LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- பாக்கியம் ராமசாமி

ஒரு ராதையும் ஒரு ராவணனும் அப்புசாமியும்.

 

அப்புசாமிக்கு அபூர்வமாகத்தான் டெலிபோன் கால் வரும் அந்த அபூர்வத்தையும் சீதாப்பாட்டி அவரிடம் சொல்ல மறந்து விடுவாள்.
இரண்டு நாள் கழித்துச் சாவகாசமாக, ‘உங்களை யாரோ டெலிபோனிலே டே பி·போர் யெஸ்டர் டே கூப்பிட்டாங்க. சொல்ல மறந்து விட்டேன்,’ என்று மேட்டர் ஆ·ப் ·பேக்டாகச் சொல்வாள்.
அந்த அறிவிப்பில் ஒரு ‘ஸாரி’ யோ, மிடியோ, மினியோ எதுவும் இருக்காது. மனைவியின் அராஜக, அலட்சிய, அகங்கார, அக்கிரம, அநியாய, அழிச்சாட்டிய மனப்போக்கு அவருக்குப் பழகி விட்டது.
அன்றைய தினம் அப்புசாமி செய்த அதிருஷ்டத்தாலோ, சீதாப்பாட்டியின் என்ஸைமில் இரக்க உணர்வு தூக்கலாக இருந்ததாலோ அல்லது டெலிபோனுக்கு இரண்டங்குல தூரத்திலே நின்றுகொண்டு பாட்டியின் புக் ஷெல்·பை அவர் சிரத்தையாகத் துடைத்துக் கொண்டிருந்ததாலோ சட்டென்று பாட்டி, “இட்ஸ் ·பர் யூ” என்று அவர் கையில் கொடுத்து விட்டாள்.
அப்புசாமி, “எனக்காக, எனக்காக?” என்று கேட்டு உறுதி செய்து கொண்டு, “ஹலாவ்! யார் பேசறது?” என்று கத்தினார்.
“ஒரு ஹலோ சொல்ல இத்தனை மீட்டரா வாயைத் திறப்பது?” என்று கண்டனம் தெரிவித்தபடி
சீதாப்பாட்டி போய் விட்டாள்.
“யார் பேசறது?” என்றார் அப்புசாமி. மறுமுனையிலிருந்த பேர்வழி க்விஸ் பிரியர் போலும்.
“குரலு தெரியலையா?” என்றார்.
“ஹி ஹி! அது மாதிரி போனெல்லாம் இன்னும் இங்கே வரலியே?” என்றார் அப்புசாமி.
“டேய் அப்பு!” என்றது மறுமுனை. “நீ அதே மாதிரி இடக்காத்தாண்டா இன்னும் இருக்கே! படவா! கண்டுபிடிச்சிட்டியாடா? ஏண்டா, கல்யாணமெல்லாம் ஆயிட்டுதா?”
“கருமாந்தரம் ஆகிற வயசு வந்துட்டுது. இப்போ கேட்கிறியே, ஆமாம் யாரு நீ? கண்டுபிடிக்க முடியலையே…” என்றார் அப்புசாமி.
“நான்தான் மண்டோதரி பேசறேண்டா.. மண்டோதரி!”
அப்புசாமிக்கு எந்த மெமரி ப்ளஸ்ஸோ மெமரி மைனஸோ சாப்பிடாமலேயே கடகடவென்று பூர்வ ஜென்ம ஞாபகம் வந்துவிட்டது. உடம்பு சிலிர்த்தது.
“மண்டோதரியா! டேய்! டேய்! நிஜமாகவா! பாவி! பாவி! மண்டோதரியாடா” கூவினார். பிடித்த காட்ச்சை மீண்டும் தூக்கிப் போட்டு கிரிக்கெட்காரர் பிடிப்பது போல டெலிபோனைத் தூக்கிப் போட்டுப் பிடித்தார்.
“மண்டோதரியேதாண்டா!”
“ஏண்டா, நீ இன்னும் உசிரோடுதான் இருக்கியாடா… ஐம்பது வருஷம் கழிச்சுப் பேசறே… நீதான் பேசறியா? உன் ஆவியாடா… டேய் மண்டோதரி! எனக்கு அழுகையாக வருதுடா!”
“எனக்குகூடத்தாண்டா…” மறுமுனையிலிருந்த மண்டோதரியின் குரல் தழுதழுத்தது… “டேய் அப்பு…அப்பு…”
அப்புசாமி கண்ணையும், மூக்கையும், தொண்டையையும் துடைத்துக் கொண்டு “எங்கேருந்துடா பேசறே” என்றார்.
“நம்ம ஊருலேருந்துதாண்டா. நம்ம ஊருக்கு போன் கீனெல்லாம் வந்துட்டுதுடா. வெங்கடாசலம் தேங்கா மண்டியிலிருந்து பேசறேன். அங்கேதா
ன் நான் கணக்குப்பிள்ளை. நம்ம ஊரிலே இந்தப் பொங்கலுக்கு ஒரு விழா ஏற்பாடு பண்ணியிருக்கம்டா… லச்சுமிதேவி எலிமெண்ட்டரி ஸ்கூலிலே நாமல்லாம் அஞ்சாம் கிளாஸ் படிச்சமில்லே…? அத்துனி பேரும் இப்போ திக்காலிக்கொருத்தராக இருக்காங்க இல்லே… அந்த குரூப்புலே உசிரோடிருக்கிற எல்லாரும் இந்தப் பொங்கலுக்கு ஒண்ணா நம்ம ஊரிலே கூடறோம். ஐம்பது வருஷம் கழிச்சுக் கூடறோம்டா… நீ அவசியம் வந்துரு… வெங்கடாசலம் தேங்கா மண்டியிலேதான் தங்கறோம். அரமணை மாதிரி கட்டிப் போட்டிருக்கான்.
பொங்கலு, பொலிக்காளையாட்டம், வண்டி வேசம் எல்லாம் பார்த்துகிட்டு அவுங்கவுங்க புறப்பட்டுக்கலாம்… கட்டாயமா வரணும்டா… கம்முனு இருந்துடாதே… வண்டி வேசம் ஞாபகம் இருக்குதாடா… வெச்சுடறேன்… ஏதோ தேங்கா லயன் வருது…”
“மண்டோதரி! மண்டோதரி! டேய்! வச்சுடாதே…” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே லயன் ‘கட்’ டாகி விட்டது.
தனியார் வீட்டைத் தடாலென்று தாக்கும் முக மூடிக் கொள்ளைக்காரர்கள்போல் அப்புசாமியை இளம் பருவ உணர்ச்சிகள் கும்பலாக கதவை உடைத்துக் கொண்டு வந்து தாக்கியதால் முன் ஜாமீன் வாங்குவதற்குள் கைதான பிரமுகர்போல அவர் திணறிச் சகல புலன்களும் ‘ட்ரிப்’ ஆகி ஸ்லோ மோஷனில் சரிந்து விட்டார்.
ஐந்து நிமிஷம் கழித்தே அவருக்குப் பிரக்ஞை வந்தது.
ஐம்பது வருஷம் கழித்து மண்டோதரி!
அவரது ஐந்தாவது வகுப்புத் தோழன்! வேக வைத்த மொச்சைக் கொட்டையை கால் சட்டை டிராயரில் திணித்துக் கொண்டு வந்து துளியூண்டு துளியூண்டு கிள்ளித் தருவான். பிரியம் முக்கால் மொச்சைக் கொட்டை கால் என்ற விகிதத்தில் கிடைத்தாலும். அப்புசாமிக்கு அவன்தான் ரொம்ப தோஸ்த்! சிலநாள் பனியன் பாக்கெட்டுக்குள் தோசையை விண்டு விண்டு போட்டுக் கொண்டு வருவான். கொஞ்சம் தருவதும் உண்டு.
அப்புசாமிக்கும் தன் வீட்டிலிருந்து தீனியை அப்படியெல்லாம் கடத்திக் கொண்டு வரவேண்டும் என்று ஆ¨சையாக இருக்கும். ஆனால் அவரது அம்மா ரொம்ப ஆசாரம். “மொட்டக் கடன்காரா! ஒரு பத்து இல்லே, எச்சலில்லே, சுண்டலையா ஜேபியில் போட்டுக்கறே!” என்று நறுக்கென்று தலையில் ஒருநாள் ஒரு பெருங்குட்டாகக் குட்டி அவரது முயற்சியை முறியடித்து விட்டாள்.
மூக்கை உறிஞ்சிக்கொண்டே அப்புசாமி, “ஜனார்த்தன் வீட்லேருந்து மட்டும் கொண்டு வரானே?”
“அந்த ஜனார்த்தன் கூடச் சேரு படவா… காலிலே சூடு இழுக்கிறேன்!” என்று அம்மா மிரட்டியும் அப்புசாமியால் அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ளாமலே போய் விட்டது.
“ஹலோ! உங்களைத்தானே? இன்னுமா போன் பேசியாகிறது… போனை வையுங்க. நான் உள்ளே பேசணும்!” என்று சீதாப்பாட்டியின் அதட்டல் குரல் அவரை இந்த உலகத்துக்கு அழைத்து வந்தது.
“சீதே! சீதே!” என்று அப்புசாமி புத்துணர்ச்சி பெற்று எழுந்தார். டெலிபோனைச் சரியாக வைத்து விட்டு மனைவியிடம் உற்சாகமே உருவாக விரைந்தார்.
“சீதே! சீதே! யார் பேசினது தெரியுமா? மண்டோதரி! மண்டோதரி சீதே! நான்கூடச் சொல்லியிருக்கேனே… வண்டி வேஷம்! அண்ணா குப்புசாமி! மண்டோதரி!”
சீதாப்பாட்டி அரை வினாடிகூட அவருக்காக மூளையைக் கசக்கிக் கொள்ள விரும்பவில்லை. “ஸோ, வாட்?” என்றாள் கடுப்பாக.
“மண்டோதரி பேசினான் சீதே! மண்டோதரி… வண்டி வேஷம் மண்டோதரி!… ஐயோ! ஐயோ! ஆஹ்… ஆஹ்! ஆஹ்!” விளம்பரப் படங்கள் குறுக்கிடாத சினிமா மாதிரி தொடர்ச்சியாகப் பால்ய நினைவுகளும், பள்ளிப் பருவமும், ஊரில் நடந்த வண்டி வேஷமும் அப்புசாமியின் நினைவுக்கு வந்தன. சிரிப்பு தாங்கவில்லை.
“ஆஹ்! ஆஹ்! ஆஹ்! சீதே! சீதே! தமாஷ்னா தமாஷ்! படு தமாஷ்! ஐயோ கடவுளே! பஹ் பஹ் பஹ்!” அப்புசாமி பயங்கரமாக வயிறைப் பிடித்துக் கொண்டு சிரித்தார். “ஐயோ ஐயோ! தாங்க முடியலை என்னால்… அண்ணா குப்புசாமி… அம்மாடி… அம் மாடி… வயல் வரப்பிலே ஓட…ஊரெல்லாம் துரத்திக் கொண்டு பின்னால் ஓட… ஐயோ! அம்மா! சிரிச்சு கண்ணு மூக்கை எல்லாம் பாரு தண்ணி! தண்ணி!
உனக்கு ஞாபகம் வரலையா. சொல்லியிருக்கேனே…” மூக்கிலே ஊறி வழிந்தது ஆனந்தக் கண்ணீரா, ஆனந்த மூக்கு நீரா என்று அவர் சோதித்தது சீதாப்பாட்டிக்கு மகா அருவருப்பைத் தந்தது. கடும் கோபமாக “யூ நாஸ்ட்டி! எதுக்கு இப்படி அசிங்கமாச் சிரிக்கிறீங்க?” என்று அதட்டிவிட்டுக் குளிக்கப் போய் விட்டாள்.
அப்புசாமிக்குச் சிரிப்பு சிரிப்பாய் வந்தது. பொங்கல்! வண்டி வேஷம்! அண்ணா குப்புசாமி! மண்டோதரி! குட்டிக்கண்ணு ராதை! கிருஷ்ணன்!
பொங்கலானதும் ஊரிலே வண்டி வேஷம் என்று ஒரு விசேஷ அயிட்டம், தீத்தனூரிலே நடப்பது வழக்கம்.
கொஞ்சம் அழகும் துடிப்புமான சிறுவர், சிறுமியர்களுக்குப் பெற்றோர் தங்களுக்குத் தோன்றிய மாதிரி வேஷம் போட்டு அலங்கரிப்பார்கள். பட்டணத்தில் ·பேன்ஸி டிரெஸ் காம்பெடிஷன் மாதிரி அப்புசாமியின் கிராமத்துக்கு அந்த அயிட்டம்.
அரை டஜன் முருகன், கால் டஜன் கிருஷ்ணன், நாலைந்து ராதை, ஏழெட்டு ராமர், சில பெயர் தெரியாத ராட்சஸர்கள், மீனவர்கள், அய்யர்கள், அம்மாமிகள், தபால்காரர்கள் என்று ஏகப்பட்ட வேஷங்கள் தயாராகி விடும்.
சிறுவர்களையும், சிறுமிகளையும் ஒரு பெரிய இரட்டை மாட்டு வண்டியில் மேடை எழுப்பி, நாற்காலிகள் போட்டு அமர வைப்பா¡கள்.
ஊர் பூராவும் அந்த வேஷ வண்டி மெதுவாகச் சுற்றிக்கொண்டு வரும்.
கடைசியில் எல்லாச் சிறுவர்களையும் வேஷத்துடன் நிற்க வைத்து ஒரு பூசணிக்காயைச் சுற்றி உடைப்பதுடன் மேற்படி வண்டி வேஷம் முடியும்.
அப்புசாமிக்கு அந்த வருஷம் அபூர்வமாகக் கிருஷ்ணன் வேஷம் கிடைத்தது. உடம்பெல்லாம் நீல அரிதாரத்தை இசு பிசுக்கென்று பூசிக்கொண்டு உதட்டுக்கு ஒரு சிவப்பைத் தடவி, தலையில் ஒரு ஜிகினா அட்டைடிக் கிரீடமும், மயிலிறகும் வைத்து, கையில் ஒரு புல்லாங்குழலையும் (போன்ற ஒரு பளபள குச்சியையும்) தந்திருந்தார்கள்.
அப்புசாமிக்கு ஒரு முரட்டு அண்ணன் இருந்தான். குப்புசாமி என்று பெயர். அவனைக் கண்டால் அப்புசாமிக்கு எப்போதுமே பயம். அண்ணன் குப்புசாமிக்கு யாரிடமும் பயம் என்பதே கிடையாது. முன்சீப் மேலேயே மறைந்திருந்து கல்லை வீசுவான். மாரியம்மன் கோவில் முன்னே ‘மாப்பிள்ளைக் கல்’ என்று ஒரு ‘உருண்டையான பெரிய கல் இருக்கும்.
ஊரில் நடக்கும் கல்யாணங்களின்போது, மாப்பிள்ளை உண்மையில் பலசாலியா என்பதைச் சோதிக்கப் பழைய காலத்தில் அது உபயோகப்பட்டு வந்ததாம்.
மாப்பிள்ளைப் பையன் அந்தக் குறிப்பிட்ட கல்லை அலேக்காகத் தூக்கிக் காட்ட வேண்டும். அப்போதுதான் பெண் கொடுப்பார்களாம்.
அதெல்லாம் ஒரு காலம். அப்புறம் அந்த வழக்கம் நின்று போய்விட்டது. ஆனாலும் மாரியம்மன் கோவில் வாசலில் போவோர் வருவோரை இடறச் செய்து கொண்டு அந்தக் கல் இருந்து வந்தது. டிராபிக் கான்ஸ்டபிளைச் சுற்றிக்கொண்டு போவதுபோல அந்தக் கல்லைச் சுற்றிக்கொண்டு போவார்கள். ஒரு தரம் அந்தக் கல் குப்புசாமியை இடித்து விட்டது.
கோபம் கொண்ட குப்புசாமி அதை ஒரே தம்மில் தூக்கி ஓரமாகப் போட்டு விட்டான். அவன் சின்னப் பையனாக இருந்தாலும் பெரிய பலசாலி என்று ஊருக்கு நிரூபணமாகி விட்டது.
ஐந்து வகுப்பு படிக்கிறதுக்குள் ஊரில் பெரிய ரெளடி என்று பெயர் வாங்கி விட்டான். எப்படியாவது அவனைப் பள்ளிக்கூடத்திலிருந்து அனுப்பினால் போதும் என்று அவனுக்கு மார்க் அள்ளி அள்ளிப் போட்டாலும் அவன் பாஸாக முடியாது என்று பிடிவாதமாக ஐந்தாவது வகுப்பிலேயே மூணு நாலு வருஷம் படித்து (?) வந்தான். தலைமுறை தலை முறையாக அவன்தான் மானிட்டர். எல்லா கிளாஸ¤க்குமே அவன்தான் மானிட்டர். அவனை ‘பெரிய மானிட்டர்’ என்றுதான் வாத்தியார்கள் உட்படக் கூப்பிடுவார்கள்.
வண்டி வேஷத்தில் குப்புசாமியும் வேஷம் போடுவான். இரணியன், கம்ஸன் இந்த மாதிரி ராட்சஸ வேஷம்தான் வழக்கமாகப் போட்டுக் கொள்வான்.
அந்த வருஷம் பத்துத் தலை ராவணன் வேஷம் போட்டான். தகரத்தில் நீளமாகப் பத்துத்தலை கத்திரித்து தலையில் கட்டிக் கொண்டான். வண்டியில் அலங்கரிக்கப்பட்டிருந்த மேடையில் நடுநாயகமாக உட்கார்ந்து கொண்டான். மண்டோதரியாக பக்கத்தில் அப்புசாமியின் தோஸ்த் ஜனார்த்தனன் வேஷம் கட்டிக் கொண்டு அவனருகில் உட்கார்ந்தான்.
அப்புறம் ஒரு ஆஞ்சனேயர். ஒரு தபால்காரர், ஒரு சாமியார், குடுகுடுப்பைக்காரன், அதற்கப்புறம் அப்புசாமி கிருஷ்ண வேஷம் போட்டுக்கொண்டு தலையில் மயிலிறகும் கையில் புல்லாங்குழலுடனும் உட்கார்ந்திருந்தார். அதற்கப்புறம் பெஞ்ச் ஓரமாக அவரை ஒட்டி குட்டிக் கண்ணு ராதை.
அப்புசாமியின் வீட்டுக்குப் பால் ஊற்றிக் கொண்டிருந்தவர்களின் கடைசிக் குட்டிதான் அந்தக் குட்டிக் கண்ணு. பெயருக்கு ஏற்றாற்போல குட்டியாக இல்லாமல் பெரிசாக அகலமாக இருக்கும். நிறமும் நல்ல செவத்த குட்டி. அப்புசாமி அந்தக் குட்டிக்குக் ‘காக்காக் கடி’ முறையில் ‘பர்ப்பி’ கொடுத்திருக்கிறார் மூக்கு கொஞ்சம் அதிகமாக ஒழுகும் என்பதைத் தவிர குழந்தையிடம் குறை சொல்ல முடியாது.
அப்புசாமி ஒரு நாள் அத்துமீறி ஒரு காரியம் செய்து விட்டார். அவளது மூக்கை அம்மாவின் மடித் துணியால் துடைத்து விட்டுவிட்டார். அம்மா அன்றைக்கு அவருக்குச் சாத்தின சாத்தல் முதுகிலிருந்து மறைய முழுசாக இரண்டு நாளாச்சு.
“சிந்தி விட்டது தப்பில்லே மாமி… குழந்தைகளுக்கு மூக்கு வழியறதுதான். பெரிசு சின்னதுக்கு சிந்தி விடறதுதான். ஆனால் மொட்டைக் கடன்காரன் என் மடித் துணியை எடுத்துச் சிந்திவிடணுமா?” என்று அடியை விலக்க வந்தவர்களுக்கு அம்மாக்காரி பதில் சொன்னாள்.
கன்னத்தில் வைத்த திருஷ்டிப் பொட்டும் அதுவுமாக அந்தக் குட்டிக் கண்ணு, ராதை வேஷத்தில் ஷோக்காக இருந்தாள். அப்புசாமிக்கு மகாப் பெருமையாக இருந்தது – அவளைத் தன் பக்கத்தில் உட்கார வைத்துக் கொள்ள.
வேஷ வண்டி கடைத் தெருவுக்காகத் திரும்பி சுருட்டு சுப்பராயன் கடைகிட்டே வந்திருக்கும். ராவணனுடைய தகரத் தலைகளில் பத்தாம் நம்பர் வந்து அப்புசாமியின் முதுகைக் குத்தியது.
“குப்பண்ணா, தலை குத்துது! கொஞ்சம் அந்தப் பக்கம் சாய்ஞ்சுக்கோ,” என்றார் அப்புசாமி.
“மொதல்லே உன் கையிலேயிருக்கிற புல்லாங்குழலை என்கிட்டே குடுத்துட்டுப் பேசு,” என்றான் ராவண குப்புசாமி.
“கிருஷ்ணன்தான் புல்லாங்குழல் வாசிப்பார். இது கூடத் தெரியலையே உனக்கு.” என்றார் அப்புசாமி – கிருஷ்ண வேஷம் கொடுத்த தெம்பில்.
“அதுதானே! ராவணனுக்கு ஒண்ணியும் தெரியலே,” என்று ராதையும் வழி மொழிந்தாள். அதுதான் பெருத்த ரகளையாகி விட்டது.
அதற்கப்புறம் ராவணனின் பத்தாவது தலை அவரை அடிக்கடி குத்தியது. ராவணனுக்கு ஒன்பது தலை இருந்திருக்கக்கூடாதா என்றுகூட அப்புசாமி எண்ணிக் கொண்டார்.
“டேய்!” என்றான் ராவணன். குடுடா புல்லாங்குழலை”
மண்டோதரி ஜனார்த்தன் சமாதானம் செய்ய முயன்றான்.
“குப்பு! அவன் வெச்சிகிட்டுத் தொலையறான். உனக்கெதுக்கு புல்லாங்குழல்?”
“அவனுக்கு அதை வெச்சுகிட்டு இருக்கறதாலேதான் கருவம். அதையும், அந்த மயிலிறகையும் இப்ப தர்ரானாமா இல்லையா, கேளு! அவனைக் கொன்னுப் புடுவேன் கொன்னு!” எச்சரித்தான் குப்புசாமி கடுங்கோபமாக.
“நீ தராதே!” என்று ரகசியமாக ராதை அப்புசாமிக்கு ‘அட்வைஸ்’ செய்தாள். ஆனால் அது ராவண குப்புசாமியின் இருபது காதுகளிலும் விழுந்து விட்டது’.
“என்னடி சொன்னே எருமைப்பாலு! குடுக்காதேன்னா சொன்னே? கொன்னு புடுவேன் கொன்னு!”
ராதைக்கு எருமைப்பாலுன்னு அவன் தன்னை சொன்னது ரோஷமாகி விட்டது.
“செரிதான் போடா லவுட்டி (ரவுடி) பையா! எங்கே கொல்லு பாக்கலாம்,” என்றாள்.
“ஏய்! எங்கே என்னடி முணுமுணுக்கிறே? இங்கே வந்து என் பக்கத்திலே உட்காருடி!” என்றான் குப்புசாமி முரட்டுத்தனமாக.
வண்டி வேஷப் பொறுப்பாளர் சிக்கணன்தான் மாடுகளை ஓட்டிக் கொண்டிருந்தார். “குப்புத் தம்பி, கிருஷ்ணன் பக்கத்துலேதான் ‘ராதை உட்காரணும்… அதுதாம்பா மொறை. ராவணன் பக்கத்திலே மண்டோதரிதான் உட்காரணும்,” என்று சமாதானப் படுத்தினார்.
ராதையை முறைத்த குப்புசாமி, “ஏ, முட்டைக் கண்ணி, நீ நாளைக்கு பால் ஊத்த வருவே இல்லை. அப்ப பார்த்துக்கறண்டி!” என்று உறுமினான். “நான் கரம் வெச்சன்னா வெச்சதுதாண்டி! எருமை! எருமை!
“சரிதான் பாத்துக்கடா!” ராதையும் அசரவில்லை.
மறுநாள் மண்டோதரி ஜனார்த்தனும் அப்புசாமியும் ஸ்கூல் மைதானத்தில் காற்றாடி விட்டுக் கொண்டிருந்தார்கள். ஹெட்மாஸ்டர் ராவ் வீட்டுக்கு குட்டிக்கண்ணு செம்பில் பால் கொண்டு வந்து கொண்டிருந்தாள், பனம்பழம் சீப்பியவாறு.
தடாலென்று எங்கிருந்தோ குப்புசாமி ஓடி வந்தான். சாராயமும் குடித்து வந்துவிட்டான் போலிருந்தது. (சின்னப் பையன் என்றாலும் தண்ணி போடுவான்).
“ஏண்டி! எருமைப்பாலு! நேத்து என்னாடி சொன்னே! கொல்லு பார்க்கலாம்னா…” என்றவாறு குட்டிக்கண்ணுவை அலேக்காகத் தூக்கிக்கொண்டு செட்டியார் தோட்டத்து வயல் வரப்பில் வேகமாக ஓடினான். குட்டிக்கண்ணு என்ன திமிறினாலும் விடுவதாக இல்லை.
அவனுக்குக் கோபம் வந்தால் நேரே செட்டியார் வீட்டு பம்பு செட்டுத் தொட்டியில் கொண்டு போய் (அகலம் 4 அடி, நீளம் 5 அடி, உயரம் 3 அடி) பசங்களைப் போட்டு விடுவான்.
“குட்டிக் கண்ணுவைக் குப்பண்ணன் தூக்கிட்டு ஓடறான், ஓடறான்!” என்று ஊரே பரபரப்பாகி குப்புசாமியைப் பிடிக்க வரப்பில் ஓடினர் சிலர்.
காற்றாடி விட்டுக் கொண்டிருந்த அப்புசாமி மண்டோதரி துணையுடன் ஒரு காரியம் பண்ணினார்.
மேலே ஏத்தியிருந்த காத்தாடியைச் சர்ரென்று உல்டா அடிக்க வைத்து குப்புசாமியை நோக்கி வேகமாக இறங்கினார்.
மாஞ்சா தடவியிருந்த கயிறு குப்புசாமியின் காலிலும் கையிலும் சுற்றிக் கொள்ள குப்புசாமி நிலை தடுமாறி குட்டிக்கண்ணுடன் வயலில் விழுந்தான்.
அதற்குள் ஜனங்கள் ஓடிப்போய் குட்டிக் கண்ணுவை விடுவித்து விட்டனர். குப்புசாமியைக் கையைக் கட்டி முன்சீப் வீட்டுக்கு இழுத்துச் சென்றனர்.
பக்கத்து ஊர் போலீஸ்காரரையே வரவழைத்துவிட்டார் முன்சீப். சின்னப் பையனாக இருக்கிறானே என்று போலீஸ்காரர் அவனை நன்றாக முட்டிக்கு முட்டி தட்டி எச்சரித்து மன்னித்து விட்டுப் போய் விட்டார்.
அப்புசாமி வாலிக்குப் பயந்து ஓடிய சுக்ரீவன் மாதிரி அத்தை வீட்டுக்கு ஓடிவிட்டார் கொஞ்ச நாள்.
அவர் பயந்து விட்டாலும், ஊர் அவரை ரொம்பவும் புகழ்ந்து கொண்டிருந்தது. “அண்ணன்காரன் வெறும் முரட்டுப்பயலே தவிர சுனாயுதமெல்லாம் (புத்திசாலித்தனம்) தம்பிக்காரனுக்குத்தான். பாரேன், இருந்த இடத்திலிருந்தே காத்தாடியை வுட்டு குப்புவைக் கீழே தள்ளி விட்டானே. இல்லாட்டி குட்டிக் கண்ணுவைத் தண்ணித் தொட்டியிலேயில்ல போட்டு மெறிச்சிருப்பான் பாவி!” என்று பேசிக் கொண்டனர்.
“ராதே! ராதே! தூக்கத்தில் அப்புசாமி உரக்கக் கூவினார். “உன்னைக் காப்பாத்திட்டேன்! உன்னைக் காப்பாத்திட்டேன்.”
சீதாப்பாட்டி திகைத்தாள். “ஒய் திஸ் மேன் ஷெளட்டிங் ராதே! ராதே! ஐ’ ம் சீதே! ஹ¥ இஸ் ராதே?”
எந்த கூட்ஸ் ரயிலோ எங்கேயோ கவிழ்ந்து விட்ட காரணத்தால் அப்புசாமியால் சொந்த ஊர் செல்ல முடியவில்லை.
“பஸ்ஸிலெல்லாம் போக ஐ வோண்ட் பர்மிட் யூ… அவ்வளவு ஸ்டிரெய்ன் உங்களுக்குத் தாங்காது. ஸம் அதர் டைம் காரிலேயே ஒரு ப்ளெஷர் ட்ரிப்பாக நீங்களும் நானுமே போகலாம்,” என்று சொல்லி வைத்தாள்.
அப்புசாமிக்குப் பலத்த ஏமாற்றம். எரிச்சலும் ஏக்கமுமாக முகத்தை முன்னாள் பிரதமர் மாதிரி வைத்துக் கொண்டிருந்தார்.
தூக்கத்தில், “ராதே! ராதே! உன்னைக் காப்பாத்திட்டேன்! காப்பாத்திட்டேன்!” என்று அடிக்கடி உளறிக் கொண்டிருந்தார்.
பாட்டியின் புருவங்கள் புலனாய்வுத் துறையினருடையது போல, மேலெழும்பின.
தூக்கத்தில் ராதே! ராதே! என்கிறார். ஏதோ ஏக்கம் பிடித்தவர் போலிருக்கிறார். ஸம்திங் ·பிஷ்ஷி…
புருஷனை அடிக்கடி கண்டித்தாலும் அவர் இன்னொரு பெண்ணின் பெயரைத் தூக்கத்தின் நடுவே உளறியதை எந்தக் கற்பரசியாலும் பொறுக்க முடியாதுதானே?
‘ஓவர் எ கப் ஆ·ப் டீ’ சீதாப்பாட்டி அவரிடம் நைச்சியமாகப் பேச்சுக் கொடுத்தாள்.
“எப்போ பிடித்து என் பெயரை மாற்றினீங்க… தினமும் தூக்கத்திலே ராதே ராதேன்னு பேத்தறீங்க… வாட் இஸ் ராங் வித் யு?” என்றாள்.
அப்புசாமி விட்ட பெருமூச்சினால் டீ கோப்பையிலிருந்து எழுந்த டீயாவி நடுங்கி ஒதுங்கியது.
“அவுட் வித் யு” என்று சீதாப்பாட்டி ஊக்கவும் அப்புசாமி கடகடவென்று வண்டி வேஷ எபிஸோடை வெலாவாரியாகச் சொல்லி முடித்தார்.
“அந்தப் பால்காரப் பொண்ணு பாவம் ராதா! அன்னிக்கி மட்டும் நான் ராதாவைக் காப்பாத்தலேன்னா செத்தே போயிருக்கும்… பாவம்… இப்போ குட்டிக்கண்ணு எங்கேயிருக்கோ…
சீதாப்பாட்டி பல்லை நறநறத்துக் கொண்டாள்.
“ஆ·ப்டர் ·பி·ப்ட்டி லாங் இயர்ஸ்! திஸ் இஸ் டூ மச்!” என்று அவளது கற்பு இலாகா துடித்தாலும் அப்புசாமிக்கு எந்தப் பிடிவாரண்ட்டும் உடனடியாக வழங்கவில்லை.
‘திஸ் ஷ¤ட் பி டெல்ட் வித் ஸம் பேஷன்ஸ்’ என்று சொல்லிக் கொண்டவள், “இப்ப உங்கள் ராதை நிச்சயம் கிழவியாயிருப்பாள். தட் மச் ஐ’ ம் ஷ்யூர்!” என்றாள்.
அப்புசாமி மெளனத்தைக் கலந்து இன்னொரு பெருமூச்சை வெளியிட்டார்.
“என்ன, ஒரேயடியாக சைலண்ட் ஆகி விட்டீர்கள்… கியரப்! கட்டாயம் நாம உங்க பிறந்த ஊருக்குப் போவோம். நீங்க உங்க பால்ய சினேகிதர்களை நல்லாப் பாத்துட்டு வரலாம். ஐ டோண்ட் ஸ்டாண்ட் பிட்வீன் யு அண்ட் யுவர் ·பிரண்ட்ஸ்!” என்றாள்.
“அந்த ராதையை நினைச்சாத்தான் தூக்கமே வரலை. சும்மா சொல்லப்படாது. ரொம்ப நல்ல பொண்ணு. ரொம்ப லட்சணம். என்கிட்டே தனி அன்பு… அதுக்குச் சளிகூடச் சிந்தி விட்டிருக்கேன். எங்க அம்மாக் கடன்காரி என்னை அதுக்காகக் கொல்லு கொல்லுன்னு கொன்னிருக்காள்! அதுதான் ஏற்கெனவே சொல்லியிருக்கேனே…”
சீதாப்பாட்டிக்கு ராத்திரி தூக்கம் வரவில்லை, த அதர்ஸைட் ஆ·ப் அப்புசாமின்னு ஒண்ணு இருக்கு போலிருக்கே…
‘சே! சே! வாட் சீதே வொர்ரியிங்? அதெல்லாம் கா·ப் லவ்… இதுக்கு இவ்வளவு ஸீரியஸ் தாட் நீ கொடுக்க வேணும்கறது இல்லே. நாட் ஈவன் டீன் ஏஜ் ·ப்ரண்ட்ஷிப்… அவரோட கிராமத்திலே எப்பவோ ஐம்பது அறுபது வருஷத்துக்கு முன் நடந்தது… அது மூக்கு ஒழுகிண்டுன்னு அவரேதான் சொல்லிட்டாரே…’
மனசை என்னதான் சமாதானப்படுத்திக் கொண்டாலும் சீதாப்பாட்டியால் தூங்க முடியவில்லை.
அவளுடைய எக்ஸ்ரேக் கண்ணுக்கு கணவரின் மனசில் ஏற்பட்ட கிரேக் – அது மெல்லிசாக மயிரிழை மாதிரி இருந்தாலும் – துல்லியமாகத் தெரிந்தது. புரண்டு படுத்தாள்… ராதை… ராதை… ராதை…
காலை ஏழு மணி இருக்கும். தடாபுடா என்று பாத்திரங்கள் படுவேகமாகச் சப்தித்தன. ஒன்பது மணிக்குத் தபால் திபால் என்று துணிமணிகள் அடியோ அடியென்று அடி வாங்கின.
பத்து மணிக்கு வீடு பூராக் கழுவுகிறேன் பேர்வழி என்று சோப்பு நீர் வெள்ளம்.
அப்புசாமி விழாத குறையாகச் சமாளித்தவர், “என்னாச்சு நம்ம வீட்டுக்கு? யாரந்தப் பெசாசுப் பொம்பிளை புதுசாக?” என்று கடுகடுத்தார். வெளியே கடுகடுத்தாலும் மனசுக்குள் ஒரு சந்தோஷம். புதுசாக வேலைக்காரி கிடைத்து விட்டாள் போலிருக்கிறது.
பத்து நாளாய் பழைய வேலைக்காரி லீவ் போட்டுவிட்டுப் போயிருந்தாள். அப்புசாமி தலையில் பல வேலைகள் சுமத்தப்பட்டன.
“புதுசா யாரோ ஒருத்தி கிடைச்சாள். ஸெகண்ட் அவென்யூவில் மிஸஸ் ராமசுந்தரம் சிபாரிசு. செய்யட்டும் டெம்ப்பரரியா… நீங்களும் மூஞ்சை முழ நீளம் தூக்கி வெச்சிக்கிறீங்களே…”
அப்புசாமி பத்திரிகையில் சில அரெஸ்ட் விவகாரங்களைச் சுவாரசியமாய் பார்த்துக்
கொண்டிருந்தார். “காலையில் உப்புமா, மத்தியானம் பருப்புடன் சோறு. மாலை ஐந்தரை மணிக்கு ராத்திரிக்கான சாப்பாடு. அத்தோட ஆட்டம் குளோஸா… ஹ¤ம்… எப்படியெல்லாம் சொகுசா இருந்தவங்க…”
சீதாப்பாட்டி வேலைக்காரியை விசாரித்துக் கொண்டிருந்ததும் அவர் காதில் விழுந்தது.
வேலைக்காரிக்குக் காது டமால் போலிருக்கிறது.
“எந்த ஊர்னு கேட்டேன்”. என்று பாட்டி நாலாம் தடவையாகக் கேட்டாள்.
“தீத்தானூர்!” ஒரு வழியாகப் பதில் வந்தது.
“தீத்தானூர்!
அப்புசாமி பேப்பரை மூடிவிட்டு விலுக்கென்று ஓணான் மாதிரி நிமிர்ந்தார்.
“பெரென்ன சொன்னே! பேரு! பேரு!பேரு என்னன்னு கேட்டேன்.” சீதாப்பாட்டி விசாரித்தவாறு இருந்தாள்.
“என் பேரன் இஸ்கூலுக்குப் போறான். என்னத்தைப் படிக்கிறான். மாடுதான் கறக்கப் போறான். அவங்க தாத்தா அப்பன் மாதிரி!”
“உன் பெயரைக் கேட்டேன்”
அப்புசாமி ஸீனுக்குள் ஆஜரானார் – புதியவளை உற்றுப் பார்த்துக்கொண்டே சங்கடப்பட்டார்.
“உன் பேரைக் கேட்கறாங்க.” என்று கத்தினார் தன் பங்குக்கு.
“குட்டிக் கண்ணு! குட்டின்னு கூப்பிடுவாங்க… கண்ணு தெரியலே தாயி… கோவிச்சுக்காதே… இது யாரு? வூட்டுக்காரரா?
“வூட்டுக்காரர்தான். ஆமாம், உன்னை குட்டிக் கண்ணுன்னு கூப்பிடறதா, குட்டின்னு
கூப்பிடறதா?” சீதாப்பாட்டி கேட்டாள்.
“வூட்டிலே போய் இன்னா பண்ணப் போறேன். சொவுரு கெடச்சா சாணி தட்டி வெப்பேன்… பொவயிலே போட்டுப்பேன். என்னவோ பஞ்சம் பொழைக்கப் பட்டணம் வந்தாச்சு. காப்பித் தண்ணி இருந்தா ரவை குடேன்!”
அப்புசாமி இடிந்து பொடிந்து நசுங்கிப் போய் விட்டார்.
அந்த வண்டி வேஷ ராதையா? தீத்தனூர், பால்காரர் பொண்ணு, குட்டிக் கண்ணுவா? வண்டி வேஷ ராதையா? அந்த குட்டிக் கண்ணுவா? கண்ணழகி காஞ்சன மாலாவா, கண் இடுங்கி… சுருங்கி…
அட தேவுடா! ஆதிசங்கரரோ யாரோ சொன்னாப்பலே… ‘அடே மனுஷா! அழகு, வாலிபம் எல்லாம் அப்படியே இருக்காதுடா…’ ன்னது சரியாப் போச்சு… அந்த குட்டிக் கண்ணுவா இது. ராவண குப்பண்ணா தூக்கிக் கொண்டு ஓடிய குட்டிக் கண்ணு ராதையா இது?
எப்படி வெள்ளை வெளுக்க கடலை மாவு பற்று போல இருப்பா. சப்போட்டா விதையாட்டம் கண்ணு எப்படிக் கருகருன்னு, காதும் காலி… தலை குளிக்காத வெள்ளைக் கரடி மாதிரி. உடம்புலே ஒன்பதாயிரம் சுருக்கம். இதும் மூஞ்சியும் பல்லும்!
‘ஐயோ… நிறமெல்லாம் கருத்து… ‘என் ராதே ராதே என்று புலம்ப வேண்டும் போலிருந்தது அவருக்கு.
“சீதே! என்றார் குரல் தழுதழுக்க, “இந்தக் கிழ ஆயா சரிப்பட்டு வராது சீதே…கெஞ்சிக் கேட்கிறேன் அனுப்பிச்சுடு.
நம்ம கழுத்தைத்தான் – முக்கியமா என் கழுத்தைத்தான் அறுக்கும். ஒரு சோப்புப் பவுடர் போடறதுக்குள் என் பிராணன் போய்விடும்.”
“உங்க இஷ்டம்,” என்றாள் சீதாப்பாட்டி. “நாளைக்கே நிறுத்திடறேன்…”
அப்புசாமி அதற்கப்புறம் தூக்கத்தில் ‘ராதே ராதே’ என்று பிதற்றவில்லை.
சீதாப்பாட்டி மேற்படி கிழவியைத் தனியாகக் கூப்பிட்டு, இருநூறு ரூபாய் கொடுத்தாள். “நான் சொல்லித் தந்த மாதிரியே ரொம்ப நல்லாப் பேசினீங்க ஆயா!” என்று கூறி வழி அனுப்பி வைத்தாள்.
“ஒரு கணவரை இளக்காரம் செய்யலாம், அதிகாரம் செய்யலாம். ஸ்நப் செய்யலாம். ஹாரஸ் பண்ணலாம், நேகிங் ஒய்·பாக இருக்கலாம். ஆனால் வேறொரு தூசி கூட அவர் மனசில் புகுவதை கற்புள்ள பெண்ணால் டாலரேட் பண்ண முடியாது. ஏன்னா, ஷி லவ்ஸ் ஷிம் ஸோ மச்!’ என்று சீதாப்பாட்டி தனக்குள் சிரித்தபடி சொல்லிக் கொண்டாள்

         அப்புசாமிக்கு அபூர்வமாகத்தான் டெலிபோன் கால் வரும் அந்த அபூர்வத்தையும் சீதாப்பாட்டி அவரிடம் சொல்ல மறந்து விடுவாள்.இரண்டு நாள் கழித்துச் சாவகாசமாக, ‘உங்களை யாரோ டெலிபோனிலே டே பி·போர் யெஸ்டர் டே கூப்பிட்டாங்க. சொல்ல மறந்து விட்டேன்,’ என்று மேட்டர் ஆ·ப் ·பேக்டாகச் சொல்வாள்.அந்த அறிவிப்பில் ஒரு ‘ஸாரி’ யோ, மிடியோ, மினியோ எதுவும் இருக்காது. மனைவியின் அராஜக, அலட்சிய, அகங்கார, அக்கிரம, அநியாய, அழிச்சாட்டிய மனப்போக்கு அவருக்குப் பழகி விட்டது.அன்றைய தினம் அப்புசாமி செய்த அதிருஷ்டத்தாலோ, சீதாப்பாட்டியின் என்ஸைமில் இரக்க உணர்வு தூக்கலாக இருந்ததாலோ அல்லது டெலிபோனுக்கு இரண்டங்குல தூரத்திலே நின்றுகொண்டு பாட்டியின் புக் ஷெல்·பை அவர் சிரத்தையாகத் துடைத்துக் கொண்டிருந்ததாலோ சட்டென்று பாட்டி, “இட்ஸ் ·பர் யூ” என்று அவர் கையில் கொடுத்து விட்டாள்.அப்புசாமி, “எனக்காக, எனக்காக?” என்று கேட்டு உறுதி செய்து கொண்டு, “ஹலாவ்! யார் பேசறது?” என்று கத்தினார்.

 

       “ஒரு ஹலோ சொல்ல இத்தனை மீட்டரா வாயைத் திறப்பது?” என்று கண்டனம் தெரிவித்தபடிசீதாப்பாட்டி போய் விட்டாள்.“யார் பேசறது?” என்றார் அப்புசாமி. மறுமுனையிலிருந்த பேர்வழி க்விஸ் பிரியர் போலும்.“குரலு தெரியலையா?” என்றார்.“ஹி ஹி! அது மாதிரி போனெல்லாம் இன்னும் இங்கே வரலியே?” என்றார் அப்புசாமி.“டேய் அப்பு!” என்றது மறுமுனை. “நீ அதே மாதிரி இடக்காத்தாண்டா இன்னும் இருக்கே! படவா! கண்டுபிடிச்சிட்டியாடா? ஏண்டா, கல்யாணமெல்லாம் ஆயிட்டுதா?”“கருமாந்தரம் ஆகிற வயசு வந்துட்டுது. இப்போ கேட்கிறியே, ஆமாம் யாரு நீ? கண்டுபிடிக்க முடியலையே…” என்றார் அப்புசாமி.“நான்தான் மண்டோதரி பேசறேண்டா.. மண்டோதரி!”அப்புசாமிக்கு எந்த மெமரி ப்ளஸ்ஸோ மெமரி மைனஸோ சாப்பிடாமலேயே கடகடவென்று பூர்வ ஜென்ம ஞாபகம் வந்துவிட்டது. உடம்பு சிலிர்த்தது.“மண்டோதரியா! டேய்! டேய்! நிஜமாகவா! பாவி! பாவி! மண்டோதரியாடா” கூவினார். பிடித்த காட்ச்சை மீண்டும் தூக்கிப் போட்டு கிரிக்கெட்காரர் பிடிப்பது போல டெலிபோனைத் தூக்கிப் போட்டுப் பிடித்தார்.“மண்டோதரியேதாண்டா!”“ஏண்டா, நீ இன்னும் உசிரோடுதான் இருக்கியாடா… ஐம்பது வருஷம் கழிச்சுப் பேசறே… நீதான் பேசறியா? உன் ஆவியாடா… டேய் மண்டோதரி! எனக்கு அழுகையாக வருதுடா!”“எனக்குகூடத்தாண்டா…” மறுமுனையிலிருந்த மண்டோதரியின் குரல் தழுதழுத்தது… “டேய் அப்பு…அப்பு…”அப்புசாமி கண்ணையும், மூக்கையும், தொண்டையையும் துடைத்துக் கொண்டு “எங்கேருந்துடா பேசறே” என்றார்.“நம்ம ஊருலேருந்துதாண்டா.

 

        நம்ம ஊருக்கு போன் கீனெல்லாம் வந்துட்டுதுடா. வெங்கடாசலம் தேங்கா மண்டியிலிருந்து பேசறேன். அங்கேதான் நான் கணக்குப்பிள்ளை. நம்ம ஊரிலே இந்தப் பொங்கலுக்கு ஒரு விழா ஏற்பாடு பண்ணியிருக்கம்டா… லச்சுமிதேவி எலிமெண்ட்டரி ஸ்கூலிலே நாமல்லாம் அஞ்சாம் கிளாஸ் படிச்சமில்லே…? அத்துனி பேரும் இப்போ திக்காலிக்கொருத்தராக இருக்காங்க இல்லே… அந்த குரூப்புலே உசிரோடிருக்கிற எல்லாரும் இந்தப் பொங்கலுக்கு ஒண்ணா நம்ம ஊரிலே கூடறோம். ஐம்பது வருஷம் கழிச்சுக் கூடறோம்டா… நீ அவசியம் வந்துரு… வெங்கடாசலம் தேங்கா மண்டியிலேதான் தங்கறோம். அரமணை மாதிரி கட்டிப் போட்டிருக்கான்.பொங்கலு, பொலிக்காளையாட்டம், வண்டி வேசம் எல்லாம் பார்த்துகிட்டு அவுங்கவுங்க புறப்பட்டுக்கலாம்… கட்டாயமா வரணும்டா… கம்முனு இருந்துடாதே… வண்டி வேசம் ஞாபகம் இருக்குதாடா… வெச்சுடறேன்… ஏதோ தேங்கா லயன் வருது…”“மண்டோதரி! மண்டோதரி! டேய்! வச்சுடாதே…” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே லயன் ‘கட்’ டாகி விட்டது.

 

      தனியார் வீட்டைத் தடாலென்று தாக்கும் முக மூடிக் கொள்ளைக்காரர்கள்போல் அப்புசாமியை இளம் பருவ உணர்ச்சிகள் கும்பலாக கதவை உடைத்துக் கொண்டு வந்து தாக்கியதால் முன் ஜாமீன் வாங்குவதற்குள் கைதான பிரமுகர்போல அவர் திணறிச் சகல புலன்களும் ‘ட்ரிப்’ ஆகி ஸ்லோ மோஷனில் சரிந்து விட்டார்.ஐந்து நிமிஷம் கழித்தே அவருக்குப் பிரக்ஞை வந்தது.ஐம்பது வருஷம் கழித்து மண்டோதரி!அவரது ஐந்தாவது வகுப்புத் தோழன்! வேக வைத்த மொச்சைக் கொட்டையை கால் சட்டை டிராயரில் திணித்துக் கொண்டு வந்து துளியூண்டு துளியூண்டு கிள்ளித் தருவான். பிரியம் முக்கால் மொச்சைக் கொட்டை கால் என்ற விகிதத்தில் கிடைத்தாலும். அப்புசாமிக்கு அவன்தான் ரொம்ப தோஸ்த்! சிலநாள் பனியன் பாக்கெட்டுக்குள் தோசையை விண்டு விண்டு போட்டுக் கொண்டு வருவான். கொஞ்சம் தருவதும் உண்டு.அப்புசாமிக்கும் தன் வீட்டிலிருந்து தீனியை அப்படியெல்லாம் கடத்திக் கொண்டு வரவேண்டும் என்று ஆ¨சையாக இருக்கும். ஆனால் அவரது அம்மா ரொம்ப ஆசாரம். “மொட்டக் கடன்காரா! ஒரு பத்து இல்லே, எச்சலில்லே, சுண்டலையா ஜேபியில் போட்டுக்கறே!” என்று நறுக்கென்று தலையில் ஒருநாள் ஒரு பெருங்குட்டாகக் குட்டி அவரது முயற்சியை முறியடித்து விட்டாள்.மூக்கை உறிஞ்சிக்கொண்டே அப்புசாமி, “ஜனார்த்தன் வீட்லேருந்து மட்டும் கொண்டு வரானே?”“அந்த ஜனார்த்தன் கூடச் சேரு படவா… காலிலே சூடு இழுக்கிறேன்!” என்று அம்மா மிரட்டியும் அப்புசாமியால் அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ளாமலே போய் விட்டது.

 

        “ஹலோ! உங்களைத்தானே? இன்னுமா போன் பேசியாகிறது… போனை வையுங்க. நான் உள்ளே பேசணும்!” என்று சீதாப்பாட்டியின் அதட்டல் குரல் அவரை இந்த உலகத்துக்கு அழைத்து வந்தது.“சீதே! சீதே!” என்று அப்புசாமி புத்துணர்ச்சி பெற்று எழுந்தார். டெலிபோனைச் சரியாக வைத்து விட்டு மனைவியிடம் உற்சாகமே உருவாக விரைந்தார்.“சீதே! சீதே! யார் பேசினது தெரியுமா? மண்டோதரி! மண்டோதரி சீதே! நான்கூடச் சொல்லியிருக்கேனே… வண்டி வேஷம்! அண்ணா குப்புசாமி! மண்டோதரி!”சீதாப்பாட்டி அரை வினாடிகூட அவருக்காக மூளையைக் கசக்கிக் கொள்ள விரும்பவில்லை. “ஸோ, வாட்?” என்றாள் கடுப்பாக.“மண்டோதரி பேசினான் சீதே! மண்டோதரி… வண்டி வேஷம் மண்டோதரி!… ஐயோ! ஐயோ! ஆஹ்… ஆஹ்! ஆஹ்!” விளம்பரப் படங்கள் குறுக்கிடாத சினிமா மாதிரி தொடர்ச்சியாகப் பால்ய நினைவுகளும், பள்ளிப் பருவமும், ஊரில் நடந்த வண்டி வேஷமும் அப்புசாமியின் நினைவுக்கு வந்தன. சிரிப்பு தாங்கவில்லை.“ஆஹ்! ஆஹ்! ஆஹ்! சீதே! சீதே! தமாஷ்னா தமாஷ்! படு தமாஷ்! ஐயோ கடவுளே! பஹ் பஹ் பஹ்!” அப்புசாமி பயங்கரமாக வயிறைப் பிடித்துக் கொண்டு சிரித்தார்.

 

       “ஐயோ ஐயோ! தாங்க முடியலை என்னால்… அண்ணா குப்புசாமி… அம்மாடி… அம் மாடி… வயல் வரப்பிலே ஓட…ஊரெல்லாம் துரத்திக் கொண்டு பின்னால் ஓட… ஐயோ! அம்மா! சிரிச்சு கண்ணு மூக்கை எல்லாம் பாரு தண்ணி! தண்ணி!உனக்கு ஞாபகம் வரலையா. சொல்லியிருக்கேனே…” மூக்கிலே ஊறி வழிந்தது ஆனந்தக் கண்ணீரா, ஆனந்த மூக்கு நீரா என்று அவர் சோதித்தது சீதாப்பாட்டிக்கு மகா அருவருப்பைத் தந்தது. கடும் கோபமாக “யூ நாஸ்ட்டி! எதுக்கு இப்படி அசிங்கமாச் சிரிக்கிறீங்க?” என்று அதட்டிவிட்டுக் குளிக்கப் போய் விட்டாள்.அப்புசாமிக்குச் சிரிப்பு சிரிப்பாய் வந்தது. பொங்கல்! வண்டி வேஷம்! அண்ணா குப்புசாமி! மண்டோதரி! குட்டிக்கண்ணு ராதை! கிருஷ்ணன்!பொங்கலானதும் ஊரிலே வண்டி வேஷம் என்று ஒரு விசேஷ அயிட்டம், தீத்தனூரிலே நடப்பது வழக்கம்.கொஞ்சம் அழகும் துடிப்புமான சிறுவர், சிறுமியர்களுக்குப் பெற்றோர் தங்களுக்குத் தோன்றிய மாதிரி வேஷம் போட்டு அலங்கரிப்பார்கள். பட்டணத்தில் ·பேன்ஸி டிரெஸ் காம்பெடிஷன் மாதிரி அப்புசாமியின் கிராமத்துக்கு அந்த அயிட்டம்.அரை டஜன் முருகன், கால் டஜன் கிருஷ்ணன், நாலைந்து ராதை, ஏழெட்டு ராமர், சில பெயர் தெரியாத ராட்சஸர்கள், மீனவர்கள், அய்யர்கள், அம்மாமிகள், தபால்காரர்கள் என்று ஏகப்பட்ட வேஷங்கள் தயாராகி விடும்.சிறுவர்களையும், சிறுமிகளையும் ஒரு பெரிய இரட்டை மாட்டு வண்டியில் மேடை எழுப்பி, நாற்காலிகள் போட்டு அமர வைப்பா¡கள்.

 

          ஊர் பூராவும் அந்த வேஷ வண்டி மெதுவாகச் சுற்றிக்கொண்டு வரும்.கடைசியில் எல்லாச் சிறுவர்களையும் வேஷத்துடன் நிற்க வைத்து ஒரு பூசணிக்காயைச் சுற்றி உடைப்பதுடன் மேற்படி வண்டி வேஷம் முடியும்.அப்புசாமிக்கு அந்த வருஷம் அபூர்வமாகக் கிருஷ்ணன் வேஷம் கிடைத்தது. உடம்பெல்லாம் நீல அரிதாரத்தை இசு பிசுக்கென்று பூசிக்கொண்டு உதட்டுக்கு ஒரு சிவப்பைத் தடவி, தலையில் ஒரு ஜிகினா அட்டைடிக் கிரீடமும், மயிலிறகும் வைத்து, கையில் ஒரு புல்லாங்குழலையும் (போன்ற ஒரு பளபள குச்சியையும்) தந்திருந்தார்கள்.அப்புசாமிக்கு ஒரு முரட்டு அண்ணன் இருந்தான். குப்புசாமி என்று பெயர். அவனைக் கண்டால் அப்புசாமிக்கு எப்போதுமே பயம். அண்ணன் குப்புசாமிக்கு யாரிடமும் பயம் என்பதே கிடையாது. முன்சீப் மேலேயே மறைந்திருந்து கல்லை வீசுவான். மாரியம்மன் கோவில் முன்னே ‘மாப்பிள்ளைக் கல்’ என்று ஒரு ‘உருண்டையான பெரிய கல் இருக்கும்.ஊரில் நடக்கும் கல்யாணங்களின்போது, மாப்பிள்ளை உண்மையில் பலசாலியா என்பதைச் சோதிக்கப் பழைய காலத்தில் அது உபயோகப்பட்டு வந்ததாம்.மாப்பிள்ளைப் பையன் அந்தக் குறிப்பிட்ட கல்லை அலேக்காகத் தூக்கிக் காட்ட வேண்டும். அப்போதுதான் பெண் கொடுப்பார்களாம்.அதெல்லாம் ஒரு காலம். அப்புறம் அந்த வழக்கம் நின்று போய்விட்டது. ஆனாலும் மாரியம்மன் கோவில் வாசலில் போவோர் வருவோரை இடறச் செய்து கொண்டு அந்தக் கல் இருந்து வந்தது. டிராபிக் கான்ஸ்டபிளைச் சுற்றிக்கொண்டு போவதுபோல அந்தக் கல்லைச் சுற்றிக்கொண்டு போவார்கள்.

 

        ஒரு தரம் அந்தக் கல் குப்புசாமியை இடித்து விட்டது.கோபம் கொண்ட குப்புசாமி அதை ஒரே தம்மில் தூக்கி ஓரமாகப் போட்டு விட்டான். அவன் சின்னப் பையனாக இருந்தாலும் பெரிய பலசாலி என்று ஊருக்கு நிரூபணமாகி விட்டது.ஐந்து வகுப்பு படிக்கிறதுக்குள் ஊரில் பெரிய ரெளடி என்று பெயர் வாங்கி விட்டான். எப்படியாவது அவனைப் பள்ளிக்கூடத்திலிருந்து அனுப்பினால் போதும் என்று அவனுக்கு மார்க் அள்ளி அள்ளிப் போட்டாலும் அவன் பாஸாக முடியாது என்று பிடிவாதமாக ஐந்தாவது வகுப்பிலேயே மூணு நாலு வருஷம் படித்து (?) வந்தான். தலைமுறை தலை முறையாக அவன்தான் மானிட்டர். எல்லா கிளாஸ¤க்குமே அவன்தான் மானிட்டர். அவனை ‘பெரிய மானிட்டர்’ என்றுதான் வாத்தியார்கள் உட்படக் கூப்பிடுவார்கள்.வண்டி வேஷத்தில் குப்புசாமியும் வேஷம் போடுவான். இரணியன், கம்ஸன் இந்த மாதிரி ராட்சஸ வேஷம்தான் வழக்கமாகப் போட்டுக் கொள்வான்.அந்த வருஷம் பத்துத் தலை ராவணன் வேஷம் போட்டான். தகரத்தில் நீளமாகப் பத்துத்தலை கத்திரித்து தலையில் கட்டிக் கொண்டான்.

 

        வண்டியில் அலங்கரிக்கப்பட்டிருந்த மேடையில் நடுநாயகமாக உட்கார்ந்து கொண்டான். மண்டோதரியாக பக்கத்தில் அப்புசாமியின் தோஸ்த் ஜனார்த்தனன் வேஷம் கட்டிக் கொண்டு அவனருகில் உட்கார்ந்தான்.அப்புறம் ஒரு ஆஞ்சனேயர். ஒரு தபால்காரர், ஒரு சாமியார், குடுகுடுப்பைக்காரன், அதற்கப்புறம் அப்புசாமி கிருஷ்ண வேஷம் போட்டுக்கொண்டு தலையில் மயிலிறகும் கையில் புல்லாங்குழலுடனும் உட்கார்ந்திருந்தார். அதற்கப்புறம் பெஞ்ச் ஓரமாக அவரை ஒட்டி குட்டிக் கண்ணு ராதை.அப்புசாமியின் வீட்டுக்குப் பால் ஊற்றிக் கொண்டிருந்தவர்களின் கடைசிக் குட்டிதான் அந்தக் குட்டிக் கண்ணு. பெயருக்கு ஏற்றாற்போல குட்டியாக இல்லாமல் பெரிசாக அகலமாக இருக்கும். நிறமும் நல்ல செவத்த குட்டி. அப்புசாமி அந்தக் குட்டிக்குக் ‘காக்காக் கடி’ முறையில் ‘பர்ப்பி’ கொடுத்திருக்கிறார் மூக்கு கொஞ்சம் அதிகமாக ஒழுகும் என்பதைத் தவிர குழந்தையிடம் குறை சொல்ல முடியாது.அப்புசாமி ஒரு நாள் அத்துமீறி ஒரு காரியம் செய்து விட்டார். அவளது மூக்கை அம்மாவின் மடித் துணியால் துடைத்து விட்டுவிட்டார். அம்மா அன்றைக்கு அவருக்குச் சாத்தின சாத்தல் முதுகிலிருந்து மறைய முழுசாக இரண்டு நாளாச்சு.“சிந்தி விட்டது தப்பில்லே மாமி… குழந்தைகளுக்கு மூக்கு வழியறதுதான்.

 

        பெரிசு சின்னதுக்கு சிந்தி விடறதுதான். ஆனால் மொட்டைக் கடன்காரன் என் மடித் துணியை எடுத்துச் சிந்திவிடணுமா?” என்று அடியை விலக்க வந்தவர்களுக்கு அம்மாக்காரி பதில் சொன்னாள்.கன்னத்தில் வைத்த திருஷ்டிப் பொட்டும் அதுவுமாக அந்தக் குட்டிக் கண்ணு, ராதை வேஷத்தில் ஷோக்காக இருந்தாள். அப்புசாமிக்கு மகாப் பெருமையாக இருந்தது – அவளைத் தன் பக்கத்தில் உட்கார வைத்துக் கொள்ள.வேஷ வண்டி கடைத் தெருவுக்காகத் திரும்பி சுருட்டு சுப்பராயன் கடைகிட்டே வந்திருக்கும். ராவணனுடைய தகரத் தலைகளில் பத்தாம் நம்பர் வந்து அப்புசாமியின் முதுகைக் குத்தியது.“குப்பண்ணா, தலை குத்துது! கொஞ்சம் அந்தப் பக்கம் சாய்ஞ்சுக்கோ,” என்றார் அப்புசாமி.“மொதல்லே உன் கையிலேயிருக்கிற புல்லாங்குழலை என்கிட்டே குடுத்துட்டுப் பேசு,” என்றான் ராவண குப்புசாமி.“கிருஷ்ணன்தான் புல்லாங்குழல் வாசிப்பார். இது கூடத் தெரியலையே உனக்கு.” என்றார் அப்புசாமி – கிருஷ்ண வேஷம் கொடுத்த தெம்பில்.“அதுதானே! ராவணனுக்கு ஒண்ணியும் தெரியலே,” என்று ராதையும் வழி மொழிந்தாள். அதுதான் பெருத்த ரகளையாகி விட்டது.அதற்கப்புறம் ராவணனின் பத்தாவது தலை அவரை அடிக்கடி குத்தியது. ராவணனுக்கு ஒன்பது தலை இருந்திருக்கக்கூடாதா என்றுகூட அப்புசாமி எண்ணிக் கொண்டார்.“டேய்!” என்றான் ராவணன். குடுடா புல்லாங்குழலை”மண்டோதரி ஜனார்த்தன் சமாதானம் செய்ய முயன்றான்.“குப்பு! அவன் வெச்சிகிட்டுத் தொலையறான். உனக்கெதுக்கு புல்லாங்குழல்?”“அவனுக்கு அதை வெச்சுகிட்டு இருக்கறதாலேதான் கருவம். அதையும், அந்த மயிலிறகையும் இப்ப தர்ரானாமா இல்லையா, கேளு! அவனைக் கொன்னுப் புடுவேன் கொன்னு!” எச்சரித்தான் குப்புசாமி கடுங்கோபமாக.

 

        “நீ தராதே!” என்று ரகசியமாக ராதை அப்புசாமிக்கு ‘அட்வைஸ்’ செய்தாள். ஆனால் அது ராவண குப்புசாமியின் இருபது காதுகளிலும் விழுந்து விட்டது’.“என்னடி சொன்னே எருமைப்பாலு! குடுக்காதேன்னா சொன்னே? கொன்னு புடுவேன் கொன்னு!”ராதைக்கு எருமைப்பாலுன்னு அவன் தன்னை சொன்னது ரோஷமாகி விட்டது.“செரிதான் போடா லவுட்டி (ரவுடி) பையா! எங்கே கொல்லு பாக்கலாம்,” என்றாள்.“ஏய்! எங்கே என்னடி முணுமுணுக்கிறே? இங்கே வந்து என் பக்கத்திலே உட்காருடி!” என்றான் குப்புசாமி முரட்டுத்தனமாக.வண்டி வேஷப் பொறுப்பாளர் சிக்கணன்தான் மாடுகளை ஓட்டிக் கொண்டிருந்தார். “குப்புத் தம்பி, கிருஷ்ணன் பக்கத்துலேதான் ‘ராதை உட்காரணும்… அதுதாம்பா மொறை. ராவணன் பக்கத்திலே மண்டோதரிதான் உட்காரணும்,” என்று சமாதானப் படுத்தினார்.ராதையை முறைத்த குப்புசாமி, “ஏ, முட்டைக் கண்ணி, நீ நாளைக்கு பால் ஊத்த வருவே இல்லை. அப்ப பார்த்துக்கறண்டி!” என்று உறுமினான். “நான் கரம் வெச்சன்னா வெச்சதுதாண்டி! எருமை! எருமை!“சரிதான் பாத்துக்கடா!” ராதையும் அசரவில்லை.மறுநாள் மண்டோதரி ஜனார்த்தனும் அப்புசாமியும் ஸ்கூல் மைதானத்தில் காற்றாடி விட்டுக் கொண்டிருந்தார்கள். ஹெட்மாஸ்டர் ராவ் வீட்டுக்கு குட்டிக்கண்ணு செம்பில் பால் கொண்டு வந்து கொண்டிருந்தாள், பனம்பழம் சீப்பியவாறு.

 

        தடாலென்று எங்கிருந்தோ குப்புசாமி ஓடி வந்தான். சாராயமும் குடித்து வந்துவிட்டான் போலிருந்தது. (சின்னப் பையன் என்றாலும் தண்ணி போடுவான்).“ஏண்டி! எருமைப்பாலு! நேத்து என்னாடி சொன்னே! கொல்லு பார்க்கலாம்னா…” என்றவாறு குட்டிக்கண்ணுவை அலேக்காகத் தூக்கிக்கொண்டு செட்டியார் தோட்டத்து வயல் வரப்பில் வேகமாக ஓடினான். குட்டிக்கண்ணு என்ன திமிறினாலும் விடுவதாக இல்லை.அவனுக்குக் கோபம் வந்தால் நேரே செட்டியார் வீட்டு பம்பு செட்டுத் தொட்டியில் கொண்டு போய் (அகலம் 4 அடி, நீளம் 5 அடி, உயரம் 3 அடி) பசங்களைப் போட்டு விடுவான்.“குட்டிக் கண்ணுவைக் குப்பண்ணன் தூக்கிட்டு ஓடறான், ஓடறான்!” என்று ஊரே பரபரப்பாகி குப்புசாமியைப் பிடிக்க வரப்பில் ஓடினர் சிலர்.காற்றாடி விட்டுக் கொண்டிருந்த அப்புசாமி மண்டோதரி துணையுடன் ஒரு காரியம் பண்ணினார்.மேலே ஏத்தியிருந்த காத்தாடியைச் சர்ரென்று உல்டா அடிக்க வைத்து குப்புசாமியை நோக்கி வேகமாக இறங்கினார்.மாஞ்சா தடவியிருந்த கயிறு குப்புசாமியின் காலிலும் கையிலும் சுற்றிக் கொள்ள குப்புசாமி நிலை தடுமாறி குட்டிக்கண்ணுடன் வயலில் விழுந்தான்.அதற்குள் ஜனங்கள் ஓடிப்போய் குட்டிக் கண்ணுவை விடுவித்து விட்டனர். குப்புசாமியைக் கையைக் கட்டி முன்சீப் வீட்டுக்கு இழுத்துச் சென்றனர்.

 

        பக்கத்து ஊர் போலீஸ்காரரையே வரவழைத்துவிட்டார் முன்சீப். சின்னப் பையனாக இருக்கிறானே என்று போலீஸ்காரர் அவனை நன்றாக முட்டிக்கு முட்டி தட்டி எச்சரித்து மன்னித்து விட்டுப் போய் விட்டார்.அப்புசாமி வாலிக்குப் பயந்து ஓடிய சுக்ரீவன் மாதிரி அத்தை வீட்டுக்கு ஓடிவிட்டார் கொஞ்ச நாள்.அவர் பயந்து விட்டாலும், ஊர் அவரை ரொம்பவும் புகழ்ந்து கொண்டிருந்தது. “அண்ணன்காரன் வெறும் முரட்டுப்பயலே தவிர சுனாயுதமெல்லாம் (புத்திசாலித்தனம்) தம்பிக்காரனுக்குத்தான். பாரேன், இருந்த இடத்திலிருந்தே காத்தாடியை வுட்டு குப்புவைக் கீழே தள்ளி விட்டானே. இல்லாட்டி குட்டிக் கண்ணுவைத் தண்ணித் தொட்டியிலேயில்ல போட்டு மெறிச்சிருப்பான் பாவி!” என்று பேசிக் கொண்டனர்.“ராதே! ராதே! தூக்கத்தில் அப்புசாமி உரக்கக் கூவினார். “உன்னைக் காப்பாத்திட்டேன்! உன்னைக் காப்பாத்திட்டேன்.”சீதாப்பாட்டி திகைத்தாள். “ஒய் திஸ் மேன் ஷெளட்டிங் ராதே! ராதே! ஐ’ ம் சீதே! ஹ¥ இஸ் ராதே?”எந்த கூட்ஸ் ரயிலோ எங்கேயோ கவிழ்ந்து விட்ட காரணத்தால் அப்புசாமியால் சொந்த ஊர் செல்ல முடியவில்லை.“பஸ்ஸிலெல்லாம் போக ஐ வோண்ட் பர்மிட் யூ… அவ்வளவு ஸ்டிரெய்ன் உங்களுக்குத் தாங்காது. ஸம் அதர் டைம் காரிலேயே ஒரு ப்ளெஷர் ட்ரிப்பாக நீங்களும் நானுமே போகலாம்,” என்று சொல்லி வைத்தாள்.அப்புசாமிக்குப் பலத்த ஏமாற்றம். எரிச்சலும் ஏக்கமுமாக முகத்தை முன்னாள் பிரதமர் மாதிரி வைத்துக் கொண்டிருந்தார்.தூக்கத்தில், “ராதே! ராதே! உன்னைக் காப்பாத்திட்டேன்! காப்பாத்திட்டேன்!” என்று அடிக்கடி உளறிக் கொண்டிருந்தார்.பாட்டியின் புருவங்கள் புலனாய்வுத் துறையினருடையது போல, மேலெழும்பின.தூக்கத்தில் ராதே! ராதே! என்கிறார். ஏதோ ஏக்கம் பிடித்தவர் போலிருக்கிறார்.

 

       ஸம்திங் ·பிஷ்ஷி…புருஷனை அடிக்கடி கண்டித்தாலும் அவர் இன்னொரு பெண்ணின் பெயரைத் தூக்கத்தின் நடுவே உளறியதை எந்தக் கற்பரசியாலும் பொறுக்க முடியாதுதானே?‘ஓவர் எ கப் ஆ·ப் டீ’ சீதாப்பாட்டி அவரிடம் நைச்சியமாகப் பேச்சுக் கொடுத்தாள்.“எப்போ பிடித்து என் பெயரை மாற்றினீங்க… தினமும் தூக்கத்திலே ராதே ராதேன்னு பேத்தறீங்க… வாட் இஸ் ராங் வித் யு?” என்றாள்.அப்புசாமி விட்ட பெருமூச்சினால் டீ கோப்பையிலிருந்து எழுந்த டீயாவி நடுங்கி ஒதுங்கியது.“அவுட் வித் யு” என்று சீதாப்பாட்டி ஊக்கவும் அப்புசாமி கடகடவென்று வண்டி வேஷ எபிஸோடை வெலாவாரியாகச் சொல்லி முடித்தார்.“அந்தப் பால்காரப் பொண்ணு பாவம் ராதா! அன்னிக்கி மட்டும் நான் ராதாவைக் காப்பாத்தலேன்னா செத்தே போயிருக்கும்… பாவம்… இப்போ குட்டிக்கண்ணு எங்கேயிருக்கோ…சீதாப்பாட்டி பல்லை நறநறத்துக் கொண்டாள்.“ஆ·ப்டர் ·பி·ப்ட்டி லாங் இயர்ஸ்! திஸ் இஸ் டூ மச்!” என்று அவளது கற்பு இலாகா துடித்தாலும் அப்புசாமிக்கு எந்தப் பிடிவாரண்ட்டும் உடனடியாக வழங்கவில்லை.‘திஸ் ஷ¤ட் பி டெல்ட் வித் ஸம் பேஷன்ஸ்’ என்று சொல்லிக் கொண்டவள், “இப்ப உங்கள் ராதை நிச்சயம் கிழவியாயிருப்பாள். தட் மச் ஐ’ ம் ஷ்யூர்!” என்றாள்.அப்புசாமி மெளனத்தைக் கலந்து இன்னொரு பெருமூச்சை வெளியிட்டார்.“என்ன, ஒரேயடியாக சைலண்ட் ஆகி விட்டீர்கள்… கியரப்! கட்டாயம் நாம உங்க பிறந்த ஊருக்குப் போவோம்.

 

        நீங்க உங்க பால்ய சினேகிதர்களை நல்லாப் பாத்துட்டு வரலாம். ஐ டோண்ட் ஸ்டாண்ட் பிட்வீன் யு அண்ட் யுவர் ·பிரண்ட்ஸ்!” என்றாள்.“அந்த ராதையை நினைச்சாத்தான் தூக்கமே வரலை. சும்மா சொல்லப்படாது. ரொம்ப நல்ல பொண்ணு. ரொம்ப லட்சணம். என்கிட்டே தனி அன்பு… அதுக்குச் சளிகூடச் சிந்தி விட்டிருக்கேன். எங்க அம்மாக் கடன்காரி என்னை அதுக்காகக் கொல்லு கொல்லுன்னு கொன்னிருக்காள்! அதுதான் ஏற்கெனவே சொல்லியிருக்கேனே…”சீதாப்பாட்டிக்கு ராத்திரி தூக்கம் வரவில்லை, த அதர்ஸைட் ஆ·ப் அப்புசாமின்னு ஒண்ணு இருக்கு போலிருக்கே…‘சே! சே! வாட் சீதே வொர்ரியிங்? அதெல்லாம் கா·ப் லவ்… இதுக்கு இவ்வளவு ஸீரியஸ் தாட் நீ கொடுக்க வேணும்கறது இல்லே. நாட் ஈவன் டீன் ஏஜ் ·ப்ரண்ட்ஷிப்… அவரோட கிராமத்திலே எப்பவோ ஐம்பது அறுபது வருஷத்துக்கு முன் நடந்தது… அது மூக்கு ஒழுகிண்டுன்னு அவரேதான் சொல்லிட்டாரே…’மனசை என்னதான் சமாதானப்படுத்திக் கொண்டாலும் சீதாப்பாட்டியால் தூங்க முடியவில்லை.அவளுடைய எக்ஸ்ரேக் கண்ணுக்கு கணவரின் மனசில் ஏற்பட்ட கிரேக் – அது மெல்லிசாக மயிரிழை மாதிரி இருந்தாலும் – துல்லியமாகத் தெரிந்தது. புரண்டு படுத்தாள்… ராதை… ராதை… ராதை…காலை ஏழு மணி இருக்கும்.

 

         தடாபுடா என்று பாத்திரங்கள் படுவேகமாகச் சப்தித்தன. ஒன்பது மணிக்குத் தபால் திபால் என்று துணிமணிகள் அடியோ அடியென்று அடி வாங்கின.பத்து மணிக்கு வீடு பூராக் கழுவுகிறேன் பேர்வழி என்று சோப்பு நீர் வெள்ளம்.அப்புசாமி விழாத குறையாகச் சமாளித்தவர், “என்னாச்சு நம்ம வீட்டுக்கு? யாரந்தப் பெசாசுப் பொம்பிளை புதுசாக?” என்று கடுகடுத்தார். வெளியே கடுகடுத்தாலும் மனசுக்குள் ஒரு சந்தோஷம். புதுசாக வேலைக்காரி கிடைத்து விட்டாள் போலிருக்கிறது.பத்து நாளாய் பழைய வேலைக்காரி லீவ் போட்டுவிட்டுப் போயிருந்தாள். அப்புசாமி தலையில் பல வேலைகள் சுமத்தப்பட்டன.“புதுசா யாரோ ஒருத்தி கிடைச்சாள். ஸெகண்ட் அவென்யூவில் மிஸஸ் ராமசுந்தரம் சிபாரிசு. செய்யட்டும் டெம்ப்பரரியா… நீங்களும் மூஞ்சை முழ நீளம் தூக்கி வெச்சிக்கிறீங்களே…”அப்புசாமி பத்திரிகையில் சில அரெஸ்ட் விவகாரங்களைச் சுவாரசியமாய் பார்த்துக்கொண்டிருந்தார். “காலையில் உப்புமா, மத்தியானம் பருப்புடன் சோறு. மாலை ஐந்தரை மணிக்கு ராத்திரிக்கான சாப்பாடு. அத்தோட ஆட்டம் குளோஸா… ஹ¤ம்… எப்படியெல்லாம் சொகுசா இருந்தவங்க…”சீதாப்பாட்டி வேலைக்காரியை விசாரித்துக் கொண்டிருந்ததும் அவர் காதில் விழுந்தது.வேலைக்காரிக்குக் காது டமால் போலிருக்கிறது.“எந்த ஊர்னு கேட்டேன்”. என்று பாட்டி நாலாம் தடவையாகக் கேட்டாள்.“தீத்தானூர்!” ஒரு வழியாகப் பதில் வந்தது.

 

        “தீத்தானூர்!அப்புசாமி பேப்பரை மூடிவிட்டு விலுக்கென்று ஓணான் மாதிரி நிமிர்ந்தார்.“பெரென்ன சொன்னே! பேரு! பேரு!பேரு என்னன்னு கேட்டேன்.” சீதாப்பாட்டி விசாரித்தவாறு இருந்தாள்.“என் பேரன் இஸ்கூலுக்குப் போறான். என்னத்தைப் படிக்கிறான். மாடுதான் கறக்கப் போறான். அவங்க தாத்தா அப்பன் மாதிரி!”“உன் பெயரைக் கேட்டேன்”அப்புசாமி ஸீனுக்குள் ஆஜரானார் – புதியவளை உற்றுப் பார்த்துக்கொண்டே சங்கடப்பட்டார்.“உன் பேரைக் கேட்கறாங்க.” என்று கத்தினார் தன் பங்குக்கு.“குட்டிக் கண்ணு! குட்டின்னு கூப்பிடுவாங்க… கண்ணு தெரியலே தாயி… கோவிச்சுக்காதே… இது யாரு? வூட்டுக்காரரா?“வூட்டுக்காரர்தான். ஆமாம், உன்னை குட்டிக் கண்ணுன்னு கூப்பிடறதா, குட்டின்னுகூப்பிடறதா?” சீதாப்பாட்டி கேட்டாள்.“வூட்டிலே போய் இன்னா பண்ணப் போறேன். சொவுரு கெடச்சா சாணி தட்டி வெப்பேன்… பொவயிலே போட்டுப்பேன். என்னவோ பஞ்சம் பொழைக்கப் பட்டணம் வந்தாச்சு. காப்பித் தண்ணி இருந்தா ரவை குடேன்!”அப்புசாமி இடிந்து பொடிந்து நசுங்கிப் போய் விட்டார்.அந்த வண்டி வேஷ ராதையா? தீத்தனூர், பால்காரர் பொண்ணு, குட்டிக் கண்ணுவா? வண்டி வேஷ ராதையா? அந்த குட்டிக் கண்ணுவா? கண்ணழகி காஞ்சன மாலாவா, கண் இடுங்கி… சுருங்கி…அட தேவுடா! ஆதிசங்கரரோ யாரோ சொன்னாப்பலே… ‘அடே மனுஷா! அழகு, வாலிபம் எல்லாம் அப்படியே இருக்காதுடா…’ ன்னது சரியாப் போச்சு… அந்த குட்டிக் கண்ணுவா இது.

 

        ராவண குப்பண்ணா தூக்கிக் கொண்டு ஓடிய குட்டிக் கண்ணு ராதையா இது?எப்படி வெள்ளை வெளுக்க கடலை மாவு பற்று போல இருப்பா. சப்போட்டா விதையாட்டம் கண்ணு எப்படிக் கருகருன்னு, காதும் காலி… தலை குளிக்காத வெள்ளைக் கரடி மாதிரி. உடம்புலே ஒன்பதாயிரம் சுருக்கம். இதும் மூஞ்சியும் பல்லும்!‘ஐயோ… நிறமெல்லாம் கருத்து… ‘என் ராதே ராதே என்று புலம்ப வேண்டும் போலிருந்தது அவருக்கு.“சீதே! என்றார் குரல் தழுதழுக்க, “இந்தக் கிழ ஆயா சரிப்பட்டு வராது சீதே…கெஞ்சிக் கேட்கிறேன் அனுப்பிச்சுடு.நம்ம கழுத்தைத்தான் – முக்கியமா என் கழுத்தைத்தான் அறுக்கும். ஒரு சோப்புப் பவுடர் போடறதுக்குள் என் பிராணன் போய்விடும்.”“உங்க இஷ்டம்,” என்றாள் சீதாப்பாட்டி. “நாளைக்கே நிறுத்திடறேன்…”அப்புசாமி அதற்கப்புறம் தூக்கத்தில் ‘ராதே ராதே’ என்று பிதற்றவில்லை.சீதாப்பாட்டி மேற்படி கிழவியைத் தனியாகக் கூப்பிட்டு, இருநூறு ரூபாய் கொடுத்தாள். “நான் சொல்லித் தந்த மாதிரியே ரொம்ப நல்லாப் பேசினீங்க ஆயா!” என்று கூறி வழி அனுப்பி வைத்தாள்.“ஒரு கணவரை இளக்காரம் செய்யலாம், அதிகாரம் செய்யலாம். ஸ்நப் செய்யலாம். ஹாரஸ் பண்ணலாம், நேகிங் ஒய்·பாக இருக்கலாம். ஆனால் வேறொரு தூசி கூட அவர் மனசில் புகுவதை கற்புள்ள பெண்ணால் டாலரேட் பண்ண முடியாது. ஏன்னா, ஷி லவ்ஸ் ஷிம் ஸோ மச்!’ என்று சீதாப்பாட்டி தனக்குள் சிரித்தபடி சொல்லிக் கொண்டாள்

by parthi   on 14 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.