LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- சிந்துப்பாவியல்

நூலுக்குப் புறனடை

கூறிய வல்ல வேறுபிற தோன்றினும்
கூறிய நெறியில் தேறினர் கொளலே
கருத்து : இந்நூலுள் கூறியவை அல்லாதனவாக வேறுவகைச் சிந்துப் பாடல்கள் காணப்பட்டாலும் அவற்றையும் இச்சிந்துப் பாடல் இலக்கண நெறியின் வழி ஆராய்ந்து ஒருபுடை ஒத்தனவற்றை அமைத்துக் கொள்க. 
விளக்கம் : ‘இன்னவாறு என்னும் யாப்புறவின்றிக் கூறு பாவலர் குறிப்பில் அமைந்து வழங்கிடும்’ என்று முன்னர் கூறினார். (நூ.50) ஆனதாலும், கால ஓட்டத்தில் புதிய புதிய சிந்துப் பாடல்கள், பாடுகின்றவர் விரும்பும் வடிவில் தோன்றுதல் தவிர்க்க முடியாதது ஆதலாலும், ‘புதியன புகுதலும் வழுவில’ என்று நன்னூலார் கூறியுள்ளமையாலும் புதியனவாய்த் தோன்றும் சிந்துகளையும் இந்நூலின் இலக்கண மரபின் வழி ஆராய்ந்து அமைவுடையவற்றைக் கொள்க என்று கூறினார். 
வேறு வகையாக வரும் சிந்துப்பாடல்கள் 
காட்டு : (1)
வினா
நூறாயி ரக்கணக் காகச்செ லவிட்டு
நூற்றுக்க ணக்காய்த்தி ரைப்படம் ஆக்கினர்
மாறான எண்ணத்தை மட்டக்க தைகளை
மக்களுக் கீந்தனர் அண்ணே - அது
தக்கதுவோ புகல் அண்ணே.
விடை
கூறும்தொ கைக்காகக் கூட்டுத் தொழில்வைப்பர்
கூட்டுத்தொ ழில்முறை நாட்டுக்கு நல்லது
ஏறாக்க ருத்தைஇங் கில்லாக்க தைகளை
ஏற்றின ரோஅவர் தம்பி? - இது
மாற்றாதி ருக்குமோ தம்பி?
(பா.தா.க. 2ஆம் தொகுதி. ப. 151)
காட்டு : (2)
செங்கதிர் சென்றது;
செவ்வல்லி பூத்தது;
திங்களும் வந்தது பாரடி! - உன்
செவ்விதழைச் சற்று நீட்டடி!
(வாணிதாசன், பாட்டுப் பிறக்குமடா. ப. 56)
காட்டு : (3)
ஆற்றல்மி குந்தவர் ஆட்சிபு ரிந்தவர்
ஆஸ்திக நீதிபதி - அவரே
பாஸ்கர சேதுபதி - புலவர்
போற்றும்தொல் காப்பியப் புத்தகம் போன்றவர்
போனபின் ஏது கதி?
(சுரதா. 1977.210)
காட்டு : (4)
சோற்றைப்பி டித்துத்தி ரட்டிய பிண்டம்போல்
பாட்டினைச் செய்வதுண்டோ? - புயல்
காற்றைப்பி டித்துக்க டலை அடைத்துக்
கனலை எழுப்பிட டா!
(ம.இ.லே. தங்கப்பா. 1983.109)
காட்டு : (5)
உன்பாடல் நான்பாடி விழிமூட வா? - உன்
ஒருபாடல் நான்கேட்டு வழிதேட வா?
கண்போன்ற அரிதான கவிமன்ன வா - உன்
கற்பூர மொழிகேட்டு கதைசொல்ல வா
(பாரதிவசந்தன், சின்னப்பறவையின் வண்ணச் சிறகுகள். ப. 61)

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.