LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

திகார் ஒரு அப்பா சென்டிமென்ட் கதையாம் : சொல்கிறார் பேரரசு !!

காயத்திரி பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக ரேகா அஜ்மல் தயாரிக்கும் படம் “ திகார்.  இந்த படத்தில் பார்த்திபன் கதாநாயகனாக நடிக்கிறார்.

இன்னொரு நாயகனாக உன்னிமுகுந்தன் நடிக்கிறார். கதாநாயகியாக அகன்ஷாபுரி நடிக்கிறார். மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், ரியாஸ்கான், கார்த்திகேயன், பிரியங்கா, தேவன், மும்பைசங்கர், ஈரான் நடிகர் ஜியாத்கான், வில்லனாக அறிமுகமாகிறார். ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.


சந்திரமுகி,சிவகாசி படங்களின் ஒளிப்பதிவாளர் சேகர்.வி.ஜோசப் ஒளிப்பதிவு செய்கிறார். 


படம் பற்றி இயக்குனர் பேரரசு கூறும் போது, 


பார்த்திபன் – உன்னிமுகுந்தன் என இரண்டு தாதாக்களின் ஆக்ரோஷமான மோதல் போராட்டம் தான் திகார் படத்தின் ஒற்றை வரி கதை.


வழக்கமான கமர்ஷியல் படங்களான என் படைப்புகளில் அம்மா சென்டிமென்ட் ,தங்கை சென்டிமெண்ட் இருக்கும். ஆனால் முதன் முதலாக திகாரில் அப்பா சென்டிமென்ட்டை வைத்திருக்கிறோம். வழக்கமான என் படங்கள் மாதிரி திகார் இருக்காது. ஏறக்குறைய எட்டு அதிரடியான ஸ்டன்ட் காட்சிகள் தியேட்டரை அதிர வைக்கும். அட்வான்ஸ் டெக்னிகலாக இதை உருவாக்கி இருக்கிறோம். நான் வாழக்கமான ஊர்ப்பெயரை வைத்தே படமெடுத்து வருகிறேன். என் கதைகளுக்காக அது யதார்த்தமாக அமைந்து விட்டது. இந்த படத்திற்கு திகார் என்று பெயர் வைத்ததுமே இந்த இசை வெளியீட்டுக்கு திகாரின் பெண் புலி கிரண்பேடி அவர்களை அழைத்தால் சிறப்பாக இருக்கும் என்று யோசித்தோம். அது நிறைவேறி விட்டது. காஞ்சி என்றால் அண்ணா, ஈரோடு என்றார் பெரியார், பசும்பொன் என்றால் முத்துராமலிங்க தேவர், விருதுநகர் என்றால் காமராஜர் அது போல திகார் என்றால் கிரண்பேடி .


அதே மாதிரி இசைத்தகட்டை  பெற்றுக்கொள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி யின் பேரன் சி.வ.சிதம்பரம் அவர்கள் ஒத்துக்கொண்டது எங்களது குழுவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றார் பேரரசு.

by Swathi   on 26 Nov 2014  0 Comments
Tags: பேரரசு   பார்த்திபன்   கிரண்பேடி   சி.வ.சிதம்பரம்   திகார்   உன்னிமுகுந்தன்   Perarasu  
 தொடர்புடையவை-Related Articles
விஜய் சேதுபதியுடன் கூட்டணி சேரும் பார்த்திபன் !! விஜய் சேதுபதியுடன் கூட்டணி சேரும் பார்த்திபன் !!
திகார் ஒரு அப்பா சென்டிமென்ட் கதையாம் : சொல்கிறார் பேரரசு !! திகார் ஒரு அப்பா சென்டிமென்ட் கதையாம் : சொல்கிறார் பேரரசு !!
பார்த்திபனின் அடுத்த படம் கதை இருக்கு !! பார்த்திபனின் அடுத்த படம் கதை இருக்கு !!
கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் வெற்றியை கொண்டாடும் பார்த்திபன் !! கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் வெற்றியை கொண்டாடும் பார்த்திபன் !!
கன்னட படத்தில் நடிக்கும் பார்த்திபன் !! கன்னட படத்தில் நடிக்கும் பார்த்திபன் !!
மாஸ் படத்தில் இணைந்த பார்த்திபன் !! மாஸ் படத்தில் இணைந்த பார்த்திபன் !!
பார்த்திபனின் தங்க மனசு !! பார்த்திபனின் தங்க மனசு !!
கவிப்பேரரசு வைரமுத்துவின் பிறந்தநாள் விழாவில் அப்துல் கலாம் !! கவிப்பேரரசு வைரமுத்துவின் பிறந்தநாள் விழாவில் அப்துல் கலாம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.