LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    விவசாயம்    இயற்கை விவசாயம் Print Friendly and PDF

கேஸ் விலை உயர்வு பற்றிய கவலை இனி உங்களுக்கு தேவையில்லை...

மாதம் தவறாமல் எகிறி வரும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, எங்கள் வீட்டு பட்ஜெட்டை பதம் பார்க்காது, ஏனென்றால் நாங்க தோட்டத்துலயே கேஸ் உற்பத்தித் தொழிற்சாலை வெச்சுருக்கோம்ல என மகிழ்ச்சியுடன் சொல்கின்றனர் கோயம்புத்தூரை சேர்ந்த தங்கவேல்-கவிதா தம்பதியினர்!

இரும்பால் செய்யப்பட்ட சாண எரிவாயுக் கலனை நீங்கள் கேள்வி பட்டிருக்கலாம், பார்த்திருக்கலாம். ஆனால், இவர்கள் அமைத்திருப்பதோ, பாலிதீன் ஷீட்டால் தயாரான சாண எரிவாயுக் கலன். சரி வாங்க.. அவங்களப் பத்தியும் அவர்கள் அமைத்திருக்கும் சாண எரிவாயுக் கலன் பற்றியும் விரிவாக பார்ப்போம்.

சாண எரிவாயுக் கலன் யோசனை உங்களுக்கு எப்படி வந்தது?

நாங்க விவசாயம் செய்யறதுனால தோட்டத்துலயே வீட்டைக் கட்டி குடிவந்துட்டோம். ஆரம்பத்தில் நாங்க விறகு அடுப்பு தான் பயன்படுத்தினோம். அப்பறம், புகையில்லாம சமைக்கறதுக்காக கேஸ் சிலிண்டருக்கு மாறினோம். ஆனா, கிராமத்துல கேஸ் சிலிண்டர் கிடைக்கறது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. மாசத்துக்கு ஒரு தடவைதான் சிலிண்டர் வண்டி வரும். அன்னிக்கு காலி சிலிண்டரோட மெயின் ரோட்டுல காத்துக் கிடக்கணும். அதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வரல. அதனாலதான், மாட்டுச் சாணத்துல இருந்து கேஸ் உற்பத்தி பண்ணலாம்னு முடிவுக்கு வந்தேன்.

இத பத்தி விசாரிச்சப்ப சாண எரிவாயுக் கலன், இரும்பு டிரம்லதான் அமைக்கணும். பெரியக் கிடங்கு வெட்டி, சிமெண்ட் பூசி பதிக்கணும். அதுக்கு செலவு அதிகமாகும். துருப்பிடிச்சு போச்சுனா பிரச்னை வரும்னு ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்து சொன்னாங்க. 'என்ன செய்யலாம்?'னு யோசிச்சுட்டு இருந்த சமயத்துலதான் பாலிதீன் பயோ கேஸ் ஹோல்டர்னு ஒரு விஷயத்தைக் கேள்விப்பட்டு, அதை வாங்கிப் போட்டுட்டோம்.

இதன் தொழில்நுட்ப விஷயங்கள் பற்றி கொஞ்சம் சொல்லுங்க?

இந்த கலன் பல கொள்ளளவுகள்ல கிடைக்குது. நமக்குத் தேவையான அளவுல வாங்கிக்கலாம். நாங்க, 1 கன மீட்டர் கொள்ளளவு உள்ள ஹோல்டர் போட்டுருக்கோம். 4 அடி நீள, அகலத்தில், 3 அடி ஆழத்தில் குழி எடுத்து, அதுக்குள்ள இந்த ஹோல்டர வெச்சுடலாம். சிமெண்ட் பூச்செல்லாம் தேவையில்லை. வாயு அதிகமா உற்பத்தியாகும்போது, ஹோல்டர் மேலே எழும்பி வராம இருக்கறதுக்காக சுமார் 10 கிலோ எடையுள்ள ஒரு மூட்டையை ஹோல்டர் மேல வைக்கணும்.

நாலு மணி நேரம் தொடர்ந்து எரியுற அளவுக்கான கேஸ், இந்த ஒரு கனமீட்டர் ஹோல்டர்ல இருந்து கிடைக்கும். இது பெரிய பலூன் மாதிரி 'திக்’கான பாலிதீன்ல தயார் பண்ணியிருக்கறதால... வெயில், மழையால பாதிப்பு இல்லாம பத்து வருஷம் வரைக்கும் உழைக்கும்னு சொல்றாங்க. முள், ஆணி பட்டாலும் ஓட்டையாகாது. அப்படியும் ஓட்டை விழுந்தா... பஞ்சர் பாக்கறதுக்கும் வசதி இருக்கு. சாணம் கரைச்சு ஊத்துறதுக்கு ஒரு பெரியத் துளை, கழிவுகள் வெளியேறுறதுக்கு ஒரு பெரியத் துளை, கேஸ் வர்றதுக்கு சின்னத் துளை இது மூணும் இதுல இருக்கு.

முதல்ல அமைக்கறப்போ... 300 கிலோ சாணத்தை, 300 கிலோ தண்ணில கரைச்சு ஊத்தணும். காய்ஞ்ச சாணமாக இருந்தா... கேஸ் வெளிய வர ஒரு மாசம் ஆகும். புது சாணமா இருந்தா... 15 நாள்ல வந்துடும். கேஸ் வர ஆரம்பிச்ச பிறகு, தினமும் 20 கிலோ... இல்லனா... 25 கிலோ சாணத்தை தண்ணில கலந்து ஊத்தணும். இதுக்கு, வீட்டுல ரெண்டு மாடு இருந்தாலே போதும். சாண எரிவாயு தண்ணி அளவு சரியா இருக்கணும். கூடவோ, குறைச்சலாவோ இருந்தா... வாயு உற்பத்தி அதுக்கு தகுந்தபடிதான் இருக்கும்

இந்த கலனில் என்னென்ன போடுவிங்க? எப்படி போடுவிங்க?

இந்த சாண எரிவாயுக் கலனைப்போட்டு கிட்டதட்ட ரெண்டு வருஷம் முடிஞ்சுடுச்சு. இதுல சாணம் மட்டுமில்லாம, காய்கறிக்கழிவு, தீவனக்கழிவு எல்லாத்தையும் பயன்படுத்த முடியும். ஒரு கிலோ சாணத்துக்கு ஒரு கிலோ தண்ணிங்கிற கணக்குல கரைச்சு ஊத்தணும். மத்தக் கழிவுகளா இருந்தா... நல்லா நசுக்கி, தண்ணில கரைச்சு ஊத்தணும். காய்கறிக் கழிவுகள், கோழி இறைச்சிக் கழிவுகள், மனிதக் கழிவுகள், பசும்புல், மல்பெரி, பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம்... உட்பட மட்கக்கூடிய எல்லா பொருட்களையும் இதுக்குள்ள போட்டு, எரிவாயு உற்பத்தி பண்ண முடியும். எலுமிச்சை மாதிரி சிட்ரிக் அமிலம் உள்ள கழிவுகளை மட்டும் பயன்படுத்தக் கூடாது.தினமும் 20-25 கிலோ அளவுக்கு சாணத்தை ஊத்துறோம். நாள் முழுக்க தட்டுப்பாடு இல்லாம கேஸ் கிடைச்சுடுது. கேஸ் உற்பத்தி முடிஞ்சு வெளியாகுற கழிவை தென்னை மரங்களுக்கு உரமாக்கிடறோம்.

இந்த கலன் அமைக்க எவ்வளவு செலவாகும்?

இந்த பாலிதீன் சாண எரிவாயுக் கலனை அமைக்க சுமார் 10 ஆயிரம் ரூபாய்தான் செலவாகும். இது மட்டுமல்லாம இதுல விபத்து நடக்கவும் வாய்ப்பில்லை. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால், இனி கேஸ் சிலிண்டர் விலை உயர்வை பற்றி நீங்கள் கவலைப் படத்தேவையில்லை என்கின்றனர் இந்த தம்பதியினர்.

உங்களுக்கு பாலிதீன் சாண எரிவாயுக் கலன் பற்றி சந்தேகம் இருப்பின் தங்கவேல் அவர்களை 94880-42428 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

by Swathi   on 28 Oct 2015  0 Comments
Tags: பயோ கேஸ் ஹோல்டர்   தங்கவேல்   பயோ கேஸ்   Biogas Holder           
 தொடர்புடையவை-Related Articles
நட்சத்திர வார பலன்கள் (25 – 03 – 2018 முதல் 31 - 03 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (25 – 03 – 2018 முதல் 31 - 03 – 2018 வரை)
நம்பிக்கையெனும் நெற்றிக்கண் திற.. நம்பிக்கையெனும் நெற்றிக்கண் திற..
அழகெனும் சொல்லுள் ஆதிக்கம் செய்பவள்.. - வித்யாசாகர்! அழகெனும் சொல்லுள் ஆதிக்கம் செய்பவள்.. - வித்யாசாகர்!
நீயே தாயுமானவள்.. - வித்யாசாகர் நீயே தாயுமானவள்.. - வித்யாசாகர்
இந்த வார நட்சத்திர பலன்கள் (18 – 03 – 2018 முதல் 24 - 03 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (18 – 03 – 2018 முதல் 24 - 03 – 2018 வரை)
தினம் வாடி துடிக்கிறேன்......! தினம் வாடி துடிக்கிறேன்......!
முன்னாள் துணை குடியரசுத் தலைவருக்கும், தகவல் உரிமைப் போராளி அருணா ராய்க்கும் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது முன்னாள் துணை குடியரசுத் தலைவருக்கும், தகவல் உரிமைப் போராளி அருணா ராய்க்கும் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது
வட அமெரிக்காவில் குழந்தைகளுக்கு வட அமெரிக்காவில் குழந்தைகளுக்கு "கதைசொல்லி" குழுமம் மிகப்பெரிய வரவேற்புடன் தொடங்கியது..
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.