LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

கஜா புயல் பாதித்த இடங்களில் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் ஒரு வாரத்தில் வழங்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

கஜா புயலால் பாதிக்கப்பட்டு, புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு பாடநூல்கள் ஒரு வாரத்தில் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 

ஈரோடு செங்குந்தர் பள்ளியில் மாணவ, மாணவி்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 

இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு 26 ஆயிரத்து 297 மாணவ, மாணவிகளுக்கு ரூ.9.74 கோடி மதிப்பிலான இலவச சைக்கிள் வழங்கினார். 

இதையடுத்து அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: 

எந்தவொரு அரசு பள்ளியையும் மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை. பல பள்ளிகளில் ஒரு மாணவர், 2 மாணவர்கள் என குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர்.

அந்த பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான சம்பளம், பராமரிப்பு போன்ற செலவுகளை நாம் கணக்கிட்டு பார்க்க வேண்டி உள்ளது. அந்த அடிப்படையில் அதுபோன்ற பள்ளிகளில் கூடுதலாக மாணவர் சேர்க்கை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

 கஜா புயல் பாதித்த நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் மீட்பு பணிகளில் அமைச்சர்கள் ஈடுபட்டு உள்ளனர். புயல் பாதித்த பகுதிகளில் எங்கெங்கு பாடப்புத்தகங்கள் சேதமடைந்து உள்ளதோ, அந்த பகுதிகளில் ஒருவார காலத்திற்குள் பாடப்புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

by Mani Bharathi   on 20 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல். இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல்.
முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம். முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம்.
நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார். நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார்.
"உலகத் தமிழ் மாநாடு" - வரலாறு திரும்புமா ?
2,200 ஆண்டுகளுக்கு முந்தைய செழித்தோங்கிய சமூகத்தின் சுவடுகள்.. கடையம் அகழாய்வில் தகவல்! 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய செழித்தோங்கிய சமூகத்தின் சுவடுகள்.. கடையம் அகழாய்வில் தகவல்!
செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம். செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம்.
மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு! மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு!
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.