LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF
- ஜி.ராஜேந்திரன்

பெட்டிக்காரப் பெரியசாமி

 


டிசம்பார் மாதம் வந்துவிட்டாலே போதும் கடைக்காரர்களுக்கு பெட்டிக்காரப் பெரியசாமியின் ஞாபகம் வரும். காரணம் என்ன தெரியுமா? 

 

டிசம்பர் மாதம் பண்டிகைகளின் மாதம். கிறிஸ்துமஸ் விழா, புத்தாண்டு... இரண்டு முக்கிய பண்டிகைகள் ஒரு வாரத்திற்குள் வருகின்றன.. 

 

அதுக்கும் பெட்டிக்காரப் பெரியசாமிக்கும் என்ன தொடர்பு அப்படீண்ணு நினைக்கிறீங்களா?

 

கிறிஸ்துமஸ், புத்தாண்டு...

நாம் விரும்புரவங்களுக்கு, நேசிக்கிறவுங்களுக்கு ஒவ்வொருவரும் பரிசுப் பொருட்களை அன்பளிப்பா கொடுக்கிற இரண்டு முக்கிய நாட்களாச்சே ....

 

அன்பளிப்புகளை அப்படியே கொடுக்க முடியாதல்லவா? அப்பொருட்களை அதுக்கேற்ற மாதிரி பெட்டியில் வைத்து,  தங்க நிற நூலால் அலங்காரமாகக் கட்டிக் கொடுக்கும் போதுதான் அன்பளிப்புகளுக்கு ஒரு மதிப்பு வரும். இல்லையா

 

பரிசுப் பொருட்களை வைத்து கொடுப்பதற்கான பெட்டிகள் செய்யுறதுதான் பெரியசாமியின் வேலை. அதனால் அவரை "பெட்டிக்காரப் பெரியசாமி'' என்று கூப்பிடுவாங்க.

 

கெட்டி அட்டைகளை வாங்கி வேறுவேறு அளவுகளில் அவற்றை வெட்டி மடக்கி பெட்டி செய்து அதுக்கு மேல வண்ணத்தாள் ஒட்டி தங்க நிற நூலால் கட்டி...

பெரியசாமி பெட்டி செய்யறதைப் பார்த்துக்கிட்டே இருந்தா நேரம் போறதே தெரியாது.

 

பெட்டிக்கார பெரியசாமி ரொம்ப ஏழை. வருடத்தில் எப்போதாவதுதான் பெட்டி செய்ய வாய்ப்பு கிடைக்கும். அப்போ கிடைக்கும் வருமானத்தை வைத்து தான் வாழும் நிலைமை. பெரியசாமி ஏழையாக இருந்தாலும் மகிழ்ச்சிக்குக் குறைவில்லை. அன்பு மனைவி பண்பழகியும், அழகு மகள் ஓவியாவும் பட்டினியிலும் ,பாசத்தோடும், நேசத்தோடும் வாழ்ந்தார்கள்.

 

பெரியசாமி உருவாக்கும் பெட்டிகள் எத்தனை பேருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தாலும், தன் மகள் ஓவியாவுக்கு என்னால் ஒரு அன்பளிப்பு கொடுக்க முடியவில்லையே என்ற வருத்தம் பெரியசாமிக்கு இருக்குது.

 

ஜொலிக்கும் வண்ணக் காகிதங்களை சுளிவு நெளிவில்லாமல் பெட்டியில் ஒட்டிக்கொண்டிருக்கும் அப்பாவை வச்ச கண் வாங்காமல் பார்த்துக்கிட்டயிருந்தாள் ஓவியா. "இந்தப் பெட்டியையும் சேர்த்தால் இருபத்தைந்து பெட்டிகளாயிரும். கடைவீதிக்குப் போயி கடைக்காரரிடம் கொடுத்துட்டு வரலாமே..''  பண்பழகி கேட்டாள். அவள் குரலில் மகிழ்ச்சி தெரிந்தது. மூவரும் சேர்ந்து பெட்டிகளை பெரிய துணிப் பைக்குள் அலுங்காமல் குலுங்காமல்வைத்தார்கள்..

 

மீதி கெட்டி அட்டைகள் எத்தனை இருக்குது என்று எண்ணிப் பார்த்தார் பெரியசாமி. "ரொம்ப கவனமாக, அட்டைகளை வீணாக்காமல் செஞ்சா இன்னுமொரு இருபத்தைந்து பெட்டிகள் செய்யலாம்'' அவர் தனக்குத்தானே பேசிக்கிட்டாலும் அவர் பேசினது எல்லோருக்கும் கேட்டது.

 

பெட்டிகள் வைத்த துணிப்பையை தலையில் சொமந்தபடி கடைவீதியை நோக்கி நடக்கத் தொடங்கினார் பெரியசாமி. பெட்டிகளை விற்று கிடைத்த பணத்தில் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கினார். அழகு மகள் ஓவியாவுக்குத் தின்பண்டம் வாங்க பெரியசாமி மறக்கவில்லை.

 

பொருட்களோடு வீட்டுக்குள் நுழைஞ்ச பெரியசாமி வீடு கிடந்த கோலத்தை பார்த்து அதிர்ந்து போனார். கெட்டி அட்டைகள் அங்கங்கு வெட்டப்பட்டு கிடந்தது. தங்க நிற நூலோ சிக்குபட்டுக் கிடந்தது. வண்ணத் தாள்கள் கசங்கிப் போய்க் கிடந்தது..

 

கிடைத்த பணத்திற்குப் பொருட்கள் வாங்கியாச்சு. வேறொரு கடைக்காரருக்கு இருப்பத்தைந்து பெட்டிகள் தருவதாக சொல்யிருக்கேனே.. இந்த நிலைமையில் என்னால் இருபது பெட்டிகள் கூட செய்ய முடியாதே.. கெட்டி அட்டைகள் வாங்கப் பணமும் இல்லை. நான் என்ன செய்வேன்... ''

 

யோசிக்க யோசிக்க பெரியசாமிக்கு கோபம் வந்தது. கோபம் தலைக்கு ஏறியது கண்கள் சிவந்தது. கோபத்தால் அவரோட உடல் நடுங்கியது. கையிலுள்ள பொருட்களை அப்படியே கீழே போட்டு "ஏய் பண்பு.. உன்னை யார் பெட்டி செய்யச் சொன்னது? நான்கு பெட்டிகள் செய்யறதுக்குத் தேவையான அட்டைகளை வைத்து ஒரு பெட்டி செய்திருக்கியே.. அறிவிருக்குதா உனக்கு? '' என்று கத்தினார்..

 

" ஐயோ.. நான் அட்டைகளைத் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை. இது ஓவியாவோட வேலையாக இருக்கும். பாவம் பொண்ணு தெரியாமச் செய்திருப்பாள். அவளை அடிக்காதீங்க''  பண்பழகி கெஞ்சினாள்.

 

வீட்டுக்கு கொஞ்சம் வெளியே தோழிகளோடு விளையாடிக் கொண்டிருந்த ஓவியா அப்பாவோட குரல் கேட்டு விளையாட்டை நிறுத்திவிட்டு வீட்டுக்கு வந்தாள்.

 

பெட்டி செய்ய உன்கிட்ட யார் சொன்னது. உனக்கு விளையாட என்னோட அட்டைகள் தான் கிடைத்ததா? நான்கு பெட்டிக்குத் தேவையான பொருட்கள் வீணாய்ப் போச்சே... இந்த அட்டைகளை வைத்து நீ என்ன செய்தாய்''  ஓவியாவுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அவள் கண்களிருந்து கண்ணீர் தாரை தாரையாக ஒழுகியது.

 

"அட்டைகளை வைச்சு நீ என்ன செய்தாய் என்று கேட்டார் "உங்களுக்குப் பரிசுதருவதற்காக ஒரு பெட்டி செய்தேன் அப்பா என்று ''  அவள் மெதுவாகச் சொன்னாள்.

மகள் சொன்னதைக் கேட்டதும் பெரியசாமியோட கோபம் கொஞ்சம் தணிந்தது.. அவரோட பிடி தளர்ந்தது.

ஓவியா ஓடிப்போய் செய்த  பெட்டியை எடுத்துட்டு வந்தாள். அப்பாகிட்ட நீட்டினாள்..

 

இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத பெரியசாமி மகள் தனக்காகச் செய்த பெட்டியை வாங்கினார். "சத்தியமாக எனக்காகத் தான் இந்தப் பெட்டி செய்தாய? " பெட்டியல் கட்டியிருந்த நூலை அவிழ்த்துக்கிட்டே கேட்டார்.

 

கோபமா கேட்கணும்ணு நினைத்தும்  அவரோட குரலில் அன்பு கலந்ததை அவரால் தடுக்க முடிய வில்லை.

ஆசையா பெட்டியைத் திறந்து பார்த்த பெரியசாமி பெட்டி காலியாக இருக்கறதைப் பாத்து ஆச்சரியப்பட்டார். "ஏம்மா... யாராவது காலிப்பெட்டியை அன்பளிப்பாகக் கொடுப்பாங்களா? என்று கேட்டார்''.

 

"இந்தப் பெட்டி காலியாய் இருக்குண்ணு யார் சொன்னாங்க? அதுக்குள்ளே நான் .ஆயிரம் முத்தங்கள் வச்சிருக்கேன்..''  என்றால் ஓவியா.

மகள் சொன்னதைக் கேட்ட பெரியசாமி ஓவியாவை அப்படியே வாரி அனைத்து கொண்டார். நெஞ்சோடு சேர்த்து. அவளோடு கன்னத்திலும் நெற்றியிலும் மாறி மாறி முத்தமிட்டார். 

 

"எனக்குக் கிடைச்ச முதல் பரிசு ரொம்ப விலை உயர்ந்த  பரிசா தந்துடேயம்மா .. வாழ்நாள் பூரா இப்பரிசை என் ஊயிரைவிட மேலாக நான் பாதுகாப்பேன்" என்று  சொல்லி விட்டு ஓவியாவை  முத்தமிட்டார்.

 

இக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த பண்பழகியோட கடைக்கண்ணிலிருந்து  நீர் வழிந்தது.. புடவைத் தலைப்பால் தன்னோட கண்களைத் துடைத்துக்கிட்டே சமையலறைக்குள் நுழைந்தால் பெரியசாமியோட அன்பு மனைவி பண்பழகி.  

by Swathi   on 11 Mar 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மந்திரியான காக்கை அண்ணாச்சி மந்திரியான காக்கை அண்ணாச்சி
நான் சம்பாதிக்கும் பணம் நான் சம்பாதிக்கும் பணம்
ஏதோ ஒரு உதவி ஏதோ ஒரு உதவி
ஆன் லைன் வகுப்பு ஆன் லைன் வகுப்பு
திரும்பி வந்த பூ செடிகள் திரும்பி வந்த பூ செடிகள்
விலங்குகளின் அன்பு விலங்குகளின் அன்பு
தானாக வந்த திறமை தானாக வந்த திறமை
செய்த உதவி செய்த உதவி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.