LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    இந்து மதம் Print Friendly and PDF

நவராத்திரி கொலு பொம்மைகள் விற்பனைக்கு குவிப்பு!

நவராத்திரி விழாவையொட்டி கொலு பொம்மைகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டு உள்ளன.

புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி 10 நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா  10ம் தேதி தொடங்கியது. இந்த விழாவின் 9 வது நாள் சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.

விழாவின் 10வது நாள் விஜயதசமி ஆகும். இதையொட்டி, விழா நடக்கும் 9 நாட்களிலும் வீடுகளில் கொலு வைப்பது வழக்கத்தில் உள்ளது. முதல் 3 நாட்கள் துர்க்கையை வேண்டியும், அடுத்த 3 நாட்கள் லட்சுமியை வேண்டியும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவியை வேண்டியும் வழிபாடுகள் நடப்பது வழக்கம்.

நவராத்திரியின்போது பெண்கள் வீடுகளில் கொலு வைத்து, விரதம் இருந்து, அம்மனை வழிபட்டால் நன்மை கிடைக்கும் என்பது நம்பிக்கை. நவராத்திரியின் முக்கிய அம்சமே, கொலு வைப்பது ஆகும்.

 3 முதல் 9 படிகள் என அவரவர் வசதிக்கு ஏற்ற படி அமைத்து, கொலு பொம்மைகளை அலங்கரிப்பார்கள். இதையொட்டி தற்போது கொலு பொம்மைகள் விற்பனை தொடங்கி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலின் வடிவீஸ்வரம், கோட்டார், பார்வதிபுரம் உள்ளிட்ட
பகுதிகளில் கொலு பொம்மைகள் விற்பனை கடைகள் சாலையோரம் அமைக்கப்பட்டு உள்ளன.

கடைகளிலும் கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன.  தசாவதாரம், திருமணம், அறுபடை வீடு, அஷ்டலஷ்மி, ஆண்டாள் திருமஞ்சனம், கிருஷ்ண லீலை, சீதா கல்யாணம், வாஸ்து லட்சுமி, விஸ்வரூபம், வளைகாப்பு செட் பொம்மைகள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் என வகை வகையான கொலு பொம்மைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளன. 

மண்ணாலான சிலைகள் மட்டுமின்றி, சார்ட் பேப்பர், காகிதக் கூழ், பிளாஸ்ட் ஆப் பாரிஸ் ஆகியவற்றில் செய்யப்பட்ட சிலைகளும் உள்ளன. பொம்மைகள் ரூ.50 ல் இருந்து வ ரூ.2000 வரை உள்ளன.  செட் பொம்மைகள் ரூ.500 தொடங்கி விற்பனைக்கு உள்ளன.

by Mani Bharathi   on 09 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்.
உலகின் மிகப்பெரிய 10 இந்துக் கோவில்கள் எங்கு உள்ளது தெரியுமா? உலகின் மிகப்பெரிய 10 இந்துக் கோவில்கள் எங்கு உள்ளது தெரியுமா?
பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு. பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு.
பங்குனி உத்திரம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள். பங்குனி உத்திரம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்.
மாசி மாத சங்கடஹர சதுர்த்தி எப்போது? மஞ்சள் கயிறு மாற்றுவதற்கான நேரம் என்ன? மாசி மாத சங்கடஹர சதுர்த்தி எப்போது? மஞ்சள் கயிறு மாற்றுவதற்கான நேரம் என்ன?
மாசி மகம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்...! மாசி மகம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்...!
தைப்பூசத் திருநாள் வரலாறு: அசுரர்களை அழிக்க முருகப்பெருமானுக்கு ஞானவேல் கொடுத்த அன்னை தைப்பூசத் திருநாள் வரலாறு: அசுரர்களை அழிக்க முருகப்பெருமானுக்கு ஞானவேல் கொடுத்த அன்னை
அபுதாபியில் பிரம்மாண்ட இந்து கோயில் - திறந்துவைக்கப் பிரதமர் மோடி ஒப்புதல் அபுதாபியில் பிரம்மாண்ட இந்து கோயில் - திறந்துவைக்கப் பிரதமர் மோடி ஒப்புதல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.