LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- ஐஞ்சிறு காப்பியங்கள்

நீலகேசி பகுதி -2

 

புத்த வாதம்
463 அணிநா டிவைதா மறல்யா றிவைதாம்
பிணிநா டிவைதாம் பெருங்கா டிவைதாம்
மணிமா மலைதா மெனவே வருவாள்
அணியார் சுகதன் நகரெய் தினளே.
464 அறையும் கடலும் அரவக் குரலும்
பறையின் னொலியும் படுகண் டிகையுஞ்
சிறையின் மிகுமா லிதுசெம் படர்கள்
இறைவன் னுறையு மிடமா மெனலும்.
465 மழைசேர் நகரம் மலைபோன் றனவே
கழைசேர் கொடியுங் கதலிவ் வனமே
விழைதா ரவரும் விரிகோ தையரும்
முழைவாழ் புலியே மயிலே மொழியின்.
466 நெடுவெண் டிரைமே னிமிருந் திமிலுங்
கடுவெஞ் செலவின் னுலவுங் கலனும்
படுவண் டறையும் பொழிலும் மெழிலார்
மடுவுந் திடரும் மணல்வார் புறவும்
467 கயன்மீ னிரியக் கழுநீர் விரியும்
வயன்மாண் புடைய வளமைத் தெனவும்
முயன்மீ னெறியு முறியுங் கறியா
தயன்மே யுறையா தணியிற் றெனவும்.
468 கழுகின் னினமும் கழுதின் னினமும்
முழுதும் மறுவை பலமூ டினரும்
கொழுதின் னிணனும் பிணனுங் குலவி
இழுதென் னெலும்பா ரிடுகா டெனவும்.
469 சாதியே மிக்க தடுமாற்ற வெந்துயர
மோதியே வைத்தாரவ் வோத்தெலா மீக்கிடந்த
வீதியே காணலா மென்றாளா னின்றாரும்
போதியா ரீண்டைப் புலால்பழியா ரென்றலும்.
470 அங்காடிப் பண்டவூன்றின்ன வறமுரைத்தார்க்
கிங்காடி வாழ்வனவுமூனாய்வந் தீண்டியவாற்
கொங்காடத் தேனறையுங்கொய்ம்மருதம் பூவணிந்த
பொங்காடை போர்த்தார்க்குப்பொல்லாதே யென்னீரோ.
471 விலைபடைத்தா ரூன்வேண்ட வவ்விலைதான் வேண்டி
வலைபடைத்தார்க் கெம்முயிரை வைக்கின்றா மின்ன
கொலைபடைத்தா னோகொடிய னென்பனவே போலத்
தலையெடுத்து வாய்திறப்ப தாமிவையோ காணீர்.
472 தன்றார மீந்தான் றனக்குறுதி யாவதனை
யொன்றானும் வேண்டான் பிறர்க்கே யுழந்தானூன்
தின்றானுந் தீவினையைச் சேருமெனச் சொன்னாற்
பொன்றாவாய்ப் பல்விலங்கும் பூமிமேல் வாழாவோ.
473 உரிதா வுணர்ந்தானொன் றோரா துரையான்
பரிவே யிதுவுந்தன் பாலரோ டெல்லா
மெரிதோய் நரகம்பா ழேற்றுவா னேயாம்
பெரிதா மளியன் பெருந்தகைய னேகாண்.
474 கொடைக்கொட்டி விற்பானுங் கொள்வானு மன்றி
யிடைச்செட்டி னாற்பொருளை யெய்துவான் போல
முடைக்கொட்டி முத்துரைத்து மூடிக்கொண் டேகுங்
குடைச்சிட்ட னாருயிர்க்கோர் கூற்றமே கண்டீர்.
475 ஆடுவார் காண்பா ரவரருகே தான்சென்று
தோடுவார்ந் தாலொப்பச் சொல்விரிப்பான் போற்பாவம்
கூடுவார் கூடாதார் கொன்றார்தின் றாரென்னும்
சேடனார்க் காண்டுநா மென்றுதான் சென்றாளே.
476 அணிசெய் கோழரை யரைநிழ லழகனைப் பொருந்தி
மணிக டாம்பல கதிர்விடு மலருடை மணைமேற்
றுணிவு தோற்றினை யெனச்சிலர் துதியொடு தொழுது
பணிய யாதுமோர் பரிவிலன் படம்புதைத் திருந்தான்.
477 ஆத்த னேயெனத் தெளிந்தவ ணமர்ந்திருந் தவர்க்குச்
சூத்தி ரம்மிது வினையமு மிதுவிது பிறிதாஞ்
சாத்தி ரம்மிவை மூன்றென வன்றவத் தோன்றல்
பாத்து ரைக்குந்தன் பதப்பொருள் பலவகைப் படவே.
478 கந்த மைந்திவை கணிகத்த வாமெனக் கரைந்து
முந்தி நாடினோ ருணரவல்ல தில்லையென் றுரைத்தும்
புந்தி யாலங்கோர் புற்கல னுளனெனப் புணர்த்து
மந்தி லாற்சொலாப் பாட்டினோ டியாதுமில் லெனவும்.
479 தத்து வம்மிவை தாமெனத் தமர்களுக் குரைக்கும்
புத்த னார்தம்மை புயலிருங் கூந்தலி பொருந்திப்
பித்தர் போற்பல பிதற்றினீர் பிதற்றிய விவைதா
மெத்தி றத்தினு மிசையின்மை யிசைக்குவ னென்னெவெ
480 ஓதி னீர்சொன்ன கந்தமைந் துளவெனி னுருவே
வேத னையொடு குறிசெய்கை யிலவென விரிப்பும்
போதியா லங்கோர் புற்கல னுளனெனப் புணர்ப்பும்
யாது மின்மையோ டவாச்சிய மறும்பிற வெனவே.
481 ஐந்தில் யான்சொன்ன பலகளு மமைவில வெனினும்
கந்த முண்மைக்கட் கருத்துள தாம்பிற வதனாற்
சிந்த மாயவு முளவெனத் தெளியினி யெனலும்
நந்த னார்க்கற முரைத்திர்நீ ரோவென நக்காள்.
482 இட்ட நீபல வுரைத்தனை யிவற்றுளொன் றொழிய
நட்ட மாயினு நன்மையை நின்வயிற் றருவோய்
குட்ட மேமுழு மெய்யினு மெழுந்தவன குடுமி
தொட்டி யானெனி னுந்தூய னோவது மாமோ.
483 நல்ல வேயென நாட்டிய கந்தமிவ் வைந்து
மில்ல வேயெனத் தெருட்டுவ னெடுத்துரை யெனத்தான்
சொல்ல வேதுவ ராடைகண் மூடிய சேடன்
மெல்ல வேயிவை கேளென விரித்தவ னுரைக்கும்.
484 உருவே திரிவே தனையா றுணர்வும்
மருவா தனமாண் குறியத் துணைசெய்
இருவே றவைசெய் கையிரு பதுமாந்
திருவே யிவையெம் பொருடே ரெனவும்.
485 முறைசெப் பியவைந் தினுண்முன் னையுரு
வரையிற் பலவட் டகமுள் ளுறுத்த
விறைபட் டனவெட் டெனவொட் டினகே
ணறையிற் பொலிகோ தைநறுந் நுதலே.
486 நிலநீ ரெரிகாற் றோடுரு விரதந்
நலமா கியநாற் றமொடூ றிவைதா
மிலவே யவையெட் டினும்விட் டதிறஞ்
சொலவா முடன்கேட் டொடுதோற் றமுமாம்.
487 வலிதா நிலமை யதுநீர் வெய்துதீக்
கலியே தருகாற் றியக்கம் கருமப்
பொலிவேற் பொறையயர்த் தல்புலர்த் துளர்த்தன்
மலிபூ தங்கணான் கின்மாண் பின்னவையே.
488 இனிவே தனையா வனவின் படுமொடு
துனிவே தருதுன் பமுமா மிடையுன் 
நனிதா நலதீ வினையன் மையினாம்
பனிவே யிணைபன் னியதோண் மடவாய்.
489 அறிவா வனதா மினியா வெனினைம்
பொறியோ டுமனம் மிவைபுல் லினவேற்
குறிதா மிவையா றினுங்கூறுவதென்
னெறியா மிவைநீ லநிகர்த் தகணாய்.
490 குயலா குயலம் மெனக்கூ றும்வினைப்
பயனாற் பலபா கெனப்பட் டவைதா
மயலா மனமே வசிகா யத்தினா
மயலா ரிதாவை மினியா ரறிவார்.
491 கடனா கியகந் தமிவைந் துகளும்
உடனே யவைதோன் றியொரு கணத்துட்
கெடுமே யவைகேட் டினும்வாட் கணல்லாய்
சுடர்மே யசுடர்ந் நுதிபோன் மெனவும்.
492 கவையொப் பனவை விரலைந்து களும்
இவையிப் படிக்கைப் படியென் றதுபோ
லவையப் படிக்கந் தங்களைந் துகளும்
நவையைப் படுநல் லுயிரா மெனவும்.
493 அவைதா நிலையா துயரா மசுவம்
நவையா ருயிர்நாட் டிலங்காட் டமிலை
யிவைநான் மையென்வாய் மையிவ்வா றுணர்வா
ரெவையே செய்துமெய் துபவீ டுமென்றான்.
494 பல்லியல் பாகிப் பரந்தவைங் கந்தமுங் கந்தங்கடாம்
புல்லிய வொற்றுமை யிற்குறி யாகிய பொய்யுயிருஞ்
சொல்லிய கேட்டவள் வேட்டக் குரம்பை சுடுபவர்போ
லல்லியங் கோதைநின் காட்சி யழித்திடு வேனெனத்தான்.
495 பிண்டம் பிரிவில வேயெனச்சொல்லுத லாலவற்றுக்
குண்டங் கொருகுணி யாங்கவை தாங்குண மாகுமன்றேல்
விண்டங் கவையவை வேறுளதாதலும் வேண்டுமன்றோ
பண்டங்கு நீசொன்ன முட்டியிற்பஞ்சாங் குலிகளும்போல்.
496 பூதன்கும் புகுந்தே தெருல்லலுற் றயவற்றுக்
கேதமி றன்மை கரும மிரண்டா வியைந்தவை
பேதமு மாமென்ற பெற்றியி னாற்பொரு ளிற்றென்றலாற்
சாத மாமுயிர் தன்மையிற் றேற்ற தவறெவனோ
497 நின்சொல்லப் பட்ட வலிப்புந் தரிப்பு நிலத்தினவே
லென்சொல்லப் பட்ட வுணர்வொடு காட்சி யுயிரனவா
முன்சொல்லப் பட்ட நிலந்தா முடியின் முடிவுளதாம்
பின்சொல்லப் பட்ட வுயிரும் பெரிய பிரச்சையினாய்.
498 வற்பமல் லானில மில்லெனச் சொல்லுவ னாங்கதுபோற்
பொற்ப மிலாவுயிர் தானுமில் புத்திய லாலெனலும்
வற்பமலா நிலமன்னுந் தரிக்குமென் பாயல்லையோ
கற்பமெல் லாம்பிறர்க் கேநின் றுழந்த கருணையினாய்.
499 உரிய வலிமையல் லானில மோரல னென்றிருந்தாற்
பெரிய நிலத்தை யறிவிக்கும் பெற்றியில் லாய்பெரிது
மரிய வுயிரை யறிவுறக் காட்டென்றி யெப்பொருளும்
தெரியக் குணமுகத் தாலன்றி யென்றுந் தெருட்டுளதோ.
500 விருத்த நிலைமையும் வேண்டலம் யாமென வேண்டுகின்றீ
ரருத்த மெனக்கொண்ட வட்டகம் யாவையும் விட்டில
றிருத்தமி றீவயி னீருறை திட்ட விரோதமன்றோவாற்
பொருத்தம லாதன வேசொல்லும் புத்தநின் புத்தியிதோ.
501 தன்மை கரும மவற்றன வேயென்ற றானென்னைவே
றின்மை முடியினெ னிட்டமுரைப்பினுங் கெட்டதென்னோ
மன்னுமந் நான்கு மறுதலை தத்தமு ளாதலினா
லென்னு மியல்பும் பயனு மழிக்குமென் பேனல்லனோ?
502 ஊரிது காடிது தானென லென்னை யொருங்குளவே
னீரிது தீயிது தானென லாமோ நிகழ்வுடனே
யாரிவை கேட்டறி வாரவை யட்டக மென்னினலாற்
போ¢து வேயெனச் சொ;லுத றானும் பிழைக்குங்கொலோ.
503 தொக்கவை யாயுட னேயவைநிற்பினு மாங்க வற்றுண்
மிக்கத னாற்பெயர் சொல்லுவன்யானென்று வேண்டுதியேற்
புக்கன தாம்பொறி யானின்புலமன்றிப் பொய்யெனத்தா
னக்கனர் சாக வெனுநீயுரைக்கு நயங்க ளென்றாள்.
504 உருவுடை யட்டக மன்றியுமைந்தினுட் பட்டவெல்லாம்
மருவொடு கூடியுந் தீண்டியுமாக்குந் திறமரிதான்
மருவுடை யார்களை மாயங்கள்சொல்லி மருட்டியண்ணுந்
திருவுடை யாயவ காயத்துத்தேரை யடித்தெருட்டாய்.
505 திரிவே தனைகளுந் தீராநுமக்குள வாதலன்றே
கரிவே தனையவர் காமுறுகாமங் கடிந்ததுதான்
பரிவே பெரிதுடை யீர்முன்னுரைத்தபல் செய்கைகளின்
விரிவே யவையோரின் வேதனைவேறில்லை யாம்பிறவே.
506 உணர்ச்சியி னாற்செய்கை யாக்கியச்செய்கையி னாலுழப்பாம்
உணர்ச்சியி னாங்கோர் பொருட்சுவடுள்ளது போல்கின்றதா
லுணர்ச்சியொ டல்லன வொன்றொன்றில்நோக்கில வாமெனினு
மிணர்ச்சி யிழந்து பிறபிறவாகிப் பெறலிலவே
507 ஆறினி னொறே நிகழும்பொழுதினல் லாவுணர்வு
தேறின வாறவற் றுண்மையெனக்குத் தெருட்டனலிந்
தாறின வோவில்ல தாழ்ச்சியினாலுள தாமெனினீ
கூறிய வாற்றா லுயிருண்மைகூறலுங் குற்றமென்னோ.
508 ஓருணர் வுள்ள பொழுதினொழிந்த வுணர்வுகடம்
பேரு முணரப் படாமைபெற்றாமென்னும் பேச்சுமுண்டா
லீருணர் வில்லை யிருமூன்றொருங்குள வென்றுரைக்கு
மோருணர் வேயுடை யீர்சொற்களொன்றொன் றழிப்பனவே.
509 ஒன்றே யுணர்வாய் நிகழற்குக்காரண மவ்வுணர்வாய்
நின்றே யறிவான் றனிமையினாலெனத் தோ¢னிநீ
யன்றே யெனினவை யாறுந்தமுண்மையின் வேறென்னலாற்
சென்றே புலந்தலைப் பெய்தலறிவுடன் சீர்க்குமன்றே.
510 இச்சையில் லாமையி னெல்லாமொருங்குண ராவெனினு
மிச்சையெல் லாத்திற்கும் வேறேலொருங்குட னெய்துமன்றி
யிச்சையெல் லாத்திற்கு மொன்றேற்குணிப்பொரு ளிச்சையென்றாய்
தச்சனஞ் சிச்சா ரகழ்கள்வனென்கின்ற தன்மையினாய்.
511 பிறந்து பிறந்துநி னிச்சைகெடலன்றிப் பின்னொன்றின்மேற்
சிறந்து சிறந்தாங் குணர்ச்சிவிரியுந் திறமரிதாற்
கறந்த கறந்த கலஞ்சுவைத்திட்டாற் கறைக்கலங்க
ணிறைந்த நிறைந்தவை பாறயிர்மோரெனத் தானென்னையோ.
512 எல்லா வுணர்ச்சியு மிச்சைவழியா லெழுமெனலா
லில்லாம் பிறநுன திச்சையுமிச்சைமு னின்மையினால்
வல்லா யிதற்குமுண் டாயின்வரம்பின்மை யாமதனாற்
சொல்லா விடுந்திற மென்னோவிரிவிற்குச் சூனியமே.
513 வெளிப்பட்டு நின்றதொன் றன்றியொழிந்தவிஞ் ஞானங்கடாங்
குளித்தன தாங்கொள்ளப் பாடின்மையாலின்மை கூறிநின்றேற்
களித்தவை தங்களுக் காலயமாலய மாமெனநீ
யொளித்தனை கொள்ளலுற் றாயுயிர்தன்னையோர் பேருரைத்தே.
514 இருளுடை மாலைக்கண் டோன்றாதெனக்கென நண்பகலே
பொருளுடை யார்பொருள் கொள்வானகழுநன் போன்றிலையோ
வருளுடை யார்சொல்லு மாருயிராலய மென்றிருக்கும்
மருளுடை யாய்நின் மாண்பழிந்தெற்றான் மயங்கினையோ.
515 மூக்கொடு நாமெய்யும் மூன்றுந்தம்மூன்று புலன்களையும்
தாக்கிய போழ்தே யறிதலுந்தத்துவ மாமென்றியா
லாக்கிய மூன்றி லறிவுமரூவா லவையொருவாப்
பாக்கியஞ் செய்தாய் பரிசங்கள்கொள்ளும் பரிசென்னையோ.
516 உற்றில வாயொலி கொள்ளுஞ்செவியென வோதுகின்றாய்
கற்றிலை மெய்ம்மைநீ கட்புலந்தன்னோடோர் காலத்தினாற்
பெற்றில நாமதன் பின்கொளறானும் பெருந்தவத்தாய்
மற்றிது தான்றன் பொறியுறுகாறும் வரலினன்றே.
517 வாய்த்துரை யீதென வாமனிதுசொல்லும் வந்துறுமேற்
சேய்த்தெனக் கோடலுஞ் சேராதொலிசெவிக் கண்ணதெனி
னீத்தன தாமல வாயினுநீசொல்லு முற்றறிவின்
றீத்தனைப் போலவுந் தேறென்றவனைத் தெருட்டினளே.
518 பெற்ற வெழுத்தேற் பிரிவின்கணாறாம் பெயர் நுனது
முற்ற வுணர்ந்து முடித்துரையென்னை முதலெழுத்துப்
பற்றின சித்தம் பலவுணர்ந்தேயவை பாழ்படலாற்
கற்றினி யெல்லாக் கணக்குங்கலந்துரை காண்பென்னையோ.
519 ஓதிய கந்தங்க ளொற்றுமையாலுயி ரென்றதுபோற்
போதிய னாய்நின்னைப் புத்தனென்றாலது பொய்பிறவோ
வாதியி னாம்புத்தி யாவதல்லாலந்தத் தன்களையா
நீதியி னாற்சொல்லி நின்றுநின்பேறு முணர்விலையே.
520 அன்றியு நின்சொ லறிபொருடானில வாதலினா
லொன்றி யுரைத்த வுனக்குமெனைத்து முணர்வருமை
யென்றினி யாமுந் தெளிந்தோமிதனா லெனவுரைத்தாள்
வென்றி யுடையன வல்லதுசொல்லா விரிகுழலே.
521 ஆறுகுறி யாவனவு மாயபுலந் தாமும்
கூறுகுறி மாறுமவை கொள்ளும்வகை தாமும்
மாறுகுறி மாறிக்குறி யென்றுமயக் காதே
வேறுகுறி தாமுணர்வின் விள்ளுவ லினிக்கேள.
522 கண்ணின்குறி மூக்கின்குறி மெய்யின்குறி செவியி
னண்ணுங்குறி நாவின்குறி காடின் மனத்தோடு
மெண்ணுங்குறி யாவனவிவ் வாறுமெனக் கொண்ணீ
பண்ணின்குறி யேசுமொழிப் பாவையெனச் சொல்லும்.
523 அறிவுகுறி யென்பனவி னாயபுல மொன்றே
லறிவுகுறி யென்பனவு மாகுமவை யொன்றே
பிறிதுகொளு புலமுள்ள தாகுமெனிற் பேதம்
சிறிதுநெறி காட்டினது செல்லுமெனச் சொல்லும்.
524 உண்மைகுறி கொள்ளுமுணர் வின்புலம தெய்தா
தெண்ணினுணர் வோடுகுறி யிவ்வகைய வென்னி
லுண்மையுணர் வின்புலமோ டொன்றெனில தொன்றே
நண்ணலில வேலுணர்வி னாயபுல னின்றே.
525 ஒருங்குகுறி யோடுணர்வுதோன்றியுடன் கொள்க
வொருங்குபுலந் தோன்றியவையொத்தகெட லானா
லொருங்குகுறி யோடுணர்வுதோன்றலில வாமே
லொருங்குபுலந் தோன்றுதலினொன்றுமுணர் வில்லை.
526 உள்ளுஞ் சொல்லுடம் பென்றிவை மூன்றினாற்
கொள்ளு நுங்குச லாகுச லங்கடா
மெள்ளி னேரு மிவையின்மை காட்டுவே
னுள்ளக் காக வுரைத்தவம் மூன்றினுள்.
527 வேண்ட லேயென்றும் வெ·குத லாயினா
லீண்டி நின்றநி னித்தொடைப் பாடெலாந்
தீண்ட லன்னெனத் தீண்டிய வந்தவோ
வீண்டை யேநிற்ப வி·து மறிகிலை.
528 நன்மை வெ·குதல் நன்றெனச் சொல்லுலு
மனமை வெ·குத லன்றெனக் கூறலு
மின்மை யால்வெ·க லென்றதுந் தீமையி
னின்மை யாய நெறிமொழி நீயினி.
529 தீய வாய வெகுளியை யொப்பன
மாய மான முலோப மனத்தன
காய்வு செய்திலை கண்டுநின் கள்ளமே
நீய வையவை நேர்தலி னாம்பிற.
530 காட்சி நல்லன் காண்ட லனைத்தினு
மாட்சி யாமெனின் மன்னும· தொட்டுவேன்
வேட்கை யாலிது நன்றென வேண்டினு
மாட்சி யொட்டி வழித்தன னல்லனோ.
531 பொய்கு றள்ளே கடுஞ்சொற் பயனில்கொ
னைத லில்லன நான்கிவை நாவினாஞ்
செய்கை தீயன வாமெனச் செப்பினீ
ரைய நன்மையென் றீரவற் றப்புடை.
532 மண்டை கெண்டிகை மாட மடாமனை
கொண்டை குண்டிகை கூறை குடங்கடை
யுண்டி கட்டி லுடம்புயி ராதிய
பிண்ட மாய பிறபிற யாவையும்.
533 கூட்ட மான குறியெனி னலதை
பூட்ட லங்கோர் பொருளின்மை வேண்டியு
மீட்டு மீட்டிவை சொல்லின மெய்யுரை
நாட்டு மாறென்கொ லோவிளி நாசநீ.
534 நிலம்பொய் நீர்பொய் நெடுநகர் தாமும்பொய்
கலம்பொய் காற்றொடு தீயும்பொய் காடும்பொய்
குலம்பொய் யேயெனக் கூறுஞ்செங் கூறையாய்
சலம்பொய் யன்றிதொன் றேநுங்கள் சத்தையே.
535 குற்ற மென்ற குறளையே யொப்பன
மற்றுஞ் சால வுளபிற மாண்பில
வொற்றைப் பெண்ணுரை யாடுதல் போகங்கள்
கற்ற லேகடுஞ் சொல்லின்ன காத்தலும்.
536 பையச் சொல்லுத னல்வினைப் பாலென்றா
லெய்யக் குற்ற வெறியப்புணர்க்குங்கால்
வையத் தீயாவரு மந்திர மாமவை
செய்யச் சொல்லுநர் செவ்விய ராபவோ.
537 கடுக்கத் தாமடி கள்ளெனக் காய்ஞர்யா
ரொடுக்கச் சாம்பிவை தாலுவப் பாரில்லை
கொடுக்க வென்றல் குசலமன் றென்பதோ
படுக்க லுற்ற பதகநின் பாடமே.
538 ளபாவ மாம்பய னில்லன சொல்லலேற்
பூவ மேபொருள் கைக்கொண்டு புற்கலர்
சாவச் சொல்லுவ தத்துவ மாம்பிற
வேவ னன்றென்றி யொப்பவொன் றில்லையேல்.
539 காயத் தாற்கொலை காமங் களவென
நீயத் தாசொன்ன நேருந் திறமென்னோ
மாயத் தான்மன மின்றி யவையவை
தேயத் தியாருளர் செய்பவை ரென்பவே.
540 வழிமுள் ளூன்றன் மனைசுடன் மாந்தரைக்
குழியு ளுந்துதல் கோயிற் கலஞ்செய்த
லொழிவில் யானைமுன் னோட்டலோ டின்னவும்
பழியும் பாவமு மாக்குவ வல்லவோ.
541 ஒன்றி நின்ற வுயிரை யுயிரிது
வென்று சிந்தித் தழிப்ப னெனவெண்ணி
நன்றி யி·றொழி றேற்ற நவையினாற்
கொன்ற தேகொலை யென்றைந்திற் கூறினாய்.
542 தேவ னையிவன் றேவ bனனவெண்ணிப்
பாவனையிற் பணியு மனத்தனாய்த்
தூவென மும்மையே தோற்றித் தொழானங்கோர்
தாவ னைதொழு தான்றவ றெய்துமோ.
543 ஒத்த வன்றனை யுறுபகை யேயெனக்
குத்தி னாற்குங் கொலைவினை யில்லைனப்
புத்த னீருரைத் தீரங்கோர் புற்கலன்
செத்த வாறது சிந்திக்கற் பாலதே.
544 கொன்ற பாவமுண் டாயின் குறட்கண்ணும்
ஒன்று மேயென் றுரைப்பனெப் பாரியார்
பொன்றினும் புத்த ரேநீவி¡; சொல்லின
சென்று சேர்தலைச் சித்தம தின்மையால்.
545 பட்டி லன்பகை யாலெய்து பாவமங்
கொட்டி நீயவ் வுயிர்க்கொலை யாலென்னில்
துட்டனைத் தொழு தோன்றுறந் தானெனக்
கெட்ட னன்னிது கேட்க வினைநிலை.
546 ஆய்ந்த வைந்தினு மாம்வினை யார்ப்பெனின்
வீய்ந்த தின்மையின் வெய்ய வவீசிதான்
காந்தி பாலி யிரங்கக் கலகனைப்
போழ்ந்து கோடல் பொருந்தல தொக்குமே.
547 கொல்வ னென்றவன் கூர்ம்படை குன்றினுஞ்
செல்வ னென்றய லார்மனைச் சோ¢னுங்
கல்லு வானொ டெல்லார்க்குங் கருவினை
சொல்லு வானோ டுலகமுஞ் சுற்றமே.
548 துப்பி னால்வினை சொல்லலன் யானென்று
வப்பி னார்முலை காய்வது வாமனீ
யிப்ப லாரிடை யென்னையி தென்பதோ
செப்பி னாலுஞ் சிதைகின்ற தில்லையால்.
549 பண்டு தான்வைத்தப் பண்டத்தை யொப்பதொன்
றுண்ட தாயி னதுவது வேயெனக்
கொண்டு போகினுங் கொள்ளினுங் குற்றமில்
கண்ட போழ்துங் களவன்ற தென்றலால்.
550 பஞ்சி மெல்லடி நோவப் பகனடந்
தஞ்சி லோதியு மல்க வவளெனத்
துஞ்சு மில்லுடை யாளைச் சுமந்துபோய்
வஞ்சி யான்கொள்க வாழ்கபுத் தன்னென.
551 கந்த மாவன காகதந் தம்மெனப்
பந்த மின்மையிற் பாழ்செய்திட் டேனினி
யந்தி னீசொன்ன வாரிய சத்தையுஞ்
சிந்தை யுஞ்சிதைப் பேன்சில சொல்லினால்.
552 பிண்டமொன் றாயினும் பிரியநோக் கின்னது
கொண்டுநின் றாம்பிற கூறினைந் தேயெனக்
கண்டநா மெய்ம்மையுங் காட்டுவா யீங்கெனி
னுண்டுதா மாகுல முணர்வுதான் கூறுவோம்.
553 முழுதுந்துன்பம்மென மொழியின· தாகிய
பொழுதினா னல்லவும் புல்லுமா மாதலாற்
பழுதுதா னவ்வுரை பன்மைதா னின்மையில்
இழுதையா னான்குள வென்றுசொன் னாயென.
554 உழப்புமூன் றும்முட னொக்கநோக் கின்னது
வழுக்கில்லா வாய்மையேல் வாய்மை சொல்லியினி
யிழுக்கினாய் நீபிறர்க் கின்பமீந் தேனெனல்
பழுக்களே காய்வது ண்டுமுண் டேபிற.
555 துக்கமே யாயினாற் றொழிலுமொன் றாய்ப்பய
மொக்கவே வேண்டுமா லுயர்விலாக் கீழ்க்கதி
புக்குவீழ்ந் தார்பிறர் பொங்கிநின் றாரெமர்
மிக்கதே யென்னெறி யென்றுவேண் டல்லெவன.
556 உறுதிகூ றல்லொழி யொழுக்கங்காத் தல்லொழி
யிறுதியி· றுன்பமே யின்பமில் லாயினாற்
சிறிதுநீ தீப்புகாய் சேர்வதென் னைந்நிழல்
இறுதியில் லாத்துய ரின்னசெய் யாயினி.
557 தூய்மை யில்லை முழுவது மென்பதை
வாயும் நீசொல்லும் வாய்மைய தாயினாற்
றாமஞ் சாந்தம் புனைபவர் தாமெலாம்
ஏம நன்னெறி கண்டில ரேபிற.
558 ஓது மோத்து மொழுக்குநின் னுண்டியுங் 
கோதில் தூய்மைய வாமெனக் கூறியும்
யாது நீயசு வாமெனச் சொல்லுவாய்
நாத னீபிற நன்கறிந் தாயவை.
559 நீயி னேசொன்ன மெய்ம்மையை நோக்கிலார்
தூய்மை யாம்பிறர் தூய்மை யிலரென்று
காய்ப வேகவி மண்டைகள் என்றனள்
வேயி னன்மை விலக்கிய தோளினாள்.
560 சென்ற சென்றுன செந்நெறி கண்டவர்
பின்றைத் தூய்மை பெறுவது மில்லையே
லின்று மின்று மியல்வது வாக்கொள்வாய்க்
கின்றித் தூய்தன்மை யென்னை யிழைத்ததோ.
561 அழுகு பூசுமி னங்கண மாடுமின்
கழுகு ணூத்தையோ டேனவுங் கவ்வுமின்
மெழுகு மின்னிடை மெச்சிய மல்லதின்
முழுதுந் தூய்தன்மை சொல்லிய மூடர்கள்.
562 நில்லா வென்னி னில்லன்மையாலும் நில்லாவா
யில்லா மென்ற லின்புறு மேற்கோ ளிழுக்காகு
மெல்லாந் தானே யென்றலி னேன் விழவெய்தி
நல்லாய் சொன்ன நான்மையை நாட்டுந் திறமென்னோ.
563 உழுவார் வணிக ரென்றிவ ருள்ளிட்டுலகத்துள்
வழுவார்க் கீய வான்பொருள் வேறாய் மறியும்மே
வழுவார் தமையுங் காண்டும· தாமாறுரையீரோ
புழுவாழ் கென்று புனன்மழை தந்த புகழுள்ளீர்.
564 தெய்வத மென்று தேறினர் செய்யுஞ் சிறப்பென்றும்
கையது வீயக் காமுறு தானக் கலப்பென்று
மெய்தல் ரேயின் னிவையிவை யெல்லா மிழுக்காவோ
மெய்பிளந் திட்டு வேண்டுநர்க் கீயும் விழுமிய்யீர்.
565 ஒள்ளிழை யாரே யுறுபொருள் பிச்சைக் குரியார்கள்
தள்ளின போழ்தின் னவையவை தன்னைத் தலைநிற்பார்
கள்ளர்க ளன்மை காட்டலு மாமோ கருணையாற்
பிள்ளைக ளேங்கப் பிறர்களுக் கீந்த பெருமைய்யீர்.
566 நில்லா தாகக் கூறுத றன்னை நெறியென்றீர்
பல்வகை யானும் பாழ்செய்து பின்னே பரிகாரஞ்
சொல்லுவி ராயிற் சொல்லிய மெய்ம்மை துறவாமன்
கொல்சின வேழங் குறிநிலை செய்த குணத்தின்னீர்.
567 ஓதி யாது முயிரில்லை யென்ப துரைத்து நின்றாயேற்
கோதி லங்கோர் குறியுயிரே கொள்ளி னுங்கோளழிவாம
வேதி லார்சொல் பரிகற்ப னையி னாலின் மைசொல்லி
னீதி யாநின் கருத்தினா லுண்மை யுந்நேர்ந் தாயன்றோ.
568 ஒன்று மில்லை யுயிரென்றுரைத்தநீ யுண்மை யின்மை
நின்ற வாறே நெறியாகநேர்கின் றாய்நீ யாவனோ
வன்றி முன்சொன் னவத்திறமெத்திறத்தா னும்மா காமையா
லின்றுந் நின்றுந் நீமொழிந்தாயெம்மிறை யேயிறை யாகவே.
569 போற லானு மதுபோ லாதென்றும்பு னைவினாலும்
வேறல் லதில் லையெனவும் வினைவலியும்யோ கின்னாலும்
தேறி நின்ற பொழுதோடிவ்வேழாந்திறத்தி னாலுங்
கூற லாமோ மீட்டுணர்வுகொண்டு ணர்வா னில்லாக்கால்.
570 நாம சீவன் முதலாய நான்மை களின்முன் மூன்றிலுந்
தூய்மை சீவனுடைத்தாகு மன்றே னின்சொன் மாறுமாந்
தாம சீவன் முழுவது மென்று தருக்கு கின்றாய்
வாம சீவ னிவற்றினா லுண்மை மறுக்க லாகுமோ.
571 அறியும் மெய்ம்மை யும்மைங்கந்தம்மாட சிய்யு மல்லவையுஞ்
சிறிதும் மென்முன் னிலையின்மைகாட்டிச் சிதைத்தே னாலினிப்
பிறிதொன் றுண்டே லுரைய்யெனவுரைத்தாள் புத்தன் றான்பெரிதும்
மெறிபட் டென்னெ றியினாலேயடக்கு வன்னி னையுமென்றான்.
572 ஆதி யலாத வகன்றடுமாற்றமுஞ்
சாதி யறுக்குந் தகையு மிவையென
வோதி வினைப்பயத் தொப்புரைப் பார்க்கன்றி
நீதி யிலாநெறி நேரல னென்றாள்.
573 வித்தின் வழிவழித் தோன்றும் முளைகிளை
சத்தியி னாயசந் தானத்தை மாற்றென்பன்
வெத்தவ வித்தினின் வேறன்று வீடிது
தத்துவ மாக்கொ டளிரிய லாயே.
574 வினையு முளது பயனு முளது
தினையனைத் தாயினுஞ் செய்ஞ்ஞன மில்லை
யெனையவுங் கந்த மருகண நில்லா
நினையின்மற் றென்றா னெறிபயந் தானே.
575 குணம்பொரு ளென்றி கொடைபொரு ளென்றி
யுணர்ந்துசெய் துண்பா னொருவனி லென்றி
கணந்தனி லேநிலை கந்தமு மாயக்காற்
பிணங்குவ தொக்குநின் பேரெமக் கென்றாள்.
576 தீதுள்ள மேலது தீயழப் பேசெய்யும்
யாதுள்ள மாண்புள மேலின்ப மாமென்னை
மாதுளம் பீசமுண் மாணரக் கின்னிறம்
போதுள்ளங் காண்பது போலமற் றென்றான்.
577 எட்டி னியன்ற விரண்டினு ளாங்கவை
யட்ட வரத்தமு மல்லது மாய்ப்பய
மாட்டார் மலர்க்கண்ணுஞ் செம்மையு மற்றுமா
விட்டமுங் காடம்டுவ னீங்கிது போல.
578 ஐந்தி னியன்றவர் பிண்டத்த ராகிய
மைந்த ரிருவர் குசலா குசலத்தர்
சிந்தையி னல்லவன் றன்வழித் தேவனும்
வெந்தொழி லான்வழி வீறி னரகனும்.
579 பீச மெனப்பட்ட தெட்டே பிறிதங் கொன்
றாசொன்று மில்லைய வைந்திற்கு மன்னது
நீ சொன்ன வாறிது நேருந் திறமென்னை
யேசுவன் கேள்யா னெடுத்தினி யென்றாள்.
580 அயலரக் கட்டக பீசமுண் டாங்கு
வியலகத் தைந்திற்கும் வேறொன்று காட்டாய்
குயலமு மல்லது மாயினன் றாகும்
மயல்படைத் தாயொழி மாதுளங் காட்டல்.
581 பூவின்கட் காட்டல் பொருந்தா ததன்வழி
மாவின்க ணாக மகன்செய் வினைப்பயன்
தேவன்கட் போலத் திருந்திய மாதுளஞ்
சாவின்கட் செய்கையுஞ் சாங்களைந் தாயோ.
582 வித்தொடு பூவின்கண் வேற்றுமை காட்டினும்
துத்தல் குழவி கிழவன்கட் சொல்லென்பன்
பித்துடை யார்போற் பிதற்றி வினைப்பய
மெத்திறத் தின்னு மியைத் துரைக் கில்லாய.
583 அங்குரந் தன்கண்ணுஞ் செல்லா தரக்கொடு
மங்கின பீசத் துருவ மலரின்கட்
டங்கின வென்னுஞ்சொற் றத்துவ மாக்கொண்ட
வங்குலி மாரனை யாதன்மற் றென்னாய்.
584 அப்படி யாலரக் காமது போன்மெனிற்
றப்படை யானுழப் பெய்வழித் தங்குத 
றுப்புடை யான்சுர னாகிய வன்றுய்க்க
லிப்படி யாயினீ யென்றுரை யாயோ.
585 எம்மை யுவப்ப வினைவழித் துப்பெனின்
¦ச்மை வழியது தீஞ்சுவை யென்றில்லை
யெம்மை வினைவினை யாக்குநின் பூவுரை
யிம்மையோ டும்மை யிவையிலை யாலோ.
586 உண்டது போலு முறுபயன் பன்மலர்
கண்டது காரண மாகக் கருதினு
மண்டையா மான்றசை மீன்றடி தோன்றிய
வண்டுண வாகலு மாமத னாலே.
587 தீயுழப் பேசெயுந் தீவினை யென்பது
வாயுழப் பாம்வழி யேபுகுந் தாயினி
நோயுழப் பாகிய நுஞ்செய்கை யாவையும்
நீயுழப் பாய்பிறர்க் கேயுழந் தாயால்.
588 உள்ளம் வினையென வோதினை யேற்செய்கை
யெள்ளின் றுணையும· தின்மை யினைந்தெனக்
கொள்ளுந் திறமென்னை கூறாய் குணந்தினிக்
கள்ளமல் லாலென்றுங் கட்டுரை யாயால்.
589 நின்னுடை யுள்ளமுஞ் செய்கையு மொன்றெனிற்
றன்னிடை யெய்துந் தரும தருமிமற்
றென்னிடைக் கொண்டிலை யெங்குப்பெற் றாயிது
முன்னுடம் பாட்டின் முரணுள தாமால்.
590 சித்தமுஞ் செய்கையும் வேறென்றி யேயெனி
லொத்த வினையுடன் பாடின்றி யாமினித்
துத்த லையாதின் வழித்தெனச் சொல்லுதி
யொத்திய வல்ல துரையலை யாயால்.
591 கண்டுணர்ந் தார்வத்தி னாற்செய்கை யாதலை
யுண்டெனி னாற்குண மொன்றினுக் கொட்டினை
பிண்டிநீ ழலவன் பேரறஞ் செர்தலிற்
கொண்டநின் கோளின்கட் குற்றமுண் டாமோ.
592 விளைவத னால்வினை யாக்குமென் பார்சொ
லுளைவதிங் கென்செய வோவுணர் வில்லாய்
தளைபெய்து வைத்தென்னைத் தம்பொறி யெல்லா
மளைவது நன்றிது தானற மாமேல்.
593 ஆர்வத்தி னால்வினை யாக்கு மெனச்சொல்லி
னார்வத்தைச் சித்தமென் றாருரைப் பாரினிச்
சேர்வித்த துப்பினிற் செய்கையு மாதலை
நேர்வித்த வாறது நீயறி யாயால்.
594 உணர்வினை ஆர்வ மெனவுரைப் பாயேற்
புணரும் பிறர்கடம் பொற்றொடி யார்மே
லுணர்வன்ற தார்வ முழப்பெனச் சொல்லி
னிணர்பிரி யாத்துப்பி னால்வினை யன்றாய்.
595 சித்திமுடைச் செய்கை செய்வினை யாதலின்
சித்த முடைத்துப்புஞ் செய்வினை யாம்பிற
சித்தம் வினையெனச் செப்புத லாலெங்குச்
சித்தமுண் டவ்வழிச் செய்கையு முண்டே.
596 செய்கையி னாற்றுப்பு மாக்கியத் துப்பினிற்
செய்கையு மாம்வகை செப்புவித் தேனினிப்
பொய்கைசெய் தேசொன்ன பூவொடு வித்துரை
வைகவென் றாண்மல ருண்கண் மடவாள்.
597 இருவகைப் பீசத் தியல்வு மழித்துத்
திருவகைத் தேவொடு பூவுஞ் சிதைத்தே
மருவுகை யாய்நின் மதுரஞ்செய் மாவும்
தருவனை யாயிற் றகரு மதுபோல்.
598 வலிசெய்து பீசத்தின் மாண்பு மழித்திட்
டலிசெய்து விட்டே னமையு மதன்மேற்
பலிசையி னீசொல்லும் பாடங்க ளெல்லாம்
நலிவனொன் றொன்றா நடுவுணர்ந் தென்றாள்.
599 பிறந்தவப் பிண்டம் வினையினோ டாங்கே
யிறந்தன வெத்திறத் தின்னுமற் றென்றாற்
சிறந்தவத் தேவெய்திச் சேர்தலுஞ் சீரா
தறஞ்செய் தறானு மவம்பிற வன்றே.
600 உரந்தனை யாது மொடுக்ககி லாகிச்
சுரந்தபல் குற்றஞ் சொலக்கேட் டிருந்தான்
பரந்தினி நீசொன்ன பல்வழி யெல்லாங்
கரந்தனை போதலைக் காட்டுவன் கேணீ.
601 அரக்கொடு பீச மறக்கெட்ட வாற்றல்
கரப்பது போலிடைக் காண்பரி தாகி
மரத்திடை சென்று மலரின்கட் டோன்றிப்
பரக்குமென் றேன்பயம் பைந்தொடி யென்றான்.
602 அன்னணஞ் செய்தா னறங்கெட் டவன்வழித்
துன்னுஞ் சந்தானத் தொடர்ச்சி நிகழ்ச்சியிற்
பின்னை யதுபெறு மாதலின் யான்கண்ட
நன்னெறி நின்னா லறிவரி தென்றான்.
603 கந்தங்க ளெல்லாங் கடையறக் கெட்டக்க
ணந்தமி லாக்குற்ற மாமெனச் சொல்லுஞ்
சந்தங்க டம்முட் சவலைச் சந்தானமும்
வந்த· தெவன் செய்யும் வாமமாற் றென்றாள்.
604 ஆற்ற மகன்கெட்ட போழ்தே யமரிற்
றோற்றமு மென்னை துடித விமானத்து
ளேற்ற தவத்தவன் றேவென லென்கொல்
சாற்றுஞ்சந் தானத்தைச் சந்தித்துக் காட்டாய்.
605 மக்க ளுடம்பொடு தேவ ருடம்பிடை
மிக்க விடம்பெரு வெள்ளிடை யாலிது
புக்க தொடர்வில்லை யாதலி னீகொண்ட
பக்க முடன்கெடு மாலென்னை பாவம்.
606 புளிபொறி வாழ்நிழ றண்மதி யின்ன
தெளிவுள தாஞ்செல வின்முடி வென்னில்
விளிபவ னுளபொழு தேவினை துய்க்கு
மொளிகிளர் தேவ னுளமென்னு மாறோ.
607 சென்றில தேலிடை யற்றுழிக் தோன்றுக
வென்றலு மிங்குள தோவது தானெனி
னொன்றல பல்பொரு டாமொளி யாதிய
நின்றல வோவுல கெங்கும் நிறைந்தே.
608 தண்மதி கெட்டதன் சாயை யுடன்பெற
லுண்மை யுண்டாயினி னொத்துரை யொட்டுவன்
கண்மதி யாததெங் காரிய மேயின்ன
வெண்மதி யாயை விலக்குநர் யாரோ.
609 மதியென்று மில்லெனி னில்லொளி தானும்
புதியதும் பாழது பொன்றிய போழ்தே
கதியினை நாட்டிய காட்டி யெமக்கிங்
கதுவென்னை சொல்லிய வாறுரை யாத்தா.
610 அடியொடு பூவி னிடையற வின்றி
நெடியதோர் கொம்பினை நீமறந் தாயோ
மடியிலார் செய்த மானுயர் தெய்வப்
படியிது வென்றிடை பாழ்செய்திட் டாயால்.
611 தோற்ற மிடையற வில்லாத் தொடர்ச்சியைச்
சாற்றுதும் யாமுஞ்சந் தான மெனவென்னிற்
காற்றுஞ் சுடருங் கரகத்துட் டாரையு
மேற்றன வல்ல விரண்டுண்மை யாலே.
612 பித்தொடு கனவிடைப் பேயின் மயங்குநர்க்
கொத்த வுணர்வுண்மை யொட்டல தென்செய
தத்துவ மாயசந் தான முளதெனிற்
புத்தநின் சொற்கள் பொருளில வேயால்.
613 மூத்தல் வகையு முதலத னைம்மையு
மாத்த கணந்தோ றலர்ந்த நிகழ்ச்சியுஞ்
சாத்திரத் தாலத் தவிரன்கட் டாழ்ச்சியும்
போத்தந்து காட்டுந் திறமென்னை புத்தா.
614 கப்பம் பலபல கண்ணிமை யானுக்குத்
துப்பு முரைத்தென்னை தோன்றிய வக்கணத்
தொக்க விளைவுரைப் பாய்பின் வழிவழிச்
செப்புதி யேற்செய்கை சென்றுசென் றுண்டே.
615 காரண மென்னினுஞ் சென்றின்மை யாலில்லை
ஏரண தேவ விழுதைமை சொல்லுதி
யூருணி நீர்நிறை வுண்டோ யுறுபுனல்
வாரண வாய்க்கால் வரவில்லை யாக்கால்.
616 நில்லா தறக்கெடுந் தோன்றிற்றுந் தோற்றமு
மெல்லா வகையினு மில்லதற் கேலில்லை
சொல்லாய் தொடர்ச்சி தொடர்ச்சியென் றேநின்று
பல்லார் களையும் படுத்துண்ணும் பண்பா.
617 சுடருடைத் தோற்றத் தொடர்ச்சியைச் சொல்லி
யிடருடைத் தாக விவையிவை காட்டி
யடர்படுத் திட்டாட் கதற்கொன்று நாடிச்
சடருடை வாசனை சாதிக்க லுற்றான்.
618 கெட்டபி னாற்றல்க ளெல்லாம் வழியதற்
கொட்டு நறுமலர் வாசமோ டோட்டின்கட்
சுட்டுவ தொப்ப வெனச்சொல்லு நீகண்ட
விட்ட மிவற்றோ டியையல தென்றாள்.
619 முன்னைய துள்ள பொழுதத்து மற்றதன்
பின்னைய தில்லை யதுபெற்ற போழ்து
தன்னையு மில்லை யெனச்சொல்லின் வாசனை
யென்னை யியையுந் திறமிவை தானே.
620 ஓடு மலரு மொருங்குள வாதலிற்
கூடும் வாசமுங் குற்றமொன் றில்லெனிற்
கேடும் பிறப்பு முடனில்லை யாதலிற்
கூடல வென்பது கூறின மன்றே.
621 கெடுவத னுண்ணின்று தோன்றுவ தன்கண்
வடுவறச் செல்வது வாசனை யென்னப்
படுவதொன் றன்றுநின் பக்கத்தை யெல்லாஞ்
சுடுவதோர் கொள்ளி சுவடித்த வாறே.
622 போதின்க ணின்றும்புத் தோட்டிற் பொருந்திய
தாதின நாற்றந்தண் ணீருக்குச் சொல்லுதி
யோதன கந்த முடன்கெடின் வாசனை
யாதின தாகு மறிந்துரை யேழாய்.
623 வாசனை வாசனை யென்று வழிவழி
நீசொன்ன நீசொன்ன நேர்வதிங் கென்செய்ய
பாசன மாகிய பாதிரிப் பூவினைப்
பூசின தெப்பொருள் போத்தந்து காட்டாய்.
624 பூவின்கட் கேடும்புத் தோட்டின்கட் டோன்றியு
மேவிய வாசனை யெங்குமுண் டாமெனின்
சோபன மாகச் சுவாகதம் போந்ததென்
றேவன் றிருந்தடி சிந்திமற் றென்றாள்.
625 அதற்கு மறக்கே டுளதெனின் வாச
மதற்குமுண் டாயினி யெல்லையின் றோடு
மிதற்கெண்ணு மில்லெனி னில்லை யதற்கு
முதற்சொன்ன குற்றம் முடிந்தன வாமே.
626 சென்றதென் றாலதன் கேடின்மை யாஞ்செல
வின்றதென் றாலத னாற்றமு மில்லற்க
நன்றிதென் றேசொல்ல நல்லது நாமறிந்
தன்றிதென் றென்முனே யாருரைக் கிற்பார்.
627 கேடது தான்முழு தாதலி னீசொல்லும்
வீடது வாகலும் வேண்டும் விழுத்தவம்
கூடு பவர்க்குங் குணமில் லவர்க்கு
நீடல தேயுள தாநிரு வாணம்.
628 தோற்றம் வழியென்று சொல்லுத லாற்றட
மாற்ற மதுவிதன் மார்க்கத்து மாண்பெனச்
சாற்றுதி யேலுந் சவறது வாதலைத்
தேற்றுவன் கேணீ தெருண்டிருந் தென்றாள்
629 தன்வழித் தோற்றிக் கெடுமோ வதுகெடப்
பின்வழித் தோற்றம் பெறுமோ விரண்டனு
ளென்வழித் தோற்றம· தாமா றிருளற
நின்வழித் தோற்றத்தை நீயுரை யென்றாள்.
630 வழியொன்று தோற்றிக் கெடுமேன் மகப்பெற்
றழிகின் றவள்போ லணைவுள தாகு
மொழிகின்ற தேயது காணல தென்னிற்
கழிகின்ற கன்னிக்கோர் காதலற் காட்டாய்.
631 பிறப்பித்துக் கேடும்பின் றோற்றக் கெடலும்
இறப்பவுங் கூடா திருதிறத் தானுந்
துறப்பித்த வாறிது தூவெனக் கேட்டை
மறப்பித் துரைத்ததுண் டோசொல்லு வாம.
632 சுலாப்பல சொல்லிச் சுழன்று விடாதே
துலாத்தலைத் தூக்கமு மோக்கமுங் காட்டி
னிலாத்தலை யல்லா விரண்டு ளொன்றுண்டா
யிலாத்தலை யில்லே லமைவது மன்றே.
633 இல்லதற் கோயில்லை கேடென்னை காக்கையின்
பல்லதற் கோதார் பருமையு நுண்மையுஞ்
சொல்லிதற் காவதுண் டேலெனச் சொல்லின
ணல்லதற் கல்லது நாப்பெய ராதாள்.
634 துலாமில்லை யட்டக மேயது தானு
மிலாமிரு பாற்றலை யேதலை தாமு
நிலாம்வகை யில்லுயர் வோடிழி வெங்கும்
கலாமவை யாய்க்கடை கண்டது பாழே.
635 ஓல குளவி குருட்டெண் ணெய் வாணிச்சி
கோலஞ் சிதையுமென் றெண்ணெயட் டாளென்னும்
பாலகர் பாட்டுரை போன்றது மற்றுநின்
நூலுரை யெல்லா நுழைந்துணர் வார்க்கே.
636 கோற்றிர ளொன்றா யதன்றலைக் கேயுட
னாற்றியு மோக்கமு நாட்டினை ய·தொப்பத்
தோற்றமுங் கேடுந் தொகுபிண்ட மொன்றிற்குச்
சாற்றுதி யாய்விடிற் றக்கதென் னேனோ.
637 தலையன தாழ்ச்சியு மெழுச்சியு மன்றி
நிலையிலை கோலிடை நீக்கலு நீங்கு
மிலையென வெட்டி னிடுகுறி யொன்றெனிற்
பலவினி யிங்குப் படுவன கேணீ.
638 கோலுந் தலையு முடனில்லை யாமெனின்
மேலு முரைத்தன மேயதன் மேற்பழி
வாலுந் தலையு நடுவு மவையின்றிப்
பாலும் படுவதோ ராவுள தென்னாய்.
639 புணரிய தாமவை பொய்யெனச் சொன்னேற்
குணர்வதங் குண்மையு மொட்டுவை யாயிற்
குணகுணி யாயு மவயவி யாயும்
பிணபிணக் கெய்துமப் போ¢டர் செய்தாய்.
640 இருபிண்ட முப்பிண்ட மெண்ணில்பல் பிண்டம்
வருபிண்ட மேற்பல மற்றவை நீங்க
வொருபிண்டங் கொண்டாங் குயிர்க்குறுதி யிட்டுத்
திருவுண்ட செய்கையிற் செய்தவ னாக.
641 வினைசெய்தான் றுய்க்குமோ வேறொருவ னேயோ
வனைவரு மோவில்லை யோசொல்லா யோவென்னக்
கனைகடலி னுண்மணலிற் கண்ணினையு மீந்தா
னினைவகைய கேளென் றெடுத்துரைக்க லுற்றான்.
642 அவனேயு மென்னேன் பிறனேயு மென்னே
னவனும் பிறனு மவரேயு மென்னே
னெவனேயு மெய்தா னெனலேயு மாகா
வெவனோ விதுதுய்ப்பா னின்னணங்கே ளென்றான்.
643 அதுவேயு மென்னேன் பிறிதேயு மென்னேன்
அதுவும் பிறிது மவையேயு மென்னேன்
அதுபோன்ற வல்ல ததன்வழியின் மற்றொன்
றிதுபோல வென்பே னெடுத்துரையுங் கேணீ.
644 இடுபீச மன்றா லிறுங்காதி யன்றால்
வடுவாய வவ்விரண்டும் வந்தனவு மன்றால்
நெடிதாய தீங்கரும்பு நெல்லுமே போல
நடுவாக நோக்காய் நறுநுதலா யென்ன.
645 ஆத்தாவ தன்றேற் பிறிதா மரும்பெற
னாத்தான் வருத்த நீ நாட்டியதியாங் காணேன்
போத்தாகா தேற்குதிரை பெட்டையது போலென்
சாத்தாகு மாகாமை சாதிக்க வல்லையோ.
646 அவன்போற லானு மவனன்மை யானு
மவன்றன் வழியா னவனாத லானு
மவன்றான் பிறனே யவனென்ற லானு
மவன்றான் பிறனே யெனவழிவ துண்டோ.
647 கண்போலக் கயலெனினுங்
காடன்றித் தூறெனினும்
பெண்பாலாற் பல்கியும்
எல்லாம் பிறவேயாம்.
648 அயலானே துய்க்கு மவன்றுவ்வா னென்பாய்
முயலானு மில்லான் முகஞ்சிறிதே யொப்பான்
வயலாமை போல்வதோர் மக்குளி யிலானென்
றியலா தனவே யெடுத்துரைத்தி யென்றாள்.
649 அயற்பிறனு மல்ல னவன்றானு மல்லன்
புயற்றிறலைங் கூந்த லிதன்போலப் பிறனுக்கேல்
முயற்பிறவி மேயினீர் முன்செய்தா னங்கோர்
பயப்பெறுவ தில்லையேற் பாழ்பயனி தென்னோ.
650 தற்பிறிதே யாகிப் பிறபிறிது தானல்லா
நெற்பிறிது போன்மெனவு நீயுரைத்தா ய·தொழிந்து
சொற்பிறிது சொன்னாய் சுவர்க்கத் தவர்க்குரைப்
பிற்பிறனே யாகிப் பெறப்பிறனே யாகானோ.
651 நெல்லின் வழிக்கரும்பு நீள்கரும்பி னானெல்லுஞ்
சொல்லுநீ சொல்லாயேற் சொல்லியநின் சொல்லெய்தா
வல்லனாய்ச் செய்த மகன்வழியி னான்மகன்றா
னல்லனாய்ச் சொல்லின் னுலங்கரு வாமே.
652 செய்தானுஞ் செய்தானே துப்பானுந் துப்பானே
யி·தாலென் மெய்ம்மை கிடந்தவா றென்றானுக்
கெய்தார் பிறவோ விருசார் வினைப்பயனுஞ்
செய்தார்க டாமெனலுஞ் சிந்தித் திருந்தானால்
653 கண்ணுந் தலையும் பிறவுங் கருந்தடியும்
பெண்ணுங் கொடுத்துப் பிறர்க்கே யுழந்தாய்முன்
னெண்ணுங்கா லின்னுநீ யெவ்வினையுஞ் செய்தாரை
யுண்ணுந் திறமொன்று மோதா தொழிந்தாயோ.
654 எனைத்துணையு நீவருந்தி யெத்துணையோர் கால
நினைத்திருப்பி னல்லது நின்காட்சி தன்னால்
வினைப்பயத்தின் கூட்டம் விரித்துரைப்ப னென்னிற் 
றினைத்துணையு மாகாமை தோ¢துநீ யென்றாள்.
655 முழுக்கேடு வேண்ட¡யேன் முன்ன¢ன்ற துண்ட¡ம்
வழுக்குமே லவ்வுரைக்கு மாறுகோ ள¢·த ¡
மிழுக்காமை புத்த£ ரெனைப்பலருங் கூடிக்
குழுக்கள¡ய் வந்துநுங் கோள¢றுமி னென்றாள்.
656 நின்றே நிலையுமென¢ ன¢த்த¢யமே யாயொழியு
மன்றேய· த¡யி லநித்த¢யமா மவ்விரண்டு
மென்றே யுரைக்கில¢ரு வழிக் குற்றமுமா
மென்றே யுரைக்கின்றா யேகாந்த ன¡குத¢யோ.
657 உச்சேதந் த¡னு மொருவகையா லவ்வகையே
யச்சேத மின்மையு மவ்விரண்டு மாய்நிகழ்ந்து
பொய்ச்சேத மல்ல¡ப் பொருண் முடிபொன் றுண்ட¡க
மெச்சாயே நீயெனயான் மெச்சுவனே யென்றான .
658 இறைவன்ற னூலுணரி னெவ்வுருவி ன¡ரு
முறையின¡ லெய்துவர்த¡ முன்ன¢ய வீடென்றாள்
மறையின¡ ல¡யினு மற்றொருவா றேனு
நிறையின¡ற் செல்லென்று நோ¢ழையுஞ் சென்றாள்.
ஆசீவக வாதம்
659 கண்ணார் சிறப்பிற் கபில புரங்கடந்து
விண்ணாறு செல்வாள் வியன்மலைபோற் றோற்றத்தாள்
உண்ணால் வினையு மொருவி யொளிர்மேனி
யெண்ணா துணர்ந்தானை யேத்தத் தொடங்கினாள்.
660 அங்கம் பயந்தா னறைந்த சுதக்கடலுள்
பங்கங்கள் சாராப் பரசமையர் சொல்லுளவோ
பங்கங்கள் சாராப் பரசமையர் சொல்லேபோற்
புங்கவன்றன் சேவடியைச் சேராத பூவுளவோ.
661 பூர்ப்பம் பயந்தான் புகன்ற சுதக்கடலுள்
சார்த்திப் பிறவாத் தவநெறிக டாமுளவோ
சார்த்திப் பிறவாத் தவநெறிக டம்மேபோற்
றீர்த்தன் றிருநாமங் கொள்ளாத தேவுளவோ.
662 புலவ னுரைத்த புறக்கேள்வி சாரா
துலக நவின்றுரைக்கு மோத்தெங் குளதோ
வுலக நவின்றுரைக்கு மோத்தேயு மன்றிப்
பலவும் பகர்வாப் பயந்தனவே யன்றோ.
663 அலரோடு சாந்த மணிந்தெம் மிறைவர்
மலரடியை யல்லதியா மற்றறிவ தில்லை
மற்றறிவ தில்லாத வெம்மை மலரடிகண்
முற்றவே செய்து முடிவிற்க மன்றே.
664 புனையுலகிற் காதிய புங்கவ னார்த
மிணையடியை யல்லதியா மின்புறுவ தில்லை
இன்புறுவ தில்லாத வெம்மை யிணையடிக
டுன்புறவி லக்கதியுட் டோற்றுவிக்கு மன்றே.
665 இரவிடைநன் மணிபோலு மண்ணா துணர்ந்தான்
திருவடியே யல்லதென் சிந்தனையி லில்லைச்
சிந்தனையொன் றில்லாத வெம்மைத் திருவடிக
ளந்திணையில் பேராற்ற லாக்குவிக்கு மன்றே.
666 தொக்குட னாயவென் றொல்வினை தீர்கென
முக்குடை யானடி மூன்றினும் வந்தித்துக்
குக்குட மாநகர் நின்று கொடிமினிற்
றக்கதிற் றான்போய்ச் சமதண்டம் புக்காள்.
667 ஈண்டி யிருந்த விலிங்கியர் தங்கட்கு
மாண்ட துகிலல்குல் மாதரிது சொல்லும்
காண்டற் கினிதே கடிமலர்ப் பூம்பள்ளி
யீண்டுறை வாரிவர் யாவர்கொ லென்றாள்.
668 காரணம் வேண்டாக் கடவுட் குழாந்தன்னிற்
பேருணர் வெய்திப் பெரிதும் பெரியவன்
பூரண னென்பான் பொருவறக் கற்றவ
னாரணங் கன்னாட் கறிய வுரைக்கும்.
669 புயலிருங் கூந்தற் பொலங்கொடி யன்னா
யயலியர் தாமல்ல வாசீ வகர்கள்
வியலிடத் தியாரும் வியக்குந் தகையார்
மயலறு காட்சியிம் மாதவ ரென்றான்.
670 ஆத்தனு நூலும் பொருளு நிகழ்ச்சியும்
பாத்தன சொல்லப் பயம்பெரி தாகலி
னோத்துரை யேயிங் குரையென் றுரைத்தனள்
சாத்திரம் யாவையுந் தன்னிக ரில்லாள்.
671 என்றலு மற்கலி தானே யிறையினி
ஒன்பது வாங்கதிர் நூல்யா முடையன
மன்பெறு நுண்பொரு ளைந்தியல் பாயவை
யென்ப நிகழ்ச்சியுங் காழ்ப்பா டெனச்சொல.
672 அறிந்தா னிறைவ னவனா குதலாற்
செறிந்தான் பெரிதுஞ் செறியா துரைப்பி
னெறிந்தா னனைய வியல்பா குதலான்
மறிந்தான் றடுமாற் றகத்தே மயங்கி.
673 உரையா னிறைவ னுணலு மிலனாய்த்
திரையா னரையான் றெரிவில் லுருவம்
வரையா வகைவா னிடுவில் லனையன்
புரையா வறிவிற் புகழ்பூ ரணனே.
674 அடங்கல் குறிக்கோண் முதலா யினவாய்க்
கிடந்த கதிருட் கிளந்த பொருளுந்
தொடங்கி யுரையாந் தொகையா குவதே
யுடங்கே யுணுவைந் துருவா யுளவே.
675 நிலநீ ரெரிகாற் றுயிரி னியல்பும்
பலநீ ரவற்றின் படுபா லவைதாம்
புலமா கொலியொன் றொழிய முதற்காஞ்
சலமா யதுதண் மையையே முதலாம்.
676 எறித்தன் முதலா யினதீ யினவாம்
செறித்த லிரையோ டிவைகாற் றினவா
மறித்தல் லறிதல் லவைதா முயிராம்
குறித்த பொருளின் குணமா லிவையே.
677 அணுமே யினவைந் தவைதா மனைத்துங்
குணமே யிலவாங் குழுவும் பிரியு
முணன்மே யினுமுள் புகுதல் லுரையேங்
கணமே யெனினும் மொருகா லமிலை.
678 இவையே பொருள்கள் இவற்றி னியல்பும்
சவையே அறியச் சிலசாற் றுவன்கேள்
சுவையே யுடையம் மெனநீ யிகழல்
லவையே பிறராலழிதற் கரிய.
679 அண்ணலு நூலும் பொருளுநிகழ்வு மிவையெனலு
மெண்ணினு மேனை யெழுத்தினுமிக்காங் கிருந்தவர்முன்
கண்ணினு மன்றிக் கருத்தினும்வேறெனக் காட்டலுற்றுப்
பண்ணலங் கொண்டசொல் லாளவைபேர்த்தும் பகர்ந்தனளாய்.
680 முற்ற வறிந்துரை யாதவன் மோனாந் திருந்தனனேற்
செற்றம் பெரிது முடையனச் சீவன்க டம்மொடெல்லா
மற்ற முடையவர் சொல்லின வாகம மன்மையினாற்
பெற்ற வகையென்னை பேதாயதனைப் பெயர்த்தெனவே.
681 ஒக்கலி யோகலி யென்றிரு தெய்வ முரைத்தனவேன்
மற்கலி யார்போ லறிந்தன வாயிற் செறிந்தனவாம்
தக்கில வேயறி யாதன சொல்லுத றத்துவத்தை
யிக்கலி யாள ருரைத்தவு மேதமெ னாய்பிறவோ.
682 அறிந்தா னறிந்தன தான்சொல்லினார்வச் சினத்தனனா
யெறிந்தா னனையதோ ரேதத்தையெய்துமவ் வேதத்தினான்
மறிந்தா னகன்றடு மாற்றத்தகத்தெனின் மாண்புணர்ந்தாய்
செறிந்தாங் கிருக்கிற்பி னீயுஞ்சிற்றாத்தனை யாகிற்றியே
683 ஆத்த னறிந்தன யாவையுஞ்சொல்லல னாய்விடினிச்
சாத்தனும் யானு மவன்றன்னிற்சால விசையுடைய
நாத்தனை யாட்டியோர் நன்மைகண்டாலு நினக்குரைத்து
மீத்தன முண்டு மிருமைக்குமேத மிலம்பிறவோ.
684 வானிடு வில்லின் வரவறி யாத வகையனென்பாய்
தானுடம் போடு பொறியின னாதலிற் சாதகனா
மீனடைந் தோடும் விடுசுட ரான்கதிர் வீழ்புயன்மேற்
றானடைந் தாற்றனு வாமிது வாமதன் றத்துவமே.
685 முற்ற வறிந்தனன் யானென்றுமோனங்கொண் டேயிருந்தா
னற்ற மகலவென் றானீயறிந்தமை யாதினினாம்
பெற்ற வகையெனப் பேச்சின்மையாலெனிற் பிள்ளைகளும்
மற்றிம் மரமு மலையுமம்மாண்பின வாம்பிறவோ.
686 முடக்கு மெனினு நிமிர்க்குமெனினுந்தன் மூக்குயிர்த்து
நடக்கு மெனினு மிருக்குமெனினுந்த னல்லுறுப்பி
னடக்கு மியல்பல்ல னன்னவற்றார்வத்த னாகுமன்றி
யுடக்கு மிவையில்லை யேலுயிர்தானுண்மை யொட்டுவனோ.
687 நிலப்பாலு நீர்ப்பாலுந் தீப்பாலும் காற்றின்
புலப்பாலு நெட்டுயிரின் போக்கில்லாப் பாலும்
சொலற்பால வல்லாத சொல்லுதலால் யானு
மலப்பா தொழியேனிவ் வாசீ வகனை
யருகிருந்தார் தாமறிய வாசீ வகனை.
688 வண்ணாதி யெல்லாம் வகுப்பின் னிலப்பாலாம்
நண்ணாத மூன்றிற்கு நன்பால் பிறவாகிக்
கண்ணாதி யாலவற்றைக் காணப்பா டில்லையா
யெண்ணாதே யிந்தியக்கோ ளெய்தாமை வேண்டும்
எனைத்தும் பெறப்பாடு மில்லாத வேண்டும்.
689 நீர்ப்பாலுந் தீப்பாலு நில்லா வளிப்பாலும்
பேர்ப்பாலே பற்றிப் பிறப்பிறவா நீபெருக்கி
யோர்ப்பி யாதுஞ்செய்யா துரைத்தா யுரைத்தமையிற்
கூர்ப்பியாது மின்றிநின் கோளழியு மன்றே
கொணர்ந்துநீ யைந்தென்ற கோளழியு மன்றே.
690 பொருடாமி வைந்தொழியப் போத்தந் துரைப்பா
யிருடாமி வைந்தனு ளெக்கூற்ற தாமோ
விருடாமி வைந்தனுளு மெக்கூற்று மில்லை
லருடாழ்ந்து நீயிருப்ப தியாதின்பா லாமோ
அணுமயமாங் கந்தங்க டாமனந்த மன்றோ.
691 பலவாக நீசொன்ன பாலெல்லாந் தம்முட்
கலவாவா யப்பொருளே யாதலையுங் கண்டா
லுலவாதோ வொற்றுமையும் வேற்றுமையு மென்றாற்
சலவாதி யொன்றுஞ் சமழலையே கண்டாய்
சமத்திடை யொன்றுஞ் சமழலையே கண்டாய்.
692 பாறாம் பலவாகிப் பாலாகு மப்பொருளே
வேறாது மில்லை யெனவே விளம்புவாய்
நீறாக நின்ற நிலப்பால் பெறவேலா
நாறா வகையெனக்கு நன்குரைக்கல் வேண்டும்
நலிந்தாற் பிறபொருட்கு நாட்டலே வேண்டும்.
693 இன்றேய தாயி னிவைபா லிவைபொருள்க
ளென்றே பலவா வெடுத்துரைப்ப தென்செய்யக்
குன்றோ மலையோ குவடோ வடுக்கலோ
வன்றோவ தன்றால· தியாப்பாதல் வேண்டூம்
அவையவையே சொன்னால· தியாப்பாதல் வேண்டும்.
694 நோயில்லை வாழி கடவு ளெனவுரைத்தா
னாயினோ யின்மையினேர்ந் தாய வழியொருநாட்
டீயினும் வெய்யநோய் சேர்தலையுங் காண்டுநீ
சாயினும் தத்துவத்தைச் சாராதா யன்றோ
தடுமாற்றக் காழ்ப்பாடந் தாமுளவே யன்றோ.
695 கடுங்கதிரோன் மீதூரக் காணாக்கோ ளெல்லாம்
படும்பொழுது மெழுச்சியினுந் தம்பயனே செய்யு
நெடுங்காலம் பல்பிறவி நின்றன வெல்லா
மொடுங்காதே மேய்ந்துண் டுழிதரலே வேண்டும்
உதவாத வார்தலையு மொட்டலே வேண்டும்.
696 எப்பாலுந் தான்கெடா வில்லனவுந் தோன்றாவென்
றொப்பியாது மில்ல துரைத்தளியின் றானுண்ணும்
துப்பாயதூச் சோற்றுத் தூய்தல்லா தாழ்ந்துளதென்
றிப்பாவி செய்யு மிழிதகவி தென்னோ
விழுதைதான் செய்யு மிழிதகவி தென்னோ.
697 நின்றீக கொண்டீக வுண்டீக தின்றீக
வென்றிவைகள் கூறி யிடுவார்க் கறம்வேண்டான்
கொன்றீகை தீதென்றுங் கொல்பாவ மில்லென்றுந்
தன்றீகை யுண்ணாதான் றான்கண்ட தென்னோ
தவத்தினு மில்வாழ்க்கை தான்கண்ட தென்னோ.
698 இல்லாத தோன்றா கெடாவுள் ளனவென்பாய்
சொல்லாயே நெய்சுடராய்ச் சுட்டிடுமா றென்றேனுக்
கல்லாந் தயிர்த்தோடி யாழ்மிதப்புச் சொல்லுதியா
லெல்லாமொன் றொன்றிற் கிடங்கொடா வன்றே
யிழிவுயர்ச்சிக் காரணமு மில்லாதா யன்றே.
699 ஓட்டுங் குதிரையு மொன்றே யெனிற்குதிரை
யூட்டம் பொழுதொடுதான் புல்லுண்ணும் போழ்தின்கா
னாட்டிய வீதி யதிசயத்தை நீயெமக்குக்
காட்டி யுரைப்பினின் காட்சியைக் கோடும்
கடவுட் குழாத்தார்தம் காழ்ப்பெலாங் கோடும்.
700 வண்ண முதலா வுடைய குணமெல்லாம்
எண்ணுங்கா லப்பொருளே லீந்தி னிளங்காய்க்கட்
கண்ணினாற் கண்ட பசுமை கனிக்கண்ணுந் 
திண்ணிதாக் காட்டிற் றெருண்டாயே யென்றும்
திரிந்தொழிந்த காட்டினாற் றேவனே யென்றும்.
701 வட்ட முதலா வுடைய பொருளெல்லா
மொட்டிநீ யப்பொருளே யொன்றும்வே றில்லென்பாய்
தட்ட மழித்தோடஞ் செய்தா லதன்கண்ணும்
விட்ட வடிவு விரித்துநீ காட்டாய்
விகார மனைத்தும் விரித்துநீ காட்டாய்.
702 மிதப்பனவு மாழ்வனவும் வேண்டுவனயா னென்னிற்
பதப்பொரு டானான்கின் பன்மைமுடித் தாயா
மிதப்பனவே யாழ்வனதாம் வேறியாது மில்லே
லுதப்பேனு நின்சொ லுதவலவே கண்டா
லுடனேநின் பக்க முடைத்திட்டாய் கண்டாய்.
703 தொழிற்சொற் குணச்சொல் வடிவுச்சொன் மூன்றும்
பிழைப்பில் பதமாப் பிரிவிடத்துக் காண்டு
மிழுக்கில் பொருளோ டியைத்தக்காற் சந்தி
யெழுத்தியலிற் கூட்டமு மெப்பொழுதுங் காண்டு
மிலக்கண நின்சொ லியையலவே கண்டாய்.
704 அதுவா வதுவு மதுவாம் வகையு
மதுவாந் துணையு மதுவாம் பொழுதுஞ்
சதுவா நியதத் தனவா வுரைத்தல்
செதுவா குதலுஞ் சிலசொல் லுவன்யான்.
705 அரிவை யவளாங் குழவி யவளை
யுரிய வகையா லுவந்தாங் கெடுத்தா
லரிய முழமூன் றளவாம் பொழுதும்
வரிசை யுரைத்த வருட மதன்பின்.
706 குழவித் திறமுந் துறவா ளவளும்
முழுவித் ததுவும் முளையா துளதா
மிழவெத் துணையு மியல்பேன் முடியா
தழிவித் திடுவே னயநீ விரையல்.
707 முலையும் மகவும் முறுவல் லவையும்
தலையுண் மயிரும் முகிரும் முடனே
நிலையில் லமையு மிலதா மெனினே
யலையுந் நினகோ ளுடனே யெனலும்.
708 உளவே யெனின்முன் னுரைத்தந் தியதங்
களவே யெனலாங் கடையா மெனநீ
கிளவா தொழியாய் கிளந்த குழவிக்
களவே முழமா வவைதாம் பலவால்.
709 உடையள் ளிவடன் னுதரத் தொருபெண்
ணடையு மவளுக் கவளவ் வகையாற்
கடையில் குழவி யவைதன் னியல்பா
நடையு மதுவே னகையாம் பிறவோ.
710 இனியாம் வகையு மிசைத்தி யெனினுந்
நனிகா ரணமாய் நடுக்கு நினகோட்
டனிகா ரியமும் முளதேற் றவறா
முனிலா மொருவன் பொழுதும் முடிவாம்.
711 நியதந் நிகழ்ச்சிந் நியதா வுரைப்ப
தயதி யெனினீ யமையுஞ் சலமேல்
வியதி யெனினும் வெகுளல் இழுதை
பயதி யெனினு நினக்கோர் பயனே.
712 பாலைப் பழுத்தி னிறத்தன வாய்ப்பல மாட்டொடுகண்
ணாலெத் துணையு மகன்றைந்து நூறாம் புகையுயர்ந்து
ஞாலத் தியன்றன நல்லுயி ரென்பது நாட்டுகின்றாய்
மாலித் துணையுள வோநீ பெரிதும் மயங்கினையோ.
713 ஒன்றினு ளொன்று புகலிலவென்ற வுயிர்களெல்லா
நின்றன தந்த மகலமுநீளமும் பெற்றனவாய்
நன்றுநீ சொல்லுதி நாந்தொக்கிருந்துழி நல்லுயிர்க
டுன்றின வென்பது சொல்லாதினியென்ன சொல்லுதியோ.
714 தானுள தாய வழியதன் றன்பா லியல்பெனலா
மூனுள தாய வுயிர்ப்பிர தேச முணர்வதுபோல்
வானுளம் போயுழி மன்னு மறிவிலை யேலதனை
நானுள தென்றுரை யேனதற் கியாரினி நாட்டுகிற்பார்.
715 ஒன்றென நின்ற உயிர்தானுருவின தாதலினாற்
பொன்றுந் துணையும்பல் போழெய்தும்பூசணிக் காயினைப்போ
லின்றெனி னாகம மாறதுவாமினி யவ்விரண்டு
மின்றெனிற் சால வெளிதாம்பிறவத னின்மையுமே.
716 எண்டனை யாக்கி யிடவகை யுட்பொரு ளீறுசொல்லி
மண்டல மாக்கி மறுத்துங் கொணரு மனத்தினையேற்
கண்டிலை நீமெய்ம்மை காழ்ப்பட்டு நின்ற கனவுயிர்க்கெண்
ணுண்டெனி னில்லை யகன்றடுமாற்ற முலப்பின்மைபோல்.
717 மேற்சீர தீயோ டுயிர்காற்று விலங்கு சீராம்
பாற்சீர நீரு நிலந்தானும் பணிந்த சீரா
மேற்சீர மேற்போம் விலங்கோடு விலங்கு சீர்கீ
ழாற்சீர வீழும் மவையென்னினு மாவ தென்னோ.
718 தீயு முயிருந் தமக்காய திசையி னாலே
போயு மொழியா திவணிற்றல் பொருத்த மன்றால்
வீயும் வகையும் வினையாக்கும் திறமு மெல்லாம்
நீயு மவற்றை நினைவாயுள வாக வன்றோ.
719 தென்றை யதுளையத் திசைதானுறப் போய காற்றேற்
பின்றை யொருநாட் பெயராததோர் பெற்றி ய·தான்
முன்றை தழுவி முனிவாக்கும் வடந்தை யத்தா
வின்றைப் பகலே யிதன்மெய்ம்மை யிசைக்கிற்றியோ.
720 முன்சென்று வீழுந் நிலநீரை முகிலு ணின்று
பின்சென்று பெய்யுந் துளிதானும் பெருந்த வத்தா
யென்சென்ற தெய்துந் திறந்தன் னையெனக் குணர
நின்சென்ற வாற்றா லுரைத்தானெறி யாற்ற நன்றே.
721 பாலெங்கு மோதப் படுகின்ற பதப்பொ ருட்குக்
காலங்கள் சொல்லா யதுதானுன் கணக்கு மென்றாற்
சீலங்கள் காத்துக் குணனின்மையைச் செப்பு கின்றாய்
மாலிங் குடையை யதுதீர்க்கு மருந்து முண்டோ.
722 நோயுற்ற நுன்போற் குணமொன்றில னாய யானும்
பேய்மற் றிவடா னெனக்கண்டோர் பெரிய வன்றா
னீமற்றி துண்ணென் றறநல்க விளங்கப் பெற்றேன்
வாமத்து ணீயும் மதுபோலு மருந்தில் லையே.
723 நோயைத் துணிந்தே யுறுநோய்முத னாடியந்நோய்க்
காய மருந்தே யறிந்தூட்டும· துண்டு காட்டிற்
பாய மறுக்கும் படியாமது பல்லு யிர்க்கும்
கூயத்தி னென்னை குரவருப தேச மென்றாள்.
724 சாதி முதலாப் பிணிதாமிவை யப்பி ணியிற்
காதி யறியில் லவைதீவினை யூண தனாற்
றீதின் றிதனில் லழுந்தல்திரி தோடத் தினால்
வேத னையது தீர்ப்பது மெய்யுணர் வாமே.
725 மானின்ற நோக்கின் மறவேனெடுங் கண்ணி னல்லாய்
மேனின்ற வெல்லா மிகநல்லவிம் மெய்யுணர்ச்சி
தானின்ற தன்மை தவிராதுரைக் கிற்றி யேனின்
னூனின்ற வாறே பொருணோக்குவன் யானு மென்றான்.
726 நின்ற விரலுந் நிலையாழ்ந்து முடங்க லாயிற்
சென்றவ் விரலும் மெனத்தானின் கூற்ற தாயிற்
றொன்றவ் விரலே யுறலுண்மையு மின்மை யும்மா
மென்றவ் விரலே யிதுவென்றனள் வேற்க ணல்லாள்.
727 ஆழ்ச்சி யொருபா லதுவல்லன தம்மோ டாழா
தேழ்ச்சி யொன்பா லதுதன்னொடு மின்ன தென்னச்
சூழ்ச்சி யமைந்த துணைத்தோளியர் சொற்க ளென்று
தாழ்ச்சி மனத்தா லிதுதத்துவ மென்ற னன்னா.
728 பொய்ந்நின்ற வெல்லாம் புரைத்தாயினிப் பூர ணன்னே
மெய்ந்நின்ற பெற்றி யறிந்தாயிதன் மேலு நன்றாக்
கைந்நின்று முண்டுங் கடைப்பள்ளி வழியு மாக்கிச்
செய்ந்நின்று நீசெய் தவந்தானெனச் செப்பி னளே.
729 கல்லா தறிந்த கடவுள்ளிறை யாகு மெய்ந்நூல்
சொல்லானு மல்ல னவன்சொல்லின தாகு மும்மூன்
றெல்லாப் பொருளுந் தம்பான்மை யியல்பு மேன்று
பொல்லாத போக்கி யினிப்பூரண சென்மி னென்றாள்.
சாங்கிய வாதம்
730 ஆங்கவன் சொல்லவவ் வத்தின புரத்து
ளோங்க வொருகொடி நட்டுரைக் கிற்பவ
னாங்க ணெவர்க்கு மறையென் றிருந்தவச்
சாங்கியன் றன்னைத் தலைப்பெயச் சென்றாள்.
731 சென்றா ளவன்றன் சிரத்தையைக் கண்டோத
நின்றா ளவன்றா னெறிபகர் கின்றனன்
பின்றான் பிரளையத் தாக்கமும் பேர்ச்சியு
மொன்றா வகையா லுரைகளை யொட்டா
732 பாலொத்து நின்ற பரமாத் துமனொடு
மூலப் பகுதியு மல்லாப் பகுதியு
மேலொத் தியன்ற விதிவிகற் போடு
நூலிற் கிடந்தவ நுண்பொரு ளன்றே.
733 ஒருங்கிருந் தார்கட் குடனவை யெல்லாம்
பருங்கினன் மெய்யும் பராசரன் றன்னை
விரும்பினள் போல வினவின ளன்றே
யருங்கல மாய வறிவினுள் மிக்காள்.
734 என்னைப் பயந்தீரி· தென்னெனக் கேட்டன
ணன்னுத லாயிது வென்னெறி யென்றன
னன்னன· தாயி னறிவி யெனச்சொல
வின்னன கேளென் றெடுத்தனன் சொல்லும்.
735 மன்னுயிர் தெற்றென வில்லது மான்செருக்
கென்னவு மிந்திய மைந்தைந் தொருமன
மன்னதன் மாத்திரை யைந்தைந்து பூதமும் 
பன்னிய வையைம் பதப்பொரு ளென்றான்
736 எத்திறத் தின்னுஞ்செய் யான்குண மொன்றிலன்
றத்துவ னின்பன பேதன லேபக
னித்திய னெங்கு முளனெடுங் காட்சியன்
றுத்த லுடையனென் றோன்றலு மென்றான்.
737 நின்று பரந்தரு வாய்ப்பொறி யேதுமிக்
கொன்று கிரிகையின் றப்பியத் தம்மது
சென்று செய் மானிற் செருக்கத்தி னீரெட்டு
மன்றியு மைவகைப் பூதமு மன்றே.
738 நின்று பரந்தரு வாய்ப்பொறி யேதுமிக்
கொன்று கிரிகையின் றப்பியத் தம்மது
சென்று செய் மானிற் செருக்கத்தி னீரெட்டு
மன்றியு மைவகைப் பூதமு மன்றே.
739 கதக்களி யானைமுன் கல்லெறிந் தாற்போற்
பதப்பொரு டம்மைப் பழுதென் றுரைப்ப
மதத்தினின் மிக்கவன் மாதரை நோக்கி
யுதப்பென்னுங் குற்ற முரையெனக் கென்ன.
740 செய்யா துயிரெனச் செப்புகின் றாய்நின்னை
வையா யுயிருள தன்றெனின் வாக்கிவை
மெய்யாம் பிறசெய்கை யாதலி னாலிவை
மையா மினிநின்றன் மார்க்கமு மன்றே.
741 எத்திறத் தின்னுஞ்செய் யானவ னென்றலிற்
றத்துவஞ் சொல்லுந் தலைமக னாகிய
சித்தியு மில்லாந் திருட்ட விரோதமும்
பொய்த்தலுள் ளிட்டவும் புல்லுமற் றென்ன.
742 பெருமை யுயிர்க்குரை யேன்செய்கை பின்னும்
இருமை யுயிரென தாமிடை யொன்றுங்
கரும வுயிரு மிவற்றினி னன்றே
யருமை யுடைச்செய்கை யாக்கமு மென்றான்
743 செய்யு முயிர்களுஞ் செய்யா வுயிர்கனும்
மெய்யி னுளவெனின் மேற்கோ ளழிதலும்
பொய்யும் பொதியறை மையுமற் றல்லவு
மெய்து மிதற்கினி யென்செய்தி யென்றாள்.
744 சோம்பன் குணமிலன் றோன்றா வொளிப்பின
னோம்பற் கருமையி னுண்ணுமாற் றானுயி
னாம்பின்னைச் செய்ததெ னன்கவ னின்றியும்
போம்பொழு தேலவ னாற்பொரு ளென்னோ.
745 ஆண்டரு வாய்த்தொழில் யாதுமில் லாயின்
வேண்டின்மெய் யாகி விகிர்தி விகற்பொடு
தீண்டலு மொட்டலுந் தோ¢னி லாதவன்
காண்டற்குந் துத்தற்குங் காரண மென்னோ.
746 முத்தாத் துமனை முனிந்தோ வதுவன்றிப்
புத்தாத்து மாக்கட் புரிந்தோ விரிந்தெங்குஞ் 
சித்தாத் துமனாய்த் திரிவின்றி நின்ற
சுத்தாத் துமைச் சுழற்றுவ தென்றாள்.
747 பரமாத் துமனைப் பளிங்கடை போல
வருமாத்து மாக்களின் மன்னும் விகாரம்
தருமாத் திரையன்றித் தக்கதொன் றாக
வொருமாத் துமனை யுரைத்திடு கென்றாள்.
748 செல்லு மெனினுஞ் சிதையுஞ் செல்லானென்று
சொல்லு மெனினுமுன் சொல்லிய தாமெய்தும்
பல்லுநுன் னாவும் பதையா துரையன்றி
யெல்லுந் துணையு மிருவினை யென்றே.
749 யானென தென்னுஞ் செருக்கினை யீன்பது
மானெனப் பட்டது மன்னுமோர் சேதனை
தானினை யாக்குத றக்கின்ற சேதனை
மேனினைத் தானுரைத் தானல்ல னென்றாள்
750 மான்றான் பகுதி வழித்தோ வழித்தன்றித்
தான்றான் பிறிதோர் பொருளோ யிரண்டொடு
மூன்றாவ தொன்றினி யின்றா விருந்தவிச்
சான்றா ரறியவுஞ் சாற்றினி யென்றாள்.
751 முதற்பொரு ளேயாங் குணமது வாகின்
அதற்பிறி தென்னி னதுமனனு முண்டா
லிதற்கினி நீசொலற் பாலதென் னென்றாள்
சுதப்பொருண் மேனன்றுஞ் சொல்லுதல் வல்லாள்.
752 அருவாய காரண மாயவ் வியத்த
முருவா மறுதலை யொப்பிக்கு மென்பாய்
மருவாத சொல்லினை மாதிரந் தானே
பருவாய்ப் பதக படைத்திடு மென்னாய்.
753 பகைக்குண மாகிய பகுதி விகுதி
மிகைக்குணந் தோன்றுநின் மேற்கோ ளழித்துத்
தொகைக்கணம் யாவையுஞ் சூனிய மாமா
நகைக்குண மல்லது நம்பலை யென்றாள்.
754 புத்தேந் திரியமுங் கம்மேந் திரியமும்
பத்தேந் திரியத்தோ டொன்றாய்ப் படைத்தனை
பித்தேந் திரியமும் பேயேந் திரியமும்
குத்தேந் திரியமுங் கொண்டிலை யன்றே.
755 தந்திர மாவன தாமிடைத் தோன்றுவ
வந்தர வாத்துவ னைந்தென வேண்டினை
சிந்தனை யுள்ளிட்டுச் சீவன் குணமெனி
னிந்திரன் றானு மிணைநுனக் காமோ.
756 கைகளுங் காலு மிருசா ரிடக்கரு
மெய்திய வாக்குமற்றிந்திய மாமெனிற்
செய்யும் புலனு மறியு மறிவுமற்
றெய்த வுணர்ந்திங் கெடுத்துரை யென்றாள்.
757 காட்டிய வாறுங் கருமத்தி னாமெனி
னூட்டு முலையு முதடும் புருவமு
மாட்டுங் கவுளு மறமெல்லும் பற்களும்
கூட்டி மிடறுங் கொளக்குற்ற மென்னோ.
758 ஐந்துதன் மாத்திரை தாமணுவாற் றொடர்
கந்தங்க ணாதியிற் காம்புல னேயவை
வந்துபெருகி வரிசையி னான்மிகும்
புந்தியி னால்வகைப் பூதமு மென்றாள்.
759 ஒன்றாய்ப் பரந்திவ் வுலகு மலோகமுஞ் 
சென்றாய்க் கிடந்த தசேதனை தானென்று
மன்றா யருவா யதுவவ்வா காயமு
மென்றா ளெழினெடுங் கண்ணிணை நல்லாள்.
760 தானரு வாய பொருளது வாமொலி
மேன்மரு வாதுரு வாதலி னான்மெய்ம்மை
நூன்மரு வாதுசொன் னாயிது வென்றனள்
மான்மரு வாவந்த நோக்கு மரியாள்.
761 பகுதியின் மானில்லை யி·தினு ம·தில்லை
தொகுதிசெய் பல்குணந் தோற்றமு மில்லா
மிகுதிசெய் பூதத்து மெய்ம்மை பெறாமற்
றகுதியின் றத்தநின் றத்துவ மென்ன.
762 குருடனும் பங்குவுங் கூட்டத்திற் கூட்டிப்
பொருடம் தாக்கமும் போத்தந் துரைப்பிற்
றெருட லிலையவர் செய்கையிற் செய்கை
யிருடன்னை யின்றி யிவையெய்து மென்றாள்.
763 எவ்வகை யின்னும் விகார மிலாப்பொருட்
கிவ்வகை தம்மை யெடுத்துரை யென்செயும்
மெய்வகை யாலொப்பின் மேற்கோண் முதலிய
வவ்வகை யெல்லா மழிவுள தாமே.
764 கூடியு மாகாக் குணத்தின் நீயவட்
பாடி யுரைத்த வுயிரும் பகுதியும்
பேடிகள் சாரினும் பிள்ளை பெறாமையை
நாடியுங் காணென்று நன்னுத னக்காள்.
765 இல்லுளி யின்றிமற் றெங்கு மிவைமுன்னும்
புல்லின வேயாற் புணர்ச்சி புதிதெனச்
சொல்லின தென்செயத் தோற்றப் படுபொருள்
பல்லன தாமவை பண்டு முளவே.
766 ஆட லழித்தல் படைத்த லடங்குதல்
வீடுபெற் றாங்கண் விளங்க நிலைமையுங்
கூடிய வைந்து குணத்தின னாதலி
னாடிய குற்றங்க ணண்ணல வென்ன.
767 ஓதிய வெல்லா மொருவனி னங்கொரு
நீதி வகையா னெறிமைப் படுதலும்
வாதுசெய் வார்கள் பிறராய் வருவது
மூதிய மில்லை யொழியென் றுரைத்தாள்.
768 யானை குதிரை முதலாப் படைகுடி
யேனைய தாங்களு மெல்லா மவனெனிற்
றானென்று மாள்வது தன்னை யெனினங்கள்
கோனிவ னாமெனக் கூறினார் யாரோ.
769 என்னை யொழித்தினி யெல்லா மவனெனச்
சொன்ன முறைமைய னாகு மவனெனிற்
றன்னை யொழித்துத் தபுத்துடன் றின்றிடிற்
பின்னை யவனையோர் பித்தனென் னாமோ
770 தன்கையிற் றன்கண்ணைத் தானே பொதக்குத்தி
யென்செயக் குத்தினை யென்பார் பிறரில்லை
தன்கையிற் றன்கண்ணைத் தான்பொதக் குத்துவ
தென்செய வோவிதன் காரணஞ் சொல்லாய்.
771 தன்னைப் படைப்பின்முன் றானின்மை யாலில்லை
பின்னைப் படைக்கிற் படைக்கப் படுவதின்
முன்னைப் படைப்பென் முடிவில்லை மூடனே
நுன்னைப் படைத்தவர் யாரினி நோக்காய்.
772 கொன்றுகொன் றிட்டுத் தவஞ்செய்யி னத்தவம்
பொன்றுமற்றாதலி ன·தும் பொருத்தமின்
றின்றிதின் றிட்டுப் படைப்பிற் றெருட்சிமற்
றென்று மிலன்பெரி தேழையு மாமே
773 ஓர்ப்பவன் சொல்லவ னூனவன் றீனவன்
றீர்ப்பவ னோயவன் சீறு மவனுயிர்
நீப்பவன் சாபவ னீப்பவ னேற்பவன்
பேர்ப்பவ னாயும் பெறுகின்ற தென்னோ.
774 நாயாய்க் கடிக்கு நரியாய்ப் பலகொல்லும்
பேயாய்ப் புடைத்துண்ணும் பெற்றமு மாய்க்குத்து
மீயாய் நலியு மெறும்பாய்த் தெறுமெங்கும்
தீயா னொருவனின் றேவனு மென்றாள்.
775 வீடு தலைபெற வெந்துநெஞ் சாண்டிடத்
தாடி தவஞ்செய்த தன்கா லழித்திடப்
பாடிய கையிற் படைக்கு மிவனெனின்
மூடர்கட் டேற்ற முடிவுமுண் டாமோ.
776 நித்திய மாய பொருணின வாதலின்
வித்தினு ளுண்டென வேண்டுதி நீள்பனை
யெத்துணை யோவது வென்னினு நுன்கைக்கு
மித்துணை யுண்டென்ப தென்னைகொ லேழாய்.
777 இப்பொழு தில்லை யெதிரதற் குண்டெனி
னப்பொழு துண்மையு மின்மையு மாக்கி
னெப்பொரு டாங்களு மின்னன வேயெனச்
செப்பினள் தத்துவஞ் சேயரிக் கண்ணாள்.
778 உருவோ டருவமா காயமு மூன்று
மிருபதின் மேலுமைந் தாக விசைத்தனை
யருவோ டலோக மசேதன மூன்றிற்
செருவோ டுரிமையிற் சேர்பவு மன்றே
779 ஒன்றொன்றி னொன்றி யுலகுள் வழியெங்குஞ்
சென்றவ னுண்மை பகுதி யிதுமன்னு
மென்றனை யெண்முறை யறிமற் றீண்டுபு
நன்றன வீறா நிலமுத னான்கே.
780 பத்தனை யாய்நின் பரமாத் துமனையுஞ்
சித்தனை யாகக் கருதியல் சீவன்கட்
கத்தன்மை ஞானமு மென்னா யவனுக்குத்
துத்தலுங் காண்டலுஞ் சொல்லினை யன்றோ.
781 வண்டார் குழற்பெயர் மாணிழை யிற்றெனக்
கொண்டே னெனவவன் கூறினன் கூறலும்
பண்டே லறியெனப்பராசர நீயினிக்
கண்டா யெனச் சொல்லிக் காட்சி கொடுத்தாள்.
782 ஐந்து மிருபது மாகிய சொற்பொரு
டந்திவை யல்லது தத்துவ மில்லென்ற
சிந்தை யொழித்துச் சினவரன் சேவடி
வந்தனை யேசெய்து வாழிநீ யென்றாள்.
வைசேடிக வாதம்
783 ஆட்டினா ளவனையு மாக்கிச் செல்பவள்
வீட்டினார் நெறியென விரித்த மேலையோர்
காட்டினார் பலருளுங் கணாத னேயெனு
மீட்டினா னுலோகன திடத்தை யெய்தினாள்.
784 வனப்புடை மாதரைக் கண்டு மாதவன்
சினப்புடைக் கருத்தின ளென்னச் சிந்தித்தே
நினக்கினி நெறிவயி னின்ற மெய்ம்மையை
மனக்கொளக் கிளக்குவேன் மன்னுங் கேளென.
785 நெறியெனப் படுவது நின்ற மெய்ம்மையங்
கறிதலுக் கரியன வாறு சொற்பொருள்
செறியயான் சொலிற் றிரப்பியங் குணந்தொழில்
பொறியினாய் பொதுசிறப் புடன் புணர்ப்பதே.
786 பூதமைந் தொடுதிசை மனம்பொ ழுதுயி
ரோதினப் பொருள்கடா மொன்ப தாமவை
நீதியிற் குணமவற் றியல்பு செய்கையும்
போதரும் பொருட்புடை பெயர்ச்சி யாகுமே.
787 பெரியதும் பின்னது மாய தப்பொது
உரிதினிற் பொருள்களைச் செலுத்து மொற்றுமை
தெரிவுற வருவது சிறப்ப தாங்குணக்
கிரியைக ளிதற்கெனக் கிளத்தல் கூட்டமே.
788 ஆறின் முதன்மூன் றத்தி மற்றவற்
றீறின் மும்மையு மின்மையை யெய்தின
கூறின பொருள்களுங் குணனுஞ் செய்கையும்
வேறென விரித்தனன் விசேட வாதியே.
789 தத்துவ மிவையெனத் தலையுந் தூக்கினாட்
கொத்ததன் றோவென வுரைநல் லாயினி
யித்தவ மிப்பொரு டேறி யான்செயிற்
பொய்த்தவ மாதலிற் போவ னென்னவே.
790 மெய்ந்நெறி யிதுவென விரிப்பக் கேட்டிருந்
திந்நெறி யமைதியின் றென்னுஞ் சொல்லினாய்
பொய்ந்நெறி யாதலைத் தேற்றிப் போகெனக்
கைந்நிறுத் தாளது காட்டக் கேளென.
791 நிலமுதற் பூதமாய் நின்ற நான்மையுங் 
குலமுதன் மூர்த்தியாய்க் கூறி னொன்றவை
யலமுதற் பொருள்களாய்ப் பன்னி னாயவை
வலமுறை யிடமுறை வருதல் காட்டுகோ.
792 உரியதோர் நீரணைந் துப்ப தாகுநெய்
யெரியெழு முளர்ச்சியா லிரைக்குங் காற்றதாம்
பெரியதோ ருருமுநீர்ப் பிண்டம் வந்துநீ¡;
வரிசையிற் படலமாய் வந்த வல்லவோ.
793 ஒலியதன் குணமென வுரைத்தி யாதலால்
வலியுடை நிலையில மற்றெப் பூதமும்
ஒலியொடு முதறம்முட் புல்ல லின்மையாற்
கலிசெய லொழிகநின் காய மென்றனள்.
794 சுட்டின திசைத்திறஞ் சொல்லிற் சூரியன்
பட்டது மெழுந்ததும் பற்றி நான்குமாய்
யெட்டெனப் பலவென வின்ன தன்மையாற்
கட்டினர் வழங்கினுங் காய மெய்துமே.
795 மண்டிலம் பலரையு நிறுவி மத்திமங்
கொண்டுநின் றான்றிசை கூறு மின்னென
வெண்டிசை யவன்வயிற் பிறக்கு மென்பவேற்
கண்டில நின்பொருள் காட்ட வல்லையோ.
796 அத்திசை யவனுமா யல்ல னும்மென
வெத்திசை யவர்களு மிசைப்பி னேகநீ
பத்திசெய் தினியென்னைப் பரமன் பாதமே
சித்தியு முடிவெனச் சேர்ந்து வாழ்தியே.
797 மன்னுமம் மனமெனப் படுவ தாவதே
யின்னுயி ருருவினோ டியைந்த வொற்றுமை
யின்னுமக் காலமு மிருமைத் தாகலி
னின்னுடைப் பொழுதவ ணிற்ற லில்லையே.
798 குணங்களுந் தொழில்களுங் கூறி வேறெனிற்
பிணந்தனைச் சீவனாய்ப் பெற்ற தென்னையோ
வுணர்ந்தில னுரையுமொன் றிலனெனி னுறுதிநாம்
புணர்ந்தில மவன்வயிற் போந்த தில்லையே.
799 எப்பொரு ளெக்குணத் தானு மில்லையே
லப்பொரு ளக்குணத் தயல தாதலாற்
செப்பிலக் குளிரினாற் றீய துண்மைபோற்
றுப்பெனப் பொருள்களுந் தோற்ற மில்லையே.
800 குணத்தொடு குணிகளைக் கூறி வேறெனப்
புணர்ப்பதோர் பொருளினை வேண்டிற் பொய்யெனிற்
குணத்தொடு குணிகளுங் கூட்ட மின்மையா
லுணர்த்துதற் கரிதவை யுளவு மல்லவே.
801 ஒன்பதுந் தத்தும துண்மை யாற்பல
வென்பது மெனைத்தென வெண்ணப் பட்டதும்
வன்பிதன் குணமிது வென்னப் பெற்றது
மன்பதற் குடைமையி னறியப் பட்டதே.
802 அதனது குணமதற் கயல தாதலா
லிதனது குணமென விழுக்கிற் றென்னையோ
உதனமு முணர்விலை யொன்ற தென்றக்கால்
விதனமும் படாயது மெய்யு மாகுமே.
803 கெடக்கெடும் பொருளெனிற் கேடு முண்டெனப்
படப்பெறு மதற்குநி பரிவ தென்னையோ
வடக்குந்தன் றோற்றமு மொட்டி மும்மைய
மடக்கிலு மதுபெரி தழகி தாகுமே.
804 குணங்கடாங் குணியெனுங் கூற்று முண்மையிற்
பிணங்கலாய்ப் பொருள்வயிற் பேறு முள்ளதே
யிணங்கலா யிருமைய தின்மை யுண்மையும்
வணங்கலாம் வகையதோர் மாட்சி மிக்கதே.
805 பண்பினாற் பொருள்களுக் காய பல்பயஞ்
செண்பினா னறிவினான் செறிவி னானென
மண்பொனாற் குணநிலைக் காய மாட்சியா
நண்பினா னல்லது நடத்த லில்லையே.
806 விலைபெறு நன்மையால் வெறுப்ப தீமையால்
கொலைபெறுங் களவினாற் குணத்தி னக்குண
நிலைபெறும் பொருளினா னின்ற வொற்றுமை
யலைபெறும் வேறெனி னாவ தில்லையே.
807 நல்வினைப் படுதலுந் தீவினைப் படுதலும்
பல்வினைப் பாகினாற் பயங்க ளெய்தலு
மில்வினைக் குணங்கடா மென்றும் வேறெனிற்
சொல்லில சுழற்சியும் வீடுந் தோற்றமே.
808 ஆட்டுடை யாடன வாட றாங்களு
மோட்டுடைக் குதிரையு மோட்டு மென்றின்ன
கூட்டிய வப்பொருட் கொடைய வாதலான்
மீட்டவை யொன்றென வேண்டல் வேண்டுமே.
809 கூத்த ராடலுங் குதிரை யோடலு
மோத்துரை யுள்பட வொழிந்த யாவையு
நீத்தன வேயல்ல நிலையு முண்மையிற்
போத்தரல் வேண்டினப் பொழுதி னாகுமே.
810 பிணங்கல வாய்த்தம்முட் பிறக ளாகிய
குணங்களுந் தொழில்களுங் குழுமிக கெட்டன
புணர்ந்துடன் பொருள்வயிற் போந்த வாறுநீ
யுணர்ந்திலை யதுவுநின் னுடைய தேபிற.
811 பாதுவெலாப் பொருளொடும் பொருந்தி நின்றதே
லதுவெலாப் பொருள்களை யாக்கு மொற்றுமை
யிதுவலா லவைதம்மு ளியைத லில்லையேல்
செதுவலாம் பிறவது சென்ற தென்றலே.
812 அன்றியும் பொதுவது வந்தமில் பொருட்
சென்றதே யென்றலாற் சிதர்ந்து பன்மையாய்க்
குன்றியுங் கூடியு நின்றுங் கொள்பய
மின்றியும் போதலா லென்னை யாயதோ.
813 பொதுவெனப் படுவதோர் போலி யாதலாற்
பொதுவெனப் படுவன போன்ற தாங்களே
யதுவென மீட்டிருந் தாறென் றெண்ணுவா
யிதுவென வென்னையிங் கிதனோ டேழெனாய்.
814 சிறப்பெனப் படுவது தெரியி னப்பொரு
ளறப்பெற நின்றவக் குணம தாதலின்
இறப்பவு மிதுதன தின்மை யேயினாய்
புறப்படுத் திடுவனுன் பொருள ளெண்ணலே.
815 கூட்டினா லல்லது கூட்ட மில்லையேற்
கூட்டுவான் செல்வதுங் கூட்ட மில்லையே
பாட்டினாற் பலவுமாம் பயமி லாதன
மூட்டினா லுரைத்தியோ முனிவு போக்கிதோ.
816 கொக்கொடக் கருமையைக் கூட்டு வித்தலுஞ்
சுக்கொடத் துவர்ப்பினைத் துன்னு வித்தலுஞ்
சிக்கென வேற்றுமை தீர்ப்பி நீயென
நக்கன ளளியனோ நயவ னென்னவே.
817 என்றுமப் பொருள்களு மியல்புந் தங்களோ
டொன்றென வருதலா லொன்று மாகுமே
யென்றலி லிருமையுந் தெரியி னின்மையா
லின்றினிக் கூட்டுவ தில்லை யில்லதே.
818 ஒன்றுநற் பொருள்கடாங் குணங்க டாம்பல
வென்றுநீ யேகம் வேறென்ப தென்னெனப்
பொன்றுமக் குணமெனிற் பொருட்கு மாமென
நன்றினிக் குணமுண்மை நாட்ட மாமென.
819 குணிக்கணா னோக்கினாற் குணங்க ளில்குணத்
தணிக்கணா னோக்கினா லதுவு மன்னதே
பிணிக்கலாம் பிரிக்கலாம் பெற்ற நான்மையிற்
றுணிக்கலாந் துருநெறி துன்னு நன்மையே.
820 இல்லையக் குணங்குணிக் குண்மை தானெனச்
சொல்லினக் குணிகுணத் தொன்று மாதலா
லல்லதக் குணங்களு மவைக ளாமென
நல்லதித் துணிவென நயத்தி லெய்தினான்.
821 பொருளொடக் குணந்தொழிற் குண்மை யொன்றெனத்
தெருள்வது மும்மையிற் றெரிய வைப்பது
மருளுடை யறநெறி யண்ணல் சேவடி
யிருள்கெட நினைத்தலு மினையை யாகென.
822 ஓம்படுத் துலோகனை யொழியச் சொல்லியான்
காம்புடைக் கடநெறி கடப்ப னென்னவே
பேம்படுப் பவரொடும் பிரிவின் னாமையைத்
தேம்படு கிளவிநீ சிந்தி யென்னவே.
823 ஒக்குமவ் வுரையென வுள்ள தேயென
நக்கன ளாகிய நாதன் சேதியஞ்
சிக்கென வேத்துதல் சிறந்த தென்னவே
தக்கதென் றவன் சொலத் தானு நீங்கினாள்.
வேத வாதம்
824 காதம் பலவும் கடந்தபின்காகந்திக் கடிநகருள்
வேதமு மங்கமும் விச்சைகணிலைமையும் வேண்டுநர்கட்
கோதவுங் கேட்பவு முரைத்தலினுலகினு ளறியப்பட்டான்
பூதிக னெனப்படு மந்தணனோத்திடம் புக்கனளே.
825 என்னை யிங்குநும் பொருளெனவினவலு மிவ்விருந்த
வன்னைதன் வரவிதே லாதியிலருமறை யதுமுதலாப்
பின்னைவந் தனகளு மிவையெனப்பையவே யெர்த்துரைத்தான்
முன்னமங் கிருந்தவோர் முதுமகனவைதன் முறைமையினே.
826 நாத்திக மல்லது சொல்லலையாயின்மு னான்பயந்த
சாத்திர மாவது வேதமன்றோவது தான்சயம்பு
சூத்திரி நீயது வல்லையலாமையிற் சொல்லுகிறாய்
போத்தந்தி யோவதன் றீமையென்றான்பொங்கிப் பூதிகனே.
827 பூதிகன் றானது சொல்லலும் யானது வல்லனெல்லாம்
சாதிகண் டாயெனத் தான்றள ராது சாற்றுகென்றாட்
காதியென் றானுமோ ரந்தமென்றானுமுண் டேலதற்கு
நீதியி னாலுரை நீயினி யானது நேர்வ னென்றான்.
828 செய்கையும் புதுமையு முடைமையிற்றிருட்டத்தின் மறுதலையிற்
பொய்யொடும் பொருளொடுங் குவகொடுஞ்சாலவும் பொருந்துதலின்
மையறு மயக்கமு மாற்றொடுகொலைமன்னு மருவுதலின்
ஐயமி றீக்கதிச் செலுத்துவததுவென்னை யாவதென்றாள்.
829 யாரது செய்தவ ரறியிலிங்குரையெனி லங்கொருவ
னூரது நடுவணொ ருஐறயுளில்மலம்பெய்திட் டொளித்தொழியிற்
போ¢னு முருவினும் பெறலிலனாதலின் றாக்குறித்துத்
தோ¢னு மினியது செய்தவரில்லெனச் செப்புவவே.
830 தோற்றமு நாற்றமுஞ் சுவையுடனூறிவற் றாற்றொடங்கி
யாற்றவு மாயிரு வேதம்வல்லார்கள· தறிந்துரைப்ப
மேற்குலத் தாரோ டிழிந்தவரென்பது மெய்ம்மைபெறா
நூற்றிறஞ் செய்தவ ரறிகுவர்நுழைந்தறி வுடையவரே.
831 முயற்சியி னிசைத்தலி னெழுத்தினிற் பதத்தினின் முடிவதனால்
செயற்பட லுடையத னியற்கையிற்செய்தவர் பெயர்பெறலா
லியற்கைய தன்றுநின் வேதமென்றேதுவி னெடுத்துரைத்தாள்
புயற்றிற லிகலிய கூந்தலின்பெயருடைப் புலமையினாள்.
832 கதியவர் தம்பெய ரின்னவைசுட்டின காட்டலினு
முதியவர் நாள்களொ டொப்பிலவிப்பொழு தொத்தலினும்
விதியது வாதலின் வேதத்தையாஞ்சொல்லுங் கீதத்தைப் போற்
புதியது வேயெனச் சொல்லுதுநாமது பொருந்து மென்றாள்.
833 கொல்வது தீதெனப் பொருள்வழிவேள்வியிற் கொலப்படுவ
வெல்லையொன் றிலதென்ப விணைவிழைச்சொழிகென்ப வம்முகத்தாற்
செல்கதி யுளதென்ப தீர்த்துகநெறியென்றுந் தீயவென்று
பல்லவர் துணிவுமெம் வேதத்தினுளவெனப் பயின்றுரைப்ப.
834 சாதிக்கட் பயவா தவப்பயந்தருமெனத் தந்துரைப்ப
வாதிக்க ணான்வழி நால்வரதமைதியை யமர்ந்துரைப்ப
சூதித்த தோற்றமும் பிழைப்பெனச்சூத்திரப் பிறவிகொள்ளார்
வாதித்த வாறென்று தெருண்டவர்க்கிவையிவை மயாமயக்கே.
835 மறுதலை தத்தமு ளாக்கிமயக்கமுஞ் செய்தமையாற்
பெறுதலை யென்னைகொ றத்துவந்தனையன்று பறுமுண்டே
யுறுதியுஞ் சால்பு முடையனயாவையு முண்மையினாற்
செறுதலை யேவில்லை சீர்த்தனசெய்விக்குஞ் சிட்டிதுவே.
836 வசுக்களொ டுருத்திரர் பிதிரரோடிவர்முத லாப்பலர்க்கும்
பசுக்களோ டெருமைகள் குதிரைகள்புலியொடு நாய்முதலா
விசுக்கிழிந் தனபல கொலைகளுமிரங்கலிர் கொன்றவரை
யசிப்பவர் போன்றனி ராயினுமருவினை யாநுமக்கே.
837 தேவரும் பிதிரரும் நுதலிய கொலைகளிற் றீவினைதா
மேவர வல்லன வேண்டுவல் யானென வேண்டுதியேல்
யாவரையு நுதலியு மவரவர் செய்தன வவரவர்க்கே
யாவரி னடையுமவ் வருவினை நுமக்கறி வரியதென்றாள்.
838 ஊட்டுதும் யாமென் றுமர்களைநுதலியோர் சாலைவைத் தால்
வீட்டினங் கிடலின்றி வினைநிலைநுமக்கறி வரியதுபோல்
கூட்டிமற் றவர்களை நுதலியகொலைவினை தங்களையுங்
காட்டுகில் லாரவர் தாமவையறிவதோர் கணக்கிலரே.
839 சிறந்தவர் தங்களுக் கெய்துகசென்றென்னுஞ் சிந்தையரா
யறம்பல செய்தவர்க் கல்லதங்கவர்களுக் காகுமென்றாற்
றுறந்தவர் வீடுபெற்றார்களைநுதலிய தொடர்வினையும்
பிறங்கியிப் பிறவியிற் போக்குமற்றிவையென்ன பேதைமையே.
840 நண்பரை நுதலியும் பகைவரைநுதலியு மமிர்தொடுநஞ்
சுண்பவர்க் கல்லதற் கவர்களுக்காமென வுரைக்குநர்யார்
பண்பிலி தேவரை றுதலியகொலையினிற் பல்வினைதா
னுண்பல வகையினி னடைந்தவைவிளையுங்க ணுமக்குமென்றாள்.
841 கொன்றவர்க் கல்லது நுதலப்பட் டார்களைக் கூடலவேற்
றின்றவர்க கியாவையுந் தீவினைசேரல தேவர்க்குப்போ
லென்றுரைப் பாய்க்கெய்து மேழைமையுண்குவ வேலிமையார்க்
கொன்றுவி யேனல னோவினையூன்றின்பவர்க் கொப்பவென்றாள்.
842 ஈகளு நாய்களுங் கொன்றவரீவகண் டின்புறலிற்
றீயவை யேசெய்யுந் தேவரத்தீவினை தீர்க்கிற்பவோ
நோய்களும் பேய்களு மொழிக்குவமெனினவை நுங்களுக்கு
மாய்விடி னுணரின· தாம்வினையகற்றுதற் கரியதென்றாள்.
843 நம்முறு துன்பங்க ணாமொழிக்கல்லலம் பிறருறுப
வெம்முறை யாயினும் போக்குதற்கரியவிங் கிவர்களைப்போற்
றம்முறு துன்பமும் தாமொழிக்கில்லலர் பிறர்களையே
லெம்முறை நோய்களுஞ் செய்குபவவரென விகழ்ந்தனளே.
844 நாங்கொன்று கொடுக்குமவ் விலங்கினைநலிவதோர் பசியினரேற்
றாங்கொன்று தின்குவ ராய்விடினவர்களைத் தவிர்க்குநர்யார்
தீங்கொன்று முரையன்மின் தேவர்தம்மூணினைச் சேணின்றுதாம்
வாங்குத லல்லது முடையொடுசோறுண்ணும் வயிற்றினரே.
845 - 845 ஆஞ் செய்யுளிலிருந்து 851 ஆஞ் செய்யுள் முடியவுள்ள எட்டுச் செய்யுளும் அவற்றின் உரைகளும் சுவடியில் இல்லை.
846 - 845 ஆஞ் செய்யுளிலிருந்து 851 ஆஞ் செய்யுள் முடியவுள்ள எட்டுச் செய்யுளும் அவற்றின் உரைகளும் சுவடியில் இல்லை.
847 - 845 ஆஞ் செய்யுளிலிருந்து 851 ஆஞ் செய்யுள் முடியவுள்ள எட்டுச் செய்யுளும் அவற்றின் உரைகளும் சுவடியில் இல்லை.
848 - 845 ஆஞ் செய்யுளிலிருந்து 851 ஆஞ் செய்யுள் முடியவுள்ள எட்டுச் செய்யுளும் அவற்றின் உரைகளும் சுவடியில் இல்லை.
849 - 845 ஆஞ் செய்யுளிலிருந்து 851 ஆஞ் செய்யுள் முடியவுள்ள எட்டுச் செய்யுளும் அவற்றின் உரைகளும் சுவடியில் இல்லை.
850 - 845 ஆஞ் செய்யுளிலிருந்து 851 ஆஞ் செய்யுள் முடியவுள்ள எட்டுச் செய்யுளும் அவற்றின் உரைகளும் சுவடியில் இல்லை.
851 - 845 ஆஞ் செய்யுளிலிருந்து 851 ஆஞ் செய்யுள் முடியவுள்ள எட்டுச் செய்யுளும் அவற்றின் உரைகளும் சுவடியில் இல்லை.
852 பொய்த்துரை யாநன்மை போதுவ தேலில்லை பூதிகனே
சத்திய மேயுரை நீயெனத் தானும· தேயுரைத்தா
னெத்திசை யார்களு மேத்துதற் கேற்றன னிவனுமென்றார்
தத்துவ ரேநின்று தத்துவ ரெனப்படுந் தன்மையினார்.
853 நன்பொரு ளாவன விவையெனவவனோடு நகரத்துள்ளா
ரின்புறும் வகையினி னெடுத்தன ளுரைத்தபின் விடுக்கலுற்றாட்
கன்புபட் டவர்களு மறநெறியறிவித்த வார்வத்தினாற்
பின்புசென் றொழிதுமென் றதுசெய்துவலங்கொண்டு பெயர்ந்தனரே.
பூத வாதம்
854 வேத வாதம் வெளிறுசெய் தாளங்கோர்
பூத வாதியும் பொங்கினன் மேற்செல
வாத வாதி யிவனை யடக்கினா
லேத வூதிய மில்லென வெண்ணித்தான்.
855 நில்லப் பாவினி நீகண்ட தத்துவஞ் 
சொல்லற் பாலையிங் கென்னலுஞ் சொல்லுவான்
மல்லற் றானை மதனசித் தன்னெனுங்
கல்லொத் தோங்கிய தோட்களி யானையான்.
856 அணிகொ ளாரத் தரசவை கேட்கெனப்
பிணிகொள் மூஞ்சிப் பிசாசகன் சொல்லுவான்
குணிகு ணம்மெனுங் கூற்றில னாலதென்
றுணிவைம் பூதங்க ளேதொழில் சொல்லுவேன்.
857 தண்ணென் றீநில நீர்வளி காயத்தாற்
கண்ணு மூக்கொடு நாமெய் செவிகளாய்
வண்ண நாற்றஞ் சுவையினொ டூறொலி
யெண்ணுங் காலை யியைந்துழி யெய்துமே.
858 ஐந்துங் கூடிய றிவின்ப மாதியாய்
வந்து தோன்றி மதுமயக் காற்றலி
னந்தி நாளுங் குடஞ்சுடர் நாட்டம்போற்
சிந்தி னாலவை சென்றினஞ் சேருமே.
859 உலகெ லாமவை யேயுயி ருண்டெனச்
சொலவ லாரன சொற்றெளிந் தேநின்று
பலக லாங்களுஞ் செய்வ பயனிலார்
புலவ ராவதன் றோவங்குப் போந்ததே.
860 சென்ற காலத்துஞ் செல்கின்ற காலத்து
நின்ற காலத்தி லும்மிந் நிகழ்ச்சியே
யென்று மிவ்வுல கித்தன்மைத் தேயிது
வன்ற தென்றுரைப் பாரயர்ப் பார்களே.
861 இட்ட மாவ திதுவெனக் கேட்டவள்
சிட்ட ரன்றியுஞ் சென்றிருந் தார்க்கெலா
மொட்டி மீட்டு முரைத்துளந் தான்கொளீஇக்
கட்டு ரைய்யெடுத் தாள்கயற் கண்ணினாள்.
862 வினையி னீங்கி விளங்கிய ஞானத்தோர்
முனைவ னின்மையி னான்முதல னூலில்லை
யனைய மாண்பின தாகம மாதலாற்
புனைவ னின்னுரை பொய்யெனச் சொல்லியே.
863 கவைத்த கோலொடு கட்டில் கடிஞைகாத்
தவத்திற் கொத்தன தாங்கினித் தாபதம்
அவத்த மேபிற வாருயி ரில்லையேற்
சுதத்தி னாலுய்த்தல் சூதது வாகுமே.
864 பூத மல்லது பொய்பிற நூலென்று
வாதஞ் செய்து வருந்தி முடிப்பதென்
நாத னன்னெறி நல்வினை நற்பயன்
யாது மில்லை யெனின· தவத்தமே.
865 யாது மில்லை யுயிரிவை யாஞ்சொல்லும்
பூத மேயெனப் போந்திருந் தென்னொடு
வாதஞ் செய்கின்ற பூதமவ் வாதமோ
யாதைம் பூதங்க டம்முள்ளு ம·தினி.
866 அளித்த வைந்திற் கறிவின்ப மாக்குவான்
களித்தற் காற்ற லுடையன காட்டினாய்
களித்தற் காரண காரிய மூர்த்தியா
லொளித்து நின்ற வுணர்வுரு வென்றியோ.
867 உருவின் காரிய மேலுரு வென்றுண
ரருவின் காரிய மேலவா காயக்கா
மொருவன் காரிய மன்றுணர் வென்கின்றாய்
மருவுங் காரண காரிய மற்றெனோ.
868 வையு மண்ணு மயிரு மலமுமோர்
பையுள் வைக்கப் பளிங்கும் பயக்குமோ
பொய்யைம் பூதம் புணர்ந்துணர் வோடின்பம்
செய்யு மென்பது சிந்திக்கற் பாலதோ.
869 கள்ளப் பூதமுங் காமிக்கும் பூதமும்
வள்ளற் பூதமும் மல்லவு மல்லவா
லுள்ளப் பூதமொன் றாக்குவ துண்மையைக்
கொள்ளப் பூதக் குணமவை யல்லவே.
870 பொறியைந் தாலைந்து பூதத்தி னாகிய
வறிவைந் தாலைந்து மவ்வைந்திற் காகுமோ
பிறிதொன் றோபொருட் பெற்றிமற் றிற்றெனக்
குறிகொண் டாயொன்று கூறெனக் கென்னவே.
871 ஒன்றன் காரிய மொன்றென வொட்டினுஞ்
சென்றெ லாமவை சேதனை யாகுமே
யன்றெ லாமவை யாக்கமொன் றேயினி
யென்ற லானும· தின்னுயி ரெய்துமே.
872 அனைத்துப் பூதமு மேயறி வாக்கினான்
மனத்துக் கின்னுமோர் பூதத்தை மன்னுநீ
நினைத்துக் காணன்றி நேடியுங் காணையா
வெனக்கு நீசெய்வ தித்துணை யேயினி.
873 பிண்ட மாகிப் பிறந்தன யாவையும்
உண்டுங் கண்டு முணர்ந்தவுஞ் செய்தவுங்
கொண்டு மீட்டவை கூறுதல் கூறுங்கால்
கண்ட பூதத்துக் காரிய மென்றியோ.
874 பிறந்த நாள்களுட் பிள்ளையு மல்லவு 
மறிந்து தாய்முலை யோடல்ல வுண்டிக
ளறிந்த வாறென்கொ லோவைந்து பூதமுஞ்
செறிந்த நாள்களுட் செய்வன வல்லவால்.
875 புத்தி யானின்றிப் பூதத்தி னாயவேற்
பத்து மல்லவும் பன்றிக்கு நாய்கட்கு
மொத்த தன்மைய பன்மைய குட்டிகள்
வித்தி னாய வினைவிகற் பாம்பிற.
876 குறைந்து பூதங்கள் கூட்டமுண் டாமவ
ணுறைந்த பூதத் துணர்வல்ல தின்மையா
லறைந்த பூதங்க ளைந்துமங் கில்லெனின்
மறைந்த பூதத்தி லுண்மைவந் தெய்துமால்.
877 நீருங் காற்றுமல் லானில மில்லையோ
வூருஞ் சங்கினோ டூர்மச்சி மூக்சில
தோ¢ யுண்டலிற் றீயுமுண் டில்லைகண்
காரி யஞ்செவி காணலங் காயக்கென்.
878 ஒன்றொன் றாக வுணர்ச்சி முறைமையாற்
சென்று பூதங்கள் சேர்வதற் கேதுவென்
குன்றித் தத்தமுள் யாவையுங் கூடுமே
னின்ற மெய்ம்மை நினதென நேர்வல்யான்.
879 ஐந்து பூத மவற்றவற் றாலைந்து
மிந்தி யங்க ளியையு மிவையெனுஞ்
சிந்த னையொழி நீயெனச் செப்பினா
ளுய்ந்து வாழு முயிருண்மை யொட்டினாள்.
880 உணர்வு மின்பமு மோரறி வாதிக்கட்
புணரு மேயெனிற் பொய்தொகைக் கண்ணென
லுணர்வு மின்பமு முள்வழி யேயுயிர்
புணரு மென்றனள் போதன கண்ணினாள்.
881 காற்றி னாலுடம் பாமெனிற காற்றினே
தோற்றி னாலுயிர் தான்றொகை யென்செயு
மாற்றிவ் வைந்தினு மாருயி ராமெனு
மாற்ற மாயின் மனங்கொளற் பாலதே.
882 வேறு வேறைந்து பூதமு மெய்ம்மையா
லீறுந் தோற்றமு மில்லுயி ராயின
பாறி யாவையும் பாழ்த்தொழி யும்மெனக்
கூறி னாயது குற்ற முடைத்தரோ.
883 குழவிக் காலத்துக் கூறின யாவையுங்
கீழவுக் காலத்துக்கண்ணவை கேட்டலா
லிழவெக் காலு மிலானினி யார்களைத்
தொழுவிப் பானங்கோர் தோன்றலுந் தோன்றுமே.
884 துன்பந் தூய்மையுந் துட்கென வுட்கலும்
அன்பு மானமு மாயமு மாண்மையு
மின்பு மென்றிவை யாக்கிய தீதென
முன்பு நின்று முறுக்கவும் வல்லையோ.
885 கனவு மந்திரம் சிந்தனை வாழுநாள்
வினவு சோதிடங் கேட்டுரை புட்குரல்
அனகள் யாவையு மென்னைநின் பூதங்க
ளனகொ னீயிங் கறிந்தனை சொல்லென.
886 வைத்த வத்து மறுபிறப் பிற்றமர்க்
குய்த்துக் காட்டுத லேலுல கொட்டுமா
லெத்தி றத்தினு மில்லுயு ரென்றிநீ
செத்து வம்மெய்திற் சில்லைமை செய்பவால்.
887 பேயு மில்லை பிறப்பது மில்லென்பாய்
வாயுங் கிள்ளிப் புடைப்ப வருவதென்
மாயத் தாலன்றி மந்திரத் தாற்றெய்வங்
கூயக் காலறங் கோடலை யொட்டென.
888 ஒட்டி னேனென் றுரைப்ப வுணர்விலா
முட்டை காண்கென முனகை முறுக்கியே
சுட்டி னாளங்குத் தோற்றமு நோக்கென
விட்டுத் தான்றன் விகுர்வணை காட்டுவாள்.
889 கழுதுங் காணலராகிக் கலங்கியே
யழுதுஞ் சாப வகலிடத் தாரிவன்
முழுதுங் காணின் முடியு மெனமுன்னி
வழுவில் வாயும் வளைபல்லுந் தோற்றலும்.
890 கண் புதைத்துக் கவிழ்ந்தனன் வழவே
திண் பதத்திற் றெருட்டி யெடுத்திரீஇப்
பண்பு தக்கன சொல்லிப் பரியனின்
நண்ப தென்று நடுக்கமுந் தீர்த்தபின்.
891 பேய்கண் டாயதன் பெற்றி யுரையென
வாய்கண் டேனென்னை வாழ்க்கை வலியன்மின்
நோய்கொண் டேனென வஞ்ச னுனக்கவ
டாய்கண் டாயென்றுஞ் சாதலில் லையென.
892 பெற்ற பேரும் பிசாசிக னென்பதே
யற்ற மின்றி யவட்கு மகனைநீ
குற்ற மில்லறங் கொள்ளின்மற் றெம்மொடு
சுற்ற மாதலிற் சொல்லெனச் சொல்லுவான்.
893 பிறப்பும் பேயு முதலாப் பிறகளுந்
திறத்தி னீசொன்ன யாவையுந் தேறிநின்
றறத்தை யானு மமைவரக் கொண்டனென்
மறக்க லேனினி மன்னுமை யானென.
894 பேந்தரு தோற்றப் பிசாசிக னிற்றென
வேந்துமவ் வேத்தவை யாரும் வியப்பெய்தி
யாய்ந்த கேள்வியி னாளை யையா யென
மாந்தர் யாரு மதித்தன ரென்பவே.
நீலகேசி முற்றிற்று.

புத்த வாதம்
463 அணிநா டிவைதா மறல்யா றிவைதாம்பிணிநா டிவைதாம் பெருங்கா டிவைதாம்மணிமா மலைதா மெனவே வருவாள்அணியார் சுகதன் நகரெய் தினளே.
464 அறையும் கடலும் அரவக் குரலும்பறையின் னொலியும் படுகண் டிகையுஞ்சிறையின் மிகுமா லிதுசெம் படர்கள்இறைவன் னுறையு மிடமா மெனலும்.
465 மழைசேர் நகரம் மலைபோன் றனவேகழைசேர் கொடியுங் கதலிவ் வனமேவிழைதா ரவரும் விரிகோ தையரும்முழைவாழ் புலியே மயிலே மொழியின்.
466 நெடுவெண் டிரைமே னிமிருந் திமிலுங்கடுவெஞ் செலவின் னுலவுங் கலனும்படுவண் டறையும் பொழிலும் மெழிலார்மடுவுந் திடரும் மணல்வார் புறவும்
467 கயன்மீ னிரியக் கழுநீர் விரியும்வயன்மாண் புடைய வளமைத் தெனவும்முயன்மீ னெறியு முறியுங் கறியாதயன்மே யுறையா தணியிற் றெனவும்.
468 கழுகின் னினமும் கழுதின் னினமும்முழுதும் மறுவை பலமூ டினரும்கொழுதின் னிணனும் பிணனுங் குலவிஇழுதென் னெலும்பா ரிடுகா டெனவும்.
469 சாதியே மிக்க தடுமாற்ற வெந்துயரமோதியே வைத்தாரவ் வோத்தெலா மீக்கிடந்தவீதியே காணலா மென்றாளா னின்றாரும்போதியா ரீண்டைப் புலால்பழியா ரென்றலும்.
470 அங்காடிப் பண்டவூன்றின்ன வறமுரைத்தார்க்கிங்காடி வாழ்வனவுமூனாய்வந் தீண்டியவாற்கொங்காடத் தேனறையுங்கொய்ம்மருதம் பூவணிந்தபொங்காடை போர்த்தார்க்குப்பொல்லாதே யென்னீரோ.
471 விலைபடைத்தா ரூன்வேண்ட வவ்விலைதான் வேண்டிவலைபடைத்தார்க் கெம்முயிரை வைக்கின்றா மின்னகொலைபடைத்தா னோகொடிய னென்பனவே போலத்தலையெடுத்து வாய்திறப்ப தாமிவையோ காணீர்.
472 தன்றார மீந்தான் றனக்குறுதி யாவதனையொன்றானும் வேண்டான் பிறர்க்கே யுழந்தானூன்தின்றானுந் தீவினையைச் சேருமெனச் சொன்னாற்பொன்றாவாய்ப் பல்விலங்கும் பூமிமேல் வாழாவோ.
473 உரிதா வுணர்ந்தானொன் றோரா துரையான்பரிவே யிதுவுந்தன் பாலரோ டெல்லாமெரிதோய் நரகம்பா ழேற்றுவா னேயாம்பெரிதா மளியன் பெருந்தகைய னேகாண்.
474 கொடைக்கொட்டி விற்பானுங் கொள்வானு மன்றியிடைச்செட்டி னாற்பொருளை யெய்துவான் போலமுடைக்கொட்டி முத்துரைத்து மூடிக்கொண் டேகுங்குடைச்சிட்ட னாருயிர்க்கோர் கூற்றமே கண்டீர்.
475 ஆடுவார் காண்பா ரவரருகே தான்சென்றுதோடுவார்ந் தாலொப்பச் சொல்விரிப்பான் போற்பாவம்கூடுவார் கூடாதார் கொன்றார்தின் றாரென்னும்சேடனார்க் காண்டுநா மென்றுதான் சென்றாளே.
476 அணிசெய் கோழரை யரைநிழ லழகனைப் பொருந்திமணிக டாம்பல கதிர்விடு மலருடை மணைமேற்றுணிவு தோற்றினை யெனச்சிலர் துதியொடு தொழுதுபணிய யாதுமோர் பரிவிலன் படம்புதைத் திருந்தான்.
477 ஆத்த னேயெனத் தெளிந்தவ ணமர்ந்திருந் தவர்க்குச்சூத்தி ரம்மிது வினையமு மிதுவிது பிறிதாஞ்சாத்தி ரம்மிவை மூன்றென வன்றவத் தோன்றல்பாத்து ரைக்குந்தன் பதப்பொருள் பலவகைப் படவே.
478 கந்த மைந்திவை கணிகத்த வாமெனக் கரைந்துமுந்தி நாடினோ ருணரவல்ல தில்லையென் றுரைத்தும்புந்தி யாலங்கோர் புற்கல னுளனெனப் புணர்த்துமந்தி லாற்சொலாப் பாட்டினோ டியாதுமில் லெனவும்.
479 தத்து வம்மிவை தாமெனத் தமர்களுக் குரைக்கும்புத்த னார்தம்மை புயலிருங் கூந்தலி பொருந்திப்பித்தர் போற்பல பிதற்றினீர் பிதற்றிய விவைதாமெத்தி றத்தினு மிசையின்மை யிசைக்குவ னென்னெவெ
480 ஓதி னீர்சொன்ன கந்தமைந் துளவெனி னுருவேவேத னையொடு குறிசெய்கை யிலவென விரிப்பும்போதியா லங்கோர் புற்கல னுளனெனப் புணர்ப்பும்யாது மின்மையோ டவாச்சிய மறும்பிற வெனவே.
481 ஐந்தில் யான்சொன்ன பலகளு மமைவில வெனினும்கந்த முண்மைக்கட் கருத்துள தாம்பிற வதனாற்சிந்த மாயவு முளவெனத் தெளியினி யெனலும்நந்த னார்க்கற முரைத்திர்நீ ரோவென நக்காள்.
482 இட்ட நீபல வுரைத்தனை யிவற்றுளொன் றொழியநட்ட மாயினு நன்மையை நின்வயிற் றருவோய்குட்ட மேமுழு மெய்யினு மெழுந்தவன குடுமிதொட்டி யானெனி னுந்தூய னோவது மாமோ.
483 நல்ல வேயென நாட்டிய கந்தமிவ் வைந்துமில்ல வேயெனத் தெருட்டுவ னெடுத்துரை யெனத்தான்சொல்ல வேதுவ ராடைகண் மூடிய சேடன்மெல்ல வேயிவை கேளென விரித்தவ னுரைக்கும்.
484 உருவே திரிவே தனையா றுணர்வும்மருவா தனமாண் குறியத் துணைசெய்இருவே றவைசெய் கையிரு பதுமாந்திருவே யிவையெம் பொருடே ரெனவும்.
485 முறைசெப் பியவைந் தினுண்முன் னையுருவரையிற் பலவட் டகமுள் ளுறுத்தவிறைபட் டனவெட் டெனவொட் டினகேணறையிற் பொலிகோ தைநறுந் நுதலே.
486 நிலநீ ரெரிகாற் றோடுரு விரதந்நலமா கியநாற் றமொடூ றிவைதாமிலவே யவையெட் டினும்விட் டதிறஞ்சொலவா முடன்கேட் டொடுதோற் றமுமாம்.
487 வலிதா நிலமை யதுநீர் வெய்துதீக்கலியே தருகாற் றியக்கம் கருமப்பொலிவேற் பொறையயர்த் தல்புலர்த் துளர்த்தன்மலிபூ தங்கணான் கின்மாண் பின்னவையே.
488 இனிவே தனையா வனவின் படுமொடுதுனிவே தருதுன் பமுமா மிடையுன் நனிதா நலதீ வினையன் மையினாம்பனிவே யிணைபன் னியதோண் மடவாய்.
489 அறிவா வனதா மினியா வெனினைம்பொறியோ டுமனம் மிவைபுல் லினவேற்குறிதா மிவையா றினுங்கூறுவதென்னெறியா மிவைநீ லநிகர்த் தகணாய்.
490 குயலா குயலம் மெனக்கூ றும்வினைப்பயனாற் பலபா கெனப்பட் டவைதாமயலா மனமே வசிகா யத்தினாமயலா ரிதாவை மினியா ரறிவார்.
491 கடனா கியகந் தமிவைந் துகளும்உடனே யவைதோன் றியொரு கணத்துட்கெடுமே யவைகேட் டினும்வாட் கணல்லாய்சுடர்மே யசுடர்ந் நுதிபோன் மெனவும்.
492 கவையொப் பனவை விரலைந்து களும்இவையிப் படிக்கைப் படியென் றதுபோலவையப் படிக்கந் தங்களைந் துகளும்நவையைப் படுநல் லுயிரா மெனவும்.
493 அவைதா நிலையா துயரா மசுவம்நவையா ருயிர்நாட் டிலங்காட் டமிலையிவைநான் மையென்வாய் மையிவ்வா றுணர்வாரெவையே செய்துமெய் துபவீ டுமென்றான்.
494 பல்லியல் பாகிப் பரந்தவைங் கந்தமுங் கந்தங்கடாம்புல்லிய வொற்றுமை யிற்குறி யாகிய பொய்யுயிருஞ்சொல்லிய கேட்டவள் வேட்டக் குரம்பை சுடுபவர்போலல்லியங் கோதைநின் காட்சி யழித்திடு வேனெனத்தான்.
495 பிண்டம் பிரிவில வேயெனச்சொல்லுத லாலவற்றுக்குண்டங் கொருகுணி யாங்கவை தாங்குண மாகுமன்றேல்விண்டங் கவையவை வேறுளதாதலும் வேண்டுமன்றோபண்டங்கு நீசொன்ன முட்டியிற்பஞ்சாங் குலிகளும்போல்.
496 பூதன்கும் புகுந்தே தெருல்லலுற் றயவற்றுக்கேதமி றன்மை கரும மிரண்டா வியைந்தவைபேதமு மாமென்ற பெற்றியி னாற்பொரு ளிற்றென்றலாற்சாத மாமுயிர் தன்மையிற் றேற்ற தவறெவனோ
497 நின்சொல்லப் பட்ட வலிப்புந் தரிப்பு நிலத்தினவேலென்சொல்லப் பட்ட வுணர்வொடு காட்சி யுயிரனவாமுன்சொல்லப் பட்ட நிலந்தா முடியின் முடிவுளதாம்பின்சொல்லப் பட்ட வுயிரும் பெரிய பிரச்சையினாய்.
498 வற்பமல் லானில மில்லெனச் சொல்லுவ னாங்கதுபோற்பொற்ப மிலாவுயிர் தானுமில் புத்திய லாலெனலும்வற்பமலா நிலமன்னுந் தரிக்குமென் பாயல்லையோகற்பமெல் லாம்பிறர்க் கேநின் றுழந்த கருணையினாய்.
499 உரிய வலிமையல் லானில மோரல னென்றிருந்தாற்பெரிய நிலத்தை யறிவிக்கும் பெற்றியில் லாய்பெரிதுமரிய வுயிரை யறிவுறக் காட்டென்றி யெப்பொருளும்தெரியக் குணமுகத் தாலன்றி யென்றுந் தெருட்டுளதோ.
500 விருத்த நிலைமையும் வேண்டலம் யாமென வேண்டுகின்றீரருத்த மெனக்கொண்ட வட்டகம் யாவையும் விட்டிலறிருத்தமி றீவயி னீருறை திட்ட விரோதமன்றோவாற்பொருத்தம லாதன வேசொல்லும் புத்தநின் புத்தியிதோ.
501 தன்மை கரும மவற்றன வேயென்ற றானென்னைவேறின்மை முடியினெ னிட்டமுரைப்பினுங் கெட்டதென்னோமன்னுமந் நான்கு மறுதலை தத்தமு ளாதலினாலென்னு மியல்பும் பயனு மழிக்குமென் பேனல்லனோ?
502 ஊரிது காடிது தானென லென்னை யொருங்குளவேனீரிது தீயிது தானென லாமோ நிகழ்வுடனேயாரிவை கேட்டறி வாரவை யட்டக மென்னினலாற்போ¢து வேயெனச் சொ;லுத றானும் பிழைக்குங்கொலோ.
503 தொக்கவை யாயுட னேயவைநிற்பினு மாங்க வற்றுண்மிக்கத னாற்பெயர் சொல்லுவன்யானென்று வேண்டுதியேற்புக்கன தாம்பொறி யானின்புலமன்றிப் பொய்யெனத்தானக்கனர் சாக வெனுநீயுரைக்கு நயங்க ளென்றாள்.
504 உருவுடை யட்டக மன்றியுமைந்தினுட் பட்டவெல்லாம்மருவொடு கூடியுந் தீண்டியுமாக்குந் திறமரிதான்மருவுடை யார்களை மாயங்கள்சொல்லி மருட்டியண்ணுந்திருவுடை யாயவ காயத்துத்தேரை யடித்தெருட்டாய்.
505 திரிவே தனைகளுந் தீராநுமக்குள வாதலன்றேகரிவே தனையவர் காமுறுகாமங் கடிந்ததுதான்பரிவே பெரிதுடை யீர்முன்னுரைத்தபல் செய்கைகளின்விரிவே யவையோரின் வேதனைவேறில்லை யாம்பிறவே.
506 உணர்ச்சியி னாற்செய்கை யாக்கியச்செய்கையி னாலுழப்பாம்உணர்ச்சியி னாங்கோர் பொருட்சுவடுள்ளது போல்கின்றதாலுணர்ச்சியொ டல்லன வொன்றொன்றில்நோக்கில வாமெனினுமிணர்ச்சி யிழந்து பிறபிறவாகிப் பெறலிலவே
507 ஆறினி னொறே நிகழும்பொழுதினல் லாவுணர்வுதேறின வாறவற் றுண்மையெனக்குத் தெருட்டனலிந்தாறின வோவில்ல தாழ்ச்சியினாலுள தாமெனினீகூறிய வாற்றா லுயிருண்மைகூறலுங் குற்றமென்னோ.
508 ஓருணர் வுள்ள பொழுதினொழிந்த வுணர்வுகடம்பேரு முணரப் படாமைபெற்றாமென்னும் பேச்சுமுண்டாலீருணர் வில்லை யிருமூன்றொருங்குள வென்றுரைக்குமோருணர் வேயுடை யீர்சொற்களொன்றொன் றழிப்பனவே.
509 ஒன்றே யுணர்வாய் நிகழற்குக்காரண மவ்வுணர்வாய்நின்றே யறிவான் றனிமையினாலெனத் தோ¢னிநீயன்றே யெனினவை யாறுந்தமுண்மையின் வேறென்னலாற்சென்றே புலந்தலைப் பெய்தலறிவுடன் சீர்க்குமன்றே.
510 இச்சையில் லாமையி னெல்லாமொருங்குண ராவெனினுமிச்சையெல் லாத்திற்கும் வேறேலொருங்குட னெய்துமன்றியிச்சையெல் லாத்திற்கு மொன்றேற்குணிப்பொரு ளிச்சையென்றாய்தச்சனஞ் சிச்சா ரகழ்கள்வனென்கின்ற தன்மையினாய்.
511 பிறந்து பிறந்துநி னிச்சைகெடலன்றிப் பின்னொன்றின்மேற்சிறந்து சிறந்தாங் குணர்ச்சிவிரியுந் திறமரிதாற்கறந்த கறந்த கலஞ்சுவைத்திட்டாற் கறைக்கலங்கணிறைந்த நிறைந்தவை பாறயிர்மோரெனத் தானென்னையோ.
512 எல்லா வுணர்ச்சியு மிச்சைவழியா லெழுமெனலாலில்லாம் பிறநுன திச்சையுமிச்சைமு னின்மையினால்வல்லா யிதற்குமுண் டாயின்வரம்பின்மை யாமதனாற்சொல்லா விடுந்திற மென்னோவிரிவிற்குச் சூனியமே.
513 வெளிப்பட்டு நின்றதொன் றன்றியொழிந்தவிஞ் ஞானங்கடாங்குளித்தன தாங்கொள்ளப் பாடின்மையாலின்மை கூறிநின்றேற்களித்தவை தங்களுக் காலயமாலய மாமெனநீயொளித்தனை கொள்ளலுற் றாயுயிர்தன்னையோர் பேருரைத்தே.
514 இருளுடை மாலைக்கண் டோன்றாதெனக்கென நண்பகலேபொருளுடை யார்பொருள் கொள்வானகழுநன் போன்றிலையோவருளுடை யார்சொல்லு மாருயிராலய மென்றிருக்கும்மருளுடை யாய்நின் மாண்பழிந்தெற்றான் மயங்கினையோ.
515 மூக்கொடு நாமெய்யும் மூன்றுந்தம்மூன்று புலன்களையும்தாக்கிய போழ்தே யறிதலுந்தத்துவ மாமென்றியாலாக்கிய மூன்றி லறிவுமரூவா லவையொருவாப்பாக்கியஞ் செய்தாய் பரிசங்கள்கொள்ளும் பரிசென்னையோ.
516 உற்றில வாயொலி கொள்ளுஞ்செவியென வோதுகின்றாய்கற்றிலை மெய்ம்மைநீ கட்புலந்தன்னோடோர் காலத்தினாற்பெற்றில நாமதன் பின்கொளறானும் பெருந்தவத்தாய்மற்றிது தான்றன் பொறியுறுகாறும் வரலினன்றே.
517 வாய்த்துரை யீதென வாமனிதுசொல்லும் வந்துறுமேற்சேய்த்தெனக் கோடலுஞ் சேராதொலிசெவிக் கண்ணதெனினீத்தன தாமல வாயினுநீசொல்லு முற்றறிவின்றீத்தனைப் போலவுந் தேறென்றவனைத் தெருட்டினளே.
518 பெற்ற வெழுத்தேற் பிரிவின்கணாறாம் பெயர் நுனதுமுற்ற வுணர்ந்து முடித்துரையென்னை முதலெழுத்துப்பற்றின சித்தம் பலவுணர்ந்தேயவை பாழ்படலாற்கற்றினி யெல்லாக் கணக்குங்கலந்துரை காண்பென்னையோ.
519 ஓதிய கந்தங்க ளொற்றுமையாலுயி ரென்றதுபோற்போதிய னாய்நின்னைப் புத்தனென்றாலது பொய்பிறவோவாதியி னாம்புத்தி யாவதல்லாலந்தத் தன்களையாநீதியி னாற்சொல்லி நின்றுநின்பேறு முணர்விலையே.
520 அன்றியு நின்சொ லறிபொருடானில வாதலினாலொன்றி யுரைத்த வுனக்குமெனைத்து முணர்வருமையென்றினி யாமுந் தெளிந்தோமிதனா லெனவுரைத்தாள்வென்றி யுடையன வல்லதுசொல்லா விரிகுழலே.
521 ஆறுகுறி யாவனவு மாயபுலந் தாமும்கூறுகுறி மாறுமவை கொள்ளும்வகை தாமும்மாறுகுறி மாறிக்குறி யென்றுமயக் காதேவேறுகுறி தாமுணர்வின் விள்ளுவ லினிக்கேள.
522 கண்ணின்குறி மூக்கின்குறி மெய்யின்குறி செவியினண்ணுங்குறி நாவின்குறி காடின் மனத்தோடுமெண்ணுங்குறி யாவனவிவ் வாறுமெனக் கொண்ணீபண்ணின்குறி யேசுமொழிப் பாவையெனச் சொல்லும்.
523 அறிவுகுறி யென்பனவி னாயபுல மொன்றேலறிவுகுறி யென்பனவு மாகுமவை யொன்றேபிறிதுகொளு புலமுள்ள தாகுமெனிற் பேதம்சிறிதுநெறி காட்டினது செல்லுமெனச் சொல்லும்.
524 உண்மைகுறி கொள்ளுமுணர் வின்புலம தெய்தாதெண்ணினுணர் வோடுகுறி யிவ்வகைய வென்னிலுண்மையுணர் வின்புலமோ டொன்றெனில தொன்றேநண்ணலில வேலுணர்வி னாயபுல னின்றே.
525 ஒருங்குகுறி யோடுணர்வுதோன்றியுடன் கொள்கவொருங்குபுலந் தோன்றியவையொத்தகெட லானாலொருங்குகுறி யோடுணர்வுதோன்றலில வாமேலொருங்குபுலந் தோன்றுதலினொன்றுமுணர் வில்லை.
526 உள்ளுஞ் சொல்லுடம் பென்றிவை மூன்றினாற்கொள்ளு நுங்குச லாகுச லங்கடாமெள்ளி னேரு மிவையின்மை காட்டுவேனுள்ளக் காக வுரைத்தவம் மூன்றினுள்.
527 வேண்ட லேயென்றும் வெ·குத லாயினாலீண்டி நின்றநி னித்தொடைப் பாடெலாந்தீண்ட லன்னெனத் தீண்டிய வந்தவோவீண்டை யேநிற்ப வி·து மறிகிலை.
528 நன்மை வெ·குதல் நன்றெனச் சொல்லுலுமனமை வெ·குத லன்றெனக் கூறலுமின்மை யால்வெ·க லென்றதுந் தீமையினின்மை யாய நெறிமொழி நீயினி.
529 தீய வாய வெகுளியை யொப்பனமாய மான முலோப மனத்தனகாய்வு செய்திலை கண்டுநின் கள்ளமேநீய வையவை நேர்தலி னாம்பிற.
530 காட்சி நல்லன் காண்ட லனைத்தினுமாட்சி யாமெனின் மன்னும· தொட்டுவேன்வேட்கை யாலிது நன்றென வேண்டினுமாட்சி யொட்டி வழித்தன னல்லனோ.
531 பொய்கு றள்ளே கடுஞ்சொற் பயனில்கொனைத லில்லன நான்கிவை நாவினாஞ்செய்கை தீயன வாமெனச் செப்பினீரைய நன்மையென் றீரவற் றப்புடை.
532 மண்டை கெண்டிகை மாட மடாமனைகொண்டை குண்டிகை கூறை குடங்கடையுண்டி கட்டி லுடம்புயி ராதியபிண்ட மாய பிறபிற யாவையும்.
533 கூட்ட மான குறியெனி னலதைபூட்ட லங்கோர் பொருளின்மை வேண்டியுமீட்டு மீட்டிவை சொல்லின மெய்யுரைநாட்டு மாறென்கொ லோவிளி நாசநீ.
534 நிலம்பொய் நீர்பொய் நெடுநகர் தாமும்பொய்கலம்பொய் காற்றொடு தீயும்பொய் காடும்பொய்குலம்பொய் யேயெனக் கூறுஞ்செங் கூறையாய்சலம்பொய் யன்றிதொன் றேநுங்கள் சத்தையே.
535 குற்ற மென்ற குறளையே யொப்பனமற்றுஞ் சால வுளபிற மாண்பிலவொற்றைப் பெண்ணுரை யாடுதல் போகங்கள்கற்ற லேகடுஞ் சொல்லின்ன காத்தலும்.
536 பையச் சொல்லுத னல்வினைப் பாலென்றாலெய்யக் குற்ற வெறியப்புணர்க்குங்கால்வையத் தீயாவரு மந்திர மாமவைசெய்யச் சொல்லுநர் செவ்விய ராபவோ.
537 கடுக்கத் தாமடி கள்ளெனக் காய்ஞர்யாரொடுக்கச் சாம்பிவை தாலுவப் பாரில்லைகொடுக்க வென்றல் குசலமன் றென்பதோபடுக்க லுற்ற பதகநின் பாடமே.
538 ளபாவ மாம்பய னில்லன சொல்லலேற்பூவ மேபொருள் கைக்கொண்டு புற்கலர்சாவச் சொல்லுவ தத்துவ மாம்பிறவேவ னன்றென்றி யொப்பவொன் றில்லையேல்.
539 காயத் தாற்கொலை காமங் களவெனநீயத் தாசொன்ன நேருந் திறமென்னோமாயத் தான்மன மின்றி யவையவைதேயத் தியாருளர் செய்பவை ரென்பவே.
540 வழிமுள் ளூன்றன் மனைசுடன் மாந்தரைக்குழியு ளுந்துதல் கோயிற் கலஞ்செய்தலொழிவில் யானைமுன் னோட்டலோ டின்னவும்பழியும் பாவமு மாக்குவ வல்லவோ.
541 ஒன்றி நின்ற வுயிரை யுயிரிதுவென்று சிந்தித் தழிப்ப னெனவெண்ணிநன்றி யி·றொழி றேற்ற நவையினாற்கொன்ற தேகொலை யென்றைந்திற் கூறினாய்.
542 தேவ னையிவன் றேவ bனனவெண்ணிப்பாவனையிற் பணியு மனத்தனாய்த்தூவென மும்மையே தோற்றித் தொழானங்கோர்தாவ னைதொழு தான்றவ றெய்துமோ.
543 ஒத்த வன்றனை யுறுபகை யேயெனக்குத்தி னாற்குங் கொலைவினை யில்லைனப்புத்த னீருரைத் தீரங்கோர் புற்கலன்செத்த வாறது சிந்திக்கற் பாலதே.
544 கொன்ற பாவமுண் டாயின் குறட்கண்ணும்ஒன்று மேயென் றுரைப்பனெப் பாரியார்பொன்றினும் புத்த ரேநீவி¡; சொல்லினசென்று சேர்தலைச் சித்தம தின்மையால்.
545 பட்டி லன்பகை யாலெய்து பாவமங்கொட்டி நீயவ் வுயிர்க்கொலை யாலென்னில்துட்டனைத் தொழு தோன்றுறந் தானெனக்கெட்ட னன்னிது கேட்க வினைநிலை.
546 ஆய்ந்த வைந்தினு மாம்வினை யார்ப்பெனின்வீய்ந்த தின்மையின் வெய்ய வவீசிதான்காந்தி பாலி யிரங்கக் கலகனைப்போழ்ந்து கோடல் பொருந்தல தொக்குமே.
547 கொல்வ னென்றவன் கூர்ம்படை குன்றினுஞ்செல்வ னென்றய லார்மனைச் சோ¢னுங்கல்லு வானொ டெல்லார்க்குங் கருவினைசொல்லு வானோ டுலகமுஞ் சுற்றமே.
548 துப்பி னால்வினை சொல்லலன் யானென்றுவப்பி னார்முலை காய்வது வாமனீயிப்ப லாரிடை யென்னையி தென்பதோசெப்பி னாலுஞ் சிதைகின்ற தில்லையால்.
549 பண்டு தான்வைத்தப் பண்டத்தை யொப்பதொன்றுண்ட தாயி னதுவது வேயெனக்கொண்டு போகினுங் கொள்ளினுங் குற்றமில்கண்ட போழ்துங் களவன்ற தென்றலால்.
550 பஞ்சி மெல்லடி நோவப் பகனடந்தஞ்சி லோதியு மல்க வவளெனத்துஞ்சு மில்லுடை யாளைச் சுமந்துபோய்வஞ்சி யான்கொள்க வாழ்கபுத் தன்னென.
551 கந்த மாவன காகதந் தம்மெனப்பந்த மின்மையிற் பாழ்செய்திட் டேனினியந்தி னீசொன்ன வாரிய சத்தையுஞ்சிந்தை யுஞ்சிதைப் பேன்சில சொல்லினால்.
552 பிண்டமொன் றாயினும் பிரியநோக் கின்னதுகொண்டுநின் றாம்பிற கூறினைந் தேயெனக்கண்டநா மெய்ம்மையுங் காட்டுவா யீங்கெனினுண்டுதா மாகுல முணர்வுதான் கூறுவோம்.
553 முழுதுந்துன்பம்மென மொழியின· தாகியபொழுதினா னல்லவும் புல்லுமா மாதலாற்பழுதுதா னவ்வுரை பன்மைதா னின்மையில்இழுதையா னான்குள வென்றுசொன் னாயென.
554 உழப்புமூன் றும்முட னொக்கநோக் கின்னதுவழுக்கில்லா வாய்மையேல் வாய்மை சொல்லியினியிழுக்கினாய் நீபிறர்க் கின்பமீந் தேனெனல்பழுக்களே காய்வது ண்டுமுண் டேபிற.
555 துக்கமே யாயினாற் றொழிலுமொன் றாய்ப்பயமொக்கவே வேண்டுமா லுயர்விலாக் கீழ்க்கதிபுக்குவீழ்ந் தார்பிறர் பொங்கிநின் றாரெமர்மிக்கதே யென்னெறி யென்றுவேண் டல்லெவன.
556 உறுதிகூ றல்லொழி யொழுக்கங்காத் தல்லொழியிறுதியி· றுன்பமே யின்பமில் லாயினாற்சிறிதுநீ தீப்புகாய் சேர்வதென் னைந்நிழல்இறுதியில் லாத்துய ரின்னசெய் யாயினி.
557 தூய்மை யில்லை முழுவது மென்பதைவாயும் நீசொல்லும் வாய்மைய தாயினாற்றாமஞ் சாந்தம் புனைபவர் தாமெலாம்ஏம நன்னெறி கண்டில ரேபிற.
558 ஓது மோத்து மொழுக்குநின் னுண்டியுங் கோதில் தூய்மைய வாமெனக் கூறியும்யாது நீயசு வாமெனச் சொல்லுவாய்நாத னீபிற நன்கறிந் தாயவை.
559 நீயி னேசொன்ன மெய்ம்மையை நோக்கிலார்தூய்மை யாம்பிறர் தூய்மை யிலரென்றுகாய்ப வேகவி மண்டைகள் என்றனள்வேயி னன்மை விலக்கிய தோளினாள்.
560 சென்ற சென்றுன செந்நெறி கண்டவர்பின்றைத் தூய்மை பெறுவது மில்லையேலின்று மின்று மியல்வது வாக்கொள்வாய்க்கின்றித் தூய்தன்மை யென்னை யிழைத்ததோ.
561 அழுகு பூசுமி னங்கண மாடுமின்கழுகு ணூத்தையோ டேனவுங் கவ்வுமின்மெழுகு மின்னிடை மெச்சிய மல்லதின்முழுதுந் தூய்தன்மை சொல்லிய மூடர்கள்.
562 நில்லா வென்னி னில்லன்மையாலும் நில்லாவாயில்லா மென்ற லின்புறு மேற்கோ ளிழுக்காகுமெல்லாந் தானே யென்றலி னேன் விழவெய்திநல்லாய் சொன்ன நான்மையை நாட்டுந் திறமென்னோ.
563 உழுவார் வணிக ரென்றிவ ருள்ளிட்டுலகத்துள்வழுவார்க் கீய வான்பொருள் வேறாய் மறியும்மேவழுவார் தமையுங் காண்டும· தாமாறுரையீரோபுழுவாழ் கென்று புனன்மழை தந்த புகழுள்ளீர்.
564 தெய்வத மென்று தேறினர் செய்யுஞ் சிறப்பென்றும்கையது வீயக் காமுறு தானக் கலப்பென்றுமெய்தல் ரேயின் னிவையிவை யெல்லா மிழுக்காவோமெய்பிளந் திட்டு வேண்டுநர்க் கீயும் விழுமிய்யீர்.
565 ஒள்ளிழை யாரே யுறுபொருள் பிச்சைக் குரியார்கள்தள்ளின போழ்தின் னவையவை தன்னைத் தலைநிற்பார்கள்ளர்க ளன்மை காட்டலு மாமோ கருணையாற்பிள்ளைக ளேங்கப் பிறர்களுக் கீந்த பெருமைய்யீர்.
566 நில்லா தாகக் கூறுத றன்னை நெறியென்றீர்பல்வகை யானும் பாழ்செய்து பின்னே பரிகாரஞ்சொல்லுவி ராயிற் சொல்லிய மெய்ம்மை துறவாமன்கொல்சின வேழங் குறிநிலை செய்த குணத்தின்னீர்.
567 ஓதி யாது முயிரில்லை யென்ப துரைத்து நின்றாயேற்கோதி லங்கோர் குறியுயிரே கொள்ளி னுங்கோளழிவாமவேதி லார்சொல் பரிகற்ப னையி னாலின் மைசொல்லினீதி யாநின் கருத்தினா லுண்மை யுந்நேர்ந் தாயன்றோ.
568 ஒன்று மில்லை யுயிரென்றுரைத்தநீ யுண்மை யின்மைநின்ற வாறே நெறியாகநேர்கின் றாய்நீ யாவனோவன்றி முன்சொன் னவத்திறமெத்திறத்தா னும்மா காமையாலின்றுந் நின்றுந் நீமொழிந்தாயெம்மிறை யேயிறை யாகவே.
569 போற லானு மதுபோ லாதென்றும்பு னைவினாலும்வேறல் லதில் லையெனவும் வினைவலியும்யோ கின்னாலும்தேறி நின்ற பொழுதோடிவ்வேழாந்திறத்தி னாலுங்கூற லாமோ மீட்டுணர்வுகொண்டு ணர்வா னில்லாக்கால்.
570 நாம சீவன் முதலாய நான்மை களின்முன் மூன்றிலுந்தூய்மை சீவனுடைத்தாகு மன்றே னின்சொன் மாறுமாந்தாம சீவன் முழுவது மென்று தருக்கு கின்றாய்வாம சீவ னிவற்றினா லுண்மை மறுக்க லாகுமோ.
571 அறியும் மெய்ம்மை யும்மைங்கந்தம்மாட சிய்யு மல்லவையுஞ்சிறிதும் மென்முன் னிலையின்மைகாட்டிச் சிதைத்தே னாலினிப்பிறிதொன் றுண்டே லுரைய்யெனவுரைத்தாள் புத்தன் றான்பெரிதும்மெறிபட் டென்னெ றியினாலேயடக்கு வன்னி னையுமென்றான்.
572 ஆதி யலாத வகன்றடுமாற்றமுஞ்சாதி யறுக்குந் தகையு மிவையெனவோதி வினைப்பயத் தொப்புரைப் பார்க்கன்றிநீதி யிலாநெறி நேரல னென்றாள்.
573 வித்தின் வழிவழித் தோன்றும் முளைகிளைசத்தியி னாயசந் தானத்தை மாற்றென்பன்வெத்தவ வித்தினின் வேறன்று வீடிதுதத்துவ மாக்கொ டளிரிய லாயே.
574 வினையு முளது பயனு முளதுதினையனைத் தாயினுஞ் செய்ஞ்ஞன மில்லையெனையவுங் கந்த மருகண நில்லாநினையின்மற் றென்றா னெறிபயந் தானே.
575 குணம்பொரு ளென்றி கொடைபொரு ளென்றியுணர்ந்துசெய் துண்பா னொருவனி லென்றிகணந்தனி லேநிலை கந்தமு மாயக்காற்பிணங்குவ தொக்குநின் பேரெமக் கென்றாள்.
576 தீதுள்ள மேலது தீயழப் பேசெய்யும்யாதுள்ள மாண்புள மேலின்ப மாமென்னைமாதுளம் பீசமுண் மாணரக் கின்னிறம்போதுள்ளங் காண்பது போலமற் றென்றான்.
577 எட்டி னியன்ற விரண்டினு ளாங்கவையட்ட வரத்தமு மல்லது மாய்ப்பயமாட்டார் மலர்க்கண்ணுஞ் செம்மையு மற்றுமாவிட்டமுங் காடம்டுவ னீங்கிது போல.
578 ஐந்தி னியன்றவர் பிண்டத்த ராகியமைந்த ரிருவர் குசலா குசலத்தர்சிந்தையி னல்லவன் றன்வழித் தேவனும்வெந்தொழி லான்வழி வீறி னரகனும்.
579 பீச மெனப்பட்ட தெட்டே பிறிதங் கொன்றாசொன்று மில்லைய வைந்திற்கு மன்னதுநீ சொன்ன வாறிது நேருந் திறமென்னையேசுவன் கேள்யா னெடுத்தினி யென்றாள்.
580 அயலரக் கட்டக பீசமுண் டாங்குவியலகத் தைந்திற்கும் வேறொன்று காட்டாய்குயலமு மல்லது மாயினன் றாகும்மயல்படைத் தாயொழி மாதுளங் காட்டல்.
581 பூவின்கட் காட்டல் பொருந்தா ததன்வழிமாவின்க ணாக மகன்செய் வினைப்பயன்தேவன்கட் போலத் திருந்திய மாதுளஞ்சாவின்கட் செய்கையுஞ் சாங்களைந் தாயோ.
582 வித்தொடு பூவின்கண் வேற்றுமை காட்டினும்துத்தல் குழவி கிழவன்கட் சொல்லென்பன்பித்துடை யார்போற் பிதற்றி வினைப்பயமெத்திறத் தின்னு மியைத் துரைக் கில்லாய.
583 அங்குரந் தன்கண்ணுஞ் செல்லா தரக்கொடுமங்கின பீசத் துருவ மலரின்கட்டங்கின வென்னுஞ்சொற் றத்துவ மாக்கொண்டவங்குலி மாரனை யாதன்மற் றென்னாய்.
584 அப்படி யாலரக் காமது போன்மெனிற்றப்படை யானுழப் பெய்வழித் தங்குத றுப்புடை யான்சுர னாகிய வன்றுய்க்கலிப்படி யாயினீ யென்றுரை யாயோ.
585 எம்மை யுவப்ப வினைவழித் துப்பெனின்¦ச்மை வழியது தீஞ்சுவை யென்றில்லையெம்மை வினைவினை யாக்குநின் பூவுரையிம்மையோ டும்மை யிவையிலை யாலோ.
586 உண்டது போலு முறுபயன் பன்மலர்கண்டது காரண மாகக் கருதினுமண்டையா மான்றசை மீன்றடி தோன்றியவண்டுண வாகலு மாமத னாலே.
587 தீயுழப் பேசெயுந் தீவினை யென்பதுவாயுழப் பாம்வழி யேபுகுந் தாயினிநோயுழப் பாகிய நுஞ்செய்கை யாவையும்நீயுழப் பாய்பிறர்க் கேயுழந் தாயால்.
588 உள்ளம் வினையென வோதினை யேற்செய்கையெள்ளின் றுணையும· தின்மை யினைந்தெனக்கொள்ளுந் திறமென்னை கூறாய் குணந்தினிக்கள்ளமல் லாலென்றுங் கட்டுரை யாயால்.
589 நின்னுடை யுள்ளமுஞ் செய்கையு மொன்றெனிற்றன்னிடை யெய்துந் தரும தருமிமற்றென்னிடைக் கொண்டிலை யெங்குப்பெற் றாயிதுமுன்னுடம் பாட்டின் முரணுள தாமால்.
590 சித்தமுஞ் செய்கையும் வேறென்றி யேயெனிலொத்த வினையுடன் பாடின்றி யாமினித்துத்த லையாதின் வழித்தெனச் சொல்லுதியொத்திய வல்ல துரையலை யாயால்.
591 கண்டுணர்ந் தார்வத்தி னாற்செய்கை யாதலையுண்டெனி னாற்குண மொன்றினுக் கொட்டினைபிண்டிநீ ழலவன் பேரறஞ் செர்தலிற்கொண்டநின் கோளின்கட் குற்றமுண் டாமோ.
592 விளைவத னால்வினை யாக்குமென் பார்சொலுளைவதிங் கென்செய வோவுணர் வில்லாய்தளைபெய்து வைத்தென்னைத் தம்பொறி யெல்லாமளைவது நன்றிது தானற மாமேல்.
593 ஆர்வத்தி னால்வினை யாக்கு மெனச்சொல்லினார்வத்தைச் சித்தமென் றாருரைப் பாரினிச்சேர்வித்த துப்பினிற் செய்கையு மாதலைநேர்வித்த வாறது நீயறி யாயால்.
594 உணர்வினை ஆர்வ மெனவுரைப் பாயேற்புணரும் பிறர்கடம் பொற்றொடி யார்மேலுணர்வன்ற தார்வ முழப்பெனச் சொல்லினிணர்பிரி யாத்துப்பி னால்வினை யன்றாய்.
595 சித்திமுடைச் செய்கை செய்வினை யாதலின்சித்த முடைத்துப்புஞ் செய்வினை யாம்பிறசித்தம் வினையெனச் செப்புத லாலெங்குச்சித்தமுண் டவ்வழிச் செய்கையு முண்டே.
596 செய்கையி னாற்றுப்பு மாக்கியத் துப்பினிற்செய்கையு மாம்வகை செப்புவித் தேனினிப்பொய்கைசெய் தேசொன்ன பூவொடு வித்துரைவைகவென் றாண்மல ருண்கண் மடவாள்.
597 இருவகைப் பீசத் தியல்வு மழித்துத்திருவகைத் தேவொடு பூவுஞ் சிதைத்தேமருவுகை யாய்நின் மதுரஞ்செய் மாவும்தருவனை யாயிற் றகரு மதுபோல்.
598 வலிசெய்து பீசத்தின் மாண்பு மழித்திட்டலிசெய்து விட்டே னமையு மதன்மேற்பலிசையி னீசொல்லும் பாடங்க ளெல்லாம்நலிவனொன் றொன்றா நடுவுணர்ந் தென்றாள்.
599 பிறந்தவப் பிண்டம் வினையினோ டாங்கேயிறந்தன வெத்திறத் தின்னுமற் றென்றாற்சிறந்தவத் தேவெய்திச் சேர்தலுஞ் சீராதறஞ்செய் தறானு மவம்பிற வன்றே.
600 உரந்தனை யாது மொடுக்ககி லாகிச்சுரந்தபல் குற்றஞ் சொலக்கேட் டிருந்தான்பரந்தினி நீசொன்ன பல்வழி யெல்லாங்கரந்தனை போதலைக் காட்டுவன் கேணீ.
601 அரக்கொடு பீச மறக்கெட்ட வாற்றல்கரப்பது போலிடைக் காண்பரி தாகிமரத்திடை சென்று மலரின்கட் டோன்றிப்பரக்குமென் றேன்பயம் பைந்தொடி யென்றான்.
602 அன்னணஞ் செய்தா னறங்கெட் டவன்வழித்துன்னுஞ் சந்தானத் தொடர்ச்சி நிகழ்ச்சியிற்பின்னை யதுபெறு மாதலின் யான்கண்டநன்னெறி நின்னா லறிவரி தென்றான்.
603 கந்தங்க ளெல்லாங் கடையறக் கெட்டக்கணந்தமி லாக்குற்ற மாமெனச் சொல்லுஞ்சந்தங்க டம்முட் சவலைச் சந்தானமும்வந்த· தெவன் செய்யும் வாமமாற் றென்றாள்.
604 ஆற்ற மகன்கெட்ட போழ்தே யமரிற்றோற்றமு மென்னை துடித விமானத்துளேற்ற தவத்தவன் றேவென லென்கொல்சாற்றுஞ்சந் தானத்தைச் சந்தித்துக் காட்டாய்.
605 மக்க ளுடம்பொடு தேவ ருடம்பிடைமிக்க விடம்பெரு வெள்ளிடை யாலிதுபுக்க தொடர்வில்லை யாதலி னீகொண்டபக்க முடன்கெடு மாலென்னை பாவம்.
606 புளிபொறி வாழ்நிழ றண்மதி யின்னதெளிவுள தாஞ்செல வின்முடி வென்னில்விளிபவ னுளபொழு தேவினை துய்க்குமொளிகிளர் தேவ னுளமென்னு மாறோ.
607 சென்றில தேலிடை யற்றுழிக் தோன்றுகவென்றலு மிங்குள தோவது தானெனினொன்றல பல்பொரு டாமொளி யாதியநின்றல வோவுல கெங்கும் நிறைந்தே.
608 தண்மதி கெட்டதன் சாயை யுடன்பெறலுண்மை யுண்டாயினி னொத்துரை யொட்டுவன்கண்மதி யாததெங் காரிய மேயின்னவெண்மதி யாயை விலக்குநர் யாரோ.
609 மதியென்று மில்லெனி னில்லொளி தானும்புதியதும் பாழது பொன்றிய போழ்தேகதியினை நாட்டிய காட்டி யெமக்கிங்கதுவென்னை சொல்லிய வாறுரை யாத்தா.
610 அடியொடு பூவி னிடையற வின்றிநெடியதோர் கொம்பினை நீமறந் தாயோமடியிலார் செய்த மானுயர் தெய்வப்படியிது வென்றிடை பாழ்செய்திட் டாயால்.
611 தோற்ற மிடையற வில்லாத் தொடர்ச்சியைச்சாற்றுதும் யாமுஞ்சந் தான மெனவென்னிற்காற்றுஞ் சுடருங் கரகத்துட் டாரையுமேற்றன வல்ல விரண்டுண்மை யாலே.
612 பித்தொடு கனவிடைப் பேயின் மயங்குநர்க்கொத்த வுணர்வுண்மை யொட்டல தென்செயதத்துவ மாயசந் தான முளதெனிற்புத்தநின் சொற்கள் பொருளில வேயால்.
613 மூத்தல் வகையு முதலத னைம்மையுமாத்த கணந்தோ றலர்ந்த நிகழ்ச்சியுஞ்சாத்திரத் தாலத் தவிரன்கட் டாழ்ச்சியும்போத்தந்து காட்டுந் திறமென்னை புத்தா.
614 கப்பம் பலபல கண்ணிமை யானுக்குத்துப்பு முரைத்தென்னை தோன்றிய வக்கணத்தொக்க விளைவுரைப் பாய்பின் வழிவழிச்செப்புதி யேற்செய்கை சென்றுசென் றுண்டே.
615 காரண மென்னினுஞ் சென்றின்மை யாலில்லைஏரண தேவ விழுதைமை சொல்லுதியூருணி நீர்நிறை வுண்டோ யுறுபுனல்வாரண வாய்க்கால் வரவில்லை யாக்கால்.
616 நில்லா தறக்கெடுந் தோன்றிற்றுந் தோற்றமுமெல்லா வகையினு மில்லதற் கேலில்லைசொல்லாய் தொடர்ச்சி தொடர்ச்சியென் றேநின்றுபல்லார் களையும் படுத்துண்ணும் பண்பா.
617 சுடருடைத் தோற்றத் தொடர்ச்சியைச் சொல்லியிடருடைத் தாக விவையிவை காட்டியடர்படுத் திட்டாட் கதற்கொன்று நாடிச்சடருடை வாசனை சாதிக்க லுற்றான்.
618 கெட்டபி னாற்றல்க ளெல்லாம் வழியதற்கொட்டு நறுமலர் வாசமோ டோட்டின்கட்சுட்டுவ தொப்ப வெனச்சொல்லு நீகண்டவிட்ட மிவற்றோ டியையல தென்றாள்.
619 முன்னைய துள்ள பொழுதத்து மற்றதன்பின்னைய தில்லை யதுபெற்ற போழ்துதன்னையு மில்லை யெனச்சொல்லின் வாசனையென்னை யியையுந் திறமிவை தானே.
620 ஓடு மலரு மொருங்குள வாதலிற்கூடும் வாசமுங் குற்றமொன் றில்லெனிற்கேடும் பிறப்பு முடனில்லை யாதலிற்கூடல வென்பது கூறின மன்றே.
621 கெடுவத னுண்ணின்று தோன்றுவ தன்கண்வடுவறச் செல்வது வாசனை யென்னப்படுவதொன் றன்றுநின் பக்கத்தை யெல்லாஞ்சுடுவதோர் கொள்ளி சுவடித்த வாறே.
622 போதின்க ணின்றும்புத் தோட்டிற் பொருந்தியதாதின நாற்றந்தண் ணீருக்குச் சொல்லுதியோதன கந்த முடன்கெடின் வாசனையாதின தாகு மறிந்துரை யேழாய்.
623 வாசனை வாசனை யென்று வழிவழிநீசொன்ன நீசொன்ன நேர்வதிங் கென்செய்யபாசன மாகிய பாதிரிப் பூவினைப்பூசின தெப்பொருள் போத்தந்து காட்டாய்.
624 பூவின்கட் கேடும்புத் தோட்டின்கட் டோன்றியுமேவிய வாசனை யெங்குமுண் டாமெனின்சோபன மாகச் சுவாகதம் போந்ததென்றேவன் றிருந்தடி சிந்திமற் றென்றாள்.
625 அதற்கு மறக்கே டுளதெனின் வாசமதற்குமுண் டாயினி யெல்லையின் றோடுமிதற்கெண்ணு மில்லெனி னில்லை யதற்குமுதற்சொன்ன குற்றம் முடிந்தன வாமே.
626 சென்றதென் றாலதன் கேடின்மை யாஞ்செலவின்றதென் றாலத னாற்றமு மில்லற்கநன்றிதென் றேசொல்ல நல்லது நாமறிந்தன்றிதென் றென்முனே யாருரைக் கிற்பார்.
627 கேடது தான்முழு தாதலி னீசொல்லும்வீடது வாகலும் வேண்டும் விழுத்தவம்கூடு பவர்க்குங் குணமில் லவர்க்குநீடல தேயுள தாநிரு வாணம்.
628 தோற்றம் வழியென்று சொல்லுத லாற்றடமாற்ற மதுவிதன் மார்க்கத்து மாண்பெனச்சாற்றுதி யேலுந் சவறது வாதலைத்தேற்றுவன் கேணீ தெருண்டிருந் தென்றாள்
629 தன்வழித் தோற்றிக் கெடுமோ வதுகெடப்பின்வழித் தோற்றம் பெறுமோ விரண்டனுளென்வழித் தோற்றம· தாமா றிருளறநின்வழித் தோற்றத்தை நீயுரை யென்றாள்.
630 வழியொன்று தோற்றிக் கெடுமேன் மகப்பெற்றழிகின் றவள்போ லணைவுள தாகுமொழிகின்ற தேயது காணல தென்னிற்கழிகின்ற கன்னிக்கோர் காதலற் காட்டாய்.
631 பிறப்பித்துக் கேடும்பின் றோற்றக் கெடலும்இறப்பவுங் கூடா திருதிறத் தானுந்துறப்பித்த வாறிது தூவெனக் கேட்டைமறப்பித் துரைத்ததுண் டோசொல்லு வாம.
632 சுலாப்பல சொல்லிச் சுழன்று விடாதேதுலாத்தலைத் தூக்கமு மோக்கமுங் காட்டினிலாத்தலை யல்லா விரண்டு ளொன்றுண்டாயிலாத்தலை யில்லே லமைவது மன்றே.
633 இல்லதற் கோயில்லை கேடென்னை காக்கையின்பல்லதற் கோதார் பருமையு நுண்மையுஞ்சொல்லிதற் காவதுண் டேலெனச் சொல்லினணல்லதற் கல்லது நாப்பெய ராதாள்.
634 துலாமில்லை யட்டக மேயது தானுமிலாமிரு பாற்றலை யேதலை தாமுநிலாம்வகை யில்லுயர் வோடிழி வெங்கும்கலாமவை யாய்க்கடை கண்டது பாழே.
635 ஓல குளவி குருட்டெண் ணெய் வாணிச்சிகோலஞ் சிதையுமென் றெண்ணெயட் டாளென்னும்பாலகர் பாட்டுரை போன்றது மற்றுநின்நூலுரை யெல்லா நுழைந்துணர் வார்க்கே.
636 கோற்றிர ளொன்றா யதன்றலைக் கேயுடனாற்றியு மோக்கமு நாட்டினை ய·தொப்பத்தோற்றமுங் கேடுந் தொகுபிண்ட மொன்றிற்குச்சாற்றுதி யாய்விடிற் றக்கதென் னேனோ.
637 தலையன தாழ்ச்சியு மெழுச்சியு மன்றிநிலையிலை கோலிடை நீக்கலு நீங்குமிலையென வெட்டி னிடுகுறி யொன்றெனிற்பலவினி யிங்குப் படுவன கேணீ.
638 கோலுந் தலையு முடனில்லை யாமெனின்மேலு முரைத்தன மேயதன் மேற்பழிவாலுந் தலையு நடுவு மவையின்றிப்பாலும் படுவதோ ராவுள தென்னாய்.
639 புணரிய தாமவை பொய்யெனச் சொன்னேற்குணர்வதங் குண்மையு மொட்டுவை யாயிற்குணகுணி யாயு மவயவி யாயும்பிணபிணக் கெய்துமப் போ¢டர் செய்தாய்.
640 இருபிண்ட முப்பிண்ட மெண்ணில்பல் பிண்டம்வருபிண்ட மேற்பல மற்றவை நீங்கவொருபிண்டங் கொண்டாங் குயிர்க்குறுதி யிட்டுத்திருவுண்ட செய்கையிற் செய்தவ னாக.
641 வினைசெய்தான் றுய்க்குமோ வேறொருவ னேயோவனைவரு மோவில்லை யோசொல்லா யோவென்னக்கனைகடலி னுண்மணலிற் கண்ணினையு மீந்தானினைவகைய கேளென் றெடுத்துரைக்க லுற்றான்.
642 அவனேயு மென்னேன் பிறனேயு மென்னேனவனும் பிறனு மவரேயு மென்னேனெவனேயு மெய்தா னெனலேயு மாகாவெவனோ விதுதுய்ப்பா னின்னணங்கே ளென்றான்.
643 அதுவேயு மென்னேன் பிறிதேயு மென்னேன்அதுவும் பிறிது மவையேயு மென்னேன்அதுபோன்ற வல்ல ததன்வழியின் மற்றொன்றிதுபோல வென்பே னெடுத்துரையுங் கேணீ.
644 இடுபீச மன்றா லிறுங்காதி யன்றால்வடுவாய வவ்விரண்டும் வந்தனவு மன்றால்நெடிதாய தீங்கரும்பு நெல்லுமே போலநடுவாக நோக்காய் நறுநுதலா யென்ன.
645 ஆத்தாவ தன்றேற் பிறிதா மரும்பெறனாத்தான் வருத்த நீ நாட்டியதியாங் காணேன்போத்தாகா தேற்குதிரை பெட்டையது போலென்சாத்தாகு மாகாமை சாதிக்க வல்லையோ.
646 அவன்போற லானு மவனன்மை யானுமவன்றன் வழியா னவனாத லானுமவன்றான் பிறனே யவனென்ற லானுமவன்றான் பிறனே யெனவழிவ துண்டோ.
647 கண்போலக் கயலெனினுங்காடன்றித் தூறெனினும்பெண்பாலாற் பல்கியும்எல்லாம் பிறவேயாம்.
648 அயலானே துய்க்கு மவன்றுவ்வா னென்பாய்முயலானு மில்லான் முகஞ்சிறிதே யொப்பான்வயலாமை போல்வதோர் மக்குளி யிலானென்றியலா தனவே யெடுத்துரைத்தி யென்றாள்.
649 அயற்பிறனு மல்ல னவன்றானு மல்லன்புயற்றிறலைங் கூந்த லிதன்போலப் பிறனுக்கேல்முயற்பிறவி மேயினீர் முன்செய்தா னங்கோர்பயப்பெறுவ தில்லையேற் பாழ்பயனி தென்னோ.
650 தற்பிறிதே யாகிப் பிறபிறிது தானல்லாநெற்பிறிது போன்மெனவு நீயுரைத்தா ய·தொழிந்துசொற்பிறிது சொன்னாய் சுவர்க்கத் தவர்க்குரைப்பிற்பிறனே யாகிப் பெறப்பிறனே யாகானோ.
651 நெல்லின் வழிக்கரும்பு நீள்கரும்பி னானெல்லுஞ்சொல்லுநீ சொல்லாயேற் சொல்லியநின் சொல்லெய்தாவல்லனாய்ச் செய்த மகன்வழியி னான்மகன்றானல்லனாய்ச் சொல்லின் னுலங்கரு வாமே.
652 செய்தானுஞ் செய்தானே துப்பானுந் துப்பானேயி·தாலென் மெய்ம்மை கிடந்தவா றென்றானுக்கெய்தார் பிறவோ விருசார் வினைப்பயனுஞ்செய்தார்க டாமெனலுஞ் சிந்தித் திருந்தானால்
653 கண்ணுந் தலையும் பிறவுங் கருந்தடியும்பெண்ணுங் கொடுத்துப் பிறர்க்கே யுழந்தாய்முன்னெண்ணுங்கா லின்னுநீ யெவ்வினையுஞ் செய்தாரையுண்ணுந் திறமொன்று மோதா தொழிந்தாயோ.
654 எனைத்துணையு நீவருந்தி யெத்துணையோர் காலநினைத்திருப்பி னல்லது நின்காட்சி தன்னால்வினைப்பயத்தின் கூட்டம் விரித்துரைப்ப னென்னிற் றினைத்துணையு மாகாமை தோ¢துநீ யென்றாள்.
655 முழுக்கேடு வேண்ட¡யேன் முன்ன¢ன்ற துண்ட¡ம்வழுக்குமே லவ்வுரைக்கு மாறுகோ ள¢·த ¡மிழுக்காமை புத்த£ ரெனைப்பலருங் கூடிக்குழுக்கள¡ய் வந்துநுங் கோள¢றுமி னென்றாள்.
656 நின்றே நிலையுமென¢ ன¢த்த¢யமே யாயொழியுமன்றேய· த¡யி லநித்த¢யமா மவ்விரண்டுமென்றே யுரைக்கில¢ரு வழிக் குற்றமுமாமென்றே யுரைக்கின்றா யேகாந்த ன¡குத¢யோ.
657 உச்சேதந் த¡னு மொருவகையா லவ்வகையேயச்சேத மின்மையு மவ்விரண்டு மாய்நிகழ்ந்துபொய்ச்சேத மல்ல¡ப் பொருண் முடிபொன் றுண்ட¡கமெச்சாயே நீயெனயான் மெச்சுவனே யென்றான .
658 இறைவன்ற னூலுணரி னெவ்வுருவி ன¡ருமுறையின¡ லெய்துவர்த¡ முன்ன¢ய வீடென்றாள்மறையின¡ ல¡யினு மற்றொருவா றேனுநிறையின¡ற் செல்லென்று நோ¢ழையுஞ் சென்றாள்.

ஆசீவக வாதம்
659 கண்ணார் சிறப்பிற் கபில புரங்கடந்துவிண்ணாறு செல்வாள் வியன்மலைபோற் றோற்றத்தாள்உண்ணால் வினையு மொருவி யொளிர்மேனியெண்ணா துணர்ந்தானை யேத்தத் தொடங்கினாள்.
660 அங்கம் பயந்தா னறைந்த சுதக்கடலுள்பங்கங்கள் சாராப் பரசமையர் சொல்லுளவோபங்கங்கள் சாராப் பரசமையர் சொல்லேபோற்புங்கவன்றன் சேவடியைச் சேராத பூவுளவோ.
661 பூர்ப்பம் பயந்தான் புகன்ற சுதக்கடலுள்சார்த்திப் பிறவாத் தவநெறிக டாமுளவோசார்த்திப் பிறவாத் தவநெறிக டம்மேபோற்றீர்த்தன் றிருநாமங் கொள்ளாத தேவுளவோ.
662 புலவ னுரைத்த புறக்கேள்வி சாராதுலக நவின்றுரைக்கு மோத்தெங் குளதோவுலக நவின்றுரைக்கு மோத்தேயு மன்றிப்பலவும் பகர்வாப் பயந்தனவே யன்றோ.
663 அலரோடு சாந்த மணிந்தெம் மிறைவர்மலரடியை யல்லதியா மற்றறிவ தில்லைமற்றறிவ தில்லாத வெம்மை மலரடிகண்முற்றவே செய்து முடிவிற்க மன்றே.
664 புனையுலகிற் காதிய புங்கவ னார்தமிணையடியை யல்லதியா மின்புறுவ தில்லைஇன்புறுவ தில்லாத வெம்மை யிணையடிகடுன்புறவி லக்கதியுட் டோற்றுவிக்கு மன்றே.
665 இரவிடைநன் மணிபோலு மண்ணா துணர்ந்தான்திருவடியே யல்லதென் சிந்தனையி லில்லைச்சிந்தனையொன் றில்லாத வெம்மைத் திருவடிகளந்திணையில் பேராற்ற லாக்குவிக்கு மன்றே.
666 தொக்குட னாயவென் றொல்வினை தீர்கெனமுக்குடை யானடி மூன்றினும் வந்தித்துக்குக்குட மாநகர் நின்று கொடிமினிற்றக்கதிற் றான்போய்ச் சமதண்டம் புக்காள்.
667 ஈண்டி யிருந்த விலிங்கியர் தங்கட்குமாண்ட துகிலல்குல் மாதரிது சொல்லும்காண்டற் கினிதே கடிமலர்ப் பூம்பள்ளியீண்டுறை வாரிவர் யாவர்கொ லென்றாள்.
668 காரணம் வேண்டாக் கடவுட் குழாந்தன்னிற்பேருணர் வெய்திப் பெரிதும் பெரியவன்பூரண னென்பான் பொருவறக் கற்றவனாரணங் கன்னாட் கறிய வுரைக்கும்.
669 புயலிருங் கூந்தற் பொலங்கொடி யன்னாயயலியர் தாமல்ல வாசீ வகர்கள்வியலிடத் தியாரும் வியக்குந் தகையார்மயலறு காட்சியிம் மாதவ ரென்றான்.
670 ஆத்தனு நூலும் பொருளு நிகழ்ச்சியும்பாத்தன சொல்லப் பயம்பெரி தாகலினோத்துரை யேயிங் குரையென் றுரைத்தனள்சாத்திரம் யாவையுந் தன்னிக ரில்லாள்.
671 என்றலு மற்கலி தானே யிறையினிஒன்பது வாங்கதிர் நூல்யா முடையனமன்பெறு நுண்பொரு ளைந்தியல் பாயவையென்ப நிகழ்ச்சியுங் காழ்ப்பா டெனச்சொல.
672 அறிந்தா னிறைவ னவனா குதலாற்செறிந்தான் பெரிதுஞ் செறியா துரைப்பினெறிந்தா னனைய வியல்பா குதலான்மறிந்தான் றடுமாற் றகத்தே மயங்கி.
673 உரையா னிறைவ னுணலு மிலனாய்த்திரையா னரையான் றெரிவில் லுருவம்வரையா வகைவா னிடுவில் லனையன்புரையா வறிவிற் புகழ்பூ ரணனே.
674 அடங்கல் குறிக்கோண் முதலா யினவாய்க்கிடந்த கதிருட் கிளந்த பொருளுந்தொடங்கி யுரையாந் தொகையா குவதேயுடங்கே யுணுவைந் துருவா யுளவே.
675 நிலநீ ரெரிகாற் றுயிரி னியல்பும்பலநீ ரவற்றின் படுபா லவைதாம்புலமா கொலியொன் றொழிய முதற்காஞ்சலமா யதுதண் மையையே முதலாம்.
676 எறித்தன் முதலா யினதீ யினவாம்செறித்த லிரையோ டிவைகாற் றினவாமறித்தல் லறிதல் லவைதா முயிராம்குறித்த பொருளின் குணமா லிவையே.
677 அணுமே யினவைந் தவைதா மனைத்துங்குணமே யிலவாங் குழுவும் பிரியுமுணன்மே யினுமுள் புகுதல் லுரையேங்கணமே யெனினும் மொருகா லமிலை.
678 இவையே பொருள்கள் இவற்றி னியல்பும்சவையே அறியச் சிலசாற் றுவன்கேள்சுவையே யுடையம் மெனநீ யிகழல்லவையே பிறராலழிதற் கரிய.
679 அண்ணலு நூலும் பொருளுநிகழ்வு மிவையெனலுமெண்ணினு மேனை யெழுத்தினுமிக்காங் கிருந்தவர்முன்கண்ணினு மன்றிக் கருத்தினும்வேறெனக் காட்டலுற்றுப்பண்ணலங் கொண்டசொல் லாளவைபேர்த்தும் பகர்ந்தனளாய்.
680 முற்ற வறிந்துரை யாதவன் மோனாந் திருந்தனனேற்செற்றம் பெரிது முடையனச் சீவன்க டம்மொடெல்லாமற்ற முடையவர் சொல்லின வாகம மன்மையினாற்பெற்ற வகையென்னை பேதாயதனைப் பெயர்த்தெனவே.
681 ஒக்கலி யோகலி யென்றிரு தெய்வ முரைத்தனவேன்மற்கலி யார்போ லறிந்தன வாயிற் செறிந்தனவாம்தக்கில வேயறி யாதன சொல்லுத றத்துவத்தையிக்கலி யாள ருரைத்தவு மேதமெ னாய்பிறவோ.
682 அறிந்தா னறிந்தன தான்சொல்லினார்வச் சினத்தனனாயெறிந்தா னனையதோ ரேதத்தையெய்துமவ் வேதத்தினான்மறிந்தா னகன்றடு மாற்றத்தகத்தெனின் மாண்புணர்ந்தாய்செறிந்தாங் கிருக்கிற்பி னீயுஞ்சிற்றாத்தனை யாகிற்றியே
683 ஆத்த னறிந்தன யாவையுஞ்சொல்லல னாய்விடினிச்சாத்தனும் யானு மவன்றன்னிற்சால விசையுடையநாத்தனை யாட்டியோர் நன்மைகண்டாலு நினக்குரைத்துமீத்தன முண்டு மிருமைக்குமேத மிலம்பிறவோ.
684 வானிடு வில்லின் வரவறி யாத வகையனென்பாய்தானுடம் போடு பொறியின னாதலிற் சாதகனாமீனடைந் தோடும் விடுசுட ரான்கதிர் வீழ்புயன்மேற்றானடைந் தாற்றனு வாமிது வாமதன் றத்துவமே.
685 முற்ற வறிந்தனன் யானென்றுமோனங்கொண் டேயிருந்தானற்ற மகலவென் றானீயறிந்தமை யாதினினாம்பெற்ற வகையெனப் பேச்சின்மையாலெனிற் பிள்ளைகளும்மற்றிம் மரமு மலையுமம்மாண்பின வாம்பிறவோ.
686 முடக்கு மெனினு நிமிர்க்குமெனினுந்தன் மூக்குயிர்த்துநடக்கு மெனினு மிருக்குமெனினுந்த னல்லுறுப்பினடக்கு மியல்பல்ல னன்னவற்றார்வத்த னாகுமன்றியுடக்கு மிவையில்லை யேலுயிர்தானுண்மை யொட்டுவனோ.
687 நிலப்பாலு நீர்ப்பாலுந் தீப்பாலும் காற்றின்புலப்பாலு நெட்டுயிரின் போக்கில்லாப் பாலும்சொலற்பால வல்லாத சொல்லுதலால் யானுமலப்பா தொழியேனிவ் வாசீ வகனையருகிருந்தார் தாமறிய வாசீ வகனை.
688 வண்ணாதி யெல்லாம் வகுப்பின் னிலப்பாலாம்நண்ணாத மூன்றிற்கு நன்பால் பிறவாகிக்கண்ணாதி யாலவற்றைக் காணப்பா டில்லையாயெண்ணாதே யிந்தியக்கோ ளெய்தாமை வேண்டும்எனைத்தும் பெறப்பாடு மில்லாத வேண்டும்.
689 நீர்ப்பாலுந் தீப்பாலு நில்லா வளிப்பாலும்பேர்ப்பாலே பற்றிப் பிறப்பிறவா நீபெருக்கியோர்ப்பி யாதுஞ்செய்யா துரைத்தா யுரைத்தமையிற்கூர்ப்பியாது மின்றிநின் கோளழியு மன்றேகொணர்ந்துநீ யைந்தென்ற கோளழியு மன்றே.
690 பொருடாமி வைந்தொழியப் போத்தந் துரைப்பாயிருடாமி வைந்தனு ளெக்கூற்ற தாமோவிருடாமி வைந்தனுளு மெக்கூற்று மில்லைலருடாழ்ந்து நீயிருப்ப தியாதின்பா லாமோஅணுமயமாங் கந்தங்க டாமனந்த மன்றோ.
691 பலவாக நீசொன்ன பாலெல்லாந் தம்முட்கலவாவா யப்பொருளே யாதலையுங் கண்டாலுலவாதோ வொற்றுமையும் வேற்றுமையு மென்றாற்சலவாதி யொன்றுஞ் சமழலையே கண்டாய்சமத்திடை யொன்றுஞ் சமழலையே கண்டாய்.
692 பாறாம் பலவாகிப் பாலாகு மப்பொருளேவேறாது மில்லை யெனவே விளம்புவாய்நீறாக நின்ற நிலப்பால் பெறவேலாநாறா வகையெனக்கு நன்குரைக்கல் வேண்டும்நலிந்தாற் பிறபொருட்கு நாட்டலே வேண்டும்.
693 இன்றேய தாயி னிவைபா லிவைபொருள்களென்றே பலவா வெடுத்துரைப்ப தென்செய்யக்குன்றோ மலையோ குவடோ வடுக்கலோவன்றோவ தன்றால· தியாப்பாதல் வேண்டூம்அவையவையே சொன்னால· தியாப்பாதல் வேண்டும்.
694 நோயில்லை வாழி கடவு ளெனவுரைத்தானாயினோ யின்மையினேர்ந் தாய வழியொருநாட்டீயினும் வெய்யநோய் சேர்தலையுங் காண்டுநீசாயினும் தத்துவத்தைச் சாராதா யன்றோதடுமாற்றக் காழ்ப்பாடந் தாமுளவே யன்றோ.
695 கடுங்கதிரோன் மீதூரக் காணாக்கோ ளெல்லாம்படும்பொழுது மெழுச்சியினுந் தம்பயனே செய்யுநெடுங்காலம் பல்பிறவி நின்றன வெல்லாமொடுங்காதே மேய்ந்துண் டுழிதரலே வேண்டும்உதவாத வார்தலையு மொட்டலே வேண்டும்.
696 எப்பாலுந் தான்கெடா வில்லனவுந் தோன்றாவென்றொப்பியாது மில்ல துரைத்தளியின் றானுண்ணும்துப்பாயதூச் சோற்றுத் தூய்தல்லா தாழ்ந்துளதென்றிப்பாவி செய்யு மிழிதகவி தென்னோவிழுதைதான் செய்யு மிழிதகவி தென்னோ.
697 நின்றீக கொண்டீக வுண்டீக தின்றீகவென்றிவைகள் கூறி யிடுவார்க் கறம்வேண்டான்கொன்றீகை தீதென்றுங் கொல்பாவ மில்லென்றுந்தன்றீகை யுண்ணாதான் றான்கண்ட தென்னோதவத்தினு மில்வாழ்க்கை தான்கண்ட தென்னோ.
698 இல்லாத தோன்றா கெடாவுள் ளனவென்பாய்சொல்லாயே நெய்சுடராய்ச் சுட்டிடுமா றென்றேனுக்கல்லாந் தயிர்த்தோடி யாழ்மிதப்புச் சொல்லுதியாலெல்லாமொன் றொன்றிற் கிடங்கொடா வன்றேயிழிவுயர்ச்சிக் காரணமு மில்லாதா யன்றே.
699 ஓட்டுங் குதிரையு மொன்றே யெனிற்குதிரையூட்டம் பொழுதொடுதான் புல்லுண்ணும் போழ்தின்கானாட்டிய வீதி யதிசயத்தை நீயெமக்குக்காட்டி யுரைப்பினின் காட்சியைக் கோடும்கடவுட் குழாத்தார்தம் காழ்ப்பெலாங் கோடும்.
700 வண்ண முதலா வுடைய குணமெல்லாம்எண்ணுங்கா லப்பொருளே லீந்தி னிளங்காய்க்கட்கண்ணினாற் கண்ட பசுமை கனிக்கண்ணுந் திண்ணிதாக் காட்டிற் றெருண்டாயே யென்றும்திரிந்தொழிந்த காட்டினாற் றேவனே யென்றும்.
701 வட்ட முதலா வுடைய பொருளெல்லாமொட்டிநீ யப்பொருளே யொன்றும்வே றில்லென்பாய்தட்ட மழித்தோடஞ் செய்தா லதன்கண்ணும்விட்ட வடிவு விரித்துநீ காட்டாய்விகார மனைத்தும் விரித்துநீ காட்டாய்.
702 மிதப்பனவு மாழ்வனவும் வேண்டுவனயா னென்னிற்பதப்பொரு டானான்கின் பன்மைமுடித் தாயாமிதப்பனவே யாழ்வனதாம் வேறியாது மில்லேலுதப்பேனு நின்சொ லுதவலவே கண்டாலுடனேநின் பக்க முடைத்திட்டாய் கண்டாய்.
703 தொழிற்சொற் குணச்சொல் வடிவுச்சொன் மூன்றும்பிழைப்பில் பதமாப் பிரிவிடத்துக் காண்டுமிழுக்கில் பொருளோ டியைத்தக்காற் சந்தியெழுத்தியலிற் கூட்டமு மெப்பொழுதுங் காண்டுமிலக்கண நின்சொ லியையலவே கண்டாய்.
704 அதுவா வதுவு மதுவாம் வகையுமதுவாந் துணையு மதுவாம் பொழுதுஞ்சதுவா நியதத் தனவா வுரைத்தல்செதுவா குதலுஞ் சிலசொல் லுவன்யான்.
705 அரிவை யவளாங் குழவி யவளையுரிய வகையா லுவந்தாங் கெடுத்தாலரிய முழமூன் றளவாம் பொழுதும்வரிசை யுரைத்த வருட மதன்பின்.
706 குழவித் திறமுந் துறவா ளவளும்முழுவித் ததுவும் முளையா துளதாமிழவெத் துணையு மியல்பேன் முடியாதழிவித் திடுவே னயநீ விரையல்.
707 முலையும் மகவும் முறுவல் லவையும்தலையுண் மயிரும் முகிரும் முடனேநிலையில் லமையு மிலதா மெனினேயலையுந் நினகோ ளுடனே யெனலும்.
708 உளவே யெனின்முன் னுரைத்தந் தியதங்களவே யெனலாங் கடையா மெனநீகிளவா தொழியாய் கிளந்த குழவிக்களவே முழமா வவைதாம் பலவால்.
709 உடையள் ளிவடன் னுதரத் தொருபெண்ணடையு மவளுக் கவளவ் வகையாற்கடையில் குழவி யவைதன் னியல்பாநடையு மதுவே னகையாம் பிறவோ.
710 இனியாம் வகையு மிசைத்தி யெனினுந்நனிகா ரணமாய் நடுக்கு நினகோட்டனிகா ரியமும் முளதேற் றவறாமுனிலா மொருவன் பொழுதும் முடிவாம்.
711 நியதந் நிகழ்ச்சிந் நியதா வுரைப்பதயதி யெனினீ யமையுஞ் சலமேல்வியதி யெனினும் வெகுளல் இழுதைபயதி யெனினு நினக்கோர் பயனே.
712 பாலைப் பழுத்தி னிறத்தன வாய்ப்பல மாட்டொடுகண்ணாலெத் துணையு மகன்றைந்து நூறாம் புகையுயர்ந்துஞாலத் தியன்றன நல்லுயி ரென்பது நாட்டுகின்றாய்மாலித் துணையுள வோநீ பெரிதும் மயங்கினையோ.
713 ஒன்றினு ளொன்று புகலிலவென்ற வுயிர்களெல்லாநின்றன தந்த மகலமுநீளமும் பெற்றனவாய்நன்றுநீ சொல்லுதி நாந்தொக்கிருந்துழி நல்லுயிர்கடுன்றின வென்பது சொல்லாதினியென்ன சொல்லுதியோ.
714 தானுள தாய வழியதன் றன்பா லியல்பெனலாமூனுள தாய வுயிர்ப்பிர தேச முணர்வதுபோல்வானுளம் போயுழி மன்னு மறிவிலை யேலதனைநானுள தென்றுரை யேனதற் கியாரினி நாட்டுகிற்பார்.
715 ஒன்றென நின்ற உயிர்தானுருவின தாதலினாற்பொன்றுந் துணையும்பல் போழெய்தும்பூசணிக் காயினைப்போலின்றெனி னாகம மாறதுவாமினி யவ்விரண்டுமின்றெனிற் சால வெளிதாம்பிறவத னின்மையுமே.
716 எண்டனை யாக்கி யிடவகை யுட்பொரு ளீறுசொல்லிமண்டல மாக்கி மறுத்துங் கொணரு மனத்தினையேற்கண்டிலை நீமெய்ம்மை காழ்ப்பட்டு நின்ற கனவுயிர்க்கெண்ணுண்டெனி னில்லை யகன்றடுமாற்ற முலப்பின்மைபோல்.
717 மேற்சீர தீயோ டுயிர்காற்று விலங்கு சீராம்பாற்சீர நீரு நிலந்தானும் பணிந்த சீராமேற்சீர மேற்போம் விலங்கோடு விலங்கு சீர்கீழாற்சீர வீழும் மவையென்னினு மாவ தென்னோ.
718 தீயு முயிருந் தமக்காய திசையி னாலேபோயு மொழியா திவணிற்றல் பொருத்த மன்றால்வீயும் வகையும் வினையாக்கும் திறமு மெல்லாம்நீயு மவற்றை நினைவாயுள வாக வன்றோ.
719 தென்றை யதுளையத் திசைதானுறப் போய காற்றேற்பின்றை யொருநாட் பெயராததோர் பெற்றி ய·தான்முன்றை தழுவி முனிவாக்கும் வடந்தை யத்தாவின்றைப் பகலே யிதன்மெய்ம்மை யிசைக்கிற்றியோ.
720 முன்சென்று வீழுந் நிலநீரை முகிலு ணின்றுபின்சென்று பெய்யுந் துளிதானும் பெருந்த வத்தாயென்சென்ற தெய்துந் திறந்தன் னையெனக் குணரநின்சென்ற வாற்றா லுரைத்தானெறி யாற்ற நன்றே.
721 பாலெங்கு மோதப் படுகின்ற பதப்பொ ருட்குக்காலங்கள் சொல்லா யதுதானுன் கணக்கு மென்றாற்சீலங்கள் காத்துக் குணனின்மையைச் செப்பு கின்றாய்மாலிங் குடையை யதுதீர்க்கு மருந்து முண்டோ.
722 நோயுற்ற நுன்போற் குணமொன்றில னாய யானும்பேய்மற் றிவடா னெனக்கண்டோர் பெரிய வன்றானீமற்றி துண்ணென் றறநல்க விளங்கப் பெற்றேன்வாமத்து ணீயும் மதுபோலு மருந்தில் லையே.
723 நோயைத் துணிந்தே யுறுநோய்முத னாடியந்நோய்க்காய மருந்தே யறிந்தூட்டும· துண்டு காட்டிற்பாய மறுக்கும் படியாமது பல்லு யிர்க்கும்கூயத்தி னென்னை குரவருப தேச மென்றாள்.
724 சாதி முதலாப் பிணிதாமிவை யப்பி ணியிற்காதி யறியில் லவைதீவினை யூண தனாற்றீதின் றிதனில் லழுந்தல்திரி தோடத் தினால்வேத னையது தீர்ப்பது மெய்யுணர் வாமே.
725 மானின்ற நோக்கின் மறவேனெடுங் கண்ணி னல்லாய்மேனின்ற வெல்லா மிகநல்லவிம் மெய்யுணர்ச்சிதானின்ற தன்மை தவிராதுரைக் கிற்றி யேனின்னூனின்ற வாறே பொருணோக்குவன் யானு மென்றான்.
726 நின்ற விரலுந் நிலையாழ்ந்து முடங்க லாயிற்சென்றவ் விரலும் மெனத்தானின் கூற்ற தாயிற்றொன்றவ் விரலே யுறலுண்மையு மின்மை யும்மாமென்றவ் விரலே யிதுவென்றனள் வேற்க ணல்லாள்.
727 ஆழ்ச்சி யொருபா லதுவல்லன தம்மோ டாழாதேழ்ச்சி யொன்பா லதுதன்னொடு மின்ன தென்னச்சூழ்ச்சி யமைந்த துணைத்தோளியர் சொற்க ளென்றுதாழ்ச்சி மனத்தா லிதுதத்துவ மென்ற னன்னா.
728 பொய்ந்நின்ற வெல்லாம் புரைத்தாயினிப் பூர ணன்னேமெய்ந்நின்ற பெற்றி யறிந்தாயிதன் மேலு நன்றாக்கைந்நின்று முண்டுங் கடைப்பள்ளி வழியு மாக்கிச்செய்ந்நின்று நீசெய் தவந்தானெனச் செப்பி னளே.
729 கல்லா தறிந்த கடவுள்ளிறை யாகு மெய்ந்நூல்சொல்லானு மல்ல னவன்சொல்லின தாகு மும்மூன்றெல்லாப் பொருளுந் தம்பான்மை யியல்பு மேன்றுபொல்லாத போக்கி யினிப்பூரண சென்மி னென்றாள்.

சாங்கிய வாதம்
730 ஆங்கவன் சொல்லவவ் வத்தின புரத்துளோங்க வொருகொடி நட்டுரைக் கிற்பவனாங்க ணெவர்க்கு மறையென் றிருந்தவச்சாங்கியன் றன்னைத் தலைப்பெயச் சென்றாள்.
731 சென்றா ளவன்றன் சிரத்தையைக் கண்டோதநின்றா ளவன்றா னெறிபகர் கின்றனன்பின்றான் பிரளையத் தாக்கமும் பேர்ச்சியுமொன்றா வகையா லுரைகளை யொட்டா
732 பாலொத்து நின்ற பரமாத் துமனொடுமூலப் பகுதியு மல்லாப் பகுதியுமேலொத் தியன்ற விதிவிகற் போடுநூலிற் கிடந்தவ நுண்பொரு ளன்றே.
733 ஒருங்கிருந் தார்கட் குடனவை யெல்லாம்பருங்கினன் மெய்யும் பராசரன் றன்னைவிரும்பினள் போல வினவின ளன்றேயருங்கல மாய வறிவினுள் மிக்காள்.
734 என்னைப் பயந்தீரி· தென்னெனக் கேட்டனணன்னுத லாயிது வென்னெறி யென்றனனன்னன· தாயி னறிவி யெனச்சொலவின்னன கேளென் றெடுத்தனன் சொல்லும்.
735 மன்னுயிர் தெற்றென வில்லது மான்செருக்கென்னவு மிந்திய மைந்தைந் தொருமனமன்னதன் மாத்திரை யைந்தைந்து பூதமும் பன்னிய வையைம் பதப்பொரு ளென்றான்
736 எத்திறத் தின்னுஞ்செய் யான்குண மொன்றிலன்றத்துவ னின்பன பேதன லேபகனித்திய னெங்கு முளனெடுங் காட்சியன்றுத்த லுடையனென் றோன்றலு மென்றான்.
737 நின்று பரந்தரு வாய்ப்பொறி யேதுமிக்கொன்று கிரிகையின் றப்பியத் தம்மதுசென்று செய் மானிற் செருக்கத்தி னீரெட்டுமன்றியு மைவகைப் பூதமு மன்றே.
738 நின்று பரந்தரு வாய்ப்பொறி யேதுமிக்கொன்று கிரிகையின் றப்பியத் தம்மதுசென்று செய் மானிற் செருக்கத்தி னீரெட்டுமன்றியு மைவகைப் பூதமு மன்றே.
739 கதக்களி யானைமுன் கல்லெறிந் தாற்போற்பதப்பொரு டம்மைப் பழுதென் றுரைப்பமதத்தினின் மிக்கவன் மாதரை நோக்கியுதப்பென்னுங் குற்ற முரையெனக் கென்ன.
740 செய்யா துயிரெனச் செப்புகின் றாய்நின்னைவையா யுயிருள தன்றெனின் வாக்கிவைமெய்யாம் பிறசெய்கை யாதலி னாலிவைமையா மினிநின்றன் மார்க்கமு மன்றே.
741 எத்திறத் தின்னுஞ்செய் யானவ னென்றலிற்றத்துவஞ் சொல்லுந் தலைமக னாகியசித்தியு மில்லாந் திருட்ட விரோதமும்பொய்த்தலுள் ளிட்டவும் புல்லுமற் றென்ன.
742 பெருமை யுயிர்க்குரை யேன்செய்கை பின்னும்இருமை யுயிரென தாமிடை யொன்றுங்கரும வுயிரு மிவற்றினி னன்றேயருமை யுடைச்செய்கை யாக்கமு மென்றான்
743 செய்யு முயிர்களுஞ் செய்யா வுயிர்கனும்மெய்யி னுளவெனின் மேற்கோ ளழிதலும்பொய்யும் பொதியறை மையுமற் றல்லவுமெய்து மிதற்கினி யென்செய்தி யென்றாள்.
744 சோம்பன் குணமிலன் றோன்றா வொளிப்பினனோம்பற் கருமையி னுண்ணுமாற் றானுயினாம்பின்னைச் செய்ததெ னன்கவ னின்றியும்போம்பொழு தேலவ னாற்பொரு ளென்னோ.
745 ஆண்டரு வாய்த்தொழில் யாதுமில் லாயின்வேண்டின்மெய் யாகி விகிர்தி விகற்பொடுதீண்டலு மொட்டலுந் தோ¢னி லாதவன்காண்டற்குந் துத்தற்குங் காரண மென்னோ.
746 முத்தாத் துமனை முனிந்தோ வதுவன்றிப்புத்தாத்து மாக்கட் புரிந்தோ விரிந்தெங்குஞ் சித்தாத் துமனாய்த் திரிவின்றி நின்றசுத்தாத் துமைச் சுழற்றுவ தென்றாள்.
747 பரமாத் துமனைப் பளிங்கடை போலவருமாத்து மாக்களின் மன்னும் விகாரம்தருமாத் திரையன்றித் தக்கதொன் றாகவொருமாத் துமனை யுரைத்திடு கென்றாள்.
748 செல்லு மெனினுஞ் சிதையுஞ் செல்லானென்றுசொல்லு மெனினுமுன் சொல்லிய தாமெய்தும்பல்லுநுன் னாவும் பதையா துரையன்றியெல்லுந் துணையு மிருவினை யென்றே.
749 யானென தென்னுஞ் செருக்கினை யீன்பதுமானெனப் பட்டது மன்னுமோர் சேதனைதானினை யாக்குத றக்கின்ற சேதனைமேனினைத் தானுரைத் தானல்ல னென்றாள்
750 மான்றான் பகுதி வழித்தோ வழித்தன்றித்தான்றான் பிறிதோர் பொருளோ யிரண்டொடுமூன்றாவ தொன்றினி யின்றா விருந்தவிச்சான்றா ரறியவுஞ் சாற்றினி யென்றாள்.
751 முதற்பொரு ளேயாங் குணமது வாகின்அதற்பிறி தென்னி னதுமனனு முண்டாலிதற்கினி நீசொலற் பாலதென் னென்றாள்சுதப்பொருண் மேனன்றுஞ் சொல்லுதல் வல்லாள்.
752 அருவாய காரண மாயவ் வியத்தமுருவா மறுதலை யொப்பிக்கு மென்பாய்மருவாத சொல்லினை மாதிரந் தானேபருவாய்ப் பதக படைத்திடு மென்னாய்.
753 பகைக்குண மாகிய பகுதி விகுதிமிகைக்குணந் தோன்றுநின் மேற்கோ ளழித்துத்தொகைக்கணம் யாவையுஞ் சூனிய மாமாநகைக்குண மல்லது நம்பலை யென்றாள்.
754 புத்தேந் திரியமுங் கம்மேந் திரியமும்பத்தேந் திரியத்தோ டொன்றாய்ப் படைத்தனைபித்தேந் திரியமும் பேயேந் திரியமும்குத்தேந் திரியமுங் கொண்டிலை யன்றே.
755 தந்திர மாவன தாமிடைத் தோன்றுவவந்தர வாத்துவ னைந்தென வேண்டினைசிந்தனை யுள்ளிட்டுச் சீவன் குணமெனினிந்திரன் றானு மிணைநுனக் காமோ.
756 கைகளுங் காலு மிருசா ரிடக்கருமெய்திய வாக்குமற்றிந்திய மாமெனிற்செய்யும் புலனு மறியு மறிவுமற்றெய்த வுணர்ந்திங் கெடுத்துரை யென்றாள்.
757 காட்டிய வாறுங் கருமத்தி னாமெனினூட்டு முலையு முதடும் புருவமுமாட்டுங் கவுளு மறமெல்லும் பற்களும்கூட்டி மிடறுங் கொளக்குற்ற மென்னோ.
758 ஐந்துதன் மாத்திரை தாமணுவாற் றொடர்கந்தங்க ணாதியிற் காம்புல னேயவைவந்துபெருகி வரிசையி னான்மிகும்புந்தியி னால்வகைப் பூதமு மென்றாள்.
759 ஒன்றாய்ப் பரந்திவ் வுலகு மலோகமுஞ் சென்றாய்க் கிடந்த தசேதனை தானென்றுமன்றா யருவா யதுவவ்வா காயமுமென்றா ளெழினெடுங் கண்ணிணை நல்லாள்.
760 தானரு வாய பொருளது வாமொலிமேன்மரு வாதுரு வாதலி னான்மெய்ம்மைநூன்மரு வாதுசொன் னாயிது வென்றனள்மான்மரு வாவந்த நோக்கு மரியாள்.
761 பகுதியின் மானில்லை யி·தினு ம·தில்லைதொகுதிசெய் பல்குணந் தோற்றமு மில்லாமிகுதிசெய் பூதத்து மெய்ம்மை பெறாமற்றகுதியின் றத்தநின் றத்துவ மென்ன.
762 குருடனும் பங்குவுங் கூட்டத்திற் கூட்டிப்பொருடம் தாக்கமும் போத்தந் துரைப்பிற்றெருட லிலையவர் செய்கையிற் செய்கையிருடன்னை யின்றி யிவையெய்து மென்றாள்.
763 எவ்வகை யின்னும் விகார மிலாப்பொருட்கிவ்வகை தம்மை யெடுத்துரை யென்செயும்மெய்வகை யாலொப்பின் மேற்கோண் முதலியவவ்வகை யெல்லா மழிவுள தாமே.
764 கூடியு மாகாக் குணத்தின் நீயவட்பாடி யுரைத்த வுயிரும் பகுதியும்பேடிகள் சாரினும் பிள்ளை பெறாமையைநாடியுங் காணென்று நன்னுத னக்காள்.
765 இல்லுளி யின்றிமற் றெங்கு மிவைமுன்னும்புல்லின வேயாற் புணர்ச்சி புதிதெனச்சொல்லின தென்செயத் தோற்றப் படுபொருள்பல்லன தாமவை பண்டு முளவே.
766 ஆட லழித்தல் படைத்த லடங்குதல்வீடுபெற் றாங்கண் விளங்க நிலைமையுங்கூடிய வைந்து குணத்தின னாதலினாடிய குற்றங்க ணண்ணல வென்ன.
767 ஓதிய வெல்லா மொருவனி னங்கொருநீதி வகையா னெறிமைப் படுதலும்வாதுசெய் வார்கள் பிறராய் வருவதுமூதிய மில்லை யொழியென் றுரைத்தாள்.
768 யானை குதிரை முதலாப் படைகுடியேனைய தாங்களு மெல்லா மவனெனிற்றானென்று மாள்வது தன்னை யெனினங்கள்கோனிவ னாமெனக் கூறினார் யாரோ.
769 என்னை யொழித்தினி யெல்லா மவனெனச்சொன்ன முறைமைய னாகு மவனெனிற்றன்னை யொழித்துத் தபுத்துடன் றின்றிடிற்பின்னை யவனையோர் பித்தனென் னாமோ
770 தன்கையிற் றன்கண்ணைத் தானே பொதக்குத்தியென்செயக் குத்தினை யென்பார் பிறரில்லைதன்கையிற் றன்கண்ணைத் தான்பொதக் குத்துவதென்செய வோவிதன் காரணஞ் சொல்லாய்.
771 தன்னைப் படைப்பின்முன் றானின்மை யாலில்லைபின்னைப் படைக்கிற் படைக்கப் படுவதின்முன்னைப் படைப்பென் முடிவில்லை மூடனேநுன்னைப் படைத்தவர் யாரினி நோக்காய்.
772 கொன்றுகொன் றிட்டுத் தவஞ்செய்யி னத்தவம்பொன்றுமற்றாதலி ன·தும் பொருத்தமின்றின்றிதின் றிட்டுப் படைப்பிற் றெருட்சிமற்றென்று மிலன்பெரி தேழையு மாமே
773 ஓர்ப்பவன் சொல்லவ னூனவன் றீனவன்றீர்ப்பவ னோயவன் சீறு மவனுயிர்நீப்பவன் சாபவ னீப்பவ னேற்பவன்பேர்ப்பவ னாயும் பெறுகின்ற தென்னோ.
774 நாயாய்க் கடிக்கு நரியாய்ப் பலகொல்லும்பேயாய்ப் புடைத்துண்ணும் பெற்றமு மாய்க்குத்துமீயாய் நலியு மெறும்பாய்த் தெறுமெங்கும்தீயா னொருவனின் றேவனு மென்றாள்.
775 வீடு தலைபெற வெந்துநெஞ் சாண்டிடத்தாடி தவஞ்செய்த தன்கா லழித்திடப்பாடிய கையிற் படைக்கு மிவனெனின்மூடர்கட் டேற்ற முடிவுமுண் டாமோ.
776 நித்திய மாய பொருணின வாதலின்வித்தினு ளுண்டென வேண்டுதி நீள்பனையெத்துணை யோவது வென்னினு நுன்கைக்குமித்துணை யுண்டென்ப தென்னைகொ லேழாய்.
777 இப்பொழு தில்லை யெதிரதற் குண்டெனினப்பொழு துண்மையு மின்மையு மாக்கினெப்பொரு டாங்களு மின்னன வேயெனச்செப்பினள் தத்துவஞ் சேயரிக் கண்ணாள்.
778 உருவோ டருவமா காயமு மூன்றுமிருபதின் மேலுமைந் தாக விசைத்தனையருவோ டலோக மசேதன மூன்றிற்செருவோ டுரிமையிற் சேர்பவு மன்றே
779 ஒன்றொன்றி னொன்றி யுலகுள் வழியெங்குஞ்சென்றவ னுண்மை பகுதி யிதுமன்னுமென்றனை யெண்முறை யறிமற் றீண்டுபுநன்றன வீறா நிலமுத னான்கே.
780 பத்தனை யாய்நின் பரமாத் துமனையுஞ்சித்தனை யாகக் கருதியல் சீவன்கட்கத்தன்மை ஞானமு மென்னா யவனுக்குத்துத்தலுங் காண்டலுஞ் சொல்லினை யன்றோ.
781 வண்டார் குழற்பெயர் மாணிழை யிற்றெனக்கொண்டே னெனவவன் கூறினன் கூறலும்பண்டே லறியெனப்பராசர நீயினிக்கண்டா யெனச் சொல்லிக் காட்சி கொடுத்தாள்.
782 ஐந்து மிருபது மாகிய சொற்பொருடந்திவை யல்லது தத்துவ மில்லென்றசிந்தை யொழித்துச் சினவரன் சேவடிவந்தனை யேசெய்து வாழிநீ யென்றாள்.

வைசேடிக வாதம்
783 ஆட்டினா ளவனையு மாக்கிச் செல்பவள்வீட்டினார் நெறியென விரித்த மேலையோர்காட்டினார் பலருளுங் கணாத னேயெனுமீட்டினா னுலோகன திடத்தை யெய்தினாள்.
784 வனப்புடை மாதரைக் கண்டு மாதவன்சினப்புடைக் கருத்தின ளென்னச் சிந்தித்தேநினக்கினி நெறிவயி னின்ற மெய்ம்மையைமனக்கொளக் கிளக்குவேன் மன்னுங் கேளென.
785 நெறியெனப் படுவது நின்ற மெய்ம்மையங்கறிதலுக் கரியன வாறு சொற்பொருள்செறியயான் சொலிற் றிரப்பியங் குணந்தொழில்பொறியினாய் பொதுசிறப் புடன் புணர்ப்பதே.
786 பூதமைந் தொடுதிசை மனம்பொ ழுதுயிரோதினப் பொருள்கடா மொன்ப தாமவைநீதியிற் குணமவற் றியல்பு செய்கையும்போதரும் பொருட்புடை பெயர்ச்சி யாகுமே.
787 பெரியதும் பின்னது மாய தப்பொதுஉரிதினிற் பொருள்களைச் செலுத்து மொற்றுமைதெரிவுற வருவது சிறப்ப தாங்குணக்கிரியைக ளிதற்கெனக் கிளத்தல் கூட்டமே.
788 ஆறின் முதன்மூன் றத்தி மற்றவற்றீறின் மும்மையு மின்மையை யெய்தினகூறின பொருள்களுங் குணனுஞ் செய்கையும்வேறென விரித்தனன் விசேட வாதியே.
789 தத்துவ மிவையெனத் தலையுந் தூக்கினாட்கொத்ததன் றோவென வுரைநல் லாயினியித்தவ மிப்பொரு டேறி யான்செயிற்பொய்த்தவ மாதலிற் போவ னென்னவே.
790 மெய்ந்நெறி யிதுவென விரிப்பக் கேட்டிருந்திந்நெறி யமைதியின் றென்னுஞ் சொல்லினாய்பொய்ந்நெறி யாதலைத் தேற்றிப் போகெனக்கைந்நிறுத் தாளது காட்டக் கேளென.
791 நிலமுதற் பூதமாய் நின்ற நான்மையுங் குலமுதன் மூர்த்தியாய்க் கூறி னொன்றவையலமுதற் பொருள்களாய்ப் பன்னி னாயவைவலமுறை யிடமுறை வருதல் காட்டுகோ.
792 உரியதோர் நீரணைந் துப்ப தாகுநெய்யெரியெழு முளர்ச்சியா லிரைக்குங் காற்றதாம்பெரியதோ ருருமுநீர்ப் பிண்டம் வந்துநீ¡;வரிசையிற் படலமாய் வந்த வல்லவோ.
793 ஒலியதன் குணமென வுரைத்தி யாதலால்வலியுடை நிலையில மற்றெப் பூதமும்ஒலியொடு முதறம்முட் புல்ல லின்மையாற்கலிசெய லொழிகநின் காய மென்றனள்.
794 சுட்டின திசைத்திறஞ் சொல்லிற் சூரியன்பட்டது மெழுந்ததும் பற்றி நான்குமாய்யெட்டெனப் பலவென வின்ன தன்மையாற்கட்டினர் வழங்கினுங் காய மெய்துமே.
795 மண்டிலம் பலரையு நிறுவி மத்திமங்கொண்டுநின் றான்றிசை கூறு மின்னெனவெண்டிசை யவன்வயிற் பிறக்கு மென்பவேற்கண்டில நின்பொருள் காட்ட வல்லையோ.
796 அத்திசை யவனுமா யல்ல னும்மெனவெத்திசை யவர்களு மிசைப்பி னேகநீபத்திசெய் தினியென்னைப் பரமன் பாதமேசித்தியு முடிவெனச் சேர்ந்து வாழ்தியே.
797 மன்னுமம் மனமெனப் படுவ தாவதேயின்னுயி ருருவினோ டியைந்த வொற்றுமையின்னுமக் காலமு மிருமைத் தாகலினின்னுடைப் பொழுதவ ணிற்ற லில்லையே.
798 குணங்களுந் தொழில்களுங் கூறி வேறெனிற்பிணந்தனைச் சீவனாய்ப் பெற்ற தென்னையோவுணர்ந்தில னுரையுமொன் றிலனெனி னுறுதிநாம்புணர்ந்தில மவன்வயிற் போந்த தில்லையே.
799 எப்பொரு ளெக்குணத் தானு மில்லையேலப்பொரு ளக்குணத் தயல தாதலாற்செப்பிலக் குளிரினாற் றீய துண்மைபோற்றுப்பெனப் பொருள்களுந் தோற்ற மில்லையே.
800 குணத்தொடு குணிகளைக் கூறி வேறெனப்புணர்ப்பதோர் பொருளினை வேண்டிற் பொய்யெனிற்குணத்தொடு குணிகளுங் கூட்ட மின்மையாலுணர்த்துதற் கரிதவை யுளவு மல்லவே.
801 ஒன்பதுந் தத்தும துண்மை யாற்பலவென்பது மெனைத்தென வெண்ணப் பட்டதும்வன்பிதன் குணமிது வென்னப் பெற்றதுமன்பதற் குடைமையி னறியப் பட்டதே.
802 அதனது குணமதற் கயல தாதலாலிதனது குணமென விழுக்கிற் றென்னையோஉதனமு முணர்விலை யொன்ற தென்றக்கால்விதனமும் படாயது மெய்யு மாகுமே.
803 கெடக்கெடும் பொருளெனிற் கேடு முண்டெனப்படப்பெறு மதற்குநி பரிவ தென்னையோவடக்குந்தன் றோற்றமு மொட்டி மும்மையமடக்கிலு மதுபெரி தழகி தாகுமே.
804 குணங்கடாங் குணியெனுங் கூற்று முண்மையிற்பிணங்கலாய்ப் பொருள்வயிற் பேறு முள்ளதேயிணங்கலா யிருமைய தின்மை யுண்மையும்வணங்கலாம் வகையதோர் மாட்சி மிக்கதே.
805 பண்பினாற் பொருள்களுக் காய பல்பயஞ்செண்பினா னறிவினான் செறிவி னானெனமண்பொனாற் குணநிலைக் காய மாட்சியாநண்பினா னல்லது நடத்த லில்லையே.
806 விலைபெறு நன்மையால் வெறுப்ப தீமையால்கொலைபெறுங் களவினாற் குணத்தி னக்குணநிலைபெறும் பொருளினா னின்ற வொற்றுமையலைபெறும் வேறெனி னாவ தில்லையே.
807 நல்வினைப் படுதலுந் தீவினைப் படுதலும்பல்வினைப் பாகினாற் பயங்க ளெய்தலுமில்வினைக் குணங்கடா மென்றும் வேறெனிற்சொல்லில சுழற்சியும் வீடுந் தோற்றமே.
808 ஆட்டுடை யாடன வாட றாங்களுமோட்டுடைக் குதிரையு மோட்டு மென்றின்னகூட்டிய வப்பொருட் கொடைய வாதலான்மீட்டவை யொன்றென வேண்டல் வேண்டுமே.
809 கூத்த ராடலுங் குதிரை யோடலுமோத்துரை யுள்பட வொழிந்த யாவையுநீத்தன வேயல்ல நிலையு முண்மையிற்போத்தரல் வேண்டினப் பொழுதி னாகுமே.
810 பிணங்கல வாய்த்தம்முட் பிறக ளாகியகுணங்களுந் தொழில்களுங் குழுமிக கெட்டனபுணர்ந்துடன் பொருள்வயிற் போந்த வாறுநீயுணர்ந்திலை யதுவுநின் னுடைய தேபிற.
811 பாதுவெலாப் பொருளொடும் பொருந்தி நின்றதேலதுவெலாப் பொருள்களை யாக்கு மொற்றுமையிதுவலா லவைதம்மு ளியைத லில்லையேல்செதுவலாம் பிறவது சென்ற தென்றலே.
812 அன்றியும் பொதுவது வந்தமில் பொருட்சென்றதே யென்றலாற் சிதர்ந்து பன்மையாய்க்குன்றியுங் கூடியு நின்றுங் கொள்பயமின்றியும் போதலா லென்னை யாயதோ.
813 பொதுவெனப் படுவதோர் போலி யாதலாற்பொதுவெனப் படுவன போன்ற தாங்களேயதுவென மீட்டிருந் தாறென் றெண்ணுவாயிதுவென வென்னையிங் கிதனோ டேழெனாய்.
814 சிறப்பெனப் படுவது தெரியி னப்பொருளறப்பெற நின்றவக் குணம தாதலின்இறப்பவு மிதுதன தின்மை யேயினாய்புறப்படுத் திடுவனுன் பொருள ளெண்ணலே.
815 கூட்டினா லல்லது கூட்ட மில்லையேற்கூட்டுவான் செல்வதுங் கூட்ட மில்லையேபாட்டினாற் பலவுமாம் பயமி லாதனமூட்டினா லுரைத்தியோ முனிவு போக்கிதோ.
816 கொக்கொடக் கருமையைக் கூட்டு வித்தலுஞ்சுக்கொடத் துவர்ப்பினைத் துன்னு வித்தலுஞ்சிக்கென வேற்றுமை தீர்ப்பி நீயெனநக்கன ளளியனோ நயவ னென்னவே.
817 என்றுமப் பொருள்களு மியல்புந் தங்களோடொன்றென வருதலா லொன்று மாகுமேயென்றலி லிருமையுந் தெரியி னின்மையாலின்றினிக் கூட்டுவ தில்லை யில்லதே.
818 ஒன்றுநற் பொருள்கடாங் குணங்க டாம்பலவென்றுநீ யேகம் வேறென்ப தென்னெனப்பொன்றுமக் குணமெனிற் பொருட்கு மாமெனநன்றினிக் குணமுண்மை நாட்ட மாமென.
819 குணிக்கணா னோக்கினாற் குணங்க ளில்குணத்தணிக்கணா னோக்கினா லதுவு மன்னதேபிணிக்கலாம் பிரிக்கலாம் பெற்ற நான்மையிற்றுணிக்கலாந் துருநெறி துன்னு நன்மையே.
820 இல்லையக் குணங்குணிக் குண்மை தானெனச்சொல்லினக் குணிகுணத் தொன்று மாதலாலல்லதக் குணங்களு மவைக ளாமெனநல்லதித் துணிவென நயத்தி லெய்தினான்.
821 பொருளொடக் குணந்தொழிற் குண்மை யொன்றெனத்தெருள்வது மும்மையிற் றெரிய வைப்பதுமருளுடை யறநெறி யண்ணல் சேவடியிருள்கெட நினைத்தலு மினையை யாகென.
822 ஓம்படுத் துலோகனை யொழியச் சொல்லியான்காம்புடைக் கடநெறி கடப்ப னென்னவேபேம்படுப் பவரொடும் பிரிவின் னாமையைத்தேம்படு கிளவிநீ சிந்தி யென்னவே.
823 ஒக்குமவ் வுரையென வுள்ள தேயெனநக்கன ளாகிய நாதன் சேதியஞ்சிக்கென வேத்துதல் சிறந்த தென்னவேதக்கதென் றவன் சொலத் தானு நீங்கினாள்.

வேத வாதம்
824 காதம் பலவும் கடந்தபின்காகந்திக் கடிநகருள்வேதமு மங்கமும் விச்சைகணிலைமையும் வேண்டுநர்கட்கோதவுங் கேட்பவு முரைத்தலினுலகினு ளறியப்பட்டான்பூதிக னெனப்படு மந்தணனோத்திடம் புக்கனளே.
825 என்னை யிங்குநும் பொருளெனவினவலு மிவ்விருந்தவன்னைதன் வரவிதே லாதியிலருமறை யதுமுதலாப்பின்னைவந் தனகளு மிவையெனப்பையவே யெர்த்துரைத்தான்முன்னமங் கிருந்தவோர் முதுமகனவைதன் முறைமையினே.
826 நாத்திக மல்லது சொல்லலையாயின்மு னான்பயந்தசாத்திர மாவது வேதமன்றோவது தான்சயம்புசூத்திரி நீயது வல்லையலாமையிற் சொல்லுகிறாய்போத்தந்தி யோவதன் றீமையென்றான்பொங்கிப் பூதிகனே.
827 பூதிகன் றானது சொல்லலும் யானது வல்லனெல்லாம்சாதிகண் டாயெனத் தான்றள ராது சாற்றுகென்றாட்காதியென் றானுமோ ரந்தமென்றானுமுண் டேலதற்குநீதியி னாலுரை நீயினி யானது நேர்வ னென்றான்.
828 செய்கையும் புதுமையு முடைமையிற்றிருட்டத்தின் மறுதலையிற்பொய்யொடும் பொருளொடுங் குவகொடுஞ்சாலவும் பொருந்துதலின்மையறு மயக்கமு மாற்றொடுகொலைமன்னு மருவுதலின்ஐயமி றீக்கதிச் செலுத்துவததுவென்னை யாவதென்றாள்.
829 யாரது செய்தவ ரறியிலிங்குரையெனி லங்கொருவனூரது நடுவணொ ருஐறயுளில்மலம்பெய்திட் டொளித்தொழியிற்போ¢னு முருவினும் பெறலிலனாதலின் றாக்குறித்துத்தோ¢னு மினியது செய்தவரில்லெனச் செப்புவவே.
830 தோற்றமு நாற்றமுஞ் சுவையுடனூறிவற் றாற்றொடங்கியாற்றவு மாயிரு வேதம்வல்லார்கள· தறிந்துரைப்பமேற்குலத் தாரோ டிழிந்தவரென்பது மெய்ம்மைபெறாநூற்றிறஞ் செய்தவ ரறிகுவர்நுழைந்தறி வுடையவரே.
831 முயற்சியி னிசைத்தலி னெழுத்தினிற் பதத்தினின் முடிவதனால்செயற்பட லுடையத னியற்கையிற்செய்தவர் பெயர்பெறலாலியற்கைய தன்றுநின் வேதமென்றேதுவி னெடுத்துரைத்தாள்புயற்றிற லிகலிய கூந்தலின்பெயருடைப் புலமையினாள்.
832 கதியவர் தம்பெய ரின்னவைசுட்டின காட்டலினுமுதியவர் நாள்களொ டொப்பிலவிப்பொழு தொத்தலினும்விதியது வாதலின் வேதத்தையாஞ்சொல்லுங் கீதத்தைப் போற்புதியது வேயெனச் சொல்லுதுநாமது பொருந்து மென்றாள்.
833 கொல்வது தீதெனப் பொருள்வழிவேள்வியிற் கொலப்படுவவெல்லையொன் றிலதென்ப விணைவிழைச்சொழிகென்ப வம்முகத்தாற்செல்கதி யுளதென்ப தீர்த்துகநெறியென்றுந் தீயவென்றுபல்லவர் துணிவுமெம் வேதத்தினுளவெனப் பயின்றுரைப்ப.
834 சாதிக்கட் பயவா தவப்பயந்தருமெனத் தந்துரைப்பவாதிக்க ணான்வழி நால்வரதமைதியை யமர்ந்துரைப்பசூதித்த தோற்றமும் பிழைப்பெனச்சூத்திரப் பிறவிகொள்ளார்வாதித்த வாறென்று தெருண்டவர்க்கிவையிவை மயாமயக்கே.
835 மறுதலை தத்தமு ளாக்கிமயக்கமுஞ் செய்தமையாற்பெறுதலை யென்னைகொ றத்துவந்தனையன்று பறுமுண்டேயுறுதியுஞ் சால்பு முடையனயாவையு முண்மையினாற்செறுதலை யேவில்லை சீர்த்தனசெய்விக்குஞ் சிட்டிதுவே.
836 வசுக்களொ டுருத்திரர் பிதிரரோடிவர்முத லாப்பலர்க்கும்பசுக்களோ டெருமைகள் குதிரைகள்புலியொடு நாய்முதலாவிசுக்கிழிந் தனபல கொலைகளுமிரங்கலிர் கொன்றவரையசிப்பவர் போன்றனி ராயினுமருவினை யாநுமக்கே.
837 தேவரும் பிதிரரும் நுதலிய கொலைகளிற் றீவினைதாமேவர வல்லன வேண்டுவல் யானென வேண்டுதியேல்யாவரையு நுதலியு மவரவர் செய்தன வவரவர்க்கேயாவரி னடையுமவ் வருவினை நுமக்கறி வரியதென்றாள்.
838 ஊட்டுதும் யாமென் றுமர்களைநுதலியோர் சாலைவைத் தால்வீட்டினங் கிடலின்றி வினைநிலைநுமக்கறி வரியதுபோல்கூட்டிமற் றவர்களை நுதலியகொலைவினை தங்களையுங்காட்டுகில் லாரவர் தாமவையறிவதோர் கணக்கிலரே.
839 சிறந்தவர் தங்களுக் கெய்துகசென்றென்னுஞ் சிந்தையராயறம்பல செய்தவர்க் கல்லதங்கவர்களுக் காகுமென்றாற்றுறந்தவர் வீடுபெற்றார்களைநுதலிய தொடர்வினையும்பிறங்கியிப் பிறவியிற் போக்குமற்றிவையென்ன பேதைமையே.
840 நண்பரை நுதலியும் பகைவரைநுதலியு மமிர்தொடுநஞ்சுண்பவர்க் கல்லதற் கவர்களுக்காமென வுரைக்குநர்யார்பண்பிலி தேவரை றுதலியகொலையினிற் பல்வினைதானுண்பல வகையினி னடைந்தவைவிளையுங்க ணுமக்குமென்றாள்.
841 கொன்றவர்க் கல்லது நுதலப்பட் டார்களைக் கூடலவேற்றின்றவர்க கியாவையுந் தீவினைசேரல தேவர்க்குப்போலென்றுரைப் பாய்க்கெய்து மேழைமையுண்குவ வேலிமையார்க்கொன்றுவி யேனல னோவினையூன்றின்பவர்க் கொப்பவென்றாள்.
842 ஈகளு நாய்களுங் கொன்றவரீவகண் டின்புறலிற்றீயவை யேசெய்யுந் தேவரத்தீவினை தீர்க்கிற்பவோநோய்களும் பேய்களு மொழிக்குவமெனினவை நுங்களுக்குமாய்விடி னுணரின· தாம்வினையகற்றுதற் கரியதென்றாள்.
843 நம்முறு துன்பங்க ணாமொழிக்கல்லலம் பிறருறுபவெம்முறை யாயினும் போக்குதற்கரியவிங் கிவர்களைப்போற்றம்முறு துன்பமும் தாமொழிக்கில்லலர் பிறர்களையேலெம்முறை நோய்களுஞ் செய்குபவவரென விகழ்ந்தனளே.
844 நாங்கொன்று கொடுக்குமவ் விலங்கினைநலிவதோர் பசியினரேற்றாங்கொன்று தின்குவ ராய்விடினவர்களைத் தவிர்க்குநர்யார்தீங்கொன்று முரையன்மின் தேவர்தம்மூணினைச் சேணின்றுதாம்வாங்குத லல்லது முடையொடுசோறுண்ணும் வயிற்றினரே.
845 - 845 ஆஞ் செய்யுளிலிருந்து 851 ஆஞ் செய்யுள் முடியவுள்ள எட்டுச் செய்யுளும் அவற்றின் உரைகளும் சுவடியில் இல்லை.
846 - 845 ஆஞ் செய்யுளிலிருந்து 851 ஆஞ் செய்யுள் முடியவுள்ள எட்டுச் செய்யுளும் அவற்றின் உரைகளும் சுவடியில் இல்லை.
847 - 845 ஆஞ் செய்யுளிலிருந்து 851 ஆஞ் செய்யுள் முடியவுள்ள எட்டுச் செய்யுளும் அவற்றின் உரைகளும் சுவடியில் இல்லை.
848 - 845 ஆஞ் செய்யுளிலிருந்து 851 ஆஞ் செய்யுள் முடியவுள்ள எட்டுச் செய்யுளும் அவற்றின் உரைகளும் சுவடியில் இல்லை.
849 - 845 ஆஞ் செய்யுளிலிருந்து 851 ஆஞ் செய்யுள் முடியவுள்ள எட்டுச் செய்யுளும் அவற்றின் உரைகளும் சுவடியில் இல்லை.
850 - 845 ஆஞ் செய்யுளிலிருந்து 851 ஆஞ் செய்யுள் முடியவுள்ள எட்டுச் செய்யுளும் அவற்றின் உரைகளும் சுவடியில் இல்லை.
851 - 845 ஆஞ் செய்யுளிலிருந்து 851 ஆஞ் செய்யுள் முடியவுள்ள எட்டுச் செய்யுளும் அவற்றின் உரைகளும் சுவடியில் இல்லை.
852 பொய்த்துரை யாநன்மை போதுவ தேலில்லை பூதிகனேசத்திய மேயுரை நீயெனத் தானும· தேயுரைத்தானெத்திசை யார்களு மேத்துதற் கேற்றன னிவனுமென்றார்தத்துவ ரேநின்று தத்துவ ரெனப்படுந் தன்மையினார்.
853 நன்பொரு ளாவன விவையெனவவனோடு நகரத்துள்ளாரின்புறும் வகையினி னெடுத்தன ளுரைத்தபின் விடுக்கலுற்றாட்கன்புபட் டவர்களு மறநெறியறிவித்த வார்வத்தினாற்பின்புசென் றொழிதுமென் றதுசெய்துவலங்கொண்டு பெயர்ந்தனரே.
பூத வாதம்
854 வேத வாதம் வெளிறுசெய் தாளங்கோர்பூத வாதியும் பொங்கினன் மேற்செலவாத வாதி யிவனை யடக்கினாலேத வூதிய மில்லென வெண்ணித்தான்.
855 நில்லப் பாவினி நீகண்ட தத்துவஞ் சொல்லற் பாலையிங் கென்னலுஞ் சொல்லுவான்மல்லற் றானை மதனசித் தன்னெனுங்கல்லொத் தோங்கிய தோட்களி யானையான்.
856 அணிகொ ளாரத் தரசவை கேட்கெனப்பிணிகொள் மூஞ்சிப் பிசாசகன் சொல்லுவான்குணிகு ணம்மெனுங் கூற்றில னாலதென்றுணிவைம் பூதங்க ளேதொழில் சொல்லுவேன்.
857 தண்ணென் றீநில நீர்வளி காயத்தாற்கண்ணு மூக்கொடு நாமெய் செவிகளாய்வண்ண நாற்றஞ் சுவையினொ டூறொலியெண்ணுங் காலை யியைந்துழி யெய்துமே.
858 ஐந்துங் கூடிய றிவின்ப மாதியாய்வந்து தோன்றி மதுமயக் காற்றலினந்தி நாளுங் குடஞ்சுடர் நாட்டம்போற்சிந்தி னாலவை சென்றினஞ் சேருமே.
859 உலகெ லாமவை யேயுயி ருண்டெனச்சொலவ லாரன சொற்றெளிந் தேநின்றுபலக லாங்களுஞ் செய்வ பயனிலார்புலவ ராவதன் றோவங்குப் போந்ததே.
860 சென்ற காலத்துஞ் செல்கின்ற காலத்துநின்ற காலத்தி லும்மிந் நிகழ்ச்சியேயென்று மிவ்வுல கித்தன்மைத் தேயிதுவன்ற தென்றுரைப் பாரயர்ப் பார்களே.
861 இட்ட மாவ திதுவெனக் கேட்டவள்சிட்ட ரன்றியுஞ் சென்றிருந் தார்க்கெலாமொட்டி மீட்டு முரைத்துளந் தான்கொளீஇக்கட்டு ரைய்யெடுத் தாள்கயற் கண்ணினாள்.
862 வினையி னீங்கி விளங்கிய ஞானத்தோர்முனைவ னின்மையி னான்முதல னூலில்லையனைய மாண்பின தாகம மாதலாற்புனைவ னின்னுரை பொய்யெனச் சொல்லியே.
863 கவைத்த கோலொடு கட்டில் கடிஞைகாத்தவத்திற் கொத்தன தாங்கினித் தாபதம்அவத்த மேபிற வாருயி ரில்லையேற்சுதத்தி னாலுய்த்தல் சூதது வாகுமே.
864 பூத மல்லது பொய்பிற நூலென்றுவாதஞ் செய்து வருந்தி முடிப்பதென்நாத னன்னெறி நல்வினை நற்பயன்யாது மில்லை யெனின· தவத்தமே.
865 யாது மில்லை யுயிரிவை யாஞ்சொல்லும்பூத மேயெனப் போந்திருந் தென்னொடுவாதஞ் செய்கின்ற பூதமவ் வாதமோயாதைம் பூதங்க டம்முள்ளு ம·தினி.
866 அளித்த வைந்திற் கறிவின்ப மாக்குவான்களித்தற் காற்ற லுடையன காட்டினாய்களித்தற் காரண காரிய மூர்த்தியாலொளித்து நின்ற வுணர்வுரு வென்றியோ.
867 உருவின் காரிய மேலுரு வென்றுணரருவின் காரிய மேலவா காயக்காமொருவன் காரிய மன்றுணர் வென்கின்றாய்மருவுங் காரண காரிய மற்றெனோ.
868 வையு மண்ணு மயிரு மலமுமோர்பையுள் வைக்கப் பளிங்கும் பயக்குமோபொய்யைம் பூதம் புணர்ந்துணர் வோடின்பம்செய்யு மென்பது சிந்திக்கற் பாலதோ.
869 கள்ளப் பூதமுங் காமிக்கும் பூதமும்வள்ளற் பூதமும் மல்லவு மல்லவாலுள்ளப் பூதமொன் றாக்குவ துண்மையைக்கொள்ளப் பூதக் குணமவை யல்லவே.
870 பொறியைந் தாலைந்து பூதத்தி னாகியவறிவைந் தாலைந்து மவ்வைந்திற் காகுமோபிறிதொன் றோபொருட் பெற்றிமற் றிற்றெனக்குறிகொண் டாயொன்று கூறெனக் கென்னவே.
871 ஒன்றன் காரிய மொன்றென வொட்டினுஞ்சென்றெ லாமவை சேதனை யாகுமேயன்றெ லாமவை யாக்கமொன் றேயினியென்ற லானும· தின்னுயி ரெய்துமே.
872 அனைத்துப் பூதமு மேயறி வாக்கினான்மனத்துக் கின்னுமோர் பூதத்தை மன்னுநீநினைத்துக் காணன்றி நேடியுங் காணையாவெனக்கு நீசெய்வ தித்துணை யேயினி.
873 பிண்ட மாகிப் பிறந்தன யாவையும்உண்டுங் கண்டு முணர்ந்தவுஞ் செய்தவுங்கொண்டு மீட்டவை கூறுதல் கூறுங்கால்கண்ட பூதத்துக் காரிய மென்றியோ.
874 பிறந்த நாள்களுட் பிள்ளையு மல்லவு மறிந்து தாய்முலை யோடல்ல வுண்டிகளறிந்த வாறென்கொ லோவைந்து பூதமுஞ்செறிந்த நாள்களுட் செய்வன வல்லவால்.
875 புத்தி யானின்றிப் பூதத்தி னாயவேற்பத்து மல்லவும் பன்றிக்கு நாய்கட்குமொத்த தன்மைய பன்மைய குட்டிகள்வித்தி னாய வினைவிகற் பாம்பிற.
876 குறைந்து பூதங்கள் கூட்டமுண் டாமவணுறைந்த பூதத் துணர்வல்ல தின்மையாலறைந்த பூதங்க ளைந்துமங் கில்லெனின்மறைந்த பூதத்தி லுண்மைவந் தெய்துமால்.
877 நீருங் காற்றுமல் லானில மில்லையோவூருஞ் சங்கினோ டூர்மச்சி மூக்சிலதோ¢ யுண்டலிற் றீயுமுண் டில்லைகண்காரி யஞ்செவி காணலங் காயக்கென்.
878 ஒன்றொன் றாக வுணர்ச்சி முறைமையாற்சென்று பூதங்கள் சேர்வதற் கேதுவென்குன்றித் தத்தமுள் யாவையுங் கூடுமேனின்ற மெய்ம்மை நினதென நேர்வல்யான்.
879 ஐந்து பூத மவற்றவற் றாலைந்துமிந்தி யங்க ளியையு மிவையெனுஞ்சிந்த னையொழி நீயெனச் செப்பினாளுய்ந்து வாழு முயிருண்மை யொட்டினாள்.
880 உணர்வு மின்பமு மோரறி வாதிக்கட்புணரு மேயெனிற் பொய்தொகைக் கண்ணெனலுணர்வு மின்பமு முள்வழி யேயுயிர்புணரு மென்றனள் போதன கண்ணினாள்.
881 காற்றி னாலுடம் பாமெனிற காற்றினேதோற்றி னாலுயிர் தான்றொகை யென்செயுமாற்றிவ் வைந்தினு மாருயி ராமெனுமாற்ற மாயின் மனங்கொளற் பாலதே.
882 வேறு வேறைந்து பூதமு மெய்ம்மையாலீறுந் தோற்றமு மில்லுயி ராயினபாறி யாவையும் பாழ்த்தொழி யும்மெனக்கூறி னாயது குற்ற முடைத்தரோ.
883 குழவிக் காலத்துக் கூறின யாவையுங்கீழவுக் காலத்துக்கண்ணவை கேட்டலாலிழவெக் காலு மிலானினி யார்களைத்தொழுவிப் பானங்கோர் தோன்றலுந் தோன்றுமே.
884 துன்பந் தூய்மையுந் துட்கென வுட்கலும்அன்பு மானமு மாயமு மாண்மையுமின்பு மென்றிவை யாக்கிய தீதெனமுன்பு நின்று முறுக்கவும் வல்லையோ.
885 கனவு மந்திரம் சிந்தனை வாழுநாள்வினவு சோதிடங் கேட்டுரை புட்குரல்அனகள் யாவையு மென்னைநின் பூதங்களனகொ னீயிங் கறிந்தனை சொல்லென.
886 வைத்த வத்து மறுபிறப் பிற்றமர்க்குய்த்துக் காட்டுத லேலுல கொட்டுமாலெத்தி றத்தினு மில்லுயு ரென்றிநீசெத்து வம்மெய்திற் சில்லைமை செய்பவால்.
887 பேயு மில்லை பிறப்பது மில்லென்பாய்வாயுங் கிள்ளிப் புடைப்ப வருவதென்மாயத் தாலன்றி மந்திரத் தாற்றெய்வங்கூயக் காலறங் கோடலை யொட்டென.
888 ஒட்டி னேனென் றுரைப்ப வுணர்விலாமுட்டை காண்கென முனகை முறுக்கியேசுட்டி னாளங்குத் தோற்றமு நோக்கெனவிட்டுத் தான்றன் விகுர்வணை காட்டுவாள்.
889 கழுதுங் காணலராகிக் கலங்கியேயழுதுஞ் சாப வகலிடத் தாரிவன்முழுதுங் காணின் முடியு மெனமுன்னிவழுவில் வாயும் வளைபல்லுந் தோற்றலும்.
890 கண் புதைத்துக் கவிழ்ந்தனன் வழவேதிண் பதத்திற் றெருட்டி யெடுத்திரீஇப்பண்பு தக்கன சொல்லிப் பரியனின்நண்ப தென்று நடுக்கமுந் தீர்த்தபின்.
891 பேய்கண் டாயதன் பெற்றி யுரையெனவாய்கண் டேனென்னை வாழ்க்கை வலியன்மின்நோய்கொண் டேனென வஞ்ச னுனக்கவடாய்கண் டாயென்றுஞ் சாதலில் லையென.
892 பெற்ற பேரும் பிசாசிக னென்பதேயற்ற மின்றி யவட்கு மகனைநீகுற்ற மில்லறங் கொள்ளின்மற் றெம்மொடுசுற்ற மாதலிற் சொல்லெனச் சொல்லுவான்.
893 பிறப்பும் பேயு முதலாப் பிறகளுந்திறத்தி னீசொன்ன யாவையுந் தேறிநின்றறத்தை யானு மமைவரக் கொண்டனென்மறக்க லேனினி மன்னுமை யானென.
894 பேந்தரு தோற்றப் பிசாசிக னிற்றெனவேந்துமவ் வேத்தவை யாரும் வியப்பெய்தியாய்ந்த கேள்வியி னாளை யையா யெனமாந்தர் யாரு மதித்தன ரென்பவே.

நீலகேசி முற்றிற்று.

கந்தங்க ளெல்லாங் கடையறக் கெட்டக்கணந்தமி லாக்குற்ற மாமெனச் சொல்லுஞ்சந்தங்க டம்முட் சவலைச் சந்தானமும்வந்த· தெவன் செய்யும் வாமமாற் றென்றாள்
by   on 27 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.