LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    இயற்கை விவசாயம் Print Friendly and PDF
- நெல்

கூடுதல் நெல் மகசூல் பெறுவதற்கான உற்பத்தி முறைகள்

கூடுதல் நெல் மகசூல் பெறுவதற்கான உற்பத்தி முறைகள்

SRI நெல் நடவு செய்வதால் கிடைக்கும் பயன்கள்

மிக குறைந்த அளவு விதையை பயன்படுத்துதல்
நாற்றின் வயது குறைவு
குறுகிய காலம்
அதிக இடைவெளிவிட்டு நடவு செய்தல்
மிக குறைந்த அளவு தண்ணீர்
சராசரி மககூலை விட 3மடங்கு மகசூல் கூடுதல்
களை எடுக்க வசதி 
பூச்சி நோய் தாக்குதல் குறையும் 
செலவு குறையும்

இந்தியாவில் நெல் உற்பத்தியில் தமிழ்நாடு மாநிலம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த 4 நான்கு வருடங்களாக பருவமழை இல்லாததால் நெல்சாகுபடி செய்யும் விவசாயிகள் தண்ணீரின்றி கடும் சோதனைக்கு உள்ளாகி உள்ளனர்.

சாதாமுறையில் நெல் பயிர் செய்யம்போது நெல் நாற்றுக்களை அதிக நாட்கள் நாற்றங்காலிலேயே விட்டு வைப்பதால் நாற்றுக்களின் சக்தி வீனடிக்கப்படுகிறது. மேலும் குறுகி இடைவெளியில் நாற்றுகள் நடுவதாலும் எப்போதும் வயலில் தண்ணீர் தேங்கி இருக்குமாறு செய்வதாலும் நாற்றுக்களுக்கு போதுமான சத்துக்கள் கிடைப்பதில்லை.

இதுவே சாதாரண முறையில் நெல் சாகுபடி செய்யும் போது மகசூல் குறைவாக கிடைப்பதற்கு காரணங்கள் ஆகும்.

SRI முறையினை மடகாஸ்கர் நாட்டைச் சேர்ந்த பாதிரியார் திரு. ஹென்றி பு. லௌலானி என்பவர் 1983 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினால் தற்போது உலகில் உள்ள 15 நாடுகளிலுள்ள விவசாயிகள் ஆராய்ச்சி நிறுவனங்களும் SRI
முறையை பயன்படுத்தி அதிக மகசூல் எடுத்து வருகிறார்கள்.

சாதாமுறையை விட மககூல் 9முதல் 10 டன் மகசூல் கூடுதலாகவும் எடுத்து இருக்கிறார்கள்

பட்டம் புரட்டாசி, ஐப்பசி
விதையின் அளவு 3. 500 கிலோ - ஏக்கர்

நாற்றங்கால் தயாரித்தல் 
ஒரு ஏக்கருக்கு ஒரு சென்ட் நாற்றங்கால் போதுமானது 
நாற்றங்கால் நடவு வயலுக்கு அருகாமையில் இருக்க வேண்டும். பாலுத்தின் சீட்டில் 3 அடி அகலம் 10 நீளம் உள்ள பாலுத்தீன் சீட்டிலும் போடலாம். மக்கிய தொழுவுரத்தில் மண் கலந்து 4 இஞ்சு உயரம் அமைத்து அதில் நெல் விதையை முதல்நாளே ஊறவைத்து விதைநேர்த்தி செய்து விதைத்து தொழுவுரத்தில் விதையை மூடி விடலாம்

விதைநேர்த்தி முதல் நாள் ஒரு கிலோ விதை நெல்லில் 200 கிராம் அசோஸ்பைரில்லம். 200 கிராம் பஸ்போபாக்டீரியாவை ஆரிய அரிசி வடிகஞ்சி 200 மில்லியில் விதையை கலந்து விதைநேர்த்தி செய்து நிழலில் உளர்த்தி விதைக்க வேண்டும்.

நடவு வயலை 
3- 4 முறை நிலத்தை சமம் செய்யவேண்டும்
வயல் பராமரிப்பு முறை தக்கைப்பூண்டு, ஆவாரை, கொளுஞ்சி,கொள்ளு, எருக்கு வேப்பஇலை இவைகளைப் போட்டு வயலில் நன்றாக மிதிக்க வேண்டும் மறுபடியும் சமன் செய்ய வேண்டும்

அடியுரம்
பசுந்தால் உரங்களை தண்ணீர் விட்டு இரண்டு நாள் ஊறவைக்க வேண்டும் பின்னர் சகதி நன்கு சேரும் அளவிற்கு இரண்டு முறை உழவு செய்ய வேண்டும். இத்துடன் தொழுவுரம் 4 டன்போடலாம்

நடவு முறை
இரண்டு இலை உள்ள நாற்றுக்களை 12 நாட்களே ஆன நாற்றை பிடுங்கி ஒரு ஓரத்தில் நீரை தேக்கி அதில் 600 கிராம்; அசோஸ்பைரில்லம், 600 கிராம் பாஸ்போபாக்டீரியா போட்டு அதில் நாற்றின் வேர்பகுதியை நனைத்து ஒரு குத்துக்கு ஒரு நாற்று நடவு செய்ய வேண்டும்

உயிர் உரம்
2 கிலோ அசேஸ்;பைரில்லம், 2கிலோ பாஸ் போபாக்டீரியா மக்கிய தொழு எரு 50 கிலோவுடன் கலந்து வயலில் நடவு செய்த 3 ம் நாள் போடவேண்டும்.

நீர் நிர்வாகம்
நடவு செய்த 30 நாட்கள் வரை 2 செ.மீ தண்ணீர் இருந்தால் போதுமானது.

உர நிர்வாகம் நுண்ணூட்டம்
ஒரு ஏக்கருக்கு 5 கிலோ நெல் நுண்ணூட்டம் இடவேண்டு் 
களை நிர்வாகம்
22 வது நாள் முதல் களை 45 வது நாள் இரண்டாவது களை இயந்திரம் கொண்டு எடுக்க வேண்டும்.
.
பூச்சி நிர்வாகம்
அசுவிணி அறிகுறி
நெல் தோகையின் அடிப் பகுதியில் இருக்கும்.
கட்டுப்படுத்தும் முறை
வரப்பு ஓரப்பயிராக உளுந்து நடவு செய்து கட்டுப்படுத்தலாம்.

தண்டுத்துளைப்பான் அறிகுறி 
நெல் பயிர் கதிர் வாங்கும் சமயத்தில் இதன் தாக்குதல் அதிகரிக்கும். தண்டின் உட்பகுதியை வெட்டி விடுவதால் நுனி குருத்துப் பகுதி வெளியில் வந்து விடும்.
கட்டுப்படுத்தும் முறை 
4 சிசி டிரைக்கோகிரம்மா ஒட்டுண்ணி 30ம் நாள் கட்ட வேண்டும்

தாவர இலைச்சாறு 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கவும்
பஞ்சகவ்யாவை தண்ணீர் பாயும் போது ஊற்றி விடலாம் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 200 மில்லி பஞ்சகவ்யா என்ற விகிதத்தில் கலந்து ஊற்றலாம். 
நோயின் தாக்குதல் தென்பட்டால் சூடோமோனஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 கிராம் என்ற விகிதத்தில் கலந்து அடிக்கலாம்

குறிப்பு : அடியுரமாக வேப்பம் புண்ணாக்கு 25 கிலோவை போட வேண்டும்.

by Swathi   on 30 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இயற்கைவழி வெங்காயம் - தொடர்புக்கு இயற்கைவழி வெங்காயம் - தொடர்புக்கு
தேங்காயில் ரெட்டிப்பு லாபம்தரும் கொப்பரை தேங்காயில் ரெட்டிப்பு லாபம்தரும் கொப்பரை
ஆள் பற்றாக்குறையை போக்க ஆமணக்கு பயிரிடலாமா? ஆள் பற்றாக்குறையை போக்க ஆமணக்கு பயிரிடலாமா?
பயிர்களில் விளைச்சல் தரத்தினை மேம்படுத்தும் பொட்டாஷ் பாக்டீரியா பயிர்களில் விளைச்சல் தரத்தினை மேம்படுத்தும் பொட்டாஷ் பாக்டீரியா
மரபு ரக நெல்வகைகளும் மக்களிடம் கொண்டுசெல்லும் முறையும் மரபு ரக நெல்வகைகளும் மக்களிடம் கொண்டுசெல்லும் முறையும்
இயற்கை வளங்கள் நீர்நிலைகள் பாதுகாப்பில் கிராமசபை - 'நல்ல சோறு' ராஜமுருகன் இயற்கை வளங்கள் நீர்நிலைகள் பாதுகாப்பில் கிராமசபை - 'நல்ல சோறு' ராஜமுருகன்
நீர்வளமும் நிலவளமும் | Wealth of Water and Land, Let's talk Agriculture, Session 7-Part-2 நீர்வளமும் நிலவளமும் | Wealth of Water and Land, Let's talk Agriculture, Session 7-Part-2
செலவில்லாமல் இயற்கை விவசாயம் செய்வது எப்படி? - திரு. காளி | Zero budget forming, Part-3 செலவில்லாமல் இயற்கை விவசாயம் செய்வது எப்படி? - திரு. காளி | Zero budget forming, Part-3
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.