LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- மற்றவர்கள்

நினைவுகள் தந்த பரிசு - நித்யா லக்ஷ்மி

சீதாவின் அப்பா சீனிவாசன், அம்மா வசந்தி. சீதாவிற்கு அவளுடைய அப்பா என்றால் அவ்வளவு பிரியம். அவளுடைய அப்பாவிறகும் சீதா என்றால் உயிர். சீதா 8 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் பொழுதே அவர் உடல் நிலை சாpயில்லாமல் இறந்து விட்டார்.


அவளுடைய அப்பா இறந்து விட்டார் என்பதை அவளால் நினைத்துக் கூட பார்கவே முடியவில்லை. ஆதை விட அவளால் தாங்கிக் கொள்ள முடியவே இல்லை. ஓவ்வொரு நாளும் அவளுடைய அப்பாவின் நினைவுகளிலேயே வாழ்ந்தாள். அவளுடைய அப்பாவுடன் வெளியே சென்ற ஞாபகம் தான் அதிகமாய் இருந்தது. யாராவது பைக்கில் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு போவதைப் பார்த்தால், உடனே சீதா, ஒரு நிமிடம் நின்று, நம்மளும் இப்படித்தானே நம்ம அப்பா கூட போவோம் என்று ஏக்கப்படுவாள்.


சீதாவின் கையெழுத்து மிகவும் அழகாக இருக்கும். அவளுடைய அம்மா, உன்னுடைய அப்பாவும் இப்படி தான் எழுதுவார் என்றாள். உடனே சீதா, அப்பா தான் என் கூட இல்லை, அப்பாவோட கையெழுத்தாவது என்னுடன் இருக்கிறதே என்று நினைத்துக் கொள்வாள்.


சீதா படிக்கும் பள்ளியில் மாநில அளவில் கட்டுரைப் போட்டி நடப்பதாக அறிவித்தார்கள்.சீதாவிற்கு அனைத்துப் போட்டிகளிலும் கலந்துக் கொள்ளும் ஆர்வம் அதிகம். ஆனால் அவளின் அப்பா இறந்ததில் இருந்து அவளுக்கு ஆர்வம் குறைந்தது. இதை கவனித்த வகுப்பாசிரியர் அவளுடைய அம்மாவிடம் வந்து கூறினார். அம்மா …. உங்கள் மகள் சீதாவிற்கு திறமைகள் அதிகம். ஆனால் ஏதோ ஒரு கவலையினால் எதையோ இழந்து போல் உட்கார்ந்திருக்கா. 


நல்லா படிக்கிற  பிள்ளையா இருக்கிறதனால மனசு கேட்காம வந்து சொல்றேன் அம்மா, என்ன ஏதுன்னு கொஞ்சம் கவனிச்சுக்கோங்கம்மா சொல்லிட்டு கிளம்பிட்டாரு.


சீதா இப்படி இருப்பதை நினைத்து அவளுடைய அம்மா மிகவும் வருத்தப்பட்டாள். சீதா, ஒரு நிமிஷம் நில்லு, ஏன் நீ மாநில அளவில் நடக்கும் கட்டுரைப் போட்டியில நீ கலந்துக்கல? ஏன்று கேட்டாள் அவளுடைய அம்மா.


இல்லம்மா, எதுலயும் கலந்துக்கணும்னு தோணல என்றாள் சீதா.


ஏன் சீதா? ஏன்றாள் அவளுடைய அம்மா. சீதாவோ, அம்மா எனக்கு அப்பா ஞாபகம் வந்துடுச்சு. போன தடைவ கட்டுரைப் போட்டினு அறிவிச்சப்ப , பள்ளி முடிந்தவுடன் வீட்டுக்கு வந்தவுடனே, அப்பாகிட்ட கட்டுரைப் போட்டி வச்சிருக்காங்கன்னு சொன்னவுடனே, உடனே அழைச்சிட்டுப் போய் கட்டுரை புக் வாங்கிக் கொடுத்தாங்க , பாரிசும் கிடைச்சுது. இப்ப எனக்கு அந்த ஞாபகம் தான் அம்மா வருது. அப்பா இல்லையே அம்மா, நான் எதற்கு போட்டியில கலந்துக்கணும். அதனால தான் அம்மா, நான் கலந்துக்கல என்றாள் சீதா.


இங்கப்பாரும்மா சீதா… நீ எந்த போட்டியிலும் கலந்துக்கலன்னா , உங்க அப்பாவை நீ வேதனைப்படுத்தறேன்னு தான் அர்த்தம். உன்னுடைய அப்பா இருந்தாலும், இறந்தாலும் அவருக்கு தான் பெருமை. எனக்கு தொpஞ்சதை சொல்லிட்டேன் அப்புறம் உன் இஷ்டம் என்று சொல்லிக்கொண்டே சென்று விட்டாள் அவளுடைய அம்மா.


என்னை மன்னிச்சுடுங்கம்மா, நான் எல்லாப் போட்டியிலும் கலந்துக் கொள்கிறேன் என்றாள் சீதா. கட்டுரைப் போட்டிக்கு என்ன தலைப்புக் கொடுத்திருக்காங்க என்றாள் அவளுடைய அம்மா. ராமனே சீதா நினைவுகள் என்ற தலைப்புக் பொடுத்திருக்காங்கம்மா. என்ன எழுதுறதுன்னு தொரியலம்மா என்றாள் சீதா.


கவலைப்படாதம்மா சீதா, உன்னுடைய அப்பாவை நினைச்சுகிட்டு போய் படு. காலையில் உனக்கு என்ன தோணுதோ அதை எழுது என்றாள் அவளுடைய அம்மா.


சாpம்மா என்று போய் படுத்தாள் சீதா. இரவு தூங்கும்பொழுது அவளுடைய அப்பாவின் நினைவுகள் தான் வழக்கம் போல் வந்தது. அவளுடைய அப்பா அவளிடம் பேசுவது போல் இருந்தது. அடுத்த நாள் மாநில அளவில் நடக்கும் கட்டுரைப் போட்டியில் கலந்துக்கொணடாள். என்ன எழுதுவது என்று தொரியாமல் முழித்த அவளுக்கு உன் அப்பாவை நினைத்துக் கொண்டு அப்பாவை பற்றிய நினைவுகளிலேயே எழுதத் தொடங்கினாள்.


நினைவுகள் என்றும் அழிவதில்லை என்பதற்கு ஏற்றாற் போல் சீதாவிற்கு மாநில அளவில் முதல் பரிசும் கிடைத்தது. பரிசை வாங்கிக் கொண்டு அவளுடைய அம்மாவிடம் வந்து அம்மா, நீங்க ஊக்கப்படுத்தினதனாலதான் என்னால இந்த பாரிசை வாங்க முடிஞ்சுது என்றாள். வாங்கிய பாரிசை அப்பாவின் படத்திற்கு முன் வைத்துவிட்டு வாம்மா என்றாள் அவளுடைய அம்மா. அப்பாவின் படத்திற்கு முன் பரிசை வைத்துவிட்டு அப்பா இது உங்கள் நினைவுகளுக்கு கிடைத்த பரிசு என்று அவளுடைய அப்பாவின் படத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய அப்பாவும் அவளைப் பார்த்து சிரிப்பது போலவே இருந்தது.

 

- நித்யா லக்ஷ்மி (lakshmi.nithya18@gmail.com)

by Swathi   on 21 Nov 2014  0 Comments
Tags: Ninaivugal   Parisu   Nithya Lakshmi   நினைவுகள்   பரிசு        
 தொடர்புடையவை-Related Articles
நிழலாடும் நினைவுகள் நிழலாடும் நினைவுகள்
பரிசுப் பெட்டி - சோழகக்கொண்டல் பரிசுப் பெட்டி - சோழகக்கொண்டல்
நினைவுகள் தந்த பரிசு - நித்யா லக்ஷ்மி நினைவுகள் தந்த பரிசு - நித்யா லக்ஷ்மி
யார் இந்த கைலாஷ் சத்யார்த்தி !! யார் இந்த கைலாஷ் சத்யார்த்தி !!
அமெரிக்க தமிழர் ஆரோக்கியசாமிக்கு நோபல் பரிசுக்கு இணையாக கருதப்படும் மார்கோனி பரிசு !! அமெரிக்க தமிழர் ஆரோக்கியசாமிக்கு நோபல் பரிசுக்கு இணையாக கருதப்படும் மார்கோனி பரிசு !!
இந்த வருடம் பொங்கல் பரிசாக 500 ரூபாய் ரொக்கம் அடங்கிய பொங்கல் பை வழங்க தமிழக அரசு ஆலோசனை !! இந்த வருடம் பொங்கல் பரிசாக 500 ரூபாய் ரொக்கம் அடங்கிய பொங்கல் பை வழங்க தமிழக அரசு ஆலோசனை !!
நாயை கண்டுபிடித்தால் விலையுயர்ந்த கார் பரிசு - அமெரிக்க தம்பதியின் அதிரடி அறிவிப்பு !! நாயை கண்டுபிடித்தால் விலையுயர்ந்த கார் பரிசு - அமெரிக்க தம்பதியின் அதிரடி அறிவிப்பு !!
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு !!! பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு !!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.