LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF

பழைய சாதத்தின் பற்பல நன்மைகள் !!

அந்த காலத்தில் பழைய சாதத்தை தூக்குல கட்டிக்கிட்டு 2 சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், குச்சிக்கருவாடு வச்சி சாப்பிடுற சுகம் இருக்கே....... அடஅடடா.... அமிர்தம் கூட இவ்வளவு சுவையா இருக்குமான்னு தெரியாது. 

முதல் நாள் இரவு சாதத்தில் நீருற்றி மறுநாள் சாப்பிடும் சாதத்திற்கு பழைய சாதம் என்று பெயர். 

இந்த சாதத்தில் பி6 மற்றும் பி12 விட்டமின்கள் என ஏராளமான சத்துக்கள் இருக்கிறது. மேலும் சிறுகுடலுக்கு நன்மை செய்யும் (மில்லியன் அல்ல) ட்ரில்லியன் ஆப் பாக்டீரியாஸ் பெருகி நம் உணவுப் பாதையை ஆரோக்கியமாக வைத்திருக்‌க உதவுகிறது.கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும் போது நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்த காய்ச்சலுமே நம்மை அணுகாது.

பழைய சாதம் செய்வது எப்படி?

பழைய சாதத்திற்கு மிகவும் சிறந்தது "ப்ரௌன் ரைஸ்" என்று அழைக்கப்படும் "கைக்குத்தல்" அரிசி தான். ஒரு கல் சட்டி அல்லது மண் சட்டியில் சிறிது சாதத்தைப் போட்டு, சுத்தமான தண்ணீரை நிறைய ஊற்றவும். மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து மோர் சிறிது சேர்த்து, சின்னவெங்காயம் சேர்த்து குடிக்க ஜில்லென்று இருக்கும். மதிய உணவு நேரம் வரை டீ, காபி எதுவும் தேவையில்லை. ஆதலால் பழைய சாதம் சாப்‌பிடலா‌ம், ஆரோக்கியமாக இருக்கலாம்.

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய விஞ்ஞானி ப்ரதீப், பழைய சாதத்தின் மகத்துவம் குறித்து கூறியதாவது, 

காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கும். இரவே தண்ணீர் ஊற்றி மூடிவைப்பதால் இலட்சகணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.

மறுநாள் இதை சாப்பிடும் போது உடல்சூட்டைத் தணிப்பதோடு குடல் புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும். அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்சத்து மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்க செய்கிறது.

இந்த பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது என்கிறார்.

மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.

அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகிவிடும். 

அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்துவர ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைத்தது.


எல்லாவற்றிக்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அரு‌‌கில் கூட வராது.

by Swathi   on 08 Mar 2014  13 Comments
Tags: Pazhaya Sadam   Palaya Satham   பழைய சாதம்   பழையசாதம் நன்மைகள்   பழைய சாதம் பயன்கள்        

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
பழைய சாதத்தின் பற்பல நன்மைகள் !! பழைய சாதத்தின் பற்பல நன்மைகள் !!
கருத்துகள்
08-May-2017 21:45:25 நவீன் kumar said : Report Abuse
இது உடல் எடையை அதிகரிக்குமா ,
 
06-Apr-2017 22:22:18 Jothi said : Report Abuse
What is the nutritive values of pazhaya sorry.like Calories,carbohydrate, protein ,fat
 
27-Jul-2016 18:36:30 RM.JAYANTHI said : Report Abuse
வெரி குட் ஆர்டிகிள்
 
27-Jul-2016 18:30:02 TENNISRAMASWAMY said : Report Abuse
ஒன்ஸ் திஸ் வாஸ் தி மெயின் டிஷ் இந்த போர் பாமிலிஸ் ஆப் சவுத் இந்தியா இந்த தி மாடர்ன் டயஸ் தி பெஒப்லே ஹாட் கோனே ஓவர் டு எஙகிய போவ்ட் அண்ட் இன்ஹேரிடேட் வரிவ்ஸ் டிசீஸ்ஸ். இ ஆஃப்ரேசிட்டே THE ப்ரெசென்ட் RELEVATION
 
11-Apr-2016 08:47:57 Sivaguru said : Report Abuse
Palaya சதாம் உடல் இடையை அதிகரிகுமா ?
 
26-Aug-2015 02:59:58 மா.selvamurugan said : Report Abuse
எனக்கு மிகவும் பிடிக்கும்
 
12-Sep-2014 11:46:42 Thirunavukkarasu said : Report Abuse
செம கருத்து பா
 
12-Sep-2014 11:46:41 Thirunavukkarasu said : Report Abuse
செம கருத்து பா
 
05-Apr-2014 14:23:21 anithasundar said : Report Abuse
எனக்கும் ரொம்ப பிடிக்கும்......
 
08-Mar-2014 11:14:47 venkatesh said : Report Abuse
உண்மை ceieti
 
08-Mar-2014 11:14:46 venkatesh said : Report Abuse
உண்மை ceieti
 
08-Mar-2014 11:14:46 venkatesh said : Report Abuse
உண்மை ceieti
 
08-Mar-2014 11:14:43 venkatesh said : Report Abuse
உண்மை ceieti
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.