LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

ரயிலில் குவியும் கூட்டம் குறையும் வருவாய் காரணம் என்ன?

ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தாலும், அதற்கு எற்றார் போல் வருமானம் இல்லை என ரயில்வே நிர்வாகம் கவலை தெரிவித்துள்ளது. 

 

இது குறித்து ரயில்வே வாரிய உறுப்பினர் தேவி பிரசாத் பாண்டே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நாட்டில், பேருந்து கட்டணங்களை விட, ரயில் பயண கட்டணம் குறைவாக இருப்பதால், அனைத்து ரயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஆனால், அதற்கு எற்றார் போல் வருமானம் இல்லை என தெரிவித்த தேவி பிரசாத் மேலும் கூறியதாவது,

 

கடந்த ஏப்ரல் - செப்டம்பர் மாதங்களில் மெயில் மற்றும் விரைவு ரயில், புறநகர் ரயில்களில் முன்பதிவு மற்றும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணித்தவர்கள் எண்ணிக்கை, 198 கோடி. இதே கால கட்டத்தில், கடந்தாண்டு, 206 கோடியாக இருந்தது. 

 

இதே மாதங்களில் வருவாய், 18 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. கடந்தாண்டு, 15 ஆயிரம் கோடியாக இருந்தது. வருவாய், 16 சதவீதம் அதிகம் என்றாலும், கட்டண உயர்வு காரணமாக, 20 சதவீதத்திற்கு மேல் இருந்திருக்க வேண்டும்.

 

கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது, டிக்கெட் முன்பதிவு 3.68 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு காரணம், ரயில்களில் டிக்கெட் இல்லாமல், பயணிப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதே என தெரிய வந்துள்ளது. 

 

முக்கியமாக, குறைந்த தூர பயணத்திற்கான டிக்கெட் விற்பனையில் தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீண்ட தொலைவு பயணத்திற்கான முன்பதிவில் பாதிப்பில்லைஇதை சமாளிக்க, கூடுதல் டிக்கெட் பரிசோதகர்களை நியமிக்க முடிவு செய்துள்ளோம். கூடுதல் கவுன்டர்களையும் அமைக்க உள்ளோம்.

 

இவ்வாறு, தேவி பிரசாத் பாண்டே கூறினார்.

by Swathi   on 20 Oct 2013  0 Comments
Tags: ரயில் பயணம்   ரயில் கட்டணம்   டிக்கெட் இல்லாமல் பயணம்   வருவாய் குறைவு   ரயில் நிலையம்   Passenger   Train Fare  
 தொடர்புடையவை-Related Articles
வாகனங்களின் குறைந்தபட்ச மைலேஜ் அளவை அதிகரிக்க மத்திய அரசு சுற்றிக்கை !! வாகனங்களின் குறைந்தபட்ச மைலேஜ் அளவை அதிகரிக்க மத்திய அரசு சுற்றிக்கை !!
ரயிலில் குவியும் கூட்டம் குறையும் வருவாய் காரணம் என்ன? ரயிலில் குவியும் கூட்டம் குறையும் வருவாய் காரணம் என்ன?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.