LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்

ஓங்கி உலகளந்த தமிழர் - 3 : உணவு; உணவிற்கும் உணவு

- முனைவர் கி.செம்பியன்

 

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை        (12)


(துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கி --- உண்டார்க்கு நல்ல உணவுகளை உளவாக்கி; துப்பார்க்குத் துப்பு ஆயதூஉம் மழை---அவற்றையுண்கின்றார்க்குத் தானும் உணவாய் நிற்பதூஉம் மழை---பரிமேலழகர்)


துப்பு--உணவு

மழையில்லாமல் செந்நெல்லும் கன்னலும் இல்லை.

இஞ்சியும் மஞ்சளும் இல்லை.

மரமும் இல்லை; மாடும் இல்லை.

நீர் இன்றி அமையாது உலகு.

நீரை நேரடியாக நாம் குடிக்கின்றோம்.

நமக்கு உணவாகிறது.

நாம் உண்ணும் உணவிற்கும் உணவு.

அதாவது,

நாம் உண்ணும் அரிசிக்கும் கோதுமைக்கும் நீர் உணவு.

நாம் உண்ணும் ஆட்டிற்கும், பன்றிக்கும், கோழிக்கும் நீரே உணவு.

நீரின் மேன்மையை, அதன் இருபெரும் தன்மையைத் தமிழ் இலக்ககிய உலகி;ல் முதன்முதல் சொன்னவர் வள்ளுவரே!

எல்லாரும் நீரைக் குடித்தார்கள்; மோரைக் குடித்தார்;கள்!

இவ்வண்ணம் சிந்தித்தார்களா?

சிந்தித்த வள்ளுவரே வணக்கம்!


உண்மையா?

ஏரி னுழாஅ ருழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்   (14)


உழவர் ஏரின் உழார் --- உழவர் ஏரானுழுதலைச் செய்யார்; புயல் என்னும் வாரி வளம் குன்றிக்கால் --- மழையென்னும் வருவாய் தன் பயன்குன்றின்---பரிமேலழகர்)


வள்ளுவர் சொன்னவையெல்லாம் மெய்யா?

வள்ளுவம் தோன்றி ஈராயிரம் ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.

அவரே சொன்னார்;

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு  என்று!

மழை பொழியாவிட்டால் உழவர் ஏர்கொண்டு உழமாட்டாரா?

ஆயிரம் அடி ஆழத்திலிருந்து தண்ணீரை எடுக்கக் கற்றுக்கொண்டுவிட்டானே இந்த ஆறடி மனிதன்!

மழை பெய்வதுபோலத் தண்ணீரைப் பீச்சி அடித்துப் பயிர்களைக் குளிரச் செய்கின்றானே!

வள்ளுவர் இன்று இருந்து இதைப் பார்த்திருந்தால் இப்படிப் பாடியிருப்பாரா?

மழை இல்லையாயின் வளம் குன்றும் என்பது பாதி உண்மைதான்; முழு உண்மை அன்று!

மனிதன் செவ்வாயிலிருந்து நீர் கொண்டுவந்தாலும் வருவான்!

இனிக் காவிரியும் வேண்டா; கங்கையும் வேண்டா! செவ்வாய் நதிபுறத்துக் கோதுமைப் பண்டம் பூமி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்!
நிலவில் மனிதன் காலடி பதித்துவிட்டான் என்பதை வள்ளுவர் அறியார்!

அவர் அறிந்தது ஒன்றுதான்!

அறிவு உடையார் எல்லாம் உடையார்!


(தொடரும்....)

by Swathi   on 09 Feb 2016  0 Comments
Tags: Thamizhar   Thirukkural   Thirukkural Thodar   தமிழர்   Unavu   உணவு     
 தொடர்புடையவை-Related Articles
வள்ளுவம் படிப்போமா!! வள்ளுவம் படிப்போமா!!
தமிழக ஊர்களும்.. அவற்றில் சிறப்பு வாய்ந்த உணவுகளும்.. தமிழக ஊர்களும்.. அவற்றில் சிறப்பு வாய்ந்த உணவுகளும்..
அமெரிக்கத்தமிழ் தொழிலதிபர்கள் சங்க வடகிழக்குப் பிரிவின் துவக்க விழா - சூர்யா தலைமை தாங்கினார்!! அமெரிக்கத்தமிழ் தொழிலதிபர்கள் சங்க வடகிழக்குப் பிரிவின் துவக்க விழா - சூர்யா தலைமை தாங்கினார்!!
தமிழக விவசாயிகளுக்கு உதவ அமெரிக்காவில் மொய் விருந்து... தமிழக விவசாயிகளுக்கு உதவ அமெரிக்காவில் மொய் விருந்து...
திருக்குறள் பரப்பிய தமிழ்த்தொண்டர் ஆ.வே.இராமசாமி ! தமிழ் அறிஞர்கள் புகழாரம்! திருக்குறள் பரப்பிய தமிழ்த்தொண்டர் ஆ.வே.இராமசாமி ! தமிழ் அறிஞர்கள் புகழாரம்!
திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில்  திருக்குறள் மாமணி திரு. ஆ. வே. இரா. நூல் வெளியீட்டு விழா ! திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில் திருக்குறள் மாமணி திரு. ஆ. வே. இரா. நூல் வெளியீட்டு விழா !
விவசாயம் பேசுவோம் - 10 : திரு.செந்தில்குமார் பாபு  (Let's Talk Agriculture - Senthilkumar Babu) விவசாயம் பேசுவோம் - 10 : திரு.செந்தில்குமார் பாபு (Let's Talk Agriculture - Senthilkumar Babu)
திருக்குறள் தொண்டர் கரு. பேச்சிமுத்து திருக்குறள் தொண்டர் கரு. பேச்சிமுத்து
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.