LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு     Print Friendly and PDF

பிச்சாவரம் காடு

கடலூர் மாவட்டத்தில் உள்ளது பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள் ஆசியாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது . இந்து வங்கக் கடலை ஒட்டிய பகுதியில் உள்ளது. பித்தர்புரம் என்றே முதலில் இந்த காடுகள் அழைக்கப்பட்டது. அதுவே மருவி பிச்சாவரம் என்று மாறியது.

இவ்வூரில் அலையாத்திக் காடுகள், சதுப்புநிலக்காடுகள், மாங்குரோவ் காடுகள் எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் தில்லை மரங்கள்அதிகம் உள்ளன.இந்த தில்லை மரங்களே சிதம்பரம் கோயிலின் தல மரமாகும். இதனால் சிதம்பரத்திற்கு தில்லை எனப் பெயர் உண்டு. இக்காடுகள் முற்காலத்தில் தற்போதைய சிதம்பரம் வரைவளர்ந்திருந்தது என்று கூறப்படுகிறது.

ஆண்டு முழுவதும் ஈரப்பதத்துடன் இருக்கும் நிலம் சதுப்பு நிலங்களில் அலையாத்தித் தாவரங்கள் நன்கு வளர்கிறது. அத்தகைய அலையாத்தி தாவரங்கள் கொண்டதே பிச்சாவரம் காடு. இந்தக் காட்டில் சுரபுன்னை மரங்கள் அடர்ந்திருக்கின்றன. இம்மரத்தின் காய்கள் முருங்கைக்காய் போல் நீண்டிருக்கும். இந்தக் காய்கள் சேற்றில் விழுந்து செடியாகி, சில ஆண்டுகளில் மரமாக வளர்ந்து விடும். பழுத்த இலைகள் நீரில் விழுந்து அழுகி, உணவாகக் கிடைப்பதால், இங்கு மீன், இறால்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பறவைகள் இங்கு வலசை வருகின்றன. செப்டம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை பறவைகளின் வரவு அதிகமாக இருக்கும். குறிப்பாக நவம்பர் முதல் ஜனவரி வரை பிச்சாவரம் வரும் பறவைகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும். மேலும் வெளிநாடுகளில் இருந்து வலசை வர பறவைகள் எடுத்துக்கொள்ளும் கால அளவும் வருடம்தோறும் இங்கு குடியேறும் பறவைகளின் எண்ணிக்கையை தீர்மானிக்கிறது.

பிச்சாவரம் காட்டுப்பகுதியின் பரப்பளவு 2800 ஏக்கர்கள். இப்பகுதி சிறுசிறு தீவுகள் நிறைந்து காணப்படுகிறது. இக்காடுகளுக்கு நிறைய பறவைகள் வருகின்றன. மொத்தம் 41 குடும்பங்களைச் சேர்ந்த 177 வகையான பறவையினங்கள் வருவதாகக் கண்டறியப் பட்டுள்ளது.

பிச்சாவரம் காடு கடலூர் மாவட்டம் 'கிள்ளை' என்னும் ஊரில் அமைந்திருக்கிறது. சிதம்பரம் நகரில் இருந்து 12 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள பிச்சாவரத்துக்கு, பேருந்தில் செல்ல கட்டணம் பத்து ரூபாய். சென்னை, புதுவை, கடலூர் மார்க்கமாக வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் சிதம்பரத்துக்கு வராமல் பி.முட்லூர் அருகே பிரியும் புறவழிச்சாலை வழியாக பிச்சாவரத்துக்கு செல்லலாம். பிச்சாவரம் வனப்பகுதியைச் சுற்றிப் பார்க்க, அரசு சார்பில் படகு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

by Swathi   on 22 Oct 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குடும்பத்துடன் கடம்பவனம்  சென்றுள்ளீர்களா?  பார்க்கவேண்டிய  தமிழ்ப் பண்பாட்டுத் திருத்தலம் குடும்பத்துடன் கடம்பவனம் சென்றுள்ளீர்களா? பார்க்கவேண்டிய தமிழ்ப் பண்பாட்டுத் திருத்தலம்
கண்ணைக் கவரும்  பிச்சாவரம் காடு கண்ணைக் கவரும் பிச்சாவரம் காடு
ஜெகன்னாதப் பெருமாள் ஜெகன்னாதப் பெருமாள்
மகாபலிபுரம் மகாபலிபுரம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.