LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    இயற்கை விவசாயம் Print Friendly and PDF
- நெல்

மரபு ரக நெல்வகைகளும் மக்களிடம் கொண்டுசெல்லும் முறையும்

 

காவிரிநீர் திறந்துவிடப்பட்டிருக்கிறது,குறுவை சாகுபடியின் இறுதிக்கட்டத்திற்கும்,சம்பா பயிருக்கும் இந்தநீர் வந்துகொண்டிருக்கவேண்டுமென்பதே கழிமுகப்பகுதி மக்களின் வேண்டுகோளாகவும் வேண்டுதலாகவும் உள்ளது.


அவர்களுக்கெல்லாம் யாரும் விவசாயம் சொல்லித்தரவும் தேவையில்லை,அவர்கள் யாருடைய தயவையும் அனுதாபத்தையும் வேண்டுவதில்லை, ,அவர்களுக்கு கால்கடுக்க வயல்வரப்பில் பாடுபடத்தான் தெரியும்,வெள்ளாமை வீடுவந்து சேர்ந்தபோது அவர்கள் கேட்பதெல்லாம் நெல்லுக்கேற்ற விலைதான்,அதைத்தான் அவர்களால் காலம்முழுவதும் பெறமுடிவதில்லை,வேண்டுமானால் விவசாயிக்கு விளைச்சலுக்கேற்ற பணத்தைபெற்றுத்தரமுயலுங்கள்,உழைப்புக்கேற்ற பணம் இல்லையென்றாலும் பரவாயில்லை,சட்டவரையறைப்படி நிர்ணயிக்கப்பட்ட பணத்தையாவது கொடுங்கள் என்று எதிர்ப்பார்க்கிறார்கள்.


நமது மரபுரக நெல்லை பயிருடும்படி தங்களுக்கு தெரிந்த மக்களிடம் தெரிவியுங்கள்,மரபுரக நெல்லைப்பற்றி தகவல்களைகூறினால் அவர்களும் விழிப்படைந்து மாறத்தொடங்குவார்கள்,அவர்களில் பெரும்பாலோனோருக்கு மரபுரக நெல்லின் இருப்புகள் தெரியாமலிருக்கலாம்,தெரிந்தவர்கள் வாங்கிக்கொடுங்கள்,இல்லையேல் வழக்கம்போல பக்கத்துவயலைப்பார்த்து ஒட்டு வீரியரகத்தைத்தான் பயிரிடுவார்கள்,அவர்களிடம் இயற்கை வேளாண்மைகுறித்து பேசுங்கள்,இரசாயன உரங்களின் தீமைகளை சொல்லுங்கள்,மரபுரக நெல் பயிரிடுவோரை கண்டறிதல்,விதைப்பபரிமாற்றம் குறித்து விளக்குங்கள்,வேளாண்அதிகாரிகளை நம்பியிருக்காமல் முடிந்தஅளவுக்கு தற்சார்புக்கு, யாரையாவது மாற்றத்தைநோக்கிதிருப்புங்கள்,


திருப்பூர் நம்மஊர்சந்தையில் விவசாயிகளால் பார்வைக்குவைக்கப்பட்டிருந்த மரபுரகநெல் இணைக்கப்பட்டுள்ளது,சேலம் ஆத்தூரை சேர்ந்த அந்த விவசாயிக்கு நன்றி,மேலும் இவ்வாறாக மக்களை தங்கள் இயல்பான தற்சார்புவாழ்க்கைக்கு மாற்றிவிடமுயலும் நல்ல மனிதர்களாகவே இயல்வாகை அழகேஸ்வரி ( இயல் வாகை)அவர்களையும்,அசோக் ( Ashok Kumar)அவர்களையும் பார்க்கவேண்டியிருக்கிறது,


இன்னும் தடைகள்பல கடக்கவேண்டியிருந்தாலும்,முன்னோக்கியுள்ள பாதையில் சீரான அடுத்த அடியை எடுத்துவைப்போம்.

மிளகுசம்பா 
பூங்கார் 
பவானி 
குழியடிச்சான் 
வாளான் 
கருங்குறுவை 
கருப்புகவுனி
சேலம் சன்னா 
வாசனை சீரகசம்பா 
கண்டசாலி 
பாசுமதி 
ஆத்தூர் கிச்சடிசம்பா 
முற்றினசன்னம் 
மஞ்சள் பொன்னி 
துளசி வாசனை 
இரத்தசாலி
காலா நமக்
சூரக்குறுவை
AP2(ஆந்திரா மரபுரகம்)
சொர்ணமசூரி
அறுபதாங்குருவை 
தூயமல்லிசம்பா
இலுப்பைப்பூசம்பா
காட்டுயாணம்
சீரகசம்பா 
பால்குடவாழை
கருடன்சம்பா

 

நன்றி:பிரகாஷ் சண்முகம்

Source:https://www.facebook.com/shan.praka.7?hc_ref=ARR524Z5PaSIN6qSiEHE4X6C_ePWSRXvI2In-eVENKCxP5ayrObX-nBUI3CAIPKx_7k&fref=nf

poonkar
by Swathi   on 23 Jul 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கூடுதல் நெல் மகசூல் பெறுவதற்கான உற்பத்தி முறைகள் கூடுதல் நெல் மகசூல் பெறுவதற்கான உற்பத்தி முறைகள்
இயற்கைவழி வெங்காயம் - தொடர்புக்கு இயற்கைவழி வெங்காயம் - தொடர்புக்கு
தேங்காயில் ரெட்டிப்பு லாபம்தரும் கொப்பரை தேங்காயில் ரெட்டிப்பு லாபம்தரும் கொப்பரை
ஆள் பற்றாக்குறையை போக்க ஆமணக்கு பயிரிடலாமா? ஆள் பற்றாக்குறையை போக்க ஆமணக்கு பயிரிடலாமா?
பயிர்களில் விளைச்சல் தரத்தினை மேம்படுத்தும் பொட்டாஷ் பாக்டீரியா பயிர்களில் விளைச்சல் தரத்தினை மேம்படுத்தும் பொட்டாஷ் பாக்டீரியா
இயற்கை வளங்கள் நீர்நிலைகள் பாதுகாப்பில் கிராமசபை - 'நல்ல சோறு' ராஜமுருகன் இயற்கை வளங்கள் நீர்நிலைகள் பாதுகாப்பில் கிராமசபை - 'நல்ல சோறு' ராஜமுருகன்
நீர்வளமும் நிலவளமும் | Wealth of Water and Land, Let's talk Agriculture, Session 7-Part-2 நீர்வளமும் நிலவளமும் | Wealth of Water and Land, Let's talk Agriculture, Session 7-Part-2
செலவில்லாமல் இயற்கை விவசாயம் செய்வது எப்படி? - திரு. காளி | Zero budget forming, Part-3 செலவில்லாமல் இயற்கை விவசாயம் செய்வது எப்படி? - திரு. காளி | Zero budget forming, Part-3
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.