LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- வித்யாசாகர்

நீயே தாயுமானவள்.. - வித்யாசாகர்

உனை
நன்றியோடு மட்டுமே தொட்டிருக்கிறேன்..

உனை
உடலால் நான் தொட்டதேயில்லை

மனதால் நேசித்து
உயிர்பருகிய நாட்களே நமக்குள் அதிகம்

எனது
பிள்ளைகளுக்கு பாலமுதூட்டிய உன்
அங்கம் தொடுகையிலும்
எனது தாயின் நன்றியையே மனதால் ஏந்தியிருக்கிறேன்

உனக்காய்
எப்போதுமே
இரு வணக்கமுண்டு, எனை தாங்கிய மடியில்
எனது பிள்ளைகளையும் தாங்கிய வணக்கமது

வீடு கழுவி
வாசல் துடைத்து
உணவூட்டி
மனதால் சிரித்து நிற்கும்
மரு தாய் நீ

எனக்காய்
வீடு துறந்தவள்,
சொந்தங்களைவிட்டு தொலைதூரம் வந்தவள்
சேராததையெல்லாம்
சேர்த்துக்கொண்டவள் நீ

அப்பத்தா வந்துயெனைக் கொஞ்சி நிற்கையில்
அம்மம்மாவை எண்ணியழுத
அம்மாவின் ஈரவிழிகளை
மௌனத்துள் ஒளித்துக்கொண்டவள், மொழியை
புன்னகையாக மட்டுமே மாற்றிக்கொண்டவள் நீ

கொஞ்சம் வலித்தாலும்
நெஞ்சு வலித்தாலும்
யாருக்கும் வலிக்காதிருக்க
மரணத்தையும் சமைப்பவள், அன்பை மட்டுமே
ஆணுக்குப் பகிர்பவள்
விட்டுக்கொடுத்தலின் மெத்த பரிசு நீ..

எப்போதெல்லாம் நான்
என்னம்மாவை யெண்ணி அழுகிறேனோ
அப்போதெல்லாம்
உனக்காகவும் அழாத கண்ணீர்த்துளிகளே
பிறப்பிற்குமெனை நெருப்பெனச் சுடுகிறது..

உண்மையில் அந்தயென்
நான் உயிர்புகுந்த இருட்டுகோயில்
அந்த கர்ப்பப்பை
உன்வழியே யெனைச் சபித்தாலும் தவறில்லை

உன் வீட்டு
விளக்கைக் கொண்டுவந்த
என் வீட்டை உன் மௌனத் தீ அது
எரித்தாலும் பிசகில்லை,

எண்ணிப்பார்க்கிறேன்
ஒரு நாள் கனவில்
தங்கையை பிரியமுடியாத அண்ணன்கள் நாங்கள்; நீ
அழ அழ
அழைத்து வருகிறோமே. எப்படி ?

அதென்ன
சமூக நீதியோ தெரியவில்லை,
பெற்றதும்
வளர்த்ததும்
கட்டிகொடுத்து விட்டுவிட
உள்ளே உயிர்க்குள் வைத்திருக்கும் அன்பை

அப்பாவை
அம்மா அண்ணன் தம்பிகளை
அன்பு நாய்க்குட்டியை
அக்கா தங்கையை

எனது வீட்டு மரங்களை
கட்டிக்கொடுத்ததும் விட்டுவிட
எவரிட்ட சமூக நீதியோ அது..

ஆனால் ஒன்று மட்டும்
எப்போதும் நிகழ்கிறது,
எனது அப்பாவோடு வந்த அவள்தான்
என்னிடமும் சொல்கிறாள்

போ.. போய் அவளை அழைத்து வா என்று,
நான்
அழைத்துவருகையிலும் சரி
வந்தப்பின்னரும்
வரும் முன்னருங்கூட சிந்திக்கிறேன்
அய்யோ நாளையென் மகளை எப்படி அனுப்பிவைப்பேன்..???

வித்யாசாகர்


by Swathi   on 22 Mar 2018  0 Comments
Tags: Tamil Kavithai about Women   Women Tamil Kavithai   Tamil Kavithai   Pengal Tamil Kavithai   பெண் கவிதைகள்   மகளிர் பற்றிய கவிதைகள்   தாய் கவிதை  
 தொடர்புடையவை-Related Articles
தூர் தூர்
நம்பிக்கையெனும் நெற்றிக்கண் திற.. நம்பிக்கையெனும் நெற்றிக்கண் திற..
நீயே தாயுமானவள்.. - வித்யாசாகர் நீயே தாயுமானவள்.. - வித்யாசாகர்
மூன்றாம் அறிவு - கவிப்புயல் இனியவன் மூன்றாம் அறிவு - கவிப்புயல் இனியவன்
முடிந்த கதை - கவிப்புயல் இனியவன் முடிந்த கதை - கவிப்புயல் இனியவன்
நீ ராஜ வாழ்க்கை நீ ராஜ வாழ்க்கை
முறையாமோ ! - எம் . ஜெயராமசர்மா முறையாமோ ! - எம் . ஜெயராமசர்மா
வா வானம் அளக்கலாம் .. - தண்மதி வா வானம் அளக்கலாம் .. - தண்மதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.