LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

பாரம்பரிய நெல்வகைகளை மீட்டெடுக்க அர்ப்பணித்து வாழ்ந்து நம்மிடமிருந்து விடைபெற்றார் நெல் ஜெயராமன்...

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்ததில் முக்கிய பங்காற்றி வந்தவர் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்த ‘நெல்’ ஜெயராமன். தமிழ்நாட்டில் பாரம்பர்ய நெல் ரகங்களைப் பரப்பியதில் இவருக்கு முக்கிய பங்குண்டு. ஆண்டுதோறும் திருவாரூர் மாவட்டம் ஆதிரெங்கத்தில் பாரம்பர்ய நெல் திருவிழாவை நடத்தி வந்தவர். பலர் நெல் திருவிழாவை முன்னெடுத்ததற்கு காரணமாக இருந்தவர்.

சுமார் 174க்கும் மேலான பாரம்பரிய நெல் விதைகளை மீண்டும் உயிர் கொணர்ந்து சுமார் 34000-த்திற்கும் மேலான விவசாயிகள் இயற்கை விவசாயம் செய்ய பேருதவி செய்துள்ளார்.

பொருளாதார பின்புலம் இல்லாத சூழலில்,வணிக வாய்ப்பு நிறைய இருந்தும் அதனை மறுத்தவர்.
"நம்ம இப்படியே இருந்திருவோம்யா' என சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியிலேயே முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.

நம்மாழ்வார் வழி பாரம்பரியத்தை மீட்டெடுக்க போராடியவர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வலைத்தமிழ் இணைந்து ஏற்பாடு செய்திருந்த "உலக சித்தர் மரபுத் திருவிழாவில்" திரு. நெல் ஜெயராமன் அவர்கள் அனைத்து பாரம்பரிய நெல் வகைகளையும் வைத்து மக்களிடம் விளக்கினார்.

கோடிகளில் சிலரே குடும்பத்தை விட்டு தன்னை பொது வாழ்க்கைகாக அர்ப்பணித்துக்கொண்டு வாழ்ந்து முடிப்பவர்கள். அந்த நிறைவான வாழ்வை , உலகம் போற்றும் அர்ப்பணிப்பு நிறைந்த வாழ்வை வாழ்ந்து தமிழகத்தின் அனைத்து கட்சிகளும், அமைப்புகளும், பொதுமக்களும் ஒன்று திரண்டு பசுமை முழக்கமிட்டு வழியனுப்பி வைத்த நிகழ்வு அவரின் பெயரை வரலாற்றில் என்றும் பதித்திருக்கும் என்பதற்கான அடையாளம்.

அன்னாரது ஆன்மா இறையருளில் இளைப்பாற பிரார்த்திப்போம். இவரது பாரம்பரிய நெல் மீட்டேடுப்பை இவரிடம் பயிற்சி பெற்ற இளைஞர்கள் தொடர்ந்து முன்னெடுப்பதே இவருக்கு செய்யும் நன்றிக்கடனாகும்.

திரு.நெல் ஜெயராமன் மீட்டெடுத்த பாரம்பரிய நெல் ரகங்கள் சிலவற்றைக் காண
http://www.valaitamil.com/non-gmo-tamilnadu-rice-items-photo587-841-0.html

poonkar
by Swathi   on 07 Dec 2018  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
சர்வதேச தாய்மொழி தினமான பிப்ரவரி 21 அன்று  எனது வாணி தமிழ் எழுத்துப் பிழை திருத்தியின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டது சர்வதேச தாய்மொழி தினமான பிப்ரவரி 21 அன்று எனது வாணி தமிழ் எழுத்துப் பிழை திருத்தியின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டது
தமிழகத்தில் நீட் தேர்வு எழுத 550 மையங்கள்- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்! தமிழகத்தில் நீட் தேர்வு எழுத 550 மையங்கள்- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!
சூரியசக்தி மின்சாரத்தால் கைபேசிகளுக்கு சக்தி ஏற்றி அசத்திய அரசுப்பள்ளி மாணவர்கள்! சூரியசக்தி மின்சாரத்தால் கைபேசிகளுக்கு சக்தி ஏற்றி அசத்திய அரசுப்பள்ளி மாணவர்கள்!
சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகளுக்கான தமிழக அரசு அறிவிப்பு வெளியீடு! சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகளுக்கான தமிழக அரசு அறிவிப்பு வெளியீடு!
வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு  ரூ2000 நிதி வழங்குவது எப்படி? -தமிழக அரசு விளக்கம்! வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு ரூ2000 நிதி வழங்குவது எப்படி? -தமிழக அரசு விளக்கம்!
இன்னும் ஓராண்டிற்குள் தமிழக கல்வித்துறை உலகிற்கே வழிகாட்டியாக திகழும்-  அமைச்சர் செங்கோட்டையன் தகவல்! இன்னும் ஓராண்டிற்குள் தமிழக கல்வித்துறை உலகிற்கே வழிகாட்டியாக திகழும்- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!
விடுபட்ட வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க 23, 24 தேதிகளில் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்! விடுபட்ட வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க 23, 24 தேதிகளில் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்!
தமிழில் பெயர் பலகை தொடர்பாக அரசாணையை அமல்படுத்தும் நடவடிக்கை குறித்து பதில் தர உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழில் பெயர் பலகை தொடர்பாக அரசாணையை அமல்படுத்தும் நடவடிக்கை குறித்து பதில் தர உயர்நீதிமன்றம் உத்தரவு!
கருத்துகள்
15-Dec-2018 08:26:31 வெ தி முருக வினோத் குமார் said : Report Abuse
வணக்கம். திரு நெல் ஜெயராமனை விவசாயிகள் மட்டுமல்லாது அரிசியை உணவாகக் கொண்ட அனைவரும் வணங்க வேண்டும். அவரது கனவை அவரது சீடர்கள் ஏற்றுச் செயல்பட வேண்டும்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.