LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- வைக்கம் முஹம்மது பஷீர்

பத்திரிகைச் செய்தி

"மே9... என்ற இடத்தில் இருக்கும் ... நதியில் பயங்கர மாக பெருக்கெடுத்து வந்த வெள்ளத்தைப் பொருட்படுத் தாமல் தன்னுடைய உயிரை ஆபத்தில் சிக்க வைத்துக் கொண்டு, அங்குள்ள இளைஞர்கள் சங்கத்தின் முக்கிய உறுப்பினரான திரு கெ., இன்று மதியம் ஆற்றின் நீரோட் டத்தில் சிக்கி மரணத்தின் பிடிக்குள் நிரந்தரமாக கீழ் நோக்கிச் சென்ற - யாரும் இல்லாத ஒரு வயதான மனிதரைக் காப்பாற்றி, சிகிச்சைக்காக ஊரில் இருக்கும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். திரு கெ.யின் தைரியமான இந்த செயல் ஊரில் இருக்கும் இளைஞர்களுக்கு எப்போ தும் மிகச் சிறந்த ஒரு முன்மாதிரி யாக விளங்கிக் கொண்டிருக்கும்' என்று இருந்த பத்திரிகைச் செய்தியை, ஒரு தைரியமான செயல் என்று பூசணிக்காய் அளவு எழுத்துகளைக் கொண்ட தலைப்புடன் அரசாங்க பதவியில் இருப்பவர்களும் செல்வந்தர் களும் எத்தனையோ அரசியல் அமைப்புகளின் தலைவர்களும் மதத் தலைவர்களும் இலக்கிய வாதி களும் தொழிலாளர்களின் தலைவர்களும் என்று ஊரின் எல்லா பகுதிகளிலும் இருக்கும் ஏராளமான ஆட்கள் தினசரி பத்திரிகையில் வாசித்தாலும், யாருமே இல்லாத அந்தக் கிழவன் மரணப் பாதாளத்திற்குள் நிரந்தரமாகக் கீழ்நோக்கி போனதற்கு காரணம் என்ன என்பதைப் பற்றிய ரகசியத்தை அறிந்திருக்கும் இரண்டு மூன்று நபர்களில் ஒருவராக இருந்தார் 39-ஆம் எண் போலீஸ் கான்ஸ்டபிள்.



அந்த மனிதர் அந்தப் பத்திரிகைச் செய்தியை வாசித்து, அந்தக் கிழவனைப் போய் பார்த்து, அவனுடன் உரையாடி, அதைத் தொடர்ந்து நடைபெற்ற பயங்கரமான சம்பவங்களுக்கு சாட்சியாக இருந்து, அந்தச் சம்பவத்தைப் பற்றி வந்த பத்திரிகைச் செய்தியை வாசித்த மனிதராக இருந்தார்.

பி.ஸி. 39-க்கு மருத்துவ மனையில்தான் வேலை. லாக் அப்பில் இருந்த குற்றம் சாட்டப் பட்டிருக்கும் நபர்களில் இரண்டு பேர் மருத்துவமனையில் இருந் தார்கள். கிழவனைக் காப்பாற்றிய செய்தியை வாசித்த மறுநாள் பகல் ஐந்து மணிக்கு திரு கெ.யின் தலைமையில் பத்த இருபது இளைஞர்கள் மருத்துவமனைக் குள் ஜுரம் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கக் கூடிய வார்டில் இருந்த கிழவனை ஒரு நோயாளிக்கு முன்னால் கூட்டமாகக் கூடி நிற்பதையும் புகைப்படம் எடுப் பதையும் பார்த்தார். அப்போது தான் பி.ஸி. 39-க்கு பத்திரிகைச் செய்தி ஞாபகத்தில் வந்தது. திரு கெ., அவர்களுக்கும் இளைஞர் கள் சங்கத்திற்கும் புகழ் வாங்கித் தந்த வயதான கிழவனைச் சற்று பார்க்க வேண்டும் என்ற ஆசை பி.ஸி. 39-க்கும் உண்டானது. பார்க்க வந்திருந்தவர்கள் எல்லா ரும் சென்றவுடன் பி.ஸி. 39 காய்ச் சலால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்த பிரிவிற்குள் சென்றார். கிழவனுக்கு முன்னால் போய் நின்றார். வெள்ளைத் துணி விரிக் கப்பட்டிருந்த கட்டிலில் அசைவே இல்லாமல் கிழவன் படுத்திருந் தான். வெறும் எலும்பும் தோலும் மட்டுமே இருந்தன. கண்கள் சிவந்து தீப்பந்தங்களைப் போல இருந்தது. அவற்றில் பயங்கரமான கோபம் வெளிப்பட்டது. யாருடன்...? எதற்கு? பி.ஸி. 39 ஆச்சரியப் பட்டார். ஒரு போலீஸ் கான்ஸ் டபிள் தனக்கு முன்னால் நின்று கொண்டிருக்கிறார் என்ற உணர்வு கூட கிழவனிடம் இல்லை. கவனம் முழுவதும் மருத்துவ மனையைச் சுற்றிலும் இருந்த அடர்ந்த மரங்களிடையே இருந்தன.

கிழவனிடம் உரையாடலை எப்படி ஆரம்பிப்பது என்பதைப் பற்றி பி.ஸி. 39-க்கு வடிவமே கிடைக்கவில்லை. எனினும், ஆள் அதுதானா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்த பி.ஸி. 39 கிழவனிடம் கேட்டார்:

""மாமா, உங்களையா ஆற் றில் இருந்து காப்பாற்றியதாகக் கூறுகிறார்கள்?''

கிழவன் மெதுவாக முகத் தைத் திருப்பினான். கடினமான கோபத்துடன் அந்த தீப்பந்தங்க ளைப் போல இருந்த கண்கள் பி.ஸி. 39-ன் முகத்தையே வெறித் துப் பார்த்துக் கொண்டிருந்தன. கொலை செய்தவர்களுடனும் பிக்பாக்கெட்களுடனும் தினமும் வாழ்ந்த தன்னுடைய பதினேழு வருட டிப்பார்ட்மெண்ட் வாழ்க் கைக்கு மத்தியில் இந்த அளவிற்கு கூர்மையாக பி.ஸி. 39-ஐ பார்ப்ப தற்கான துணிச்சல் யாருக்கும் இருந்ததில்லை.

மீண்டும் பி.ஸி. 39 கேள்வி யைத் திரும்பக் கேட்டபோது, கிழவன் மெதுவான குரலில் கேட்டான்:

""அதைத் தெரிந்து?''

""தனிப்பட்ட காரணம் எதுவும் இல்லை'' - பி.ஸி. 39-ன் குரல் அமைதி தவழ்வதாகவும் கருணை நிறைந்ததாகவும் இருந்தது.

""மாமா, உங்களையா ஆற்றில் இருந்து நீர் குடித்து இறக் காமல் காப்பாற்றினார்கள்?'' என்று போலீஸ்காரர் கேட்டதற்கு கிழவன் "ஆமாம்' என்று பதில் கூறினான்.

பி.ஸி. 39 ன் கேள்வி தொடர்ந்தது:

""ஆற்றில் விழுவதற்குக் காரணம்? குளித்துக் கொண்டி ருந்தீர்களா?''

அதற்கான பதிலைக் கேட்ட தும் பி.ஸி. 39 நடுங்கிவிட்டார். கிழவன் சொன்னான்:

""நான் ஆற்றில் குதித்தேன்.''

""அது எதற்காக?''

அதற்கு பதில் கூறும் வகையில் கிழவன் கேட்டான்:

""ஓடிக் கொண்டிருக்கும் நீரில், நீச்சல் தெரியாத ஒருவன் எதற்காக குதிக்க வேண்டும்? என்னிடம் முழுமையாக பலம் இருந்த காலத்தில் நான் வேலை செய்து வாழ்ந்தேன். இப்போ எனக்கு சக்தி இல்லை. எனக்கு உணவு தருவதற்கு யாரும் இல்லை. நான் இந்த உலகத்தில் தனி மனிதனாக இருக்கிறேன். பிச்சை எடுத்து வாழ்வது என்பது... அது இருக்கட்டும்... இந்த உடலால் எனக்கு இனிமேல் சிறிதளவு கூட பயன் இல்லை. இந்த நிலையில் நான் என்ன செய்ய வேண்டும்?''

பி.ஸி. 39 எதுவும் கூறவில்லை. அவருக்கு சட்டம் தெரியும். தற்கொலை செய்து கொள்வதற்கு முயற்சிப்பது குற்றச் செயல். கிழவனைக் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து மேஜிஸ்ட் ரேட்டிற்கு முன்னால் கொண்டு போய் நிறுத்த வேண்டும். சட்டப்படி அதைத்தான் செய்ய வேண்டும். எனினும், ""மாமா, இந்த விஷயத்தை யாரிடமாவது கூறியிருக்கிறீர்களா?'' என்று கேட்ட பி.ஸி. 39-ன் கேள்விக்கு கிழவன் பதில் சொன்னான்:

""எல்லாரிடமும் நான் சொல்லிவிட்டேன்.''

""யாரிடமெல்லாம்?''

""என்னைப் பிடித்து கரைக்குக் கொண்டு வந்த அந்த இளைஞர்களிடமும் இங்குள்ள டாக்டரிடமும்.''

""அவங்க இரண்டு பேருக் குத்தானே தெரியும்? இனிமேல் இதை யாரிடமும் கூறக் கூடாது. மாமா நீங்க நடந்து கொண்டது தவறானது. தற்கொலை செய்து கொள்வதற்கு முயற்சி செய்தால், அதற்கு தண்டனை இருக்கிறது. ஆறு மாதம் முதல் இரண்டரை வருடங்கள் வரை...''

கிழவனுக்கு நிம்மதியாக இருந்தது. ""அப்படியென்றால் என்னைக் கைது செய்து தண்டனை கொடு. சிறைக்குச் சென்றால் உணவு கிடைக்குமா?''

""அதற்கெல்லாம் மிகவும் தாமதம் ஆகும். சிறைக்குப் போவதற்கு முன்பு கொஞ்ச காலம் லாக் அப்பில் இருக்க வேண்டும். மூட்டைப் பூச்சி கடிப்பதைத் தாங்கிக் கொண்டு, தொற்று நோய் உள்ளவர்களுடன், காற்றும் வெளிச்சமும் இல்லாத இருட்டு அறைகளுக்குள், சிறுநீருக்கு மத்தியில் படுத்திருக்க வேண்டும். சரியான நேரத்திற்கு உணவு கிடைக்காது. அதே நிலை யில் ஒன்றரை வருடம் வரை சில நேரங்களில் இருக்க வேண்டிய திருக்கும். அதற்குப் பிறகுதான் தண்டிப்பார்கள். மாமா, நீங்க இந்த வயதான காலத்தில் சிறைக்கு ஏன் செல்ல வேண்டும்?''

""எனக்கு சிறைக்குப் போக வேண்டும் என்றில்லை. என்னுடைய இடத்தில் நீங்கள் இருக் கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். பிரகாசமும் தெம்பும் இல்லாமல், படுப்பதற்கு இடமில்லாமல், உணவிற்கு வழியில்லாமல் ஆதரவற்ற ஒரு உயிராக வாழ்வதற்கு நீங்கள் விரும்புவீர்களா?''

""இருந்தாலும்... தற்கொலை செய்து கொள்ளக் கூடாது. அது அரசாங்கத்தின் சட்டம். மாமா, உங்களைப்போல ஆதரவு இல்லாத எவ்வளவு பேர் இந்த ஊரில் வாழ்கிறார்கள்? யாரும் தற் கொலைக்கு முயற்சிப்பதில்லையே!''

""இரண்டு கால்களைக் கொண்ட மாடுகள்! சுய உணர்வு இல்லாமல் போய்விட்டது. அதனால்தான் தங்களுடைய வாழ்க்கை தேவையற்ற ஒரு சுமை என்று அவர்களுக்குத் தோன் றாமல் இருக்கிறது. நடந்து திரியும் பிணங்கள்!''

""ஆனால்... மாமா, உங்களு டைய நம்பிக்கை நெறிமுறைச் சட்டத்திற்கு எதிராக இருக்கிறது.''

கிழவன் சற்று நேரம் பார்த் தான். தொடர்ந்து நடக்கும் விஷயங்களைப் பற்றி மெதுவான குரலில் ஒரு சொற்பொழிவு:

""ஆமாம்... நான் எந்தவொரு உடல்நலக் கேடும் இல்லாமல் இந்த மருத்துவமனையில் படுத்திருக்கிறேன். எனக்கென்று இருக்கும் ஒரே உடல் நலக் கேடு- பசிதான். அதற்கு எனக்கு பார்லி நீர் தர்றாங்க! மிகுந்த படிப்பையும் நல்ல சம்பளத்தையும் கொண்ட அரசாங்க அதிகாரிதானே டாக்டர்? அவர் கூறுவதுதானே சரியாக இருக்கும்? அதாவது - பணம் இல்லாத நோயாளிகள் எல்லாருக்கும் இங்கே பார்லி நீர்! பணம் உள்ள நோயாளிகளுக்கு மருத்துவமனை சார்பிலேயே பாலும் ரொட்டியும்.''

கிழவன் கடுமையான வேதனை யுடன் தொடர்ந்து சொன்னான்: ""சொல்லப் போனால்... உள்ளவன் இல்லாதவனுக்குக் கொடுக்க வேண்டும் என்ற ஒரு நெறிமுறைச் சட்டம் இருக்கிறது. நம்முடைய ஊரில் உள்ளவன் இல்லாத வனுக்கு நாழி கஞ்சி நீராவது கொடுப்பானா? இறக்கும் நிலை யில் இருந்தாலும், இன்னும் ஒரு நெறிமுறைச் சட்டம் இருக்கிறது- நாம் அனைவரும் சகோதரர்கள், கடவுளுக்கு முன்னால் சமமானவர்கள், இந்த பூமி நம்முடைய பொதுவான சொத்து- இப்படி யெல்லாம்... ஆனால், மிகச் சிலர் இதைத் தங்களின் கைக்குள் போட்டுக் கொண்டு இதில் கிடைக்கும் உற்பத்திப் பொருட் களை அதிகமான விலைக்கு விற்று லாபத்தை அதிகமாக்கி பணக்காரர்களாக ஆகிக் கொண் டிருக்கிறார்கள். இப்படியே நூற்றாண்டுகள் கடந்த பிறகு அதுவும் ஒரு நெறிமுறைச் சட்டமாக ஆனது. வறுமையில் இருப்பவன் பணக் காரனின்- அரசாங்க பதவியில் இருப்ப வனின்- அரசியல் தலைவரின்- மதத் தலைவரின் முகத்தை பயமில்லாமல் சற்று நேரம் பார்த்து விட்டால், அது நெறி முறைச் சட்டமாகி விடுகிறது! அவனை தண்டிப்பதற்கு சட்டமும் போலீஸும் பட்டாள மும் சிறையும் தூக்கு மரமும் இருக்கின்றன! ஊரில் இருக்கும் வறுமையில் சிக்கிக் கிடக்கும் ஏழைகளுக்காக அரசாங்கமோ அரசியல் தலைவர்களோ மதங் களின் தலைவர்களோ... யாராவது ஏதாவது செய்கிறார் களா? குப்பைத்தனமான சட்டங்கள்! பட்டினி கிடந்து சாகப் போகும் ஒருவன் ஒரு நாளுக்கு முன்னால் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது! நெறிமுறைச் சட்டம்!''

அதிகமான கோபத்துடன் கிழவன் காறித் துப்பினான். ஒரு கப குவியல்! ""பாருங்க... உங்களு டைய நெறிமுறைச் சட்டம்... ஒழுங்கு... அது வெறும் கபம்! அவ்வளவுதான்.''

பி.ஸி. 39 அதிர்ச்சியடைந்து விட்டார். சதை முழுவதும் வறண்டு போய் வெறும் தோலால் மூடிய உயிருள்ள அந்த எலும்புக் கூட்டிற்குள் இருந்து அப்படிப் பட்ட கருத்துகள் வெளியே வரும் என்று பி.ஸி. 39 எந்தச் சமயத்திலும் எதிர்பார்க்கவில்லை. பி.ஸி. 39-க்கு தாங்க முடியாத கவலை உண்டானது.

கிழவனிடம் என்ன மாற்று வழி கூறுவது? வேலை செய்து சாப்பிடுவதற்கான சக்தி இல்லை. காப்பாற்றுவதற்கு ஆள் இல்லை. வாழ்வதற்கு ஆசை இல்லை. அப்படியே இருந்தாலும், யார் காப்பாற்றப் போகிறார்கள்?

பி.ஸி. 39 திரும்பிச் செல்வ தற்கு முன்னால் ஒரு மேலோட் டமான அறிவுரையைக் கூறினார்:

""மாமா, எதையாவது சிந்தித்து மனதைக் கவலைக் குள்ளாக்காதீங்க!''

அதற்கு பதிலாக கிழவன் சற்று நேரம் பார்த்தான். கோபமும் வெறுப்பும் கலந்த ஒரு கூர்மையான பார்வை! அதைத் தொடர்ந்து உண்டான பயங்கரமான சம்பவம் மறுநாள் இரவு கிட்டத்தட்ட மூன்று மணிக்கு நடைபெற்றது. நிலவு வெளிச்சத்தில் அதை பி.ஸி. 39 மிகவும் தெளிவாகப் பார்த்தார்; தடுக்கவில்லை.

அந்தச் சம்பவத்தைப் பற்றி அரசாங்க அதிகாரிகளும் வர்த்த கர்களும் அனைத்து மதங்களின் தலைவர்களும் தொழிலாளர் களின் தலைவர்களும் சமூக அமைப்புகளின் தலைமைப் பதவிகளில் இருப்பவர்களும் பத்திரிகை ஆசிரியர்களும்- இப்படி நாட்டின் நாலா பக்கங்களிலும் இருக்கும் பல கோடி மனிதர்களுடன் சேர்ந்து பி.ஸி. 39 நாளிதழில் வாசித்த முக்கியமான செய்தி இப்படி இருந்தது:

"மே 16: ... ஊரில் இருக்கும் மருத்துவமனையில் இருந்த ஒரு நோயாளி கடந்த இரவு மருத்துவ மனை பகுதியில் இருந்த ஒரு மரத்தின் கிளையில் தூக்குப் போட்டு இறந்துவிட்டார். கயிறுக்கு பதிலாக அவர், கிழிந்து தைக்கப்பட்ட மருத்துவமனை யின் வேட்டியைப் பயன்படுத்தி இருக்கிறார்.

by Swathi   on 27 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.