LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- எட்டுத்தொகை

நற்றிணை-10

226. பாலை
மரம் சா மருந்தும் கொள்ளார், மாந்தர்;
உரம் சாச் செய்யார், உயர்தவம்; வளம் கெடப்
பொன்னும் கொள்ளார், மன்னர்- நன்னுதல்!- 
நாம் தம் உண்மையின் உளமே; அதனால்
தாம் செய்பொருள் அளவு அறியார்; தாம் கசிந்து, 5
என்றூழ் நிறுப்ப, நீள் இடை ஒழிய,
சென்றோர்மன்ற நம் காதலர்; என்றும்
இன்ன நிலைமைத்து என்ப;
என்னோரும் அறிப, இவ் உலகத்தானே.  
அழகிய நுதலையுடையாய்! இவ்¢வுலகத்து மாந்தர் மரம் பட்டுப்போகும்படி அதன்பாலுள்ள மருந்தை முற்றுங் கொள்வார் அல்லர்; மற்றும் தம் வலிமை முற்றும் கெடுமாறு உயர்ந்த தவத்தைச் செய்யார்; அரசர் தம்முடைய குடிகளின் செல்வமெல்லாம் குறைபடும் வண்ணம் அவரிடத்து இறை வாங்குபவரல்லர்; அவற்றை உணர்ந்துவைத்தும் தாம் வருத்தம் மேற்கொண்டு வெயில் நிலைகொள்ள நீண்ட சுரத்துநெறி பின்னே ஒழிய எம்மைப் பிரிந்து சென்றவராகிய நங்காதலர்; தாம் எம்மைப் பிரியாதுறைதலின் நாம் உயிரோடிராநின்றோம்; தாம் ஈட்ட விரும்பும் பொருள் காரணமாக எம்மைப் பிரிவராயின் அதனாலே வருவது எமது இறந்துபாடு என்பதனைத் திண்ணமாக அறிந்தவரல்லர்; எக்காலத்தும் இதுவே ஆடவர் இயற்கை என்பர் சான்றோர்; இதனை யாவரும் அறிந்திருப்பர் கண்டாய்; 
பிரிவிடை மெலிந்த தலைமகள் வன்புறை எதிர்மொழிந்தது. - கணி புன்குன்றனார்
227. நெய்தல்
அறிந்தோர் 'அறன் இலர்' என்றலின், சிறந்த
இன் உயிர் கழியினும் நனி இன்னாதே;
புன்னைஅம் கானல் புணர் குறி வாய்த்த
பின் ஈர் ஓதி என் தோழிக்கு, அன்னோ!
படு மணி யானைப் பசும்பூட் சோழர் 5
கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண்,
கள்ளுடைத் தடவில் புள் ஒலித்து ஓவாத்
தேர் வழங்கு தெருவின் அன்ன,
கௌவை ஆகின்றது- ஐய!- நின் அருளே.  
ஐயனே! புன்னையஞ் சோலையிடத்தும் புணர்தற்குப் பலகாலும் நீ குறித்த குறிவயின் வந்துநின்ற பின்னிய குளிர்ந்த கூந்தலையுடைய என் தோழிக்கு; ஐயோ! நீ செய்த தலையளிதான் ஒலிக்கின்ற மணியையுடைய யானையையும் பசிய பொன்னாலாகிய பூண்களையுமுடைய சோழரது; கொடி நுடங்கா நின்ற தெருக்களையுடைய ஆர்க்காடு என்னும் பதியிலே; கள்ளையுடைய சாடியின்கண் வண்டுகள் ஒலித்து; நீங்காத தேர்கள் இயங்கும் தெருவையொத்த பெரிய பூசலுண்டாகா நின்றது. அப் பூசலாகிய பழிச் சொல்லும் எப்படிக் கூறப்படுகன்றதோ வெனில்; அறிந்தோம் என்று கூறிக்கொள்ளும் அவரெல்லாம் அறநெறியிலே நிற்பவரேயல்லர் என்று எவ்விடத்தும் பரந்தோங்கின; அவ்வலர்தான் அவளது இனிய உயிர் இறந்துபட்ட பின்னும் இன்னாமையைத் தருகின்ற தன்மையுடையது காண்! 
வரையாது நெடுங்காலம் வந்து ஒழுக, தோழி தலைமகனை வரைவு முடுகச் சொல்லியது. - தேவனார்
228. குறிஞ்சி
என் எனப்படுமோ- தோழி!- மின்னு வசிபு
அதிர் குரல் எழிலி, முதிர் கடன் தீர,
கண் தூர்பு விரிந்த கனை இருள் நடு நாள்,
பண்பு இல் ஆர் இடை வரூஉம் நம் திறத்து
அருளான்கொல்லோ தானே- கானவன் 5
சிறு புறம் கடுக்கும் பெருங் கை வேழம்,
வெறி கொள் சாபத்து எறி கணை வெரீஇ,
அழுந்துபட விடரகத்து இயம்பும்
எழுந்து வீழ் அருவிய மலை கிழவோனே?  
தோழீ! கானகத்து வாழும் வேட்டுவனது முதுகுபோன்ற பெரிய துதிக்கையையுடைய களிற்றியானை; அச்சங்கொண்ட வில்லினின்று எய்யுங்கணைக்கு அஞ்சி (ஓசையானது) மலைப்பிளப்பின் ஆழத்தே சென்று மோதுமாறு பிளிற்றா நிற்கும்; குதித்து விழுகின்ற அருவியையுடைய மலைக்குரிய நங்காதலன்; மின்னலாலே இருளைப் பிளந்துகொண்டு முழங்குகின்ற குரலையுடைய மேகம்; தான் சூன்முதிர்த லுடைமையால் அக்கடன் தீருமாறு கண்ணொளி மறையும்படி பரத்தலினாலே செறிந்த இருளையுடைய நடுயாமத்தில்; இயல்பு இல்லாத அரிய வழியில் வந்து எம்மாட்டு அருளுதல் செய்யானோ?; இப்பொழுது அவன் வந்து தலையளி செய்யாதிருத்தற்குக் காரணந்தான் என்னென்று சொல்லப்படுமோ? 
தோழி, சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்,தலைமகன் கேட்பச் சொல்லியது. - முடத்திருமாறனார்
229. பாலை
'சேறும், சேறும்' என்றலின், பல புலந்து,
'சென்மின்' என்றல் யான் அஞ்சுவலே;
'செல்லாதீம்' எனச் செப்பின், பல்லோர்
நிறத்து எறி புன் சொலின்திறத்து அஞ்சுவலே;
அதனால், சென்மின்; சென்று வினை முடிமின்; சென்றாங்கு, 5
அவண் நீடாதல் ஓம்புமின்; யாமத்து,
இழை அணி ஆகம் வடுக் கொள முயங்கி,
உழையீராகவும் பனிப்போள் தமியே
குழைவான், கண்ணிடத்து ஈண்டித் தண்ணென,
ஆடிய இள மழைப் பின்றை, 10
வாடையும் கண்டிரோ, வந்து நின்றதுவே?  
'நாம் வினைவயிற் செல்வோம் நாம் வினைவயிற் செல்வோம் என்று நீர் பலகாலும் கூறுதலாலே யான் பலவாகப் புலந்து கூறிச் செல்லுவீராக' என்று சொல்லுதற்கு அஞ்சாநிற்பேன்; 'நீர் செல்லாது இங்கே இருமின்' என்று சொன்னால் பலருங் கூறும் மார்பிலே தைக்கின்ற அம்பு போன்ற புல்லிய சொல்லினிமித்தமாக எங்கே பழிவந்து மூடுமோ என்று அதற்கும் நான் அஞ்சாநிற்பேன்; ஆதலால் நீர் செல்லுவீராக! சென்று வினை முடிப்பீராக! அங்ஙனம் முடிக்கச் சென்ற அவ்விடத்து நெடுங்காலம் நிற்றலை ஒழியுமாற்றைப் பாதுகாத்துக் கொள்வீராக!; இரவு நடுயாமத்துக் கலன் அணிந்த மார்பிலே தழும்புகொள்ளுமாறு முயங்கி நீயிர் அருகிருப்பீராயினும் இவள் நடுங்காநிற்பள்¢ கண்டீர்!; அத்தகையாள் இப்பொழுது தனியேயிருந்து வருந்துமாறு அகன்ற இடமெங்கும் பரவி நெருங்கித் தண் எனும்படி இயங்குகின்ற பெய்து வெளிதாகிய மேகத்தின் பின்னர்; வந்துநின்ற வாடைக் காற்றையுங் கண்டீரன்றோ? ஆதலின் ஆராய்ந்து ஏற்றது செய்ம்மின்!; 
தலைமகனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, தலைமகளை ஆற்றுவித்துச் செல்ல உடன்பட்டது; செலவு அழுங்குவித்ததூஉம் ஆம்.
230. மருதம்
முயப் பிடிச் செவியின் அன்ன பாசடை,
கயக் கணக் கொக்கின் அன்ன கூம்பு முகை,
கணைக் கால், ஆம்பல் அமிழ்து நாறு தண் போது,
குணக்குத் தோன்று வெள்ளியின், இருள் கெட விரியும்
கயற்கணம் கலித்த பொய்கை ஊர! 5
முனிவு இல் பரத்தையை எற் துறந்து அருளாய்;
நனி புலம்பு அலைத்த எல்லை நீங்க,
புதுவறம்கூர்ந்த செறுவில் தண்ணென
மலி புனல் பரத்தந்தாஅங்கு,
இனிதே தெய்ய, நின் காணுங்காலே. 10
நெருங்கிய பிடியானையின் செவிபோன்ற பசிய இலையையும் குளத்தின்கணுள்ள அழகிய கொக்குப் போலக் கூம்பிய முகையையும் அவற்றிற்கொத்த திரண்ட தண்டினையுமுடைய ஆம்பலின்; அமிழ்து நாறும் மெல்லிய மலர் வைகறையிலே கீழ்த்திசையின் கண்ணே தோன்றுகின்ற வெள்ளியைப் போல இருள்கெட மலராநிற்கும் கயல்மீன் கூட்டஞ் செருக்கிய பொய்கையையுடைய ஊரனே!; என்னைக் கைவிட்டுச் சிறிதும் நின்பால் சினங்கொள்ளாதிருக்கின்ற பரத்தையைத் தலையளிசெய்து ஆண்டுறைவாயாக! யான் நின்பால் வெகுட்சி கொண்டுடைமையால் நின்னால் எஞ்ஞான்றும் தலையளி செய்யத் தக்கேன் அல்லேன்; கோடையாலே மிகத் துன்பப்பட்டகாலை அக் கோடை வெப்பம் நீங்குமாறு புதுவதாக வற்றிக்காய்ந்து வெடிப்புமிக்க வயலிலே; குளிர்ச்சியுற நிறைந்த புதுநீர் வெள்ளம் பரவினாற்போல; வந்த நின்னைக் காணும்பொழுதெல்லாம் இனிமையாகவேயிரா நின்றது; அக்காட்சியொன்றே போதும்! ஆதலின் என் மனையின்கண்ணே வாராதேகொள்! 
தோழி வாயில் மறுத்தது. - ஆலங்குடி வங்கனார்
231. நெய்தல்
மை அற விளங்கிய மணி நிற விசும்பில்
கைதொழும் மரபின் எழு மீன் போல,
பெருங் கடற் பரப்பின் இரும் புறம் தோய,
சிறு வெண் காக்கை பலவுடன் ஆடும்
துறை புலம்பு உடைத்தே- தோழி!- பண்டும், 5
உள் ஊர்க் குரீஇக் கரு உடைத்தன்ன,
பெரும் போது அவிழ்ந்த கருந் தாட் புன்னைக்
கானல்அம் கொண்கன் தந்த
காதல் நம்மொடு நீங்காமாறே.  
தோழீ! இதன் முன்னும் மனையின் கண்ணேயுள்ள ஊர்க்குருவியின் முட்டையை உடைத்தாற்போன்ற பெரிய அரும்பு மலர்ந்த கரிய அடியையுடைய புன்னையஞ் சோலையையுடைய கொண்கன்; கொடுத்த காதலானது நம்மை விட்டு நீங்காமையினாலே : மை அற விளங்கிய மணிநிற விசும்பின் கை தொழு மரபின் எழு மீன்போல மாசு அற விளங்கிய நீலமணிபோன்ற நிறத்தையுடைய ஆகாயத்தின்கண்ணே தோன்றி உலகத்தாராலே கைதொழப்படுந் தகுதியையுடைய முனிவரின் தோற்றமாகிய ஏழுமீன்களைப் போல; பெரிய கடற் பரப்பின்கண்ணே கரியமுதுகு நனையும்படி சிறிய வெளிய நீர்க்காக்கை பலவும் ஒருசேர நீர் குடையாநிற்கும் கடல் துறையை; யாம் தமியேமாய் நோக்குதற்கு அத் துறை நனி இன்னாமை உடையதாகக் காணுந் தன்மையதாயிராநின்றது; 
சிறைப்புறமாகத் தோழி சொல்லி, வரைவு கடாயது. - இளநாகனார்
232. குறிஞ்சி
சிறு கண் யானைப் பெருங் கை ஈர்- இனம்
குளவித் தண் கயம் குழையத் தீண்டி,
சோலை வாழை முணைஇ, அயலது
வேரல் வேலிச் சிறுகுடி அலற,
செங் காற் பலவின் தீம் பழம் மிசையும் 5
மா மலை நாட!- காமம் நல்கென
வேண்டுதும்- வாழிய! எந்தை, வேங்கை
வீ உக வரிந்த முன்றில்,
கல் கெழு பாக்கத்து அல்கினை செலினே.  
சிறிய கண்ணையும் பெரிய கையையுமுடைய யானையின் களிறும் பிடியுமாகிய இரண்டினம்; மலைப்பச்சையைச் சுற்றிலுமுடைய நீர்ச்சுனையிலே மெய் துவளப் புணர்ந்து சோலையிலுள்ள மலைவாழையைத் தின்பதை வெறுத்து; அயலிடத்துள்ளதாகிய மூங்கில் முள்ளான் மிடைந்த வேலியையுடைய சிறிய குடியின்கண்ணுள்ளார் அஞ்சியலறும்படி சிவந்த அடியையுடைய பலாவினது இனிய பழத்தைத் தின்னாநிற்கும் கரிய மலை நாடனே!; நீ நெடுங்காலம் வாழ்வாயாக!; எந்தைக்குரிய, வேங்கை மலர் உதிரும்படி அகன்ற வாயிலையுடைய ; மலையிலே பொருந்திய பாக்கத்து இன்று இராப் பொழுதையிலே தங்கினையாகிப் பிற்றைநாளிற் செல்வதாயின்; அதற்கு அடையாளமாக நினது மாலையைக் கொடுப்பாயாக! என வேண்டுகிற்போம்! 
பகல் வருவானை இரவு வா எனத் தோழி சொல்லியது. - முதுவெங்கண்ணனார்
233. குறிஞ்சி
கல்லாக் கடுவன் நடுங்க, முள் எயிற்று
மட மா மந்தி மாணா வன் பறழ்,
கோடு உயர் அடுக்கத்து, ஆடு மழை ஒளிக்கும்
பெருங் கல் நாடனை அருளினை ஆயின்,
இனி என கொள்ளலைமன்னே; கொன் ஒன்று 5
கூறுவென் வாழி- தோழி!- முன்னுற
நாருடை நெஞ்சத்து ஈரம் பொத்தி,
ஆன்றோர் செல் நெறி வழாஅச்
சான்றோன் ஆதல் நன்கு அறிந்தனை தௌமே.  
தோழீ! வாழ்வாயாக!; தன்னுடைய தொழிலையன்றிப் பிறவற்றைக் கல்லாத கடுவன் நடுங்குமாறு முள்போன்ற கூரிய எயிற்றினையும் மடப்பத்தையுமுடைய கருமுகமந்தி; தன் மாட்சிமைப்படாத சிறிய வலிய பிள்ளையோடு கொடுமுடியுயர்ந்த மலைப்பக்கத்து இயங்கும் மேகம் தனக்கு மறைவிடமாகக் கொண்டு ஒளிக்கின்ற; பெரிய மலைநாடன் வரைந்து கொள்ளாது நாளும் வந்து நின்னைக் கூடியிருத்தலானே அவன்பாற் காதல் கைம்மிக்கு அருளுடையையாயினை, அங்ஙனம் ஆதலை ஆராயின்; இனி என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்வாயல்லைமன்; அதுகாரணமாக யான் கூறுவதும் பயனின்றி ஒழியத்தக்கதுதானென்றாலும் ஒரோவொன்று நினக்குக் கூறாநிற்பேன்; இதன்முன் பலநாளும் இங்கு வருதலால் யான் அறிந்த அளவில் அவன் தன் அன்புடைய உள்ளத்து அருள் பொருந்தி ஆராய்ந்து மேலவர் செல்லும் நெறியிலே சென்று வாழாத சால்பு இலன் ஆதலை; நீ நன்றாக அறிந்தனையாகித் தேர்ந்து கொள்வாய்! 
வரையாது நெடுங்காலம் வந்து ஒழுக, இவள் ஆற்றாள் என்பது உணர்ந்து, சிறைப் புறமாகத் தலைமகட்குத் தோழி சொல்லியது. - அஞ்சில் ஆந்தையார்
234. குறிஞ்சி
சான்றோர் வருந்திய வருத்தமும் நுமது
வான் தோய்வு அன்ன குடிமையும் நோக்கித்
திரு மணி வரன்றும் குன்றம் கொண்டு இவள்
வரு முலை ஆகம் வழங்கினோ நன்றே
அஃது ஆன்று 
அடை பொருள் கருதுவிர் ஆயின் குடையொடு 5
கழுமலம் தந்த நல் தேர்ச் செம்பியன்
பங்குனி விழவின் உறந்தையொடு
உள்ளி விழவின் வஞ்சியும் சிறிதே.  
நமரங்காள்!; நம்பால் மகட்பேசும் பொருட்டு அருங்கலம் முதலியன சுமந்து நம்மில்லிற்கு வந்துள்ள இப் பெரியோருடைய வழிநடை வருத்தத்தையும்; நுங்களுடைய வானைத் தீண்டுமளவு உயர்ந்தாற் போன்றுயர்ந்து திகழும் குலச்சிறப்பினையும் நினைந்துபார்த்து; நம்மகளின் மார்பின்கண் கணந்தொறும் வளராநின்ற முலைக்கு விலையாக; இச் சான்றோராற் குறிப்பிடப்படுகின்ற அருவிநீர் அழகிய மணிகளை வரன்றி வீழ்தற்கிடனான தலைவனது குன்றத்தையே ஏற்றுக்கொண்டு; இவளை அந் நம்பிக்கே வழங்கின் பெரிதும், நன்று நன்றாகும்; அங்ஙனமின்றி; நம் மகளின் முலைக்கு விலையாக அவர் தரும் பொருளைச் சீர்தூக்குவீராயின்; கழுமலப்போரின்கண் மாற்றாரை அவர்தங் குடையோடே அகப்படுத்திய வெற்றியையுடைய நல்ல தேரினையுடைய சோழன் தலைநகராகிய; பங்குனித்திங்களிலே விழாவெடுக்கும் உறந்தையோடே கூடிய; உள்ளி விழா நிகழ்தற்கிடனான சேரன் தலைநகராகிய வஞ்சிதானும் ஈடில்லாச் சிறிதாய்விடுங் கண்டீர்: ஆதலால் இச் சான்றோர் தரும் பொருளை ஏற்று இவளை அந் நம்பிக்கே ஈதல் நன்று; என்பதாம். 
செவிலியால் அறத்தொடு நிற்கப்பட்ட நற்றாய், தந்தை முதலியோர்க்கு அறத்தொடு நின்றது.
235. நெய்தல்
உரவுத் திரை பொருத பிணர் படு தடவு முதல்,
அரவு வாள் வாய முள் இலைத் தாழை
பொன் நேர் தாதின் புன்னையொடு கமழும்
பல் பூங் கானல் பகற்குறி வந்து, நம்
மெய் கவின் சிதையப் பெயர்ந்தனனாயினும், 5
குன்றின் தோன்றும் குவவு மணல் ஏறி,
கண்டனம் வருகம் சென்மோ- தோழி!- 
தண் தார் அகலம் வண்டு இமிர்பு ஊத,
படு மணிக் கலி மாக் கடைஇ,
நெடு நீர்ச் சேர்ப்பன் வரூஉம் ஆறே. 10
தோழீ! வலிய அலைவந்து மோதிய சருச்சரை பொருந்திய வளைந்த அடியையுடைய அராவுகின்ற வாளரம் போன்ற வாயையுடைய முட்கள் பொருந்திய இலைமிக்க தாழையின்கணுள்ள பூ; பொன் போன்ற மகரந்தத்தையுடைய புன்னைமலரொடு சேர்ந்து மணங்கமழாநிற்கும் இன்னும் பலவாகிய மலர்களையுடைய சோலையில் வைத்த; குறியிடத்திலே பகற் பொழுது வந்து நலனுகர்ந்து நம்முடைய உடம்பின் அழகு கெடும்படியாகப் பெயர்ந்து போயினனாயினும்; தண்ணிய மாலை அணிந்த மார்பின்கண் வண்டுகள் வந்தொலித்து அம்மாலையின் தேனை உண்ணாநிற்ப; ஒலிக்கின்ற மணியணிந்த குதிரைகளைச் செலுத்தி; நெடிய நீரையுடைய நெய்தனிலத்திற்குத் தலைவனாகிய நம்காதலன் வரைவொடு வருகின்றதனை; யாம் சென்று குன்றுபோலத் தோன்றுகின்ற குவிந்த மணலாலாகிய திடர்மீது, ஏறிநின்று கண்டு வருவோம் அதற்காகச் செல்வோமோ? ஒன்று கூறிக்காண்; 
வரைவு நீட ஆற்றாளாங் காலத்துத் தோழி வரைவு மலிந்தது.
236. குறிஞ்சி
நோயும் கைம்மிகப் பெரிதே; மெய்யும்
தீ உமிழ் தெறலின் வெய்தாகின்றே- 
ஒய்யெனச் சிறிது ஆங்கு உயிரியர், 'பையென
முன்றில் கொளினே நந்துவள் பெரிது' என,
நிரைய நெஞ்சத்து அன்னைக்கு உய்த்து ஆண்டு 5
உரை, இனி- வாழி, தோழி!- புரை இல்
நுண் நேர் எல் வளை நெகிழ்த்தோன் குன்றத்து
அண்ணல் நெடு வரை ஆடி, தண்ணென
வியல் அறை மூழ்கிய வளி என்
பயலை ஆகம் தீண்டிய, சிறிதே. 10
தோழீ! நீ வாழ்வாயாக!; எனக்குண்டாகிய காமநோயும் அளவு கடப்பப் பெரிதாய் இராநின்றது; என்னுடம்பும் தீயை உமிழ்கின்ற கொதிப்பினால் வெப்பமுடையதாயிரா நின்றது; ஆதலின் என் உடம்பை மெலிவித்துக் குற்றமற்ற நுண்ணிய நேர்மையையுடைய ஒளி பொருந்திய வளையைக் கையினின்று கழலச் செய்த தலைமகனது மலையிலே; பெருமைபொருந்திய நீண்ட கொடுமுடியின் கண்ணே பரவி நின்று குளிர்ச்சியுறும்படி அகன்ற பாறையில் அளாவிய காற்றானது; என்னுடைய பசலைநோயுற்ற மெய்யிலே சிறிதுபடவேண்டி; நீ விரைந்து சென்று "அங்கு உயர்ந்த நம்முடைய முன்றிலிலே இவளைச் சிறிதுபோது மெல்லக் கிடத்தினால் இவள் பெரிதும் நோய் நீங்கப்பெறுவள்" என்று; அவ்விடத்து என்னைக் கொண்டுபோய்விட்டு நரகம் போன்ற கொடிய நெஞ்சத்தையுடைய அன்னைக்கும் இப்பொழுதே உரைப்பாயாக!; 
தலைமகன் சிறைப்புறமாக, வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - நம்பி குட்டுவன்
237. பாலை
நனி மிகப் பசந்து, தோளும் சாஅய்,
பனி மலி கண்ணும் பண்டு போலா;
இன் உயிர் அன்ன பிரிவு அருங் காதலர்
நீத்து நீடினர் என்னும் புலவி
உட்கொண்டு ஊடின்றும் இலையோ?- மடந்தை!- 5
உவக்காண் தோன்றுவ, ஓங்கி- வியப்புடை
இரவலர் வரூஉம் அளவை, அண்டிரன்
புரவு எதிர்ந்து தொகுத்த யானை போல,
உலகம் உவப்ப, ஓது அரும்
வேறு பல் உருவின், ஏர்தரும் மழையே! 10
மடந்தாய்!; வியப்புடைய இரவலர் வரும் பொழுது; அவர்கட்குக் கொடுப்பது கருதி "ஆய்அண்டிரன்" சேர்த்துவைத்த யானைத்திரள் போல; உலகத்தில் வாழும் உயிர்கள் மகிழ்ச்சியடையச் சொல்லுதற்கரிய வெவ்வேறாகிய உருவத்தோடு எழுகின்ற மேகங்கள்; ஓங்கித் தோன்றுவனவற்றை உவ்விடத்தே காணாய்! இஃது அவர் குறித்த பருவமன்றோ?; இதுகாறும் மிகப் பசந்து தோளும்¢ வாட்டமடைந்து; நீர் வடிகின்ற கண்களும் முன்போல் இன்றி வேறுபாடு கொள்ள; இனிய உயிர் போன்ற பிரிதற்கரிய காதலர் என்னைக் கைவிட்டு நெடுந்தூரம்சென்று ஒழிந்தனரே என்று கூறப்படுகின்ற புலவியை நீ நின் உள்ளத்தேகொண்டு; ஊடுகின்றதும் இல்லையோ? இஃதென்ன வியப்பு; 
தோழி உரை மாறுபட்டது. - காரிக்கண்ணனார்
238. முல்லை
வறம் கொல வீந்த கானத்து, குறும் பூங்
கோதை மகளிர் குழூஉ நிரை கடுப்ப,
வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம்,
மாலை அந்தி, மால் அதர் நண்ணிய
பருவம் செய்த கருவி மா மழை! 5
'அவர் நிலை அறியுமோ, ஈங்கு' என வருதல்
சான்றோர்ப் புரைவதோ அன்றே; மான்று உடன்
உர உரும் உரறும் நீரின், பரந்த
பாம்பு பை மழுங்கல் அன்றியும், மாண்ட
கனியா நெஞ்சத்தானும், 10
இனிய அல்ல, நின் இடி நவில் குரலே.  
கோடை தெறுதலாலே பட்டுப்போன காட்டிலே சிறிய பூவணிந்த கூந்தலையுடைய ஆயர் மகளிர் கூடுகின்ற கூட்டம் போல; வண்டுகள் வாய்திறந்து தேனைப் பருகும்படி மலர்ந்த பிடவுகளையுடைய அந்திமாலையில்; யான் காமநோய் மிகக்கொள்ளுமாறு கார்ப்பருவத்தைச் செய்த மின்னல் முதலாகிய தொகுதியையுடைய கரியமேகமே!; நீ "அவர் நிலைமையை இங்கு நான் கூற அறிந்து கொள்" என்று வருதல்; சான்றோர் செய்கையைஒத்ததாகமாட்டாது கண்டாய்!; ஒரு சேர மயங்கி நின் இடித்து முழங்குந் தொழிலையுடைய குரல் வலிய இடியாய் முழங்குந் தன்மையினாலே; பரவிய பாம்புகள் படம் மழுங்கி யடங்குமாறு செய்வதல்லாமல்; மாட்சிமைப்பட்ட தலைவரது நெஞ்சம் கனியும்படி செய்ய வல்லனவல்லவாதலால் நின் இடித்து முழங்கும் அக் குரல் எனக்கு இனிமை செய்வன அல்ல; 
தலைமகள் பருவம் கண்டு அழிந்தது. - கந்தரத்தனார்
239. நெய்தல்
ஞான்ற ஞாயிறு குடமலை மறைய,
மான்ற மாலை மகிழ்ந்த பரதவர்
இனிது பெறு பெரு மீன் எளிதினின் மாறி,
அலவன் ஆடிய புலவு மணல் முன்றில்
காமர் சிறுகுடிச் செல்நெறி வழியின், 5
ஆய் மணி பொதி அவிழ்ந்தாங்கு, நெய்தல்
புல் இதழ் பொதிந்த பூத் தப மிதிக்கும்
மல்லல் இருங் கழி மலி நீர்ச் சேர்ப்பற்கு
அமைந்து தொழில் கேட்டன்றோ இலமே; 'முன்கை
வார் கோல் எல் வளை உடைய வாங்கி, 10
முயங்கு' எனக் கலுழ்ந்த இவ் ஊர்
எற்று ஆவதுகொல், யாம் மற்றொன்று செயினே?  
மேலைத் திசையிலே சாய்ந்து விழுகின்ற ஆதித்த மண்டிலம் ஆங்குள்ள அத்தமனக் குன்றின்வாய் மறையாநிற்ப; மயங்கிய மாலைக் காலத்தில் கட்குடித்து மகிழ்ச்சியுற்ற பரதவ மாக்கள்; தாம்¢ வருந்தாது பெற்ற பெரிய மீனை எளிதாக விற்று; ஞெண்டு விளையாடிய புலவு நாற்றத்தையுடைய மணல் பரந்த முன்றிலையுடைய நோக்குவார்க்கு விருப்பம்¢ வருகின்ற சிறுகுடியின்கண்ணே; செல்லலுற்ற ஒழுங்குபட்ட வழியின் அழகிய நீலமணியின் குவியலை விரித்துப் பரப்பினாற்போல; நெய்தலின் புறவிதழான் மூடப்பட்ட மலரைக் கெட மிதித்துச் செல்லாநின்ற; வளப்பத்தையுடைய கரிய கழி பொருந்திய நிரம்பிய கடல்நீரையுடைய நெய்தனிலத்தலைவனுக்கு; யாம் மனமொத்து இதுகாறும் அவனிட்ட தொழிலைக் கேட்டு அதன்படி நடந்தோமேயில்லை; அங்ஙனமாக என்னை நோக்கி "நின் முன் கையில் அணிந்த நெடிய கோற்றொழில் அமைந்த ஒளி பொருந்திய வளைகள் உடையும்படி அச்சேர்ப்பனை அழைத்து அணைத்து முயங்குவாயாக!" என்று கூறி; புலம்பியழுத இவ்வூர்தான்; யாம் இனி அவனுக்கு அமைய நடக்கவல்ல வேறொரு காரியத்தைச் செய்துவிட்டால் என்ன பாடுபடுமோ? 
தோழி, தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது. - குன்றியனார்
240. பாலை
ஐதே கம்ம, இவ் உலகு படைத்தோனே- 
வை ஏர் வால் எயிற்று ஒள் நுதற் குறுமகள்
கை கவர் முயக்கம் மெய் உறத் திருகி,
ஏங்கு உயிர்ப்பட்ட வீங்கு முலை ஆகம்
துயில் இடைப்படூஉம் தன்மையதுஆயினும், 5
வெயில் வெய்துற்ற பரல் அவல் ஒதுக்கில்,
கணிச்சியில் குழித்த கூவல் நண்ணி,
ஆன் வழிப் படுநர் தோண்டிய பத்தல்
யானை இன நிரை வெளவும்
கானம் திண்ணிய மலை போன்றிசினே. 10
கூர்மையாயெழுந்த வெளிய பற்களையும் ஒள்ளிய நெற்றியையுமுடைய இளைமையுற்ற தோழீ!; நம் காதலர் தாம் கையாலணைத்து முயங்கும் புணர்ச்சியானது மெய்யிலே பொருந்த வேண்டாவென்று மாறுபடுதலானே ஏங்குகின்ற உயிர்த்தலோடு பொருந்திய பருத்த கொங்கையையுடைய என் மெய்யானது; இனித் தனியே கிடந்து துயிலுவதனாலே துன்பப்படுந் தன்மையதாயிராநின்றது எனினும்; வெயிலால் வெப்பமுற்ற பரல்மிக்க பள்ளத்தின் ஒரு புறத்திலே குந்தாலியாற் குழித்த கிணற்றையடைந்து; பசுவின் நிரையைப் பாதுகாக்கும் ஆயர் பறித்த சிறுகுழியிலுள்ள நீரை; யானை வரிசையாகச் சென்று உண்ணாநிற்கும்; அவர் சென்ற கானமானது திண்ணிய மலைபோல அழியாத தன்மையதாய் நின்று கருதுகின்ற எனக்கு அச்சத்தைத் தாராநின்றது; அத்தகைய அந்தக் கொடிய சுரமுற்ற பாலை நிலத்தினைப் படைத்த கொடியோன்றானும்; அதன்கட் பையச் சென்று நனி துன்புற்று வருந்துவானாக! 
பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது; நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியதூஉம் ஆம். - நப்பாலத்தனார்
241. பாலை
உள்ளார்கொல்லோ- தோழி!- கொடுஞ் சிறைப்
புள் அடி பொறித்த வரியுடைத் தலைய
நீர் அழி மருங்கின் ஈர் அயிர் தோன்ற,
வளரா வாடை உளர்பு நனி தீண்டலின்,
வேழ வெண் பூ விரிவன பலவுடன், 5
வேந்து வீசு கவரியின், பூம் புதல் அணிய,
மழை கழி விசும்பின் மாறி ஞாயிறு
விழித்து இமைப்பது போல் விளங்குபு மறைய,
எல்லை போகிய பொழுதின் எல் உற,
பனிக்கால் கொண்ட பையுள் யாமத்து, 10
பல் இதழ் உண்கண் கலுழ,
நில்லாப் பொருட்பிணிப் பிரிந்திசினோரே?  
தோழீ! வளைந்த சிறகையுடைய பறவைகளின் உள்ளங்காற் சுவடு பொருந்திய வரிகளை மேற்கொண்டுள்ள நீர்வற்றிய இடங்கள் தோறும்; மெல்லிய நுண்மணல் தோன்றாநிற்ப; மெல்லென வீசும் வாடைக்காற்று உளர்ந்து மிகவும் தீண்டுதலினாலே; கரும்பின் வெளிய பூப் பலவும் ஒருசேர விரிவனவாய் அரசனுக்கு வீசப்படும் கவரிபோல மெல்லிய புதல்தோறும் அழகு செய்யா நிற்ப; மேகங்கள் நீங்கிச் செல்லுகின்ற ஆகாயத்தில் மாறி மாறி விழித்து மூடி இமைப்பதுபோல் ஞாயிறு தோன்றித் தோன்றி மறையாநிற்ப; பகற்காலஞ் சென்ற மாலைப் பொழுதோடு இராக்காலம் வந்து சேர்தலும்; பனி நிலத்தில் விழத்தொடங்கிய துன்பத்தைத் தருகின்ற நடு யாமத்தில்; இமையையுடைய மையுண்ட கண்கள் நீர் பெருகி வடியும்படி அழாநிற்ப; நிலைநில்லாத பொருளை ஈட்டுதலில் உள்ளம் பிணிப்புண்டு எம்மைப் பிரிந்து சென்ற காதலர்; இப்பொழுது யாம் படுந்துயரைக் கருதினாரேல், புரையேறல் தும்மல் முதலியவற்றால் அறிந்து இனி அவர் வருவர் போலுமென ஆற்றியிருப்பேமன்றோ? அங்ஙனம் இன்மையால் கருதியிருப்பாரல்லரோ? 
தலைமகள் வன்புறை எதிர் அழிந்தது. - மதுரைப் பெருமருதனார்
242. முல்லை
இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப,
புதல் இவர் தளவம் பூங் கொடி அவிழ,
பொன் எனக் கொன்றை மலர, மணி எனப்
பல் மலர் காயாங் குறுஞ் சினை கஞல,
கார் தொடங்கின்றே காலை; வல் விரைந்து 5
செல்க- பாக!- நின் தேரே: உவக்காண்- 
கழிப் பெயர் களரில் போகிய மட மான்
விழிக் கட் பேதையொடு இனன் இரிந்து ஓட,
காமர் நெஞ்சமொடு அகலா,
தேடூஉ நின்ற இரலை ஏறே. 10
பாகனே! பழுத்து உதிர்தலானே இலைகளில்லாத பிடாவெல்லாம் மெல்லிய மலர்கள் நிறையும்படி அரும்பு முகிழ்ப்ப; புதர்மேலேறிப் படர்கின்ற முல்லைக்கொடி பூக்கள் மலராநிற்ப; கொன்றைகள் அனைத்தும் பொன்போல மலர்தலைச் செய்ய; நீலமணி போலப் பலவாய மலர்களையுடைய காயாவின் குறுமையாகிய கிளைகள் விளங்கா நிற்ப; இன்று காலைப் பொழுதிலேயே மேகம் தான் மழைபெய்யுந் தொழிலைத் தொடங்கியது கண்டாய்; கழிந்து பெயர்கின்ற களர்நிலத்திலே சென்ற பிணைமான் மருண்டு விழித்தலையுடைய கண்களையுடைய தன் குட்டியோடு கூட்டத்தினின்று இரிந்தோடுதலும்; அதன்பால் உற்ற விருப்பமிக்க நெஞ்சத்தொடு சென்று தேடாநின்ற ஆண்மானை உவ்விடத்தே பாராய்!; ஆதலின் நின்தேர் மிக விரைந்து செல்வதாக! 
வினை முற்றி மறுத்தராநின்ற தலைமகன் கார் கண்டு பாகற்குச் சொல்லியது. - விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார்
243. பாலை
தேம் படு சிலம்பில் தௌ அறல் தழீஇய
துறுகல் அயல தூ மணல் அடைகரை,
அலங்கு சினை பொதுளிய நறு வடி மாஅத்துப்
பொதும்புதோறு அல்கும் பூங் கண் இருங் குயில்,
'கவறு பெயர்த்தன்ன நில்லா வாழ்க்கை இட்டு 5
அகறல் ஓம்புமின், அறிவுடையீர்!' என,
கையறத் துறப்போர்க் கழறுவ போல,
மெய் உற இருந்து மேவர நுவல,
இன்னாது ஆகிய காலை, பொருள்வயிற்
பிரியல் ஆடவர்க்கு இயல்பு எனின், 10
அரிது மன்றம்ம, அறத்தினும் பொருளே?  
தேன் உண்டாகின்ற பக்கமலையிலே தௌ¤ந்த நீர் சூழ்ந்த துறுகல்லின் அயலிலுள்ள தூய மணல் அடுத்த கரையின் கண்ணே; அசைகின்ற கிளைகளிலே தளிர்த்துத் தழைத்த நறிய வடுக்களையுடைய மாமரமிக்க சோலைதோறும் தங்குதல்கொண்ட; சிவந்த கண்ணுடைய கரிய குயில்கள் சூதாடு கருவி பெயர்ந்து விழுமாறு போன்ற நிலையில்லாத பொருளீட்டும் வாழ்க்கையை ஏதுவாகக் கொண்டு; "அறிவுடையீர் நீங்கள் நுங்களுடைய காதலிமாரை விட்டுப்பிரியாது கலந்தேயிருங்கோள்!"; என்று செயலறும்படி கைவிட்டுத் துறந்து செல்வோரை இடித்துரைப்பனபோலத் தாம் தாம் ஆணும் பெண்ணும் மெய்யொடு மெய் சேரவிருந்து பொருந்துதல் வரக் கூவாநிற்ப; பிரியும் பொழுதே இன்னாமையைத் தருவதாகிய இளவேனிற் காலத்துப் பொருள்வயிற் பிரிவது ஆடவர்க்கு இயல்பாகு மென்னில்; அடைந்தோம் என்பாரைக் கைவிடேம் என்று கூறிப் பாதுகாக்கும் அறத்தினுங் காட்டில் தௌ¤வாகப் பொருள் அரியது போலும்? இது மிக்க வியப்பு; 
பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது. - காமக்கணிப் பசலையார்
244. குறிஞ்சி
விழுந்த மாரிப் பெருந் தண் சாரல்,
கூதிர்க் கூதளத்து அலரி நாறும்
மாதர் வண்டின் நயவரும் தீம் குரல்
மணம் நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும்
உயர் மலை நாடற்கு உரைத்தல் ஒன்றோ- 5
துயர் மருங்கு அறியா அன்னைக்கு, இந் நோய்
தணியுமாறு இது' என உரைத்தல் ஒன்றோ- 
செய்யாய்: ஆதலின் கொடியை- தோழி!- 
மணி கெழு நெடு வரை அணி பெற நிவந்த
செயலை அம் தளிர் அன்ன, என் 10
மதன் இல் மா மெய்ப் பசலையும் கண்டே.  
தோழீ! நீலமணி போன்ற நீண்ட மலையில் அழகு பொருந்த உயர்ந்த அசோகந் தளிர் போன்ற; எனது நல்ல மேனியின் அழகுகெடும்படி செய்த பசலையை நீ கண்டு வைத்தும்; மழைபெய்த பெரிய தண்ணிய சாரலின் கண்ணே கூதிர்காலத்துக் கூதாளிமலரின் மணம் வீசுகின்ற அழகிய வண்டின்; விருப்பமுறும் இனிய ஓசையை யாழோசை போலுமென்று மலைமுழையிலிருக்கின்ற அசுணமானாகிய விலங்கு செவி கொடுத்துக் கேளாநிற்கும்; உயர்ந்த மலைநாடனுக்குச் சொல்லுதல் ஒன்றாவது; எனது துன்பத்தின் மிகுதியை அறியாத அன்னைக்கு இந்நோய் தணியும் வழி இதுதான் என உரைத்தல் ஒன்றாவது; செய்தாயல்லை இங்ஙனம் இரண்டில் ஒன்றேனுஞ் செய்து என்னைப் பாதுகாவாமையாலே நீ கொடுமை மிக்குடையையாவாய்!; 
அறத்தொடுநிலை வலித்த தோழியைத் தலைவி முகம் புக்கது. - கூற்றங்குமரனார்
245. நெய்தல்
நகையாகின்றே- தோழி!- 'தகைய
அணி மலர் முண்டகத்து ஆய் பூங்கோதை
மணி மருள் ஐம்பால் வண்டு படத் தைஇ,
துணி நீர்ப் பௌவம் துணையோடு ஆடி,
ஒழுகு நுண் நுசுப்பின், அகன்ற அல்குல், 5
தௌ தீம் கிளவி! யாரையோ, என்
அரிது புணர் இன் உயிர் வவ்விய நீ?' என,
பூண் மலி நெடுந் தேர்ப் புரவி தாங்கி,
தான் நம் அணங்குதல் அறியான், நம்மின்
தான் அணங்குற்றமை கூறி, கானல் 10
சுரும்பு இமிர் சுடர் நுதல் நோக்கி,
பெருங் கடற் சேர்ப்பன் தொழுது நின்றதுவே  
தோழீ! தகுதியையுடைய அழகிய மலர் மிக்க கழிமுள்ளியின் நுண்ணிய பூமாலையை; நீலமணிபோன்ற கூந்தலில் வண்டுகள் பொருந்தும்படி சூடி; தௌ¤ந்த நீரையுடைய கடலிலே தோழியரோடு சென்று நீராடி; நேர்மையுடைய நுணுகிய இடையையும் அகன்ற அல்குலையும் தௌ¤ந்த இனிய சொல்லையுமுடையாய்; எனது அரிதாயமைந் திருக்கின்ற இனிய உயிரைக் கைக்கொண்ட நீதான் யாவளோ? உரையாய்! என்று; பூண் நிரம்பிய நெடிய தேரிலே பூட்டிய குதிரையொடு வந்து அவன்தான் நம்மை வருத்துதல் அறியானாய்; நம்மால் அவன் வருந்தியது மட்டும் கூறி; கழிச் சோலையின்கண்ணே நாம் நின்றபொழுது நறுமணத்தால் வண்டுகள் வந்து சூழ்ந்தொலிக்கின்ற ஒளியையுடைய நமது நெற்றியை நோக்கி; பெரிய கடற் சேர்ப்பன் கை கூப்பி வணங்கி நின்றதைத் கருதுந்தோறும் நகையுடையதாயிராநின்றது காண்! 
குறை நேர்ந்த தோழி தலைமகளை முகம் புக்கது. - அல்லங்கீரனார்
246. பாலை
இடூஉ ஊங்கண் இனிய படூஉம்;
நெடுஞ் சுவர்ப் பல்லியும் பாங்கில் தேற்றும்;
மனை மா நொச்சி மீமிசை மாச் சினை,
வினை மாண் இருங் குயில் பயிற்றலும் பயிற்றும்;
உரம் புரி உள்ளமொடு சுரம் பல நீந்தி, 5
செய்பொருட்கு அகன்றனராயினும் பொய்யலர்,
வருவர் வாழி- தோழி!- புறவின்
பொன் வீக் கொன்றையொடு பிடவுத் தளை அவிழ,
இன் இசை வானம் இரங்கும்; அவர்,
'வருதும்' என்ற பருவமோ இதுவே? 10
தோழீ! வாழி! நாம் கருதியதன் இடையிட்டு உவ்விடத்தே இனிய நிமித்தம் உண்¢டாகாநின்றன; நெடிய சுவரின்கணுள்ள பல்லியும் நம்பக்கத்திருந்து நம்மைத் தௌ¤வியாநின்றது; மனையகத்துள்ள பெரிய நொச்சிவேலியிலுயர்ந்த மாமரத்தின் கிளையிலிருந்து இனிமை பயப்பக் கூவுந்தொழிலிலே கை போதலான் மாட்சிமைப்பட்ட கரிய குயில் கூவுதலையுஞ் செய்யாநிற்கும்; நந்தலைவர் வலிமைமிக்க உள்ளத்துடனே பலவாய சுரத்தைக் கடந்து ஈட்டப்படும் பொருட்காக அகன்றனராயினும்; தாம் குறித்த பருவத்திலே பொய்யாராய் வருவர்காண்!; கானத்துப் பொன் போலும் மலரையுடைய கொன்றையுடனே பிடாவும் மலராநிற்ப; இனிய குரலையுடைய மேகம் முழங்காநிற்குமாதலால்; அவர் வருவே மென்ற பருவம் இதுதான் போலும்; 
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறீஇயது. - காப்பியஞ் சேந்தனார்
247. குறிஞ்சி
தொன்று படு துப்பொடு முரண் மிகச் சினைஇக்
கொன்ற யானைச் செங் கோடு கழாஅ,
அழி துளி பொழிந்த இன் குரல் எழிலி,
எஃகுறு பஞ்சிற்று ஆகி, வைகறைக்
கோடு உயர் நெடு வரை ஆடும் நாட! நீ 5
நல்காய்ஆயினும், நயன் இல செய்யினும்,
நின் வழிப்படூஉம் என் தோழி நல் நுதல்
விருந்து இறைகூடிய பசலைக்கு
மருந்து பிறிது இன்மை நன்கு அறிந்தனை சென்மே!  
முதிர்ந்த வலியுடனே பகை மிகுதலாலே சினந்து புலியைக் கொன்ற யானையின் சிவந்த தந்தம் கழுவும்படி; வீழ்கின்ற மழையைப் பெய்த இனிய முழக்கத்தையுடைய மேகம் வில்லால் எறியப்பட்ட பஞ்சு போல் ஆகி; விடியற்காலத்திலே சிகரம் உயர்ந்த நெடிய மலையிலே இயங்காநிற்கும் நாட்டையுடையோனே!; நீ தலையளி செய்யாயாயினும் அவள் விரும்பாத வற்றை வெறுக்கும்படி செய்தாயெனினும்; நின் உள்ளஞ் சென்றவழி நடக்கும் என் தோழியின் நல்ல நெற்றியில்; இருந்து நிலை மிகுதலைக்கொண்ட பசலை நோய்க்கு நீயே மருந்தாவதன்றி மற்றொரு மருந்தில்லாமையை நீ நன்றாக அறிந்தனையாகில் பின்பு செல்வாயாக! 
'நீட்டியாமை வரை' எனத் தோழி சொல்லியது. - பரணர்
248. முல்லை
'சிறு வீ முல்லைத் தேம் கமழ் பசு வீ,
பொறி வரி நல் மான் புகர் முகம் கடுப்ப,
தண் புதல் அணிபெற மலர, வண் பெயல்
கார் வரு பருவம்' என்றனர்மன்- இனி,
பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர், 5
அன்பு இன்மையின் பண்பு இல பயிற்றும்
பொய் இடி அதிர் குரல் வாய் செத்து ஆலும்
இன மயில் மடக் கணம் போல,
நினை மருள்வேனோ? வாழியர், மழையே! 10
மேகமே ! நம் காதலர் தாம் வினைவயிற் பிரிந்து செல்கின்ற பொழுது இனி என்று வருவீரோ என்று யாம் வினாவியதற்கு அவர் "சிறிய பூவையுடைய முல்லையின் தேன்மணம் வீசும் பசிய மலரெல்லாம் நல்ல யானையின் புள்ளிகளையும் வரிகளையும் உடைய புகரமைந்த முகம் போல; மெல்லிய புதர்களில் எங்கும் அழகு பொருந்தும்படி மலராநிற்ப மிக்க மழை பெய்தலையுடைய கார்ப்பருவம் அன்றோ யாம் வரும் பருவம்" என்று கூறிச் சென்றார்; அங்ஙனமாக நீ இப்பொழுது மிகுதியும் இவள்பால் அன்பில்லாமையால் இவளுடைய பிரிவினாலுண்டாகிய பெரிய துன்பம் பொருந்திய உள்ளம் நடுங்குதலைச் செய்யும் பொருட்டு; இயல்பில்லாதவற்றை மேற்கொள்ளுகின்ற பொய்ம்மையாக இடிக்கின்ற அதிர்ச்சியையுடைய நின்முழக்கத்தை; மெய்ம்மையாகக் கொண்டு ஆரவாரிக்கின்ற மயிலினமாகிய அறிவில்லாத அக் கூட்டம்போல; நின்னைக் கண்டவுடன் அவர் இப்பொழுது வருகுவர் என்று யானும் மயங்குவேனோ? அங்ஙனம் செய்யேன்; அவர் இயல்பாகிய கார்ப் பருவத்திலேதான் வருகுவர்; நீ வீணே முழங்காதே கொள்; நீடு வாழ்வாயாக!; 
பருவம் கண்டு ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி மழை மேல் வைத்துப் பருவம் மறுத்தது. - காசிபன் கீரனார்
249. நெய்தல்
இரும்பின் அன்ன கருங் கோட்டுப் புன்னை
நீலத்து அன்ன பாசிலை அகம்தொறும்,
வெள்ளி அன்ன விளங்கு இணர் நாப்பண்
பொன்னின் அன்ன நறுந் தாது உதிர,
புலிப் பொறிக் கொண்ட பூ நாறு குரூஉச் சுவல் 5
வரி வண்டு ஊதலின், புலி செத்து வெரீஇ,
பரியுடை வயங்கு தாள் பந்தின் தாவத்
தாங்கவும் தகை வரை நில்லா ஆங்கண்,
மல்லல்அம் சேரி கல்லெனத் தோன்றி,
அம்பல் மூதூர் அலர் எழ, 10
சென்றது அன்றோ, கொண்கன் தேரே?  
இரும்புபோன்ற கரிய கிளையையுடைய புன்னை நீலம் போன்ற பசிய இலையிடமெங்கும்; வெள்ளிபோன்ற விளங்கிய பூங்கொத்தினிடை உள்ள பொன்போன்ற நறிய மகரந்தம் உதிராநிற்ப; புலியினது புள்ளியைக் கொண்ட அழகு விளங்கிய நல்ல நிறமுள்ள மேற்புறத்தையுடைய வரியமைந்த வண்டுகள் ஊதுதலினாலே; இது புலி யோசையோ வென்று அயிர்த்து அச்சமுற்றுப் பல முறை இழுத்து நிறுத்தவும் நிறுத்திய இடத்தில் நில்லாவாகி; தேரிற்பூட்டிய குதிரையினுடைய வயங்கிய கால்கள் பந்துபோலத் தாவாநிற்ப; வளப்ப மிக்க நம்முடைய சேரியிலே கல்லென்னும் ஓசையோடு வெளிப்பட்டுச் சிறிய பழிச்சொல்லைக் கூறும் முதிய ஊரெங்கும்¢ பெரிதாய பழி தூற்றுதலினாலே; கொண்கனது தேர்¢ முன்பு இங்கு நில்லாது சென்றதன்றோ? அது நாம் அறிந்ததே! அத்தகைய தலைவன் வெள்கலின்றி மீண்டு வந்து மணஞ்செய்து கொள்ளவும் இயையுமோ? இனி என் செய்து உய்குவேன் ?; 
வரைவிடை மெலிந்தது. - உலோச்சனார்
250. மருதம்
நகுகம் வாராய்- பாண!- பகுவாய்
அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப, தெருவில்
தேர் நடைபயிற்றும் தேமொழிப் புதல்வன்
பூ நாறு செவ் வாய் சிதைத்த சாந்தமொடு
காமர் நெஞ்சம் துரப்ப, யாம் தன் 5
முயங்கல் விருப்பொடு குறுகினேமாக,
பிறை வனப்பு உற்ற மாசு அறு திரு நுதல்
நாறு இருங் கதுப்பின் எம் காதலி வேறு உணர்ந்து,
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ,
'யாரையோ?' என்று இகந்து நின்றதுவே! 10
பாணணே! எமது அருகில் வருவாயாக !; பகுத்த வாய் வழியாலே உள்ளே பரலிடப்பட்ட கிண்கிணி யொலிப்ப; தெருவிலே முக்காற் சிறுதேரைப் பற்றிக் கொண்டு நடைபயிலுகின்ற இனிய மொழியையுடைய புதல்வனை; எம் மார்போடு அணைத்தலும் அவனது செவ்வாம்பல் மலர் போலத் தோன்றுஞ் சிவந்த வாய் நீர் ஒழுகுதலாலே சிதைந்த சந்தனப் பூச்சோடு விருப்பம் வரும் எம்முள்ளம் எம்மைச் செலுத்த யாம் எம் காதலியை முயங்க வேண்டிய விருப்பத்துடனே அருகில் சென்றேமாக; அங்ஙனஞ் சென்றவுடன் பிறைத்திங்களைப் போன்ற அழகு பொருந்திய மாசற்ற சிறப்புடைய நெற்றியையும் மணங்கமழும் கரிய கூந்தலையும் உடைய அவள் தன் உள்ளத்து வேறாகக் கருதி; பிணைமான் போல வெருண்டு எம்மை நீங்கி அயலே சென்று நின்று; "நீ என்னருகில் வருதற்கு யாவனாந்தன்மையையுடையை" என்று இகந்து நின்றதை நினைக்குந்தோறும் நகை தோன்றுதலானே நாம் இருவேமும் நகா நிற்பம்! 
புதல்வனொடு புக்க தலைமகன் ஆற்றானாய்ப் பாணற்கு உரைத்தது. - மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார் 

226. பாலை
மரம் சா மருந்தும் கொள்ளார், மாந்தர்;உரம் சாச் செய்யார், உயர்தவம்; வளம் கெடப்பொன்னும் கொள்ளார், மன்னர்- நன்னுதல்!- நாம் தம் உண்மையின் உளமே; அதனால்தாம் செய்பொருள் அளவு அறியார்; தாம் கசிந்து, 5என்றூழ் நிறுப்ப, நீள் இடை ஒழிய,சென்றோர்மன்ற நம் காதலர்; என்றும்இன்ன நிலைமைத்து என்ப;என்னோரும் அறிப, இவ் உலகத்தானே.  
அழகிய நுதலையுடையாய்! இவ்¢வுலகத்து மாந்தர் மரம் பட்டுப்போகும்படி அதன்பாலுள்ள மருந்தை முற்றுங் கொள்வார் அல்லர்; மற்றும் தம் வலிமை முற்றும் கெடுமாறு உயர்ந்த தவத்தைச் செய்யார்; அரசர் தம்முடைய குடிகளின் செல்வமெல்லாம் குறைபடும் வண்ணம் அவரிடத்து இறை வாங்குபவரல்லர்; அவற்றை உணர்ந்துவைத்தும் தாம் வருத்தம் மேற்கொண்டு வெயில் நிலைகொள்ள நீண்ட சுரத்துநெறி பின்னே ஒழிய எம்மைப் பிரிந்து சென்றவராகிய நங்காதலர்; தாம் எம்மைப் பிரியாதுறைதலின் நாம் உயிரோடிராநின்றோம்; தாம் ஈட்ட விரும்பும் பொருள் காரணமாக எம்மைப் பிரிவராயின் அதனாலே வருவது எமது இறந்துபாடு என்பதனைத் திண்ணமாக அறிந்தவரல்லர்; எக்காலத்தும் இதுவே ஆடவர் இயற்கை என்பர் சான்றோர்; இதனை யாவரும் அறிந்திருப்பர் கண்டாய்; 
பிரிவிடை மெலிந்த தலைமகள் வன்புறை எதிர்மொழிந்தது. - கணி புன்குன்றனார்

227. நெய்தல்
அறிந்தோர் 'அறன் இலர்' என்றலின், சிறந்தஇன் உயிர் கழியினும் நனி இன்னாதே;புன்னைஅம் கானல் புணர் குறி வாய்த்தபின் ஈர் ஓதி என் தோழிக்கு, அன்னோ!படு மணி யானைப் பசும்பூட் சோழர் 5கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண்,கள்ளுடைத் தடவில் புள் ஒலித்து ஓவாத்தேர் வழங்கு தெருவின் அன்ன,கௌவை ஆகின்றது- ஐய!- நின் அருளே.  
ஐயனே! புன்னையஞ் சோலையிடத்தும் புணர்தற்குப் பலகாலும் நீ குறித்த குறிவயின் வந்துநின்ற பின்னிய குளிர்ந்த கூந்தலையுடைய என் தோழிக்கு; ஐயோ! நீ செய்த தலையளிதான் ஒலிக்கின்ற மணியையுடைய யானையையும் பசிய பொன்னாலாகிய பூண்களையுமுடைய சோழரது; கொடி நுடங்கா நின்ற தெருக்களையுடைய ஆர்க்காடு என்னும் பதியிலே; கள்ளையுடைய சாடியின்கண் வண்டுகள் ஒலித்து; நீங்காத தேர்கள் இயங்கும் தெருவையொத்த பெரிய பூசலுண்டாகா நின்றது. அப் பூசலாகிய பழிச் சொல்லும் எப்படிக் கூறப்படுகன்றதோ வெனில்; அறிந்தோம் என்று கூறிக்கொள்ளும் அவரெல்லாம் அறநெறியிலே நிற்பவரேயல்லர் என்று எவ்விடத்தும் பரந்தோங்கின; அவ்வலர்தான் அவளது இனிய உயிர் இறந்துபட்ட பின்னும் இன்னாமையைத் தருகின்ற தன்மையுடையது காண்! 
வரையாது நெடுங்காலம் வந்து ஒழுக, தோழி தலைமகனை வரைவு முடுகச் சொல்லியது. - தேவனார்

228. குறிஞ்சி
என் எனப்படுமோ- தோழி!- மின்னு வசிபுஅதிர் குரல் எழிலி, முதிர் கடன் தீர,கண் தூர்பு விரிந்த கனை இருள் நடு நாள்,பண்பு இல் ஆர் இடை வரூஉம் நம் திறத்துஅருளான்கொல்லோ தானே- கானவன் 5சிறு புறம் கடுக்கும் பெருங் கை வேழம்,வெறி கொள் சாபத்து எறி கணை வெரீஇ,அழுந்துபட விடரகத்து இயம்பும்எழுந்து வீழ் அருவிய மலை கிழவோனே?  
தோழீ! கானகத்து வாழும் வேட்டுவனது முதுகுபோன்ற பெரிய துதிக்கையையுடைய களிற்றியானை; அச்சங்கொண்ட வில்லினின்று எய்யுங்கணைக்கு அஞ்சி (ஓசையானது) மலைப்பிளப்பின் ஆழத்தே சென்று மோதுமாறு பிளிற்றா நிற்கும்; குதித்து விழுகின்ற அருவியையுடைய மலைக்குரிய நங்காதலன்; மின்னலாலே இருளைப் பிளந்துகொண்டு முழங்குகின்ற குரலையுடைய மேகம்; தான் சூன்முதிர்த லுடைமையால் அக்கடன் தீருமாறு கண்ணொளி மறையும்படி பரத்தலினாலே செறிந்த இருளையுடைய நடுயாமத்தில்; இயல்பு இல்லாத அரிய வழியில் வந்து எம்மாட்டு அருளுதல் செய்யானோ?; இப்பொழுது அவன் வந்து தலையளி செய்யாதிருத்தற்குக் காரணந்தான் என்னென்று சொல்லப்படுமோ? 
தோழி, சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்,தலைமகன் கேட்பச் சொல்லியது. - முடத்திருமாறனார்

229. பாலை
'சேறும், சேறும்' என்றலின், பல புலந்து,'சென்மின்' என்றல் யான் அஞ்சுவலே;'செல்லாதீம்' எனச் செப்பின், பல்லோர்நிறத்து எறி புன் சொலின்திறத்து அஞ்சுவலே;அதனால், சென்மின்; சென்று வினை முடிமின்; சென்றாங்கு, 5அவண் நீடாதல் ஓம்புமின்; யாமத்து,இழை அணி ஆகம் வடுக் கொள முயங்கி,உழையீராகவும் பனிப்போள் தமியேகுழைவான், கண்ணிடத்து ஈண்டித் தண்ணென,ஆடிய இள மழைப் பின்றை, 10வாடையும் கண்டிரோ, வந்து நின்றதுவே?  
'நாம் வினைவயிற் செல்வோம் நாம் வினைவயிற் செல்வோம் என்று நீர் பலகாலும் கூறுதலாலே யான் பலவாகப் புலந்து கூறிச் செல்லுவீராக' என்று சொல்லுதற்கு அஞ்சாநிற்பேன்; 'நீர் செல்லாது இங்கே இருமின்' என்று சொன்னால் பலருங் கூறும் மார்பிலே தைக்கின்ற அம்பு போன்ற புல்லிய சொல்லினிமித்தமாக எங்கே பழிவந்து மூடுமோ என்று அதற்கும் நான் அஞ்சாநிற்பேன்; ஆதலால் நீர் செல்லுவீராக! சென்று வினை முடிப்பீராக! அங்ஙனம் முடிக்கச் சென்ற அவ்விடத்து நெடுங்காலம் நிற்றலை ஒழியுமாற்றைப் பாதுகாத்துக் கொள்வீராக!; இரவு நடுயாமத்துக் கலன் அணிந்த மார்பிலே தழும்புகொள்ளுமாறு முயங்கி நீயிர் அருகிருப்பீராயினும் இவள் நடுங்காநிற்பள்¢ கண்டீர்!; அத்தகையாள் இப்பொழுது தனியேயிருந்து வருந்துமாறு அகன்ற இடமெங்கும் பரவி நெருங்கித் தண் எனும்படி இயங்குகின்ற பெய்து வெளிதாகிய மேகத்தின் பின்னர்; வந்துநின்ற வாடைக் காற்றையுங் கண்டீரன்றோ? ஆதலின் ஆராய்ந்து ஏற்றது செய்ம்மின்!; 
தலைமகனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, தலைமகளை ஆற்றுவித்துச் செல்ல உடன்பட்டது; செலவு அழுங்குவித்ததூஉம் ஆம்.

230. மருதம்
முயப் பிடிச் செவியின் அன்ன பாசடை,கயக் கணக் கொக்கின் அன்ன கூம்பு முகை,கணைக் கால், ஆம்பல் அமிழ்து நாறு தண் போது,குணக்குத் தோன்று வெள்ளியின், இருள் கெட விரியும்கயற்கணம் கலித்த பொய்கை ஊர! 5முனிவு இல் பரத்தையை எற் துறந்து அருளாய்;நனி புலம்பு அலைத்த எல்லை நீங்க,புதுவறம்கூர்ந்த செறுவில் தண்ணெனமலி புனல் பரத்தந்தாஅங்கு,இனிதே தெய்ய, நின் காணுங்காலே. 10
நெருங்கிய பிடியானையின் செவிபோன்ற பசிய இலையையும் குளத்தின்கணுள்ள அழகிய கொக்குப் போலக் கூம்பிய முகையையும் அவற்றிற்கொத்த திரண்ட தண்டினையுமுடைய ஆம்பலின்; அமிழ்து நாறும் மெல்லிய மலர் வைகறையிலே கீழ்த்திசையின் கண்ணே தோன்றுகின்ற வெள்ளியைப் போல இருள்கெட மலராநிற்கும் கயல்மீன் கூட்டஞ் செருக்கிய பொய்கையையுடைய ஊரனே!; என்னைக் கைவிட்டுச் சிறிதும் நின்பால் சினங்கொள்ளாதிருக்கின்ற பரத்தையைத் தலையளிசெய்து ஆண்டுறைவாயாக! யான் நின்பால் வெகுட்சி கொண்டுடைமையால் நின்னால் எஞ்ஞான்றும் தலையளி செய்யத் தக்கேன் அல்லேன்; கோடையாலே மிகத் துன்பப்பட்டகாலை அக் கோடை வெப்பம் நீங்குமாறு புதுவதாக வற்றிக்காய்ந்து வெடிப்புமிக்க வயலிலே; குளிர்ச்சியுற நிறைந்த புதுநீர் வெள்ளம் பரவினாற்போல; வந்த நின்னைக் காணும்பொழுதெல்லாம் இனிமையாகவேயிரா நின்றது; அக்காட்சியொன்றே போதும்! ஆதலின் என் மனையின்கண்ணே வாராதேகொள்! 
தோழி வாயில் மறுத்தது. - ஆலங்குடி வங்கனார்

231. நெய்தல்
மை அற விளங்கிய மணி நிற விசும்பில்கைதொழும் மரபின் எழு மீன் போல,பெருங் கடற் பரப்பின் இரும் புறம் தோய,சிறு வெண் காக்கை பலவுடன் ஆடும்துறை புலம்பு உடைத்தே- தோழி!- பண்டும், 5உள் ஊர்க் குரீஇக் கரு உடைத்தன்ன,பெரும் போது அவிழ்ந்த கருந் தாட் புன்னைக்கானல்அம் கொண்கன் தந்தகாதல் நம்மொடு நீங்காமாறே.  
தோழீ! இதன் முன்னும் மனையின் கண்ணேயுள்ள ஊர்க்குருவியின் முட்டையை உடைத்தாற்போன்ற பெரிய அரும்பு மலர்ந்த கரிய அடியையுடைய புன்னையஞ் சோலையையுடைய கொண்கன்; கொடுத்த காதலானது நம்மை விட்டு நீங்காமையினாலே : மை அற விளங்கிய மணிநிற விசும்பின் கை தொழு மரபின் எழு மீன்போல மாசு அற விளங்கிய நீலமணிபோன்ற நிறத்தையுடைய ஆகாயத்தின்கண்ணே தோன்றி உலகத்தாராலே கைதொழப்படுந் தகுதியையுடைய முனிவரின் தோற்றமாகிய ஏழுமீன்களைப் போல; பெரிய கடற் பரப்பின்கண்ணே கரியமுதுகு நனையும்படி சிறிய வெளிய நீர்க்காக்கை பலவும் ஒருசேர நீர் குடையாநிற்கும் கடல் துறையை; யாம் தமியேமாய் நோக்குதற்கு அத் துறை நனி இன்னாமை உடையதாகக் காணுந் தன்மையதாயிராநின்றது; 
சிறைப்புறமாகத் தோழி சொல்லி, வரைவு கடாயது. - இளநாகனார்

232. குறிஞ்சி
சிறு கண் யானைப் பெருங் கை ஈர்- இனம்குளவித் தண் கயம் குழையத் தீண்டி,சோலை வாழை முணைஇ, அயலதுவேரல் வேலிச் சிறுகுடி அலற,செங் காற் பலவின் தீம் பழம் மிசையும் 5மா மலை நாட!- காமம் நல்கெனவேண்டுதும்- வாழிய! எந்தை, வேங்கைவீ உக வரிந்த முன்றில்,கல் கெழு பாக்கத்து அல்கினை செலினே.  
சிறிய கண்ணையும் பெரிய கையையுமுடைய யானையின் களிறும் பிடியுமாகிய இரண்டினம்; மலைப்பச்சையைச் சுற்றிலுமுடைய நீர்ச்சுனையிலே மெய் துவளப் புணர்ந்து சோலையிலுள்ள மலைவாழையைத் தின்பதை வெறுத்து; அயலிடத்துள்ளதாகிய மூங்கில் முள்ளான் மிடைந்த வேலியையுடைய சிறிய குடியின்கண்ணுள்ளார் அஞ்சியலறும்படி சிவந்த அடியையுடைய பலாவினது இனிய பழத்தைத் தின்னாநிற்கும் கரிய மலை நாடனே!; நீ நெடுங்காலம் வாழ்வாயாக!; எந்தைக்குரிய, வேங்கை மலர் உதிரும்படி அகன்ற வாயிலையுடைய ; மலையிலே பொருந்திய பாக்கத்து இன்று இராப் பொழுதையிலே தங்கினையாகிப் பிற்றைநாளிற் செல்வதாயின்; அதற்கு அடையாளமாக நினது மாலையைக் கொடுப்பாயாக! என வேண்டுகிற்போம்! 
பகல் வருவானை இரவு வா எனத் தோழி சொல்லியது. - முதுவெங்கண்ணனார்

233. குறிஞ்சி
கல்லாக் கடுவன் நடுங்க, முள் எயிற்றுமட மா மந்தி மாணா வன் பறழ்,கோடு உயர் அடுக்கத்து, ஆடு மழை ஒளிக்கும்பெருங் கல் நாடனை அருளினை ஆயின்,இனி என கொள்ளலைமன்னே; கொன் ஒன்று 5கூறுவென் வாழி- தோழி!- முன்னுறநாருடை நெஞ்சத்து ஈரம் பொத்தி,ஆன்றோர் செல் நெறி வழாஅச்சான்றோன் ஆதல் நன்கு அறிந்தனை தௌமே.  
தோழீ! வாழ்வாயாக!; தன்னுடைய தொழிலையன்றிப் பிறவற்றைக் கல்லாத கடுவன் நடுங்குமாறு முள்போன்ற கூரிய எயிற்றினையும் மடப்பத்தையுமுடைய கருமுகமந்தி; தன் மாட்சிமைப்படாத சிறிய வலிய பிள்ளையோடு கொடுமுடியுயர்ந்த மலைப்பக்கத்து இயங்கும் மேகம் தனக்கு மறைவிடமாகக் கொண்டு ஒளிக்கின்ற; பெரிய மலைநாடன் வரைந்து கொள்ளாது நாளும் வந்து நின்னைக் கூடியிருத்தலானே அவன்பாற் காதல் கைம்மிக்கு அருளுடையையாயினை, அங்ஙனம் ஆதலை ஆராயின்; இனி என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்வாயல்லைமன்; அதுகாரணமாக யான் கூறுவதும் பயனின்றி ஒழியத்தக்கதுதானென்றாலும் ஒரோவொன்று நினக்குக் கூறாநிற்பேன்; இதன்முன் பலநாளும் இங்கு வருதலால் யான் அறிந்த அளவில் அவன் தன் அன்புடைய உள்ளத்து அருள் பொருந்தி ஆராய்ந்து மேலவர் செல்லும் நெறியிலே சென்று வாழாத சால்பு இலன் ஆதலை; நீ நன்றாக அறிந்தனையாகித் தேர்ந்து கொள்வாய்! 
வரையாது நெடுங்காலம் வந்து ஒழுக, இவள் ஆற்றாள் என்பது உணர்ந்து, சிறைப் புறமாகத் தலைமகட்குத் தோழி சொல்லியது. - அஞ்சில் ஆந்தையார்

234. குறிஞ்சி
சான்றோர் வருந்திய வருத்தமும் நுமதுவான் தோய்வு அன்ன குடிமையும் நோக்கித்திரு மணி வரன்றும் குன்றம் கொண்டு இவள்வரு முலை ஆகம் வழங்கினோ நன்றேஅஃது ஆன்று அடை பொருள் கருதுவிர் ஆயின் குடையொடு 5கழுமலம் தந்த நல் தேர்ச் செம்பியன்பங்குனி விழவின் உறந்தையொடுஉள்ளி விழவின் வஞ்சியும் சிறிதே.  
நமரங்காள்!; நம்பால் மகட்பேசும் பொருட்டு அருங்கலம் முதலியன சுமந்து நம்மில்லிற்கு வந்துள்ள இப் பெரியோருடைய வழிநடை வருத்தத்தையும்; நுங்களுடைய வானைத் தீண்டுமளவு உயர்ந்தாற் போன்றுயர்ந்து திகழும் குலச்சிறப்பினையும் நினைந்துபார்த்து; நம்மகளின் மார்பின்கண் கணந்தொறும் வளராநின்ற முலைக்கு விலையாக; இச் சான்றோராற் குறிப்பிடப்படுகின்ற அருவிநீர் அழகிய மணிகளை வரன்றி வீழ்தற்கிடனான தலைவனது குன்றத்தையே ஏற்றுக்கொண்டு; இவளை அந் நம்பிக்கே வழங்கின் பெரிதும், நன்று நன்றாகும்; அங்ஙனமின்றி; நம் மகளின் முலைக்கு விலையாக அவர் தரும் பொருளைச் சீர்தூக்குவீராயின்; கழுமலப்போரின்கண் மாற்றாரை அவர்தங் குடையோடே அகப்படுத்திய வெற்றியையுடைய நல்ல தேரினையுடைய சோழன் தலைநகராகிய; பங்குனித்திங்களிலே விழாவெடுக்கும் உறந்தையோடே கூடிய; உள்ளி விழா நிகழ்தற்கிடனான சேரன் தலைநகராகிய வஞ்சிதானும் ஈடில்லாச் சிறிதாய்விடுங் கண்டீர்: ஆதலால் இச் சான்றோர் தரும் பொருளை ஏற்று இவளை அந் நம்பிக்கே ஈதல் நன்று; என்பதாம். 
செவிலியால் அறத்தொடு நிற்கப்பட்ட நற்றாய், தந்தை முதலியோர்க்கு அறத்தொடு நின்றது.

235. நெய்தல்
உரவுத் திரை பொருத பிணர் படு தடவு முதல்,அரவு வாள் வாய முள் இலைத் தாழைபொன் நேர் தாதின் புன்னையொடு கமழும்பல் பூங் கானல் பகற்குறி வந்து, நம்மெய் கவின் சிதையப் பெயர்ந்தனனாயினும், 5குன்றின் தோன்றும் குவவு மணல் ஏறி,கண்டனம் வருகம் சென்மோ- தோழி!- தண் தார் அகலம் வண்டு இமிர்பு ஊத,படு மணிக் கலி மாக் கடைஇ,நெடு நீர்ச் சேர்ப்பன் வரூஉம் ஆறே. 10
தோழீ! வலிய அலைவந்து மோதிய சருச்சரை பொருந்திய வளைந்த அடியையுடைய அராவுகின்ற வாளரம் போன்ற வாயையுடைய முட்கள் பொருந்திய இலைமிக்க தாழையின்கணுள்ள பூ; பொன் போன்ற மகரந்தத்தையுடைய புன்னைமலரொடு சேர்ந்து மணங்கமழாநிற்கும் இன்னும் பலவாகிய மலர்களையுடைய சோலையில் வைத்த; குறியிடத்திலே பகற் பொழுது வந்து நலனுகர்ந்து நம்முடைய உடம்பின் அழகு கெடும்படியாகப் பெயர்ந்து போயினனாயினும்; தண்ணிய மாலை அணிந்த மார்பின்கண் வண்டுகள் வந்தொலித்து அம்மாலையின் தேனை உண்ணாநிற்ப; ஒலிக்கின்ற மணியணிந்த குதிரைகளைச் செலுத்தி; நெடிய நீரையுடைய நெய்தனிலத்திற்குத் தலைவனாகிய நம்காதலன் வரைவொடு வருகின்றதனை; யாம் சென்று குன்றுபோலத் தோன்றுகின்ற குவிந்த மணலாலாகிய திடர்மீது, ஏறிநின்று கண்டு வருவோம் அதற்காகச் செல்வோமோ? ஒன்று கூறிக்காண்; 
வரைவு நீட ஆற்றாளாங் காலத்துத் தோழி வரைவு மலிந்தது.

236. குறிஞ்சி
நோயும் கைம்மிகப் பெரிதே; மெய்யும்தீ உமிழ் தெறலின் வெய்தாகின்றே- ஒய்யெனச் சிறிது ஆங்கு உயிரியர், 'பையெனமுன்றில் கொளினே நந்துவள் பெரிது' என,நிரைய நெஞ்சத்து அன்னைக்கு உய்த்து ஆண்டு 5உரை, இனி- வாழி, தோழி!- புரை இல்நுண் நேர் எல் வளை நெகிழ்த்தோன் குன்றத்துஅண்ணல் நெடு வரை ஆடி, தண்ணெனவியல் அறை மூழ்கிய வளி என்பயலை ஆகம் தீண்டிய, சிறிதே. 10
தோழீ! நீ வாழ்வாயாக!; எனக்குண்டாகிய காமநோயும் அளவு கடப்பப் பெரிதாய் இராநின்றது; என்னுடம்பும் தீயை உமிழ்கின்ற கொதிப்பினால் வெப்பமுடையதாயிரா நின்றது; ஆதலின் என் உடம்பை மெலிவித்துக் குற்றமற்ற நுண்ணிய நேர்மையையுடைய ஒளி பொருந்திய வளையைக் கையினின்று கழலச் செய்த தலைமகனது மலையிலே; பெருமைபொருந்திய நீண்ட கொடுமுடியின் கண்ணே பரவி நின்று குளிர்ச்சியுறும்படி அகன்ற பாறையில் அளாவிய காற்றானது; என்னுடைய பசலைநோயுற்ற மெய்யிலே சிறிதுபடவேண்டி; நீ விரைந்து சென்று "அங்கு உயர்ந்த நம்முடைய முன்றிலிலே இவளைச் சிறிதுபோது மெல்லக் கிடத்தினால் இவள் பெரிதும் நோய் நீங்கப்பெறுவள்" என்று; அவ்விடத்து என்னைக் கொண்டுபோய்விட்டு நரகம் போன்ற கொடிய நெஞ்சத்தையுடைய அன்னைக்கும் இப்பொழுதே உரைப்பாயாக!; 
தலைமகன் சிறைப்புறமாக, வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - நம்பி குட்டுவன்

237. பாலை
நனி மிகப் பசந்து, தோளும் சாஅய்,பனி மலி கண்ணும் பண்டு போலா;இன் உயிர் அன்ன பிரிவு அருங் காதலர்நீத்து நீடினர் என்னும் புலவிஉட்கொண்டு ஊடின்றும் இலையோ?- மடந்தை!- 5உவக்காண் தோன்றுவ, ஓங்கி- வியப்புடைஇரவலர் வரூஉம் அளவை, அண்டிரன்புரவு எதிர்ந்து தொகுத்த யானை போல,உலகம் உவப்ப, ஓது அரும்வேறு பல் உருவின், ஏர்தரும் மழையே! 10
மடந்தாய்!; வியப்புடைய இரவலர் வரும் பொழுது; அவர்கட்குக் கொடுப்பது கருதி "ஆய்அண்டிரன்" சேர்த்துவைத்த யானைத்திரள் போல; உலகத்தில் வாழும் உயிர்கள் மகிழ்ச்சியடையச் சொல்லுதற்கரிய வெவ்வேறாகிய உருவத்தோடு எழுகின்ற மேகங்கள்; ஓங்கித் தோன்றுவனவற்றை உவ்விடத்தே காணாய்! இஃது அவர் குறித்த பருவமன்றோ?; இதுகாறும் மிகப் பசந்து தோளும்¢ வாட்டமடைந்து; நீர் வடிகின்ற கண்களும் முன்போல் இன்றி வேறுபாடு கொள்ள; இனிய உயிர் போன்ற பிரிதற்கரிய காதலர் என்னைக் கைவிட்டு நெடுந்தூரம்சென்று ஒழிந்தனரே என்று கூறப்படுகின்ற புலவியை நீ நின் உள்ளத்தேகொண்டு; ஊடுகின்றதும் இல்லையோ? இஃதென்ன வியப்பு; 
தோழி உரை மாறுபட்டது. - காரிக்கண்ணனார்

238. முல்லை
வறம் கொல வீந்த கானத்து, குறும் பூங்கோதை மகளிர் குழூஉ நிரை கடுப்ப,வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம்,மாலை அந்தி, மால் அதர் நண்ணியபருவம் செய்த கருவி மா மழை! 5'அவர் நிலை அறியுமோ, ஈங்கு' என வருதல்சான்றோர்ப் புரைவதோ அன்றே; மான்று உடன்உர உரும் உரறும் நீரின், பரந்தபாம்பு பை மழுங்கல் அன்றியும், மாண்டகனியா நெஞ்சத்தானும், 10இனிய அல்ல, நின் இடி நவில் குரலே.  
கோடை தெறுதலாலே பட்டுப்போன காட்டிலே சிறிய பூவணிந்த கூந்தலையுடைய ஆயர் மகளிர் கூடுகின்ற கூட்டம் போல; வண்டுகள் வாய்திறந்து தேனைப் பருகும்படி மலர்ந்த பிடவுகளையுடைய அந்திமாலையில்; யான் காமநோய் மிகக்கொள்ளுமாறு கார்ப்பருவத்தைச் செய்த மின்னல் முதலாகிய தொகுதியையுடைய கரியமேகமே!; நீ "அவர் நிலைமையை இங்கு நான் கூற அறிந்து கொள்" என்று வருதல்; சான்றோர் செய்கையைஒத்ததாகமாட்டாது கண்டாய்!; ஒரு சேர மயங்கி நின் இடித்து முழங்குந் தொழிலையுடைய குரல் வலிய இடியாய் முழங்குந் தன்மையினாலே; பரவிய பாம்புகள் படம் மழுங்கி யடங்குமாறு செய்வதல்லாமல்; மாட்சிமைப்பட்ட தலைவரது நெஞ்சம் கனியும்படி செய்ய வல்லனவல்லவாதலால் நின் இடித்து முழங்கும் அக் குரல் எனக்கு இனிமை செய்வன அல்ல; 
தலைமகள் பருவம் கண்டு அழிந்தது. - கந்தரத்தனார்

239. நெய்தல்
ஞான்ற ஞாயிறு குடமலை மறைய,மான்ற மாலை மகிழ்ந்த பரதவர்இனிது பெறு பெரு மீன் எளிதினின் மாறி,அலவன் ஆடிய புலவு மணல் முன்றில்காமர் சிறுகுடிச் செல்நெறி வழியின், 5ஆய் மணி பொதி அவிழ்ந்தாங்கு, நெய்தல்புல் இதழ் பொதிந்த பூத் தப மிதிக்கும்மல்லல் இருங் கழி மலி நீர்ச் சேர்ப்பற்குஅமைந்து தொழில் கேட்டன்றோ இலமே; 'முன்கைவார் கோல் எல் வளை உடைய வாங்கி, 10முயங்கு' எனக் கலுழ்ந்த இவ் ஊர்எற்று ஆவதுகொல், யாம் மற்றொன்று செயினே?  
மேலைத் திசையிலே சாய்ந்து விழுகின்ற ஆதித்த மண்டிலம் ஆங்குள்ள அத்தமனக் குன்றின்வாய் மறையாநிற்ப; மயங்கிய மாலைக் காலத்தில் கட்குடித்து மகிழ்ச்சியுற்ற பரதவ மாக்கள்; தாம்¢ வருந்தாது பெற்ற பெரிய மீனை எளிதாக விற்று; ஞெண்டு விளையாடிய புலவு நாற்றத்தையுடைய மணல் பரந்த முன்றிலையுடைய நோக்குவார்க்கு விருப்பம்¢ வருகின்ற சிறுகுடியின்கண்ணே; செல்லலுற்ற ஒழுங்குபட்ட வழியின் அழகிய நீலமணியின் குவியலை விரித்துப் பரப்பினாற்போல; நெய்தலின் புறவிதழான் மூடப்பட்ட மலரைக் கெட மிதித்துச் செல்லாநின்ற; வளப்பத்தையுடைய கரிய கழி பொருந்திய நிரம்பிய கடல்நீரையுடைய நெய்தனிலத்தலைவனுக்கு; யாம் மனமொத்து இதுகாறும் அவனிட்ட தொழிலைக் கேட்டு அதன்படி நடந்தோமேயில்லை; அங்ஙனமாக என்னை நோக்கி "நின் முன் கையில் அணிந்த நெடிய கோற்றொழில் அமைந்த ஒளி பொருந்திய வளைகள் உடையும்படி அச்சேர்ப்பனை அழைத்து அணைத்து முயங்குவாயாக!" என்று கூறி; புலம்பியழுத இவ்வூர்தான்; யாம் இனி அவனுக்கு அமைய நடக்கவல்ல வேறொரு காரியத்தைச் செய்துவிட்டால் என்ன பாடுபடுமோ? 
தோழி, தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது. - குன்றியனார்

240. பாலை
ஐதே கம்ம, இவ் உலகு படைத்தோனே- வை ஏர் வால் எயிற்று ஒள் நுதற் குறுமகள்கை கவர் முயக்கம் மெய் உறத் திருகி,ஏங்கு உயிர்ப்பட்ட வீங்கு முலை ஆகம்துயில் இடைப்படூஉம் தன்மையதுஆயினும், 5வெயில் வெய்துற்ற பரல் அவல் ஒதுக்கில்,கணிச்சியில் குழித்த கூவல் நண்ணி,ஆன் வழிப் படுநர் தோண்டிய பத்தல்யானை இன நிரை வெளவும்கானம் திண்ணிய மலை போன்றிசினே. 10
கூர்மையாயெழுந்த வெளிய பற்களையும் ஒள்ளிய நெற்றியையுமுடைய இளைமையுற்ற தோழீ!; நம் காதலர் தாம் கையாலணைத்து முயங்கும் புணர்ச்சியானது மெய்யிலே பொருந்த வேண்டாவென்று மாறுபடுதலானே ஏங்குகின்ற உயிர்த்தலோடு பொருந்திய பருத்த கொங்கையையுடைய என் மெய்யானது; இனித் தனியே கிடந்து துயிலுவதனாலே துன்பப்படுந் தன்மையதாயிராநின்றது எனினும்; வெயிலால் வெப்பமுற்ற பரல்மிக்க பள்ளத்தின் ஒரு புறத்திலே குந்தாலியாற் குழித்த கிணற்றையடைந்து; பசுவின் நிரையைப் பாதுகாக்கும் ஆயர் பறித்த சிறுகுழியிலுள்ள நீரை; யானை வரிசையாகச் சென்று உண்ணாநிற்கும்; அவர் சென்ற கானமானது திண்ணிய மலைபோல அழியாத தன்மையதாய் நின்று கருதுகின்ற எனக்கு அச்சத்தைத் தாராநின்றது; அத்தகைய அந்தக் கொடிய சுரமுற்ற பாலை நிலத்தினைப் படைத்த கொடியோன்றானும்; அதன்கட் பையச் சென்று நனி துன்புற்று வருந்துவானாக! 
பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது; நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியதூஉம் ஆம். - நப்பாலத்தனார்

241. பாலை
உள்ளார்கொல்லோ- தோழி!- கொடுஞ் சிறைப்புள் அடி பொறித்த வரியுடைத் தலையநீர் அழி மருங்கின் ஈர் அயிர் தோன்ற,வளரா வாடை உளர்பு நனி தீண்டலின்,வேழ வெண் பூ விரிவன பலவுடன், 5வேந்து வீசு கவரியின், பூம் புதல் அணிய,மழை கழி விசும்பின் மாறி ஞாயிறுவிழித்து இமைப்பது போல் விளங்குபு மறைய,எல்லை போகிய பொழுதின் எல் உற,பனிக்கால் கொண்ட பையுள் யாமத்து, 10பல் இதழ் உண்கண் கலுழ,நில்லாப் பொருட்பிணிப் பிரிந்திசினோரே?  
தோழீ! வளைந்த சிறகையுடைய பறவைகளின் உள்ளங்காற் சுவடு பொருந்திய வரிகளை மேற்கொண்டுள்ள நீர்வற்றிய இடங்கள் தோறும்; மெல்லிய நுண்மணல் தோன்றாநிற்ப; மெல்லென வீசும் வாடைக்காற்று உளர்ந்து மிகவும் தீண்டுதலினாலே; கரும்பின் வெளிய பூப் பலவும் ஒருசேர விரிவனவாய் அரசனுக்கு வீசப்படும் கவரிபோல மெல்லிய புதல்தோறும் அழகு செய்யா நிற்ப; மேகங்கள் நீங்கிச் செல்லுகின்ற ஆகாயத்தில் மாறி மாறி விழித்து மூடி இமைப்பதுபோல் ஞாயிறு தோன்றித் தோன்றி மறையாநிற்ப; பகற்காலஞ் சென்ற மாலைப் பொழுதோடு இராக்காலம் வந்து சேர்தலும்; பனி நிலத்தில் விழத்தொடங்கிய துன்பத்தைத் தருகின்ற நடு யாமத்தில்; இமையையுடைய மையுண்ட கண்கள் நீர் பெருகி வடியும்படி அழாநிற்ப; நிலைநில்லாத பொருளை ஈட்டுதலில் உள்ளம் பிணிப்புண்டு எம்மைப் பிரிந்து சென்ற காதலர்; இப்பொழுது யாம் படுந்துயரைக் கருதினாரேல், புரையேறல் தும்மல் முதலியவற்றால் அறிந்து இனி அவர் வருவர் போலுமென ஆற்றியிருப்பேமன்றோ? அங்ஙனம் இன்மையால் கருதியிருப்பாரல்லரோ? 
தலைமகள் வன்புறை எதிர் அழிந்தது. - மதுரைப் பெருமருதனார்

242. முல்லை
இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப,புதல் இவர் தளவம் பூங் கொடி அவிழ,பொன் எனக் கொன்றை மலர, மணி எனப்பல் மலர் காயாங் குறுஞ் சினை கஞல,கார் தொடங்கின்றே காலை; வல் விரைந்து 5செல்க- பாக!- நின் தேரே: உவக்காண்- கழிப் பெயர் களரில் போகிய மட மான்விழிக் கட் பேதையொடு இனன் இரிந்து ஓட,காமர் நெஞ்சமொடு அகலா,தேடூஉ நின்ற இரலை ஏறே. 10
பாகனே! பழுத்து உதிர்தலானே இலைகளில்லாத பிடாவெல்லாம் மெல்லிய மலர்கள் நிறையும்படி அரும்பு முகிழ்ப்ப; புதர்மேலேறிப் படர்கின்ற முல்லைக்கொடி பூக்கள் மலராநிற்ப; கொன்றைகள் அனைத்தும் பொன்போல மலர்தலைச் செய்ய; நீலமணி போலப் பலவாய மலர்களையுடைய காயாவின் குறுமையாகிய கிளைகள் விளங்கா நிற்ப; இன்று காலைப் பொழுதிலேயே மேகம் தான் மழைபெய்யுந் தொழிலைத் தொடங்கியது கண்டாய்; கழிந்து பெயர்கின்ற களர்நிலத்திலே சென்ற பிணைமான் மருண்டு விழித்தலையுடைய கண்களையுடைய தன் குட்டியோடு கூட்டத்தினின்று இரிந்தோடுதலும்; அதன்பால் உற்ற விருப்பமிக்க நெஞ்சத்தொடு சென்று தேடாநின்ற ஆண்மானை உவ்விடத்தே பாராய்!; ஆதலின் நின்தேர் மிக விரைந்து செல்வதாக! 
வினை முற்றி மறுத்தராநின்ற தலைமகன் கார் கண்டு பாகற்குச் சொல்லியது. - விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார்

243. பாலை
தேம் படு சிலம்பில் தௌ அறல் தழீஇயதுறுகல் அயல தூ மணல் அடைகரை,அலங்கு சினை பொதுளிய நறு வடி மாஅத்துப்பொதும்புதோறு அல்கும் பூங் கண் இருங் குயில்,'கவறு பெயர்த்தன்ன நில்லா வாழ்க்கை இட்டு 5அகறல் ஓம்புமின், அறிவுடையீர்!' என,கையறத் துறப்போர்க் கழறுவ போல,மெய் உற இருந்து மேவர நுவல,இன்னாது ஆகிய காலை, பொருள்வயிற்பிரியல் ஆடவர்க்கு இயல்பு எனின், 10அரிது மன்றம்ம, அறத்தினும் பொருளே?  
தேன் உண்டாகின்ற பக்கமலையிலே தௌ¤ந்த நீர் சூழ்ந்த துறுகல்லின் அயலிலுள்ள தூய மணல் அடுத்த கரையின் கண்ணே; அசைகின்ற கிளைகளிலே தளிர்த்துத் தழைத்த நறிய வடுக்களையுடைய மாமரமிக்க சோலைதோறும் தங்குதல்கொண்ட; சிவந்த கண்ணுடைய கரிய குயில்கள் சூதாடு கருவி பெயர்ந்து விழுமாறு போன்ற நிலையில்லாத பொருளீட்டும் வாழ்க்கையை ஏதுவாகக் கொண்டு; "அறிவுடையீர் நீங்கள் நுங்களுடைய காதலிமாரை விட்டுப்பிரியாது கலந்தேயிருங்கோள்!"; என்று செயலறும்படி கைவிட்டுத் துறந்து செல்வோரை இடித்துரைப்பனபோலத் தாம் தாம் ஆணும் பெண்ணும் மெய்யொடு மெய் சேரவிருந்து பொருந்துதல் வரக் கூவாநிற்ப; பிரியும் பொழுதே இன்னாமையைத் தருவதாகிய இளவேனிற் காலத்துப் பொருள்வயிற் பிரிவது ஆடவர்க்கு இயல்பாகு மென்னில்; அடைந்தோம் என்பாரைக் கைவிடேம் என்று கூறிப் பாதுகாக்கும் அறத்தினுங் காட்டில் தௌ¤வாகப் பொருள் அரியது போலும்? இது மிக்க வியப்பு; 
பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது. - காமக்கணிப் பசலையார்

244. குறிஞ்சி
விழுந்த மாரிப் பெருந் தண் சாரல்,கூதிர்க் கூதளத்து அலரி நாறும்மாதர் வண்டின் நயவரும் தீம் குரல்மணம் நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும்உயர் மலை நாடற்கு உரைத்தல் ஒன்றோ- 5துயர் மருங்கு அறியா அன்னைக்கு, இந் நோய்தணியுமாறு இது' என உரைத்தல் ஒன்றோ- செய்யாய்: ஆதலின் கொடியை- தோழி!- மணி கெழு நெடு வரை அணி பெற நிவந்தசெயலை அம் தளிர் அன்ன, என் 10மதன் இல் மா மெய்ப் பசலையும் கண்டே.  
தோழீ! நீலமணி போன்ற நீண்ட மலையில் அழகு பொருந்த உயர்ந்த அசோகந் தளிர் போன்ற; எனது நல்ல மேனியின் அழகுகெடும்படி செய்த பசலையை நீ கண்டு வைத்தும்; மழைபெய்த பெரிய தண்ணிய சாரலின் கண்ணே கூதிர்காலத்துக் கூதாளிமலரின் மணம் வீசுகின்ற அழகிய வண்டின்; விருப்பமுறும் இனிய ஓசையை யாழோசை போலுமென்று மலைமுழையிலிருக்கின்ற அசுணமானாகிய விலங்கு செவி கொடுத்துக் கேளாநிற்கும்; உயர்ந்த மலைநாடனுக்குச் சொல்லுதல் ஒன்றாவது; எனது துன்பத்தின் மிகுதியை அறியாத அன்னைக்கு இந்நோய் தணியும் வழி இதுதான் என உரைத்தல் ஒன்றாவது; செய்தாயல்லை இங்ஙனம் இரண்டில் ஒன்றேனுஞ் செய்து என்னைப் பாதுகாவாமையாலே நீ கொடுமை மிக்குடையையாவாய்!; 
அறத்தொடுநிலை வலித்த தோழியைத் தலைவி முகம் புக்கது. - கூற்றங்குமரனார்

245. நெய்தல்
நகையாகின்றே- தோழி!- 'தகையஅணி மலர் முண்டகத்து ஆய் பூங்கோதைமணி மருள் ஐம்பால் வண்டு படத் தைஇ,துணி நீர்ப் பௌவம் துணையோடு ஆடி,ஒழுகு நுண் நுசுப்பின், அகன்ற அல்குல், 5தௌ தீம் கிளவி! யாரையோ, என்அரிது புணர் இன் உயிர் வவ்விய நீ?' என,பூண் மலி நெடுந் தேர்ப் புரவி தாங்கி,தான் நம் அணங்குதல் அறியான், நம்மின்தான் அணங்குற்றமை கூறி, கானல் 10சுரும்பு இமிர் சுடர் நுதல் நோக்கி,பெருங் கடற் சேர்ப்பன் தொழுது நின்றதுவே  
தோழீ! தகுதியையுடைய அழகிய மலர் மிக்க கழிமுள்ளியின் நுண்ணிய பூமாலையை; நீலமணிபோன்ற கூந்தலில் வண்டுகள் பொருந்தும்படி சூடி; தௌ¤ந்த நீரையுடைய கடலிலே தோழியரோடு சென்று நீராடி; நேர்மையுடைய நுணுகிய இடையையும் அகன்ற அல்குலையும் தௌ¤ந்த இனிய சொல்லையுமுடையாய்; எனது அரிதாயமைந் திருக்கின்ற இனிய உயிரைக் கைக்கொண்ட நீதான் யாவளோ? உரையாய்! என்று; பூண் நிரம்பிய நெடிய தேரிலே பூட்டிய குதிரையொடு வந்து அவன்தான் நம்மை வருத்துதல் அறியானாய்; நம்மால் அவன் வருந்தியது மட்டும் கூறி; கழிச் சோலையின்கண்ணே நாம் நின்றபொழுது நறுமணத்தால் வண்டுகள் வந்து சூழ்ந்தொலிக்கின்ற ஒளியையுடைய நமது நெற்றியை நோக்கி; பெரிய கடற் சேர்ப்பன் கை கூப்பி வணங்கி நின்றதைத் கருதுந்தோறும் நகையுடையதாயிராநின்றது காண்! 
குறை நேர்ந்த தோழி தலைமகளை முகம் புக்கது. - அல்லங்கீரனார்

246. பாலை
இடூஉ ஊங்கண் இனிய படூஉம்;நெடுஞ் சுவர்ப் பல்லியும் பாங்கில் தேற்றும்;மனை மா நொச்சி மீமிசை மாச் சினை,வினை மாண் இருங் குயில் பயிற்றலும் பயிற்றும்;உரம் புரி உள்ளமொடு சுரம் பல நீந்தி, 5செய்பொருட்கு அகன்றனராயினும் பொய்யலர்,வருவர் வாழி- தோழி!- புறவின்பொன் வீக் கொன்றையொடு பிடவுத் தளை அவிழ,இன் இசை வானம் இரங்கும்; அவர்,'வருதும்' என்ற பருவமோ இதுவே? 10
தோழீ! வாழி! நாம் கருதியதன் இடையிட்டு உவ்விடத்தே இனிய நிமித்தம் உண்¢டாகாநின்றன; நெடிய சுவரின்கணுள்ள பல்லியும் நம்பக்கத்திருந்து நம்மைத் தௌ¤வியாநின்றது; மனையகத்துள்ள பெரிய நொச்சிவேலியிலுயர்ந்த மாமரத்தின் கிளையிலிருந்து இனிமை பயப்பக் கூவுந்தொழிலிலே கை போதலான் மாட்சிமைப்பட்ட கரிய குயில் கூவுதலையுஞ் செய்யாநிற்கும்; நந்தலைவர் வலிமைமிக்க உள்ளத்துடனே பலவாய சுரத்தைக் கடந்து ஈட்டப்படும் பொருட்காக அகன்றனராயினும்; தாம் குறித்த பருவத்திலே பொய்யாராய் வருவர்காண்!; கானத்துப் பொன் போலும் மலரையுடைய கொன்றையுடனே பிடாவும் மலராநிற்ப; இனிய குரலையுடைய மேகம் முழங்காநிற்குமாதலால்; அவர் வருவே மென்ற பருவம் இதுதான் போலும்; 
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறீஇயது. - காப்பியஞ் சேந்தனார்

247. குறிஞ்சி
தொன்று படு துப்பொடு முரண் மிகச் சினைஇக்கொன்ற யானைச் செங் கோடு கழாஅ,அழி துளி பொழிந்த இன் குரல் எழிலி,எஃகுறு பஞ்சிற்று ஆகி, வைகறைக்கோடு உயர் நெடு வரை ஆடும் நாட! நீ 5நல்காய்ஆயினும், நயன் இல செய்யினும்,நின் வழிப்படூஉம் என் தோழி நல் நுதல்விருந்து இறைகூடிய பசலைக்குமருந்து பிறிது இன்மை நன்கு அறிந்தனை சென்மே!  
முதிர்ந்த வலியுடனே பகை மிகுதலாலே சினந்து புலியைக் கொன்ற யானையின் சிவந்த தந்தம் கழுவும்படி; வீழ்கின்ற மழையைப் பெய்த இனிய முழக்கத்தையுடைய மேகம் வில்லால் எறியப்பட்ட பஞ்சு போல் ஆகி; விடியற்காலத்திலே சிகரம் உயர்ந்த நெடிய மலையிலே இயங்காநிற்கும் நாட்டையுடையோனே!; நீ தலையளி செய்யாயாயினும் அவள் விரும்பாத வற்றை வெறுக்கும்படி செய்தாயெனினும்; நின் உள்ளஞ் சென்றவழி நடக்கும் என் தோழியின் நல்ல நெற்றியில்; இருந்து நிலை மிகுதலைக்கொண்ட பசலை நோய்க்கு நீயே மருந்தாவதன்றி மற்றொரு மருந்தில்லாமையை நீ நன்றாக அறிந்தனையாகில் பின்பு செல்வாயாக! 
'நீட்டியாமை வரை' எனத் தோழி சொல்லியது. - பரணர்

248. முல்லை
'சிறு வீ முல்லைத் தேம் கமழ் பசு வீ,பொறி வரி நல் மான் புகர் முகம் கடுப்ப,தண் புதல் அணிபெற மலர, வண் பெயல்கார் வரு பருவம்' என்றனர்மன்- இனி,பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர், 5அன்பு இன்மையின் பண்பு இல பயிற்றும்பொய் இடி அதிர் குரல் வாய் செத்து ஆலும்இன மயில் மடக் கணம் போல,நினை மருள்வேனோ? வாழியர், மழையே! 10
மேகமே ! நம் காதலர் தாம் வினைவயிற் பிரிந்து செல்கின்ற பொழுது இனி என்று வருவீரோ என்று யாம் வினாவியதற்கு அவர் "சிறிய பூவையுடைய முல்லையின் தேன்மணம் வீசும் பசிய மலரெல்லாம் நல்ல யானையின் புள்ளிகளையும் வரிகளையும் உடைய புகரமைந்த முகம் போல; மெல்லிய புதர்களில் எங்கும் அழகு பொருந்தும்படி மலராநிற்ப மிக்க மழை பெய்தலையுடைய கார்ப்பருவம் அன்றோ யாம் வரும் பருவம்" என்று கூறிச் சென்றார்; அங்ஙனமாக நீ இப்பொழுது மிகுதியும் இவள்பால் அன்பில்லாமையால் இவளுடைய பிரிவினாலுண்டாகிய பெரிய துன்பம் பொருந்திய உள்ளம் நடுங்குதலைச் செய்யும் பொருட்டு; இயல்பில்லாதவற்றை மேற்கொள்ளுகின்ற பொய்ம்மையாக இடிக்கின்ற அதிர்ச்சியையுடைய நின்முழக்கத்தை; மெய்ம்மையாகக் கொண்டு ஆரவாரிக்கின்ற மயிலினமாகிய அறிவில்லாத அக் கூட்டம்போல; நின்னைக் கண்டவுடன் அவர் இப்பொழுது வருகுவர் என்று யானும் மயங்குவேனோ? அங்ஙனம் செய்யேன்; அவர் இயல்பாகிய கார்ப் பருவத்திலேதான் வருகுவர்; நீ வீணே முழங்காதே கொள்; நீடு வாழ்வாயாக!; 
பருவம் கண்டு ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி மழை மேல் வைத்துப் பருவம் மறுத்தது. - காசிபன் கீரனார்

249. நெய்தல்
இரும்பின் அன்ன கருங் கோட்டுப் புன்னைநீலத்து அன்ன பாசிலை அகம்தொறும்,வெள்ளி அன்ன விளங்கு இணர் நாப்பண்பொன்னின் அன்ன நறுந் தாது உதிர,புலிப் பொறிக் கொண்ட பூ நாறு குரூஉச் சுவல் 5வரி வண்டு ஊதலின், புலி செத்து வெரீஇ,பரியுடை வயங்கு தாள் பந்தின் தாவத்தாங்கவும் தகை வரை நில்லா ஆங்கண்,மல்லல்அம் சேரி கல்லெனத் தோன்றி,அம்பல் மூதூர் அலர் எழ, 10சென்றது அன்றோ, கொண்கன் தேரே?  
இரும்புபோன்ற கரிய கிளையையுடைய புன்னை நீலம் போன்ற பசிய இலையிடமெங்கும்; வெள்ளிபோன்ற விளங்கிய பூங்கொத்தினிடை உள்ள பொன்போன்ற நறிய மகரந்தம் உதிராநிற்ப; புலியினது புள்ளியைக் கொண்ட அழகு விளங்கிய நல்ல நிறமுள்ள மேற்புறத்தையுடைய வரியமைந்த வண்டுகள் ஊதுதலினாலே; இது புலி யோசையோ வென்று அயிர்த்து அச்சமுற்றுப் பல முறை இழுத்து நிறுத்தவும் நிறுத்திய இடத்தில் நில்லாவாகி; தேரிற்பூட்டிய குதிரையினுடைய வயங்கிய கால்கள் பந்துபோலத் தாவாநிற்ப; வளப்ப மிக்க நம்முடைய சேரியிலே கல்லென்னும் ஓசையோடு வெளிப்பட்டுச் சிறிய பழிச்சொல்லைக் கூறும் முதிய ஊரெங்கும்¢ பெரிதாய பழி தூற்றுதலினாலே; கொண்கனது தேர்¢ முன்பு இங்கு நில்லாது சென்றதன்றோ? அது நாம் அறிந்ததே! அத்தகைய தலைவன் வெள்கலின்றி மீண்டு வந்து மணஞ்செய்து கொள்ளவும் இயையுமோ? இனி என் செய்து உய்குவேன் ?; 
வரைவிடை மெலிந்தது. - உலோச்சனார்

250. மருதம்
நகுகம் வாராய்- பாண!- பகுவாய்அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப, தெருவில்தேர் நடைபயிற்றும் தேமொழிப் புதல்வன்பூ நாறு செவ் வாய் சிதைத்த சாந்தமொடுகாமர் நெஞ்சம் துரப்ப, யாம் தன் 5முயங்கல் விருப்பொடு குறுகினேமாக,பிறை வனப்பு உற்ற மாசு அறு திரு நுதல்நாறு இருங் கதுப்பின் எம் காதலி வேறு உணர்ந்து,வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ,'யாரையோ?' என்று இகந்து நின்றதுவே! 10
பாணணே! எமது அருகில் வருவாயாக !; பகுத்த வாய் வழியாலே உள்ளே பரலிடப்பட்ட கிண்கிணி யொலிப்ப; தெருவிலே முக்காற் சிறுதேரைப் பற்றிக் கொண்டு நடைபயிலுகின்ற இனிய மொழியையுடைய புதல்வனை; எம் மார்போடு அணைத்தலும் அவனது செவ்வாம்பல் மலர் போலத் தோன்றுஞ் சிவந்த வாய் நீர் ஒழுகுதலாலே சிதைந்த சந்தனப் பூச்சோடு விருப்பம் வரும் எம்முள்ளம் எம்மைச் செலுத்த யாம் எம் காதலியை முயங்க வேண்டிய விருப்பத்துடனே அருகில் சென்றேமாக; அங்ஙனஞ் சென்றவுடன் பிறைத்திங்களைப் போன்ற அழகு பொருந்திய மாசற்ற சிறப்புடைய நெற்றியையும் மணங்கமழும் கரிய கூந்தலையும் உடைய அவள் தன் உள்ளத்து வேறாகக் கருதி; பிணைமான் போல வெருண்டு எம்மை நீங்கி அயலே சென்று நின்று; "நீ என்னருகில் வருதற்கு யாவனாந்தன்மையையுடையை" என்று இகந்து நின்றதை நினைக்குந்தோறும் நகை தோன்றுதலானே நாம் இருவேமும் நகா நிற்பம்! 
புதல்வனொடு புக்க தலைமகன் ஆற்றானாய்ப் பாணற்கு உரைத்தது. - மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார் 

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.