LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- எட்டுத்தொகை

பதிற்றுப்பத்து-5

 

ஆறாம் பத்து
பாடினோர் : காக்கைப் பாடினியார் நச்செள்ளையார்
பாடப்பட்டோ ர் : ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்
51. மன்னவன் வினோதத்து மென்மையும் செருவகத்துக் கடுமையும் உடன் கூறுதல்
துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர் : வடு அடு நுண் அயிர் 
துளங்கு நீர் வியலகம் கலங்கக் கால் பொர,
விளங்கு இரும் புணரி உரும் என முழங்கும்
கடல் சேர் கானற் குட புலம் முன்னி,
கூவல் துழந்த தடந் தாள் நாரை
குவி இணர் ஞாழல் மாச் சினைச் சேக்கும், 5
வண்டு இறைகொண்ட, தண் கடல் பரப்பின்
அடும்பு அமல் அடைகரை அலவன் ஆடிய
வடு அடு நுண் அயிர் ஊதை உஞற்றும்,
தூ இரும் போந்தைப் பொழில், அணிப் பொலிதந்து,
இயலினள், ஒல்கினள், ஆடும் மட மகள் 10
வெறி உறு நுடக்கம் போலத் தோன்றி,
பெரு மலை, வயின் வயின் விலங்கும் அருமணி
அர வழங்கும், பெருந் தெய்வத்து,
வளை ஞரலும் பனிப் பௌவத்து,
குண குட கடலோடு ஆயிடை மணந்த 15
பந்தர் அந்தரம் வேய்ந்து,
வண் பிணி அவிழ்ந்த கண் போல் நெய்தல்
நனை உறு நறவின் நாடுடன் கமழ,
சுடர் நுதல், மட நோக்கின்,
வாள் நகை, இலங்கு எயிற்று, 20
அமிழ்து பொதி துவர் வாய், அசை நடை விறலியர்
பாடல் சான்று நீடினை உறைதலின்,
'வெள் வேல் அண்ணல் மெல்லியன் போன்ம்!' என,
உள்ளுவர் கொல்லோ, நின் உணராதோரே?
மழை தவழும் பெருங் குன்றத்து, 25
செயிருடைய அரவு எறிந்து,
கடுஞ் சினத்த மிடல் தபுக்கும்
பெருஞ் சினப் புயல் ஏறு அனையை;
தாங்குநர் தடக் கை யானைத் தொடிக் கோடு துமிக்கும்
எஃகுடை வலத்தர், நின் படைவழி வாழ்நர்; 30
மறம் கெழு போந்தை வெண் தோடு புனைந்து,
நிறம் பெயர் கண்ணிப் பருந்து ஊறு அளப்ப,
தூக் கணை கிழித்த மாக் கண் தண்ணுமை
கை வல் இளையர் கை அலை அழுங்க,
மாற்று அருஞ் சீற்றத்து மா இருங் கூற்றம் 35
வலை விரித்தன்ன நோக்கலை;
கடியையால், நெடுந்தகை செருவத்தானே.
52. மன்னவன் கைவண்மையோடும் வென்றியோடும் படுத்து அவன் காம இன்பச் சிறப்புக் கூறுதல்
துறை : குரவை நிலை 
வண்ணம் : ஒழுகு வண்ணம் 
தூக்கு : செந்தூக்கு 
பெயர் : சிறு செங் குவளை 
கொடி நுடங்கு நிலைய கொல் களிறு மிடைந்து,
வடி மணி நெடுந் தேர் வேறு புலம் பரப்பி,
அருங் கலம் தரீஇயர், நீர் மிசை நிவக்கும்
பெருங் கலி வங்கம் திசை திரிந்தாங்கு,
மை அணிந்து எழுதரு மா இரும் பல் தோல் 5
மெய் புதை அரணம் எண்ணாது, எஃகு சுமந்து,
முன் சமத்து எழுதரும் வன்கண் ஆடவர்
தொலையாத் தும்பை தெவ்வழி விளங்க,
உயர்நிலை உலகம் எய்தினர், பலர் பட,
நல் அமர்க் கடந்த நின் செல் உறழ் தடக் கை 10
இரப்போர்க்குக் கவிதல் அல்லதை, இரைஇய
மலர்பு அறியா எனக் கேட்டிகும்: இனியே,
சுடரும் பாண்டில் திரு நாறு விளக்கத்து,
முழா இமிழ் துணங்கைக்குத் தழூஉப் புணை ஆக,
சிலைப்பு வல் ஏற்றின் தலைக் கை தந்து, நீ 15
நளிந்தனை வருதல், உடன்றனள் ஆகி;
உயலும் கோதை, ஊரல்அம் தித்தி,
ஈர் இதழ் மழைக்கண், பேர் இயல் அரிவை
ஒளி இதழ் அவிழகம் கடுக்கும் சீறடி,
பல் சில கிண்கிணி சிறு பரடு அலைப்ப, 20
கொல் புனல் தளிரின் நடுங்குவனள் நின்று, நின்
எறியர் ஓக்கிய சிறு செங் குவளை,
'ஈ' என இரப்பவும், ஒல்லாள்; 'நீ எமக்கு
யாரையோ?' எனப் பெயர்வோள் கையதை:
கதுமென உருத்த நோக்கமொடு, அது நீ 25
பாஅல் வல்லாய் ஆயினை. பாஅல்
யாங்கு வல்லுநையோ-வாழ்க, நின் கண்ணி!-
அகல் இரு விசும்பில் பகல் இடம் தரீஇயர்;
தெறு கதிர் திகழ்தரும் உரு கெழு ஞாயிற்று
உருபு கிளர் வண்ணம் கொண்ட 30
வான் தோய் வெண்குடை வேந்தர்தம் எயிலே?
53. அடைந்தவர்க்கு அருளலொடு படுத்து, மன்னவன் வென்றிச் சிறப்புக் கூறுதல்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம் 
தூக்கு : செந்தூக்கு 
பெயர் : குண்டு கண் அகழி
வென்று கலம் தரீஇயர் வேண்டு புலத்து இறுத்து, அவர்
வாடா யாணர் நாடு திறை கொடுப்ப, 
'நல்கினை ஆகுமதி, எம்' என்று; அருளி, 
கல் பிறங்கு வைப்பின் கடறு அரை யாத்த நின் 
தொல் புகழ் மூதூர்ச் செல்குவை ஆயின், 5
செம்பொறிச் சிலம்பொடு அணித் தழை தூங்கும்
எந்திரத் தகைப்பின் அம்புடை வாயில், 
கோள் வல் முதலைய குண்டு கண் அகழி,
வான் உற ஓங்கிய வளைந்து செய் புரிசை, 
ஒன்னாத் தெவ்வர் முனை கெட விலங்கி, 10
நின்னின் தந்த மன் எயில் அல்லது,
முன்னும் பின்னும் நின் முன்னோர் ஓம்பிய
எயில் முகப்படுத்தல் யாவது? வளையினும்,
பிறிது ஆறு சென்மதி, சினம் கெழு குருசில்!-
எழூஉப் புறந்தரீஇ, பொன் பிணிப் பலகைக் 15
குழூஉ நிலைப் புதவின் கதவு மெய் காணின்,
தேம் பாய் கடாத்தொடு காழ் கை நீவி, 
வேங்கை வென்ற பொறி கிளர் புகர் நுதல் 
ஏந்து கை சுருட்டி, தோட்டி நீவி, 
மேம்படு வெல் கொடி நுடங்க, 20
தாங்கல் ஆகா, ஆங்கு நின் களிறே.
54. மன்னவன் கொடைச் சிறப்பும் தன் குறையும் கூறி, வாழ்த்துதல்
துறை : காட்சி வாழ்த்து
வண்ணம் : ஒழுகு வண்ணம் 
தூக்கு : செந்தூக்கு 
பெயர் : நில்லாத் தானை 
வள்ளியை என்றலின், காண்கு வந்திசினே,
உள்ளியது முடித்தி; வாழ்க, நின் கண்ணி! 
வீங்கு இறைத் தடைஇய அமை மருள் பணைத் தோள்,
ஏந்து எழில் மழைக்கண், வனைந்து வரல் இள முலை, 
பூந் துகில் அல்குல், தேம் பாய் கூந்தல், 5
மின் இழை, விறலியர் நின் மறம் பாட;
இரவலர் புன்கண் தீர, நாள் தொறும்,
உரை சால் நன் கலம் வரைவு இல வீசி,
அனையை ஆகன்மாறே, எனையதூஉம்
உயர் நிலை உலகத்துச் செல்லாது, இவண் நின்று, 10
இரு நில மருங்கின் நெடிது மன்னியரோ!-
நிலம் தப இடூஉம் ஏணிப் புலம் படர்ந்து, 
படு கண் முரசம் நடுவண் சிலைப்ப, 
தோமர வலத்தர் நாமம் செய்ம்மார், 
ஏவல் வியங்கொண்டு, இளையரொடு எழுதரும் 15
ஒல்லார் யானை காணின்,
நில்லாத் தானை இறை கிழவோயே!
55. மன்னவன் உலகு புரத்தலும் தன் குறையும் கூறி, வாழ்த்துதல்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம் 
தூக்கு : செந்தூக்கு 
பெயர் : துஞ்சும் பந்தர் 
ஆன்றோள் கணவ! சான்றோர் புரவல! நின் நயந்து வந்தனன், அடு போர்க் கொற்றவ!
இன் இசைப் புணரி இரங்கும் பௌவத்து,
நன் கல வெறுக்கை துஞ்சும் பந்தர். 
கமழும் தாழைக் கானல்அம் பெருந் துறை, 5
தண் கடற் படப்பை நல் நாட்டுப் பொருந!
செவ் ஊன் தோன்றா, வெண் துவை முதிரை, 
வால் ஊன் வல்சி மழவர் மெய்ம்மறை! 
குடவர் கோவே! கொடித் தேர் அண்ணல்! 
வாரார் ஆயினும் இரவலர், வேண்டி, 10
தேரின் தந்து, அவர்க்கு ஆர் பதன் நல்கும்
நசை சால் வாய்மொழி இசை சால் தோன்றல்!-
வேண்டுவ அளவையுள் யாண்டு பல கழிய,
பெய்து புறந்தந்து, பொங்கல் ஆடி,
விண்டுச் சேர்ந்த வெண் மழை போலச் 15
சென்றாலியரோ-பெரும! அல்கலும்,
நனந் தலை வேந்தர் தார் அழிந்து அலற,
நீடு வரை அடுக்கத்த நாடு கைக்கொண்டு,
பொருது சினம் தணிந்த செருப் புகல் ஆண்மை,
தாங்குநர்த் தகைத்த ஒளி வாள், 20
ஓங்கல் உள்ளத்துக் குருசில்! நின் நாளே.
56. வென்றிச் சிறப்பு
துறை : ஒள் வாள் அமலை
வண்ணம் : ஒழுகு வண்ணம் 
தூக்கு : செந்தூக்கு 
பெயர் : வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி 
விழவு வீற்றிருந்த வியலுள் ஆங்கண்,
கோடியர் முழவின் முன்னர், ஆடல்
வல்லான் அல்லன்; வாழ்க அவன், கண்ணி!-
வலம் படு முரசம் துவைப்ப, வாள் உயர்த்து,
இலங்கும் பூணன், பொலங் கொடி உழிஞையன், 5
மடம் பெருமையின் உடன்று மேல் வந்த
வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி
வீந்து உகு போர்க்களத்து ஆடும் கோவே.
57. வென்றிச் சிறப்பொடு கொடைச் சிறப்பும் உடன் கூறுதல்
துறை : விறலி ஆற்றுப்படை 
வண்ணம் : ஒழுகு வண்ணம் 
தூக்கு : செந்தூக்கு 
பெயர் : சில் வளை விறலி 
ஓடாப் பூட்கை மறவர் மிடல் தப,
இரும் பனம் புடையலொடு வான் கழல் சிவப்ப, 
குருதி பனிற்றும் புலவுக் களத்தோனே, 
துணங்கை ஆடிய வலம் படு கோமான்: 
மெல்லிய வகுந்தில் சீறடி ஒதுங்கிச் 5
செல்லாமோதில்-சில் வளை விறலி!-
பாணர் கையது பணி தொடை நரம்பின்
விரல் கவர் பேரியாழ் பாலை பண்ணி,
குரல் புணர் இன் இசைத் தழிஞ்சி பாடி;
இளந் துணைப் புதல்வர் நல் வளம் பயந்த, 10
வளம் கெழு குடைச்சூல், அடங்கிய கொள்கை,
ஆன்ற அறிவின் தோன்றிய நல் இசை,
ஒள் நுதல் மகளிர் துனித்த கண்ணினும்,
இரவலர் புன்கண் அஞ்சும்
புரவு எதிர்கொள்வனைக் கண்டனம் வரற்கே? 15
58. மன்னவன் நாட்டுச் செல்வமும் அதற்கேற்ற அவனது கொடையும் கூறுதல்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம் 
தூக்கு : செந்தூக்கு 
பெயர் : ஏ விளங்கு தடக்கை 
ஆடுக, விறலியர்! பாடுக, பரிசிலர்!-
வெண் தோட்டு அசைத்த ஒண் பூங் குவளையர், 
வாள் முகம் பொறித்த மாண் வரி யாக்கையர்,
செல் உறழ் மறவர் தம் கொல்படைத் தரீஇயர், 
'இன்று இனிது நுகர்ந்தனம் ஆயின், நாளை 5
மண் புனை இஞ்சி மதில் கடந்தல்லது
உண்குவம்அல்லேம், புகா' எனக் கூறி,
கண்ணி கண்ணிய வயவர் பெருமகன்;
பொய் படுபு அறியா வயங்கு செந் நாவின்,
எயில் எறி வல் வில், ஏ விளங்கு தடக் கை, 10
ஏந்து எழில் ஆகத்துச் சான்றோர் மெய்ம்மறை;
வானவரம்பன் என்ப-கானத்துக்
கறங்கு இசைச் சிதடி பொரி அரைப் பொருந்திய
சிறியிலை வேலம் பெரிய தோன்றும்
புன்புலம் வித்தும் வன் கை வினைஞர் 15
சீருடைப் பல் பகடு ஒலிப்பப் பூட்டி,
நாஞ்சில் ஆடிய கொழு வழி மருங்கின்
அலங்கு கதிர்த் திரு மணி பெறூஉம்,
அகன் கண் வைப்பின் நாடு கிழவோனே.
59. வென்றிச் சிறப்பு
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம் 
தூக்கு : செந்தூக்கு 
பெயர் : மா கூர் திங்கள் 
பகல் நீடு ஆகாது, இரவுப்பொழுது பெருகி,
மாசி நின்ற மா கூர் திங்கள், 
பனிச் சுரம் படரும் பாண்மகன் உவப்ப, 
புல் இருள் விடிய, புலம்பு சேண் அகல, 
பாய் இருள் நீங்க, பல் கதிர் பரப்பி, 5
ஞாயிறு குணமுதல் தோன்றியாஅங்கு,
இரவல் மாக்கள் சிறுகுடி பெருக,
உலகம் தாங்கிய மேம்படு கற்பின்
வில்லோர் மெய்ம்மறை! வீற்று இருங் கொற்றத்துச்
செல்வர் செல்வ! சேர்ந்தோர்க்கு அரணம்!- 10
அறியாது எதிர்ந்து, துப்பில் குறையுற்று,
பணிந்து திறை தருப, நின் பகைவர், ஆயின்;
சினம் செலத் தணியுமோ? வாழ்க, நின் கண்ணி!-
பல் வேறு வகைய நனந் தலை ஈண்டிய
மலையவும் கடலவும் பண்ணியம் பகுக்கும் 15
ஆறு முட்டுறாஅது, அறம் புரிந்து ஒழுகும்
நாடல் சான்ற துப்பின் பணைத் தோள்,
பாடு சால் நன் கலம் தரூஉம்
நாடு புறந்தருதல் நினக்குமார் கடனே.
60. மன்னவன் கொடைச் சிறப்பொடு வென்றிச் சிறப்பும் கூறுதல்
துறை : விறலி ஆற்றுப்படை
வண்ணம் : ஒழுகு வண்ணம் 
தூக்கு : செந்தூக்கு 
பெயர் : மரம் படு தீம் கனி
கொலை வினை மேவற்றுத் தானை; தானே
இகல் வினை மேவலன்; தண்டாது வீசும்: 
செல்லாமோதில், பாண்மகள்! காணியர்-
மிஞிறு புறம் மூசவும் தீம் சுவை திரியாது, 
அரம் போழ்கல்லா மரம் படு தீம் கனி 5
அம் சேறு அமைந்த முண்டை விளை பழம்
ஆறு செல் மாக்கட்கு ஓய் தகை தடுக்கும்,
மறாஅ விளையுள் அறாஅ யாணர்,
தொடை மடி களைந்த சிலையுடை மறவர்
பொங்கு பிசிர்ப் புணரி மங்குலொடு மயங்கி, 10
வரும் கடல் ஊதையின் பனிக்கும்,
துவ்வா நறவின் சாய் இனத்தானே.
பதிகம்
குடக்கோ நெடுஞ்சேரலாதற்கு வேஎள்
ஆவிக்கோமான் தேவி ஈன்ற மகன்
தண்டாரணியத்துக் கோட்பட்ட வருடையைத்
தொண்டியுள் தந்து கொடுப்பித்து, பார்ப்பார்க்குக்
கபிலையொடு குடநாட்டு ஓர் ஊர் ஈத்து, 5
வானவரம்பன் எனப் பேர் இனிது விளக்கி,
ஏனை மழவரைச் செருவில் சுருக்கி,
மன்னரை ஓட்டி,
குழவி கொள்வாரின் குடி புறந்தந்து,
நாடல் சான்ற நயனுடை நெஞ்சின் 10
ஆடு கோட்பாட்டுச் சேரலாதனை
யாத்த செய்யுள் அடங்கிய கொள்கைக்
காக்கைபாடினியார் நச்செள்ளையார்
பாடினார் பத்துப் பாட்டு.
அவை தாம்: வடு அடு நுண் அயிர், சிறு செங் குவளை, குண்டு கண் அகழி, நில்லாத் தானை, துஞ்சும் பந்தர், வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி, சில் வளை விறலி, ஏ விளங்கு தடக் கை, மா கூர் திங்கள், மரம் படு தீம் கனி: இவை பாட்டின் பதிகம்.
பாடிப் பெற்ற பரிசில்: 'கலன் அணிக' என்று, அவர்க்கு ஒன்பது காப் பொன்னும், நூறாயிரம் காணமும் கொடுத்துத் தன் பக்கத்துக் கொண்டான் அக் கோ.
ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் முப்பத்தெட்டு யாண்டு வீற்றிருந்தான்.
ஆறாம் பத்து முற்றும்.


ஆறாம் பத்து
பாடினோர் : காக்கைப் பாடினியார் நச்செள்ளையார்பாடப்பட்டோ ர் : ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்
51. மன்னவன் வினோதத்து மென்மையும் செருவகத்துக் கடுமையும் உடன் கூறுதல்
துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டுவண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்பெயர் : வடு அடு நுண் அயிர் 
துளங்கு நீர் வியலகம் கலங்கக் கால் பொர,விளங்கு இரும் புணரி உரும் என முழங்கும்கடல் சேர் கானற் குட புலம் முன்னி,கூவல் துழந்த தடந் தாள் நாரைகுவி இணர் ஞாழல் மாச் சினைச் சேக்கும், 5வண்டு இறைகொண்ட, தண் கடல் பரப்பின்அடும்பு அமல் அடைகரை அலவன் ஆடியவடு அடு நுண் அயிர் ஊதை உஞற்றும்,தூ இரும் போந்தைப் பொழில், அணிப் பொலிதந்து,இயலினள், ஒல்கினள், ஆடும் மட மகள் 10வெறி உறு நுடக்கம் போலத் தோன்றி,பெரு மலை, வயின் வயின் விலங்கும் அருமணிஅர வழங்கும், பெருந் தெய்வத்து,வளை ஞரலும் பனிப் பௌவத்து,குண குட கடலோடு ஆயிடை மணந்த 15பந்தர் அந்தரம் வேய்ந்து,வண் பிணி அவிழ்ந்த கண் போல் நெய்தல்நனை உறு நறவின் நாடுடன் கமழ,சுடர் நுதல், மட நோக்கின்,வாள் நகை, இலங்கு எயிற்று, 20அமிழ்து பொதி துவர் வாய், அசை நடை விறலியர்பாடல் சான்று நீடினை உறைதலின்,'வெள் வேல் அண்ணல் மெல்லியன் போன்ம்!' என,உள்ளுவர் கொல்லோ, நின் உணராதோரே?மழை தவழும் பெருங் குன்றத்து, 25செயிருடைய அரவு எறிந்து,கடுஞ் சினத்த மிடல் தபுக்கும்பெருஞ் சினப் புயல் ஏறு அனையை;தாங்குநர் தடக் கை யானைத் தொடிக் கோடு துமிக்கும்எஃகுடை வலத்தர், நின் படைவழி வாழ்நர்; 30மறம் கெழு போந்தை வெண் தோடு புனைந்து,நிறம் பெயர் கண்ணிப் பருந்து ஊறு அளப்ப,தூக் கணை கிழித்த மாக் கண் தண்ணுமைகை வல் இளையர் கை அலை அழுங்க,மாற்று அருஞ் சீற்றத்து மா இருங் கூற்றம் 35வலை விரித்தன்ன நோக்கலை;கடியையால், நெடுந்தகை செருவத்தானே.
52. மன்னவன் கைவண்மையோடும் வென்றியோடும் படுத்து அவன் காம இன்பச் சிறப்புக் கூறுதல்
துறை : குரவை நிலை வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : சிறு செங் குவளை 
கொடி நுடங்கு நிலைய கொல் களிறு மிடைந்து,வடி மணி நெடுந் தேர் வேறு புலம் பரப்பி,அருங் கலம் தரீஇயர், நீர் மிசை நிவக்கும்பெருங் கலி வங்கம் திசை திரிந்தாங்கு,மை அணிந்து எழுதரு மா இரும் பல் தோல் 5மெய் புதை அரணம் எண்ணாது, எஃகு சுமந்து,முன் சமத்து எழுதரும் வன்கண் ஆடவர்தொலையாத் தும்பை தெவ்வழி விளங்க,உயர்நிலை உலகம் எய்தினர், பலர் பட,நல் அமர்க் கடந்த நின் செல் உறழ் தடக் கை 10இரப்போர்க்குக் கவிதல் அல்லதை, இரைஇயமலர்பு அறியா எனக் கேட்டிகும்: இனியே,சுடரும் பாண்டில் திரு நாறு விளக்கத்து,முழா இமிழ் துணங்கைக்குத் தழூஉப் புணை ஆக,சிலைப்பு வல் ஏற்றின் தலைக் கை தந்து, நீ 15நளிந்தனை வருதல், உடன்றனள் ஆகி;உயலும் கோதை, ஊரல்அம் தித்தி,ஈர் இதழ் மழைக்கண், பேர் இயல் அரிவைஒளி இதழ் அவிழகம் கடுக்கும் சீறடி,பல் சில கிண்கிணி சிறு பரடு அலைப்ப, 20கொல் புனல் தளிரின் நடுங்குவனள் நின்று, நின்எறியர் ஓக்கிய சிறு செங் குவளை,'ஈ' என இரப்பவும், ஒல்லாள்; 'நீ எமக்குயாரையோ?' எனப் பெயர்வோள் கையதை:கதுமென உருத்த நோக்கமொடு, அது நீ 25பாஅல் வல்லாய் ஆயினை. பாஅல்யாங்கு வல்லுநையோ-வாழ்க, நின் கண்ணி!-அகல் இரு விசும்பில் பகல் இடம் தரீஇயர்;தெறு கதிர் திகழ்தரும் உரு கெழு ஞாயிற்றுஉருபு கிளர் வண்ணம் கொண்ட 30வான் தோய் வெண்குடை வேந்தர்தம் எயிலே?

53. அடைந்தவர்க்கு அருளலொடு படுத்து, மன்னவன் வென்றிச் சிறப்புக் கூறுதல்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டுவண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : குண்டு கண் அகழி
வென்று கலம் தரீஇயர் வேண்டு புலத்து இறுத்து, அவர்வாடா யாணர் நாடு திறை கொடுப்ப, 'நல்கினை ஆகுமதி, எம்' என்று; அருளி, கல் பிறங்கு வைப்பின் கடறு அரை யாத்த நின் தொல் புகழ் மூதூர்ச் செல்குவை ஆயின், 5செம்பொறிச் சிலம்பொடு அணித் தழை தூங்கும்எந்திரத் தகைப்பின் அம்புடை வாயில், கோள் வல் முதலைய குண்டு கண் அகழி,வான் உற ஓங்கிய வளைந்து செய் புரிசை, ஒன்னாத் தெவ்வர் முனை கெட விலங்கி, 10நின்னின் தந்த மன் எயில் அல்லது,முன்னும் பின்னும் நின் முன்னோர் ஓம்பியஎயில் முகப்படுத்தல் யாவது? வளையினும்,பிறிது ஆறு சென்மதி, சினம் கெழு குருசில்!-எழூஉப் புறந்தரீஇ, பொன் பிணிப் பலகைக் 15குழூஉ நிலைப் புதவின் கதவு மெய் காணின்,தேம் பாய் கடாத்தொடு காழ் கை நீவி, வேங்கை வென்ற பொறி கிளர் புகர் நுதல் ஏந்து கை சுருட்டி, தோட்டி நீவி, மேம்படு வெல் கொடி நுடங்க, 20தாங்கல் ஆகா, ஆங்கு நின் களிறே.

54. மன்னவன் கொடைச் சிறப்பும் தன் குறையும் கூறி, வாழ்த்துதல்
துறை : காட்சி வாழ்த்துவண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : நில்லாத் தானை 
வள்ளியை என்றலின், காண்கு வந்திசினே,உள்ளியது முடித்தி; வாழ்க, நின் கண்ணி! வீங்கு இறைத் தடைஇய அமை மருள் பணைத் தோள்,ஏந்து எழில் மழைக்கண், வனைந்து வரல் இள முலை, பூந் துகில் அல்குல், தேம் பாய் கூந்தல், 5மின் இழை, விறலியர் நின் மறம் பாட;இரவலர் புன்கண் தீர, நாள் தொறும்,உரை சால் நன் கலம் வரைவு இல வீசி,அனையை ஆகன்மாறே, எனையதூஉம்உயர் நிலை உலகத்துச் செல்லாது, இவண் நின்று, 10இரு நில மருங்கின் நெடிது மன்னியரோ!-நிலம் தப இடூஉம் ஏணிப் புலம் படர்ந்து, படு கண் முரசம் நடுவண் சிலைப்ப, தோமர வலத்தர் நாமம் செய்ம்மார், ஏவல் வியங்கொண்டு, இளையரொடு எழுதரும் 15ஒல்லார் யானை காணின்,நில்லாத் தானை இறை கிழவோயே!

55. மன்னவன் உலகு புரத்தலும் தன் குறையும் கூறி, வாழ்த்துதல்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டுவண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : துஞ்சும் பந்தர் 
ஆன்றோள் கணவ! சான்றோர் புரவல! நின் நயந்து வந்தனன், அடு போர்க் கொற்றவ!இன் இசைப் புணரி இரங்கும் பௌவத்து,நன் கல வெறுக்கை துஞ்சும் பந்தர். கமழும் தாழைக் கானல்அம் பெருந் துறை, 5தண் கடற் படப்பை நல் நாட்டுப் பொருந!செவ் ஊன் தோன்றா, வெண் துவை முதிரை, வால் ஊன் வல்சி மழவர் மெய்ம்மறை! குடவர் கோவே! கொடித் தேர் அண்ணல்! வாரார் ஆயினும் இரவலர், வேண்டி, 10தேரின் தந்து, அவர்க்கு ஆர் பதன் நல்கும்நசை சால் வாய்மொழி இசை சால் தோன்றல்!-வேண்டுவ அளவையுள் யாண்டு பல கழிய,பெய்து புறந்தந்து, பொங்கல் ஆடி,விண்டுச் சேர்ந்த வெண் மழை போலச் 15சென்றாலியரோ-பெரும! அல்கலும்,நனந் தலை வேந்தர் தார் அழிந்து அலற,நீடு வரை அடுக்கத்த நாடு கைக்கொண்டு,பொருது சினம் தணிந்த செருப் புகல் ஆண்மை,தாங்குநர்த் தகைத்த ஒளி வாள், 20ஓங்கல் உள்ளத்துக் குருசில்! நின் நாளே.

56. வென்றிச் சிறப்பு
துறை : ஒள் வாள் அமலைவண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி 

விழவு வீற்றிருந்த வியலுள் ஆங்கண்,கோடியர் முழவின் முன்னர், ஆடல்வல்லான் அல்லன்; வாழ்க அவன், கண்ணி!-வலம் படு முரசம் துவைப்ப, வாள் உயர்த்து,இலங்கும் பூணன், பொலங் கொடி உழிஞையன், 5மடம் பெருமையின் உடன்று மேல் வந்தவேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சிவீந்து உகு போர்க்களத்து ஆடும் கோவே.
57. வென்றிச் சிறப்பொடு கொடைச் சிறப்பும் உடன் கூறுதல்

துறை : விறலி ஆற்றுப்படை வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : சில் வளை விறலி 
ஓடாப் பூட்கை மறவர் மிடல் தப,இரும் பனம் புடையலொடு வான் கழல் சிவப்ப, குருதி பனிற்றும் புலவுக் களத்தோனே, துணங்கை ஆடிய வலம் படு கோமான்: மெல்லிய வகுந்தில் சீறடி ஒதுங்கிச் 5செல்லாமோதில்-சில் வளை விறலி!-பாணர் கையது பணி தொடை நரம்பின்விரல் கவர் பேரியாழ் பாலை பண்ணி,குரல் புணர் இன் இசைத் தழிஞ்சி பாடி;இளந் துணைப் புதல்வர் நல் வளம் பயந்த, 10வளம் கெழு குடைச்சூல், அடங்கிய கொள்கை,ஆன்ற அறிவின் தோன்றிய நல் இசை,ஒள் நுதல் மகளிர் துனித்த கண்ணினும்,இரவலர் புன்கண் அஞ்சும்புரவு எதிர்கொள்வனைக் கண்டனம் வரற்கே? 15

58. மன்னவன் நாட்டுச் செல்வமும் அதற்கேற்ற அவனது கொடையும் கூறுதல்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டுவண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : ஏ விளங்கு தடக்கை 
ஆடுக, விறலியர்! பாடுக, பரிசிலர்!-வெண் தோட்டு அசைத்த ஒண் பூங் குவளையர், வாள் முகம் பொறித்த மாண் வரி யாக்கையர்,செல் உறழ் மறவர் தம் கொல்படைத் தரீஇயர், 'இன்று இனிது நுகர்ந்தனம் ஆயின், நாளை 5மண் புனை இஞ்சி மதில் கடந்தல்லதுஉண்குவம்அல்லேம், புகா' எனக் கூறி,கண்ணி கண்ணிய வயவர் பெருமகன்;பொய் படுபு அறியா வயங்கு செந் நாவின்,எயில் எறி வல் வில், ஏ விளங்கு தடக் கை, 10ஏந்து எழில் ஆகத்துச் சான்றோர் மெய்ம்மறை;வானவரம்பன் என்ப-கானத்துக்கறங்கு இசைச் சிதடி பொரி அரைப் பொருந்தியசிறியிலை வேலம் பெரிய தோன்றும்புன்புலம் வித்தும் வன் கை வினைஞர் 15சீருடைப் பல் பகடு ஒலிப்பப் பூட்டி,நாஞ்சில் ஆடிய கொழு வழி மருங்கின்அலங்கு கதிர்த் திரு மணி பெறூஉம்,அகன் கண் வைப்பின் நாடு கிழவோனே.

59. வென்றிச் சிறப்பு
துறை : செந்துறைப் பாடாண் பாட்டுவண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : மா கூர் திங்கள் 
பகல் நீடு ஆகாது, இரவுப்பொழுது பெருகி,மாசி நின்ற மா கூர் திங்கள், பனிச் சுரம் படரும் பாண்மகன் உவப்ப, புல் இருள் விடிய, புலம்பு சேண் அகல, பாய் இருள் நீங்க, பல் கதிர் பரப்பி, 5ஞாயிறு குணமுதல் தோன்றியாஅங்கு,இரவல் மாக்கள் சிறுகுடி பெருக,உலகம் தாங்கிய மேம்படு கற்பின்வில்லோர் மெய்ம்மறை! வீற்று இருங் கொற்றத்துச்செல்வர் செல்வ! சேர்ந்தோர்க்கு அரணம்!- 10அறியாது எதிர்ந்து, துப்பில் குறையுற்று,பணிந்து திறை தருப, நின் பகைவர், ஆயின்;சினம் செலத் தணியுமோ? வாழ்க, நின் கண்ணி!-பல் வேறு வகைய நனந் தலை ஈண்டியமலையவும் கடலவும் பண்ணியம் பகுக்கும் 15ஆறு முட்டுறாஅது, அறம் புரிந்து ஒழுகும்நாடல் சான்ற துப்பின் பணைத் தோள்,பாடு சால் நன் கலம் தரூஉம்நாடு புறந்தருதல் நினக்குமார் கடனே.

60. மன்னவன் கொடைச் சிறப்பொடு வென்றிச் சிறப்பும் கூறுதல்
துறை : விறலி ஆற்றுப்படைவண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : மரம் படு தீம் கனி
கொலை வினை மேவற்றுத் தானை; தானேஇகல் வினை மேவலன்; தண்டாது வீசும்: செல்லாமோதில், பாண்மகள்! காணியர்-மிஞிறு புறம் மூசவும் தீம் சுவை திரியாது, அரம் போழ்கல்லா மரம் படு தீம் கனி 5அம் சேறு அமைந்த முண்டை விளை பழம்ஆறு செல் மாக்கட்கு ஓய் தகை தடுக்கும்,மறாஅ விளையுள் அறாஅ யாணர்,தொடை மடி களைந்த சிலையுடை மறவர்பொங்கு பிசிர்ப் புணரி மங்குலொடு மயங்கி, 10வரும் கடல் ஊதையின் பனிக்கும்,துவ்வா நறவின் சாய் இனத்தானே.

பதிகம்
குடக்கோ நெடுஞ்சேரலாதற்கு வேஎள்ஆவிக்கோமான் தேவி ஈன்ற மகன்தண்டாரணியத்துக் கோட்பட்ட வருடையைத்தொண்டியுள் தந்து கொடுப்பித்து, பார்ப்பார்க்குக்கபிலையொடு குடநாட்டு ஓர் ஊர் ஈத்து, 5வானவரம்பன் எனப் பேர் இனிது விளக்கி,ஏனை மழவரைச் செருவில் சுருக்கி,மன்னரை ஓட்டி,குழவி கொள்வாரின் குடி புறந்தந்து,நாடல் சான்ற நயனுடை நெஞ்சின் 10ஆடு கோட்பாட்டுச் சேரலாதனையாத்த செய்யுள் அடங்கிய கொள்கைக்காக்கைபாடினியார் நச்செள்ளையார்பாடினார் பத்துப் பாட்டு.
அவை தாம்: வடு அடு நுண் அயிர், சிறு செங் குவளை, குண்டு கண் அகழி, நில்லாத் தானை, துஞ்சும் பந்தர், வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி, சில் வளை விறலி, ஏ விளங்கு தடக் கை, மா கூர் திங்கள், மரம் படு தீம் கனி: இவை பாட்டின் பதிகம்.
பாடிப் பெற்ற பரிசில்: 'கலன் அணிக' என்று, அவர்க்கு ஒன்பது காப் பொன்னும், நூறாயிரம் காணமும் கொடுத்துத் தன் பக்கத்துக் கொண்டான் அக் கோ.
ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் முப்பத்தெட்டு யாண்டு வீற்றிருந்தான்.
ஆறாம் பத்து முற்றும்.

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.