LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

நவம்பர்- 1 இனி தமிழ்நாடு நாள்- சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

நவம்பர் 1-ம் தேதி இனி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டார். 
நவம்பர் 1-ந் தேதியை தமிழ்நாடு நாளாக அறிவிக்கக் காரணமான பின்னணியை அறிந்து கொள்வோம்.
'மதராஸ் மாகாணம்' என்ற பெயர் இருக்கக் கூடாது, அதனை தமிழ்நாடு என பெயர் மாற்றுங்கள்" என்று கூறி தொடர் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தவர் தியாகி சங்கரலிங்கனார்.
மொத்தம் 75 நாள் உண்ணாவிரதம் இருந்து மொழிக்காக  உயிரையே விட்ட தியாகி இவர்தான். இத்தனைக்கும் இவர் அப்போது எந்த அரசியல் கட்சியையும் சாராதவர்.
அதுமட்டுமல்ல, யாருக்கும் எந்தவிதத்  தொந்தரவும் இல்லாமல் தன் வீட்டு வாசற்படியிலேயே அமர்ந்து உண்ணாவிரதம் இருந்தவர் இவர்.
சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்த ஒவ்வொரு நாளும் நாடு முழுவதும் செய்திகள் பரபரப்பாகப் பேசப்பட்டன.  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைவராக ஓடி வந்தார்கள். 
உண்ணாவிரதத்தை  நிறுத்திக் கொள்ளுமாறு ம.பொ.சி, காமராசர்,  ஜீவா எனப் பலர் கோரிக்கை விடுத்தும்,  சங்கரலிங்கனார் அதனை ஏற்கவில்லை.
இறுதியாக, சங்கரலிங்கனார் அறிஞர் அண்ணாவிடம், 'அண்ணா! நீங்களாவது என்னுடைய ‘தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கையை' நிறைவேற்ற சொல்லுங்கள். நான் இறந்த பிறகாவது என் கோரிக்கையை நிறைவேற்று வார்களா? ' என்று ஏக்கமாகக் கேட்டார். 
76-வது நாள் உடல்நிலை மோசமாகி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரும் பிரிந்து விட்டது. அப்போது அவருக்கு 78 வயது.
சங்கரலிங்கனாரின் உண்ணாவிரதமும், கோரிக்கையும், மறைவும் தமிழக அரசியலைப் பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
 ‘தமிழ்நாடு' என்று பெயர் சூட்ட அழுத்தங்கள் தரப்பட்டன. ஆனால் அன்றைய அரசு எதற்கும் செவிசாய்க்கவில்லை. 
அறிஞர் அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு அரசு பெயரை மாற்றி வரலாறு படைத்தது.1968 ஜூலை 18-ம் தேதி மெட்ராஸ் ஸ்டேட் என்பதை ‘தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றி தீர்மானமும் கொண்டு வரப்பட்டது. 
அதே ஆண்டு நவம்பர் மாதத்தின் முதல் நாள், தமிழக அரசின் பெயர் மாற்ற சட்ட முன்வடிவு நாடாளு மன்றத்திலும் நிறைவேற்றப்பட்டது. அது மட்டுமல்ல, நவம்பர் 1ம் தேதிதான் மொழி வழி மாநிலங்கள் பிறந்தன. 
ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் இருந்து கர்நாடகம், கேரளம் உள்ளிட்டவை பிரிந்து சென்றன. அந்த மாநிலங்களில் இந்த நாளை சிறப்பாக மாநிலம் பிறந்த நாளாக கொண்டாடி வருகின்றனர். 
இதன் அடிப்படையில் நவம்பர் 1ம் தேதியை தமிழ்நாடு பிறந்த நாளாக கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை இதுவரை இருந்து வந்தது.
இந்த வரலாற்று சம்பவத்தின் தொடர்ச்சியாகவே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் பேசும் போது இதனை அறிவித்து உள்ளார்.
 'ஆண்டுதோறும் நவம்பர் 1 ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும்' என்ற  அறிவிப்பினை வெளியிட்ட போது, உறுப்பினர்கள் அனைவரும் கரகோஷம் எழுப்பி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

by Mani Bharathi   on 22 Jul 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மனிதனின் மூளையை கணினிகள் மழுங்கடிக்கின்றன: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேச்சு! மனிதனின் மூளையை கணினிகள் மழுங்கடிக்கின்றன: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேச்சு!
சுதந்திர தின விழா: சென்னையில் ஏற்பாடுகள் மும்முரம்! சுதந்திர தின விழா: சென்னையில் ஏற்பாடுகள் மும்முரம்!
அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியதால் மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்! அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியதால் மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்!
கல்லூரிப் படிப்புடன் இந்திய ஆட்சி பணி தேர்வுக்கு பயிற்சி- சென்னையில் 7-ந் தேதி முதல் வகுப்புகள் ஆரம்பம்! கல்லூரிப் படிப்புடன் இந்திய ஆட்சி பணி தேர்வுக்கு பயிற்சி- சென்னையில் 7-ந் தேதி முதல் வகுப்புகள் ஆரம்பம்!
திட்டமிட்டபடி ஆகஸ்ட் 17 -ந் தேதி அத்திவரதர் குளத்திற்குள் செல்வார் : மாவட்ட ஆட்சியர் தகவல்! திட்டமிட்டபடி ஆகஸ்ட் 17 -ந் தேதி அத்திவரதர் குளத்திற்குள் செல்வார் : மாவட்ட ஆட்சியர் தகவல்!
உச்ச நீதிமன்ற கிளையை,  சென்னையில் அமைக்க வெங்கையா நாயுடு வலியுறுத்தல்! உச்ச நீதிமன்ற கிளையை, சென்னையில் அமைக்க வெங்கையா நாயுடு வலியுறுத்தல்!
கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறப்பு: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறப்பு: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
கீழடி அகழாய்வில் 2500 ஆண்டுகள் முந்தைய இரும்புத் துண்டுகள் கண்டுபிடிப்பு! கீழடி அகழாய்வில் 2500 ஆண்டுகள் முந்தைய இரும்புத் துண்டுகள் கண்டுபிடிப்பு!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.