LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF
- ஜி.ராஜேந்திரன்

பல்லாங்குழியாடிய பல்லவி

லச்சுமிப் பாட்டியும் பல்லவிப் பேத்தியும் பல்லாங்குழி வௌயாடிட்டு இருந்தாங்க. பல்லவி ஒரு குழியிலுள்ள காய்களை வாரி அடுத்துள்ள குழிகளிலெ ஒவ்வொண்ணா போட்டுட்டே வந்தா. எல்லா குழியிலெயும் காய்களைப் போட்டா ஆனா லாபமா எதுவும் கெடக்கல.

அடுத்த லச்சுமிப் பாட்டி வௌயாடினாங்க. ஒரு குழியிலுள்ள காய்களை வாரி பக்கத்திலிருக்கிற குழிகளிலெ ஒவ்வொண்ணா போட்டிட்டே வந்தாங்க. பாட்டிக்கு அடிச்சது யோகம். நெறய காய்கள் லாபமா கெடச்சுது.

எனக்கு நெறயக் கெடச்சிருச்சேண்ணு பொக்க வாயைக் காட்டிச் சிரிச்சாங்க. பாட்டியோட காதிலெ கெடந்த தோடு இப்படியும் அப்படியும் ஆடிச்சு.

அடுத்தது பல்லவி ஆடினா. அவளுக்கு ஒரு குழியிலுள்ள காய்க லாபமா கெடச்சுது. ஆனால் பாட்டிக்கு கெடச்சதவிட பாதிதான் இருக்கும்.

எனக்கு இந்தக் குழித தான் கெடக்கணுமா அப்படிண்னு செல்லமா சிணுக்கிகிட்டா.


அந்த நேரத்திலெ வெளியிலெ மழ பேஞ்சுது. ஹைய்யா மழ வருது அப்படீண்ணு வௌயாட்டி பாதியிலெ நிறுத்தியிட்டு வாசலுக்கு ஓடினா. ஏரவாரத்ததிலெ விழற தண்ணி கையால தட்டி செதறடிச்சு வௌயாடினா.

பாட்டியோ ஏய்பல்லவி இந்தக் காய்களையெல்லாம் டப்பாவிலெ போட்டுட்டு பல்லாங்குழி பலகை கவிழ்த்து வை. நான் துணியெடுக்கப்போறேன் அப்படீண்ணு போய்ட்டாங்க.

துணியெல்லாம் எடுத்துட்டு வந்தவங்க "நல்ல மழயாயிருக்கே'' இந்த அண்டாவைக் கொண்டு போய் மழ விழற எடத்திலெ வை'' அப்படீண்ணு பல்லவிகிட்ட சொன்னாங்க. பல்லவியும் ஓடி வந்து அண்டாவை எடுத்து வாசலுக்குப் போனா. தண்ணி விழற எடமாப் பாத்து வச்சா. மழத்தண்ணீலெ வௌயாடித் தொடங்கினா.

ஆச்சு அர மணி நேரமாச்சு.

அண்டா நெறஞ்சிருக்கும் எடுத்து உள்ள வக்கலாம் அப்படீண்ணு பாட்டி வெளிய வந்து பாத்தா அண்டாவிலெ ஒரு சொட்டு தண்ணியில்லே.

ஏன். அண்டா ஓட்டைண்ணு நெனக்கிறீங்களா? இல்லல்ல. அண்டா நல்ல அண்டாதான். பின்ன ஏன் தண்ணீயே இல்லை.

பல்லாங்குழியாடற பலகெ கவிழ்த்து வக்கச் சொன்னா பல்லவி அண்டாவை கவிழ்த்து வச்சா அதுல தண்ணி நெறயுமா?

அண்டாவை கவிழ்த்து வச்சதை நெனச்சா பல்லவிக்கு இப்பவும் சிரிப்பு பொத்துக்கிட்டு வரும்.

by Swathi   on 30 Mar 2015  0 Comments
Tags: பல்லாங்குழி   பல்லவி   Pallanguzhi   Pallavi           
 தொடர்புடையவை-Related Articles
பல்லாங்குழியாடிய பல்லவி பல்லாங்குழியாடிய பல்லவி
பல்லாங்குழி விளையாட்டு பல்லாங்குழி விளையாட்டு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.