LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- பாக்கியம் ராமசாமி

ஓட்டேரிப் பாதையிலே..

 

அப்புசாமி, சீதாப்பாட்டியின் மோவாயைத் தொடாத குறையாகக் கெஞ்சினார்.
சீதாப்பாட்டியோ கைக்குட்டையால் மோவாயைத் துடைத்துக் கொண்டு. “என்னைக் சும்மா தொந்தரவு செய்யாதீர்கள். ஐ டூ க் லை டமில் பிக்சர்ஸ். ஆனால் இந்தப் படத்துக்கு மட்டும் ‘ப்ளீஸ்’ என்னைக் கூப்பிடாதீர்கள்,” என்று மறுத்தாள்.
சாதாரணமாகச் சீதாப்பாட்டி ஆங்கிலப் படங்கள்… முக்கியமாக ‘ஹிட்ச்காக்’ சீரீஸ்-தான் விரும்பிப் பார்ப்பது வழக்கம்.
அப்புசாமிக்கோ சினிமா என்றாலே பிடிக்காது. அது எந்த மொழிப் படமானாலும் சரி. அப்படிப்பட்டவர் இன்று தமிழ்ப் படத்துக்குத் தன்னைக் கட்டாயப்படுத்தியது சீதாப்பாட்டிக்கு வியப்பாகவும், வேதனையாகவும் இருந்தது.
“தியேட்டரும் ‘லொகாலிடி’யும் சுத்த ‘ராட்டன்!’ உங்களுக்கு இன்று கட்டாயம் படம் பார்த்தே தீர வேண்டுமானால் வாருங்கள் மெளன்ட்ரோடு போகலாம். ‘தி மர்டர் வித்தவுட் ப்ளட்’ என்கிற படம் சக்கைப்போடு போடுகிறது. போய்ப் பார்ப்போம். அப்படியே ‘எஸ்கிமோ’ அல்லது ‘க்வாலிடி’யில் நுழைந்துவிட்டு வரலாம்.”
அப்புசாமி வழுக்கையைத் தடவிக் கொண்டார். கடியாரத்தைப் பார்த்தார் இரவு எட்டே முக்காலும் ஆகிவிட்டது.
“நான் டிக்கெட்கூட ரிசர்வ் செய்து விட்டேனே, ‘பெண்ணுக்கு யார் தெய்வத்’துக்கு? சைக்கிள் ரிக்ஷாவுக்கு வேறு சொல்லி வைத்துவிட்டேன்.”
சீதாப்பாட்டி, ‘லுக் பிபோர் யூ லீப்! ஆழம் தெரியாமல் ஏன் நீங்கள் இப்படி அடிக்கடி காலை விட்டுவிட்டு விழிக்கிறீர்கள்? உங்களை யார் என்னை ‘கன்ஸல்ட்’ செய்யாமல் படத்துக்கு ‘புக்’ செய்யச் சொன்னார்கள். நான் உங்கள் ‘பெட்டர் ஹா·ப்’ என்பதை அடிக்கடி நீங்கள் மறந்து விடுகிறீர்கள்.”
“இவ்வளவு தூரம் நான் உன்னை வற்புறுத்துவதற்குக் காரணம் உண்டு. என்னுடைய பழையகால சினேகிதன் இதிலே அப்பா வேடத்தில் வந்து அமர்க்களம் செய்கிறானாம். குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைக்கிறானாம். கட்டாயம் நீ உன் மிஸஸ¤டன் படத்தைப் பார்த்து என்னைப் பாராட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டான், போன வாரம் பென்ஷன் வாங்கப் போன இடத்தில்.”
“ஓ! ஐ ஸீ!” என்றாள் சீதாப்பாட்டி. “உங்கள் சினேகிதர் ஒருத்தர் சினி ஆக்டராக இருக்கிறாரா? ஆல் திஸ் டேஸ் எனக்கு. நீங்கள் இதைச் சொன்னதே இல்லையே?”
“எனக்கே தற்செயலாய்த்தானே தெரிந்தது? பென்ஷன் வாங்கப் போன இடத்தில், சுருள் தலையும் ஜவ்வாதுப் பொட்டுமாகக் கிழவன் கோவிந்நசாமி நிற்கிறான். ‘என்னடா செய்கிறே பழி? பார்த்து இருபத்தைந்து வருடமாகிறதே, என்றால், ‘படங்களில் ‘காமெடி’ அப்பாவாக வருகிறேனே? பார்த்ததில்லையா?’ என்கிறான்!”
சீதாப்பாட்டி தோளை உசுப்பிக் கொண்டாள். “சார்லஸ் லாட்டன் மாதிரி ஒருத்தர் நடிக்க இனி ஆள் இல்லை. உங்க ‘·பிரண்ட்’ என்னத்தை நடிக்கப் போகிறார்? டமில் பிக்சர்ஸிலே வயதானவர்களுக்கு ‘ஸ்கோப்’ கிடையாது!”  
வாசலில் ‘ ஙீ ஙீ ஙீ’ என்று ஒரு மஞ்சள் நிற சைக்கிள் ரிக்ஷா பிரேக் போட்டு நின்றது.
அப்புசாமி, “அதோ பார்த்தாயா? நான் உனக்குக் கொடுத்திருக்கும் மதிப்பை. எனக்கு ஏற்ற சுமங்கலி நிறமான மஞ்சள் வர்ணம் அடித்த சைக்கிள் ரிக்ஷாவாக ஏற்பாடு செய்திருக்கிறேன். அடுத்த தெரு சிவக்கொழுந்து வீட்டு சைக்கிள் ரிக்ஷா. உன் பெயரைச் சொன்னவுடன், ‘அவங்களுக்கு இல்லாத வண்டிங்களா?’ என்று சிவக்கொழுந்து தன் சொந்த ரிக்ஷாவையே அனுப்பியிருக்கிறார். பானை திரளும்போது வெண்ணெயை உடைக்காதே.”
அப்புசாமி தப்பாகப் பழமொழி சொன்னதற்குப் பிழைத் திருத்தம் போடக்கூட நேரமில்லாமல் சீதாப்பாட்டி சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள் சிலகணம்.
பிறகு, “ஆல் ரைட்! கிளம்புங்கள். ஆறு மணி ‘பிளே’க்காவது ‘அரேஞ்ச்’ செய்யாமல் இப்படி ஒன்பதரைக்குச் செய்திருக்கிறீர்களே,” என்று தன் கண்டனத்தைத் தெரிவித்துவிட்டு, லேசாகக் கூந்தலை ‘பிரஷ்’ செய்து கொண்டு புறப்படத் தயாராகி விட்டாள்.
அப்புசாமி சைக்கிள் ரிக்ஷாவில் ஏறி உட்கார்ந்தார்.
சீதாப்பாட்டியும் ஏறி உட்கார்ந்து கொண்டாள்.
சைக்கிள் ரிக்ஷாக்காரன், “என்ன சார்? ‘டாப்’ போடட்டுமா?” என்றான்.
“நான்சென்ஸ்!” என்று சீதாப்பாட்டி சீறினாள். சீதாப்பாட்டிக்குச் சைக்கிள் ரிக்ஷாவில் ‘டாப்’ போடுவது என்றைக்கும் பிடிக்காது. அது ‘தக்கா புக்கா’ என்று இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்கும் தள்ளாடும் கோரமெல்லாம் அவள் விரும்புவதில்லை.
சினிமாக் கொட்டகையில் அதிகம் இருந்தால் பத்துப் பதினைந்து பேர்கள் இருப்பார்கள்.
இரண்டு ரூபாய் ஸீட்டில் அப்புசாமியும் சீதாலட்சுமியும் மட்டுமே அமர்ந்திருந்தார்கள்.
படம் ஆயிரம் அடி போவதற்குள் அப்புசாமி ‘ஹாவ்!’ ‘ஹாவ்!’ என்று வாய் கிழிவது போலக் கொட்டாவி விட்டார்.
சீதாப்பாட்டி சிறிது தூரத்தில் மிட்டாய், பிஸ்கட் தட்டுடன் சென்று கொண்டிருந்த பையனைக் கைதட்டி, “ஹே பாய்! பாப்கார்ன் ஒன் பாக்கெட்!” என்று குரல் கொடுத்தாள்.
அப்புசாமியின் மடியில் ஒரு பாக்கெட் மக்காச்சோளப் பொறியையும் அவிழ்த்துக்கொட்டி, “ஒவ்வொன்றாகக் சாப்பிட்டுக் கொண்டு தூங்காமல் படத்தைப் பாருங்கள். உங்கள் சினேகிதர் ‘ரோல்’ வருவதற்குள் ‘யான்’ செய்ய ஆரம்பித்து விட்டீர்களே?” என்றாள்.
அப்புசாமி மக்காச் சோளம் சாப்பிட ஆரம்பித்தார்.
ஆனால் இரண்டு வினாடி கழித்து, “லெஸ் நாய்ஸ்! மசுக் மசுக் என்று இப்படியா தியேட்டர் பூராவும் சத்தம் கேட்கும்படி ‘பாப் கார்ன்’ சாப்பிடுவது?” என்று கண்டித்தாள் சீதாப்பாட்டி.
ஒரு மணி நேரம் படம் பார்த்ததும் அப்புசாமி, “படம் சகிக்கவில்லையே? போய் விடலாமா வீட்டுக்கு? பாவம், உனக்கும் சிரமமாயிருக்கும்,” என்றார்.
சீதாப்பாட்டி, “வாட் எபெளட் யுவர் ·ப்ரண்ட்? அவர் தலையே தெரியவில்லையே இன்னும்?” என்றாள்.
“அவன் ஒரு சவடால் பேர்வழி. சும்மா அளந்திருப்பானோ என்னவோ? வீட்டுக்குப் புறப்படுவோமா?” என்றார் அப்புசாமி.
சீதாப்பாட்டி, “ஜயாம் ரெடி,” என்று கிளம்பினாள்.
கொட்டகை வாசலில் தயாராக மஞ்சள் ரிக்ஷா காத்திருந்தது. தெரு விளக்குகள் அணைக்கப்பட்டு ஒரே கும்மிருட்டாக இருந்தது.
சீதாப்பாட்டி, “ஓ! வாட் எ பிளாக் அவுட்! நோ லைட்ஸ்! கார்ப்பரேஷன்காரர்கள் ஊருக்கு முன்னாடி விளக்கை அணைத்து விட்டார்களே?” என்று முணுமுணுத்தவள் “ஜாக்கிரதையாக ஏறி உட்காருங்கள்,” என்றாள்.
அப்புசாமி ஏறி உட்கார்ந்தார். “மணி என்ன, பன்னிரண்டிருக்குமா? ரோடில் அடித்துப் போட்டால் கூடக் கேட்க ஆள் இல்லை போலிருக்கிறது!”
சீதாப்பாட்டி தன் ரேடியம் பூசிய லேடீஸ் வாட்சைத் திருப்பிப் பார்த்து விட்டு, “டென் மினிட்ஸ் டு ட்வல்வ்! சீக்கிரம் விடுப்பா வண்டியை!” என்றாள்.
சைக்கிள் ரிக்ஷாக்காரன் பீடியை கடைசி இழுப்பு இழுத்துக்கொண்டே “இதோ ஆச்சுங் அம்மா!” என்றவன் புதுத் தெம்பு பெற்றவனாக சைக்கிள் ரிக்ஷாவில் ஏறி உட்கார்ந்தான்.
பிறகு, “என்ன சார், கழுத்தறுத்தான் தெருவுக்காப் போயி, காட்டேரி மேட்டை ஒரு ரெளண்ட் பண்ணிகிட்டு பழைய சாராயக் கடை ரோடிலே போய் எடப்பக்கமா வலிச்சிகிட்டுங்களா? இன்னா சொல்றீங்க?” என்றான்.
“விடுப்பா. நீ சொல்கிற தெரு பெயரைக் கேட்டாலே உடம்பு நடுங்குகிறது. பத்திரமாய்க் கொண்டு போய்ச் சேர். நான் தனியா இருந்தாலும் பரவாயில்லை. பெண் பிள்ளையை வேறு அழைத்து வந்துவிட்டேன்.” அப்புசாமி வண்டிக்காரனிடம் சொன்னார்.
சீதாப்பாட்டி கழுத்தையும், காதுகளையும் தொட்டுப் பார்த்துக் கொண்டாள்.
“சீதா! பயமாக இருக்கிறதா?” என்றார் அப்புசாமி.
“நத்திங் டூயிங்! எனக்கென்ன பயம்! நீங்கள் பயப்படாமல் இருந்தால் எனக்கும் பயமில்லை,” என்றாள் சீதா.
இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே சைக்கிள் ரிக்ஷா நின்றது.
“என்னப்பா?” என்றார் அப்புசாமி.
“காத்து இல்லீங்க. பஞ்ச்சராயிட்டுது போலிருக்குது. மூணு ரிம்மும் பூடுங்களே வீணா! கொஞ்சம் இருங்க. நான் அரை அவுர்லே டியூபை ஒட்டறதுக்கு ஆளை இட்டாந்துடறேன்.”
“என்னப்பாது? நோ. நோ. இந்த மிட்நைட்டில் கொஞ்சம்கூட ரெஸ்பான்ஸிபிலிடி இல்லாமல் வண்டியைக் கொண்டுவந்து இந்த ஏரியாவில் நிறுத்திவிட்டு நீ பாட்டுக்குப் போகிறேன் என்கிறாயே? ஐ வோன்ட் அஸெளவ் யூ டு மூவ்!” சீதாப்பாட்டி ஆட்சேபிப்பதைப் பொருட்படுத்தாமல், “சும்மாக் கெடம்மே!” என்று சைக்கிள் ரிக்ஷாக்காரன் போனவன் போனவன்தான்.
சீதாப்பாட்டி, “இதென்ன, இது? இப்படி நடுராத்திரியில் நடுரோடில் நல்ல சினிமாவிற்கு ஏற்பாடு செய்தீர்கள்!” என்று சுற்றுமுற்றும் பார்த்தாள்.
அப்புசாமி முகத்தில் புன்னகை படர்ந்தது. “என்ன கிழவி, ரொம்பப் பயமா இருக்கிறதா?” என்றவர், “ஹஹஹ!” என்று சிறிது சத்தம் போட்டுச் சிரித்தார்.
சீதாப்பாட்டி அதிர்ச்சி அடைந்தவளாக, ‘ஒய் டூ யு வா·ப்? ஏன் சிரிக்கிறீர்கள்?” என்றாள்.
“அடி கிழவி! கிழவி! நீ ஒரு அப்பாவிக் கிழவி! பெரிய ஸ்டைல் கிய்ல் எல்லாம் இருந்தும், பார், இப்போது நீ பயந்து நடுங்குகிறாய்’ வரவர நீ கொஞ்சம் துளிர்த்துப் போய்விட்டாய், உன்னைக் கொஞ்சம் பயப்பட வைக்க வேண்டும். புருஷன் துணை இல்லாமல் ஒன்றும் நடக்காது என்பதை நீ உணர வேண்டும் என்பதற்காகத்தான் இப்படிச் சினிமா ஏற்பாடு செய்தேன். சைக்கிள் ரிக்ஷாவை நடுரோடில் இப்படி அரைமணி நிறுத்தி விட்டுப் போவதற்காகச் சைக்கிள் ரிக்ஷாக்காரனுக்கு ஒரு ரூபாய் கொடுத்திருக்கிறேனாக்கும்!” அப்புசாமி சிரித்தார்.
சீதாப்பாட்டி, “அட கடவுளே! என்மேல் ‘வென்ஜன்ஸ்’ எடுப்பதற்காக இவ்வளவு பெரிய பனிஷ்மெண்ட்டா எனக்கு?” என்று சிறிது நேரம் முகத்தை மூடிக் கொண்டவள், “உண்மையாகவே எனக்கு உடம்பு நடுங்குகிறது. காதிலும் கழுத்திலும் ஜ்வல்ஸ்’ வேறு போட்டுக் கொண்டு வந்து விட்டேன். கேஷ் வேறு ஹாண்ட் பாக்கில் இருக்கிறது!”
அப்புசாமி, “அஞ்சேல். இதோ இப்போது கிளம்பிவிடலாம். அடேய் மாணிக்கம்! மாணிக்கம்! வாடா சீக்கிரம்!” என்று சைக்கிள் ரிக்ஷாக்காரனைக் கூப்பிட்டார்.
ஆனால் அவன் வருகிற வழியாகத் தெரியவில்லை. அப்புசாமி மறுபடியும், “ஏ! மாணிக்கம்! மாணிக்கம்! வந்து தொலையடா!” என்று கத்தினார்.
சீதாப்பாட்டி சந்தேகத்துடன் “ஐ டெளட்! அவன் இதுதான் சாக்கென்று ஏதாவது ‘சா’ சாப்பிடப் போயிருப்பான்’” என்றாள்.
மூன்றாவது தடவையாக அப்புசாமி அந்தப் பன்னிரண்டு மணி இரவில், “மாணிக்கம்! மாணிக்கம்! அடே மாணிக்கம்!” என்று கத்தினார்.
அடுத்த கணம், “இன்னாடா இங்கே? எந்த ராஸ்கோல் இங்கே வந்து கூவறான் இன்னேரத்திலே?” என்று இருட்டிலிருந்து இரண்டு பேர் முருட்டுத் தடியர்கள் வந்தார்கள். குடித்து விட்டுத் தள்ளாடியபடி வந்தார்கள். “சரக்கு வேணும்னா ‘நைனா…துட்டு இப்போ இல்லை’னா தர்ரேன். அதுக்கு இப்படிக் கூவறதா நாய் மாதிரி. மாணிக்கமாம்! மாணிக்கம்! என் பெயர் கண்ணை நோண்டி கந்தப்பன்டா! இவன் என் சித்தப்பாரு பிள்ளை முடிச்சவுக்கி முனுசாமி!”
அப்புசாமி வெலவெலுத்துப் போய், “மா…..மா…..மா…” என்று மாணிக்கத்தை உதவிக்கு அழைக்க வாய்வராமல் தடுமாறினார்.
குடித்த ரெளடிகளில் ஒருவன் பார்வை சைக்கிள் ரிக்ஷாவிலிருந்த சீதாப்பாட்டியைப் பார்த்துவிட்டது. “அட! இஸ்கி! இங்கே ஒரு அயகாண பொண்ணுடா!” என்று சைக்கிள் ரிக்ஷாவை நெருங்கினான்.
அப்புசாமி, “ஆ! ஆ!” என்று அலறினாரே தவிரப் பாட்டியைக் காப்பாற்ற விரைந்து வரக் கால் எழும்பவில்லை.
சீதாப்பாட்டி நெஞ்சைப் பிடித்துக் கொண்டவள், அடுத்த நிமிடம் சைக்கிள் ரிக்ஷாவிலிருந்து, “யூ! ராஸ் கல்ஸ்! யூ ட்ரங்கர்ட்ஸ் யூ தீவ்ஸ்!” என்று ஆவேசமாகக் கத்தியவாறு ஹாண்ட் பாக்கைக் கதாயுதம் மாதிரி சுழற்றித் தன்னைத் தீண்டவந்த ரெளடியைத் தாக்கினாள். “ஐயோ! ஆ! நயினா! அட மன்னாரு! என் மூக்கு போச்சுடா!” என்று அந்த ரெளடி அலறி ஓடினான்.
கூடவே இன்னொரு ரெளடியும் ஓட்டம் எடுத்தான். “அடேய்! கிழவி! எங்க ‘பிளேடு’ பட்டாளத்தைக் கூட்டி யாரோம்! கீசிட்றோம் இரு கீசி! கிரிணிப் பழத்தைக் கீசற மாதிரி!”  
“சரிதான் போங்கடா!” என்று அப்புசாமியும் ஓடுகிற ரெளடிகளைப் பார்த்து வீரம் உதிர்த்தார். ‘கிண்’ என்று அவர் முதுகில் போகிற போக்கில் ஒரு குத்து விட்டுவிட்டு ஒரு ரெளடி, “போடா! வெறும் பயலே! கெயவி என்னாமா சண்டை போட்டாள்! நாங்கள் ஓடறது அவளுக்காகத்தான்,” என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டான்.
அப்புசாமியின் முதுகைச் சீதாப்பாட்டி தடவி விட்டாள். “கொஞ்சம் ‘·பொமண்டேஷன்’ கொடுத்தால் சரியாகிவிடும். டோன்ட் வொர்ரி!” என்ற பாட்டி, “நாம் இங்கிருந்து உடனடியாகப் போயாக வேண்டும், ‘பிளேடு பட்டாளம்’ வருவதற்குள்! கூப்பிடுங்கள் உங்கள் மாணிக்கத்தை!” என்றாள்.
“மாணிக்கமாவது! மரகதமாவது! அந்தத் தடிப்பயல் எங்கே தொலைந்தானோ? ‘பிளேடு பட்டாளம்’ வந்து… ஐயோ, நான் இப்படித்தான் சாக வேண்டுமா?” அப்புசாமி புலம்பினார்.
“மாணிக்கம்! மாணிக்கம்! வாடா, வாடா!” என்று அலறினார்.
“யூ டாக் ஸில்லி!” என்றாள் சீதாப்பாட்டி. “மாணிக்கம் வராவிட்டால் என்ன? நீங்கள் ஆண்பிள்ளை தானே? யூ பி தி டிரைவர்!”
“என்ன, என்ன சொல்கிறாய்? என்னை சாரதியாக ஆகச் சொல்கிறாயா? சைக்கிள் ரிக்ஷா மிதிக்கச் சொல்கிறாயா?” அப்புசாமியின் குரல் நடுங்கியது.
சீதாப்பாட்டியோ குரலில் உறுதியுடன், “தட்டீஸ் தி ஒன்லி வே அவுட்! க்விக்! க்விக்! ஏறி உட்காருங்கள்! மிதியுங்கள் வண்டியை! மாணிக்கம் நிச்சயமாக வரப்போவதில்லை. அவன் வருகிறதுக்குள் பிளேடு பட்டாளம் வந்துவிடும்!”
அப்புசாமி வேறு வழியின்றி சைக்கிள் ரிக்ஷா ஸீட்டில் உட்கார்ந்து மிதிக்க ஆரம்பித்தார்.
“தட்ஸ் ஆல்! அவ்வளவுதான்!” இதோ ஆச்சு!” என்று சீதாப்பாட்டி பின்னால் உட்கார்ந்துகொண்டு ஊக்கப் படுத்த, வியர்க்க விறுவிறுக்க சைக்குள் ரிக்ஷாவை மிதித்துக்கொண்டு வீட்டுக்கு அப்புசாமி வந்து சேர மணி இரண்டாகி விட்டது.
தொடை இரண்டும் இரண்டு டன் பாறாங்கல்லைக் கட்டிக் கொண்டதுபோல் வலித்தது.
‘ஹெள டு யூ ·பீல்? கால்வலி எப்படி இருக்கிறது?” என்றால் சீதாப்பாட்டி, காலையில் வென்னீர் பொங்கப் பொங்க ஒத்தடத்துக்குத் தயார் செய்து கொண்டே.
“ஜென்மத்துக்கு இனிமேல் அந்த மாணிக்கம் பயலை நம்பமாட்டேன்!”
!ஹி ஈஸ் நாட் டு பி பிளேம்ட்! அவனைச் சொல்லிக் குற்றமில்லை. அவனுக்கு நீங்கள் ஒரு ரூபாய்தான் தந்தீர்கள். நான் ‘டூ ரபீஸ்’ கொடுத்தேன்! ஆகவே நான் சொன்னபடிதானே அவன் கேட்பான்?” என்றாள் சீதாப்பாட்டி.
அப்புசாமிக்குக் தலை சுற்றியது. “என்ன! நீ என்ன சொல்கிறாய்!” என்றார்.
சீதாப்பாட்டி தன் வழக்கமான ‘ஸ்மைலு’டன் கூறினாள். “சைக்கிள் ரிக்ஷா மாணிக்கம் உங்களிடம் ரூபாயும் வாங்கிக்கொண்டு, உங்கள் ஏற்பாட்டையும் என்னிடம் சொல்லிவிட்டான். நான் என் ‘ஷேரு’க்கு இரண்டு ரூபாய் கொடுத்து உங்கள் ட்ராமாவை மெலோட்ராமாவாகச் செய்துவிட்டேன். ‘தோஸ் ரெளடீஸ்’ வந்தார்களே, அது மாதிரி வரச் சொல்லி மாணிக்கத்திடம் ஏற்பாடு செய்தது நான்தான். நீங்கள் என்ன கூப்பிட்டாலும் மாணிக்கத்தை வரக்கூடாது என்று சொல்லிவைத்தேன். உங்களைச் சைக்கிள் ரிக்ஷா ஓட்டவைத்து விட்டேன்! சாரி! ப்ளீஸ்! ·பர் கிவ் பி!”
“நாசமாய்ப் போ!” என்று அப்புசாமி சாபமிட்டார்.

         அப்புசாமி, சீதாப்பாட்டியின் மோவாயைத் தொடாத குறையாகக் கெஞ்சினார்.சீதாப்பாட்டியோ கைக்குட்டையால் மோவாயைத் துடைத்துக் கொண்டு. “என்னைக் சும்மா தொந்தரவு செய்யாதீர்கள். ஐ டூ க் லை டமில் பிக்சர்ஸ். ஆனால் இந்தப் படத்துக்கு மட்டும் ‘ப்ளீஸ்’ என்னைக் கூப்பிடாதீர்கள்,” என்று மறுத்தாள்.சாதாரணமாகச் சீதாப்பாட்டி ஆங்கிலப் படங்கள்… முக்கியமாக ‘ஹிட்ச்காக்’ சீரீஸ்-தான் விரும்பிப் பார்ப்பது வழக்கம்.அப்புசாமிக்கோ சினிமா என்றாலே பிடிக்காது. அது எந்த மொழிப் படமானாலும் சரி. அப்படிப்பட்டவர் இன்று தமிழ்ப் படத்துக்குத் தன்னைக் கட்டாயப்படுத்தியது சீதாப்பாட்டிக்கு வியப்பாகவும், வேதனையாகவும் இருந்தது.“தியேட்டரும் ‘லொகாலிடி’யும் சுத்த ‘ராட்டன்!’ உங்களுக்கு இன்று கட்டாயம் படம் பார்த்தே தீர வேண்டுமானால் வாருங்கள் மெளன்ட்ரோடு போகலாம். ‘தி மர்டர் வித்தவுட் ப்ளட்’ என்கிற படம் சக்கைப்போடு போடுகிறது. போய்ப் பார்ப்போம். அப்படியே ‘எஸ்கிமோ’ அல்லது ‘க்வாலிடி’யில் நுழைந்துவிட்டு வரலாம்.”அப்புசாமி வழுக்கையைத் தடவிக் கொண்டார்.

 

       கடியாரத்தைப் பார்த்தார் இரவு எட்டே முக்காலும் ஆகிவிட்டது.“நான் டிக்கெட்கூட ரிசர்வ் செய்து விட்டேனே, ‘பெண்ணுக்கு யார் தெய்வத்’துக்கு? சைக்கிள் ரிக்ஷாவுக்கு வேறு சொல்லி வைத்துவிட்டேன்.”சீதாப்பாட்டி, ‘லுக் பிபோர் யூ லீப்! ஆழம் தெரியாமல் ஏன் நீங்கள் இப்படி அடிக்கடி காலை விட்டுவிட்டு விழிக்கிறீர்கள்? உங்களை யார் என்னை ‘கன்ஸல்ட்’ செய்யாமல் படத்துக்கு ‘புக்’ செய்யச் சொன்னார்கள். நான் உங்கள் ‘பெட்டர் ஹா·ப்’ என்பதை அடிக்கடி நீங்கள் மறந்து விடுகிறீர்கள்.”“இவ்வளவு தூரம் நான் உன்னை வற்புறுத்துவதற்குக் காரணம் உண்டு. என்னுடைய பழையகால சினேகிதன் இதிலே அப்பா வேடத்தில் வந்து அமர்க்களம் செய்கிறானாம். குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைக்கிறானாம். கட்டாயம் நீ உன் மிஸஸ¤டன் படத்தைப் பார்த்து என்னைப் பாராட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டான், போன வாரம் பென்ஷன் வாங்கப் போன இடத்தில்.”“ஓ! ஐ ஸீ!” என்றாள் சீதாப்பாட்டி. “உங்கள் சினேகிதர் ஒருத்தர் சினி ஆக்டராக இருக்கிறாரா? ஆல் திஸ் டேஸ் எனக்கு.

 

        நீங்கள் இதைச் சொன்னதே இல்லையே?”“எனக்கே தற்செயலாய்த்தானே தெரிந்தது? பென்ஷன் வாங்கப் போன இடத்தில், சுருள் தலையும் ஜவ்வாதுப் பொட்டுமாகக் கிழவன் கோவிந்நசாமி நிற்கிறான். ‘என்னடா செய்கிறே பழி? பார்த்து இருபத்தைந்து வருடமாகிறதே, என்றால், ‘படங்களில் ‘காமெடி’ அப்பாவாக வருகிறேனே? பார்த்ததில்லையா?’ என்கிறான்!”சீதாப்பாட்டி தோளை உசுப்பிக் கொண்டாள். “சார்லஸ் லாட்டன் மாதிரி ஒருத்தர் நடிக்க இனி ஆள் இல்லை. உங்க ‘·பிரண்ட்’ என்னத்தை நடிக்கப் போகிறார்? டமில் பிக்சர்ஸிலே வயதானவர்களுக்கு ‘ஸ்கோப்’ கிடையாது!”  வாசலில் ‘ ஙீ ஙீ ஙீ’ என்று ஒரு மஞ்சள் நிற சைக்கிள் ரிக்ஷா பிரேக் போட்டு நின்றது.அப்புசாமி, “அதோ பார்த்தாயா? நான் உனக்குக் கொடுத்திருக்கும் மதிப்பை. எனக்கு ஏற்ற சுமங்கலி நிறமான மஞ்சள் வர்ணம் அடித்த சைக்கிள் ரிக்ஷாவாக ஏற்பாடு செய்திருக்கிறேன். அடுத்த தெரு சிவக்கொழுந்து வீட்டு சைக்கிள் ரிக்ஷா. உன் பெயரைச் சொன்னவுடன், ‘அவங்களுக்கு இல்லாத வண்டிங்களா?’ என்று சிவக்கொழுந்து தன் சொந்த ரிக்ஷாவையே அனுப்பியிருக்கிறார். பானை திரளும்போது வெண்ணெயை உடைக்காதே.”அப்புசாமி தப்பாகப் பழமொழி சொன்னதற்குப் பிழைத் திருத்தம் போடக்கூட நேரமில்லாமல் சீதாப்பாட்டி சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள் சிலகணம்.பிறகு, “ஆல் ரைட்! கிளம்புங்கள்.

 

        ஆறு மணி ‘பிளே’க்காவது ‘அரேஞ்ச்’ செய்யாமல் இப்படி ஒன்பதரைக்குச் செய்திருக்கிறீர்களே,” என்று தன் கண்டனத்தைத் தெரிவித்துவிட்டு, லேசாகக் கூந்தலை ‘பிரஷ்’ செய்து கொண்டு புறப்படத் தயாராகி விட்டாள்.அப்புசாமி சைக்கிள் ரிக்ஷாவில் ஏறி உட்கார்ந்தார்.சீதாப்பாட்டியும் ஏறி உட்கார்ந்து கொண்டாள்.சைக்கிள் ரிக்ஷாக்காரன், “என்ன சார்? ‘டாப்’ போடட்டுமா?” என்றான்.“நான்சென்ஸ்!” என்று சீதாப்பாட்டி சீறினாள். சீதாப்பாட்டிக்குச் சைக்கிள் ரிக்ஷாவில் ‘டாப்’ போடுவது என்றைக்கும் பிடிக்காது. அது ‘தக்கா புக்கா’ என்று இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்கும் தள்ளாடும் கோரமெல்லாம் அவள் விரும்புவதில்லை.சினிமாக் கொட்டகையில் அதிகம் இருந்தால் பத்துப் பதினைந்து பேர்கள் இருப்பார்கள்.இரண்டு ரூபாய் ஸீட்டில் அப்புசாமியும் சீதாலட்சுமியும் மட்டுமே அமர்ந்திருந்தார்கள்.படம் ஆயிரம் அடி போவதற்குள் அப்புசாமி ‘ஹாவ்!’ ‘ஹாவ்!’ என்று வாய் கிழிவது போலக் கொட்டாவி விட்டார்.சீதாப்பாட்டி சிறிது தூரத்தில் மிட்டாய், பிஸ்கட் தட்டுடன் சென்று கொண்டிருந்த பையனைக் கைதட்டி, “ஹே பாய்! பாப்கார்ன் ஒன் பாக்கெட்!” என்று குரல் கொடுத்தாள்.

 

       அப்புசாமியின் மடியில் ஒரு பாக்கெட் மக்காச்சோளப் பொறியையும் அவிழ்த்துக்கொட்டி, “ஒவ்வொன்றாகக் சாப்பிட்டுக் கொண்டு தூங்காமல் படத்தைப் பாருங்கள். உங்கள் சினேகிதர் ‘ரோல்’ வருவதற்குள் ‘யான்’ செய்ய ஆரம்பித்து விட்டீர்களே?” என்றாள்.அப்புசாமி மக்காச் சோளம் சாப்பிட ஆரம்பித்தார்.ஆனால் இரண்டு வினாடி கழித்து, “லெஸ் நாய்ஸ்! மசுக் மசுக் என்று இப்படியா தியேட்டர் பூராவும் சத்தம் கேட்கும்படி ‘பாப் கார்ன்’ சாப்பிடுவது?” என்று கண்டித்தாள் சீதாப்பாட்டி.ஒரு மணி நேரம் படம் பார்த்ததும் அப்புசாமி, “படம் சகிக்கவில்லையே? போய் விடலாமா வீட்டுக்கு? பாவம், உனக்கும் சிரமமாயிருக்கும்,” என்றார்.சீதாப்பாட்டி, “வாட் எபெளட் யுவர் ·ப்ரண்ட்? அவர் தலையே தெரியவில்லையே இன்னும்?” என்றாள்.“அவன் ஒரு சவடால் பேர்வழி. சும்மா அளந்திருப்பானோ என்னவோ? வீட்டுக்குப் புறப்படுவோமா?” என்றார் அப்புசாமி.சீதாப்பாட்டி, “ஜயாம் ரெடி,” என்று கிளம்பினாள்.கொட்டகை வாசலில் தயாராக மஞ்சள் ரிக்ஷா காத்திருந்தது.

 

       தெரு விளக்குகள் அணைக்கப்பட்டு ஒரே கும்மிருட்டாக இருந்தது.சீதாப்பாட்டி, “ஓ! வாட் எ பிளாக் அவுட்! நோ லைட்ஸ்! கார்ப்பரேஷன்காரர்கள் ஊருக்கு முன்னாடி விளக்கை அணைத்து விட்டார்களே?” என்று முணுமுணுத்தவள் “ஜாக்கிரதையாக ஏறி உட்காருங்கள்,” என்றாள்.அப்புசாமி ஏறி உட்கார்ந்தார். “மணி என்ன, பன்னிரண்டிருக்குமா? ரோடில் அடித்துப் போட்டால் கூடக் கேட்க ஆள் இல்லை போலிருக்கிறது!”சீதாப்பாட்டி தன் ரேடியம் பூசிய லேடீஸ் வாட்சைத் திருப்பிப் பார்த்து விட்டு, “டென் மினிட்ஸ் டு ட்வல்வ்! சீக்கிரம் விடுப்பா வண்டியை!” என்றாள்.சைக்கிள் ரிக்ஷாக்காரன் பீடியை கடைசி இழுப்பு இழுத்துக்கொண்டே “இதோ ஆச்சுங் அம்மா!” என்றவன் புதுத் தெம்பு பெற்றவனாக சைக்கிள் ரிக்ஷாவில் ஏறி உட்கார்ந்தான்.பிறகு, “என்ன சார், கழுத்தறுத்தான் தெருவுக்காப் போயி, காட்டேரி மேட்டை ஒரு ரெளண்ட் பண்ணிகிட்டு பழைய சாராயக் கடை ரோடிலே போய் எடப்பக்கமா வலிச்சிகிட்டுங்களா? இன்னா சொல்றீங்க?” என்றான்.“விடுப்பா. நீ சொல்கிற தெரு பெயரைக் கேட்டாலே உடம்பு நடுங்குகிறது. பத்திரமாய்க் கொண்டு போய்ச் சேர். நான் தனியா இருந்தாலும் பரவாயில்லை.

 

       பெண் பிள்ளையை வேறு அழைத்து வந்துவிட்டேன்.” அப்புசாமி வண்டிக்காரனிடம் சொன்னார்.சீதாப்பாட்டி கழுத்தையும், காதுகளையும் தொட்டுப் பார்த்துக் கொண்டாள்.“சீதா! பயமாக இருக்கிறதா?” என்றார் அப்புசாமி.“நத்திங் டூயிங்! எனக்கென்ன பயம்! நீங்கள் பயப்படாமல் இருந்தால் எனக்கும் பயமில்லை,” என்றாள் சீதா.இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே சைக்கிள் ரிக்ஷா நின்றது.“என்னப்பா?” என்றார் அப்புசாமி.“காத்து இல்லீங்க. பஞ்ச்சராயிட்டுது போலிருக்குது. மூணு ரிம்மும் பூடுங்களே வீணா! கொஞ்சம் இருங்க. நான் அரை அவுர்லே டியூபை ஒட்டறதுக்கு ஆளை இட்டாந்துடறேன்.”“என்னப்பாது? நோ. நோ. இந்த மிட்நைட்டில் கொஞ்சம்கூட ரெஸ்பான்ஸிபிலிடி இல்லாமல் வண்டியைக் கொண்டுவந்து இந்த ஏரியாவில் நிறுத்திவிட்டு நீ பாட்டுக்குப் போகிறேன் என்கிறாயே? ஐ வோன்ட் அஸெளவ் யூ டு மூவ்!” சீதாப்பாட்டி ஆட்சேபிப்பதைப் பொருட்படுத்தாமல், “சும்மாக் கெடம்மே!” என்று சைக்கிள் ரிக்ஷாக்காரன் போனவன் போனவன்தான்.

 

        சீதாப்பாட்டி, “இதென்ன, இது? இப்படி நடுராத்திரியில் நடுரோடில் நல்ல சினிமாவிற்கு ஏற்பாடு செய்தீர்கள்!” என்று சுற்றுமுற்றும் பார்த்தாள்.அப்புசாமி முகத்தில் புன்னகை படர்ந்தது. “என்ன கிழவி, ரொம்பப் பயமா இருக்கிறதா?” என்றவர், “ஹஹஹ!” என்று சிறிது சத்தம் போட்டுச் சிரித்தார்.சீதாப்பாட்டி அதிர்ச்சி அடைந்தவளாக, ‘ஒய் டூ யு வா·ப்? ஏன் சிரிக்கிறீர்கள்?” என்றாள்.“அடி கிழவி! கிழவி! நீ ஒரு அப்பாவிக் கிழவி! பெரிய ஸ்டைல் கிய்ல் எல்லாம் இருந்தும், பார், இப்போது நீ பயந்து நடுங்குகிறாய்’ வரவர நீ கொஞ்சம் துளிர்த்துப் போய்விட்டாய், உன்னைக் கொஞ்சம் பயப்பட வைக்க வேண்டும். புருஷன் துணை இல்லாமல் ஒன்றும் நடக்காது என்பதை நீ உணர வேண்டும் என்பதற்காகத்தான் இப்படிச் சினிமா ஏற்பாடு செய்தேன். சைக்கிள் ரிக்ஷாவை நடுரோடில் இப்படி அரைமணி நிறுத்தி விட்டுப் போவதற்காகச் சைக்கிள் ரிக்ஷாக்காரனுக்கு ஒரு ரூபாய் கொடுத்திருக்கிறேனாக்கும்!” அப்புசாமி சிரித்தார்.சீதாப்பாட்டி, “அட கடவுளே! என்மேல் ‘வென்ஜன்ஸ்’ எடுப்பதற்காக இவ்வளவு பெரிய பனிஷ்மெண்ட்டா எனக்கு?” என்று சிறிது நேரம் முகத்தை மூடிக் கொண்டவள், “உண்மையாகவே எனக்கு உடம்பு நடுங்குகிறது.

 

         காதிலும் கழுத்திலும் ஜ்வல்ஸ்’ வேறு போட்டுக் கொண்டு வந்து விட்டேன். கேஷ் வேறு ஹாண்ட் பாக்கில் இருக்கிறது!”அப்புசாமி, “அஞ்சேல். இதோ இப்போது கிளம்பிவிடலாம். அடேய் மாணிக்கம்! மாணிக்கம்! வாடா சீக்கிரம்!” என்று சைக்கிள் ரிக்ஷாக்காரனைக் கூப்பிட்டார்.ஆனால் அவன் வருகிற வழியாகத் தெரியவில்லை. அப்புசாமி மறுபடியும், “ஏ! மாணிக்கம்! மாணிக்கம்! வந்து தொலையடா!” என்று கத்தினார்.சீதாப்பாட்டி சந்தேகத்துடன் “ஐ டெளட்! அவன் இதுதான் சாக்கென்று ஏதாவது ‘சா’ சாப்பிடப் போயிருப்பான்’” என்றாள்.மூன்றாவது தடவையாக அப்புசாமி அந்தப் பன்னிரண்டு மணி இரவில், “மாணிக்கம்! மாணிக்கம்! அடே மாணிக்கம்!” என்று கத்தினார்.அடுத்த கணம், “இன்னாடா இங்கே? எந்த ராஸ்கோல் இங்கே வந்து கூவறான் இன்னேரத்திலே?” என்று இருட்டிலிருந்து இரண்டு பேர் முருட்டுத் தடியர்கள் வந்தார்கள். குடித்து விட்டுத் தள்ளாடியபடி வந்தார்கள். “சரக்கு வேணும்னா ‘நைனா…துட்டு இப்போ இல்லை’னா தர்ரேன். அதுக்கு இப்படிக் கூவறதா நாய் மாதிரி.

 

       மாணிக்கமாம்! மாணிக்கம்! என் பெயர் கண்ணை நோண்டி கந்தப்பன்டா! இவன் என் சித்தப்பாரு பிள்ளை முடிச்சவுக்கி முனுசாமி!”அப்புசாமி வெலவெலுத்துப் போய், “மா…..மா…..மா…” என்று மாணிக்கத்தை உதவிக்கு அழைக்க வாய்வராமல் தடுமாறினார்.குடித்த ரெளடிகளில் ஒருவன் பார்வை சைக்கிள் ரிக்ஷாவிலிருந்த சீதாப்பாட்டியைப் பார்த்துவிட்டது. “அட! இஸ்கி! இங்கே ஒரு அயகாண பொண்ணுடா!” என்று சைக்கிள் ரிக்ஷாவை நெருங்கினான்.அப்புசாமி, “ஆ! ஆ!” என்று அலறினாரே தவிரப் பாட்டியைக் காப்பாற்ற விரைந்து வரக் கால் எழும்பவில்லை.சீதாப்பாட்டி நெஞ்சைப் பிடித்துக் கொண்டவள், அடுத்த நிமிடம் சைக்கிள் ரிக்ஷாவிலிருந்து, “யூ! ராஸ் கல்ஸ்! யூ ட்ரங்கர்ட்ஸ் யூ தீவ்ஸ்!” என்று ஆவேசமாகக் கத்தியவாறு ஹாண்ட் பாக்கைக் கதாயுதம் மாதிரி சுழற்றித் தன்னைத் தீண்டவந்த ரெளடியைத் தாக்கினாள். “ஐயோ! ஆ! நயினா! அட மன்னாரு! என் மூக்கு போச்சுடா!” என்று அந்த ரெளடி அலறி ஓடினான்.கூடவே இன்னொரு ரெளடியும் ஓட்டம் எடுத்தான். “அடேய்! கிழவி! எங்க ‘பிளேடு’ பட்டாளத்தைக் கூட்டி யாரோம்! கீசிட்றோம் இரு கீசி! கிரிணிப் பழத்தைக் கீசற மாதிரி!”  “சரிதான் போங்கடா!” என்று அப்புசாமியும் ஓடுகிற ரெளடிகளைப் பார்த்து வீரம் உதிர்த்தார்.

 

        ‘கிண்’ என்று அவர் முதுகில் போகிற போக்கில் ஒரு குத்து விட்டுவிட்டு ஒரு ரெளடி, “போடா! வெறும் பயலே! கெயவி என்னாமா சண்டை போட்டாள்! நாங்கள் ஓடறது அவளுக்காகத்தான்,” என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டான்.அப்புசாமியின் முதுகைச் சீதாப்பாட்டி தடவி விட்டாள். “கொஞ்சம் ‘·பொமண்டேஷன்’ கொடுத்தால் சரியாகிவிடும். டோன்ட் வொர்ரி!” என்ற பாட்டி, “நாம் இங்கிருந்து உடனடியாகப் போயாக வேண்டும், ‘பிளேடு பட்டாளம்’ வருவதற்குள்! கூப்பிடுங்கள் உங்கள் மாணிக்கத்தை!” என்றாள்.“மாணிக்கமாவது! மரகதமாவது! அந்தத் தடிப்பயல் எங்கே தொலைந்தானோ? ‘பிளேடு பட்டாளம்’ வந்து… ஐயோ, நான் இப்படித்தான் சாக வேண்டுமா?” அப்புசாமி புலம்பினார்.“மாணிக்கம்! மாணிக்கம்! வாடா, வாடா!” என்று அலறினார்.“யூ டாக் ஸில்லி!” என்றாள் சீதாப்பாட்டி. “மாணிக்கம் வராவிட்டால் என்ன? நீங்கள் ஆண்பிள்ளை தானே? யூ பி தி டிரைவர்!”“என்ன, என்ன சொல்கிறாய்? என்னை சாரதியாக ஆகச் சொல்கிறாயா? சைக்கிள் ரிக்ஷா மிதிக்கச் சொல்கிறாயா?” அப்புசாமியின் குரல் நடுங்கியது.சீதாப்பாட்டியோ குரலில் உறுதியுடன், “தட்டீஸ் தி ஒன்லி வே அவுட்! க்விக்! க்விக்! ஏறி உட்காருங்கள்! மிதியுங்கள் வண்டியை! மாணிக்கம் நிச்சயமாக வரப்போவதில்லை. அவன் வருகிறதுக்குள் பிளேடு பட்டாளம் வந்துவிடும்!”அப்புசாமி வேறு வழியின்றி சைக்கிள் ரிக்ஷா ஸீட்டில் உட்கார்ந்து மிதிக்க ஆரம்பித்தார்.“தட்ஸ் ஆல்! அவ்வளவுதான்!” இதோ ஆச்சு!” என்று சீதாப்பாட்டி பின்னால் உட்கார்ந்துகொண்டு ஊக்கப் படுத்த, வியர்க்க விறுவிறுக்க சைக்குள் ரிக்ஷாவை மிதித்துக்கொண்டு வீட்டுக்கு அப்புசாமி வந்து சேர மணி இரண்டாகி விட்டது.

 

        தொடை இரண்டும் இரண்டு டன் பாறாங்கல்லைக் கட்டிக் கொண்டதுபோல் வலித்தது.‘ஹெள டு யூ ·பீல்? கால்வலி எப்படி இருக்கிறது?” என்றால் சீதாப்பாட்டி, காலையில் வென்னீர் பொங்கப் பொங்க ஒத்தடத்துக்குத் தயார் செய்து கொண்டே.“ஜென்மத்துக்கு இனிமேல் அந்த மாணிக்கம் பயலை நம்பமாட்டேன்!”!ஹி ஈஸ் நாட் டு பி பிளேம்ட்! அவனைச் சொல்லிக் குற்றமில்லை. அவனுக்கு நீங்கள் ஒரு ரூபாய்தான் தந்தீர்கள். நான் ‘டூ ரபீஸ்’ கொடுத்தேன்! ஆகவே நான் சொன்னபடிதானே அவன் கேட்பான்?” என்றாள் சீதாப்பாட்டி.அப்புசாமிக்குக் தலை சுற்றியது. “என்ன! நீ என்ன சொல்கிறாய்!” என்றார்.சீதாப்பாட்டி தன் வழக்கமான ‘ஸ்மைலு’டன் கூறினாள். “சைக்கிள் ரிக்ஷா மாணிக்கம் உங்களிடம் ரூபாயும் வாங்கிக்கொண்டு, உங்கள் ஏற்பாட்டையும் என்னிடம் சொல்லிவிட்டான். நான் என் ‘ஷேரு’க்கு இரண்டு ரூபாய் கொடுத்து உங்கள் ட்ராமாவை மெலோட்ராமாவாகச் செய்துவிட்டேன். ‘தோஸ் ரெளடீஸ்’ வந்தார்களே, அது மாதிரி வரச் சொல்லி மாணிக்கத்திடம் ஏற்பாடு செய்தது நான்தான். நீங்கள் என்ன கூப்பிட்டாலும் மாணிக்கத்தை வரக்கூடாது என்று சொல்லிவைத்தேன். உங்களைச் சைக்கிள் ரிக்ஷா ஓட்டவைத்து விட்டேன்! சாரி! ப்ளீஸ்! ·பர் கிவ் பி!”“நாசமாய்ப் போ!” என்று அப்புசாமி சாபமிட்டார்.

by parthi   on 14 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.