LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கல்கி (Kalki )- அலை ஒசை

நான்காம் பாகம் - பிரளயம்-கண்கண்ட தெய்வம்

 

சீதாவின் கண்களில் ததும்பி நின்ற கண்ணீர்த் துளிகள் உலர்ந்து போயின. அவளுடைய மனதில் குடிகொண்டிருந்த பெரும் பாரம் இறங்கி விட்டது. கலக்கம் தீர்ந்து மனதில் தெளிவுஏற்பட்டிருந்தது. தான் இனி கடைப்பிடிக்க வேண்டிய பாதைதான் என்ன என்பதைப்பற்றி அவள்ஒரு தீர்மான முடிவுக்கு வந்திருந்தாள். லலிதா தன்னுடைய கூரிய சொல்லம்புகளை எய்துகொண்டிருந்த அதே சமயத்தில் சீதாவின் மனதில் அந்த உறுதியான தீர்மானம் ஏற்பட்டு விட்டது. ஆகவே சமீப காலத்தில் அவள் அறிந்திராத மனச் சாந்தியும் ஏற்பட்டிருந்தது. கைப்பெட்டியில்மாற்றி உடுத்திக் கொள்வதற்கு வேண்டிய இரண்டொரு சேலைகளை எடுத்து வைத்துக்கொண்டாள். கைவசம் இருந்த பணத்தையெல்லாம் திரட்டி எடுத்து வைத்துக் கொண்டாள்.மேஜை டிராயரைத் திறந்து அதிலிருந்த கடிதங்களையெல்லாம் சுக்கு நூறாகக் கிழித்துப்போட்டாள். அன்று தபாலில் வந்த பத்திரிகைத் துண்டை அணு அணுவாகப் போகும் வரையில்கிழித்து எறிந்தாள். பிறகு புறப்படுவதற்கு ஆயத்தமாகிக் கீழ் வீட்டில் சந்தடி அடங்கட்டும் என்றுகாத்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் வரையில் கீழே ஏக ரகளையாகத்தானிருந்தது பட்டாபிராமனுடைய அதட்டல், சரஸ்வதி அம்மாளின் கோபக் குரல் - இவற்றுடன் குழந்தைகள் பட்டு, பாலுவின் அழுகைச் சத்தமும் கலந்து கேட்டது. பாவம்! அந்த அர்த்த ராத்திரிச் சந்தடியில் குழந்தைகள் விழித்தெழுந்து அம்மா மூர்ச்சையாகிக் கிடந்ததைப் பார்த்துவிட்டுஅழத்தொடங்கின. சிறிது நேரத்துக்கெல்லாம் லலிதாவின் தீனக்குரல் கேட்டது. கொஞ்சம்கொஞ்சமாகச் சந்தடி அடங்கியது, விளக்குகள் அணைக்கப்பட்டன. பின்னர் அந்த வீட்டில்நிசப்தம் குடிகொண்டது. மேலும் சிறிது நேரம் சீதா காத்திருந்தாள். வீட்டிலுள்ளவர்களிடம்சொல்லிக்கொள்ளாமல் போகலாமா என்ற எண்ணம் எழுந்து தொந்தரவு செய்தது. ஆனால்நேரம் ஆக ஆக அவளுடைய பொறுமை குறைந்து வந்தது. அந்த அறையின் நாலு பக்கத்துச்சுவர்களும் அவளை நோக்கி நெருங்கி நெருங்கி வருவதாகத் தோன்றியது. இன்னும் சற்றுநேரம்அறையில் இருந்தால் அந்தச் சுவர்கள் அவளை நெருங்கி வந்து நாலாபுறமும் அமுக்கி மூச்சுத்திணற அடித்துக் கொன்றுவிடும் என்ற பீதி உண்டாயிற்று. 
  
      அந்தப் பீதியிலிருந்து விடுவித்துக் கொள்ளச் சீதா விரைந்து எழுந்தாள்.மேஜையிலிருந்து ஒரு காகிதம் எடுத்து அதில் லலிதாவுக்கு ஒரு கடிதம் எழுதத் தொடங்கினாள்.ஒரு வரி, இரண்டு வரி எழுதிக் கிழித்துப் போட்டாள். கடிதம் எழுதுவது சாத்தியமில்லை என்றுதீர்மானித் தாள். கைப்பெட்டியையும் மணிபர்சையும் எடுத்துக்கொண்டு விளக்கை அணைத்து விட்டுப் புறப்பட்டாள். அடிமேல் அடிவைத்துச் சத்தமின்றி மெதுவாக நடந்து மச்சுப் படிகளில் இறங்கினாள். கீழ்க்கட்டுத் தாழ்வாரத்தில் நீலவர்ண மின்சார தீபம் எரிந்து கொண்டிருந்தது.அந்த மங்கிய வெளிச்சத்தில் அவளுக்கு எதிரே இருந்த சுவரில் ஒரு படம் தென்பட்டது. அந்தப் படத்தில் காந்தி மகாத்மாவின் திருஉருவம் இருந்தது. சாந்தி நிறைந்து புன்னகை தவழ்ந்த மகாத்மாவின் திருமுகமும் கருணை ததும்பிய கண்களும் காந்திஜி உண்மையிலே அங்கு வீற்றிருந்து அவளை ஆசீர்வதிப்பது போன்ற தெய்வீக உணர்ச்சியைச் சீதாவுக்கு உண்டாக்கிற்று.அது ஒரு நல்ல சகுனம் என்றும் அவளுக்குத் தோன்றியது. "கலியுகத்திலே கண்கண்ட தெய்வம்காந்திமகான்தான்" என்று சீதாவின் தாயார் அவளுடைய இளம்பிராயத்தில் அடிக்கடிசொல்லியிருந்தது அவளுடைய மனதில் நன்கு பதிந்து நிலை பெற்றிருந்தது. பெட்டியைத்தரையில் வைத்துவிட்டுச் சீதா மகாத்மாவின் திருவுருவத்தின் முன்னால் நமஸ்கரித்தாள்.எழுந்ததும் ஒரு நிமிஷம் கைகூப்பி நின்று, "எந்தையே! என்னை ஆசீர்வதியுங்கள். வாழ்க்கையில்நான் புதியதாக மேற்கொள்ளப் போகும் பாதையில் என்றும் உறுதி தவறாமல் நடப்பதற்குவேண்டிய மனோபாவத்தை எனக்கு அளியுங்கள்!" என்று வேண்டிக் கொண்டாள். அப்படிவேண்டிக்கொண்டதோடு மட்டும் அவளுடைய மனம் திருப்தி அடைந்துவிடவில்லை. இன்னும்ஏதோ மனக் குறை இருந்தது, சிறிது நேரம் சிந்தனை செய்தாள். உடனே தன் மனக்குறையைத்தீர்க்கும் மருந்து இன்னதென்று புலப்பட்டது. 
  
       "காந்தி என்னும் கருணைத் தெய்வமே! 'தங்களுடைய ஆசியை நம்பியே இன்று நான் இந்த வீட்டைவிட்டுத் தன்னந்தனியாக வெளிக் கிளம்புகிறேன். இனி நான் நடக்கப் போகும் பாதையில் எனக்கு எத்தகைய இன்னல்கள் நேர்ந்தாலும் எவ்வளவு கஷ்டங்கள் ஏற்பட்டாலும்தங்களுடைய மனதுக்கு உகந்திருக்க முடியாத காரியம் எதையும் செய்யமாட்டேன்.எப்படிப்பட்ட நிலைமையிலும் எந்தக் காரியத்தையும் 'இதை காந்தி மகாத்மாஒப்புக்கொள்வாரா?' என்று எனக்கு நானே கேட்டு நிச்சயப்படுத்திக் கொண்டுதான் செய்வேன். இவ்விதம் தங்கள் சந்நிதியில் இதோ சத்தியம் செய்கிறேன். இந்தப் பிரதிக்ஞையைநிறைவேற்றும் சக்தியையும் தாங்கள்தான் எனக்கு அருளவேண்டும்!" இவ்விதம் சீதா மனதிற்குள்தெளிவாகச் சிந்தித்து பிரதிக்ஞை எடுத்துக்கொண்டு மகாத்மாவின் படத்துக்கு ஒரு கும்பிடுபோட்டு விட்டுத் தரையிலிருந்து பெட்டியை எடுத்துக் கொண்டு மறுபடி புறப்பட்டாள். வாசற்கதவைச் சத்தமின்றித் திறந்துகொண்டு வெளியேறினாள். வெளியேறும்போது அவளுடைய மனம், "இந்த வீட்டில் நான் புகுவதற்கு முன்னால் அன்பும் சாந்தமும் நிலவின. என்னால் விளைந்த குழப்பம் என்னோடு போகட்டும். இனி முன்போலவே அமைதி நிலவட்டும். இந்த வீட்டில்உள்ளவர்கள் ஒவ்வொருவரும் என்பேரில் எவ்வளவோ பிரியமாயிருந்தார்கள்: அதற்கெல்லாம்பதிலாக நான் பெரும் அபசாரம் செய்துவிட்டேன். கடவுள் என்னை மன்னிப்பாராக!" என்றுஎண்ணமிட்டது. 
  
       பட்டாபிராமனுடைய வீட்டிலிருந்து ரயில்வே ஸ்டேஷன் அரை மைல் தூரத்தில் இருந்தது. சீதா அந்தத் தேவபட்டணத்துக்கு வந்த புதிதில் வெள்ள நிவாரண வேலைசெய்ததிலும் பிறகு தேர்தல் வேலை செய்ததிலும் அந்நகரின் தெருக்கள், சந்துபொந்துகள், மூலைமுடுக்குகள் எல்லாம் அவளுக்கு நன்றாகத் தெரிந்து போயிருந்தன. ரயில்வே ஸ்டேஷனைநோக்கி நேராகச் சென்ற குறுக்குப் பாதையில் அவள் இப்போது நடந்தாள். வீதிகளிலும் சந்துகளிலும் ஜன நடமாட்டமே இல்லை. காலை மூன்று மணிதான் உலகமே நன்றாய்த் தூங்கும்நேரம் என்று தோன்றியது. திருடர்கள் தங்களுடைய திருவிளையாடல்களை நடத்துவதற்கு அதுவே சரியான நேரம். யாராவது தன்னை அடித்துப் பிடுங்குவதற்கு வந்து சேர்ந்தால்?... சேச்சே!அப்படியெல்லாம் எதற்காகத் தனக்கு நேரப்போகிறது? அப்படியெல்லாம் நேராதா? ஏன்நேராது? தான் துரதிருஷ்டத்துக்கும் துன்பத்துக்குமே பெண்ணாய் பிறந்தவள் ஆயிற்றே? யாரோதன்னைப் பின் தொடர்ந்து வருகிறார்கள் போலிருக்கிறதே? நெருங்குவதற்குத் தயங்கிக்கொஞ்ச தூரத்திலேயே வருகிறது போல் காணப்படுகிறதே? வருகிறவர் ஒருவரா அதிகம் பேரா?எதற்காகத் தன்னை அவர்கள் தொடர்ந்து வரவேண்டும்? ஒருவேளை அவர்களும் தன்னைப் போல்ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகலாம் அல்லவா? தான் அநாவசியமாக ஏன் பீதிக்கொள்ளவேண்டும்? 
  
       பீதி அநாவசியந்தான்! யார் தன்னை என்ன செய்துவிட முடியும்? ஒன்றும் முடியாதுதான்!ஆயினும் நெஞ்சம் படக் படக், என்று அடித்துக் கொள்வதில் குறைவில்லை. காலடிச் சத்தத்து க்கு மேல் இதயம் அடித்துக் கொள்ளும் சத்தம் அதிகமாகக் கேட்கிறதே! கடவுளே! காந்தி மகாத்மா! இந்தப் பேதையைக் காப்பாற்றுங்கள்! இது என்ன பைத்தியம்? யாரிடமிருந்துஎதற்காகக் கடவுளும் காந்திஜியும் தன்னை இப்போது காப்பாற்ற வேண்டும்? தனக்கு என்ன பயம்? தனக்குக் கெடுதல் செய்வதில் யாருக்கு என்ன அக்கறை இருக்க முடியும்? அப்படியும்நினைப்பதற்கில்லை, இந்த ஊரில் தனக்கு யாரோ விரோதிகள் இருக்கிறார்கள். இருக்கிறதினாலேதான் தன்னைப் பற்றி அப்படித் துண்டுப் பிரசுரம் போட்டார்கள். பிற்பாடு பத்திரிகையில் தன்னையும் பட்டாபிராமனையும் பற்றி அவ்வளவு கேவலமாக எழுதினார்கள்.அப்படிப்பட்ட பரம விரோதிகள் என்னதான் செய்யமாட்டார்கள்? ஒற்றர்களை வைத்திருந்துதான் தனியாக வெளிக் கிளம்புவதைக் கவனித்துப் பின்தொடர்ந்து வருகிறார்களா என்ன? பின்தொடர்ந்து வந்து ஒருவேளை தன்னை வெட்டிப் போட்டு விடுவார்களோ? அப்படிச் செய்து விட்டால் ரொம்ப நல்லதாகப் போய்விடும்! இந்த வாழ்க்கையாகிற பாரத்தை மேலும் சுமக்கவேண்டியிராது? ஆனால் அந்தக் கிராதகர்கள் அப்படிச் செய்வார்களா? அல்லது தான்தனியாகக் கிளம்பிச் சென்றதைக் கவனித்து வைத்துக் கொண்டிருந்து இல்லாததையும்பொல்லாததையும் சேர்த்து மறுபடியும் பத்திரிகையில் ஏதாவது பயங்கரமாக எழுதுவார்களா? அப்படியெல்லாம் எழுதித் தன்னை அவமானப்படுத்துவதைக் காட்டிலும் ஒரு வழியாகக் கொன்றுபோட்டு விட்டால் நிம்மதியாகப் போய்விடும். 
  
      ரயில்வே ஸ்டேஷனுக்கு இன்னும் பாதி தூரம் இருக்கும் போது பின்னால் யாரோதன்னைத் தொடர்ந்து வருவதாகச் சீதா சந்தேகித்தாள். ரயில்வே ஸ்டேஷனைக் கிட்டத்தட்டநெருங்கியபோது அவளுடைய பீதி ஒருவாறு குறைந்து தைரியம் மிகுந்தது. வருகிறது யார் என்றுதெரிந்துகொள்ளும் எண்ணத்தோடு முனிசிபல் விளக்கு மரம் ஒன்றின் அடியில் நின்றாள். நின்று பரபரப்புடன் தான் வந்த வழியே பார்த்துக் கொண்டிருந்தாள். சந்தின் திருப்பத்தில் திரும்பி ஒருஆசாமி வந்தான். அவன் வேறு யாரும் இல்லை; சூரியாவின் தம்பி சுண்டுதான்! சீதாவின் மனத்திலிருந்த பயம் என்கிற பாரம் விலகியது. பயம் இருந்த இடத்தில் கோபம் குடிபுகுந்தது. இவன் எப்படி திடீரென்று இங்கே வந்து முளைத்தான்? தன்னை எதற்குப் பின்தொடர்ந்து வந்தான்? வந்ததுதான் வந்தானே, சட்டென்று வந்து தனக்குத் துணையாகச் சேர்ந்து கொள்ளக் கூடாதா? பின்னாலேயே வந்து தன்னை இப்படிப் பயமுறுத்துவானேன்? அசட்டுப் பிள்ளை!கிட்டா மாமாவின் பிள்ளைகளில் சூரியா ஒருவன்தான் கொஞ்சம் சமர்த்து; மற்றவர்கள் எல்லாரும்மோசந்தான். அசட்டுச் சிரிப்புடன் அருகில் நெருங்கி வந்த சுண்டுவைப் பார்த்துச் சீதா,"எதற்காக அப்பா, என்னைப் பின்தொடர்ந்து வருகிறாய்? உனக்கு வேலை இல்லையா அல்லதுஉன் அம்மா நான் திரும்பி வந்து விடாதபடி ரயிலில் ஏற்றி விட்டு வருவதற்கு உன்னை அனுப்பிவைத்தாளா? யாரோ திருடன் தொடர்ந்து வருகிறானாக்கும் என்று எண்ணியல்லவா பயந்துபோய் விட்டேன்?" என்றாள். "இப்படித்தான் உலகத்தில் பல தவறுகள் ஏற்படுகின்றன. ஏதோ சூரியா எழுதியிருக்கிறானே என்பதற்காக நான் உன்னுடைய துணைக்கு வந்தேன். நீ என்னைத்திருடன் என்று எண்ணிப் பயந்து கொண்டாய்! அநாவசியமாக என் அம்மாவையும் வைகிறாய்!"என்றான் சுண்டு. "அது போனால் போகட்டும், சுண்டு! சூரியா கடிதம் எழுதியிருக்கிறானா?"என்று சீதா ஆவலுடன் கேட்டாள். சூரியா ஒருவனாவது தன்னுடைய நன்மையில் உண்மையானகவலை கொண்டவனாயிருக்கிறானே என்று எண்ணிச் சீதா அத்தனை துயரத்துக்கிடையிலும்சிறிது ஆறுதல் பெற்றாள். 
  
      "சூரியா டில்லியிலேயிருந்து எழுதியிருந்தான். ஒருவேளை நீ கல்கத்தாவுக்குப்புறப்படலாம் என்றும், அப்படியானால் நான் சென்னை வரையிலாவது போய்க் கல்கத்தா ரயிலில்உன்னை ஏற்றி விடும்படியும் எழுதியிருந்தான். நீ விரும்பினால் கல்கத்தா வரையிலே கூடப்போகும்படி எழுதியிருந்தான். ஆனால் நீ இப்படி அர்த்தராத்திரியில் ஒருவருக்கும்தெரியாமல் வீட்டுக் கதவைத் திறந்து போட்டு விட்டுப் புறப்படுவாய் என்று நான்எதிர்பார்க்கவேயில்லை....." இத்தனை நாளும் நீ எங்கே இருந்தாய் சுண்டு! உன்னை நான்பார்க்கவே இல்லையே? திடீரென்று இன்றைக்கு எப்படி வந்து முளைத்தாய்?" "உனக்கு எங்கேஎலெக்ஷன் தடபுடலில் என்னைப்பற்றிக் கவனிக்க நேரம் கிடைக்கப் போகிறது? இத்தனைநாளும் நான் ராஜம்பேட்டையில் இருந்தேன். இந்த மார்ச்சு பரீட்சையில் தவறிவிட்டேன்.அம்மா, சூரியா இரண்டு பேரும் ஊரிலிருந்து வந்து விட்டார்கள் அல்லவா? அதற்காக என்னைப்போய் அங்கே இருக்கச் சொன்னார்கள். சூரியாவின் கடிதம் வந்ததும் புறப்பட்டு வந்தேன்.அதோடு சேர்மன் தேர்தலின்போது இங்கே இருந்து அத்திம்பேர் வெற்றி பெற்றால் வாழ்த்துக்கூற விரும்பினேன். ஆனால் வாழ்த்துக் கூற அவசியமில்லாமலே போய் விட்டது. சேர்மன் வேலைஆனதற்காக அத்திம்பேருக்கு அனுதாபம் தான் சொல்லவேண்டும்." "வா ஸ்டேஷன் பக்கம்நடந்து கொண்டே பேசலாம்" என்று சொல்லிச் சீதா நடக்கத் தொடங்கினாள். ரயில்வே ஸ்டேஷன் கிட்ட இருந்தது, ரயிலோ நாலரை மணிக்குத்தான். ஆகையால் மெள்ள மெள்ளப்பேசிக் கொண்டே அவர்கள் நடந்தார்கள். "ராத்திரி நடந்ததெல்லாம் உனக்குத் தெரியுமா,என்ன? எங்கேயிருந்தாய் நீ?" என்று சீதா கேட்டாள். வெட்கத்தோடு முழுவதும் அவனுக்குத்தெரிந்திருக்க முடியாது என்று எண்ணினாள். "எதிர் வீட்டுத் தாமோதரம் பிள்ளை வீட்டில் படுத்திருந்தேன். பிள்ளையும் நானும் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். ரகளையில் பெரும் பாகம் எங்களுக்குக் கேட்டது. மிச்சத்தை இட்டு நிரப்பிக் கொண்டோம். சந்தடி ஓய்ந்து சிறிதுநேரத்திற்குப் பிறகு நான் தூங்கிவிட்டேன். ஆனால், பாவம் தாமோதரம் பிள்ளைதூங்கவேயில்லை அவருக்கு ரொம்ப வருத்தம். நீ வெளிக் கிளம்புவதை அவர்தான் பார்த்துக்கொண்டிருந்து என்னை எழுப்பி விட்டார்....." 
  
      "பாவம்! தாமோதரம் பிள்ளை ரொம்ப நல்ல மனிதர். அவர் அப்போது சொன்னதைக்கேட்காமற் போனோம்; அவர் சொன்னதைக் கேட்டு இந்த எலெக்ஷன் தொல்லையில் இறங்காமலிருந்தால் இப்படியெல்லாம் ஏற்பட்டிராது. என்ன தவறு செய்து விட்டேன்!""அத்தங்கா! இதெல்லாம் ஒரு தவறு ஆகாது. நீ செய்த அடிப்படையான தவறு பன்னிரண்டு வருஷத்துக்கு முன் ராஜம்பேட்டையில் நடந்தது. ஏதோ அந்தச் சௌந்தரராகவன் திடீரென்றுசொன்னதற்காக நீ அவனைக் கலியாணம் செய்து கொண்டிருக்கக் கூடாது. நியாயமாக நீ சூரியாவைக் கலியாணம் செய்து கொண்டிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தாயானால் இரண்டு பேரும் வாழ்க்கையில் சந்தோஷமாக இருந்திருப்பீர்கள். இப்போது நீங்கள் இரண்டுபேருமே சந்தோஷமின்றிக் கஷ்டப்படுகிறீர்கள்." "நீ சொல்வது தப்பு, சுண்டு! நானும் சூரியாவும்கலியாணம் செய்து கொண்டிருந்தால் ஒரு நாளும் எங்கள் வாழ்க்கை சந்தோஷமாயிருந்திராது.""ஏன் அப்படிச் சொல்கிறாய் அத்தங்கா! சூரியாவுக்கு உன்பேரில் உள்ள அபிமானம் உனக்குத்தெரியாதா, என்ன? நீ நடந்த பூமியை அவன் பூஜை செய்கிறவன் ஆயிற்றே! உன்னுடையகஷ்டங்களை நினைத்து இரவு பகல் இப்போதுகூட உருகிக் கொண்டிருக்கிறானே?இல்லாவிட்டால் பரீட்சைக்குப் படிக்கும் எனக்கு உன்னைப் பற்றிக் கடிதம் எழுதுவானா?""சூரியாவுக்கு என் பேரில் அபிமானம் அதிகம் என்பது எனக்குத் தெரியும், சுண்டு! ஆனால்அபிமானம் வேறு விஷயம், 
  
      கலியாணம் வேறு விஷயம். வாழ்க்கையில் அவனுடைய இலட்சியங்களுக்கும்என்னுடைய இலட்சியங்களுக்கும் ரொம்ப வித்தியாசம் உண்டு. அவனுக்கு யாருக்காவதுஉபகாரம் செய்து கொண்டிருந்தால் போதும்; தேசத்துக்கு ஏதேனும் தொண்டு செய்துகொண்டிருந்தால் போதும். புகழிலும் பெயரிலும் அவனுக்கு ஆசையே கிடையாது.எனக்கோ, யாராவது நாலுபேர் என்னை எதற்காவது மெச்சிக்கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான்எனக்குச் சந்தோஷமாயிருக்கிறது நான் இருக்கும்போது வேறு யாரையாவது பாராட்டினால்எனக்குப் பிடிப்பதில்லை. நான் பிரசங்க மேடையில் ஏறிப் பேசும்போது நாலுபேர் என்னைப்பார்த்து மலர்ந்த முகத்துடன் நின்றால், என்னுடைய பேச்சை மெச்சிக் கை தட்டினால் எனக்குஎன்னமோ பட்டாபிஷேகம் பண்ணியது போலிருக்கும். சூரியாவுக்கோ இதிலெல்லாம் ஆசையேகிடையாது. எங்களுடைய வாழ்க்கை எப்படிச் சந்தோஷமாயிருக்க முடியும்?" "நீ சொல்வதில்ஓரளவு உண்மை இருக்கிறது, அத்தங்கா! ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அப்படி உலகத்தில்ஒத்த மனத்தோடு தம்பதிகள் எங்கே அமைகிறார்கள்!" "புது டில்லியில் ஒருத்தி இருக்கிறாள், சுண்டு! அவள் பெயர் தாரிணி. சூரியாவுக்கும் அவளுக்கும் ரொம்பப் பொருத்தம் எனப் பல சமயம்நான் எண்ணியதுண்டு." 
  
      "சூரியாகூட என்னிடம் சொல்லியிருக்கிறான், அந்தத் தாரிணியைப் பற்றி! ஆனால்அவளுக்கு இந்த ஜன்மத்தில் கலியாணம் நடக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்தவுடனே அவர்கள் கலியாணம் செய்து கொள்ளப் போகிறார்களாம்! எப்படி இருக்கிறது கதை! இந்தியாவாவது சுதந்திரம் அடையவாவது? இந்த ஜன்மத்தில் இல்லை!உன்னிடம் சொன்னால் என்ன, அத்தங்கா! இந்தச் சூரியாவுக்குக் கலியாணம் ஆகாதகாரணத்தினால், என்னுடைய கலியாணமும் தடைப்பட்டுக் கொண்டே வருகிறது....!" சீதாவுக்குஅவளை அறியாமல் சிரிப்பு வந்தது. "நாங்கள் எல்லாரும் கலியாணம் செய்து கொண்டுகஷ்டப்படுவது போதாதா சுண்டு! எல்லாக் கூத்தையும் நீ பார்த்துக்கொண்டுதானேயிருக்கிறாய்?" என்று கேட்டாள். "நீங்கள் செய்த தவறையே நானும்செய்வேனா, என்ன? முன்னால் போகிறவன் குழியில் விழுந்தால் பின்னால் வருகிறவனுக்குத்தீவர்த்தி பிடித்த மாதிரி அல்லவா? எனக்குக் கலியாணம் செய்து கொள்ளும் உத்தேசமேகிடையாது. விளையாட்டுக்காகச் சொன்னேன்?" என்றான் சுண்டு.

சீதாவின் கண்களில் ததும்பி நின்ற கண்ணீர்த் துளிகள் உலர்ந்து போயின. அவளுடைய மனதில் குடிகொண்டிருந்த பெரும் பாரம் இறங்கி விட்டது. கலக்கம் தீர்ந்து மனதில் தெளிவுஏற்பட்டிருந்தது. தான் இனி கடைப்பிடிக்க வேண்டிய பாதைதான் என்ன என்பதைப்பற்றி அவள்ஒரு தீர்மான முடிவுக்கு வந்திருந்தாள். லலிதா தன்னுடைய கூரிய சொல்லம்புகளை எய்துகொண்டிருந்த அதே சமயத்தில் சீதாவின் மனதில் அந்த உறுதியான தீர்மானம் ஏற்பட்டு விட்டது. ஆகவே சமீப காலத்தில் அவள் அறிந்திராத மனச் சாந்தியும் ஏற்பட்டிருந்தது. கைப்பெட்டியில்மாற்றி உடுத்திக் கொள்வதற்கு வேண்டிய இரண்டொரு சேலைகளை எடுத்து வைத்துக்கொண்டாள். கைவசம் இருந்த பணத்தையெல்லாம் திரட்டி எடுத்து வைத்துக் கொண்டாள்.மேஜை டிராயரைத் திறந்து அதிலிருந்த கடிதங்களையெல்லாம் சுக்கு நூறாகக் கிழித்துப்போட்டாள். அன்று தபாலில் வந்த பத்திரிகைத் துண்டை அணு அணுவாகப் போகும் வரையில்கிழித்து எறிந்தாள். பிறகு புறப்படுவதற்கு ஆயத்தமாகிக் கீழ் வீட்டில் சந்தடி அடங்கட்டும் என்றுகாத்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் வரையில் கீழே ஏக ரகளையாகத்தானிருந்தது பட்டாபிராமனுடைய அதட்டல், சரஸ்வதி அம்மாளின் கோபக் குரல் - இவற்றுடன் குழந்தைகள் பட்டு, பாலுவின் அழுகைச் சத்தமும் கலந்து கேட்டது. பாவம்! அந்த அர்த்த ராத்திரிச் சந்தடியில் குழந்தைகள் விழித்தெழுந்து அம்மா மூர்ச்சையாகிக் கிடந்ததைப் பார்த்துவிட்டுஅழத்தொடங்கின. சிறிது நேரத்துக்கெல்லாம் லலிதாவின் தீனக்குரல் கேட்டது. கொஞ்சம்கொஞ்சமாகச் சந்தடி அடங்கியது, விளக்குகள் அணைக்கப்பட்டன. பின்னர் அந்த வீட்டில்நிசப்தம் குடிகொண்டது. மேலும் சிறிது நேரம் சீதா காத்திருந்தாள். வீட்டிலுள்ளவர்களிடம்சொல்லிக்கொள்ளாமல் போகலாமா என்ற எண்ணம் எழுந்து தொந்தரவு செய்தது. ஆனால்நேரம் ஆக ஆக அவளுடைய பொறுமை குறைந்து வந்தது. அந்த அறையின் நாலு பக்கத்துச்சுவர்களும் அவளை நோக்கி நெருங்கி நெருங்கி வருவதாகத் தோன்றியது. இன்னும் சற்றுநேரம்அறையில் இருந்தால் அந்தச் சுவர்கள் அவளை நெருங்கி வந்து நாலாபுறமும் அமுக்கி மூச்சுத்திணற அடித்துக் கொன்றுவிடும் என்ற பீதி உண்டாயிற்று.         அந்தப் பீதியிலிருந்து விடுவித்துக் கொள்ளச் சீதா விரைந்து எழுந்தாள்.மேஜையிலிருந்து ஒரு காகிதம் எடுத்து அதில் லலிதாவுக்கு ஒரு கடிதம் எழுதத் தொடங்கினாள்.ஒரு வரி, இரண்டு வரி எழுதிக் கிழித்துப் போட்டாள். கடிதம் எழுதுவது சாத்தியமில்லை என்றுதீர்மானித் தாள். கைப்பெட்டியையும் மணிபர்சையும் எடுத்துக்கொண்டு விளக்கை அணைத்து விட்டுப் புறப்பட்டாள். அடிமேல் அடிவைத்துச் சத்தமின்றி மெதுவாக நடந்து மச்சுப் படிகளில் இறங்கினாள். கீழ்க்கட்டுத் தாழ்வாரத்தில் நீலவர்ண மின்சார தீபம் எரிந்து கொண்டிருந்தது.அந்த மங்கிய வெளிச்சத்தில் அவளுக்கு எதிரே இருந்த சுவரில் ஒரு படம் தென்பட்டது. அந்தப் படத்தில் காந்தி மகாத்மாவின் திருஉருவம் இருந்தது. சாந்தி நிறைந்து புன்னகை தவழ்ந்த மகாத்மாவின் திருமுகமும் கருணை ததும்பிய கண்களும் காந்திஜி உண்மையிலே அங்கு வீற்றிருந்து அவளை ஆசீர்வதிப்பது போன்ற தெய்வீக உணர்ச்சியைச் சீதாவுக்கு உண்டாக்கிற்று.அது ஒரு நல்ல சகுனம் என்றும் அவளுக்குத் தோன்றியது. "கலியுகத்திலே கண்கண்ட தெய்வம்காந்திமகான்தான்" என்று சீதாவின் தாயார் அவளுடைய இளம்பிராயத்தில் அடிக்கடிசொல்லியிருந்தது அவளுடைய மனதில் நன்கு பதிந்து நிலை பெற்றிருந்தது. பெட்டியைத்தரையில் வைத்துவிட்டுச் சீதா மகாத்மாவின் திருவுருவத்தின் முன்னால் நமஸ்கரித்தாள்.எழுந்ததும் ஒரு நிமிஷம் கைகூப்பி நின்று, "எந்தையே! என்னை ஆசீர்வதியுங்கள். வாழ்க்கையில்நான் புதியதாக மேற்கொள்ளப் போகும் பாதையில் என்றும் உறுதி தவறாமல் நடப்பதற்குவேண்டிய மனோபாவத்தை எனக்கு அளியுங்கள்!" என்று வேண்டிக் கொண்டாள். அப்படிவேண்டிக்கொண்டதோடு மட்டும் அவளுடைய மனம் திருப்தி அடைந்துவிடவில்லை. இன்னும்ஏதோ மனக் குறை இருந்தது, சிறிது நேரம் சிந்தனை செய்தாள். உடனே தன் மனக்குறையைத்தீர்க்கும் மருந்து இன்னதென்று புலப்பட்டது.          "காந்தி என்னும் கருணைத் தெய்வமே! 'தங்களுடைய ஆசியை நம்பியே இன்று நான் இந்த வீட்டைவிட்டுத் தன்னந்தனியாக வெளிக் கிளம்புகிறேன். இனி நான் நடக்கப் போகும் பாதையில் எனக்கு எத்தகைய இன்னல்கள் நேர்ந்தாலும் எவ்வளவு கஷ்டங்கள் ஏற்பட்டாலும்தங்களுடைய மனதுக்கு உகந்திருக்க முடியாத காரியம் எதையும் செய்யமாட்டேன்.எப்படிப்பட்ட நிலைமையிலும் எந்தக் காரியத்தையும் 'இதை காந்தி மகாத்மாஒப்புக்கொள்வாரா?' என்று எனக்கு நானே கேட்டு நிச்சயப்படுத்திக் கொண்டுதான் செய்வேன். இவ்விதம் தங்கள் சந்நிதியில் இதோ சத்தியம் செய்கிறேன். இந்தப் பிரதிக்ஞையைநிறைவேற்றும் சக்தியையும் தாங்கள்தான் எனக்கு அருளவேண்டும்!" இவ்விதம் சீதா மனதிற்குள்தெளிவாகச் சிந்தித்து பிரதிக்ஞை எடுத்துக்கொண்டு மகாத்மாவின் படத்துக்கு ஒரு கும்பிடுபோட்டு விட்டுத் தரையிலிருந்து பெட்டியை எடுத்துக் கொண்டு மறுபடி புறப்பட்டாள். வாசற்கதவைச் சத்தமின்றித் திறந்துகொண்டு வெளியேறினாள். வெளியேறும்போது அவளுடைய மனம், "இந்த வீட்டில் நான் புகுவதற்கு முன்னால் அன்பும் சாந்தமும் நிலவின. என்னால் விளைந்த குழப்பம் என்னோடு போகட்டும். இனி முன்போலவே அமைதி நிலவட்டும். இந்த வீட்டில்உள்ளவர்கள் ஒவ்வொருவரும் என்பேரில் எவ்வளவோ பிரியமாயிருந்தார்கள்: அதற்கெல்லாம்பதிலாக நான் பெரும் அபசாரம் செய்துவிட்டேன். கடவுள் என்னை மன்னிப்பாராக!" என்றுஎண்ணமிட்டது.          பட்டாபிராமனுடைய வீட்டிலிருந்து ரயில்வே ஸ்டேஷன் அரை மைல் தூரத்தில் இருந்தது. சீதா அந்தத் தேவபட்டணத்துக்கு வந்த புதிதில் வெள்ள நிவாரண வேலைசெய்ததிலும் பிறகு தேர்தல் வேலை செய்ததிலும் அந்நகரின் தெருக்கள், சந்துபொந்துகள், மூலைமுடுக்குகள் எல்லாம் அவளுக்கு நன்றாகத் தெரிந்து போயிருந்தன. ரயில்வே ஸ்டேஷனைநோக்கி நேராகச் சென்ற குறுக்குப் பாதையில் அவள் இப்போது நடந்தாள். வீதிகளிலும் சந்துகளிலும் ஜன நடமாட்டமே இல்லை. காலை மூன்று மணிதான் உலகமே நன்றாய்த் தூங்கும்நேரம் என்று தோன்றியது. திருடர்கள் தங்களுடைய திருவிளையாடல்களை நடத்துவதற்கு அதுவே சரியான நேரம். யாராவது தன்னை அடித்துப் பிடுங்குவதற்கு வந்து சேர்ந்தால்?... சேச்சே!அப்படியெல்லாம் எதற்காகத் தனக்கு நேரப்போகிறது? அப்படியெல்லாம் நேராதா? ஏன்நேராது? தான் துரதிருஷ்டத்துக்கும் துன்பத்துக்குமே பெண்ணாய் பிறந்தவள் ஆயிற்றே? யாரோதன்னைப் பின் தொடர்ந்து வருகிறார்கள் போலிருக்கிறதே? நெருங்குவதற்குத் தயங்கிக்கொஞ்ச தூரத்திலேயே வருகிறது போல் காணப்படுகிறதே? வருகிறவர் ஒருவரா அதிகம் பேரா?எதற்காகத் தன்னை அவர்கள் தொடர்ந்து வரவேண்டும்? ஒருவேளை அவர்களும் தன்னைப் போல்ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகலாம் அல்லவா? தான் அநாவசியமாக ஏன் பீதிக்கொள்ளவேண்டும்?          பீதி அநாவசியந்தான்! யார் தன்னை என்ன செய்துவிட முடியும்? ஒன்றும் முடியாதுதான்!ஆயினும் நெஞ்சம் படக் படக், என்று அடித்துக் கொள்வதில் குறைவில்லை. காலடிச் சத்தத்து க்கு மேல் இதயம் அடித்துக் கொள்ளும் சத்தம் அதிகமாகக் கேட்கிறதே! கடவுளே! காந்தி மகாத்மா! இந்தப் பேதையைக் காப்பாற்றுங்கள்! இது என்ன பைத்தியம்? யாரிடமிருந்துஎதற்காகக் கடவுளும் காந்திஜியும் தன்னை இப்போது காப்பாற்ற வேண்டும்? தனக்கு என்ன பயம்? தனக்குக் கெடுதல் செய்வதில் யாருக்கு என்ன அக்கறை இருக்க முடியும்? அப்படியும்நினைப்பதற்கில்லை, இந்த ஊரில் தனக்கு யாரோ விரோதிகள் இருக்கிறார்கள். இருக்கிறதினாலேதான் தன்னைப் பற்றி அப்படித் துண்டுப் பிரசுரம் போட்டார்கள். பிற்பாடு பத்திரிகையில் தன்னையும் பட்டாபிராமனையும் பற்றி அவ்வளவு கேவலமாக எழுதினார்கள்.அப்படிப்பட்ட பரம விரோதிகள் என்னதான் செய்யமாட்டார்கள்? ஒற்றர்களை வைத்திருந்துதான் தனியாக வெளிக் கிளம்புவதைக் கவனித்துப் பின்தொடர்ந்து வருகிறார்களா என்ன? பின்தொடர்ந்து வந்து ஒருவேளை தன்னை வெட்டிப் போட்டு விடுவார்களோ? அப்படிச் செய்து விட்டால் ரொம்ப நல்லதாகப் போய்விடும்! இந்த வாழ்க்கையாகிற பாரத்தை மேலும் சுமக்கவேண்டியிராது? ஆனால் அந்தக் கிராதகர்கள் அப்படிச் செய்வார்களா? அல்லது தான்தனியாகக் கிளம்பிச் சென்றதைக் கவனித்து வைத்துக் கொண்டிருந்து இல்லாததையும்பொல்லாததையும் சேர்த்து மறுபடியும் பத்திரிகையில் ஏதாவது பயங்கரமாக எழுதுவார்களா? அப்படியெல்லாம் எழுதித் தன்னை அவமானப்படுத்துவதைக் காட்டிலும் ஒரு வழியாகக் கொன்றுபோட்டு விட்டால் நிம்மதியாகப் போய்விடும்.         ரயில்வே ஸ்டேஷனுக்கு இன்னும் பாதி தூரம் இருக்கும் போது பின்னால் யாரோதன்னைத் தொடர்ந்து வருவதாகச் சீதா சந்தேகித்தாள். ரயில்வே ஸ்டேஷனைக் கிட்டத்தட்டநெருங்கியபோது அவளுடைய பீதி ஒருவாறு குறைந்து தைரியம் மிகுந்தது. வருகிறது யார் என்றுதெரிந்துகொள்ளும் எண்ணத்தோடு முனிசிபல் விளக்கு மரம் ஒன்றின் அடியில் நின்றாள். நின்று பரபரப்புடன் தான் வந்த வழியே பார்த்துக் கொண்டிருந்தாள். சந்தின் திருப்பத்தில் திரும்பி ஒருஆசாமி வந்தான். அவன் வேறு யாரும் இல்லை; சூரியாவின் தம்பி சுண்டுதான்! சீதாவின் மனத்திலிருந்த பயம் என்கிற பாரம் விலகியது. பயம் இருந்த இடத்தில் கோபம் குடிபுகுந்தது. இவன் எப்படி திடீரென்று இங்கே வந்து முளைத்தான்? தன்னை எதற்குப் பின்தொடர்ந்து வந்தான்? வந்ததுதான் வந்தானே, சட்டென்று வந்து தனக்குத் துணையாகச் சேர்ந்து கொள்ளக் கூடாதா? பின்னாலேயே வந்து தன்னை இப்படிப் பயமுறுத்துவானேன்? அசட்டுப் பிள்ளை!கிட்டா மாமாவின் பிள்ளைகளில் சூரியா ஒருவன்தான் கொஞ்சம் சமர்த்து; மற்றவர்கள் எல்லாரும்மோசந்தான். அசட்டுச் சிரிப்புடன் அருகில் நெருங்கி வந்த சுண்டுவைப் பார்த்துச் சீதா,"எதற்காக அப்பா, என்னைப் பின்தொடர்ந்து வருகிறாய்? உனக்கு வேலை இல்லையா அல்லதுஉன் அம்மா நான் திரும்பி வந்து விடாதபடி ரயிலில் ஏற்றி விட்டு வருவதற்கு உன்னை அனுப்பிவைத்தாளா? யாரோ திருடன் தொடர்ந்து வருகிறானாக்கும் என்று எண்ணியல்லவா பயந்துபோய் விட்டேன்?" என்றாள். "இப்படித்தான் உலகத்தில் பல தவறுகள் ஏற்படுகின்றன. ஏதோ சூரியா எழுதியிருக்கிறானே என்பதற்காக நான் உன்னுடைய துணைக்கு வந்தேன். நீ என்னைத்திருடன் என்று எண்ணிப் பயந்து கொண்டாய்! அநாவசியமாக என் அம்மாவையும் வைகிறாய்!"என்றான் சுண்டு. "அது போனால் போகட்டும், சுண்டு! சூரியா கடிதம் எழுதியிருக்கிறானா?"என்று சீதா ஆவலுடன் கேட்டாள். சூரியா ஒருவனாவது தன்னுடைய நன்மையில் உண்மையானகவலை கொண்டவனாயிருக்கிறானே என்று எண்ணிச் சீதா அத்தனை துயரத்துக்கிடையிலும்சிறிது ஆறுதல் பெற்றாள்.         "சூரியா டில்லியிலேயிருந்து எழுதியிருந்தான். ஒருவேளை நீ கல்கத்தாவுக்குப்புறப்படலாம் என்றும், அப்படியானால் நான் சென்னை வரையிலாவது போய்க் கல்கத்தா ரயிலில்உன்னை ஏற்றி விடும்படியும் எழுதியிருந்தான். நீ விரும்பினால் கல்கத்தா வரையிலே கூடப்போகும்படி எழுதியிருந்தான். ஆனால் நீ இப்படி அர்த்தராத்திரியில் ஒருவருக்கும்தெரியாமல் வீட்டுக் கதவைத் திறந்து போட்டு விட்டுப் புறப்படுவாய் என்று நான்எதிர்பார்க்கவேயில்லை....." இத்தனை நாளும் நீ எங்கே இருந்தாய் சுண்டு! உன்னை நான்பார்க்கவே இல்லையே? திடீரென்று இன்றைக்கு எப்படி வந்து முளைத்தாய்?" "உனக்கு எங்கேஎலெக்ஷன் தடபுடலில் என்னைப்பற்றிக் கவனிக்க நேரம் கிடைக்கப் போகிறது? இத்தனைநாளும் நான் ராஜம்பேட்டையில் இருந்தேன். இந்த மார்ச்சு பரீட்சையில் தவறிவிட்டேன்.அம்மா, சூரியா இரண்டு பேரும் ஊரிலிருந்து வந்து விட்டார்கள் அல்லவா? அதற்காக என்னைப்போய் அங்கே இருக்கச் சொன்னார்கள். சூரியாவின் கடிதம் வந்ததும் புறப்பட்டு வந்தேன்.அதோடு சேர்மன் தேர்தலின்போது இங்கே இருந்து அத்திம்பேர் வெற்றி பெற்றால் வாழ்த்துக்கூற விரும்பினேன். ஆனால் வாழ்த்துக் கூற அவசியமில்லாமலே போய் விட்டது. சேர்மன் வேலைஆனதற்காக அத்திம்பேருக்கு அனுதாபம் தான் சொல்லவேண்டும்." "வா ஸ்டேஷன் பக்கம்நடந்து கொண்டே பேசலாம்" என்று சொல்லிச் சீதா நடக்கத் தொடங்கினாள். ரயில்வே ஸ்டேஷன் கிட்ட இருந்தது, ரயிலோ நாலரை மணிக்குத்தான். ஆகையால் மெள்ள மெள்ளப்பேசிக் கொண்டே அவர்கள் நடந்தார்கள். "ராத்திரி நடந்ததெல்லாம் உனக்குத் தெரியுமா,என்ன? எங்கேயிருந்தாய் நீ?" என்று சீதா கேட்டாள். வெட்கத்தோடு முழுவதும் அவனுக்குத்தெரிந்திருக்க முடியாது என்று எண்ணினாள். "எதிர் வீட்டுத் தாமோதரம் பிள்ளை வீட்டில் படுத்திருந்தேன். பிள்ளையும் நானும் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். ரகளையில் பெரும் பாகம் எங்களுக்குக் கேட்டது. மிச்சத்தை இட்டு நிரப்பிக் கொண்டோம். சந்தடி ஓய்ந்து சிறிதுநேரத்திற்குப் பிறகு நான் தூங்கிவிட்டேன். ஆனால், பாவம் தாமோதரம் பிள்ளைதூங்கவேயில்லை அவருக்கு ரொம்ப வருத்தம். நீ வெளிக் கிளம்புவதை அவர்தான் பார்த்துக்கொண்டிருந்து என்னை எழுப்பி விட்டார்....."         "பாவம்! தாமோதரம் பிள்ளை ரொம்ப நல்ல மனிதர். அவர் அப்போது சொன்னதைக்கேட்காமற் போனோம்; அவர் சொன்னதைக் கேட்டு இந்த எலெக்ஷன் தொல்லையில் இறங்காமலிருந்தால் இப்படியெல்லாம் ஏற்பட்டிராது. என்ன தவறு செய்து விட்டேன்!""அத்தங்கா! இதெல்லாம் ஒரு தவறு ஆகாது. நீ செய்த அடிப்படையான தவறு பன்னிரண்டு வருஷத்துக்கு முன் ராஜம்பேட்டையில் நடந்தது. ஏதோ அந்தச் சௌந்தரராகவன் திடீரென்றுசொன்னதற்காக நீ அவனைக் கலியாணம் செய்து கொண்டிருக்கக் கூடாது. நியாயமாக நீ சூரியாவைக் கலியாணம் செய்து கொண்டிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தாயானால் இரண்டு பேரும் வாழ்க்கையில் சந்தோஷமாக இருந்திருப்பீர்கள். இப்போது நீங்கள் இரண்டுபேருமே சந்தோஷமின்றிக் கஷ்டப்படுகிறீர்கள்." "நீ சொல்வது தப்பு, சுண்டு! நானும் சூரியாவும்கலியாணம் செய்து கொண்டிருந்தால் ஒரு நாளும் எங்கள் வாழ்க்கை சந்தோஷமாயிருந்திராது.""ஏன் அப்படிச் சொல்கிறாய் அத்தங்கா! சூரியாவுக்கு உன்பேரில் உள்ள அபிமானம் உனக்குத்தெரியாதா, என்ன? நீ நடந்த பூமியை அவன் பூஜை செய்கிறவன் ஆயிற்றே! உன்னுடையகஷ்டங்களை நினைத்து இரவு பகல் இப்போதுகூட உருகிக் கொண்டிருக்கிறானே?இல்லாவிட்டால் பரீட்சைக்குப் படிக்கும் எனக்கு உன்னைப் பற்றிக் கடிதம் எழுதுவானா?""சூரியாவுக்கு என் பேரில் அபிமானம் அதிகம் என்பது எனக்குத் தெரியும், சுண்டு! ஆனால்அபிமானம் வேறு விஷயம்,         கலியாணம் வேறு விஷயம். வாழ்க்கையில் அவனுடைய இலட்சியங்களுக்கும்என்னுடைய இலட்சியங்களுக்கும் ரொம்ப வித்தியாசம் உண்டு. அவனுக்கு யாருக்காவதுஉபகாரம் செய்து கொண்டிருந்தால் போதும்; தேசத்துக்கு ஏதேனும் தொண்டு செய்துகொண்டிருந்தால் போதும். புகழிலும் பெயரிலும் அவனுக்கு ஆசையே கிடையாது.எனக்கோ, யாராவது நாலுபேர் என்னை எதற்காவது மெச்சிக்கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான்எனக்குச் சந்தோஷமாயிருக்கிறது நான் இருக்கும்போது வேறு யாரையாவது பாராட்டினால்எனக்குப் பிடிப்பதில்லை. நான் பிரசங்க மேடையில் ஏறிப் பேசும்போது நாலுபேர் என்னைப்பார்த்து மலர்ந்த முகத்துடன் நின்றால், என்னுடைய பேச்சை மெச்சிக் கை தட்டினால் எனக்குஎன்னமோ பட்டாபிஷேகம் பண்ணியது போலிருக்கும். சூரியாவுக்கோ இதிலெல்லாம் ஆசையேகிடையாது. எங்களுடைய வாழ்க்கை எப்படிச் சந்தோஷமாயிருக்க முடியும்?" "நீ சொல்வதில்ஓரளவு உண்மை இருக்கிறது, அத்தங்கா! ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அப்படி உலகத்தில்ஒத்த மனத்தோடு தம்பதிகள் எங்கே அமைகிறார்கள்!" "புது டில்லியில் ஒருத்தி இருக்கிறாள், சுண்டு! அவள் பெயர் தாரிணி. சூரியாவுக்கும் அவளுக்கும் ரொம்பப் பொருத்தம் எனப் பல சமயம்நான் எண்ணியதுண்டு."         "சூரியாகூட என்னிடம் சொல்லியிருக்கிறான், அந்தத் தாரிணியைப் பற்றி! ஆனால்அவளுக்கு இந்த ஜன்மத்தில் கலியாணம் நடக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்தவுடனே அவர்கள் கலியாணம் செய்து கொள்ளப் போகிறார்களாம்! எப்படி இருக்கிறது கதை! இந்தியாவாவது சுதந்திரம் அடையவாவது? இந்த ஜன்மத்தில் இல்லை!உன்னிடம் சொன்னால் என்ன, அத்தங்கா! இந்தச் சூரியாவுக்குக் கலியாணம் ஆகாதகாரணத்தினால், என்னுடைய கலியாணமும் தடைப்பட்டுக் கொண்டே வருகிறது....!" சீதாவுக்குஅவளை அறியாமல் சிரிப்பு வந்தது. "நாங்கள் எல்லாரும் கலியாணம் செய்து கொண்டுகஷ்டப்படுவது போதாதா சுண்டு! எல்லாக் கூத்தையும் நீ பார்த்துக்கொண்டுதானேயிருக்கிறாய்?" என்று கேட்டாள். "நீங்கள் செய்த தவறையே நானும்செய்வேனா, என்ன? முன்னால் போகிறவன் குழியில் விழுந்தால் பின்னால் வருகிறவனுக்குத்தீவர்த்தி பிடித்த மாதிரி அல்லவா? எனக்குக் கலியாணம் செய்து கொள்ளும் உத்தேசமேகிடையாது. விளையாட்டுக்காகச் சொன்னேன்?" என்றான் சுண்டு.

by Swathi   on 19 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.