LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- எட்டுத்தொகை

பதிற்றுப்பத்து-8

 

ஒன்பதாம் பத்து
பாடினோர் : பெருங்குன்றூர் கிழார்
பாடப்பட்டோ ர் : குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை
81. காம வேட்கையில் செல்லாத மன்னவன் வென்றி வேட்கைச் சிறப்புக் கூறுதல்
துறை : முல்லை 
வண்ணம் : ஒழுகு வண்ணம் 
தூக்கு : செந்தூக்கு 
பெயர் : நிழல் விடு கட்டி 
உலகம் புரக்கும் உரு கெழு சிறப்பின், 
வண்ணக் கருவிய, வளம் கெழு, கமஞ் சூல் 
அகல் இரு விசும்பின் அதிர் சினம் சிறந்து, 
கடுஞ் சிலை கழறி, விசும்பு அடையூ நிவந்து, 
காலை இசைக்கும் பொழுதொடு புலம்பு கொள, 5
களிறு பாய்ந்து இயல, கடு மா தாங்க, 
ஒளிறு கொடி நுடங்கத் தேர் திரிந்து கொட்ப, 
அரசு புறத்து இறுப்பினும் அதிர்விலர் திரிந்து, 
வாயில் கொள்ளா மைந்தினர் வயவர், 
மா இருங் கங்குலும், விழுத் தொடி சுடர் வரத் 10
தோள் பிணி மீகையர், புகல் சிறந்து, நாளும் 
முடிதல் வேட்கையர், நெடிய மொழியூஉ, 
கெடாஅ நல் இசைத் தம் குடி நிறுமார், 
இடாஅ ஏணி வியல் அறைக் கொட்ப, 
நாடு அடிப்படுத்தலின், கொள்ளை மாற்றி; 15
அழல் வினை அமைந்த நிழல் விடு கட்டி, 
கட்டளை வலிப்ப, நின் தானை உதவி, 
வேறு புலத்து இறுத்த வெல்போர் அண்ணல்!-
முழவின் அமைந்த பெரும் பழம் மிசைந்து, 
சாறு அயர்ந்தன்ன, கார் அணி யாணர்த் 20
தூம்பு அகம் பழுனிய தீம் பிழி மாந்தி, 
காந்தள்அம் கண்ணிச் செழுங் குடிச் செல்வர், 
கலி மகிழ் மேவலர், இரவலர்க்கு ஈயும், 
சுரும்பு ஆர் சோலைப் பெரும் பெயல் கொல்லிப் 
பெரு வாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்து, 25
மின் உமிழ்ந்தன்ன சுடர்இழை ஆயத்து,
தன் நிறம் கரந்த வண்டு படு கதுப்பின் 
ஒடுங்கு ஈர் ஓதி ஒண்ணுதல் அணி கொள,
கொடுங் குழைக்கு அமர்த்த நோக்கின், நயவரப் 
பெருந் தகைக்கு அமர்ந்த மென் சொல் திருமுகத்து 30
மாண் இழை அரிவை காணிய, ஒரு நாள், 
பூண்க மாள, நின் புரவி நெடுந் தேர்! 
முனை கைவிட்டு முன்னிலைச் செல்லாது, 
தூ எதிர்ந்து பெறாஅத் தா இல் மள்ளரொடு
தொல் மருங்கு அறுத்தல் அஞ்சி, அரண் கொண்டு, 35
துஞ்சா வேந்தரும் துஞ்சுக! 
விருந்தும் ஆக, நின் பெருந் தோட்கே!
82. வென்றிச் சிறப்பு
துறை : காட்சி வாழ்த்து 
வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும் 
தூக்கு : செந்தூக்கு 
பெயர் : வினை நவில் யானை 
பகை பெருமையின், தெய்வம் செப்ப, 
ஆர் இறை அஞ்சா வெருவரு கட்டூர், 
பல் கொடி நுடங்கும் முன்பின் செறுநர் 
செல் சமம் தொலைத்த வினை நவில் யானை 
கடாஅம் வார்ந்து, கடுஞ் சினம் பொத்தி, 5
வண்டு படு சென்னிய பிடி புணர்ந்து இயல; 
மறவர் மறல; மாப் படை உறுப்ப; 
தேர் கொடி நுடங்க; தோல் புடை ஆர்ப்ப; 
காடுகை காய்த்திய நீடு நாள் இருக்கை 
இன்ன வைகல் பல் நாள் ஆக- 10
பாடிக் காண்கு வந்திசின், பெரும!- 
பாடுநர், கொளக் கொளக் குறையாச் செல்வத்து, செற்றோர் 
கொலக் கொலக் குறையாத் தானை, சான்றோர் 
வண்மையும், செம்மையும், சால்பும், மறனும், 
புகன்று புகழ்ந்து, அசையா நல் இசை, 15
நிலம் தரு திருவின், நெடியோய்! நின்னே.
83. படைச் சிறப்பு
துறை : தும்பை அரவம் 
வண்ணம் : ஒழுகு வண்ணம் 
தூக்கு : செந்தூக்கு 
பெயர் : பல் தோல் தொழுதி 
கார் மழை முன்பின் கை பரிந்து எழுதரும் 
வான் பறைக் குருகின் நெடு வரி பொற்ப,
கொல் களிறு மிடைந்த பல் தோல் தொழுதியொடு 
நெடுந் தேர் நுடங்கு கொடி அவிர்வரப் பொலிந்து, 
செலவு பெரிது இனிது, நிற் காணுமோர்க்கே: 5
இன்னாது அம்ம அது தானே-பல் மா 
நாடு கெட எருக்கி, நன் கலம் தரூஉம் நின் 
போர் அருங் கடுஞ் சினம் எதிர்ந்து,
மாறு கொள் வேந்தர் பாசறையோர்க்கே.
84. வென்றிச் சிறப்பு
துறை : வாகை 
வண்ணம் : ஒழுகு வண்ணம் 
தூக்கு : செந்தூக்கு
பெயர் : தொழில் நவில் யானை 
எடுத்தேறு ஏய கடிப்புடை அதிரும் 
போர்ப்பு உறு முரசம் கண் அதிர்ந்தாங்கு, 
கார் மழை முழக்கினும், வெளில் பிணி நீவி, 
நுதல் அணந்து எழுதரும் தொழில் நவில் யானை, 
பார்வல் பாசறைத் தரூஉம் பல் வேல், 5
பூழியர் கோவே! பொலந் தேர்ப் பொறைய, 
மன்பதை சவட்டும் கூற்ற முன்ப! 
கொடி நுடங்கு ஆர் எயில் எண்ணு வரம்பு அறியா; 
பல் மா பரந்த புலம் ஒன்று என்று எண்ணாது, 
வலியை ஆதல் நற்கு அறிந்தனர்ஆயினும், 10
வார் முகில் முழக்கின் மழ களிறு மிகீஇ, தன் 
கால் முளை மூங்கில் கவர் கிளை போல, 
உய்தல் யாவது-நின் உடற்றியோரே, 
வணங்கல் அறியார், உடன்று எழுந்து உரைஇ?
போர்ப்புறு தண்ணுமை ஆர்ப்பு எழுந்து நுவல, 15
நோய்த் தொழில் மலைந்த வேல் ஈண்டு அழுவத்து, 
முனை புகல் புகல்வின் மாறா மைந்தரொடு, 
உரும் எறி வரையின் களிறு நிலம் சேர,
காஞ்சி சான்ற செருப் பல செய்து, நின் 
குவவுக் குரை இருக்கை இனிது கண்டிகுமே- 20
காலை, மாரி பெய்து, தொழில் ஆற்றி, 
விண்டு முன்னிய புயல் நெடுங் காலை, 
கல் சேர்பு மா மழை தலைஇ, 
பல் குரல் புள்ளின் ஒலி எழுந்தாங்கே!
85. முன்னோருடைய கொடைச் சிறப்பொடு படுத்து, வென்றிச் சிறப்புக் கூறுதல்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு 
வண்ணம் : ஒழுகு வண்ணம் 
தூக்கு : செந்தூக்கு
பெயர் : நாடு காண் நெடு வரை 
நல் மரம் துவன்றிய நாடு பல தரீஇ, 
'பொன் அவிர் புனைசெயல் இலங்கும் பெரும் பூண், 
ஒன்னாப் பூட்கைச் சென்னியர் பெருமான்'- 
இட்ட வெளி வேல்'-முத்தைத் தம்' என, 
முன் திணை முதல்வர் போல நின்று, 5
தீம் சுனை நிலைஇய திரு மா மருங்கின் 
கோடு பல விரிந்த நாடு காண் நெடு வரை, 
சூடா நறவின் நாள் மகிழ் இருக்கை, 
அரசவை பணிய, அறம் புரிந்து வயங்கிய 
மறம் புரி கொள்கை, வயங்கு செந் நாவின், 10
உவலை கூராக் கவலை இல் நெஞ்சின், 
நனவில் பாடிய நல் இசைக் 
கபிலன் பெற்ற ஊரினும் பலவே.
86. மன்னவனது வன்மை மென்மைச் சிறப்புக் கூறுதல்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு 
வண்ணம் : ஒழுகு வண்ணம் 
தூக்கு : செந்தூக்கு
பெயர் : வெந் திறல் தடக்கை 
'உறல் உறு குருதிச் செருக்களம் புலவக் 
கொன்று, அமர்க் கடந்த வெந் திறல் தடக் கை 
வென் வேல் பொறையன்' என்றலின், வெருவர, 
வெப்புடை ஆடூஉச் செத்தனென்மன், யான்: 
நல் இசை நிலைஇய, நனந் தலை உலகத்து, 5
இல்லோர் புன்கண் தீர நல்கும் 
நாடல் சான்ற நயனுடை நெஞ்சின், 
பாடுநர் புரவலன், ஆடு நடை அண்ணல், 
கழை நிலை பெறாஅக் குட்டத்துஆயினும்,
புனல் பாய் மகளிர் ஆட, ஒழிந்த 10
பொன் செய் பூங் குழை மீமிசைத் தோன்றும் 
சாந்து வரு வானி நீரினும், 
தீம் தண் சாயலன் மன்ற, தானே.
87. மன்னவன் அருட் சிறப்பு
துறை : விறலி ஆற்றுப்படை 
வண்ணம் : ஒழுகு வண்ணம் 
தூக்கு : செந்தூக்கு
பெயர் : வெண் தலைச் செம் புனல் 
சென்மோ, பாடினி! நன் கலம் பெறுகுவை- 
சந்தம் பூழிலொடு பொங்கு நுரை சுமந்து, 
தெண் கடல் முன்னிய வெண் தலைச் செம் புனல் 
ஒய்யும் நீர் வழிக் கரும்பினும் 
பல் வேல் பொறையன் வல்லனால், அளியே. 5
88. கொடைச் சிறப்பும் காம இன்பச் சிறப்பும் உடன் கூறி, வாழ்த்துதல்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு 
வண்ணம் : ஒழுகு வண்ணம் 
தூக்கு : செந்தூக்கு
பெயர் : கல் கால் கவணை
வையகம் மலர்ந்த தொழில் முறை ஒழியாது, 
கடவுள் பெயரிய கானமொடு கல் உயர்ந்து, 
தெண் கடல் வளைஇய மலர் தலை உலகத்து, 
தம் பெயர் போகிய ஒன்னார் தேய, 
துளங்கு இருங் குட்டம் தொலைய, வேல் இட்டு; 5
அணங்குடைக் கடம்பின் முழுமுதல் தடிந்து;
பொரு முரண் எய்திய கழுவுள் புறம் பெற்று;
நாம மன்னர் துணிய நூறி, 
கால் வல் புரவி அண்டர் ஓட்டி, 
சுடர் வீ வாகை நன்னற் தேய்த்து, 10
குருதி விதிர்த்த குவவுச் சோற்றுக் குன்றோடு 
உரு கெழு மரபின் அயிரை பரைஇ, 
வேந்தரும் வேளிரும் பின்வந்து பணிய,
கொற்றம் எய்திய பெரியோர் மருக! 
வியல் உளை அரிமான் மறம் கெழு குருசில்! 15
விரவுப் பணை முழங்கும், நிரை தோல் வரைப்பின், 
உரவுக் களிற்று வெல் கொடி நுடங்கும் பாசறை, 
ஆர் எயில் அலைத்த கல் கால் கவணை 
நார் அரி நறவின் கொங்கர் கோவே! 
உடலுநர்த் தபுத்த பொலந் தேர்க் குருசில்! 20
வளைகடல் முழவின் தொண்டியோர் பொருந! 
நீ நீடு வாழிய, பெரும! நின்வயின் 
துவைத்த தும்பை நனவுற்று வினவும் 
மாற்று அருந் தெய்வத்துக் கூட்டம் முன்னிய 
புனல் மலி பேரியாறு இழிதந்தாங்கு, 25
வருநர் வரையாச் செழும் பல் தாரம் 
கொளக் கொளக் குறையாது தலைத்தலைச் சிறப்ப, 
ஓவத்து அன்ன உரு கெழு நெடு நகர், 
பாவை அன்ன மகளிர் நாப்பண், 
புகன்ற மாண் பொறிப் பொலிந்த சாந்தமொடு 30
தண் கமழ் கோதை சூடி, பூண் சுமந்து, 
திருவில் குலைஇத் திருமணி புரையும் 
உரு கெழு கருவிய பெரு மழை சேர்ந்து, 
வேங்கை விரிந்து, விசும்புறு சேட்சிமை, 
அருவி அரு வரை அன்ன மார்பின் 35
சேண் நாறு நல் இசைச் சேயிழை கணவ! 
மாகம் சுடர மா விசும்பு உகக்கும் 
ஞாயிறு போல விளங்குதி, பல் நாள்!- 
ஈங்குக் காண்கு வந்தனென், யானே-
உறு கால் எடுத்த ஓங்கு வரற் புணரி 40
நுண் மணல் அடை கரை உடைதரும் 
தண் கடல் படப்பை நாடு கிழவோயே!
89. மன்னவனது நாடு காவற் சிறப்புக் கூறி, வாழ்த்துதல்
துறை : காவல் முல்லை 
வண்ணம் : ஒழுகு வண்ணம் 
தூக்கு : செந்தூக்கு
பெயர் : துவராக் கூந்தல் 
வானம் பொழுதொடு சுரப்ப, கானம் 
தோடு உறு மட மான் ஏறு புணர்ந்து இயல, 
புள்ளும் மிஞிறும் மாச் சினை ஆர்ப்ப, 
பழனும் கிழங்கும் மிசையறவு அறியாது, 
பல் ஆன் நல் நிரை புல் அருந்து உகள, 5
பயம் கடை அறியா வளம் கெழு சிறப்பின் 
பெரும் பல் யாணர்க் கூலம் கெழும, 
நன் பல் ஊழி நடுவு நின்று ஒழுக- 
பல் வேல் இரும் பொறை! நின் கோல் செம்மையின், 
நாளின் நாளின் நாடு தொழுது ஏத்த, 10
உயர்நிலை உலகத்து உயர்ந்தோர் பரவ, 
அரசியல் பிழையாது, செரு மேந்தோன்றி, 
நோய் இலைஆகியர், நீயே-நின்மாட்டு 
அடங்கிய நெஞ்சம் புகர்படுபு அறியாது,
கனவினும் பிரியா உறையுளொடு, தண்ணெனத் 15
தகரம் நீவிய துவராக் கூந்தல், 
வதுவை மகளிர் நோக்கினர், பெயர்ந்து 
வாழ் நாள் அறியும் வயங்கு சுடர் நோக்கத்து, 
மீனொடு புரையும் கற்பின், 
வாள் நுதல் அரிவையொடு காண்வரப் பொலிந்தே! 20
90. மன்னவனது தண்ணளியும், பெருமையும், கொடையும், சுற்றம் தழாலும், உடன் கூறி வாழ்த்துதல்
துறை : காட்சி வாழ்த்து 
வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும் 
தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும் 
பெயர் : வலி கெழு தடக் கை 
மீன் வயின் நிற்ப, வானம் வாய்ப்ப, 
அச்சற்று, ஏமம் ஆகி, இருள் தீர்ந்து 
இன்பம் பெருகத் தோன்றி, தம் துணைத் 
துறையின் எஞ்சாமை நிறையக் கற்று, 
கழிந்தோர் உடற்றும் கடுந் தூ அஞ்சா 5
ஒளிறு வாள் வய வேந்தர் 
களிறொடு கலம் தந்து, 
தொன்று மொழிந்து தொழில் கேட்ப, 
அகல் வையத்து பகல் ஆற்றி, 
மாயாப் பல் புகழ் வியல் விசும்பு ஊர்தர, 10
வாள் வலியுறுத்து, செம்மை பூஉண்டு, 
அறன் வாழ்த்த நற்கு ஆண்ட 
விறல் மாந்தரன் விறல் மருக!- 
ஈரம் உடைமையின், நீர் ஓரனையை;
அளப்பு அருமையின், இரு விசும்பு அனையை; 15
கொளக் குறைபடாமையின், முந்நீர் அனையை; 
பல் மீன் நாப்பண் திங்கள் போல, 
பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை 
உரு கெழு மரபின் அயிரை பரவியும், 
கடல் இகுப்ப வேல் இட்டும், 20
உடலுநர் மிடல் சாய்த்தும், 
மலையவும் நிலத்தவும் அருப்பம் வௌவி, 
பெற்ற பெரும் பெயர் பலர் கை இரீஇய 
கொற்றத் திருவின் உரவோர் உம்பல்! 
கட்டிப் புழுக்கின் கொங்கர் கோவே! 25
மட்டப் புகாவின் குட்டுவர் ஏறே! 
எழாஅத் துணைத் தோள் பூழியர் மெய்ம்மறை! 
இரங்கு நீர்ப் பரப்பின் மரந்தையோர் பொருந! 
வெண் பூ வேளையொடு சுரை தலை மயக்கிய
விரவு மொழிக் கட்டூர் வயவர் வேந்தே! 30
உரவுக் கடல் அன்ன தாங்கு அருந் தானையொடு, 
மாண் வினைச் சாபம் மார்புற வாங்கி, 
ஞாண் பொர விளங்கிய வலி கெழு தடக் கை, 
வார்ந்து புனைந்தன்ன ஏந்து குவவு மொய்ம்பின்,
மீன் பூத்தன்ன விளங்கு மணிப் பாண்டில், 35
ஆய் மயிர்க் கவரிப் பாய் மா மேல்கொண்டு, 
காழ் எஃகம் பிடித்து எறிந்து, 
விழுமத்தின் புகலும் பெயரா ஆண்மை, 
காஞ்சி சான்ற வயவர் பெரும! 
வீங்கு பெருஞ் சிறப்பின் ஓங்கு புகழோயே! 40
கழனி உழவர் தண்ணுமை இசைப்பின், 
பழன மஞ்ஞை மழை செத்து ஆலும், 
தண் புனல் ஆடுநர் ஆர்ப்பொடு மயங்கி, 
வெம் போர் மள்ளர் தெண் கிணை கறங்க, 
கூழுடை நல் இல் ஏறு மாறு சிலைப்ப, 45
செழும் பல இருந்த கொழும் பல் தண் பணைக்,
காவிரிப் படப்பை நல் நாடு அன்ன, 
வளம் கெழு குடைச்சூல், அடங்கிய கொள்கை, 
ஆறிய கற்பின், தேறிய நல் இசை, 
வண்டு ஆர் கூந்தல், ஒண்தொடி கணவ!- 50
'நின் நாள் திங்கள் அனைய ஆக! திங்கள் 
யாண்டு ஓரனைய ஆக! யாண்டே 
ஊழி அனைய ஆக! ஊழி 
வெள்ள வரம்பின ஆக!' என உள்ளி, 
காண்கு வந்திசின், யானே-செரு மிக்கு 55
உரும் என முழங்கும் முரசின், 
பெரு நல் யானை, இறை கிழவோயே!
பதிகம்
குட்டுவன் இரும்பொறைக்கு மையூர் கிழா அன்
வேண்மாள் அந்துவஞ்செள்ளை ஈன்ற மகன்,
வெரு வரு தானையொடு வெய்துறச் செய்து சென்று,
இரு பெரு வேந்தரும் விச்சியும் வீழ,
அரு மிளைக் கல்லகத்து ஐந்து எயில் எறிந்து, 5
பொத்தி ஆண்ட பெருஞ் சோழனையும்,
வித்தை ஆண்ட இளம் பழையன் மாறனையும்,
வைத்த வஞ்சினம் வாய்ப்ப வென்று,
வஞ்சி மூதூர்த் தந்து, பிறர்க்கு உதவி,
மந்திர மரபின் தெய்வம் பேணி, 10
மெய் ஊர் அமைச்சியல் மையூர் கிழானைப்
புரை அறு கேள்விப் புரோசு மயக்கி,
அருந்திறல் மரபின் பெருஞ் சதுக்கு அமர்ந்த
வெந் திறற் பூதரைத் தந்து, இவண் நிறீஇ,
ஆய்ந்த மரபிற் சாந்தி வேட்டு, 15
மன் உயிர் காத்த மறு இல் செங்கோல்
இன் இசை முரசின் இளஞ்சேரல் இரும்பொறையைப்
பெருங்குன்றூர்கிழார் பாடினார் பத்துப் பாட்டு.
அவைதாம்: நிழல் விடு கட்டி, வினை நவில் யானை, பல் தோல் தொழுதி, தொழில் நவில் யானை, நாடு காண் நெடு வரை, வெந் திறல் தடக்கை, வெண் தலைச் செம் புனல், கல் கால் கவணை, துவராக் கூந்தல், வலி கெழு தடக் கை, இவை பாட்டின் பதிகம்.
பாடிப் பெற்ற பரிசில்: 'மருள் இல்லார்க்கு மருளக் கொடுக்க' என்று, உவகையின் முப்பத்தீராயிரம் காணம் கொடுத்து, அவர் அறியாமை ஊரும் மனையும் வளம் மிகப் படைத்து, ஏரும் இன்பமும் இயல்வரப் பரப்பி, எண்ணற்கு ஆகா அருங்கல வெறுக்கையொடு, பன்னூறாயிரம் பாற்பட வகுத்து, காப்பு மறம் தான் விட்டான் அக் கோ.
குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை பதினாறாண்டு வீற்றிருந்தான்.
ஒன்பதாம் பத்து முற்றும்.
 ப த் தா ம் ப த் து
கிடைக்கவில்லை.
பதிற்றுப் பத்துத் திரட்டு
( பதிற்றுப்பத்தில் விட்டுப்போனவைகள் )
1
இருங் கண் யானையொடு அருங் கலம் தெறுத்து,
பணிந்து, வழிமொழிதல் அல்லது, பகைவர் 
வணங்கார் ஆதல் யாவதோ மற்றே- 
உரும் உடன்று சிலைத்தலின் விசும்பு அதிர்ந்தாங்குக் 
கண் அதிர்பு முழங்கும் கடுங் குரல் முரசமொடு, 5
கால் கிளர்ந்தன்ன ஊர்தி, கால் முளை 
எரி நிகழ்ந்தன்ன நிறை அருஞ் சீற்றத்து, 
நளி இரும் பரப்பின் மாக் கடல் முன்னி 
நீர்துனைந்தன்ன செலவின், 
நிலம் திரைப்பன்ன தானையோய்! நினக்கே? 10
[புறத் திரட்டு, பகைவயிற் சேறல், 8. தொல். புறத்திணை. சூ. 6, இளம்பூரணர் மேற்கோள்; சூ. 8, நச்சினார்க்கினியர் மேற்கோள்]
2
இலங்கு தொடி மருப்பின், கடாஅம் வார்ந்து 
நிலம் புடையூ எழுதரும், வலம் படு குஞ்சரம்; 
எரி அவிழ்ந்தன்ன விரி உளை சூட்டி, 
கால் கிளர்ந்தன்ன கடுஞ் செலல் இவுளி; 
கோல் முனைக் கொடி இனம் விரவா வல்லோடு 5
ஊன் வினை கடுக்கும் தோன்றல, பெரிது எழுந்து, 
அருவியின் ஒலிக்கும் வரி புனை நெடுந் தேர்- 
கண் வேட்டனவே முரசம் கண்ணுற்றுக் 
கதித்து எழு மாதிரம் கல்லென ஒலிப்ப, 
கறங்கு இசை வயிரொடு வலம் புரி ஆர்ப்ப, 10
நெடு மதில், நிரை ஞாயில், 
கடி மிளை, குண்டு கிடங்கின், 
மீப் புடை ஆர்அரண் காப்புடைத் தேஎம் 
நெஞ்சு புகல் அழிந்து, நிலை தளர்பு ஒரீஇ, 
ஒல்லா மன்னர் நடுங்க, 15
நல்ல மன்ற-இவண் வீங்கிய செலவே! 
[தொல். புறத்திணை. சூ. 12,25 நச்சினார்க்கினியர் மேற்கோள்]
3
வந்தனென், பெரும! கண்டனென் செலற்கே- 
களிறு கலிமான் தேரொடு சுரந்து, 
நன்கலன் ஈயும் நகைசால் இருக்கை, 
மாரி என்னாய் பனி என மடியாய் 
பகை வெம்மையின் அசையா ஊக்கலை; 5
வேறு புலத்து இறுத்த விறல் வெந் தானையொடு 
மாறா மைந்தர் மாறு நிலை தேய, 
மைந்து மலி ஊக்கத்த கந்து கால் கீழ்ந்து, 
கடாஅ யானை முழங்கும், 
இடாஅ ஏணி நின் பாசறையானே. 10
[புறத்திரட்டு, பாசறை. 8]
4
பேணு தகு சிறப்பின் பெண் இயல்பு ஆயினும் 
என்னொடு புரையுநளல்லள், 
தன்னொடு புரையுநர்த் தான் அறிகுநளே.
[தொல். கற்பு. சூ. 39, நச்சினார்க்கினியர் மேற்கோள்.]
5
'விசையம் தப்பிய .... .... 
என்னும் பதிற்றுப் பத்து ஈகை கூறிற்று.'
[தொல். புறத்திணை சூ. 20, நச்சினார்க்கினியர் மேற்கோள்.]
பதிற்றுப்பத்து முற்றிற்று.


ஒன்பதாம் பத்து
பாடினோர் : பெருங்குன்றூர் கிழார்பாடப்பட்டோ ர் : குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை
81. காம வேட்கையில் செல்லாத மன்னவன் வென்றி வேட்கைச் சிறப்புக் கூறுதல்
துறை : முல்லை வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : நிழல் விடு கட்டி 
உலகம் புரக்கும் உரு கெழு சிறப்பின், வண்ணக் கருவிய, வளம் கெழு, கமஞ் சூல் அகல் இரு விசும்பின் அதிர் சினம் சிறந்து, கடுஞ் சிலை கழறி, விசும்பு அடையூ நிவந்து, காலை இசைக்கும் பொழுதொடு புலம்பு கொள, 5களிறு பாய்ந்து இயல, கடு மா தாங்க, ஒளிறு கொடி நுடங்கத் தேர் திரிந்து கொட்ப, அரசு புறத்து இறுப்பினும் அதிர்விலர் திரிந்து, வாயில் கொள்ளா மைந்தினர் வயவர், மா இருங் கங்குலும், விழுத் தொடி சுடர் வரத் 10தோள் பிணி மீகையர், புகல் சிறந்து, நாளும் முடிதல் வேட்கையர், நெடிய மொழியூஉ, கெடாஅ நல் இசைத் தம் குடி நிறுமார், இடாஅ ஏணி வியல் அறைக் கொட்ப, நாடு அடிப்படுத்தலின், கொள்ளை மாற்றி; 15அழல் வினை அமைந்த நிழல் விடு கட்டி, கட்டளை வலிப்ப, நின் தானை உதவி, வேறு புலத்து இறுத்த வெல்போர் அண்ணல்!-முழவின் அமைந்த பெரும் பழம் மிசைந்து, சாறு அயர்ந்தன்ன, கார் அணி யாணர்த் 20தூம்பு அகம் பழுனிய தீம் பிழி மாந்தி, காந்தள்அம் கண்ணிச் செழுங் குடிச் செல்வர், கலி மகிழ் மேவலர், இரவலர்க்கு ஈயும், சுரும்பு ஆர் சோலைப் பெரும் பெயல் கொல்லிப் பெரு வாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்து, 25மின் உமிழ்ந்தன்ன சுடர்இழை ஆயத்து,தன் நிறம் கரந்த வண்டு படு கதுப்பின் ஒடுங்கு ஈர் ஓதி ஒண்ணுதல் அணி கொள,கொடுங் குழைக்கு அமர்த்த நோக்கின், நயவரப் பெருந் தகைக்கு அமர்ந்த மென் சொல் திருமுகத்து 30மாண் இழை அரிவை காணிய, ஒரு நாள், பூண்க மாள, நின் புரவி நெடுந் தேர்! முனை கைவிட்டு முன்னிலைச் செல்லாது, தூ எதிர்ந்து பெறாஅத் தா இல் மள்ளரொடுதொல் மருங்கு அறுத்தல் அஞ்சி, அரண் கொண்டு, 35துஞ்சா வேந்தரும் துஞ்சுக! விருந்தும் ஆக, நின் பெருந் தோட்கே!
82. வென்றிச் சிறப்பு
துறை : காட்சி வாழ்த்து வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும் தூக்கு : செந்தூக்கு பெயர் : வினை நவில் யானை 
பகை பெருமையின், தெய்வம் செப்ப, ஆர் இறை அஞ்சா வெருவரு கட்டூர், பல் கொடி நுடங்கும் முன்பின் செறுநர் செல் சமம் தொலைத்த வினை நவில் யானை கடாஅம் வார்ந்து, கடுஞ் சினம் பொத்தி, 5வண்டு படு சென்னிய பிடி புணர்ந்து இயல; மறவர் மறல; மாப் படை உறுப்ப; தேர் கொடி நுடங்க; தோல் புடை ஆர்ப்ப; காடுகை காய்த்திய நீடு நாள் இருக்கை இன்ன வைகல் பல் நாள் ஆக- 10பாடிக் காண்கு வந்திசின், பெரும!- பாடுநர், கொளக் கொளக் குறையாச் செல்வத்து, செற்றோர் கொலக் கொலக் குறையாத் தானை, சான்றோர் வண்மையும், செம்மையும், சால்பும், மறனும், புகன்று புகழ்ந்து, அசையா நல் இசை, 15நிலம் தரு திருவின், நெடியோய்! நின்னே.

83. படைச் சிறப்பு
துறை : தும்பை அரவம் வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : பல் தோல் தொழுதி 
கார் மழை முன்பின் கை பரிந்து எழுதரும் வான் பறைக் குருகின் நெடு வரி பொற்ப,கொல் களிறு மிடைந்த பல் தோல் தொழுதியொடு நெடுந் தேர் நுடங்கு கொடி அவிர்வரப் பொலிந்து, செலவு பெரிது இனிது, நிற் காணுமோர்க்கே: 5இன்னாது அம்ம அது தானே-பல் மா நாடு கெட எருக்கி, நன் கலம் தரூஉம் நின் போர் அருங் கடுஞ் சினம் எதிர்ந்து,மாறு கொள் வேந்தர் பாசறையோர்க்கே.

84. வென்றிச் சிறப்பு
துறை : வாகை வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்குபெயர் : தொழில் நவில் யானை 
எடுத்தேறு ஏய கடிப்புடை அதிரும் போர்ப்பு உறு முரசம் கண் அதிர்ந்தாங்கு, கார் மழை முழக்கினும், வெளில் பிணி நீவி, நுதல் அணந்து எழுதரும் தொழில் நவில் யானை, பார்வல் பாசறைத் தரூஉம் பல் வேல், 5பூழியர் கோவே! பொலந் தேர்ப் பொறைய, மன்பதை சவட்டும் கூற்ற முன்ப! கொடி நுடங்கு ஆர் எயில் எண்ணு வரம்பு அறியா; பல் மா பரந்த புலம் ஒன்று என்று எண்ணாது, வலியை ஆதல் நற்கு அறிந்தனர்ஆயினும், 10வார் முகில் முழக்கின் மழ களிறு மிகீஇ, தன் கால் முளை மூங்கில் கவர் கிளை போல, உய்தல் யாவது-நின் உடற்றியோரே, வணங்கல் அறியார், உடன்று எழுந்து உரைஇ?போர்ப்புறு தண்ணுமை ஆர்ப்பு எழுந்து நுவல, 15நோய்த் தொழில் மலைந்த வேல் ஈண்டு அழுவத்து, முனை புகல் புகல்வின் மாறா மைந்தரொடு, உரும் எறி வரையின் களிறு நிலம் சேர,காஞ்சி சான்ற செருப் பல செய்து, நின் குவவுக் குரை இருக்கை இனிது கண்டிகுமே- 20காலை, மாரி பெய்து, தொழில் ஆற்றி, விண்டு முன்னிய புயல் நெடுங் காலை, கல் சேர்பு மா மழை தலைஇ, பல் குரல் புள்ளின் ஒலி எழுந்தாங்கே!

85. முன்னோருடைய கொடைச் சிறப்பொடு படுத்து, வென்றிச் சிறப்புக் கூறுதல்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்குபெயர் : நாடு காண் நெடு வரை 
நல் மரம் துவன்றிய நாடு பல தரீஇ, 'பொன் அவிர் புனைசெயல் இலங்கும் பெரும் பூண், ஒன்னாப் பூட்கைச் சென்னியர் பெருமான்'- இட்ட வெளி வேல்'-முத்தைத் தம்' என, முன் திணை முதல்வர் போல நின்று, 5தீம் சுனை நிலைஇய திரு மா மருங்கின் கோடு பல விரிந்த நாடு காண் நெடு வரை, சூடா நறவின் நாள் மகிழ் இருக்கை, அரசவை பணிய, அறம் புரிந்து வயங்கிய மறம் புரி கொள்கை, வயங்கு செந் நாவின், 10உவலை கூராக் கவலை இல் நெஞ்சின், நனவில் பாடிய நல் இசைக் கபிலன் பெற்ற ஊரினும் பலவே.

86. மன்னவனது வன்மை மென்மைச் சிறப்புக் கூறுதல்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்குபெயர் : வெந் திறல் தடக்கை 
'உறல் உறு குருதிச் செருக்களம் புலவக் கொன்று, அமர்க் கடந்த வெந் திறல் தடக் கை வென் வேல் பொறையன்' என்றலின், வெருவர, வெப்புடை ஆடூஉச் செத்தனென்மன், யான்: நல் இசை நிலைஇய, நனந் தலை உலகத்து, 5இல்லோர் புன்கண் தீர நல்கும் நாடல் சான்ற நயனுடை நெஞ்சின், பாடுநர் புரவலன், ஆடு நடை அண்ணல், கழை நிலை பெறாஅக் குட்டத்துஆயினும்,புனல் பாய் மகளிர் ஆட, ஒழிந்த 10பொன் செய் பூங் குழை மீமிசைத் தோன்றும் சாந்து வரு வானி நீரினும், தீம் தண் சாயலன் மன்ற, தானே.

87. மன்னவன் அருட் சிறப்பு
துறை : விறலி ஆற்றுப்படை வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்குபெயர் : வெண் தலைச் செம் புனல் 
சென்மோ, பாடினி! நன் கலம் பெறுகுவை- சந்தம் பூழிலொடு பொங்கு நுரை சுமந்து, தெண் கடல் முன்னிய வெண் தலைச் செம் புனல் ஒய்யும் நீர் வழிக் கரும்பினும் பல் வேல் பொறையன் வல்லனால், அளியே. 5

88. கொடைச் சிறப்பும் காம இன்பச் சிறப்பும் உடன் கூறி, வாழ்த்துதல்
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்குபெயர் : கல் கால் கவணை
வையகம் மலர்ந்த தொழில் முறை ஒழியாது, கடவுள் பெயரிய கானமொடு கல் உயர்ந்து, தெண் கடல் வளைஇய மலர் தலை உலகத்து, தம் பெயர் போகிய ஒன்னார் தேய, துளங்கு இருங் குட்டம் தொலைய, வேல் இட்டு; 5அணங்குடைக் கடம்பின் முழுமுதல் தடிந்து;பொரு முரண் எய்திய கழுவுள் புறம் பெற்று;நாம மன்னர் துணிய நூறி, கால் வல் புரவி அண்டர் ஓட்டி, சுடர் வீ வாகை நன்னற் தேய்த்து, 10குருதி விதிர்த்த குவவுச் சோற்றுக் குன்றோடு உரு கெழு மரபின் அயிரை பரைஇ, வேந்தரும் வேளிரும் பின்வந்து பணிய,கொற்றம் எய்திய பெரியோர் மருக! வியல் உளை அரிமான் மறம் கெழு குருசில்! 15விரவுப் பணை முழங்கும், நிரை தோல் வரைப்பின், உரவுக் களிற்று வெல் கொடி நுடங்கும் பாசறை, ஆர் எயில் அலைத்த கல் கால் கவணை நார் அரி நறவின் கொங்கர் கோவே! உடலுநர்த் தபுத்த பொலந் தேர்க் குருசில்! 20வளைகடல் முழவின் தொண்டியோர் பொருந! நீ நீடு வாழிய, பெரும! நின்வயின் துவைத்த தும்பை நனவுற்று வினவும் மாற்று அருந் தெய்வத்துக் கூட்டம் முன்னிய புனல் மலி பேரியாறு இழிதந்தாங்கு, 25வருநர் வரையாச் செழும் பல் தாரம் கொளக் கொளக் குறையாது தலைத்தலைச் சிறப்ப, ஓவத்து அன்ன உரு கெழு நெடு நகர், பாவை அன்ன மகளிர் நாப்பண், புகன்ற மாண் பொறிப் பொலிந்த சாந்தமொடு 30தண் கமழ் கோதை சூடி, பூண் சுமந்து, திருவில் குலைஇத் திருமணி புரையும் உரு கெழு கருவிய பெரு மழை சேர்ந்து, வேங்கை விரிந்து, விசும்புறு சேட்சிமை, அருவி அரு வரை அன்ன மார்பின் 35சேண் நாறு நல் இசைச் சேயிழை கணவ! மாகம் சுடர மா விசும்பு உகக்கும் ஞாயிறு போல விளங்குதி, பல் நாள்!- ஈங்குக் காண்கு வந்தனென், யானே-உறு கால் எடுத்த ஓங்கு வரற் புணரி 40நுண் மணல் அடை கரை உடைதரும் தண் கடல் படப்பை நாடு கிழவோயே!

89. மன்னவனது நாடு காவற் சிறப்புக் கூறி, வாழ்த்துதல்
துறை : காவல் முல்லை வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்குபெயர் : துவராக் கூந்தல் 
வானம் பொழுதொடு சுரப்ப, கானம் தோடு உறு மட மான் ஏறு புணர்ந்து இயல, புள்ளும் மிஞிறும் மாச் சினை ஆர்ப்ப, பழனும் கிழங்கும் மிசையறவு அறியாது, பல் ஆன் நல் நிரை புல் அருந்து உகள, 5பயம் கடை அறியா வளம் கெழு சிறப்பின் பெரும் பல் யாணர்க் கூலம் கெழும, நன் பல் ஊழி நடுவு நின்று ஒழுக- பல் வேல் இரும் பொறை! நின் கோல் செம்மையின், நாளின் நாளின் நாடு தொழுது ஏத்த, 10உயர்நிலை உலகத்து உயர்ந்தோர் பரவ, அரசியல் பிழையாது, செரு மேந்தோன்றி, நோய் இலைஆகியர், நீயே-நின்மாட்டு அடங்கிய நெஞ்சம் புகர்படுபு அறியாது,கனவினும் பிரியா உறையுளொடு, தண்ணெனத் 15தகரம் நீவிய துவராக் கூந்தல், வதுவை மகளிர் நோக்கினர், பெயர்ந்து வாழ் நாள் அறியும் வயங்கு சுடர் நோக்கத்து, மீனொடு புரையும் கற்பின், வாள் நுதல் அரிவையொடு காண்வரப் பொலிந்தே! 20

90. மன்னவனது தண்ணளியும், பெருமையும், கொடையும், சுற்றம் தழாலும், உடன் கூறி வாழ்த்துதல்
துறை : காட்சி வாழ்த்து வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும் தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும் பெயர் : வலி கெழு தடக் கை 
மீன் வயின் நிற்ப, வானம் வாய்ப்ப, அச்சற்று, ஏமம் ஆகி, இருள் தீர்ந்து இன்பம் பெருகத் தோன்றி, தம் துணைத் துறையின் எஞ்சாமை நிறையக் கற்று, கழிந்தோர் உடற்றும் கடுந் தூ அஞ்சா 5ஒளிறு வாள் வய வேந்தர் களிறொடு கலம் தந்து, தொன்று மொழிந்து தொழில் கேட்ப, அகல் வையத்து பகல் ஆற்றி, மாயாப் பல் புகழ் வியல் விசும்பு ஊர்தர, 10வாள் வலியுறுத்து, செம்மை பூஉண்டு, அறன் வாழ்த்த நற்கு ஆண்ட விறல் மாந்தரன் விறல் மருக!- ஈரம் உடைமையின், நீர் ஓரனையை;அளப்பு அருமையின், இரு விசும்பு அனையை; 15கொளக் குறைபடாமையின், முந்நீர் அனையை; பல் மீன் நாப்பண் திங்கள் போல, பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை உரு கெழு மரபின் அயிரை பரவியும், கடல் இகுப்ப வேல் இட்டும், 20உடலுநர் மிடல் சாய்த்தும், மலையவும் நிலத்தவும் அருப்பம் வௌவி, பெற்ற பெரும் பெயர் பலர் கை இரீஇய கொற்றத் திருவின் உரவோர் உம்பல்! கட்டிப் புழுக்கின் கொங்கர் கோவே! 25மட்டப் புகாவின் குட்டுவர் ஏறே! எழாஅத் துணைத் தோள் பூழியர் மெய்ம்மறை! இரங்கு நீர்ப் பரப்பின் மரந்தையோர் பொருந! வெண் பூ வேளையொடு சுரை தலை மயக்கியவிரவு மொழிக் கட்டூர் வயவர் வேந்தே! 30உரவுக் கடல் அன்ன தாங்கு அருந் தானையொடு, மாண் வினைச் சாபம் மார்புற வாங்கி, ஞாண் பொர விளங்கிய வலி கெழு தடக் கை, வார்ந்து புனைந்தன்ன ஏந்து குவவு மொய்ம்பின்,மீன் பூத்தன்ன விளங்கு மணிப் பாண்டில், 35ஆய் மயிர்க் கவரிப் பாய் மா மேல்கொண்டு, காழ் எஃகம் பிடித்து எறிந்து, விழுமத்தின் புகலும் பெயரா ஆண்மை, காஞ்சி சான்ற வயவர் பெரும! வீங்கு பெருஞ் சிறப்பின் ஓங்கு புகழோயே! 40கழனி உழவர் தண்ணுமை இசைப்பின், பழன மஞ்ஞை மழை செத்து ஆலும், தண் புனல் ஆடுநர் ஆர்ப்பொடு மயங்கி, வெம் போர் மள்ளர் தெண் கிணை கறங்க, கூழுடை நல் இல் ஏறு மாறு சிலைப்ப, 45செழும் பல இருந்த கொழும் பல் தண் பணைக்,காவிரிப் படப்பை நல் நாடு அன்ன, வளம் கெழு குடைச்சூல், அடங்கிய கொள்கை, ஆறிய கற்பின், தேறிய நல் இசை, வண்டு ஆர் கூந்தல், ஒண்தொடி கணவ!- 50'நின் நாள் திங்கள் அனைய ஆக! திங்கள் யாண்டு ஓரனைய ஆக! யாண்டே ஊழி அனைய ஆக! ஊழி வெள்ள வரம்பின ஆக!' என உள்ளி, காண்கு வந்திசின், யானே-செரு மிக்கு 55உரும் என முழங்கும் முரசின், பெரு நல் யானை, இறை கிழவோயே!

பதிகம்
குட்டுவன் இரும்பொறைக்கு மையூர் கிழா அன்வேண்மாள் அந்துவஞ்செள்ளை ஈன்ற மகன்,வெரு வரு தானையொடு வெய்துறச் செய்து சென்று,இரு பெரு வேந்தரும் விச்சியும் வீழ,அரு மிளைக் கல்லகத்து ஐந்து எயில் எறிந்து, 5பொத்தி ஆண்ட பெருஞ் சோழனையும்,வித்தை ஆண்ட இளம் பழையன் மாறனையும்,வைத்த வஞ்சினம் வாய்ப்ப வென்று,வஞ்சி மூதூர்த் தந்து, பிறர்க்கு உதவி,மந்திர மரபின் தெய்வம் பேணி, 10மெய் ஊர் அமைச்சியல் மையூர் கிழானைப்புரை அறு கேள்விப் புரோசு மயக்கி,அருந்திறல் மரபின் பெருஞ் சதுக்கு அமர்ந்தவெந் திறற் பூதரைத் தந்து, இவண் நிறீஇ,ஆய்ந்த மரபிற் சாந்தி வேட்டு, 15மன் உயிர் காத்த மறு இல் செங்கோல்இன் இசை முரசின் இளஞ்சேரல் இரும்பொறையைப்பெருங்குன்றூர்கிழார் பாடினார் பத்துப் பாட்டு.
அவைதாம்: நிழல் விடு கட்டி, வினை நவில் யானை, பல் தோல் தொழுதி, தொழில் நவில் யானை, நாடு காண் நெடு வரை, வெந் திறல் தடக்கை, வெண் தலைச் செம் புனல், கல் கால் கவணை, துவராக் கூந்தல், வலி கெழு தடக் கை, இவை பாட்டின் பதிகம்.
பாடிப் பெற்ற பரிசில்: 'மருள் இல்லார்க்கு மருளக் கொடுக்க' என்று, உவகையின் முப்பத்தீராயிரம் காணம் கொடுத்து, அவர் அறியாமை ஊரும் மனையும் வளம் மிகப் படைத்து, ஏரும் இன்பமும் இயல்வரப் பரப்பி, எண்ணற்கு ஆகா அருங்கல வெறுக்கையொடு, பன்னூறாயிரம் பாற்பட வகுத்து, காப்பு மறம் தான் விட்டான் அக் கோ.
குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை பதினாறாண்டு வீற்றிருந்தான்.
ஒன்பதாம் பத்து முற்றும்.

 ப த் தா ம் ப த் து
கிடைக்கவில்லை.
பதிற்றுப் பத்துத் திரட்டு
( பதிற்றுப்பத்தில் விட்டுப்போனவைகள் )
1
இருங் கண் யானையொடு அருங் கலம் தெறுத்து,பணிந்து, வழிமொழிதல் அல்லது, பகைவர் வணங்கார் ஆதல் யாவதோ மற்றே- உரும் உடன்று சிலைத்தலின் விசும்பு அதிர்ந்தாங்குக் கண் அதிர்பு முழங்கும் கடுங் குரல் முரசமொடு, 5கால் கிளர்ந்தன்ன ஊர்தி, கால் முளை எரி நிகழ்ந்தன்ன நிறை அருஞ் சீற்றத்து, நளி இரும் பரப்பின் மாக் கடல் முன்னி நீர்துனைந்தன்ன செலவின், நிலம் திரைப்பன்ன தானையோய்! நினக்கே? 10
[புறத் திரட்டு, பகைவயிற் சேறல், 8. தொல். புறத்திணை. சூ. 6, இளம்பூரணர் மேற்கோள்; சூ. 8, நச்சினார்க்கினியர் மேற்கோள்]
2
இலங்கு தொடி மருப்பின், கடாஅம் வார்ந்து நிலம் புடையூ எழுதரும், வலம் படு குஞ்சரம்; எரி அவிழ்ந்தன்ன விரி உளை சூட்டி, கால் கிளர்ந்தன்ன கடுஞ் செலல் இவுளி; கோல் முனைக் கொடி இனம் விரவா வல்லோடு 5ஊன் வினை கடுக்கும் தோன்றல, பெரிது எழுந்து, அருவியின் ஒலிக்கும் வரி புனை நெடுந் தேர்- கண் வேட்டனவே முரசம் கண்ணுற்றுக் கதித்து எழு மாதிரம் கல்லென ஒலிப்ப, கறங்கு இசை வயிரொடு வலம் புரி ஆர்ப்ப, 10நெடு மதில், நிரை ஞாயில், கடி மிளை, குண்டு கிடங்கின், மீப் புடை ஆர்அரண் காப்புடைத் தேஎம் நெஞ்சு புகல் அழிந்து, நிலை தளர்பு ஒரீஇ, ஒல்லா மன்னர் நடுங்க, 15நல்ல மன்ற-இவண் வீங்கிய செலவே! 
[தொல். புறத்திணை. சூ. 12,25 நச்சினார்க்கினியர் மேற்கோள்]

3
வந்தனென், பெரும! கண்டனென் செலற்கே- களிறு கலிமான் தேரொடு சுரந்து, நன்கலன் ஈயும் நகைசால் இருக்கை, மாரி என்னாய் பனி என மடியாய் பகை வெம்மையின் அசையா ஊக்கலை; 5வேறு புலத்து இறுத்த விறல் வெந் தானையொடு மாறா மைந்தர் மாறு நிலை தேய, மைந்து மலி ஊக்கத்த கந்து கால் கீழ்ந்து, கடாஅ யானை முழங்கும், இடாஅ ஏணி நின் பாசறையானே. 10
[புறத்திரட்டு, பாசறை. 8]
4
பேணு தகு சிறப்பின் பெண் இயல்பு ஆயினும் என்னொடு புரையுநளல்லள், தன்னொடு புரையுநர்த் தான் அறிகுநளே.
[தொல். கற்பு. சூ. 39, நச்சினார்க்கினியர் மேற்கோள்.]

5
'விசையம் தப்பிய .... .... என்னும் பதிற்றுப் பத்து ஈகை கூறிற்று.'
[தொல். புறத்திணை சூ. 20, நச்சினார்க்கினியர் மேற்கோள்.]

பதிற்றுப்பத்து முற்றிற்று.

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.