|
||||||||
ஆரஞ்சுத் தோல் துவையல் (orange zest chutney) |
||||||||
தேவையானவை: கமலா ஆரஞ்சு தோல் - கைப்பிடி அளவு, இஞ்சி - சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் - 1, உளுத்தம்-பருப்பு - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: 1.முதலில் ஆரஞ்சுப்பழத் தோலை பொடியாக நறுக்கவும். 2.பிறகு கடாயில் எண்ணெய் விட்டு அதை நன்கு வதக்கவும். இஞ்சியை தோல் சீவி நறுக்கவும். 3.பின்பு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், உளுத்தம்-பருப்பை வறுக்கவும். வதக்கிய ஆரஞ்சுத் தோல், இஞ்சி, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்புடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும். |
||||||||
by vani on 06 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|