LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சிறுவர் விளையாட்டு - kids Game Print Friendly and PDF

பண்டையக்காலத்து விளையாட்டுகள்

வீர விளையாட்டுகளில் என்றும் பெருவிருப்பமுடையவர் பழந்தமிழர். மற்போரிடல், ஏறுதழுவுதல், வேட்டையாடுதல், மூழ்கி மணல் எடுத்தல் என்பன பழமை வாய்ந்த ஆடவர் விளையாட்டுகள். முற்காலத்தில் மற்போரில் வல்ல மல்லர், மன்னர்களால் மதிக்கப் பெற்றனர். களத்தில் பல்லாயிரவர் சூழ்ந்து நிற்க, தருக்கும் செருக்கும் நிரம்பிய ஆமூர் மல்லனுக்கும் வீரமூம் தீரமும் வாய்ந்த நற்கிள்ளிக்கும் இடையே நடைபெற்ற வீர வீளையாட்டைப் புறநானூறு என்னும் சங்க இலக்கிய நூல் வருணிக்கின்றது.

முல்லை நிலத்தில் ஏறுதழுவுதல் என்னும் வீரவிளையாட்டு நடைபெற்றது. முரசு அதிர, பம்பை முழங்க தொழுவிலிருந்து கொழுமைமிக்க காளைகள் ஒவ்வொன்றாக வெளியே ஓடிவரும். கொம்பிலே உள்ளது காளையின் தெம்பு என்றறிந்த வீரர்கள் காளையின் கொம்பைப் பிடித்து அதன் கொட்டத்தை அடக்குவர். வாலைப் பிடித்தல் தாழ்வு என்பது தமிழர் கொள்கை. பல்லோர் சூழ்ந்து நிற்க கிணற்றுக்குள் துடுமெனப் பாய்ந்து குதித்து மணல் எடுத்து வருதல் ஒருவகை வீர விளையாட்டாகக் கருதப்பட்டது.


பண்டைய நாளில் பெண்கள் வட்டாடுதல், அம்மானை, பந்தாடுதல், ஊஞ்சல், ஓரையாடுதல் எனப் பல விளையாட்டுகளில் இனிதே பொழுது போக்கினார்கள். கட்டம் வரைந்து நெல்லிக்காய்களை வைத்து நகர்த்தி ஆடும் ஆட்டம் வட்டாடுதலாகும். நண்டு, ஆமை ஆகியவற்றைக் கோல்கொண்டு அலைத்து ஓரையாட்டம் ஆடி மகிழ்ந்தனர். சிறுவர், சிறுதேர் உருட்டி விளையாடி மகிழ்ந்தனர். சிறுமியர் முத்துகளைக் கிளிஞ்சல்களின் உள்ளே இட்டு ஆட்டிக் களிப்புற்றனர். அரசர் வாழும் தலைநகரங்களில் யானைப்போர் நடைபெறுவதற்கும், அதனைக் காண்பதற்கும் தனியிடங்கள் இருந்தன. மதுரையில் திருமலை நாயக்கர் கட்டிய மண்டபம் ஆகும். இது யானைப்போர் காண்பதற்கான திடலாகும்.

காலம் செல்லச்செல்ல அதற்கேற்ப விளையாட்டுகளின் தன்மையும் போக்கும் மாறியுள்ளன. பண்டைய ஏறுதழுவுதல் விளையாட்டு இன்று சல்லிக்கட்டாகவும், மஞ்சுவிரட்டாகவும் அறியப்படுகின்றன. அன்று ஏறுதழுவியவரையே மகளிர் விரும்பி மணந்தனர். இன்று அவ்விளையாட்டானது பணமுடிப்பு, பரிசுப்பொருள்கள் பெறுதல், பலர் சேர்ந்து மாடு விரட்டல் என மாறிவிட்டது. தமிழரின் தற்காப்புக் கலை விளையாட்டுகளில் ஒன்றாகச் சிலம்பாட்டம் வளர்ந்து வருகிறது. நிலத்திலிருந்து ஓர் ஆளின் உயரம் வரை இருக்கும் தடியைச் சுழற்றி ஆடும் ஆட்டமே சிலம்பாட்டமாகும்.

உலக அரங்கில் தமிழரின் வீர விளையாட்டான கபடிக்கு தனியிடம் கிடைத்துள்ளது. கபடி விளையாடும்போது பாடிக் கொண்டேவிளையாடிவது நம் மூதாதையர் வழக்கம். ஆனால், கபடிப் போட்டியில் பாடும் மரபு மறைந்து விட்டது. ஊர்த்திருவிழாக்காலங்களில் வழுக்குமரம் ஏறுதல், உறியடித்தல், மஞ்சள் நீர் ஊற்றுதல் ஆகிய விளையாட்டுகளை இன்றைக்கும் சிற்றூர்களில் காணலாம்.

 

நன்றி : தமிழக நாட்டுப்புற விளையாட்டுகள் மேம்பாட்டுக் கழகம்

by Swathi   on 03 Feb 2015  1 Comments
Tags: Traditional Games   பண்டைய விளையாட்டுக்கள்   Old Games              
 தொடர்புடையவை-Related Articles
பண்டையக்காலத்து விளையாட்டுகள் பண்டையக்காலத்து விளையாட்டுகள்
கருத்துகள்
24-Apr-2016 04:23:50 dev said : Report Abuse
நல்ல கருத்துகள் உள்ளன .
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.