LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

வித்தியாசமான ட்ரைலர் / டீசர் : இது தமிழ் சினிமாவின் புதிய ட்ரென்ட் !!

ரசிகர்கள் மத்தியில் ஒரு படம் பற்றிய எதிர்பார்ப்பை உருவாக்குவதில் அந்த படத்தின் ட்ரைலர்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. 


இன்றைய காலகட்டத்தில் வித்தியாசமான ட்ரைலர்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெறுகின்றன. 


சமீபத்தில் வெளியிடப்பட்ட சில டிரைலர்களும், டீசர்களும் உண்மையிலேயே வித்தியாசமாகவும் ரசிக்க வைக்கும் விதத்திலும் அமைந்துள்ளன. அவற்றில் சில டீசர்களையும், ட்ரைலர்களையும் பற்றி இங்கு பார்ப்போம்.

விஜய் சேதுபதியின் ஆரஞ்சு மிட்டாய் : 


இப்படத்தின் டிரைலரில் ஒரு விஜய் சேதுபதி வந்து சாதாரணமாக படத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க, இன்னொரு விஜய் சேதுபதி வந்து முதலாமவரைக் கலாய்ப்பது போன்று உருவாக்கப்பட்டுள்ள டிரைலர்தான் இப்போதைய டிரைலர்களில் டாப் ஆக இருக்கிறது.


உதயநிதி, சந்தானத்தின் நண்பேன்டா :


உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் ஆகியோர் நடிக்கும் படம் நண்பேன்டா. இந்த படத்தின் டீசரைப் பார்க்கும் போது, இது ஒரு நகைச்சுவைப் படம் என்பது தெளிவாக தெரிகிறது. படப்பிடிப்பில் நடிகர்கள் ரீ-டேக் வாங்கியதையே ப்ளூப்பர்ஸ் போன்று தொகுத்து அதை ஒரு டீசராக வெளியிட்டிருக்கிறார்கள். இதற்கு ரசிகர்களிடையே அற்புதமான வரவேற்பு கிடைத்துள்ளது.


விஷாலின் ஆம்பள : 


சுந்தர் .சி இயக்கத்தில் விஷால், ஹன்சிகா நடித்து வரும் ஆம்பள படத்திற்கான ஒரு டீசரை கடந்த சில நாட்கள் முன் வெளியிட்டிருந்தார்கள். அதில் படத்தின் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழாவிடம், இயக்குனர் சுந்தர் .சியும், நடிகர் விஷாலும் படத்தின் பாடல்கள் இப்படி வேண்டும், அப்படி வேண்டும், பல்லவி இப்படி இருக்க வேண்டும், சரணம் இப்படி இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்க, கடைசியில் அவரோ, ஆமாம் சார்...இந்த பல்லவி..சரணம்...அப்படின்னா என்ன ? எனக் கேட்கும் இந்த டீசரும் வித்தியாசமாக அமைந்துள்ளது.

 

by Swathi   on 29 Nov 2014  0 Comments
Tags: Nanbenda   Ambala   Orange Mittai   ஆரஞ்சு மிட்டாய்   நண்பேன்டா   ஆம்பள     
 தொடர்புடையவை-Related Articles
நயன்தாரா ஒரு லேடி சூப்பர் ஸ்டார் - ஜெகதீஷ் !! நயன்தாரா ஒரு லேடி சூப்பர் ஸ்டார் - ஜெகதீஷ் !!
எதிர்பார்ப்பை கூட்டும் ஏப்ரல் 2 !! எதிர்பார்ப்பை கூட்டும் ஏப்ரல் 2 !!
மூன்றாவது முறையாக உதயநிதிக்கு யு !! மூன்றாவது முறையாக உதயநிதிக்கு யு !!
உத்தம வில்லன், நண்பேன்டாவுடன் போட்டி போட இருக்கிறதாம் சகாப்தம் !! உத்தம வில்லன், நண்பேன்டாவுடன் போட்டி போட இருக்கிறதாம் சகாப்தம் !!
என் படங்களுக்கு இசை வெளியீட்டு விழாவே கிடையாது! அப்படி வைத்தாலும் நண்பர்களை அழைக்க மாட்டேன் - சொல்கிறார் விஷால்... என் படங்களுக்கு இசை வெளியீட்டு விழாவே கிடையாது! அப்படி வைத்தாலும் நண்பர்களை அழைக்க மாட்டேன் - சொல்கிறார் விஷால்...
கிடைத்தது யு சான்றிதல்... பொங்கல் அன்று வெளியாகிறது ஆம்பள.. கிடைத்தது யு சான்றிதல்... பொங்கல் அன்று வெளியாகிறது ஆம்பள..
நண்பேன்டா ரிலீஸ் எப்போது? நண்பேன்டா ரிலீஸ் எப்போது?
பின்னணி பாடப்போகிறாராம் விஜய் சேதுபதி !! பின்னணி பாடப்போகிறாராம் விஜய் சேதுபதி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.