LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தகவல் Print Friendly and PDF
- தெரிந்து கொள்ளுங்கள்

சொத்துகள் வாங்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டியவை

சொத்துகள் பற்றிய அரசு அலுவலகம்வருவாய்த்துறையின் (Revenue Department) கீழ் வரும்ரெஜிஸ்டர் அலுவலகத்தில் நிலத்திற்கான விவரங்கள்இருக்கும். அது ஐந்து வகையான பதிவேடுகளில் குறிக்கப்பட்டிருக்கும்:

 

1)      பட்டா (Patta)

2)      சிட்டா (Chitta),

3)      அடங்கல் (Adangal)

4)      ‘அ’ பதிவேடு என்கிற ‘A’ Register

5)      நிலத்திற்கான வரைபடம் (FMB)

 

பட்டா என்றால் என்ன?

 

     ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதைக் காட்டுவது - பட்டா.இப்பட்டாவில் மாவட்டத்தின் பெயர்மற்றும் ஊரின் பெயர், பட்டா எண், உரிமையாளர்பெயர் போன்ற விவரங்களுடன், புல எண்ணும், உட்பிரிவும், (Survey Number and Subdivision), நன்செய்நிலமா அல்லது புன்செய் நிலமா என்னும் விவரமும், நிலத்தின்பரப்பு மற்றும் தீர்வையின் விவரங்களும் இருக்கும்.

 

சிட்டா என்றால் என்ன?

 

     ஒரு தனி நபருக்குகுறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடுதான் சிட்டா. சிட்டாவில்சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், என்ன வகையானநிலம் அதாவது நன்செய் அல்லது புன்செய் பயன்பாட்டில்இருக்கிறதா? என்பதும் தீர்வை (வரி) கட்டியவிவரங்கள் சிட்டாவில் இருக்கும்.

 

அடங்கல் என்றால் என்ன?

 

     ஒரு கிராமத்தில்இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடுதான் 'அடங்கல்'. அடங்கலில்குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண் மற்றும்நிலத்தின் பயன்பாடு என்ன போன்ற விவரங்கள் இருக்கும்.

 

'அ' பதிவேட்டில் ('ARegister) இருக்கும்விபரங்கள்:

 

1.      பழைய நில அளவை எண், உட்பிரிவுஎண், (Survey Number and Subdivision)

2.      ரயத்துவாரி (ர), சர்க்கார்(ச), அல்லது இனாம் (இ), .நன்செய் (ந), புன்செய்(பு), மானாவாரி (மா), தீர்வுஏற்படாத தரிசு (தீ.ஏ.த), புறம்போக்கு

3.      பட்டா எண் மற்றும் பதிவு பெற்றஉடைமையாளரின் பெயர்

4.      நிலத்தின் பரப்பு மற்றும்தீர்வை, போன்ற அனைத்து விவரங்களும்இருக்கும்.

 

வரைபடம் அல்லது FMB ஸ்கெட்ச்என்றால் என்ன?

 

     நிலத்திற்கான வரைபடம் FMB என்பது குறிப்பிட்ட நபரின் இடம்எவ்வாறு இருக்கிறது என்பதைக் காட்டும்.அதுமட்டுமல்லாமல் குறிப்பிட்ட நபருக்குச் சொந்தமான சொத்தாய் குறிக்கப்படும்சர்வே எண்ணும் அப்படத்தில் குறிக்கப்பட்டிருக்கும். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்குஎல்லைகள் நீள அகலங்கள் குறிக்கப்பட்டிருக்கும்.இப்படத்தினை வைத்து நிலத்தின் வடிவம், நீள அகலங்களை அறிந்து கொள்ளலாம்.

 

ஓ.கே. பதிவேடுகள் குறித்து அறிந்தாயிற்று. இனிவாங்கும்போது என்னன்ன கவனிக்கவேண்டும்?

 

     நிலத்தின் உரிமையாளர்உயிரோடு இல்லையென்றால், அனைத்து வாரிசுதாரர்களின்சம்மதத்தோடு நிலம் விற்கபடுகிறதா? என்றுதெரிந்துகொள்ள வேண்டும். முக்கியமான விஷயம், யாரெல்லாம்வாரிசுதாரர்கள் என்று வாரிசு சான்றிதழ்மூலம் தெரிந்து கொள்வது. உரிமையுள்ளவாரிசுகளில் யாரேனும் மைனராக இருந்தால், உயர்நீதிமன்றம் நியமிக்கும் காப்பாளர் (Guardian) மூலம்தான்சொத்து விற்கப்படவேண்டும்.

 

     அதிகாரம் பெற்ற முகவர்(Power ofAttorney Holder) மூலம் சொத்து வாங்கும்போது, முகவருக்குசொத்தை விற்கும் அதிகாரம் இருக்கிறதா என்பதை அதிகார ஆவணத்தை தெளிவாகபடித்து தெரிந்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், விற்பனைஒப்பந்தம் செய்வதற்கு மட்டும்கூட அதிகாரம்கொடுக்கப்பட்டிருக்கலாம். அப்படிபட்டவரிடம்இருந்து விற்பனை ஆவணம் பதிவு செய்துக்கொள்ள முடியாது. அதிகாரம்கொடுத்தவர் உயிரோடு இருக்கிறாரா? என்று தெரிந்துகொள்ளவும். இல்லையென்றால், அதிகாரமும்இல்லை.

 

     மனநலம் பாதிக்கப்பட்டவரின்சொத்தை வாங்குவதற்கும் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றாக வேண்டும்.நிறுவனங்களிடம் இருந்து சொத்து வாங்கும்போது, உரிமை, உடமைகளுடன், அந்தநிறுவனத்தின் விதிமுறைகளை பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும்.

 

     முன்பணம் கொடுப்பதற்குமுன் கண்டிப்பாக மூல ஆவணத்தை பார்க்க வேண்டும். மூல ஆவணம் இல்லையென்றால், சொத்துஅடமானத்தில் இருக்கலாம். உங்களிடம்கொடுக்கப்பட்ட விற்பனை ஆவணம், மூல ஆவணமா (Original Deed) அல்லது படிஆவணமா (Duplicate Copy) என்றுதெரிந்துகொள்ள வேண்டும். மூல ஆவணம்தான் தேவை.

 

     மூல ஆவணம் நமக்கென்றுகிடைக்க வாய்ப்பில்லாத அபார்ட்மெண்ட் ப்ளாட் விற்பனையின்போது, மூல ஆவணத்தைபார்வையிடுவது அவசியம். அபார்ட்மெண்ட்டில்வீடு வாங்கும்போது, மூல ஆவணம் அடமானத்தில்இருந்தாலும், நீங்கள் வாங்கும் வீட்டின்மீது வங்கிக்கு எந்த உரிமையும் இல்லையென்று சான்றிதழ்பெற்றுக்கொள்ள வேண்டும். அபார்ட்மெண்ட்கட்ட அனுமதி, திட்டத்தின் அனுமதி, வரைபடத்தின் அனுமதி என்று அனைத்து அனுமதியையும் பார்க்க வேண்டும். அனுமதி பெற்ற வரைப்படத்தை மீறி கட்டிடம் கட்டப்பட்டிருக்க கூடாது.

 

     விற்பனை ஆவண பதிவிற்கு காலஅவகாசம் தேவைப்படும் பட்சத்தில், விற்பனை ஒப்பந்தம்செய்துகொள்வது நல்லது. விற்பனை ஒப்பந்தத்தில், முன்பணம், விற்பனைத்தொகை, கால அவகாசம், நீட்டிப்புக்கான நிபந்தனைகள்,விற்பனைதவறும் பட்சத்தில் தரப்பட வேண்டிய இழப்பீடு ஆகிய அனைத்தும்ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட வேண்டும்.

 

பொதுவாக ஒரு சொத்துவாங்குவதற்கு முன், அதன் உரிமையாளரிடம் வாங்க வேண்டியவை:

 

1)  விற்பனை ஆவணம்

2)  தாய் ஆவணங்கள்

3) வில்லங்கசான்றிதழ் (13 ஆண்டுகள் வில்லங்க சான்றிதழ்போதும். 30 ஆண்டுகள் ரொம்ப நல்லது).

4) பட்டா, சொத்து வரிரசீதுகள் சொத்தின் உரிமையை (Ownership) ஆராய்ந்துதெரிந்துகொள்வதுபோல், உடமை (Possession) பற்றியும் தெரிந்துகொள்ளவேண்டும். பட்டா பார்த்து, உடமையை தெரிந்துக்கொள்ளலாம்.விவசாய நிலமென்றால், சிட்டா. நிலத்தை பொறுத்து, உரிமையாளரைபொறுத்து  தேவைப்படும் ஆவணங்கள் கூடும்.

by Ilakkiyan   on 13 Jan 2012  6 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஆகாயத்தாமரை - குளங்களை , நீர்நிலைகளைக்காக்க அழிப்பது எப்படி? ஆகாயத்தாமரை - குளங்களை , நீர்நிலைகளைக்காக்க அழிப்பது எப்படி?
தமிழுக்கு 'ஐ' என்ற எழுத்து இங்கிருந்துதான் கிடைத்ததாக கூறப்படுகிறது தமிழுக்கு 'ஐ' என்ற எழுத்து இங்கிருந்துதான் கிடைத்ததாக கூறப்படுகிறது
மானாமதுரை அருகே 13-ம் நூற்றாண்டு சமணப்பள்ளி நிலதானக் கல்வெட்டு கண்டெடுப்பு. மானாமதுரை அருகே 13-ம் நூற்றாண்டு சமணப்பள்ளி நிலதானக் கல்வெட்டு கண்டெடுப்பு.
கிரிப்டோகரன்சி – கடந்து வந்த பாதை ! கிரிப்டோகரன்சி – கடந்து வந்த பாதை !
மாவட்ட வாரியாக முக்கிய நதிகள் மாவட்ட வாரியாக முக்கிய நதிகள்
FMB (Field Boundary Line)-நிலவரைபடம்  பற்றி தெரியுமா? FMB (Field Boundary Line)-நிலவரைபடம் பற்றி தெரியுமா?
தமிழ் நாட்டுப்புறக் கலைகள் தமிழ் நாட்டுப்புறக் கலைகள்
உலகிலேயே மிக உயரமான முருகன் திருவுருவச்சிலை உலகிலேயே மிக உயரமான முருகன் திருவுருவச்சிலை
கருத்துகள்
08-Nov-2019 07:06:14 மணிராஜ் said : Report Abuse
FMD sketch mrasurementum , patta measurement um miss match ahguthu ethai yeappadi sari saivathunu therinavanga konjam sollunga contact no:9789794086
 
28-May-2017 12:16:39 கன்னியப்பன் said : Report Abuse
நான் சுமார் ஆறு லட்சம் மதிப்பில் பொரம்போக்கு நிலம் வாங்கியுள்ளேன். கிரைய பத்திரம் எழுதி வாங்கி இருக்கிறேன். இது சரியா தவறா.அந்த நிலம் முழுவதும் எனக்கு சொந்தமாக நான் என்ன செய்ய வேண்டும். மேழும் அந்த நிலத்தற்கு பட்டா வாங்க முடியுமா. விவரம் தெரிந்தவர்கள் உதவி செய்யுங்கள். என்னுடைய கைபேசி எண் 9789922512
 
12-Jan-2014 06:27:10 Kaviya said : Report Abuse
ரொம்ப முக்கியமான கருதுன்னு சொல்லமுடியாது . வாழ்க்கைல தேரின்சிக்க வேண்டிய முக்கியமான செய்தி .
 
12-Jan-2014 02:07:33 பிரேம்குமார் said : Report Abuse
நன்றி இன்னும் அதிக செய்திகள் அறிவிக்கவும்
 
11-Jan-2014 11:04:43 பார்த்திபன் said : Report Abuse
Very useful
 
11-Jan-2014 11:04:39 பார்த்திபன் said : Report Abuse
Very useful
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.