பிள்ளைகளின் முன்னேற்றங்கண்டு பெருமை கொள்வீர்கள். இல்லத்துக்குத் தேவையான நவீன வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கி அனுபவிப்பீர்கள். உங்கள் உழைப்பின் சிறப்பு பாராட்டுப் பெறுவதோடு, பதவி உயர்வுக்கும் கைகொடுக்கும்.
உத்திராடம் –1 ஆம் பாதம்
இந்த வாரம் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெறும். மனைவியின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்தால் இல்லத்தில் இன்பம் பொங்குவதோடு, முன்னேற்றங்களும் தேடிவரும். தனவருமானம் அதிகரிப்பதால் அனைத்துக் காரியங்களும் அனுகூலமாய் இருக்கும். பொருளாதார நிலையை பொறுத்தவரை சீராக இருக்கும். தொழிலில் மிகப் பெரிய சாதனைகளைப் புரிவீர்கள். அதிகாரிகளின் கெடுபிடிகளும் அதிகமாகும். பயணங்களை ஒத்திப் போடுவது நல்லது.

மகரம் (உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
உத்திராடம்- 2,3,4- பாதங்கள்
இந்த வாரம் நீண்டநாட்களாகத் தீட்டிய திட்டங்களின்படி வட இந்திய யாத்திரை செல்லும் நிலை ஏற்படலாம். துவக்கத்தில் புதிய தொடர்புகளால் நன்மைகள் ஏற்படும். குடும்பத்தில் உறவுகளிடையே பாசம் அதிகரிக்கும். உத்தியோக முயற்சியில் இருப்பவர்களுக்குப் போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும். அரசு அதிகாரிகளின் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும்.  அதைத் தக்க வைக்கக் கடின உழைப்புத் தேவை. விற்பனைப் பிரதிநிதிகளின் வருமானம் அவர்களின் பேச்சுத் திறனால் அதிகரிக்கும்.
திருவோணம்
இந்த வாரம் வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும்  சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கை, தொழில் இலாபம் ஆகியவை ஏற்படும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். உங்களின் அபரிமிதமான அறிவுத் திறனால் கௌரவப் பட்டங்கள், புதிய பதவிகள் ஆகியவை கிடைக்கலாம். பழைய கடன்களை அடைக்க தக்க சமயத்தில் பணவரவு ஏற்படும்.  சிலருக்குப் புதிய தொழில் தொடங்க வங்கிக் கடன்களுக்கான  முயற்சிகள் வெற்றி பெறும். வீடு வாங்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
அவிட்டம் 1,2 பாதங்கள்
இந்த வாரம் மதிப்பு மிக்கப் பெரியோர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். தங்கள் திறமைக்கு ஏற்றபடி புகழும், கௌரவமும் கூடும். அனைத்து வேலைகளையும் நம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். பலவழிகளிலும்  பணவரவுகள் அதிகம் கிடைக்கலாம். தொழிலில் புதிய விரிவாக்க நடவடிக்கைகள் மூலமாக வருமான வாய்ப்புகள் பெருகும். வாகனங்களில் செல்கையில் எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம். கூட்டாகத் தொழில் புரியும் வாய்ப்புக்கள் ஏற்படலாம். திரைத்துறையில் இருப்பவர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

கும்பம் (அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
அவிட்டம் – 3,4 பாதங்கள
இந்த வாரம் பெண்களுக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடும், அதன் காரணமாகக் குடும்ப முன்னேற்றமும் ஏற்படும். பணிபுரியும் பெண்கள் தங்கள் உயர் அதிகாரிகளின்  சொல் கேட்டு நடந்தால் உன்னத நிலை அடைவர். உங்கள் அசாத்தியத் திறமையால் சம்பாதிக்கும் திறன் அதிகரிக்கும். அரசு வேலைகளுக்கு மனுச் செய்தவர்கள் சாதகமான பதில்களை எதிர்பார்க்கலாம்.வியாபாரிகள் தங்கள் வாக்கால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தைப் பெருக்குவர். சிலருக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும்.
சதயம்
இந்த வாரம் மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்க கடினமாக உழைக்க வேண்டியது வரும். சிலருக்கு அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடும். வரவுக்கு மீறிய செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிப்பை உயர்த்துவது நல்லது. சிலருக்குப் பணி அல்லது வீடு ஆகிய இடமாற்றங்கள் ஏற்படலாம். பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். எந்த ஒரு காரியத்தையும் பதட்டமின்றிப் பொறுமையாகச் செய்தால் வெற்றி நிச்சியம்.
பூரட்டாதி-1,2,3 பாதங்கள்
இந்த வாரம் சுபச் செய்திகள் வந்து காதுகளில் தேனைப் பாய்ச்சும். குடும்பத்தில் சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால் தனலாபம் அதிகரிக்கும். விவசாயிகளுக்கு அதிக மகசூல் ஏற்பட்டு, இலாபத்தால் வசதிகள் பெருகும். பெண்களின் வாழ்க்கையில் துன்பங்கள் மறைந்து, முன்னேற்றம் ஏற்படும்.  கற்பனை வளம் பெருகும். பழைய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் நல்ல வருமானத்தை அடைவார்கள் கூட்டாளிகளிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

மீனம் (பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
பூரட்டாதி – 4 ஆம் பாதம்
இந்த வாரம் திருமணமாகாத பெண்களுக்குத் திருமணத்துக்கான முயற்சிகள்  மேற்கொள்ளப்படும். புத்திர பாக்கியம் ஏற்படும். சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். திட்டமிட்டுப் புதிய விரிவாக்கங்கள் செய்வதினால் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். தேவையற்ற அலைச்சல் தரும் பயணங்களால் தேக சுகம் குறையும். கடமை உணர்வுமிக்க அரசு ஊழியர்களுக்குக் கட்டளைகளை இடும்படியான அதிகாரம் மிக்க உயர் பதவிகள் கிடைக்கும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும்  வெற்றி அடைய கடின உழைப்பு தேவைப்படும்.
உத்திரட்டாதி
இந்த வாரம் பல வகையான உயரக வாகன வசதி அமையும். கணவன், மனைவி இடையே மிகுந்த ஒற்றுமை ஏற்பட்டு சந்தோஷம் நிலவும். அலங்காரப் பொருட்கள் மற்றும் வாசனை திரவிய வியாபாரங்களில் அதிக இலாபம் காணலாம். அரசுப் பணியாளர்களுக்கு, அதிகாரிகளின் உதவியால் உயர்பதவிகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு அவர்கள் எதிர்பார்த்தபடி வங்கிக் கடன்கள் சிரமமின்றிக் கிடைக்கும். பணியிடத்தில் மேலதிகாரி ஏதாவது குற்றம் சொல்லிக் கொண்டே இருப்பார். ஆயினும் சகப் பணியாளர்களின் உதவியால் சமாளித்துவிடுவீர்கள்.
ரேவதி
இந்த வாரம் உங்கள் கீர்த்தி பெருகும். பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். உங்கள் அசாத்தியத் திறமையால் சம்பாதிக்கும் திறன் அதிகரிக்கும். குடும்பத்தாரின் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றி அவர்களை மகிழ வைப்பீர்கள். நல்லதொரு வாகனம் வாங்க முயற்சிப்பீர்கள். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும்.  பணவரவு அதிகரிக்கும். புனித காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு உதவியாளர்கள் அமைவர். அரசுப் பணிக்கு முயல்பவர்களுக்கு அனுகூலமான காலமாகும்.

by Swathi   on 29 May 2018  0 Comments
Tags: Vaara Palangal   Natchathira Palangal   Rasi Palangal   Tamil Rasi Palangal   Vaara Natchathira Palangal   ராசி பலன்கள்   இந்த வார நட்சத்திர பலன்கள்  
 தொடர்புடையவை-Related Articles
நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06  – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (15 - 04 – 2018 முதல் 21 – 04 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (15 - 04 – 2018 முதல் 21 – 04 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 04 – 2018 முதல் 14 - 04 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 04 – 2018 முதல் 14 - 04 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (01 – 04 – 2018 முதல் 07 - 04 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (01 – 04 – 2018 முதல் 07 - 04 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (25 – 03 – 2018 முதல் 31 - 03 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (25 – 03 – 2018 முதல் 31 - 03 – 2018 வரை)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.