LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: பிரதமர் மோடி யோசனை!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று 3-வது வருடாந்திர உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை கூட்டினார்.

கூட்டத்தில், சவுதி அரேபிய பெட்ரோலிய மந்திரி காலித் அல் பாலி, ஐக்கிய அரபு மந்திரி மற்றும் சர்வதேச முன்னணி எண்ணெய் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், இந்திய எண்ணெய் நிறுவன அதிகாரிகள், நிபுணர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:-

கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்தியா போன்ற எண்ணெய் நுகர்வு நாடுகள், கடுமையான பொருளாதார சவால்களை சந்தித்து வருகின்றன. பணவீக்கம் உயருகிறது. இவ்விஷயத்தில், எண்ணெய் உற்பத்தி நாடுகளின் உதவி தேவைப்படுகின்றது.

வளரும் நாடுகளில், அதிக நிலப்பரப்பில் எண்ணெய் எடுக்கும் பணி நடக்கிறது. இதில், தொழில்நுட்பம் உள்ளிட்ட விஷயங்களில் வளர்ந்த நாடுகள் ஒத்துழைப்பு தர வேண்டும். எரிவாயு துறையில் வினியோக பணியில் தனியாரின் பங்களிப்பு இருக்க வேண்டும்.

எண்ணெய் சந்தையில், எண்ணெய் விலையை எண்ணெய் உற்பத்தி நாடுகளே தீர்மானிக்கின்றன. போதுமான உற்பத்தி இருந்த போதிலும், எண்ணெய் உற்பத்தி நாடுகள் கடைபிடிக்கும் தனித்துவமான சில நடவடிக்கைகளால், எண்ணெய் விலை உயர்ந்துவிட்டது. எண்ணெய் விலை குறைய எண்ணெய் உற்பத்தி நாடுகள் இன்னும் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மற்ற சந்தைகளில், உற்பத்தியாளர்களுக்கும், நுகர்வோருக்கும் இடையே கூட்டு நிலவுகிறது. அதுபோல், எண்ணெய் சந்தையிலும் உற்பத்தி நாடுகளுக்கும், நுகர்வு நாடுகளுக்கும் இடையே கூட்டு நிலவினால், மீண்டு வரும் சர்வதேச பொருளாதாரம் ஸ்திரம் அடைந்து, விலை குறைய வாய்ப்புள்ளது.

மேலும், எண்ணெய் உற்பத்தி நாடுகள், பணம் செலுத்தும் முறையை மாற்றி அமைக்க வேண்டும். அதன்மூலம், அந்தந்த நாடுகளின் நாணயத்துக்கு தற்காலிக நிவாரணம் கிடைக்கும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

by Mani Bharathi   on 16 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு
இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம். இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம்.
இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்! இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்!
சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம். சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி.
கேரள மாநில பள்ளி வரலாற்றுச் சாதனையாக இந்தியாவின் முதல் ஏஐ ஆசிரியை ‘ஐரிஸ்’ கேரள மாநில பள்ளி வரலாற்றுச் சாதனையாக இந்தியாவின் முதல் ஏஐ ஆசிரியை ‘ஐரிஸ்’
கைப்பேசியில் அழைப்பாளர் பெயரைக் காண்பிக்கும் சேவை வழங்க தொலைப்பேசி நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரை. கைப்பேசியில் அழைப்பாளர் பெயரைக் காண்பிக்கும் சேவை வழங்க தொலைப்பேசி நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரை.
செவ்வாய்க் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்பும் முயற்சியில் இந்தியா..! செவ்வாய்க் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்பும் முயற்சியில் இந்தியா..!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.