LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் இலக்கணம் (Tamil Grammar )

ஓரெழுத்து ஒருமொழி -செ. இரா. செல்வக்குமார்

  • ஓரெழுத்து ஒருமொழி என்பது தமிழில் நெடுங்காலமாகப் பேசப்படும் ஒன்று. பொதுவாக நெட்டெழுத்துகள் (ஆ, ஈ, ஊ..) போன்ற யாவும் (ஔ இதில் விலக்கு) பொருள்தரும் சொற்கள். 

    உயிரெழுத்துக்கு முன்னே "யகவச பதநம" ஆகிய எட்டு எழுத்துகளின் மெய்யெழுத்தும் சேர்ந்த உயிர்மெய் எழுத்தில் பலவும் தனிமொழிகள். 


    மகரவரிசையில் ஆறு (மா, மீ, மூ, மே, மை, மோ)

    "தபந" வரிசையில் ஒவ்வொன்றிலும் ஐந்து 
  • (தா, தீ, தூ, தே, தை; 
    பா, பீ, பூ, பே, பை, போ; 
    நா, நீ, நே, நை, நோ)

    "கவச" வரிசையில் ஒவ்வொன்றிலும் நான்கு:
    (கா, கூ, கை, கோ; 
    வா, வீ, வை, வௌ; 
    சா, சீ, சே, சோ)

     வரிசையில் ஒன்று யா.

    ஆக நெடில் உயிர் 6 +
    ம வரிசை 6 + 
    தபந வரிசை 5 (3*5= 15) + 
    கவச வசிரை 4 (3*4= 12), 
    யகரவரிசை 1 = மொத்தம் 40

    இவற்றோடு குறில் எழுத்துகள் தொ, து ஆகிய இரண்டும் சேர்ந்து மொத்தம்  42 சொற்கள் என்பார்கள்.

    இதனை நன்னூல் நூற்பா 129 கூறுகின்றது!

    உயிர்மவி லாறுந் தபவி லைந்துங்
    கசவி னாலும் யவ்வி லொன்று
    மாகு நெடினொது வாங்குறி லிரண்டோ
    டோரெழுத் தியல்பத மாறேழ் சிறப்பின

    ஆறேழ் = 6x7 = 42 என்று முடிக்கின்றார்.

    பாட்டின் வரிகள்:

    உயிர்மவி லாறு = உயிர் ஆறு + ம-வில் ஆறு
    தபவிலைந்து = த, ப, வ ஆகியவற்றில் ஐந்து (ஒவ்வொன்றிலும் ஐந்து)
    கசவினாலும் = க, ச, வ ஆகியவற்றில் நான்கு (ஒவ்வொன்றிலும் நான்கு)
    யவ்விலொன்று = ய வரிசையில் ஒன்று
    ஆக நெடினொது வாங்கு = நெடிலோடு ஆங்கு
    குறிலிரண்டோடு = குறில் இரண்டோடு
    ஓரெழுத்து இயல் பதம் ஆறேழ்  சிறப்பின = ஓரெழுத்து இயல்பதம் ஆறேழ் (=42) சிறப்பின. 

நன்றி: செ. இரா. செல்வக்குமார்

by Swathi   on 29 May 2014  1 Comments
Tags: Oru Ezhuthu   Oru Mozhi   Se Ra Selvakumar   ஓரெழுத்து   ஒருமொழி   செ. இரா. செல்வக்குமார்     
 தொடர்புடையவை-Related Articles
ஒரேழுத்து ஒரு மொழி !! ஒரேழுத்து ஒரு மொழி !!
ஓரெழுத்து ஒருமொழி -செ. இரா. செல்வக்குமார் ஓரெழுத்து ஒருமொழி -செ. இரா. செல்வக்குமார்
ஓரெழுத்தாக தனித்து நின்று பொருள் தரும் 42 தமிழ் எழுத்துக்கள் !! ஓரெழுத்தாக தனித்து நின்று பொருள் தரும் 42 தமிழ் எழுத்துக்கள் !!
கருத்துகள்
11-Dec-2014 07:17:49 DHARSHINI said : Report Abuse
நன்றாக இல்லை .
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.