LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1188 - கற்பியல்

Next Kural >

பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
இவள் பிரிவால் வருத்திப் பசலை நிறம் அடைந்தாள் என்ற பழி சொல்வதே அல்லாமல், இவளைக் காதலர் விட்டுப் பிரிந்தார் என்று சொல்பவர் இல்லையே!.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
('நீ இங்ஙனம் பசக்கற்பாலையல்லை' என்ற தோழியோடு புலந்து சொல்லியது.) இவள் பசந்தாள் என்பது அல்லால் - இவள் ஆற்றியிராது பசந்தாள் என்று என்னைப் பழி கூறுவதல்லது; இவளை அவர் துறந்தார் என்பார் இல் - இவளை அவர் துறந்து போயினார் என்று அவரைக் கூறுவார் ஒருவருமில்லை. ('என்பார்' என வேறுபடுத்துக் கூறினாள், தன்னையே நெருங்குதல் பற்றிப் புலக்கின்றமையின்.)
மணக்குடவர் உரை:
இவள் பசந்தாளென்று எனக்குக் குற்றம் நாடுமதல்லது, இவளைத் துறந்தார் அவரென்று அவரது கொடுமையைச் சொல்லுவார் இல்லை. இஃது இப்பசப்பு வரலாகாதென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
(நீயிங்ஙனம் பசத்தல் கூடாதென்ற தோழியொடு புலந்து சொல்லியது.) இவள் பசந்தாள் என்பது அல்லால்- இவள் காதலர் வரும்வரை ஆற்றியிராது பசலை கொண்டாள் என்று என்னைப் பழிப்பதல்லது; இவளை அவர் துறந்தார் என்பார் இல்- இவளை அவர் கைவிட்டுப் போய்விட்டாரென்று அவரைக் குறை கூறுவார் இவ்வுலகத்துஒருவருமில்லை. தன்னையே கடிதல் பற்றிப் புலக்கின்றாளாதலின்,'என்பார்' என அயன்மைபடுத்திக் கூறினாள்.
கலைஞர் உரை:
இவள் உடலில் பசலை நிறம் படர்ந்தது எனப் பழித்துக் கூறுகிறார்களே அல்லாமல், இதற்குக் காரணம், காதலன் பிரிந்து சென்றிருப்பது தான் என்று சொல்பவர் இல்லையே.
சாலமன் பாப்பையா உரை:
இங்கோ இவள் பசலை உற்றாள் என்று சொல்கிறார்களே தவிர, இந்தப் பெண்ணை விட்டுவிட்டு அவர் போய்விட்டாரே என்று சொல்பவர் ஒருவரும் இல்லை.
Translation
On me, because I pine, they cast a slur; But no one says, 'He first deserted her.'.
Explanation
Besides those who say "she has turned sallow" there are none who say "he has forsaken her".
Transliteration
Pasandhaal Ivalenpadhu Allaal Ivalaith Thurandhaar Avarenpaar Il

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >