LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- எட்டுத்தொகை

பரிபாடல்-7

 

20. வையை
(பருவ வலின்கண் தலைமகளது ஆற்றாமை கண்டு, தூது விடச் சென்ற பாணன் தலைமகற்குக் கார்ப்
பருவமும் வையை நீர் விழவணியும் கூறியது)
பாடியவர் :: நல்லந்துவனார்
இசையமைத்தவர் :: நல்லச்சுதனார்
பண் :: காந்தாரம் 
புதுப் புனலையும் பல வகை மணங்களையும் உடன்கொண்டு வையை வருதல்
கடல் குறைபடுத்த நீர் கல் குறைபட எறிந்து,
உடல் ஏறு உருமினம் ஆர்ப்ப, மலை மாலை
முற்றுபு முற்றுபு, பெய்து--சூல் முதிர் முகில்--
பொருது இகல் புலி போழ்ந்த பூ நுதல் எழில் யானைக்
குருதிக் கோட்டு அழி கறை தெளி பெறக் கழீஇயின்று. 5
காலைக் கடல் படிந்து, காய் கதிரோன் போய வழி
மாலை மலை மணந்து, மண் துயின்ற கங்குலான்
வான் ஆற்றும் மழை தலைஇ; மரன் ஆற்றும் மலர் நாற்றம்,
தேன் ஆற்றும் மலர் நாற்றம், செறு வெயில் உறு கால
கான் ஆற்றும் கார் நாற்றம், கொம்பு உதிர்த்த கனி நாற்றம்; 10
தான், நாற்றம் கலந்து உடன் தழீஇ வந்து, தரூஉம், வையை.
புதுப் புனலாட வைகறையில் மைந்தரும் மகளிரும் சென்ற வசை
தன் நாற்றம் மீது, தடம் பொழில் தான், யாற்று
வெந் நாற்று வேசனை நாற்றம் குதுகுதுப்ப,
ஊர்ஊர் பறை ஒலி கொண்டன்று; உயர் மதிலில்
நீர் ஊர் அரவத்தால் துயில் உணர்பு எழீஇ, 15
திண் தேர்ப் புரவி வங்கம் பூட்டவும்,
வங்கப் பாண்டியில் திண் தேர் ஊரவும்,
வயமாப் பண்ணுந மதமாப் பண்ணவும்,
கயமாப் பேணிக் கலவாது ஊரவும்,
மகளிர் கோதை மைந்தர் புனையவும், 20
மைந்தர் தண் தார் மகளிர் பெய்யவும்,
முந்துறல் விருப்பொடு முறை மறந்து அணிந்தவர்,
ஆடுவார் பொய்தல் அணி வண்டு இமிர் மணல்
கோடு ஏறு எருத்தத்து இரும் புனலில் குறுகி,
மாட மறுகின் மருவி மறுகுற, 25
கூடல் விழையும் தகைத்து--தகை வையை.
தலைமகனது காதற்பரத்தையைத் தோழியர் கண்ட காலத்து நேர்ந்த நிகழ்ச்சி
புகை வகை தைஇயினார் பூங் கோதை நல்லார்,
தகை வகை தைஇயினார் தார்;
வகைவகை தைஇயினார் மாலை, மிகமிகச்
சூட்டும் கன்ணியும் மோட்டு வலையமும் 30
இயல் அணி, அணி நிற்ப ஏறி; அமர் பரப்பின்
அயல் அயல் அணி நோக்கி--ஆங்கு ஆங்கு வருபவர்
இடு வளை ஆரமோடு ஈத்தான் உடனாக,
கெடு வளை பூண்டவள் மேனியில் கண்டு,
நொந்து, 'அவள் மாற்றாள் இவள்' என நோக்க, 35
தலைமகனது முகமாற்றமும், கூட்டத்துள் பரத்தை மறைதாம்
தந்த கள்வன் சமழ்ப்பு முகம் காண்மின்;
செருச் செய்த வாளி சீற்றத்தவை அன்ன
நேர் இதழ் உண்கணார் நிரை காடாக,
ஓடி ஒளித்து, ஒய்யப் போவாள் நிலை காண்மின்.
தன்னைத் தொடர்ந்த ஆயத்தாரோடு பரத்தை உரைத்தல்
என--ஆங்கு, 40
ஒய்யப் போவாளை, 'உறழ்த்தோள் இவ் வாணுதல்'
வையை மடுத்தால் கடல் எனத் தெய்ய
நெறி மணல் நேடினர் செல்ல, சொல் ஏற்று,
'செறி நிரைப் பெண்' --வல் உறழ்பு--'யாது தொடர்பு?' என்ன
மறலினாள், மாற்றாள் மகள். 45
தலைமகளின் திகைப்பு
வாய் வாளா நின்றாள்,
செறிநகை சித்தம் திகைத்து.
ஆயத்தார் பரத்தையை நோக்கி வைது உரைத்தல்
ஆயத்து ஒருத்தி, அவளை, 'அமர் காமம்
மாயப் பொய் கூட்டி மயக்கும் விலைக் கணிகை!
பெண்மைப் பொதுமைப் பிணையிலி! ஐம் புலத்தைத் 50
துற்றவ துற்றும் துணை இதழ் வாய்த் தொட்டி!
முற்றா நறு நறா மொய் புனல் அட்டி,
காரிகை நீர் ஏர் வயல், காமக் களி நாஞ்சில்,
மூரி தவிர முடுக்கு முது சாடி!
மட மதர் உண்கண் கயிறாக வைத்துத் 55
தட மென் தோள் தொட்டு, தகைத்து, மட விரலால்
இட்டார்க்கு யாழ் ஆர்த்தும் பாணியில், எம் இழையைத்
தொட்டு, ஆர்த்தும் இன்பத் துறைப் பொதுவி! கெட்டதைப்
பொய்தல் மகளிர் கண் காண இகுத்தந்து, இவ்
வையைத் தொழுவத்துத் தந்து, வடித்து, இடித்து, 60
மத்திகை மாலையா மோதி, அவையத்துத்
தொடர்ந்தேம்--எருது தொழில் செய்யாது ஓட
விடும் கடன் வேளாளர்க்கு இன்று-படர்ந்து, யாம்,
தன் மார்பம் தண்டம் தரும் ஆரத்தாள் மார்பும்,
நின் மார்பும், ஓர் ஒத்த நீர்மைய கொல்?' என்னாமுன்-- 65
பரத்தை ஏசுதலைக் கண்ட முதுமகளிர் கூற்று
தேடினாள் ஏச, சில மகளிர் மற்று அதற்கு
ஊடினார், வையையகத்து,
'சிந்திக்க தீரும் பிணியாட் செறேற்க;
மைந்து உற்றாய், வெஞ் சொல்; மட மயிற் சாயலை
வந்திக்க வார்' என --- 'மனத் தகக நோய் இது; 70
பரத்தையின் பதில் உரை
வேற்றாரை வேற்றார் தொழுதல் இளிவரவு;
போற்றாய் காண், அன்னை! புரையோய்! புரை இன்று,
மாற்றாளை மாற்றாள் வரவு.'
தலைவி கூற்று
'அ... சொல் நல்லவை நாணாமல்
தந்து முழவின் வருவாய்! நீ வாய்வாளா; 75
எந்தை எனக்கு ஈத்த இடு வளை, ஆரப் பூண்
வந்த வழி நின்பால் மாயக் களவு அன்றேல்,
தந்தானைத் தந்தே, தருக்கு.'
பரத்தையின் மறுமொழி
மாலை அணிய விலை தந்தான்; மாதர் நின்
கால சிலம்பும் கழற்றுவான்; சால, 80
அதிரல் அம் கண்ணி! நீ அன்பன் எற்கு அன்பன்;
கதுவாய்; அவன் கள்வன்; கள்வி நான் அல்லேன்.'
என ஆங்கு--
கண்டார் சிலருடைய கூற்று
பரத்தையை நோக்கி உரைத்தல்
வச்சிய மானே! மறலினை மாற்று; உமக்கு
நச்சினார் ஈபவை நாடு அறிய நும்மவே. 85
தலைமகளுக்கு முனிவி நீங்க உரைத்தல்
சேக்கை இனியார்பால் செல்வான் மனையாளால்
காக்கை கடிந்து ஒழுகல் கூடுமோ? கூடா;
தகவுடை மங்கையர் சான்றாண்மை சான்றார்
இகழினும், கேள்வரை ஏத்தி இறைஞ்சுவார்;
நிகழ்வது அறியாது--நில்லு நீ, நல்லாய்! 90
'மகளிரை மைந்துற்று அமர்பு உற்ற மைந்தர்
அகலம் கடிகுவேம்' என்பவை யார்க்கானும்
முடி பொருள் அன்று--முனியல்!
கட வரை நிற்குமோ காமம்? கொடி இயலாய்!'
வையை நீர் மலர்களுடன் வந்து கூடல் மதிலின்
கருங்கை வழியே பாயும் காட்சி
என--ஆங்கு 95
இன்ன துணியும் புலவியும் ஏற்பிக்கும்,
தென்னவன் வையைச் சிறப்பு,
கொடி இயலார் கைபோல் குவிந்த முகை,
அரவு உடன்றவைபோல் விரிந்த குலை,
குடை விரிந்தவை போலக் கோலும் மலர், 100
சுனை கழிந்து தூங்குவன நீரின் மலர்,
சினை விரிந்து உதிர்ந்த வீ, புதல் விரி போதொடும்,
அருவி சொரிந்த திரையின் துரந்து;
நெடு மால் கருங்கை நடு வழிப் போந்து--
கடு மா களிறு அணைத்துக் கைவிடு நீர் போலும்-- 105
நெடு நீர் மலி புனல், நீள் மாடக் கூடல்
கடி மதில் பெய்யும் பொழுது.
பிரிந்தாரைக் கூட்டுவித்தல் வையைக்கு இயல்பு
நாம் அமர் உடலும் நட்பும், தணப்பும்,
காமமும் கள்ளும் கலந்து உடன் பாராட்ட,
தாம் அமர் காதலரொடு ஆடப் புணர்வித்தல் 110
பூ மலி வையைக்கு இயல்பு.
21. செவ்வேள்
பாடியவர் :: நல்லச்சுதனார்
இசையமைத்தவர் :: கண்ணகனார்
பண் :: காந்தாரம் 
கடவுள் வாழ்த்து
பரங்குன்றத்துப் பெருமானைப் பரவுதல்
ஊர்ந்ததை--எரி புரை ஓடை இடை இமைக்கும் சென்னி,
பொரு சமம் கடந்த புகழ் சால், வேழம்.
தொட்டதை--தைப்பு அமை சருமத்தின், தாள் இயை தாமரை
துப்பு அமை துவர் நீர்த் துறை மறை அழுத்திய,
வெரிநத் தோலொடு, முழு மயிர் மிடைந்த, 5
வரி மலி அர உரி வள்பு கண்டன்ன,
புரி மென் பீலிப் போழ் புனை அடையல்.
கையதை--கொள்ளாத் தெவ்வர் கொள் மாமுதல் தடிந்து,
புள்ளொடு பெயரிய பொருப்புப் புடை திறந்த வேல்;
பூண்டதை--சுருளுடை வள்ளி இடை இடுபு இழைத்த 10
உருள் இணர்க் கடம்பின் ஒன்ணுபடு கமழ் தார்.
அமர்ந்ததை--புரையோர் நாவில் புகழ் நலம் முற்றி,
நிரை ஏழ் அடுக்கிய நீள் இலைப் பாலை
அரை வரை மேகலை, அளி நீர்ச் சூழி,
தரை விசும்பு உகந்த தண் பரங்குன்றம். 15
'குன்றத்து அடி உறை இயைக!' எனப் பரவுதும்--
வென்றிக் கொடி அணி வெல்வ! நிற் தொழுது.
பரங்கின்றின்மேல் ஓவியத்தின் அழகு போன்ற காட்சிகள்
சுடு பொன் ஞெகிழத்து முத்து அரி சென்று ஆர்ப்ப,
துடியின் அடி பெயர்த்து, தோள் அசைத்துத் தூக்கி,
அடு நறா மகிழ் தட்ப ஆடுவாள் தகைமையின், 20
நுனை இலங்கு எ·கெனச் சிவந்த நோக்கமொடு
துணை அணை கேள்வணைத் துனிப்பவள் நிலையும்;
நிழல் காண் மண்டிலம் நோக்கி,
அழல் புனை அவிர் இழை திருத்துவாள் குறிப்பும்;
பொதிர்த்த முலையிடைப் பூசிக் சந்தனம் 25
உதிர்த்து, பின் உற ஊட்டுவாள் விருப்பும்;
பல் ஊழ் இவை இவை நினைப்பின், வல்லோன்
ஓவத்து எழுது எழில் போலும்--மா தடிந்-
திட்டோய்! நின் குன்றின்மிசை.
குன்றத்தில் வேறுபட்ட பல ஒலிகள் ஒருங்கு இசைத்தல்
மிசை படு சாந்தாற்றி போல, எழிலி 30
இசை படு பக்கம், இரு பாலும் கோலி,
விடு பொறி மஞ்ஞை பெயர்பு உடன் ஆட;
விரல் செறி தூம்பின் விடு துளைக்கு ஏற்ப,
முரல் குரற் தும்பி அவிழ் மலர் ஊத;
யாணர் வண்டினம் யாழ் இசை பிறக்க; 35
பாணி முழவு இசை அருவி நீர் ததும்ப;
ஒருங்கு பரந்தவை எல்லாம் ஒலிக்கும்-
இரங்கு முரசினான் குன்று.
சுனை நீரில் பாய்ந்து ஆடிய காதலர்
தாழ் நீர் இமிழ் சுனை நாப்பண் குளித்து, அவண்
மீ நீர் நிவந்த விறலிழை, ' கேள்வனை 40
வேய் நீர் அழுந்து தன் கையின் விடுக என,
பூ நீர் பெய் வட்டம் எறிய, புணை பெறாது
அரு நிலை நீரின் அவள் துயர் கண்டு,
கொழுநன் மகிழ் தூங்கி, கொய் பூம் புனல் வீழ்ந்து,
தழுவும் தகை வகைத்து--தண் பரங்குன்று. 45
குன்றத்தில் பலவகை மணத்துடன் வரும் காற்றுக்கள்
வண்டு ஆர் பிறங்கல் மைந்தர் நீவிய
தண் கமழ் சாந்தம் தைஇய வளியும்,
கயல் புரை கண்ணியர் கமழ் துகள் உதிர்த்த
புயல் புரை கதுப்பகம் உளரிய வளியும்,
உருள்இணர்க் கடம்பின் நெடுவேட்கு எடுத்த 50
முருகு கமழ் புகை நுழைந்த வளியும்,
அசும்பும் அருவி அரு விடர்ப் பரந்த-
பசும் பூண் சேஎய்!-நின் குன்றம் நன்கு உடைத்து.
சீர்க்கு இசைய ஆடுபவளது மேனியழகும் கண்ணழகும்
கண் ஒளிர் திகழ் அடர், இடுசுடர் படர் கொடி மின்னுப் போல்,
ஒண் நகை தகை வகை நெறிபெற இடைஇடை இழைத்து யாத்த 55
செண்ணிகைக் கோதை கதுப்போடு இயல,
மணி மருள் தேன் மகிழ் தட்ப, ஒல்கிப்
பிணி நெகிழப் பைந் துகில், நோக்கம் சிவப்பு ஊர,
பூங் கொடி போல நுடங்குவாள், ஆங்குத் தன்
சீர்தகு கேள்வன் உருட்டும் துடிச் சீரான், 60
கோடு அணிந்த முத்து ஆரம் ஒல்க ஓசிபவள் ஏர்-
ஆடை அசைய, அணி அசைய, தான் அசையும்
வாடை உளர் கொம்பர் போன்ம்.
வாளி புரள்பவை போலும், துடிச் சீர்க்குத்
தோள் ஊழ் பெயர்ப்பவள் கண். 65
முருகவேளை வாழ்த்துதல்
மாறு அமர் அட்டவை மற வேல் பெயர்ப்பவை;
ஆறு இரு தோளவை; அறு முகம் விரித்தவை;
நன்று அமர் ஆயமோடு ஒருங்கு, 'நின் அடி உறை
இன்று போல் இயைக!' எனப் பரவுதும்-
ஒன்றார்த் தேய்த்த செல்வ! நிற் தொழுதே. 70
22. வையை
(இப்பாடலின் இடையில் சில சொற்களும் இறுதிட்ட குறியும் கிடைக்கவில்லை)
பாடியவர் :: தெரியவில்லை
இசையமைத்தவர் :: தெரியவில்லை
பண் :: தெரியவில்லை 
மழை பெய்தலும் நீர்ப் பெருக்கும்
ஒளிறு வாட் பொருப்பன் உடல் சமத்து இறுத்த
களிறு நிரைத் தவைபோல் கொண்மூ நெரிதர,
அரசு படக் கடந்த ஆனாச் சீற்றத்தவன்
முரசு அதிர்பவைபோல் முழங்கு இடி பயிற்றி,
ஒடுங்கார் உடன்றவன் தானை வில் விசை 5
விடும் கணை ஒப்பின் கதழ் உறை சிதறூஉ,
கண் ஒளிர் எ·கின் கடிய மின்னி, அவன்
வண்மைபோல் வானம் பொழிந்த நீர்-மண்மிசை
ஆனாது வந்து தொகுபு ஈண்டி, மற்று-அவன்
தானையின் ஊழி....தாவூக் கத்தின், 10
போன நிலம் எல்லாம் போர் ஆர் வயல் புகுத-
..... ......... நீக்கிப் பு.. ..... .....
கான மலைத்தரை கொன்று மணல பினறி
வான மலைத்த ......வ ........ ....... ........
..... லைத்தவ மண முரசு எறிதா, 15
தானைத் தலைத்தலை வந்து மைந்து உற்று,
மைந்தரும் மகளிரும் கரையையும் வையையும் சேர்கின்ற அழகு
பொறிவி யாற்றுறி--துவர், புகை, சாந்தம்
எறிவன எக்குவ ஈரணிக்கு ஏற்ற,
நறவு அணி பூந் துகில் நன் பல ஏந்தி,
பிற தொழின ....ம் பின்பின் தொடர; 20
செறி வினைப் பொலிந்த செம் பூங் கண்ணியர்,
ஈர் அமை வெட்சி இதழ் புனை கோதையர்,
தார் ஆர் முடியர், தகை கெழு மார்பினர்;
மாவும், களிறும், மணி அணி வேசரி,
காவு நிறையக் கரை நெரிபு ஈண்டி; 25
வேல் ஆற்றும் பொய்ம்பனின், விரை மலர் அம்பினோன்
போல், ஆற்று முன்பின் புனை கழல் மைந்தரொடு,
தார் அணி மைந்தர் தவப் பயன் ஆம் எனக்
கார் அணி கூந்தல், கயற் கண், கவிர் இதழ்,
வார் அணி கொம்மை, வகை அமை மேகலை, 30
ஏர் அணி இலங்கு எயிற்று, இலங்கு நகையவர்-
'சீர் அணி வையைக்கு அணிகொல்லோ? வையைதன்
நீர் அணி நீத்தம் இவர்க்கு அணிகொல்? எனத்
தேருநர் தேருங்கால், தேர்தற்கு அரிது காண்-
தீரமும் வையையும் சேர்கின்ற கண் கவின். 35
திருமருத முன்துறைக் காட்சிகள்
மண் கணை முழவின் இன் கண் இமிழ்விற்கு
எதிர்வ பொருவி ..... மேறு மாறு இமிழ்ப்ப,
கவர் தொடை நல் யாழ் இமிழ, காவில்
புகர் வரி வண்டினம் பூஞ் சினை இமிர,
ஊது சீர்த்தீம் குழல் இயம்ப, மலர்மிசைத் 40
தாது ஊது தும்பி தவிர்பு அல இயம்ப,
..... துடிச் சீர் நடத்த வளி நடன்
மெல் இணர்ப் பூங்கொடி மேவர நுடங்க,
ஆங்கு அவை தத்தம் தொழில் மாறு கொள்ளும்-
தீம் புனல் வையைத் திருமருத முந்துறையால். 45
கோடுளர் குரல் பொலி ஒலி துயல் இருங் கூந்தல்,
.... ..... .......புரை தீர் நெடு மென்
தோள் தாழ்பு தழை மலர் துவளா வல்லியின்,
நீள் தாழ்பு தோக்கை, நித்தில வரிச் சிலம்பு,

20. வையை
(பருவ வலின்கண் தலைமகளது ஆற்றாமை கண்டு, தூது விடச் சென்ற பாணன் தலைமகற்குக் கார்ப்பருவமும் வையை நீர் விழவணியும் கூறியது)
பாடியவர் :: நல்லந்துவனார்இசையமைத்தவர் :: நல்லச்சுதனார்பண் :: காந்தாரம் 

புதுப் புனலையும் பல வகை மணங்களையும் உடன்கொண்டு வையை வருதல்
கடல் குறைபடுத்த நீர் கல் குறைபட எறிந்து,உடல் ஏறு உருமினம் ஆர்ப்ப, மலை மாலைமுற்றுபு முற்றுபு, பெய்து--சூல் முதிர் முகில்--பொருது இகல் புலி போழ்ந்த பூ நுதல் எழில் யானைக்குருதிக் கோட்டு அழி கறை தெளி பெறக் கழீஇயின்று. 5
காலைக் கடல் படிந்து, காய் கதிரோன் போய வழிமாலை மலை மணந்து, மண் துயின்ற கங்குலான்வான் ஆற்றும் மழை தலைஇ; மரன் ஆற்றும் மலர் நாற்றம்,தேன் ஆற்றும் மலர் நாற்றம், செறு வெயில் உறு காலகான் ஆற்றும் கார் நாற்றம், கொம்பு உதிர்த்த கனி நாற்றம்; 10
தான், நாற்றம் கலந்து உடன் தழீஇ வந்து, தரூஉம், வையை.புதுப் புனலாட வைகறையில் மைந்தரும் மகளிரும் சென்ற வசைதன் நாற்றம் மீது, தடம் பொழில் தான், யாற்றுவெந் நாற்று வேசனை நாற்றம் குதுகுதுப்ப,ஊர்ஊர் பறை ஒலி கொண்டன்று; உயர் மதிலில்நீர் ஊர் அரவத்தால் துயில் உணர்பு எழீஇ, 15
திண் தேர்ப் புரவி வங்கம் பூட்டவும்,வங்கப் பாண்டியில் திண் தேர் ஊரவும்,வயமாப் பண்ணுந மதமாப் பண்ணவும்,கயமாப் பேணிக் கலவாது ஊரவும்,மகளிர் கோதை மைந்தர் புனையவும், 20
மைந்தர் தண் தார் மகளிர் பெய்யவும்,முந்துறல் விருப்பொடு முறை மறந்து அணிந்தவர்,ஆடுவார் பொய்தல் அணி வண்டு இமிர் மணல்கோடு ஏறு எருத்தத்து இரும் புனலில் குறுகி,மாட மறுகின் மருவி மறுகுற, 25
கூடல் விழையும் தகைத்து--தகை வையை.
தலைமகனது காதற்பரத்தையைத் தோழியர் கண்ட காலத்து நேர்ந்த நிகழ்ச்சி
புகை வகை தைஇயினார் பூங் கோதை நல்லார்,தகை வகை தைஇயினார் தார்;வகைவகை தைஇயினார் மாலை, மிகமிகச்சூட்டும் கன்ணியும் மோட்டு வலையமும் 30
இயல் அணி, அணி நிற்ப ஏறி; அமர் பரப்பின்அயல் அயல் அணி நோக்கி--ஆங்கு ஆங்கு வருபவர்இடு வளை ஆரமோடு ஈத்தான் உடனாக,கெடு வளை பூண்டவள் மேனியில் கண்டு,நொந்து, 'அவள் மாற்றாள் இவள்' என நோக்க, 35
தலைமகனது முகமாற்றமும், கூட்டத்துள் பரத்தை மறைதாம்
தந்த கள்வன் சமழ்ப்பு முகம் காண்மின்;செருச் செய்த வாளி சீற்றத்தவை அன்னநேர் இதழ் உண்கணார் நிரை காடாக,ஓடி ஒளித்து, ஒய்யப் போவாள் நிலை காண்மின்.தன்னைத் தொடர்ந்த ஆயத்தாரோடு பரத்தை உரைத்தல்என--ஆங்கு, 40
ஒய்யப் போவாளை, 'உறழ்த்தோள் இவ் வாணுதல்'வையை மடுத்தால் கடல் எனத் தெய்யநெறி மணல் நேடினர் செல்ல, சொல் ஏற்று,'செறி நிரைப் பெண்' --வல் உறழ்பு--'யாது தொடர்பு?' என்னமறலினாள், மாற்றாள் மகள். 45
தலைமகளின் திகைப்பு
வாய் வாளா நின்றாள்,செறிநகை சித்தம் திகைத்து.
ஆயத்தார் பரத்தையை நோக்கி வைது உரைத்தல்
ஆயத்து ஒருத்தி, அவளை, 'அமர் காமம்மாயப் பொய் கூட்டி மயக்கும் விலைக் கணிகை!பெண்மைப் பொதுமைப் பிணையிலி! ஐம் புலத்தைத் 50
துற்றவ துற்றும் துணை இதழ் வாய்த் தொட்டி!முற்றா நறு நறா மொய் புனல் அட்டி,காரிகை நீர் ஏர் வயல், காமக் களி நாஞ்சில்,மூரி தவிர முடுக்கு முது சாடி!மட மதர் உண்கண் கயிறாக வைத்துத் 55
தட மென் தோள் தொட்டு, தகைத்து, மட விரலால்இட்டார்க்கு யாழ் ஆர்த்தும் பாணியில், எம் இழையைத்தொட்டு, ஆர்த்தும் இன்பத் துறைப் பொதுவி! கெட்டதைப்பொய்தல் மகளிர் கண் காண இகுத்தந்து, இவ்வையைத் தொழுவத்துத் தந்து, வடித்து, இடித்து, 60
மத்திகை மாலையா மோதி, அவையத்துத்தொடர்ந்தேம்--எருது தொழில் செய்யாது ஓடவிடும் கடன் வேளாளர்க்கு இன்று-படர்ந்து, யாம்,தன் மார்பம் தண்டம் தரும் ஆரத்தாள் மார்பும்,நின் மார்பும், ஓர் ஒத்த நீர்மைய கொல்?' என்னாமுன்-- 65
பரத்தை ஏசுதலைக் கண்ட முதுமகளிர் கூற்று
தேடினாள் ஏச, சில மகளிர் மற்று அதற்குஊடினார், வையையகத்து,'சிந்திக்க தீரும் பிணியாட் செறேற்க;மைந்து உற்றாய், வெஞ் சொல்; மட மயிற் சாயலைவந்திக்க வார்' என --- 'மனத் தகக நோய் இது; 70
பரத்தையின் பதில் உரை
வேற்றாரை வேற்றார் தொழுதல் இளிவரவு;போற்றாய் காண், அன்னை! புரையோய்! புரை இன்று,மாற்றாளை மாற்றாள் வரவு.'
தலைவி கூற்று
'அ... சொல் நல்லவை நாணாமல்தந்து முழவின் வருவாய்! நீ வாய்வாளா; 75
எந்தை எனக்கு ஈத்த இடு வளை, ஆரப் பூண்வந்த வழி நின்பால் மாயக் களவு அன்றேல்,தந்தானைத் தந்தே, தருக்கு.'
பரத்தையின் மறுமொழி
மாலை அணிய விலை தந்தான்; மாதர் நின்கால சிலம்பும் கழற்றுவான்; சால, 80
அதிரல் அம் கண்ணி! நீ அன்பன் எற்கு அன்பன்;கதுவாய்; அவன் கள்வன்; கள்வி நான் அல்லேன்.'என ஆங்கு--
கண்டார் சிலருடைய கூற்று
பரத்தையை நோக்கி உரைத்தல்வச்சிய மானே! மறலினை மாற்று; உமக்குநச்சினார் ஈபவை நாடு அறிய நும்மவே. 85
தலைமகளுக்கு முனிவி நீங்க உரைத்தல்
சேக்கை இனியார்பால் செல்வான் மனையாளால்காக்கை கடிந்து ஒழுகல் கூடுமோ? கூடா;தகவுடை மங்கையர் சான்றாண்மை சான்றார்இகழினும், கேள்வரை ஏத்தி இறைஞ்சுவார்;நிகழ்வது அறியாது--நில்லு நீ, நல்லாய்! 90
'மகளிரை மைந்துற்று அமர்பு உற்ற மைந்தர்அகலம் கடிகுவேம்' என்பவை யார்க்கானும்முடி பொருள் அன்று--முனியல்!கட வரை நிற்குமோ காமம்? கொடி இயலாய்!'வையை நீர் மலர்களுடன் வந்து கூடல் மதிலின்கருங்கை வழியே பாயும் காட்சிஎன--ஆங்கு 95
இன்ன துணியும் புலவியும் ஏற்பிக்கும்,தென்னவன் வையைச் சிறப்பு,கொடி இயலார் கைபோல் குவிந்த முகை,அரவு உடன்றவைபோல் விரிந்த குலை,குடை விரிந்தவை போலக் கோலும் மலர், 100
சுனை கழிந்து தூங்குவன நீரின் மலர்,சினை விரிந்து உதிர்ந்த வீ, புதல் விரி போதொடும்,அருவி சொரிந்த திரையின் துரந்து;நெடு மால் கருங்கை நடு வழிப் போந்து--கடு மா களிறு அணைத்துக் கைவிடு நீர் போலும்-- 105
நெடு நீர் மலி புனல், நீள் மாடக் கூடல்கடி மதில் பெய்யும் பொழுது.
பிரிந்தாரைக் கூட்டுவித்தல் வையைக்கு இயல்பு
நாம் அமர் உடலும் நட்பும், தணப்பும்,காமமும் கள்ளும் கலந்து உடன் பாராட்ட,தாம் அமர் காதலரொடு ஆடப் புணர்வித்தல் 110
பூ மலி வையைக்கு இயல்பு.

21. செவ்வேள்
பாடியவர் :: நல்லச்சுதனார்இசையமைத்தவர் :: கண்ணகனார்பண் :: காந்தாரம் 
கடவுள் வாழ்த்து
பரங்குன்றத்துப் பெருமானைப் பரவுதல்
ஊர்ந்ததை--எரி புரை ஓடை இடை இமைக்கும் சென்னி,பொரு சமம் கடந்த புகழ் சால், வேழம்.தொட்டதை--தைப்பு அமை சருமத்தின், தாள் இயை தாமரைதுப்பு அமை துவர் நீர்த் துறை மறை அழுத்திய,வெரிநத் தோலொடு, முழு மயிர் மிடைந்த, 5
வரி மலி அர உரி வள்பு கண்டன்ன,புரி மென் பீலிப் போழ் புனை அடையல்.கையதை--கொள்ளாத் தெவ்வர் கொள் மாமுதல் தடிந்து,புள்ளொடு பெயரிய பொருப்புப் புடை திறந்த வேல்;பூண்டதை--சுருளுடை வள்ளி இடை இடுபு இழைத்த 10
உருள் இணர்க் கடம்பின் ஒன்ணுபடு கமழ் தார்.அமர்ந்ததை--புரையோர் நாவில் புகழ் நலம் முற்றி,நிரை ஏழ் அடுக்கிய நீள் இலைப் பாலைஅரை வரை மேகலை, அளி நீர்ச் சூழி,தரை விசும்பு உகந்த தண் பரங்குன்றம். 15
'குன்றத்து அடி உறை இயைக!' எனப் பரவுதும்--வென்றிக் கொடி அணி வெல்வ! நிற் தொழுது.
பரங்கின்றின்மேல் ஓவியத்தின் அழகு போன்ற காட்சிகள்
சுடு பொன் ஞெகிழத்து முத்து அரி சென்று ஆர்ப்ப,துடியின் அடி பெயர்த்து, தோள் அசைத்துத் தூக்கி,அடு நறா மகிழ் தட்ப ஆடுவாள் தகைமையின், 20
நுனை இலங்கு எ·கெனச் சிவந்த நோக்கமொடுதுணை அணை கேள்வணைத் துனிப்பவள் நிலையும்;நிழல் காண் மண்டிலம் நோக்கி,அழல் புனை அவிர் இழை திருத்துவாள் குறிப்பும்;பொதிர்த்த முலையிடைப் பூசிக் சந்தனம் 25
உதிர்த்து, பின் உற ஊட்டுவாள் விருப்பும்;பல் ஊழ் இவை இவை நினைப்பின், வல்லோன்ஓவத்து எழுது எழில் போலும்--மா தடிந்-திட்டோய்! நின் குன்றின்மிசை.
குன்றத்தில் வேறுபட்ட பல ஒலிகள் ஒருங்கு இசைத்தல்
மிசை படு சாந்தாற்றி போல, எழிலி 30
இசை படு பக்கம், இரு பாலும் கோலி,விடு பொறி மஞ்ஞை பெயர்பு உடன் ஆட;விரல் செறி தூம்பின் விடு துளைக்கு ஏற்ப,முரல் குரற் தும்பி அவிழ் மலர் ஊத;யாணர் வண்டினம் யாழ் இசை பிறக்க; 35
பாணி முழவு இசை அருவி நீர் ததும்ப;ஒருங்கு பரந்தவை எல்லாம் ஒலிக்கும்-இரங்கு முரசினான் குன்று.
சுனை நீரில் பாய்ந்து ஆடிய காதலர்
தாழ் நீர் இமிழ் சுனை நாப்பண் குளித்து, அவண்மீ நீர் நிவந்த விறலிழை, ' கேள்வனை 40
வேய் நீர் அழுந்து தன் கையின் விடுக என,பூ நீர் பெய் வட்டம் எறிய, புணை பெறாதுஅரு நிலை நீரின் அவள் துயர் கண்டு,கொழுநன் மகிழ் தூங்கி, கொய் பூம் புனல் வீழ்ந்து,தழுவும் தகை வகைத்து--தண் பரங்குன்று. 45
குன்றத்தில் பலவகை மணத்துடன் வரும் காற்றுக்கள்
வண்டு ஆர் பிறங்கல் மைந்தர் நீவியதண் கமழ் சாந்தம் தைஇய வளியும்,கயல் புரை கண்ணியர் கமழ் துகள் உதிர்த்தபுயல் புரை கதுப்பகம் உளரிய வளியும்,உருள்இணர்க் கடம்பின் நெடுவேட்கு எடுத்த 50
முருகு கமழ் புகை நுழைந்த வளியும்,அசும்பும் அருவி அரு விடர்ப் பரந்த-பசும் பூண் சேஎய்!-நின் குன்றம் நன்கு உடைத்து.
சீர்க்கு இசைய ஆடுபவளது மேனியழகும் கண்ணழகும்
கண் ஒளிர் திகழ் அடர், இடுசுடர் படர் கொடி மின்னுப் போல்,ஒண் நகை தகை வகை நெறிபெற இடைஇடை இழைத்து யாத்த 55
செண்ணிகைக் கோதை கதுப்போடு இயல,மணி மருள் தேன் மகிழ் தட்ப, ஒல்கிப்பிணி நெகிழப் பைந் துகில், நோக்கம் சிவப்பு ஊர,பூங் கொடி போல நுடங்குவாள், ஆங்குத் தன்சீர்தகு கேள்வன் உருட்டும் துடிச் சீரான், 60
கோடு அணிந்த முத்து ஆரம் ஒல்க ஓசிபவள் ஏர்-ஆடை அசைய, அணி அசைய, தான் அசையும்வாடை உளர் கொம்பர் போன்ம்.வாளி புரள்பவை போலும், துடிச் சீர்க்குத்தோள் ஊழ் பெயர்ப்பவள் கண். 65
முருகவேளை வாழ்த்துதல்
மாறு அமர் அட்டவை மற வேல் பெயர்ப்பவை;ஆறு இரு தோளவை; அறு முகம் விரித்தவை;நன்று அமர் ஆயமோடு ஒருங்கு, 'நின் அடி உறைஇன்று போல் இயைக!' எனப் பரவுதும்-ஒன்றார்த் தேய்த்த செல்வ! நிற் தொழுதே. 70

22. வையை
(இப்பாடலின் இடையில் சில சொற்களும் இறுதிட்ட குறியும் கிடைக்கவில்லை)
பாடியவர் :: தெரியவில்லைஇசையமைத்தவர் :: தெரியவில்லைபண் :: தெரியவில்லை 
மழை பெய்தலும் நீர்ப் பெருக்கும்
ஒளிறு வாட் பொருப்பன் உடல் சமத்து இறுத்தகளிறு நிரைத் தவைபோல் கொண்மூ நெரிதர,அரசு படக் கடந்த ஆனாச் சீற்றத்தவன்முரசு அதிர்பவைபோல் முழங்கு இடி பயிற்றி,ஒடுங்கார் உடன்றவன் தானை வில் விசை 5
விடும் கணை ஒப்பின் கதழ் உறை சிதறூஉ,கண் ஒளிர் எ·கின் கடிய மின்னி, அவன்வண்மைபோல் வானம் பொழிந்த நீர்-மண்மிசைஆனாது வந்து தொகுபு ஈண்டி, மற்று-அவன்தானையின் ஊழி....தாவூக் கத்தின், 10
போன நிலம் எல்லாம் போர் ஆர் வயல் புகுத-..... ......... நீக்கிப் பு.. ..... .....கான மலைத்தரை கொன்று மணல பினறிவான மலைத்த ......வ ........ ....... ............. லைத்தவ மண முரசு எறிதா, 15
தானைத் தலைத்தலை வந்து மைந்து உற்று,
மைந்தரும் மகளிரும் கரையையும் வையையும் சேர்கின்ற அழகு
பொறிவி யாற்றுறி--துவர், புகை, சாந்தம்எறிவன எக்குவ ஈரணிக்கு ஏற்ற,நறவு அணி பூந் துகில் நன் பல ஏந்தி,பிற தொழின ....ம் பின்பின் தொடர; 20
செறி வினைப் பொலிந்த செம் பூங் கண்ணியர்,ஈர் அமை வெட்சி இதழ் புனை கோதையர்,தார் ஆர் முடியர், தகை கெழு மார்பினர்;மாவும், களிறும், மணி அணி வேசரி,காவு நிறையக் கரை நெரிபு ஈண்டி; 25
வேல் ஆற்றும் பொய்ம்பனின், விரை மலர் அம்பினோன்போல், ஆற்று முன்பின் புனை கழல் மைந்தரொடு,தார் அணி மைந்தர் தவப் பயன் ஆம் எனக்கார் அணி கூந்தல், கயற் கண், கவிர் இதழ்,வார் அணி கொம்மை, வகை அமை மேகலை, 30
ஏர் அணி இலங்கு எயிற்று, இலங்கு நகையவர்-'சீர் அணி வையைக்கு அணிகொல்லோ? வையைதன்நீர் அணி நீத்தம் இவர்க்கு அணிகொல்? எனத்தேருநர் தேருங்கால், தேர்தற்கு அரிது காண்-தீரமும் வையையும் சேர்கின்ற கண் கவின். 35
திருமருத முன்துறைக் காட்சிகள்
மண் கணை முழவின் இன் கண் இமிழ்விற்குஎதிர்வ பொருவி ..... மேறு மாறு இமிழ்ப்ப,கவர் தொடை நல் யாழ் இமிழ, காவில்புகர் வரி வண்டினம் பூஞ் சினை இமிர,ஊது சீர்த்தீம் குழல் இயம்ப, மலர்மிசைத் 40
தாது ஊது தும்பி தவிர்பு அல இயம்ப,..... துடிச் சீர் நடத்த வளி நடன்மெல் இணர்ப் பூங்கொடி மேவர நுடங்க,ஆங்கு அவை தத்தம் தொழில் மாறு கொள்ளும்-தீம் புனல் வையைத் திருமருத முந்துறையால். 45
கோடுளர் குரல் பொலி ஒலி துயல் இருங் கூந்தல்,.... ..... .......புரை தீர் நெடு மென்தோள் தாழ்பு தழை மலர் துவளா வல்லியின்,நீள் தாழ்பு தோக்கை, நித்தில வரிச் சிலம்பு,

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.