|
||||||||
வெங்காய வடகம்(Onion Vadagam) |
||||||||
தேவையானவை : உளுந்தம் பருப்பு- 200 மி.கி சின்ன வெங்காயம்- 2 கிலோ (உரித்தது) உப்பு- 150 மி.லி நல்லெண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன் வற்றல்- 80 எண்ணம். கருவேப்பிலை- தேவைக்கேற்ப. மஞ்சள் தூள்- 1 டீஸ் ஸ்பூன். வெள்ளைப் பூண்டு- 3 எண்ணம். கடுகு- 1 டேபிள் ஸ்பூன் சீரகம்- 1 டேபிள் ஸ்பூன் பெருங்காயம்- சிறிது. செய்முறை : 1. முதலில் சிறிய வெங்காயத்தை சற்று பெரிய துண்டுகளாக ஒரே அளவில் வெட்டிக் கொள்ளவும்.பூண்டு, கருவேப்பிலை இவற்றை நறுக்கிக் கொள்ளவும்.சீரகம்,கடுகு, மஞ்சள் எல்லாவற்றையும் வெங்காயத்துடன் கலந்து வைக்கவும். 2.உளுந்தை நன்கு ஊற வைத்து தோசைக்கு ஆட்டுவது போல் ஆட்டி வைக்கவும். இதனுடன் வற்றல், காயம், உப்பு சேர்த்து நன்கு ஆட்டவும். உளுந்து மாவு, வெங்காயம் மற்றும் அனைத்துப் பொருட்களையும் ஒன்று சேரும்படி கலக்கவும்.ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கலந்து கொள்ளவும். 3.ஒரு வெள்ளைத் துணியில் இந்தக் கலவையைச் சிறிது சிறிதாக உருண்டை போட்டு சூரிய ஒளியில் காய வைக்கவும்.மறுநாள் அதைத் திருப்பிப் போட்டு காய வைக்கவும்.ஐந்து நாட்களில் இது நன்றாகக் காய்ந்து விடும். |
||||||||
by kanika on 12 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|