LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்

ஓங்கி உலகளந்த தமிழர் - 4 : மழைக்கு அறிவில்லை

- முனைவர் கி.செம்பியன்

 

கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்;கே
எடுப்பதூஉ மெல்லா மழை
     (15)

(கெடுப்பதூஉம்---பூமியின்கண் வாழ்வாரைப் பெய்யாது நின்று கெடுப்பதூஉம்; கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே எடுப்பதூஉம் ---அவ்வாறு கெட்டார்க்குத் துணையாய்ப் பெய்து கெடுத்;தாற்போல எடுப்பதூஉம்; எல்லாம் மழை---இவையெல்லாம் வல்லது மழை--பரிமேலழகர்)


மழை அறிவில்லாதது!

ஒரே இடத்தில் தொடர்ந்து பத்து நாள்கள் பெய்து, வௌ;ளப் பெருக்கு எடுக்கவைத்து, வீடுகளையும் மாடுகளையும் மகிழ்வு+ர்திகளையும் அடித்துச் செல்லும்; வெள்ளத்தில் சிக்கி மனிதர் சாவர்; குழந்தைகள் மிதக்கும்!

எங்கே ஏரிகுளம் வறண்டு கிடக்கின்றனவோ அங்கே போய்ப் பெய்யக்கூடாதா?

மழை கெடுக்கவும் செய்யும்; எடுக்கவும் செய்யுமாம்; வள்ளுவரின் கண்டுபிடிப்பு!

ஒரே ஊரில் ஒரே நேரத்தில் நெல்லைக் காயவைப்பவனுக்குத் துன்பம்; நெற்பயிருக்கு நீர் இறைப்பவனுக்கு இன்பம்!

உப்பு விற்றுக்கொண்டு செல்பவனுக்குத் துன்பம்; பட்டாணிக்கடலை வறுத்துக்கொண்டிருப்பவனுக்கு இன்பம்!

ஆளுங்கட்சி மாநாடு நடத்தும்; மழை வரும்; எதிர்க்கட்சிக்கு இன்பம்!

எதிர்க்கட்சி கூட்டம் நடத்தும்; மழை வரும்; ஆளுங்கட்சிக்கு இன்பம்!

மணமக்கள் ஊர்வலம் நடக்கும்; மழை வரும்; துன்பம்!

மழைக்கு அறிவில்லை!

மழை சில ஆண்டுகளில் தேவையான நேரங்களில், தேவையான அளவில், தேவையர்ன இடங்களில் பெய்து சாதகம் செய்யும்; இன்பம்!

அருவி கொட்டும்; ஆறு ஓடும்; ஏரிகுளம் நிறையும்; காடு செழிக்கும்; உயிர்கள் இன்புற்று வாழும்!

மேட்டூரின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் எங்கெங்கு இருக்கின்றனவோ அங்கங்கு மழை பெய்யக்கூடாதா?

மழைக்கு அறிவில்லை!

நிரம்பியிருக்கும் ஏரி;யின் மீது பெய்து உடைப்பெடுக்க வைக்கும்!

எல்லாம் அளவோடிருந்தால்!

வணக்கம் வள்ளுவரே!

எடுக்கும் கெடுக்கும் என்று எதுகைபோட்டுச் சொல்லித்தருகின்றீர்!

அதெல்லாம் சரிதான்.

தேவையான நேரத்தில், இடத்தில் மழைபொழிய ஒரு மந்திரம் கற்றுக்கொடுக்கக்கூடாதா?

ஏனென்றால்,

எமது நாடு மந்திரத்தால் மாங்காய் விழவைக்கும் நாடு!


காற்று இன்றி அமையுமா உலகு?

நீர் இன்றி அமையாது உலகு   (20)


நீரையின்றி உலகியல் அமையாது---பரிமேலழகர்


சரிதான் ஒப்புக்கொள்வோம்!

காற்று இன்றி அமையுமா உலகு?

தீயின்றி அமையுமா உலகு?

மண் இன்றி அமையுமா உலகு?

விண் இன்றி அமையுமா உலகு?

வள்ளுவர் ஏன் நீரை மட்டும் பாராட்டினார்?

நீர் வள்ளுவருக்குக் கையு+ட்டுக் கொடுத்ததா?

நீருக்குள் நிலமா?

நிலத்திற்குள் நீரா?

தீக்குள் நீரும் நிலமுமா?

எல்லாமும் விண்ணிலா?

வள்ளுவரே பதில்சொல்லும்!

 

(தொடரும்....)

by Swathi   on 23 Feb 2016  0 Comments
Tags: Thirukkural about Mazhai   Mazhai Thirukkural   Thamilar   மழை திருக்குறள்   மழை   திருக்குறள் கட்டுரை     
 தொடர்புடையவை-Related Articles
ஓங்கி உலகளந்த தமிழர் - 10 : அறிவியல் (Science) என்றால் என்ன? ஓங்கி உலகளந்த தமிழர் - 10 : அறிவியல் (Science) என்றால் என்ன?
ஓங்கி உலகளந்த தமிழர் - 8 : அன்பற்றவன் எலும்புக்கூடு ஓங்கி உலகளந்த தமிழர் - 8 : அன்பற்றவன் எலும்புக்கூடு
ஓங்கி உலகளந்த தமிழர் - 6 : வாழ்க்கை வளத்திற்கேற்ப ஓங்கி உலகளந்த தமிழர் - 6 : வாழ்க்கை வளத்திற்கேற்ப
ஓங்கி உலகளந்த தமிழர் - 4 : மழைக்கு அறிவில்லை ஓங்கி உலகளந்த தமிழர் - 4 : மழைக்கு அறிவில்லை
ஓங்கி உலகளந்த தமிழர் - 5 : உலகம் யார் கையில் ஓங்கி உலகளந்த தமிழர் - 5 : உலகம் யார் கையில்
மழை நோக்கு - சேயோன் யாழ்வேந்தன் மழை நோக்கு - சேயோன் யாழ்வேந்தன்
மாமழைப் போற்றதும் (மழைக்குப் பலியானோருக்கான இரங்கல் கவிதை) மாமழைப் போற்றதும் (மழைக்குப் பலியானோருக்கான இரங்கல் கவிதை)
மழைச் சுவடுகள்...வித்யாசாகர்! மழைச் சுவடுகள்...வித்யாசாகர்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.