LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    இந்து மதம் Print Friendly and PDF

நெல்லையப்பர்- காந்திமதியம்மன் திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

திருநெல்வேலி,  நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை திரளானோர் தரிசித்தனர். 

சுவாமி, அம்பாள் திருக்கல்யாண வைபவம் நவம்பர் 4ம் தேதி ஆயிரங்கால் மண்டபத்தில் நடக்கிறது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லை டவுன் சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடந்து வருகிறது.

காலை 6 மணிக்கு, அம்மன் சன்னதியில் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. இதில் பெண்கள் உள்ளிட்ட திரளான  பக்தர்கள் பங்கேற்றனர். திருவிழா தொடர்ந்து நவம்பர் 7ம்தேதி வரை நடக்கிறது.

திருவிழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு தினமும் சிறப்பு வழிபாடு, ரதவீதி உலா நடக்கிறது. நவ.2ம் தேதி நள்ளிரவு காந்திமதி அம்பாள் தங்க சப்பரத்தில் புறப்பட்டு கீழ மற்றும் தெற்கு ரதவீதி வழியாக சென்று அதிகாலை கம்பா நதி காமாட்சி அம்மன் கோயிலில் தவக்கோலத்தில் எழுந்தருளும் வைபவம் நடக்கிறது.

மறுநாள் (3ம்தேதி) காலை சுவாமி நெல்லையப்பர், ரிஷப வாகனத்தில் டவுன் காட்சி மண்டபம் எழுந்தருளுகிறார். 
அங்கு பகல் 11.30 மணி முதல் 12.30 மணி வரை அம்பாளுக்கு சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம் காட்சி மண்டபத்தில் நடக்கிறது.

இதைத் தொடர்ந்து விழாவின் முத்தாய்ப்பான சுவாமி- அம்மன் திருக்கல்யாண வைபவம் நெல்லையப்பர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் நவம்பர் 4ம் தேதி அதிகாலை 4 மணிக்கு மேல் 5 மணிக்குள்ளாக நடக்கிறது. பின்னர் சுவாமி, அம்பாள் நெல்லை டவுண்  ரதவீதியில் பட்டினப் பிரவேசம் நடைபெறும்.

தொடர்ந்து 6ம் தேதிவரை ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. 7ம் தேதி சுவாமி, அம்மன் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினப் பிரவேச வீதி உலாவுடன் விழா நிறைவடைகிறது.

.விழாவிற்கான ஏற்பாடுகளை கோயிலின் செயல் அலுவலர் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

by Mani Bharathi   on 01 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்.
உலகின் மிகப்பெரிய 10 இந்துக் கோவில்கள் எங்கு உள்ளது தெரியுமா? உலகின் மிகப்பெரிய 10 இந்துக் கோவில்கள் எங்கு உள்ளது தெரியுமா?
பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு. பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு.
பங்குனி உத்திரம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள். பங்குனி உத்திரம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்.
மாசி மாத சங்கடஹர சதுர்த்தி எப்போது? மஞ்சள் கயிறு மாற்றுவதற்கான நேரம் என்ன? மாசி மாத சங்கடஹர சதுர்த்தி எப்போது? மஞ்சள் கயிறு மாற்றுவதற்கான நேரம் என்ன?
மாசி மகம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்...! மாசி மகம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்...!
தைப்பூசத் திருநாள் வரலாறு: அசுரர்களை அழிக்க முருகப்பெருமானுக்கு ஞானவேல் கொடுத்த அன்னை தைப்பூசத் திருநாள் வரலாறு: அசுரர்களை அழிக்க முருகப்பெருமானுக்கு ஞானவேல் கொடுத்த அன்னை
அபுதாபியில் பிரம்மாண்ட இந்து கோயில் - திறந்துவைக்கப் பிரதமர் மோடி ஒப்புதல் அபுதாபியில் பிரம்மாண்ட இந்து கோயில் - திறந்துவைக்கப் பிரதமர் மோடி ஒப்புதல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.