LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கல்லாடம்

பரத்தையிற் பிரிவு உரைத்தல்

பெருநிலத் தேவர்கள் மறைநீர் உகுப்ப
மற்றவர் மகத்துள் வளர்அவி மாந்த
விடையோன் அருச்சனைக்கு உரிமையன் முன்னவன்
அன்னவன் தன்னுடன் கடிகைஏழ் அமர
அன்றியும் இமையவர் கண்எனக் காட்ட     (5)

 

ஆயிரம் பணாடவி அரவுகடு வாங்க
தேவருண மருந்துடல் நீடநின் றுதவ
உடல்முனி செருவினர் உடல்வழி நடப்ப
நாரணன் முதலாம் தேவர்படை தோற்ற
தண்மதிக் கலைகள் தானற ஒடுங்க     (10)

 

எறிந்தெழும் அரக்கர் ஏனையர் மடிய
மறையவன் குண்டம் முறைமுறை வாய்ப்ப
அவன்தரும் உலகத்து அருந்தொழில் ஓங்க
பாசுடல் உளைமா ஏழணி பெற்ற
ஒருகால் தேர்நிறைந்து இருள்உடைத்து எழுந்த     (15)

 

செங்கதிர் விரித்தசெந் திருமலர்த் தாமரைப்
பெருந்தேன் அருந்திஎப் பேர்இசை அனைத்தினும்
முதல்இசைச் செவ்வழி விதிபெறப் பாடிஅத்
தாதுடல் துதைந்தமென் தழைச்சிறை வண்டினம்
பசுந்தாள் புல்இதழ்க் கருந்தாள் ஆம்பல்     (20)

 

சிறிதுஉவா மதுவமும் குறைபெற அருந்தி அப்
பாசடைக்கு உலகவர் பயிலாத் தாரியை
மருளொடு குறிக்கும் புனல்அணி ஊர!
தானவர்க்கு உடைந்து வானவர் இரப்ப
உழல்தேர் பத்தினன் மகவுஎன நாறி     (25)

 

முனிதழற் செல்வம் முற்றிப் பழங்கல்
பெண்வரச் சனகன் மிதிலையில் கொடுமரம்
இறுத்து அவன் மகட்புணர்ந்து எரிமழு இராமன்
வில்கவர்ந்து அன்னைவினை உள்வைத்து ஏவ
துணையும் இளவலும் தொடரக் கான்படர்ந்து     (30)

 

மாகுகன் நதிவிட ஊக்கி வனத்துக்
கராதி மாரீசன் கவந்தனுயிர் மடித்து
இருசிறைக் கழுகினர்க்கு உலந்தகடன் கழித்து
எறிவளி மகனைநட் டேழு மரத்தினுக்கு
அரிக்கு கருங்கடற்கு ஒரோஒரு கணைவிடுத்து     (35)

 

அக்கடல் வயிறுஅடைத்து அரக்கனுயிர் வௌவி
இலங்கைஅவ் அரக்கற்கு இளையோன் பெறுகஎனத்
தமதூர் புகுந்து முடிசுமந் தோர்க்கும்
நான்முகத் தவர்க்கும் இருபால் பகுத்த
ஒருநுதல் கண்ணவன் உறைதரு கூடல்     (40)

 

தெளிவேற் கண்குறுந் தொடியினர் காணின்
நின்பால் அளியமும் நீங்கி
இன்பும்இன்று ஒழிக்கும்எம் கால்தொடல் சென்மே.    (43)

by Swathi   on 19 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.