LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF

இரவு விளக்குகளால் பக்க விளைவு ஏற்படுமா ?

பொதுவாக இரவு நேரங்களில் நாம் தூங்கும் போது குறைந்த ஒளியை ஏற்படுத்தும் இரவு விளக்குகளை பயன்படுத்துகிறோம். ஆனால் இத்தகைய விளக்குகளால் பக்க விளைவுகள் ஏற்படும் என அமெரிக்காவில் உள்ள ஓகியோ பல்கலைக்கழகத்தின் நரம்பியல் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

இரவு நேர மங்கலான அளவில் விளக்கு ஒளி இருந்தால் கூட மூளைக்குள் ரசாயன மாற்றங்களை ஏற்படுத்துவதுடன் மூளையின் கட்டமைப்புகளையும் மாற்றிவிடும் என ஆய்வறிக்கையில் கூறியுள்ளனர். குறிப்பாக குழந்தைகளின் படுக்கை அறைகளில் இத்தகைய விளக்குகள் தேவையில்லை என்ற அறிவுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக எலிகளை வைத்து சோதனை செய்தபோது எட்டு வாரங்களில் அவற்றின் மூளையில் மாற்றங்கள் ஏற்பட்டது தெரிய வந்தது.இரவில் விளக்கு எரிந்தால் புற்றுநோய் வர வாய்ப்பிருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.பிரிட்டன் மற்றும் இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஓர் ஆய்வில் இரவு நேரங்களில் திடீரென விளக்கைப் போட்டால் அதனால் ஏற்படும் வெளிச்சத்தால் நம் உடலில் உள்ள செல்கள் அதிக அழுத்தத்துக்கு உள்ளாவதாகத் தெரிய வந்தது. இந்த அதிக அழுத்தம் புற்றுநோய்க்கு வழி வகுத்து விடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

 

அடர்த்தி மிகுந்த இரவில் திடீரென ஆனால் குறுகிய நேரத்துக்கு 'பளீர்' என்று விளக்கு எரிந்தால் கூட புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் கண்டறிந்துள் ளனர். இதுகுறித்து விஞ்ஞானிகள் குழுவில் இடம்பெற்ற பென்ஷ்லோமோ என்பவர் கூறுகையில்'இரவு நேரத்தில் செயற்கையாக ஏற்படுத்தப்படும் எவ்வித வெளிச்சமும் நமது உடலைப் பாதிக்கும். நேரத்துக்கு ஏற்றாற்போல் செயல்படும் நம் உடலின் கடிகாரம் அதனால் பாதிக்கப்படும்.

 

இரவு விளக்குகள் நம் உறக்கத்தை உற்று பார்த்தபடியே இருக்கின்றன. இந்த இரவில் உலகில் எத்தனை ஆயிரமாயிரம் இரவு விளக்குகள் விழித்து கொண்டிருக்கும். அவை என்ன காண்கின்றன. இரவு விளக்குகள் தன் ஒளியை தானே முகத்திரையிட்டு ஒளித்து கொள்கின்றன.

by Swathi   on 05 Apr 2013  0 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
முருங்கை இலையில் இவ்வளவு சத்து உள்ளதா? முருங்கை இலையில் இவ்வளவு சத்து உள்ளதா?
8 நடைப்பயிற்சி 8 நடைப்பயிற்சி
இருதயம் சீராக இயங்க இருதயம் சீராக இயங்க
சாப்பிடும் முறை... சாப்பிடும் முறை...
மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகள்* மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகள்*
முக்கிய மருத்துவக் குறிப்புகள் முக்கிய மருத்துவக் குறிப்புகள்
கிட்னி கல் கரைய  பூளைப்பூ வைத்தியம் கிட்னி கல் கரைய பூளைப்பூ வைத்தியம்
நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா? மாரடைப்புக்கு   சூடான குடிநீர் நல்லது நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா? மாரடைப்புக்கு சூடான குடிநீர் நல்லது
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.