LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

மிஸ்கினின் பிசாசு... பேய் படம் மட்டுமல்ல...

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் தற்போது, பிசாசு என்ற படத்தை இயக்கி வருகிறார். 


இந்த படத்தை இயக்குனர் பாலா தனது  B ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். 


'பிசாசு' படத்தின் பெருமளவு படபிடிப்பு காட்சிகள் முடிவடைந்துள்ளது.  


இந்நிலையில் தான் இயக்கம் பிசாசு படம் குறித்து இயக்குனர் மிஷ்கின் கூறும் போது 


'நீண்ட நாட்களாகவே எனக்கு ஒரு ஹாரர் படம் இயக்க வேண்டும் என்று விருப்பம். ரசிகர்களை வெறுமென பயமுறுத்துவது மட்டுமே 'ஹாரர்' படம் அல்ல என்பது என்னுடைய  கருத்து ஆகும். 


பிசாசு பயமுறுத்தும் விஷயம் மட்டும் இல்லை , மனதை வருடும் விஷயம் கூடத்தான்.இந்த படத்துக்கான முக்கிய கதாபாத்திரங்கள் மட்டுமின்றி மற்ற சிறிய பாத்திரங்களுக்கு கூட நான்கு மாதம் பயிற்சிக் கொடுத்து நடிக்க வைத்து உள்ளேன்.


இந்த படத்தில் மூத்த நடிகர் ராதா  ரவி சார் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில், வித்தியாசமாக நடித்து உள்ளார். கதாநாயகனாக அறிமுகம் ஆகிறவர் நாகா,முதல் படத்தில் அவர் காட்டும்  உழைப்பும் ஆர்வமும் அவருக்கு நல்ல எதிர் காலம் உண்டு என்பதை கட்டாயம் கூறுகிறது. 


கதாநாயகியாக அறிமுகம் ஆகிறவர்  பிரயாகா , கேரளாவில் இருந்து வந்து இருக்கும் அவர் நடன கலைகளில்  வல்லவர். 60 அடிக்கும் மேல் உயரத்திலிருந்து ஒரு இரவு முழுவதும் பிசாசாக பறந்து  நடித்த காட்சி பிரமிப்பூட்டும். 


பிரபல ஒளிப்பதிவாளர்  வைட் ஆங்கிள் ரவிசங்கர் இந்த படம் மூலம் ரவி ராய் என்ற பெயரில் மிகவும் வித்தியாசமான கோணங்களில்  இந்த காட்சிகளை  பிரமாதமாக படம் பிடித்து உள்ளார். அறோல் கரேலி என்ற புதிய இசையமைப்பாளரை இந்த படத்தில் அறிமுகபடுத்துகிறேன். எனக்கு வேண்டிய இசை அல்லது நான் கேட்கும் இசை வரும் வரை உழைக்க தயாராக இருக்கிறான். 


பிசாசு படத்தின் உயிர் நாடி கிளைமேக்ஸ் காட்சிதான். பல்வேறு ஹாலிவுட் படங்களில் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றிய டோனி இந்த காட்சி அமைப்பில் மிரட்டி இருக்கிறார். 


புதுமுகங்களை வைத்து படமெடுத்தாலும் பட்ஜெட் பெரிது. அந்த சுதந்திரத்தை எனக்கு அளித்த எனது நண்பரும் தயாரிப்பாளருமான பாலாவுக்கு  கடமைப்பட்டு இருக்கிறேன் என மிஸ்கின் தெரிவித்துள்ளார்.    

by Swathi   on 28 Oct 2014  0 Comments
Tags: Pisasu   Pisasu Movie   Mysskin   மிஸ்கின்   பிசாசு   பாலா   நாகா  
 தொடர்புடையவை-Related Articles
ஷங்கரை தொடர்ந்து மிஷ்கின்... ஷங்கரை தொடர்ந்து மிஷ்கின்...
அஜீத்தின் அறிமுக பாடலை பாடிய கானா பாலா !! அஜீத்தின் அறிமுக பாடலை பாடிய கானா பாலா !!
மிஸ்கினின் பிசாசு... பேய் படம் மட்டுமல்ல... மிஸ்கினின் பிசாசு... பேய் படம் மட்டுமல்ல...
தாரை தப்பட்டையில் வில்லன் ஆனார் தயாரிப்பாளர் சுரேஷ் !! தாரை தப்பட்டையில் வில்லன் ஆனார் தயாரிப்பாளர் சுரேஷ் !!
பாலாவின் உயர்ந்த குணத்தை சுட்டிக் காட்டிய ராம் !! பாலாவின் உயர்ந்த குணத்தை சுட்டிக் காட்டிய ராம் !!
பாலாவின் தாரை தப்பட்டை படப்பிடிப்பு தொடங்கியது !! பாலாவின் தாரை தப்பட்டை படப்பிடிப்பு தொடங்கியது !!
பின்னணி பாடகி பிரகதி நடிகையானார் !! பின்னணி பாடகி பிரகதி நடிகையானார் !!
சமஸ்கிருத ஸ்லோகங்களை கற்று நடித்த விவேக்!! சமஸ்கிருத ஸ்லோகங்களை கற்று நடித்த விவேக்!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.