|
||||||||
நவீன இலங்காபுரி |
||||||||
சொன்னவர் யார்?
கேளு,
'ஆம்ஸ்ரோங்' இன்னும் சந்திரனில் இறங்கவில்லை.
இந்த 1986லும்
விஞ்ஞானம் தழைத்ததென்று சொன்னவனின் வாய்க்குள்
மண்ணள்ளிக் குத்து
வாய்த்தையல் போடு
பேசாமல்
இளித்த வாயனை இருக்கச் சொல்!
டேய்!
முட்டாளே நம்பு
செய்மதியும் மிதக்கவில்லை
சத்தியமாய் பிள்ளை குழாய்களிலே பெற்று
கொஞ்சவில்லை இரத்தம் பச்சை சிவப்பென்று
எத்தனையோ வர்ணத்தில் இருக்குதென்று நினைக்கின்ற
யுகத்துக்குள் வாழ்ந்துகொண்டு...
சந்திரனின் கற்கள் கொண்டுவந்தானென்று
யாரப்பா சொன்னான்?
அடி பழசால் வாய்க்கு.
இங்கே!
கடலுக்குள் ஆய்வு நடத்துவதும் சுத்தப்பொய்
பெண்ணுடைய கருப்பைக்குள் உறைகின்ற சதைக் கட்டி
குஞ்சாமணியுள்ள குழந்தையா, வேறேதுமா
என்றெல்லாம் இவர்கள் அறிகின்ற அளவுக்கு
முன்னேற்றம் நடந்திருந்தால்....
இந்த இராவணர்கள் எங்கிருந்து வந்தார்கள்?
முகத்தைப் பார்த்தால் மலைவிழுங்கிபோல
தெரிகின்ற அளவுக்கு அச்சத்தை உண்டுபண்ணும்
மனுக் குலத்தின் துரோகி
உருமாறும் அரக்கர்
பட்டாளம் எங்கிருந்து கண்முன்னே தோன்றியது?
நீ நினைப்பது மாதிரி
இது நவயுலகே அல்ல
அனுமான் எரித்த இலங்காபுரி,
போய்ப்பார்,
இன்னும் சீதைகள் சிறையிருக்கக் கூடும்.
சொன்னவர் யார்? கேளு, 'ஆம்ஸ்ரோங்' இன்னும் சந்திரனில் இறங்கவில்லை.
இந்த 1986லும் விஞ்ஞானம் தழைத்ததென்று சொன்னவனின் வாய்க்குள் மண்ணள்ளிக் குத்து வாய்த்தையல் போடு பேசாமல் இளித்த வாயனை இருக்கச் சொல்!
டேய்! முட்டாளே நம்பு செய்மதியும் மிதக்கவில்லை சத்தியமாய் பிள்ளை குழாய்களிலே பெற்று கொஞ்சவில்லை இரத்தம் பச்சை சிவப்பென்று எத்தனையோ வர்ணத்தில் இருக்குதென்று நினைக்கின்ற யுகத்துக்குள் வாழ்ந்துகொண்டு... சந்திரனின் கற்கள் கொண்டுவந்தானென்று யாரப்பா சொன்னான்? அடி பழசால் வாய்க்கு.
இங்கே! கடலுக்குள் ஆய்வு நடத்துவதும் சுத்தப்பொய் பெண்ணுடைய கருப்பைக்குள் உறைகின்ற சதைக் கட்டி குஞ்சாமணியுள்ள குழந்தையா, வேறேதுமா என்றெல்லாம் இவர்கள் அறிகின்ற அளவுக்கு முன்னேற்றம் நடந்திருந்தால்....
இந்த இராவணர்கள் எங்கிருந்து வந்தார்கள்? முகத்தைப் பார்த்தால் மலைவிழுங்கிபோல தெரிகின்ற அளவுக்கு அச்சத்தை உண்டுபண்ணும் மனுக் குலத்தின் துரோகி உருமாறும் அரக்கர் பட்டாளம் எங்கிருந்து கண்முன்னே தோன்றியது?
நீ நினைப்பது மாதிரி இது நவயுலகே அல்ல அனுமான் எரித்த இலங்காபுரி,
போய்ப்பார், இன்னும் சீதைகள் சிறையிருக்கக் கூடும்.
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|