LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

நேஷனல் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் 362 நிர்வாக அதிகாரி காலிப்பணியிடங்கள் !!

பொதுத் துறை நிறுவனமான நேஷனல் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பிரிவில் காலியாக உள்ள 362 இடங்களை நிரப்புவதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விபரங்கள்:

என்.ஐ.சி.எல்., நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி காலியிடங்களில் நிதிப்பிரிவில் - 60 இடங்களும்,

சட்டப் பிரிவில் - 60 இடங்களும்,

ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்கில் - 30 இடங்களும்,

இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவில் - 20 இடங்களும்,

ஜெனரலிஸ்ட் பிரிவில் - 192 இடங்களும் காலியாக உள்ளன.

வயது வரம்பு : 30.11.2014 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: ஜெனரலிஸ்ட் பிரிவுக்கு பட்டதாரிகளும், இதர பிரிவுகளுக்கு அத்துறை சார்ந்த சிறப்புப் படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். முழுமையான தகவல்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
தேர்ச்சி முறை: ஆன்-லைன் முறையிலான எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600/-ஐ இந்த பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணமாக ஆன்-லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் மட்டுமே சமர்ப்பிக்க முடியும். விண்ணப்பிப்பதற்கு முன்பாக உங்கள் பாஸ்போர்ட் புகைப்படத்தையும், உங்களின் கையெழுத்தையும் ஸ்கேன் செய்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.  

விண்ணப்பிக்க கடைசி நாள்:
24.01.2015

கூடுதல் விவரங்களுக்கு : https://nationalinsuranceindia.nic.co.in/recruitment/Officers_Recruitment_2014-15.pdf என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.

by Swathi   on 05 Jan 2015  0 Comments
Tags: National Insurance Company   National Insurance Company Jobs   National Insurance Company Recruitment   NICL Recruitment 2015   NICL Administrative Officer Recruitment   நிர்வாக அதிகாரி   நேஷனல் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட்  
 தொடர்புடையவை-Related Articles
நேஷனல் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் 362 நிர்வாக அதிகாரி காலிப்பணியிடங்கள் !! நேஷனல் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் 362 நிர்வாக அதிகாரி காலிப்பணியிடங்கள் !!
ஜூன் 14 ஆம் தேதி வி.ஏ.ஓ. தேர்வு : டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு !! ஜூன் 14 ஆம் தேதி வி.ஏ.ஓ. தேர்வு : டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.