LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அமைக்க தமிழக முதல்வர் உத்தரவு !!

தமிழகத்தில் 2,323 ஊராட்சிகளில், கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அமைக்க, தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறபித்துள்ளார். 

 

கடந்த 2005ம் ஆண்டு, தமிழகத்தில், உலக வங்கி நிதியுதவியுடன் புது வாழ்வு திட்டம் துவக்கப்பட்டது. இத்திட்டத்தின் சிறப்பான செயல்பாட்டை தொடர்ந்து, 2012 13ல், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் துவக்கப்பட்டது. தமிழகத்தில், ஊரகப் பகுதிகளை உள்ளடக்கிய, 31 மாவட்டங்களில், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு, ஐந்து முதல், ஏழு ஆண்டுகளுக்கு, நீடித்த தன்மையுடைய, வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவது, இயக்கத்தின் நோக்கம். மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது. முதல் கட்ட மாவட்டங்களான, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருச்சிராப்பள்ளி, வேலூர், விழுப்புரம், ஆகிய மாவட்டங்களில் உள்ள, 2,323 ஊராட்சிகளில், கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அமைக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். ஆய்வுகள் மூலம் ஏழை, மிகவும் ஏழை, நலிவடைந்த பிரிவினர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கண்டறியப்பட்டு, நிதியுதவி வழங்க, இச்சங்கங்களுக்கு சமுதாய முதலீட்டு நிதியாக ஊராட்சி ஒன்றுக்கு 10 லட்சம் வீதம் 232 கோடியே 30 லட்சம் நிதியை முதல்வர் ஒதுக்கி உள்ளார்.

by Swathi   on 18 Oct 2013  2 Comments
Tags: வறுமை ஒழிப்பு சங்கம்   வறுமை ஒழிப்பு   232 கோடி   Panchayat Association   Poverty   Tamilnadu Panchayat     
 தொடர்புடையவை-Related Articles
ஏழ்மை ஏழ்மை
உலக வறுமை ஒழிப்பு தினம் - அக்டோபர் 17 உலக வறுமை ஒழிப்பு தினம் - அக்டோபர் 17
கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அமைக்க தமிழக முதல்வர் உத்தரவு !! கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அமைக்க தமிழக முதல்வர் உத்தரவு !!
உலக வறுமை ஒழிப்பு தினம் - அக்டோபர் 17 உலக வறுமை ஒழிப்பு தினம் - அக்டோபர் 17
கருத்துகள்
21-Aug-2020 06:58:43 பிரதீப்ராஜ் said : Report Abuse
மதிப்பிற்குறியிர் நான் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் வட்டம் இளந்துரை கிராமத்தில் இயங்கி வரும் கிராம ஒழிப்பு சங்கம் மூலமாக பொதுமக்கள் யாரும் பயன்பெறவில்லை மேலும் இச்சங்கத்தினை 1 கையகப்படுத்தி வைத்துள்ளார் மேலும் இச்சங்கத்தின் மூலம் வரும் சலுகைகள் அனைவருக்கும் கிடைக்கவில்லை
 
18-Apr-2016 10:06:50 சுந்தா்ராஜ் said : Report Abuse
நான் புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை ஒன்றியம், திருமலைராய சமுத்திரம் ஊராட்சியைச் சோ்ந்தவன். இங்கு இதுவரை இளைஞர்களுக்கு புதுவாழ்வு திட்டத்தின் கீழ் எந்த விதமான பயிற்சியும் அளிக்கப்படவில்லை. அது பற்றிய தகவலும் கிடைக்கப்பெறவில்லை.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.