LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ரஜினியின் அப்பா பங்கேற்கும் பெருமாள் கோயில் உண்டசோறு இசை வெளியீட்டு விழா !!

எம்.ஆர்.தியேட்டர்   - கிங்ஸ்டன் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ பெருமாள் கோயில் உண்டசோறு “ என்று பெயர் வைத்துள்ளனர்.


சந்தோஷ்குமார், பாபுஜி, வி.டி.ராஜா, கீர்த்தி, சுமோசிவா, டான்ஸ்ராஜா, ஹரே ராம் சக்கரவர்த்தி, அகிலா ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தில் நடிக்கும் அத்தனை பேருமே புத்தம்  புதுமுகங்கள். 


படத்தில் மக்களுக்கு உபயோகமான ஒரு கருத்தைச் சொல்கிறோம். அடுத்த தலைமுறைக்கு நாம் வீடு, பணம், கார், தோட்டம் என்று சேர்த்து வைக்கிற எதுவுமே உபயோகமில்லாததாகி விடும்.


அடுத்த தலைமுறைக்கு நாம் சேத்து வைக்க வேண்டியது சுற்றுச்சூழல், சுகாதாரம், மழைநீர் சேகரிப்பு போன்றவை தான் சுற்றுச் சூழலலுக்கு முதல் எதிரி பிளாஸ்டிக் தான் இதை தான் இந்த படத்தின் மூலம் சொல்கிறோம்.  இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு பாலம் அமைப்பின் O.P.கல்யாணசுந்தரத்தை அழைத்தோம். அவரைப் பற்றி சொல்ல வேண்டுமானால் அவர் பேராசிரியராக வேலை செய்த போது தனது சம்பளம் முழுவதையும் அப்படியே பாலம் அமைப்புக்கு அளித்தார்.   அவரது சேவையை பாராட்டி அமெரிக்கா 30கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியது. அதையும் அப்படியே அறக்கட்டளைக்கு கொடுத்து விட்டார்.


உயரிய இவரது சமூகசேவையை கௌரவிக்கும் பொருட்டு நடிகர் ரஜினிகாந்த் இவரை தனது அப்பாவாக தத்தெடுத்துக் கொண்டார்...அவருக்கு பணமும் விலை உயர்ந்த பொருட்களும் வழங்கினார் அதையும் அப்படியே பாலம் அமைப்பிற்கு வழங்கி விட்டார். அப்படிப் பட்ட நல்ல உள்ளத்தை அழைத்த போது உடனே ஒத்துக்கொண்டது பெருமையான விஷயம்.


இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பர் 1 ஆம் தேதி திங்கள்கிழமை அன்று காலை 9.30 மணியளவில் வடபழனியில் உள்ள கமலா தியேட்டரில் திரு. O.P. கல்யாணசுந்தரம் முன்னிலையில் இயக்குனர் பேரரசு இசைத்தட்டை வெளியிட இயக்குனர்கள் எஸ்.ரவிச்சந்திரன், ஜே.சுரேஷ் ஆகியோர் பெற்றுக்கொள்கிறார்கள். 

by Swathi   on 29 Nov 2014  0 Comments
Tags: Kalyanasundaram   Perumal Kovil Undasoru   O.P.கல்யாணசுந்தரம்   பெருமாள் கோயில் உண்டசோறு           
 தொடர்புடையவை-Related Articles
ரஜினியின் அப்பா பங்கேற்கும் பெருமாள் கோயில் உண்டசோறு இசை வெளியீட்டு விழா !! ரஜினியின் அப்பா பங்கேற்கும் பெருமாள் கோயில் உண்டசோறு இசை வெளியீட்டு விழா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.