LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 975 - குடியியல்

Next Kural >

பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
பெருமைப் பண்பு உடையவர் செய்வதற்கு அருமையானச் செயலைச் செய்வதற்க்கு உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர் ஆவர்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
பெருமை உடையவர் - அவ்வாற்றால் பெருமையுடையராயினார்; அருமை உடைய செயல் ஆற்றின் ஆற்றுவார் - தாம் வறியராய வழியும் பிறரால் செய்தற்கு அரியவாய தம் செயல்களை விடாது அவை செய்யும் நெறியால் கடைபோகச் செய்தலை வல்லராவர். ('வறியராய வழியும்' என்பது முன் செய்து போந்தமை தோன்றப் 'பெருமை உடையவர்' என்றதனானும், 'ஆற்றுவார்' என்றதனானும் பெற்றாம். இதனால் அதனை உடையார் செய்தி கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
பெருமையாவது செருக்கின்மை: சிறுமை செருக்கினை மேற்கொண்டொழுகுதலான். மேல் குலத்தினாலும் பெரியாரைப் பெரியாரென்று கொள்ளல் படாதென்றார். இனிப் பெருமை யிலக்கணங் கூறுவார், முற்படச்செருக்கின்மை பெருமையென்று கூறினார்.
தேவநேயப் பாவாணர் உரை:
பெருமை உடையவர்- பெருமைக் கேதுவான பண்பை இயற்கையாக வுடையவர், அருமை உடைய செயல் ஆற்றின் ஆற்றுவார் - பிறராற் செயற்கரிய நற்செயல்களை நெறிப்படி செய்து முடிப்பர். ".............. பெருமையுடைய ராயினார் தாம் வறிய ராய வழியும் பிறராற் செயற்கரியவாய தஞ் செயல்களை விடாது அவை செய்யுநெறியாற் கடைபோகச் செய்தலை வல்லராவர். "வறியராய வழியு மென்பது, முன்பு செய்து போந்தமை தோன்றப் 'பெருமையுடையவ' ரென்றதனாலும், 'ஆற்றுவா' ரென்றதனானும் பெற்றாம்' என்பது பரிமேலழகருரை, இக்குறளாற் பெருமையின் வெளிப்பாடு கூறப்பட்டது.
கலைஞர் உரை:
அரிய செயல்களை அவற்றுக்கு உரிய முறையான வழியில் செய்து முடிக்கும் திறமையுடையவர்கள் பெருமைக்குரியவராவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
எத்தனை நெருக்கடி வந்தாலும் பிறர் செய்வதற்கு அரிய செயல்களை உரிய வழிகளில் செய்து முடிப்பவர் பெருமை உடையவர்.
Translation
The man endowed with greatness true, Rare deeds in perfect wise will do.
Explanation
(Though reduced) the great will be able to perform, in the proper way, deeds difficult (for others to do).
Transliteration
Perumai Yutaiyavar Aatruvaar Aatrin Arumai Utaiya Seyal

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >