LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

‘நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டை திட்டம் செயல்படுத்தப்படும்’ - மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தகவல்!

நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டை திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.

ஒரே குடும்ப அட்டையைப் பயன்படுத்தி நாடு முழுவதும் பொருட்கள் வாங்கும் வகையில் ‘ஒரு நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் நாட்டின் எந்த பகுதியை சேர்ந்தவரும், எந்த பகுதியிலும் பொது வினியோக திட்டத்தின் கீழ்  பொருட்களை வாங்க முடியும்.

இந்த திட்டத்துக்கான பணிகளை மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்தி வரும் நிலையில், முதற்கட்டமாக  4 மாநிலங்களில் இந்த திட்டத்தை மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் தொடங்கிவைத்தார்.

ஆந்திரா-தெலுங்கானா மற்றும் குஜராத்-மராட்டியம் மாநிலங்களுக்கு இடையே பொருட்கள் வாங்கிக்கொள்ளும் திட்டம் தொடங்கப்பட்டது.

இதன் மூலம் ஆந்திரா மக்கள் தங்கள் மாநிலத்தின் எந்த பகுதியிலோ அல்லது தெலுங்கானாவிலோ பொருட்கள் வாங்க முடியும். மேலும் தெலுங்கானா மக்களும் தங்கள் மாநிலத்தின் எந்த பகுதியிலோ அல்லது ஆந்திராவிலோ பொருட்கள் வாங்கலாம். இதைப்போல குஜராத், மராட்டிய மக்களும் தங்கள் மாநிலங்களுக்குள் பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம்.

அடுத்ததாக அரியானா, ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், திரிபுரா ஆகிய 7 மாநிலங்களில் இந்த திட்டம் அறிமுகமாகி இருக்கிறது. தற்போது இந்த மாநில மக்கள் தங்கள் மாநிலத்துக்குள் எந்த பகுதியிலும் பொருட்கள் வாங்குவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது.

இதைத்தொடர்ந்து மேற்படி 11 மாநிலங்களும் தங்களுக்குள்ளே எந்த மாநிலத்திலும் பொருட்களை வாங்கிக்கொள்ளும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்படும். இந்த நடவடிக்கை அடுத்த ஆண்டு (2020) ஜனவரிக்குள் அமலில் வரும் என மத்திய உணவுத்துறை செயலாளர் ரவி காந்த் தெரிவித்தார்.

ஆந்திரா-தெலுங்கானா மற்றும் குஜராத்-மராட்டியம் மாநிலங்களுக்கு இடையேயான குடும்ப அட்டை  திட்டத்தை தொடங்கி வைத்தபின் ராம்விலாஸ் பஸ்வான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

 ‘இன்று ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தினம். தலா 2 மாநிலங்களுக்கு இடையேயான குடும்ப அட்டை திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். அடுத்த ஆண்டு ஜூன் 1-ந் தேதிக்குள் அனைத்து மாநிலங்களையும் திட்டத்தில் சேர்த்து தேசிய அளவில் முழுமையாக செயல்படுத்தப்படும்’ 

இந்த திட்டத்துக்கான உணவுப் பொருள் கையிருப்பு பராமரிப்பைப் பொறுத்தவரை, இந்திய உணவு கழகத்தின் குடோன்கள் அனைத்தும் போதுமான கொள்ளளவுடன் இருப்பதுடன், கூடுதலாக 3 மாதங்களுக்கு தேவையான கூடுதல் பொருட்களை இருப்பு வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறது’ இவ்வாறு அவர் கூறினார்.

by Mani Bharathi   on 13 Aug 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.