LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

ஒரு வார்த்தை

                                                             ஒரு வார்த்தை 


எங்கிருந்தாலும்

தினமும் என்னைத் தேடி

வந்துவிடுகிறது

என் தூக்கம்.!!!


கன்னிப்பெண்ணை ரசிக்கும்

கல்லூரிப் பையனாக

உலக மகளின் நடையை

ரசிக்கிறது,

என் பேனா!!!

கிண்டல் செய்கிறது!

கைப்பிடித்து இழுக்கிறது!

சில சமயம் அதன் அழகில் மயங்கி,

முத்தம் கூட கொடுக்க முனைகிறது!


நான் சொன்னபடியே கேட்கிறது!

எவ்வளவு உதைத்தாலும்

என் இருசக்கர வாகனம்!!

திருப்பி உதைக்காமல்!!!


ஒரு நாள் நான் தீண்டாவிட்டாலும்

தன் மேனி மறுத்துப்போவதாக,

என் செல்லிடப்பேசியின்,

தொடு உணர்வு தொடுதிரை

சொல்வது போலிருக்கிறது.!!!


என் எச்சில் விரல்களுடன்

இச்சைப்போர்கள்

நடத்திக்கொண்டிருக்கின்றன.!!

நான் வாசிக்கும் புத்தகங்களின்

ஒவ்வொரு காகிதத் தாள்களும்.!!!


வெளியில் நடப்பதை மட்டும்

எனக்கு தெரியப்படுத்திவிட்டு,

இங்கு நடப்பதை

வெளி செல்ல அனுமதிக்காத

என் அறையின் ஆகச்சிறந்த

உளவாளியான ஜன்னல் தோழன்.!!!


அறைக்கூடத்தில்

தனியாக இருக்கும் என்னோடு

எப்போதும் சலிக்காமல்

சலசலத்துக் கொண்டிருக்கும்

இந்த வருடத்தின், மிகப்பெரிய

நாட்காட்டி!!!


அடுத்த பிறவியில்


எப்படிப் புரண்டு படுத்தாலும்

எத்தனை மாத்திரைகள் எடுத்தாலும்

என்னால் தூங்கவே இயலாது !!


நான் பேனாவாகப் பிறந்து

ஒரு பித்தன் கையில் சிக்குண்டு,

கண்டதையும் எழுதப்பட்டு

இறுதியில் தூக்கி எறியப்படுவேன்!!


என் இருசக்கர வாகனம்

மனிதப் பிறவியெடுத்து வந்து

என்னை உதைப்பான் !!


என் வம்சாவழிப் பேரன் ஒருவன்

தொடுதிரையாக மாறிப்போன

என்னை தட்டிப்பிரிப்பான் !!


என் புத்தகத்தாள்கள் தங்கள்

முனைகளின் கூர்மையால்

என் கழுத்தையே அறுத்துவிடும்

அபாயம் இருக்கிறது !!!


புதுப்பித்த கம்பிகளாக மாறிப்போய்

ஒவ்வொரு முறை காற்று வீசும்போதும்

அந்த இரு ஜன்னல்களிடமும் பலத்த,

அடிகளை வாங்கிக்கொண்டிருப்பேன் !!


பேச்சுத்துணைக்கு ஆள் இல்லாமல்

ஊமையாகவும்,

ஒன்றையும் கேட்க முடியாமல்

செவிடனாகவும்,

தனியாக அறைக்கூடத்தில் தத்தளிப்பேன்!!


இப்பிறவியில்

என்னுடன் உயிராக பழகிவரும்

இவற்றையெல்லாம் உயிரற்றவை

என்று நான்

ஒரு வார்த்தை சொல்லிவிட்டால்!!!!


- துங்கபுரம் K சிவசங்கர்.

  sivangp2009@gmail.com

by Sivasankar   on 14 Apr 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.