LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- கி.ராஜநாராயணன்

நீர்முள்ளு

 

(18+ வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் – நாட்டுப்புற பாலியல் கதைகள் நூலின் இருந்து).
கதை சொல்லத்தொடங்கியதும் பெரியவருக்கு சிரிப்பாணி அள்ளியது. பேச்சு முதலில் நீர் முள்ளுச்செடி பற்றி வந்தது. நான் அதைப் பார்த்ததில்லை என்றேன்.
அய்யோ அது கெட்ட கழுதெயில்லா; அது பண்ணுன கூத்தைக் கேளுங்க என்று தொடங்கினார் பெரியவர்.
‘இப்படித்தாம் பாருங்க, எங்க ஊர்ல ஒரு ‘செவ்வாளப்பய’ சரியான வெடுவாச்சுட்டி. எருமை மாட்ட மேய்ச்சுட்டு வந்து தண்ணியில அடிச்சாம்.
எருமக் களுதைக தண்ணிக்குள்ள எறங்கினா சாமானியமா வெளியேறுமா சவம். அத வெளியேத்துததுக்குள்ளே மனுசம் படுற பாடு…குளத்து கரையில ஒத்தக் கல்லு காங்க முடியாது. சுத்தி சுத்திப் பெறக்கி எரும மாட்டே எறியதேம்னு சொல்ல.
தண்ணிக்குள்ள வீசிக்கிட்டே இருந்தா எங்கென இருக்கும் கல்லு!
பய..நல்லா வேகமா நீஞ்சுவானாம். எல்லாத்தையும் களைஞ்சு எறிஞ்சுட்டு, நாளு வெரல் அகலத்துல உள்ள கோமணத்த மட்டும் வச்சுக்கிட்டு தண்ணிக்குள்ள பாஞ்சாம். அந்த இடத்துல தண்ணீக்குள்ளார ‘நீருமுள்ளுச் செடி’ இருந்தது அவனுக்குத் தெரியாது.
கோமணத்துல ‘சுருக்’குன்னதும் சுள்ளாச்சுருக்குதாம் போலிருக்குன்னு நெனச்சு கவனிக்காம விட்டுட்டாம்.(சுள்ளாஞ்சுருக்கு – துணிகளின் மேல் ஒட்டிக் கொள்ளும் ஒருவகை புல்லின் விதை. துணியின் மீது ஒட்டிக் கொண்டு அசைவின் போது சுருக்கென்று உடம்பில் தைக்கும். இதனால் கெடுதி இல்லை; உபத்திரவம்தான்)
இந்த நீர்முள்ளுச் செடியோட முள்ளு, ரோமத்தை விட கொஞ்…சம் கனம்; அவ்வளவுதான். மஞ்சள் நிறத்துல இருக்கும். பய நிறமும் மஞ்சள்; அதனால் ஒண்ணும் தெரியல சரியா. அதோட நல்ல விளையாட்டுப் பருவம்; கக்கத்துலல்லாம் அப்பத்தாம் ரோமம் முளைக்கிற வயசுன்னு வச்சுக்கிடுங்களேம்.
ஒரு நாளாச்சி, ரெண்டு நாளாச்சு, மூணு நாளாச்சு பொதுபொதுண்ணு வீங்கிருச்சு. கோமணம் வய்க்க முடியல! பய மேலுக்கு குதுகுதுன்னு வந்துட்டு.
யாரிட்ட காணிப்பான், காணிக்க கூடிய இடமா?அண்ணைக்கி பெயலால மாட்டுக்குப் போக முடியல. இழுத்து மூடிப்படுத்துக்கிட்டு முக்கிக்கிட்டு மொனங்கிக்கிட்டும் கெடக்காம்.
ஏலே; எந்தி; நேரங்காணாதான்னு அவம் வீட்டுத்தாத்தா வந்து உசுப்பினாரு. தாத்தாகிட்ட கொஞ்சம் ஒட்டுதல் உண்டும் இவனுக்கு.
மெண்ணு மெண்ணு முழுங்கி ஒருபடியா இப்படி சங்கதின்னிட்டு சொன்னான்.
எங்கலே பாப்பம்னுட்டு பாத்தா…பெரிய மஞ்ச முள்ளங்கீக்கிழங்கு கணக்கா வீங்கிக் கிடக்கு! கண்ணாடியா மின்னுது.
அட பெயித்தியாரப்பயலே, ஆரம்பத்திலேயே சொல்லப்படாதா, இப்பிடி வீங்கிப்போச்சே, உழுவ மீனு மாதிரியில்ல ஆயிட்டுன்னு சொல்லி, பெயல கட்டுல்ல படுக்க வச்சி. பக்கத்து ஊருக்கு கொண்டு போனாவ.
பக்கத்து ஊருல, ‘பார்வை’ பாக்குதவரு இருக்காரு. இவுக போன நேரம் அவரு இல்லே. அவரோட சம்சாரந்தான் இருந்திச்சு. அந்தம்மாவும் ‘பார்வை’ பாக்கும்.
வர்றவுகளுக்கு அவதான் பார்வை பாத்துக்கிட்டிருந்தா. இவனோ வெடலைப் பெய; பொம்பளையிட்ட எப்டிக் காண்பிக்கிறதுன்னுட்டு தாத்தாவுக்கு யோசனை. சரி என்ன செய்ய. ஆபத்துக்குப் பாவமில்லன்னுட்டு அவகிட்ட இப்பிடி இப்பிடி சங்கதி; ‘நோக்காதண்டி’ ஆயிட்டது. நீங்கதாம் பாக்கணும்னு சொன்னாரு தாத்தா.
அதுலயா முள்ளு குத்தியிருக்கு. அதாம் அப்பிடி வீங்கியிருக்கு. அப்படீன்னா… நீங்க வேற ஆளத்தான் பாக்கணும்னு சொல்லிட்டா.
அம்மா தாயி ஒரு பக்கமும் தூக்கிட்டுப் போக முடியாது. இங்க கொண்டாந்ததே பரவாயில்ல. நீங்கதாம் காப்பாத்தணும்னு கால்லே விழாத குறையாக் கெஞ்சினாரு. அவ கிழவின்னாலும் குத்தமில்ல. கொஞ்ச வயசுக்காரி. கிழவனார் தாத்தா சொன்னதுல இருந்து மனசுக்குள்ள ‘நோக்காத் தண்டியா…நோக்காத்தண்டியா – அப்பிடின்னா பாக்கணுமே அதன்னு ஆசை!
சரி கொண்டாங்கன்னா.
கட்டுலோட தூக்கிட்டு வந்தாங்க. பயலெப் பாத்தா. பாத்ததுமே பிடிச்சுப் போச்சு. சரி இருக்கட்டும்னு நெனச்சி, தன்னோட கண்ணெ துணியால கட்டிக்கிட்டு, அவனோட கண்ணெயும் கட்டச் சொல்லிட்டு வேப்பங் கொழய சுழத்தி வீசி வீசி மந்திரம் சொல்ல ஆரம்பிச்சா.
மந்திரம் வர்றதுக்கு பதிலா வாய்லேர்ந்து நோக்காத்தண்டி நோக்காத்தண்டின்னுட்டுதான் வருது!
அய்யோ நோக்காதண்ணியா அத நாம் பாக்கணுமேன்னுதான் மந்திரம் வருது.
ஒன்றரை மணிநேரம் வேப்பங்கொழை அடிச்சாச்சி! மந்திரமும் ஓதியாச்சு.
வீக்கங் குறைஞ்சிருக்கா; வலி நின்னுருக்கான்னு கேட்டா.
வீக்கங் கொறயல. வலியும் நிக்கலேன்னு சொன்னதும் ‘சரி இதுக்கு வேற பக்குவங்தாம் செய்யணும். எல்லாரும் முதல்ல சத்தோடம் வெளியே நில்லுங்கன்னா. எல்லாரும் வெளியேப் போயாச்சு. கதவ ஒருச்சாச்சு வச்சிக்கிட்டா. தன்னோட கண்கட்ட அவுத்துட்டு, ஒரு ‘கோழி ரோமம்’ எடுத்தா.
வீங்குனதும்பேர்ல அப்படியோ பட்டதும் படலையோன்னு மேலும் கீழுமா ரோசுனா. அந்த வலியிலேயும் பயலுக்கு அப்படியே சொகமா இருக்கவும் கொஞ்சங் கொஞ்சமா ‘உசுருத்தலத்துக்கு’ உசுரு வர ஆரம்பிச்சது. விரிய விரியவும் சலம் தன்னப்போல ஒடஞ்சு வெளியேறவும் பயலுக்கு வலிக்கவும் செய்யுது. சொகமாவும் இருக்கு. அப்பிடியே பெறத்தால கையிரண்டையும் கட்டில் சட்டத்துல ஊனிக்கிட்டு முக்குதாம் மொனங்குதாம்;
மறி மோத்திரத்த குடிச்ச கெடாக்கணக்கா சத்தங் கொடுக்காம்! வெளியில நின்ன தாத்தாவுக்கு வாயெல்லாம் பல்லு!! சலத்தோட முள்ளு வெளியில வாரது மாதிரி அவருக்கு மனசுல தோணுது.
ஆனா இங்க செலந்தா வந்திருக்கு. முள்ளெக் காணோம். முக்காவாசி செலம் வந்திட்டதும் பயலுக்கு வலி குறைஞ்சிட்டது. முள்ள இனி பிதுக்கித்தாம் எடுக்கணும். உயிர்த்தலத்த பிதுக்கினா தாங்கமாட்டாம். திரும்பவும் கோழி ரோமத்தால தடவிக்கொடுத்தா. பிறவு அப்படியே நாக்கால தடவவும் பயலுக்கு வலிக்கு சூடா ஒத்தனங் கொடுத்த்து போல எதமா இருந்திச்சு. முள்ளு வர்ற மாதிரித் தெரியல. பல்லுபடாம பதனமா வலி தெரியாம இதமா சுவைச்சு உறிஞ்சி துப்புனா. சின்ன ரோமத்தண்டி விழுந்து கிடந்த்து. இப்ப எப்பிடி இருக்குன்னு கேட்டா.
செத்த தேவலன்னாம்
எப்பிடித் தச்சது முள்ளுன்னு கேட்டா
வெவரம் எல்லாத்தையும் ஒண்ணு விடாமச் சொன்னாம். ஒரு முள்ளுதாம் தச்சதாம்னு கேட்டு எல்லாப்பக்கத்தையும் பாத்தா.
தாத்தா சொன்னது சரிதாம்னு பட்டது அவளுக்கு
இது விச முள்ளு. இன்னும் நாலு நேரமாவது மந்திரிக்கணும். போயிட்டு மூணாம்பக்கம் வான்னு சொல்லி ஒரு பச்சிலையை அறைச்சிப் போடுன்னு சொல்லிக் கொடுத்தா.
இப்ப வலியில்ல. ஆனாலும் மூணாம் பக்கம் மந்திரிக்கப் போனோம்.
விச முள்ளுல்லா. கூடவே நாலு தரம் மந்திரிச்சாம்.
மந்திரிக்க மந்திரிக்கதாம் தெரிஞ்சது நீர் முள்ளோட அருமை அவனுக்கு.

           கதை சொல்லத்தொடங்கியதும் பெரியவருக்கு சிரிப்பாணி அள்ளியது. பேச்சு முதலில் நீர் முள்ளுச்செடி பற்றி வந்தது. நான் அதைப் பார்த்ததில்லை என்றேன்.அய்யோ அது கெட்ட கழுதெயில்லா; அது பண்ணுன கூத்தைக் கேளுங்க என்று தொடங்கினார் பெரியவர்.‘இப்படித்தாம் பாருங்க, எங்க ஊர்ல ஒரு ‘செவ்வாளப்பய’ சரியான வெடுவாச்சுட்டி. எருமை மாட்ட மேய்ச்சுட்டு வந்து தண்ணியில அடிச்சாம்.எருமக் களுதைக தண்ணிக்குள்ள எறங்கினா சாமானியமா வெளியேறுமா சவம். அத வெளியேத்துததுக்குள்ளே மனுசம் படுற பாடு…குளத்து கரையில ஒத்தக் கல்லு காங்க முடியாது. சுத்தி சுத்திப் பெறக்கி எரும மாட்டே எறியதேம்னு சொல்ல.

 

         தண்ணிக்குள்ள வீசிக்கிட்டே இருந்தா எங்கென இருக்கும் கல்லு!பய..நல்லா வேகமா நீஞ்சுவானாம். எல்லாத்தையும் களைஞ்சு எறிஞ்சுட்டு, நாளு வெரல் அகலத்துல உள்ள கோமணத்த மட்டும் வச்சுக்கிட்டு தண்ணிக்குள்ள பாஞ்சாம். அந்த இடத்துல தண்ணீக்குள்ளார ‘நீருமுள்ளுச் செடி’ இருந்தது அவனுக்குத் தெரியாது.கோமணத்துல ‘சுருக்’குன்னதும் சுள்ளாச்சுருக்குதாம் போலிருக்குன்னு நெனச்சு கவனிக்காம விட்டுட்டாம்.(சுள்ளாஞ்சுருக்கு – துணிகளின் மேல் ஒட்டிக் கொள்ளும் ஒருவகை புல்லின் விதை. துணியின் மீது ஒட்டிக் கொண்டு அசைவின் போது சுருக்கென்று உடம்பில் தைக்கும். இதனால் கெடுதி இல்லை; உபத்திரவம்தான்)இந்த நீர்முள்ளுச் செடியோட முள்ளு, ரோமத்தை விட கொஞ்…சம் கனம்; அவ்வளவுதான். மஞ்சள் நிறத்துல இருக்கும். பய நிறமும் மஞ்சள்; அதனால் ஒண்ணும் தெரியல சரியா. அதோட நல்ல விளையாட்டுப் பருவம்; கக்கத்துலல்லாம் அப்பத்தாம் ரோமம் முளைக்கிற வயசுன்னு வச்சுக்கிடுங்களேம்.

 

        ஒரு நாளாச்சி, ரெண்டு நாளாச்சு, மூணு நாளாச்சு பொதுபொதுண்ணு வீங்கிருச்சு. கோமணம் வய்க்க முடியல! பய மேலுக்கு குதுகுதுன்னு வந்துட்டு.யாரிட்ட காணிப்பான், காணிக்க கூடிய இடமா?அண்ணைக்கி பெயலால மாட்டுக்குப் போக முடியல. இழுத்து மூடிப்படுத்துக்கிட்டு முக்கிக்கிட்டு மொனங்கிக்கிட்டும் கெடக்காம்.ஏலே; எந்தி; நேரங்காணாதான்னு அவம் வீட்டுத்தாத்தா வந்து உசுப்பினாரு. தாத்தாகிட்ட கொஞ்சம் ஒட்டுதல் உண்டும் இவனுக்கு.மெண்ணு மெண்ணு முழுங்கி ஒருபடியா இப்படி சங்கதின்னிட்டு சொன்னான்.எங்கலே பாப்பம்னுட்டு பாத்தா…பெரிய மஞ்ச முள்ளங்கீக்கிழங்கு கணக்கா வீங்கிக் கிடக்கு! கண்ணாடியா மின்னுது.அட பெயித்தியாரப்பயலே, ஆரம்பத்திலேயே சொல்லப்படாதா, இப்பிடி வீங்கிப்போச்சே, உழுவ மீனு மாதிரியில்ல ஆயிட்டுன்னு சொல்லி, பெயல கட்டுல்ல படுக்க வச்சி. பக்கத்து ஊருக்கு கொண்டு போனாவ.

 

        பக்கத்து ஊருல, ‘பார்வை’ பாக்குதவரு இருக்காரு. இவுக போன நேரம் அவரு இல்லே. அவரோட சம்சாரந்தான் இருந்திச்சு. அந்தம்மாவும் ‘பார்வை’ பாக்கும்.வர்றவுகளுக்கு அவதான் பார்வை பாத்துக்கிட்டிருந்தா. இவனோ வெடலைப் பெய; பொம்பளையிட்ட எப்டிக் காண்பிக்கிறதுன்னுட்டு தாத்தாவுக்கு யோசனை. சரி என்ன செய்ய. ஆபத்துக்குப் பாவமில்லன்னுட்டு அவகிட்ட இப்பிடி இப்பிடி சங்கதி; ‘நோக்காதண்டி’ ஆயிட்டது. நீங்கதாம் பாக்கணும்னு சொன்னாரு தாத்தா.அதுலயா முள்ளு குத்தியிருக்கு. அதாம் அப்பிடி வீங்கியிருக்கு. அப்படீன்னா… நீங்க வேற ஆளத்தான் பாக்கணும்னு சொல்லிட்டா.அம்மா தாயி ஒரு பக்கமும் தூக்கிட்டுப் போக முடியாது. இங்க கொண்டாந்ததே பரவாயில்ல. நீங்கதாம் காப்பாத்தணும்னு கால்லே விழாத குறையாக் கெஞ்சினாரு. அவ கிழவின்னாலும் குத்தமில்ல. கொஞ்ச வயசுக்காரி. கிழவனார் தாத்தா சொன்னதுல இருந்து மனசுக்குள்ள ‘நோக்காத் தண்டியா…நோக்காத்தண்டியா – அப்பிடின்னா பாக்கணுமே அதன்னு ஆசை!சரி கொண்டாங்கன்னா.கட்டுலோட தூக்கிட்டு வந்தாங்க. பயலெப் பாத்தா. பாத்ததுமே பிடிச்சுப் போச்சு.

 

         சரி இருக்கட்டும்னு நெனச்சி, தன்னோட கண்ணெ துணியால கட்டிக்கிட்டு, அவனோட கண்ணெயும் கட்டச் சொல்லிட்டு வேப்பங் கொழய சுழத்தி வீசி வீசி மந்திரம் சொல்ல ஆரம்பிச்சா.மந்திரம் வர்றதுக்கு பதிலா வாய்லேர்ந்து நோக்காத்தண்டி நோக்காத்தண்டின்னுட்டுதான் வருது!அய்யோ நோக்காதண்ணியா அத நாம் பாக்கணுமேன்னுதான் மந்திரம் வருது.ஒன்றரை மணிநேரம் வேப்பங்கொழை அடிச்சாச்சி! மந்திரமும் ஓதியாச்சு.வீக்கங் குறைஞ்சிருக்கா; வலி நின்னுருக்கான்னு கேட்டா.வீக்கங் கொறயல. வலியும் நிக்கலேன்னு சொன்னதும் ‘சரி இதுக்கு வேற பக்குவங்தாம் செய்யணும். எல்லாரும் முதல்ல சத்தோடம் வெளியே நில்லுங்கன்னா. எல்லாரும் வெளியேப் போயாச்சு. கதவ ஒருச்சாச்சு வச்சிக்கிட்டா. தன்னோட கண்கட்ட அவுத்துட்டு, ஒரு ‘கோழி ரோமம்’ எடுத்தா.வீங்குனதும்பேர்ல அப்படியோ பட்டதும் படலையோன்னு மேலும் கீழுமா ரோசுனா. அந்த வலியிலேயும் பயலுக்கு அப்படியே சொகமா இருக்கவும் கொஞ்சங் கொஞ்சமா ‘உசுருத்தலத்துக்கு’ உசுரு வர ஆரம்பிச்சது. விரிய விரியவும் சலம் தன்னப்போல ஒடஞ்சு வெளியேறவும் பயலுக்கு வலிக்கவும் செய்யுது.

 

         சொகமாவும் இருக்கு. அப்பிடியே பெறத்தால கையிரண்டையும் கட்டில் சட்டத்துல ஊனிக்கிட்டு முக்குதாம் மொனங்குதாம்;மறி மோத்திரத்த குடிச்ச கெடாக்கணக்கா சத்தங் கொடுக்காம்! வெளியில நின்ன தாத்தாவுக்கு வாயெல்லாம் பல்லு!! சலத்தோட முள்ளு வெளியில வாரது மாதிரி அவருக்கு மனசுல தோணுது.ஆனா இங்க செலந்தா வந்திருக்கு. முள்ளெக் காணோம். முக்காவாசி செலம் வந்திட்டதும் பயலுக்கு வலி குறைஞ்சிட்டது. முள்ள இனி பிதுக்கித்தாம் எடுக்கணும். உயிர்த்தலத்த பிதுக்கினா தாங்கமாட்டாம்.

 

        திரும்பவும் கோழி ரோமத்தால தடவிக்கொடுத்தா. பிறவு அப்படியே நாக்கால தடவவும் பயலுக்கு வலிக்கு சூடா ஒத்தனங் கொடுத்த்து போல எதமா இருந்திச்சு. முள்ளு வர்ற மாதிரித் தெரியல. பல்லுபடாம பதனமா வலி தெரியாம இதமா சுவைச்சு உறிஞ்சி துப்புனா. சின்ன ரோமத்தண்டி விழுந்து கிடந்த்து. இப்ப எப்பிடி இருக்குன்னு கேட்டா.செத்த தேவலன்னாம்எப்பிடித் தச்சது முள்ளுன்னு கேட்டாவெவரம் எல்லாத்தையும் ஒண்ணு விடாமச் சொன்னாம். ஒரு முள்ளுதாம் தச்சதாம்னு கேட்டு எல்லாப்பக்கத்தையும் பாத்தா.

 

       தாத்தா சொன்னது சரிதாம்னு பட்டது அவளுக்குஇது விச முள்ளு. இன்னும் நாலு நேரமாவது மந்திரிக்கணும். போயிட்டு மூணாம்பக்கம் வான்னு சொல்லி ஒரு பச்சிலையை அறைச்சிப் போடுன்னு சொல்லிக் கொடுத்தா.இப்ப வலியில்ல. ஆனாலும் மூணாம் பக்கம் மந்திரிக்கப் போனோம்.விச முள்ளுல்லா. கூடவே நாலு தரம் மந்திரிச்சாம்.மந்திரிக்க மந்திரிக்கதாம் தெரிஞ்சது நீர் முள்ளோட அருமை அவனுக்கு.

by parthi   on 12 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.