LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மனைவி கௌரவம்மாள் காலமானார்!

பாட்டுக்கோட்டையில் வெற்றிக்கொடி நாட்டியவர் பட்டுக்கோட்டையார் என அன்புடன் அழைக்கப்பட்டவர்,'மக்கள் கவிஞர்' பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். இவரது மனைவி கெளரவம்மாள் தனது  80-வது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார்.

இரத்தினபுரி இளவரசி படத்தின் மூலம் 1959-ல் ஆடுமயிலே எனும் பாடலை எழுதி திரையுலகில் அறிமுகமானவர்  பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.

கொக்கரக் கொக்கரக்கோ சேவலே, என்னருமை காதலிக்கு வெண்ணிலவே, சின்னப்பயலே... சின்னப்பயலே சேதி கேளடா, தூங்காதே தம்பி தூங்காதே, திருடாதே பாப்பா திருடாதே, உன்னைக் கண்டு நானாட போன்ற காலத்தால் அழியாத பாடல்கள் படைத்து மக்களின் நெஞ்சக் கோட்டையில் இடம் பிடித்தவர் பட்டுக்கோட்டையார்.

தத்துவம் நிறைந்த பாடல்களைத் தந்ததால், மக்கள் கவிஞர் எனப் போற்றப்பட்டவர்  பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். பலமான சமூக சீர்திருத்த கருத்துக்களை கூட எளிய தமிழில் தனது பாட்டால் உணர்த்தியவர்.

திரையுலக வரலாற்றில், பத்தாண்டு காலத்தில் 50-க்கும் மேற்பட்ட படங்களுக்குப் பாட்டெழுதியவர். சிந்தனைத் தெளிவும், கருத்துச் செறிவும் நிறைந்த பாடல்கள் என்பதால், அவை அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

விவசாயி, மாம்பழ வியாபாரி, இட்லி வியாபாரி, முறுக்கு வியாபாரி, அரசியல்வாதி, கவிஞர் என 17 விதமான பணிகளைச் செய்தவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். 

இவரது மனைவி கெளரவம்மாள். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் இவரைத் திருமணம் செய்து வெறும் 5 மாதங்கள்தான் ஆகி இருக்கும்.. தன்னுடைய 29 வயதில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் உயிரிழந்தார். அவர் இறக்கும் போது கௌரவம்மாள் கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு செய்தி மக்கள் தொடர்புத் துறையில் கூடுதல் இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்ற க. குமாரவேலு என்ற மகன் உள்ளார். 

பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் கிராமத்தில்தான் கௌரவம்மாள் இவ்வளவு காலமாக  வாழ்ந்து வந்தார். 

80 வயதான இவர் வயது மூப்பு மற்றும் உடல்நலக் கோளாறு காரணமாக கடந்த 6 மாதங்களாக வீட்டிலேயே  சிகிச்சை பெற்று வந்தார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரிலேயே தகனம் செய்யப்பட்டது.

காலத்தால் அழியாத பாடல்கள் தந்த மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார் மனைவி கௌரவம்மாள் மறைவிற்கு வலைத்தமிழ் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

by Mani Bharathi   on 08 Apr 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்க்கடவுள் முருகனின் வடபழனி கோயிலில் தமிழில் அர்ச்சனை- தமிழ்ப்புத்தாண்டில் தொடங்கியது! தமிழ்க்கடவுள் முருகனின் வடபழனி கோயிலில் தமிழில் அர்ச்சனை- தமிழ்ப்புத்தாண்டில் தொடங்கியது!
அக்னி நட்சத்திரம்  மே-4 ந்தேதி தொடங்கி 28-ந் தேதி வரை நீடிக்கிறது! அக்னி நட்சத்திரம் மே-4 ந்தேதி தொடங்கி 28-ந் தேதி வரை நீடிக்கிறது!
பிளஸ் 2 தேர்வில் 91.3  சதவீதம்  மாணவ-மாணவிகள் தேர்ச்சி! பிளஸ் 2 தேர்வில் 91.3 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி!
பிளஸ்-2 தேர்வு முடிவு  19-ந்தேதி  வெளியாவதாக அறிவிப்பு! பிளஸ்-2 தேர்வு முடிவு 19-ந்தேதி வெளியாவதாக அறிவிப்பு!
தமிழகத்தில் 38  தொகுதியிலும், புதுச்சேரி  மக்களவை தொகுதியிலும், மொத்த வாக்குப்பதிவு 70 சதவீதம்! தமிழகத்தில் 38 தொகுதியிலும், புதுச்சேரி மக்களவை தொகுதியிலும், மொத்த வாக்குப்பதிவு 70 சதவீதம்!
வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும்- சென்னை வானிலை மையம் தகவல்! வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும்- சென்னை வானிலை மையம் தகவல்!
ராஜராஜ சோழன் சமாதியை அகழ்வாராய்ச்சி செய்து அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு! ராஜராஜ சோழன் சமாதியை அகழ்வாராய்ச்சி செய்து அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
குடிமைப் பணித் தேர்வில் தமிழை விருப்பப்பாடமாக எடுத்து வென்று சாதித்த விழுப்புரம் மாணவி சித்ரா! குடிமைப் பணித் தேர்வில் தமிழை விருப்பப்பாடமாக எடுத்து வென்று சாதித்த விழுப்புரம் மாணவி சித்ரா!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.